பூஜையிடன் படப்பிடிப்பை தொடங்கிய “லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி” படக்குழுவினர் !

காவ்யா புரொடக்சன்ஸ் மற்றும் S2 மூவிஸ் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படமான ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ படத்தின் பூஜை கோலாகலமாக நடைபெற்றது. இப்படத்தில் யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி, ரச்சிதா மகாலக்ஷ்மி, யாஷிகா ஆனந்த், YGM மதுவந்தி, மெல்வின், அமித் பார்கவ், அஸ்மிதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை கே. ஆர். செந்தில்நாதன் எழுதி இயக்குகிறார். பி. மஞ்சுநாத் தயாரிக்கும் இப்படத்தை S2 மூவிஸ் இணைந்து தயாரிக்கிறது. அச்சு ராஜாமணி இசையமைக்க, ஷிஹாப் பட்டாம்பி ஒளிப்பதிவு செய்கிறார்.

விழாவில் இயக்குனர் கே.ஆர் செந்தில்நாதன் பேசுகையில்.
இன்று முதல் நாளாகவே எங்கள் படத்தின் பூஜை விழாவுடன் படப்பிடிப்பைத் தொடங்கியிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இந்தப் படத்தை தயாரிப்பாளர் மஞ்சுநாத் தயாரிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். குறிப்பாக ரச்சிதா மேடம், யாஷிகா மேடம் மற்றும் இங்கு வருகை தந்துள்ள அனைத்து விருந்தினர்களுக்கும் நன்றி. அனைவரின் ஆதரவுடன் இந்தப் படம் சிறப்பாக அமையும் என்று நம்புகிறேன் என்றார்.

நடிகர் மெல்வின் பேசியதாவது..,
இந்தப் படம் விளையாட்டை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகிறது. இயக்குநர் கதையை சொன்னபோதே அதற்காக நாங்கள் தயாராக ஆரம்பித்துவிட்டோம். கண்டிப்பாக இந்தப் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

நடிகர் அமித் பார்கவ் பேசியதாவது.. ஒரு திரைப்படம் உருவாவது என்பது மிகவும் நீண்ட பயணம். ஒரு கதை எழுதுவதிலிருந்து அதை திரைப்படமாக உருவாக்கி, மக்களிடம் கொண்டு சேர்க்கும் வரை எத்தனையோ சவால்களையும், தடைகளையும் கடக்க வேண்டியுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டரைப் பார்த்தாலே அந்தப் பயணத்தின் அருமை புரியும். ஒரு கதையை உருவாக்கி, போட்டோஷூட் நடத்தி, இன்று பூஜை விழா வரை கொண்டு வந்திருப்பது சாதாரண விஷயம் அல்ல. இதுவே ஒரு திரைப்படத்தின் மிக முக்கியமான கட்டமாக நான் கருதுகிறேன்.
இயக்குநர் செந்தில்நாதனின் பார்வையும், இந்தப் படத்தின் கதையும் ரசிகர்களை நிச்சயம் கவரும் என்று நம்புகிறேன் என்றார்.

வழக்கறிஞர் சிவராமகிருஷ்ணன் பேசியதாவது.., ஒரு திரைப்படத்தைத் தொடங்கி, அதை உருவாக்கி, திரையரங்குகளுக்கு கொண்டு வருவது எவ்வளவு கடினமான பயணம் என்பதை ஒரு தயாரிப்பாளராக நானும் நன்கு அறிவேன். அந்தப் பெரிய முயற்சியை மேற்கொண்டுள்ள தயாரிப்பாளர்கள், இயக்குநர் மற்றும் இந்தப் படத்தில் பணியாற்றும் அனைத்து கலைஞர்களுக்கும் எனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ மாபெரும் வெற்றி பெற்று, நூறாவது நாள் வெற்றி விழாவைக் கொண்டாட என் மனமார்ந்த வாழ்த்துகள் என்றார்.

இசையமைப்பாளர் அச்சு ராஜாமணி பேசியதாவது.., இயக்குனர் செந்தில் சாரை எனக்கு பல ஆண்டுகளாகத் தெரியும். அவருடைய அர்ப்பணிப்பும், உழைப்பும் எனக்கு நன்றாகத் தெரியும். இந்தப் படத்தில் பணியாற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.

நடிகை மதுவந்தி  பேசியதாவது.., இந்தப் படத்தில் நானும் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகிறேன். போஸ்டரில் என் புகைப்படம் இல்லையே என்று யாரும் கேட்க வேண்டாம், ஆனால் இந்தப் படத்தில் நான் இருப்பது உறுதி. இது வித்தியாசமான களத்தில் உருவாகும் ஒரு திரைப்படம். குறிப்பாக, இன்றைய தமிழ் சினிமாவுக்கு மிகவும் தேவையான விளையாட்டை மையமாகக் கொண்ட ஆரோக்கியமான கதைக்களத்துடன் இந்தப் படம் உருவாகி வருகிறது. இப்படிப்பட்ட ஒரு நல்ல முயற்சியை மேற்கொண்டுள்ள படக்குழுவினருக்கு எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும். இந்தப் பூஜை விழாவோடு மட்டும் இல்லாமல், இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்று இதே உற்சாகத்துடன் வெற்றி விழாவையும் கொண்டாடுவோம் என்ற முழு நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார்.

நடிகை அஸ்மிதா பேசியதாவது..,
‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ என்ற தலைப்பே மிகவும் வித்தியாசமாகவும், அனைவரையும் கவரக்கூடியதாகவும் இருக்கிறது. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய இயக்குநர் செந்தில்நாதன் சாருக்கு எனது மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தில் நான் இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். மேலும், இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து கலைஞர்களுடனும் இணைந்து பணியாற்றிய அனுபவம் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தக் கதையும், என்னுடைய கதாபாத்திரமும் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

நடிகை யாஷிகாஆனந்த் பேசியதாவது.., ‘டி.டி. நெக்ஸ்ட் லெவல்’ படத்திற்குப் பிறகு, ஒரு நல்ல கதைக்காக காத்திருந்தேன். அப்போது இந்தக் கதை என்னிடம் வந்தது. இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தப் படத்தை விரைவில் திரையரங்குகளில் உங்களுடன் சேர்ந்து பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.

நடிகை ரச்சிதா பேசியதாவது..,
இயக்குநர் செந்தில்நாதன் சாருடன் கதையைப் பற்றி பேசும்போதெல்லாம், இரண்டு வாரங்களுக்கு முன் பேசிய விஷயங்கள் மீண்டும் மாறியிருக்கும். கதை இன்னும் சிறப்பாக அமைய வேண்டும் என்பதற்காக தொடர்ந்து பல மாற்றங்கள், விவாதங்கள் நடைபெறும். இந்தப் படம் செந்தில்நாதன் சாரின் கனவுப் படைப்பு என்று சொல்லலாம். ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு கனவுத் திரைப்படம் இருக்கும்; அதுபோல இந்தப் படம் அவருக்கு மிகவும் முக்கியமானது. அந்தக் கனவு முழுமையாக நிறைவேற வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்த படக்குழுவும் முழு அர்ப்பணிப்புடன் உழைத்து வருகிறது. திரைப்படம் உருவாகும் பயணத்தில் பல சிரமங்களும், எதிர்பாராத சவால்களும் வந்தாலும், அவற்றையெல்லாம் கடந்து இன்று இந்தப் படத்தின் பூஜை விழா நடைபெறுகிறது. இனி இந்தப் படம் எந்தத் தடையும் இல்லாமல் வெற்றிகரமாக நிறைவடைய வேண்டும் என்பதே என்னுடைய மனமார்ந்த விருப்பம். போஸ்டரைப் பார்த்தவுடன் நான் ‘பி.டி. மாஸ்டர்’ கதாபாத்திரத்தில் நடிக்கிறேன் என்று மட்டும் நினைத்துவிடாதீர்கள். என்னுடைய கதாபாத்திரம் என்ன என்பதை படத்தில் பார்க்கும்போது உங்களுக்கே தெரியும் என்றார்.

இயக்குநர் சங்கம் சார்பில் R V  உதயகுமார் பேசியதாவது.., இன்றைய தமிழ் சினிமாவுக்கு மிகவும் தேவையான விளையாட்டை மையமாகக் கொண்ட ஒரு படத்தை உருவாக்கும் இந்த முயற்சி பாராட்டுக்குரியது. இந்தப் படத்தில் பணியாற்றும் நடிகர்கள், நடிகைகள், இசையமைப்பாளர் அச்சு, தொழில்நுட்பக் கலைஞர்கள் என அனைவருக்கும் எனது வாழ்த்துகள். இந்தப் படம் ஒரு சிறந்த பொழுதுபோக்கு விருந்தாக அமையும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் ஒரு திரைப்படத்தை இவ்வளவு பிரமாண்டமாக பூஜையுடன் தொடங்குவதே பெரிய விஷயம். ஒரு திரைப்படத்தை ஆரம்பிப்பதில் இருந்து அதை முடித்து, திரையரங்குகளுக்கு கொண்டு வரும் வரை எண்ணற்ற போராட்டங்களும் சவால்களும் இருக்கின்றன. படப்பிடிப்பில் வரும் சவால்களைவிட, அந்தப் படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. ஒரு திரைப்படத்தின் வெற்றியை அதன் கதை, நடிகர்களின் நடிப்பு, ஒளிப்பதிவு அல்லது இசை மட்டுமே தீர்மானிப்பதில்லை. அந்தப் படத்தை சரியான முறையில் ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதும் மிக முக்கியம். அதற்கு நல்ல உள்ளடக்கம் (Content) மட்டுமல்ல, நல்ல நேரமும் (Timing) அவசியம்.

இந்த இரண்டும் சிறப்பாக அமையும்போது தான் ஒரு திரைப்படம் மாபெரும் வெற்றியைப் பெறும். ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ திரைப்படமும் அந்த வெற்றியைப் பெற்று ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள் என்றார்.

வழக்கறிஞர் தெய்வ சிகாமணி பேசியதாவது.., இந்த ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ திரைப்படம் அவருடைய கனவுத் திரைப்படம். அந்தக் கனவை நனவாக்க அவர் மிகுந்த அர்ப்பணிப்புடன் உழைத்திருக்கிறார். கடந்த ஏழு ஆண்டுகள் ஓடியவர், இந்தப் படத்தின் மூலம் வெற்றியாளராக மாறி, பல வெற்றிகளையும் விருதுகளையும் பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகள் என்றார்.

தயாரிப்பாளர், நடிகர் மஞ்சுநாத் பேசியதாவது.., இந்தப் படத்தை நல்ல முறையில் மக்களிடம் கொண்டு சேர்த்து, அனைவரும் பார்த்து ரசிக்கும் வகையில் ஆதரவை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

விளையாட்டு பின்னணியில் நகைச்சுவையும், குடும்ப பொழுதுபோக்கும் கலந்த வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகவுள்ள ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ திரைப்படம் குறித்து விரைவில் மேலும் பல அறிவிப்புகள் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.

dhamaraimurasu

dhamaraimurasu

dhamaraimurasu admin

Related Posts

தந்தை, மகன் உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் “ஃபாதர்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

இயக்குநர் R. சந்துரு தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஃபாதர்’. இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. தந்தை, மகன் இடையேயான ஆழமானதும், பல நேரங்களில் வார்த்தைகளால் வெளிப்படுத்தப்படாததுமான உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டீசர்,…

Read more

“டாக்ஸிக்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்கள் தயாரிப்பில், ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் ‘டாக்ஸிக்: A Fairy Tale for Grown-Ups’. ஆக்‌ஷன்,…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்கத்தவறிய செய்திகள்

தந்தை, மகன் உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் “ஃபாதர்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

தந்தை, மகன் உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் “ஃபாதர்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

“டாக்ஸிக்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“டாக்ஸிக்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

200 கோடி வசூல் சாதனை படைத்த “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம்

200 கோடி வசூல் சாதனை படைத்த “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம்

“ஒன்ஸ்மோர்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“ஒன்ஸ்மோர்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம் ! தெளிவில்லாத முதல்வரின் அறிவிப்பு !

கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம் ! தெளிவில்லாத முதல்வரின் அறிவிப்பு !

“Yourbackers play” உலகின் லாப நோக்கமற்ற OTT தளம் அறிமுகம் !

“Yourbackers play” உலகின் லாப நோக்கமற்ற OTT தளம் அறிமுகம் !

“இருமுடி கட்டு” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“இருமுடி கட்டு” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குரு சங்கருக்கு கொலை மிரட்டல் !

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குரு சங்கருக்கு கொலை மிரட்டல் !

“ஹலோ மிஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“ஹலோ மிஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

பழனி அருகே “தார் & டீசல்” திருட்டு ! புகார்தாரரை மிரட்டும் காவல் ஆய்வாளர் !.?

பழனி அருகே “தார் & டீசல்” திருட்டு ! புகார்தாரரை மிரட்டும் காவல் ஆய்வாளர் !.?

“அன்பில் அவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு !

“அன்பில் அவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு !

“ஐ ம் கேம்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“ஐ ம் கேம்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“பியார் பிரேமா கல்யாணம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“பியார் பிரேமா கல்யாணம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“பத்தா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“பத்தா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் டிரெய்லருக்கு அமோக வரவேற்பு !

டாக்ஸிக் படத்தின் டிரெய்லருக்கு அமோக வரவேற்பு !

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு !

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“வதந்தி சீசன் 2” குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“வதந்தி சீசன் 2” குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட “பியார் பிரேமா கல்யாணம்” தொடரின் முன்னோட்டம் !

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட “பியார் பிரேமா கல்யாணம்” தொடரின் முன்னோட்டம் !

துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ஆம் கேம்” ( I am Game ) படத்தின் டிரெய்லர் வெளியீடு !

துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ஆம் கேம்” ( I am Game ) படத்தின் டிரெய்லர் வெளியீடு !

வதந்தி சீசன் 2 “தி மிஸ்டரி ஆஃப் மணி” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

வதந்தி சீசன் 2 “தி மிஸ்டரி ஆஃப் மணி” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

“நடு நாடு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“நடு நாடு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“பிரஜாபதி” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“பிரஜாபதி” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

நயன்தாரா, கவின் நடித்துள்ள “ஹாய்” படத்தின் ரசகுல்லா பாடல் வெளியீடு !

நயன்தாரா, கவின் நடித்துள்ள “ஹாய்” படத்தின் ரசகுல்லா பாடல் வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் இரண்டாவது பாடல் “தடுமாறுதே” வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் இரண்டாவது பாடல் “தடுமாறுதே” வெளியீடு !

“அருள்வான்” படத்தின் திரைவிமர்சனம்

“அருள்வான்” படத்தின் திரைவிமர்சனம்

“அன்பே டயானா” திரைப்படத்தின் விமர்சனம்

“அன்பே டயானா” திரைப்படத்தின் விமர்சனம்

கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான “அமரன்” படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் !

கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான “அமரன்” படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் !

“தார்” டீசல் திருட்டை மாவட்டந்தோறும் விரிவுபடுத்தும் பலே கில்லாடி !

“தார்” டீசல் திருட்டை மாவட்டந்தோறும் விரிவுபடுத்தும் பலே கில்லாடி !

பழனி அருகே டீசல், தார் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

பழனி அருகே டீசல், தார் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

“வாழ்க்கையே போராட்டம்” படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் !

“வாழ்க்கையே போராட்டம்” படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் !

“லெட்சுமி காந்தன் கொலை வழக்கு” படத்தின் திரைவிமர்சனம்

“லெட்சுமி காந்தன் கொலை வழக்கு” படத்தின் திரைவிமர்சனம்

ஐ, நோபடி ( I, Nobody ) திரைப்படத்தின் விமர்சனம்

ஐ, நோபடி ( I, Nobody ) திரைப்படத்தின் விமர்சனம்

“ராவ் பகதூர்” ( தெலுங்கு ) திரைப்படத்தின் விமர்சனம்

“ராவ் பகதூர்” ( தெலுங்கு ) திரைப்படத்தின் விமர்சனம்

திண்டுக்கல்லில் பெருகிவரும் கள்ளத் துப்பாக்கி கலாசாரம் ! திணறும் வனத்துறை, கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

திண்டுக்கல்லில் பெருகிவரும் கள்ளத் துப்பாக்கி கலாசாரம் ! திணறும் வனத்துறை, கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

யோகி பாபு நடித்துள்ள “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

யோகி பாபு நடித்துள்ள “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“முதற்கனல்” படத்தின் திரைவிமர்சனம்

“முதற்கனல்” படத்தின் திரைவிமர்சனம்

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

“தாதா தி சவுரவ் கங்குலி ஸ்டோரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“தாதா தி சவுரவ் கங்குலி ஸ்டோரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“வஞ்சி” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“வஞ்சி” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“கட்டா குஸ்தி_2” திரைப்படத்தின் விமர்சனம்

“கட்டா குஸ்தி_2” திரைப்படத்தின் விமர்சனம்

அருள்வான் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

அருள்வான் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“டார்க்” படத்தின் திரைவிமர்சனம்

“டார்க்” படத்தின் திரைவிமர்சனம்

அமெரிக்க தமிழ்ச்சங்க விழாவில் கவனம் ஈர்த்த “திருக்குறள்_2” திரைப்படம் !

அமெரிக்க தமிழ்ச்சங்க விழாவில் கவனம் ஈர்த்த “திருக்குறள்_2” திரைப்படம் !

பிரமாண்டமாக தயாராகும் “திருக்குறள்_2” திரைப்படம் !

பிரமாண்டமாக தயாராகும் “திருக்குறள்_2” திரைப்படம் !

“மனு” திரைப்படத்தின் விமர்சனம்

“மனு” திரைப்படத்தின் விமர்சனம்

“நாகபந்தம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“நாகபந்தம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“லவ் ஓ லவ்” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“லவ் ஓ லவ்” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

பூஜையிடன் படப்பிடிப்பை தொடங்கிய “லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி” படக்குழுவினர் !

பூஜையிடன் படப்பிடிப்பை தொடங்கிய “லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி” படக்குழுவினர் !

பூஜையிடன் துவங்கிய “குட் நியூஸ்” படத்தின் படப்பிடிப்பு !

பூஜையிடன் துவங்கிய “குட் நியூஸ்” படத்தின் படப்பிடிப்பு !

“லவ் ஓ லவ்” படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரித்த டீசர் !

“லவ் ஓ லவ்” படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரித்த டீசர் !

குறும்பட போட்டியில் திறமைசாலிகளை வாழ்த்திய பிரபலங்கள் !

குறும்பட போட்டியில் திறமைசாலிகளை வாழ்த்திய பிரபலங்கள் !

“ஹபீபி” படக்குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா !

“ஹபீபி” படக்குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா !

நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் “சூப்பர் சுப்பு” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் “சூப்பர் சுப்பு” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

திருமுட்டம் அருகே.. தொடரும் மணல் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

திருமுட்டம் அருகே.. தொடரும் மணல் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

“எங்கள் தங்கம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“எங்கள் தங்கம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

வடசென்னையில் தினந்தோறும் 1000 கிலோ ரேசன் அரிசியை கடத்தும் அரசு ஊழியர் சடகோபால் !

வடசென்னையில் தினந்தோறும் 1000 கிலோ ரேசன் அரிசியை கடத்தும் அரசு ஊழியர் சடகோபால் !

திருப்பூரில் மாணவிகளுக்கு ஆபாச கராத்தே பயிற்சி ! கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் கண்டனம்

திருப்பூரில் மாணவிகளுக்கு ஆபாச கராத்தே பயிற்சி ! கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் கண்டனம்

கராத்தே பயிற்சி என ஆபாச வீடியோ வெளியீடு ! வலுக்கும் கண்டனங்கள், கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

கராத்தே பயிற்சி என ஆபாச வீடியோ வெளியீடு ! வலுக்கும் கண்டனங்கள், கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

“மக்கள் தலைவா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“மக்கள் தலைவா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“ஆட்டி” திரைப்படத்தின் விமர்சனம்

“ஆட்டி” திரைப்படத்தின் விமர்சனம்

“நிழல்” திரைப்படத்தின் விமர்சனம்

“நிழல்” திரைப்படத்தின் விமர்சனம்

இஸ்லாமிய குடும்பத்தின் வாழ்வியல் ” ஹபீபி” ! விமர்சனம்

இஸ்லாமிய குடும்பத்தின் வாழ்வியல் ” ஹபீபி” ! விமர்சனம்

ஸ்லம் டாக் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு

ஸ்லம் டாக் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு

நெய்க்காரப்பட்டி கோவில் திருவிழாவில், கூட்ட நெரிசலில் சிக்கி 20_க்கும் மேற்பட்டோர் காயம் !

நெய்க்காரப்பட்டி கோவில் திருவிழாவில், கூட்ட நெரிசலில் சிக்கி 20_க்கும் மேற்பட்டோர் காயம் !

18 ஆம் நூற்றாண்டின் “வாள்” பழனி அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு !

18 ஆம் நூற்றாண்டின் “வாள்” பழனி அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு !

போதைப்பொருள் நடமாட்டத்தை வனத்துறையினருடன் இணைந்து கண்காணித்த காவல்துறையினர் !

போதைப்பொருள் நடமாட்டத்தை வனத்துறையினருடன் இணைந்து கண்காணித்த காவல்துறையினர் !

பழனி அருகே.. நெய்க்காரப்பட்டி கோவில் திருவிழா ! கூட்டத்தை கட்டுப்படுத்த திணறும் காவல்துறையினர் !

பழனி அருகே.. நெய்க்காரப்பட்டி கோவில் திருவிழா ! கூட்டத்தை கட்டுப்படுத்த திணறும் காவல்துறையினர் !

“லைட் வெயிட் பேபி” விறுவிறுப்பான படப்பிடிப்பில் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் !

“லைட் வெயிட் பேபி” விறுவிறுப்பான படப்பிடிப்பில் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் !

மடத்துக்குளம் அருகே.. கார் மோதி 2 வயது குழந்தை பலி ! பெற்றோர் படுகாயம் ! 

மடத்துக்குளம் அருகே.. கார் மோதி 2 வயது குழந்தை பலி ! பெற்றோர் படுகாயம் ! 

“சம்ஹாரம்” திரைப்படத்தின் விமர்சனம்

“சம்ஹாரம்” திரைப்படத்தின் விமர்சனம்

“மூன்றாம் கண்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“மூன்றாம் கண்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

கேன்ஸ் திரைப்பட விழாவில் “பாலன் தி பாய்” திரைப்படத்திற்கு வரவேற்பு !

கேன்ஸ் திரைப்பட விழாவில் “பாலன் தி பாய்” திரைப்படத்திற்கு வரவேற்பு !

“அந்தரன்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !

“அந்தரன்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !

“ஸ்லம் டாக்” படத்தின் டீசர் ஜூன் 8 ஆம் தேதி வெளியாகிறது !

“ஸ்லம் டாக்” படத்தின் டீசர் ஜூன் 8 ஆம் தேதி வெளியாகிறது !

தி இந்தியா ஸ்டோரி திரைப்படம் ஜூலை 24 ஆம் தேதி வெளியாகிறது !

தி இந்தியா ஸ்டோரி திரைப்படம் ஜூலை 24 ஆம் தேதி வெளியாகிறது !

அங்கீகாரம் படத்திற்கு “U” சான்றிதழ் வழங்கிய தணிக்கை வாரியம் !

அங்கீகாரம் படத்திற்கு “U” சான்றிதழ் வழங்கிய தணிக்கை வாரியம் !

ஒப்பந்ததாரரிடம் 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது ! பல்லடம் அருகே பரபரப்பு !

ஒப்பந்ததாரரிடம் 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது ! பல்லடம் அருகே பரபரப்பு !

“கலர்ஸ்” நிறுவனத்தை திறந்து வைத்த நடிகை பிரியா பவானி சங்கர் !

“கலர்ஸ்” நிறுவனத்தை திறந்து வைத்த நடிகை பிரியா பவானி சங்கர் !

“ஈகோ ராமன்” படத்தின் விமர்சனம்

“ஈகோ ராமன்” படத்தின் விமர்சனம்

பெத்தி படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !

பெத்தி படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !

பழனி அருகே அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் காவலப்பட்டி கிராமத்தினர் !

பழனி அருகே அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் காவலப்பட்டி கிராமத்தினர் !

நடன இயக்குனர் “ஷெரீப்_250” கொண்டாட்டம் !

நடன இயக்குனர் “ஷெரீப்_250” கொண்டாட்டம் !

தனித்துவமான வேடத்தில் சசிகுமார் நடித்துள்ள புதிய படத்தின் அப்டேட்ஸ் !

தனித்துவமான வேடத்தில் சசிகுமார் நடித்துள்ள புதிய படத்தின் அப்டேட்ஸ் !

“உயிரிணையே” இசை ஆல்பம் வெளியீட்டு விழா !

“உயிரிணையே” இசை ஆல்பம் வெளியீட்டு விழா !

“பெத்தி” திரைப்படம் ராம் சரணுக்கு தேசிய விருதை பெற்றுத்தரும் ! – சிவராஜ்குமார்

“பெத்தி” திரைப்படம் ராம் சரணுக்கு தேசிய விருதை பெற்றுத்தரும் ! – சிவராஜ்குமார்

சிம்பு நடிக்கும் “அரசன்” படத்தின் புதிய தகவல்கள் !

சிம்பு நடிக்கும் “அரசன்” படத்தின் புதிய தகவல்கள் !

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தால், கொள்ளை லாபம் பார்க்கும் FL-2 பார் உரிமையாளர்கள் !

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தால், கொள்ளை லாபம் பார்க்கும் FL-2 பார் உரிமையாளர்கள் !

பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே ? அதிகரிக்கும் பாலியல் சீண்டல்கள் !

பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே ? அதிகரிக்கும் பாலியல் சீண்டல்கள் !

“பாதாம்கீர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியீடு !

“பாதாம்கீர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியீடு !

பரபரப்பான ஆக்ஷ்ன் த்ரில்லர் கதைகளத்தில் உருவாகும் “சமவர்த்தி” !

பரபரப்பான ஆக்ஷ்ன் த்ரில்லர் கதைகளத்தில் உருவாகும் “சமவர்த்தி” !

“நாக பந்தம் திரைப்படம் ஜூலை 3 ஆம் தேதி வெளியீடு !

“நாக பந்தம் திரைப்படம் ஜூலை 3 ஆம் தேதி வெளியீடு !

“தி இந்தியா ஸ்டோரி” படத்தின் டீசர் விரைவில் வெளியீடு !

“தி இந்தியா ஸ்டோரி” படத்தின் டீசர் விரைவில் வெளியீடு !

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “கான் சிட்டி” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “கான் சிட்டி” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்ட ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் !

சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்ட ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் !

ஆக்ஷ்ன், த்ரில்லர் கதையில் உருவாகிவரும் “கொம்பா” திரைப்படம் !

ஆக்ஷ்ன், த்ரில்லர் கதையில் உருவாகிவரும் “கொம்பா” திரைப்படம் !

“கங்கணம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“கங்கணம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“அதிரடி” படவிழாவில் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் !

“அதிரடி” படவிழாவில் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் !

வரவேற்பை குவிக்கும் “தாழ் திறவா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் !

வரவேற்பை குவிக்கும் “தாழ் திறவா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் !