“ஏழு கடல் ஏழு மலை” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஏழு கடல் ஏழு மலை’. உணர்வுப்பூர்வமான கதை சொல்லல் மூலம் மனிதர்களின் இதயத்தை  நேரடியாகத் தொடுகின்ற படங்களைக்  கொடுத்துவரும் இயக்குநர் ராமின் அடுத்த படைப்பாக இது உருவாகியுள்ளது.

நடிகர் நிவின்பாலி ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் நம்பிக்கையுடன் இப்படத்தின் மூலம் கதாநாயகனாகக் களம் இறங்குகிறார். சமீபகாலமாக கதையின் நாயகனாக மாறிவிட்ட சூரி, நிவின்பாலிக்கு இணையான மற்றொரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடித்துள்ளார். படத்தில் எலியும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளது. இயக்குநர் ராமின் படங்களுக்கு உயிரோட்டமான இசையைத் தொடர்ந்து அளித்து வரும் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படம் வரும் அக்டோபர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை தரமணியில் உள்ள எம்ஜிஆர் திரைப்பட கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் படக்குழுவினருடன் ஏராளமான திரையுலக பிரபலங்களும் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, எனக்கு குறிப்பிட்ட சில இயக்குநர்களை ரொம்பவே பிடிக்கும், காரணம் என் ரசனை அந்த மாதிரி. அந்த வகையில் ‘தரமணி’ படம் நடந்த சமயத்தில் இயக்குநர் ராமை சந்தித்துப் பேசினேன். ஆனாலும் அவரை வைத்துப் படம் எடுக்கும் அளவிற்கு நாம் இன்னும் வளரவில்லையோ என எனக்கு ஒரு தயக்கம் இருந்து வந்தது. அந்த சமயத்தில் ‘நீ சின்ன தயாரிப்பாளர் தானே? என்று என்னை சிலர் ஏளனமாகப் பேசியதைக் கேள்விப்பட்டு, நடிகர் சிம்பு தானாகவே முன்வந்து கால்ஷீட் கொடுத்து ‘என் படத்தைத் தயாரியுங்கள்’ என்று கூறினார். வெங்கட் பிரபு அந்தப் படத்தை இயக்கியதால்தான்  இன்று உங்கள் முன்னால் நிற்கிறேன். அந்த சமயத்தில் ராம் அண்ணனிடம் இருந்து ஒரு கதை வந்தது. என்னைத் தேடி வந்த அந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன். அதுதான் ‘ஏழு கடல் ஏழு மலை’.

நானும் எஸ்.ஜே. சூர்யா சாரும் தான் இந்தக் கதையைக் கேட்டோம். எனக்கு கதை பிடித்திருந்ததை விட இயக்குநர் ராமுடன் பணியாற்ற வேண்டும் என்கிற ஆர்வம் அதிகம் இருந்தது. சிலர் ‘இவனிடம் பணமே இல்லை, இவன் எப்படி படம் எடுக்கப் போகிறான்’ என்று கூட வதந்திகளைப் பரப்பினார்கள். அப்போது அவரிடம், ‘அண்ணே, இதுவரை 10 படங்கள் எடுத்திருக்கிறேன்; ஒரு நாள் கூட சூட்டிங் ஸ்பாட்டில் பணம் இல்லை என்று படம் நின்றதே இல்லை. என்னிடம் பணம் இருந்தால் மட்டுமே அதைக் கணக்கிட்டுப்  படத்தையே துவங்குவேன்’ என்றேன். ஹீரோ நிவின்பாலி என்றதும் எனக்கு ரொம்ப சந்தோஷம், ‘பிரேமம்’ படத்தில் இருந்தே அவரைப் பிடிக்கும். அதன்பிறகு சூரி வந்தார். கதாநாயகி என்கிறபோது கேட்கவே தேவையில்லை, அஞ்சலியிடம் ஒரு போன் காலிலேயே சம்மதம் வாங்கி விட்டோம். ராம் அண்ணன் படம் என்பதால் குட்டி இசைஞானி யுவன் சங்கர் ராஜாவும் எங்கள் படத்திற்குக் கிடைத்தார். இந்தப் படத்தில் இப்போது கடைசிக் கட்ட வேலை வரை இயக்குநர் ராம் தான் உழைத்துக் கொண்டிருக்கிறார். அவருடன் இன்னும் எத்தனை படம் வேலை செய்வது என்றாலும் எனக்கு சந்தோசமே.

இந்தப் படத்தை ‘ஆழி பிக்சர்ஸ்’ நிறுவனம் வாங்கி ‘சக்தி ஃபிலிம் ஃபேக்டரி’ மூலம் வெளியிடுகிறது. கேரளாவில் துல்கர் சல்மானின் வேஃபேரர் (Wayfarer) நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது. தெலுங்கில் சுப்பா ரெட்டியின் கலர் அண்ட் கலர்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது. கர்நாடகாவில் டிடி என்டர்டெயின்மென்ட்ஸ் வெளியிடுகிறது. ஓவர்சீஸ் உரிமையை ட்ரிபுள் எம் புரொடக்ஷன்ஸ் வெளியிடுகிறது என்றார்.

பாடலாசிரியர் மதன் கார்க்கி பேசும்போது, எப்போதுமே இயக்குநர் ராம் இருக்கும் மேடையில் ஏறும்போது ஒரு குற்ற உணர்ச்சியோடு தான் ஏறுவேன். காரணம் முத்துக்குமார் சார் இல்லாத மேடை என்பதால் அந்த உணர்வு என்னிடம் எப்போதும் இருக்கும். அவங்க ரெண்டு பேரோட காம்பினேஷனில் வந்த பாடல்கள் எல்லாமே எனக்கு அவ்வளவு பிடிக்கும். நிவின்பாலியின் அலட்டல் இல்லாத நடிப்பு எனக்கு ரொம்பவே பிடிக்கும். அதேபோல ‘விடுதலை’ படத்தில் சூரி பிரமிக்க வைத்திருந்தார். எல்லோரும் சொல்வார்கள், வெற்றிமாறன் சார் சூரியை மாற்றிவிட்டார் என்று! ஆனால் அது உண்மை அல்ல; அவர் மாற்றியது சூரியை அல்ல, ரசிகர்கள் எல்லோரையும் தான் மாற்றி இருக்கிறார். அந்த கதாபாத்திரம் மாறவில்லை, பார்க்கும் நம்முடைய பார்வை மாறுகிறது; அதைத்தான் வெற்றிமாறன் செய்தார். ராம் சார் படங்களில் அவர் இயற்கையைக் கொண்டாடுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். வெவ்வேறு விதங்களில் பஞ்சபூதங்களையும் அவர் கொண்டாடுவார் என்றார்.

இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி பேசும்போது, எனக்கு இந்த மேடை வாழ்க்கையில் ரொம்பவே முக்கியமான ஒன்று என்று சொல்லலாம். நான் யுவன் சங்கர் ராஜாவின் மிகப்பெரிய ரசிகன். எந்த அளவுக்கு என்றால், நான் முதன்முதலாக கீபோர்டு வாங்கி பிராக்டீஸ் செய்ய ஆரம்பித்தது யுவன் சாரோட பாட்டுக்களை வச்சுதான். அதன் பிறகு மியூசிக் புரொடக்ஷன் படிக்க ஆரம்பித்தபோது யுவன் சாரோட சாங்ஸ் எடுத்துதான் ஒவ்வொன்றாக கற்க ஆரம்பித்தேன். ஆனால் யுவன் சாருடைய எந்த பாட்டாக இருந்தாலும் அதில் ஒரு ஆழம், அவ்வளவு அன்பு, ஆன்மா இருக்கும். இது எப்படி வருகிறது என்று யாருக்குமே தெரியாது, அவருக்கு மட்டும் தான் தெரியும். அதனால் இன்னும் நான் அவரை ஃபாலோ பண்ணிக்கிட்டு தான் இருக்கிறேன். ‘மரியான்’ படத்தின் போது ஒரு பாடல் பாட ஏ.ஆர். ரகுமான் ஸ்டுடியோவிற்கு வந்தார். அப்போது அங்கே நான் கடைசி அசிஸ்டன்ட்.. யுவன் பாடுவதை எப்படியாவது பார்க்க வேண்டும் என்று சொல்லி ரகுமான் சாரிடம் கேட்டேன், ஆனால் உள்ளே வரக்கூடாது என்று சொல்லிவிட்டார். ஆனால் இன்று யுவன் சாருடன் இந்த மேடையில் நானும் ஒருவராக அமர்ந்திருப்பது பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை என்றார்.

பாடலாசிரியர் மதி புகழேந்தி பேசும்போது, இது எனக்கு முதல் மேடை. நான் அகரம் பவுண்டேஷன் வழியே வந்த மாணவன். இயக்குநர் ராமிடம் ஒரு உதவியாளனாகத்தான் சேர்ந்தேன். இப்போது அவரது படத்திலேயே பாடல் எழுதியிருப்பது எனக்குப் பெருமையாக இருக்கிறது. இசையமைப்பாளர் சந்தோஷிடம் பாடல் எழுதுவது ரொம்ப வசதியாகவும் எளிமையாகவும் இருந்தது. நிறைய விஷயங்களைக் கேட்டு ஆலோசனை செய்து எழுத முடிந்தது என்றார்.

இயக்குநர் பார்த்திபன் பேசும்போது, இளைஞர்கள் எல்லோரும் எவ்வளவு உயரத்தையும் அடையலாம் என்பதற்கு மிகச் சரியான உதாரணம் சூரி. அவங்களுடைய வளர்ச்சி ஒரு சாதாரண நடிகரின் வளர்ச்சியல்ல, மிகப்பெரிய உழைப்பு. இயக்குநர் ராமுக்கு சினிமாவைத் தாண்டி வேறு எதுவுமே தெரியாது. சினிமாவில் அவர் ஒரு மந்திரவாதி. அன்பானவர், அடங்காதவர், நல்ல படம் எடுப்பதில் அசராதவர். அவர் படங்கள் எப்போதும் மிக எலிகண்ட்டாக இருக்கும். ஒவ்வொரு படத்திலும் டைரக்டர் ராமின் கோபமும் ஸ்டைலும்தான் முதல் ஹீரோவாக வெளிப்படும். அதனால்தான் அவரது மவுஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது.

‘நிவின் பாலிடெக்னிக்’ என்று சொல்லும் அளவிற்கு நிவின் பாலியின் நடிப்புத் தொழில்நுட்பம் அலாதியானது. நடிப்பில் ஒரு ‘நடிக்காத தன்மை’ அவரிடம் இருக்கும். சூரி ரொம்ப பிசியாக இருந்தாலும், தான் வாங்கும் பாராட்டுகளுக்கு நீண்ட குரல்பதிவு மூலம் உடனே பதிலளிக்கும் அந்தப் பண்பு அவரை இன்னும் பல கோடிகள் உயரத்திற்குச் சேர்க்கும்.

யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து வேலை செய்ய முடியவில்லையே என்று ஏங்கும் அவருடைய தீவிர ரசிகன் நான். அவருடைய மியூசிக்கை விட அவருடைய குரல் ரொம்ப ஹான்டிங்காக இருக்கும். காதல் தோல்வி அடைந்தால் கேட்கத் தோன்றும் குரல் அது. ட்ரெய்லரைப் பார்க்கும்போது கதை எதை நோக்கிப் போகிறது என்ற மர்மம் இருக்கு, அதுதான் ஒரு இயக்குநரின் பலம். இந்த ‘ஏழு கடல் ஏழு மலை’ படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும், நான் ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோவிலேயே பார்க்க ஆசைப்படுகிறேன் ! என்றார்.

இயக்குநர் வெற்றிமாறன் பேசும்போது, பாலுமகேந்திரா சாருடன் இருந்தபோது, ‘ஒருத்தன் நல்லா கதை சொல்றான்டா’ என்று ஒரு நாள் ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு என்னிடம் பேசினார், ரொம்ப நாட்கள் அப்படி அவர் பேசிப் பார்த்ததில்லை. அவர்தான் இயக்குநர் ராம். ரெண்டு பேர் கதை சொல்வதை பார்க்கும்போது, ‘எனக்கு இப்படி சொல்ல வரவில்லையே’ என்று ஏக்கம் இருக்கும். அதில் ஒருவர் ராம், இன்னொருவர் என்னுடைய சீனியரான தங்கவேலன். ‘கற்றது தமிழ்’, ‘பேரன்பு’, ‘தங்க மீன்கள்’ என இப்போது ‘ஏழு கடல் ஏழுமலை’ வரை ஒரு மனிதராக, இயக்குநராக அவர் எப்படி தன்னை விரிவாக்கிக் கொண்டே வருகிறாரோ, அதுபோல அவருடைய கதைகளும் விரிவாக்கம் அடைந்து கொண்டே இருக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த ‘ஏழு கடல் ஏழுமலை’ படத்தில் நிறைய ஆர்டரை மாற்றி, ரசிகர்களுக்குப் புரியும் வகையாக எளிமைப்படுத்தி, பார்வையாளனுக்கு அதனுடைய எமோஷன் நேரடியாக வந்து சேர்வதற்கான ஒரு கதை சொல்லலை இதில் அழகாக அவர் உருவாக்கி இருக்கிறார். மனிதர்களுடைய ஒலியும் இன்னொரு உயிரினத்துடைய ஒலியும் ஒன்றாகவே ஒலிக்கிறது இந்த படத்தில்தான் என்பதுதான் இப்படத்தினுடைய மிக மிகச் சிறப்பான அம்சம் என்று நினைக்கிறேன் என்றார்.

கதாநாயகி அஞ்சலி பேசும்போது,
எல்லோருக்கும் லார்ஜர் தன் லைஃப் (Larger than life) படங்கள் அப்படின்னு சில இருக்கும். நாமும் அப்படி பண்ணினா எப்படி இருக்கும் என்று நினைப்போம். எனக்கு இந்த ‘ஏழு கடல் ஏழுமலை’ அப்படி ஒரு அனுபவத்தைத்தான் கொடுத்திருக்கிறது. இந்தப் படத்தில் என்னுடைய பங்களிப்பு நிறைய இருக்கிறது, ஆனால் அது இந்த அளவிற்கு வெளிப்படையாக எல்லோரும் பாராட்டும் அளவிற்கு இருக்கிறது என்பது எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. நிவின்பாலி ஒரு அற்புதமான கோ-ஸ்டார். அவர் ஸ்பாட்டுக்கு வந்து விட்டாலே தினசரி எனக்கு ஒரு சேலஞ்ச் இருந்து கொண்டே இருக்கும். பொதுவாக ஒருவர் எப்படி ரியாக்ட் பண்ணுவார், அதற்கு நான் எப்படி பண்ணனும் அப்படின்னு பிளான் பண்ணிட்டு போற ஆள் இல்லை நான். ஆனால் இந்த செட்டில் நிவின்பாலி குட்டி குட்டி எக்ஸ்பிரஷனில் வந்து அதை கலக்கி எடுத்துடுவாரு. அதனால நானும் என் பங்குக்கு ஏதாவது பண்ணிக்கிட்டு இருக்கணும், அது ஒரு ஆரோக்கியமான போட்டியாகத்தான் இருந்தது. அது மட்டுமல்ல, முதல் நாளே இந்த நிவின்பாலியுடன் என்னால் ஒரு கம்ஃபோர்ட் ஜோன் உருவாக்க முடிந்தது.

சூரியை எனக்கு நீண்ட நாட்களாக தெரியும். எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது,  குற்றாலத்தில் ஒரு முறை படப்பிடிப்பு நடந்தபோது அங்கே ஒரே ஒரு ட்ரெட் மில் தான் இருக்கும். நானும் சூரியும் ரெண்டு பேருமே ஒர்க் அவுட் பண்ணனும்னு ஆசைப்படுவோம், அதனால் ரெண்டு பேருமே அதிலேயே ஓடுவோம், ஒரு மாதிரி வேடிக்கையாக இருக்கும். வெளியில போய் கிரிக்கெட் விளையாடவும் செய்வோம். இப்பதான் எனக்கு அதெல்லாம் ஞாபகம் வருகிறது. அவரோட நல்ல மனசுக்கு இப்போது அவர் என்ன சாதித்திருக்கிறாரோ அதற்கு எல்லாமே அவர் மிகத் தகுதியானவர். சூரியின் வெற்றி எனக்கு ரொம்பவே பர்சனலா ஃபீல் ஆச்சு, அவருக்கு இதற்கு மேலும் இன்னும் வெற்றி வர வேண்டும். இந்த படத்தில் நடித்த எலி பற்றி சொல்லத் தேவையில்லை, அதுவும் எங்கள் சக நடிகர்தான், தேங்க்யூ எலி.

யுவன் எனக்கு ரொம்ப பிடிச்ச மியூசிக் டைரக்டர் மட்டுமல்ல, பாடகரும் கூட, இந்த படத்தில் ‘ஏழு கடல் ஏழு மலை’ பாடல் என் ஃபேவரைட். ‘கற்றது தமிழ்’ படத்திற்கு அப்புறம் எனக்கு இன்னொரு முறை யுவனுடைய இசையில் ‘பறவையே எங்கே இருக்கிறாய்’ எனக்  கேட்கும்போது எனக்கு என்ன ஃபீல் இருந்ததோ, அதே வைப் இந்த பாட்டில் இருந்துச்சு. ராம் சார், யுவன் காம்பினேஷன் என்றாலே எப்போதுமே மேஜிக்கல் தான். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சாருக்கு ரொம்பவே நன்றி, காரணம், உங்களுக்கு ஒரு டேஸ்ட், உங்களுக்கும் ஒரு ஆசை இருக்கணும் இந்த மாதிரி ஒரு படம் பண்றதுக்கு. அந்த ஆசை வந்ததால்தான் நாங்கள் இந்த படத்தில் வர முடிந்தது. நீங்கள் இன்னும் இந்த மாதிரி நிறைய கதைகளை தேர்ந்தெடுத்து பண்ணனும் என விரும்புகிறேன்.

ராம் சாரைப் பற்றி பல மேடைகளில் பேசியிருந்தாலும் கூட, என்னுடைய ஒரு வெல்-விஷராகவும் ஒரு மென்டராகவும், ஒரு தந்தையைப் போன்றும் அவரை பல கோணத்தில் நான் பார்த்திருக்கிறேன். இந்த ‘ஏழு கடல் ஏழு மலை’ படம் ராம் சாருக்கு எவ்வளவு இதயத்துக்கு நெருக்கமான படம் என்பது எல்லோருக்கும் தெரியும். அதில் என்னுடைய கதாபாத்திரத்தை இவ்வளவு அழகாக எழுதியதற்கு ரொம்ப நன்றி. இப்போ எனக்கு சினிமாவுக்கு வந்து 20 வருஷம் ஆகிவிட்டதால், ’20 இயர்ஸ் ஆப் அஞ்சலி’ அப்படின்னு நிறைய பேர் விஷ் பண்றாங்க என்றார்.

நடிகர் சூரி பேசும்போது, மண்டாடி படத்தின் வெற்றியை தினந்தோறும் கேக் வெட்டி கொண்டாடிக் கொண்டே இருக்கிறேன். அந்த படம் வந்ததிலிருந்து அது ரொம்ப பெருமையா இருக்கு, சந்தோஷமா இருக்கு. அப்படி ஒரு வாய்ப்பு கொடுத்த என்னுடைய இயக்குநர்களுக்கும், என்னுடைய ரசிகர்களுக்கும் நன்றி. நீங்க கொடுத்த இந்த வாய்ப்பையோ, இந்த வெற்றியையோ எதையும் மண்டையில் எடுத்து வச்சுக்கிட்டு விருப்பத்திற்கு ஏற்ற மாதிரி ஆடாமல், அந்த வெற்றியை, அந்த மரியாதையை தலை வணங்கி எடுத்து ஓரமா வச்சுட்டு அடுத்த வேலைக்கு நான் எப்பவுமே ஓடிக்கிட்டே இருப்பேன். நீங்களும் என்னை புஷ் பண்ணிக்கிட்டே இருக்கீங்க.

பொதுவாக முக்கியமான இயக்குநர்கள் வெற்றிமாறன், ராம், பாலா, மிஷ்கின் இவங்க படங்களில் எல்லாம் நடிக்கணும் அப்படிங்கற ஆசை இருந்துச்சு. அதில் எனக்கு வெற்றிமாறன் அண்ணன் கிட்ட வாய்ப்பு கிடைச்சு அந்தப் படம் ஷூட்டிங் ஆரம்பிச்சிட்டோம்னு நினைக்கிறேன். அப்போதுதான் அருண் விஸ்வா மூலமாக எனக்கு ராம் அண்ணன் அறிமுகமானார். அந்த சமயத்தில் தான், ‘இந்த படத்தில் இப்படி ஒரு கதாபாத்திரம் இருக்கு, நீங்கள் பண்றீங்களா ? என்று என்னை நம்பி கூறினார். எனக்கு ஒரு பக்கம் ஆசையாக இருந்தாலும் கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ‘ராம் அண்ணா ஏரியா கொஞ்சம் ரிஸ்க்கான ஏரியா’ என்று சிலபேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அங்கே போனதற்கு பிறகுதான் தெரிந்தது இதைவிட சிறந்த இடம் இருக்க முடியாது என்று!

ஒரு இயக்குநர் இடத்திலிருந்து அவர் பேசாமல், நார்மலாக ஜாலியாக பேச ஆரம்பிச்சாரு, எனக்கு பயங்கர நம்பிக்கை வந்துருச்சு. ‘காமெடி பண்றது சாதாரண விஷயம் இல்லை, ரொம்ப கஷ்டமான வேலை’ அப்படின்னு அவர் பேசப்பேச எனக்கு பயங்கர தைரியம் வந்துச்சு. அப்படித்தான் இந்த படத்துக்குள்ள நான் வந்தேன். வெற்றிமாறனிடம் சொன்னபோது,, ‘தாராளமாக போங்க, இப்ப நம்ம படத்துல ஒன்னு இருக்கு பாத்தீங்களா, அதே மாதிரி அங்க போனீங்கன்னா அங்க ஒன்னு புதுசா கத்துக்கலாம், அது உங்களுக்கு ரொம்ப பெருசா உதவும்’ அப்படின்னு சொன்னாரு.

எப்படா ராம் அண்ணனுடன் சூட்டிங் போகலாம்னு காத்திருந்தேன். முதலில் கூட்டிட்டுப் போனார்கள், நல்ல ஒரு பெரிய ட்ரெயின் செட், பஞ்சபூதங்களுமே அதை சுத்தி இருந்துச்சு, கூடவே 70 எலியும் இருந்துச்சு! அதுக்குள்ளதான் ஷூட்டிங். இதுல என்ன காமெடினா, அண்ணனே எனக்கு டயலாக் சொல்லிக் கொடுத்ததுக்கு அப்புறம்தான் நான் டயலாக் பேச ஆரம்பிச்சேன். அப்ப என்ன சொன்னாருன்னா, ‘முதல் ஆக்சன், ரெயினுக்கு (மழை), இரண்டாவது, ட்ரெயினுக்கு, மூன்றாவது ஆக்சன், விண்டோ காற்று வருவதற்கு, நான்காவது, ட்ராலிக்கு, ஐந்தாவது ஆக்சன், காற்று அடிப்பதற்கு, ஆறாவது, தண்டருக்கு (இடி), மின்னல் வருது… அண்ணே எனக்கு எப்போ ஆக்சன் வரும்? ‘இருங்க, இதுதான் ஆர்டர்., ரைட்டு கரெக்ட்டா இருங்க’ன்னு சொல்லுவாரு. ஒன்பதாவது ஆக்சன், அது கூட இல்ல, ஒன்பது எலிக்கு! பத்தாவது ஆக்சன், எங்களுக்கு! இப்படி படப்பிடிப்பு முழுவதுமே ஜாலியாகவும் புதுசாகவும் இருந்தது என்றார்.

நடிகர் நிவின்பாலி பேசும்போது, ‘ஏழு கடல் ஏழு மலை’ யூனிட் ரொம்பவே நல்லா போச்சு.. இந்த மாதிரி ஒரு சக்சஸ் எல்லாம் வரும்போது ரொம்ப ஹேப்பியா இருக்கும். இல்ல, சினிமாவில் இன்னும் கமிட்டடா இருக்கணும், ஆடியன்ஸ் அந்த மாதிரி இருக்கிறார்கள். இந்த அன்பைக் கொடுக்கிறது ஆடியன்ஸ்தான், அப்போ உங்களுக்காக ஒரு நல்ல படம் பண்ணிட்டுப் போகணும்னு நினைச்சுக்கிட்டே இருக்கிறேன். ரொம்ப நாள் ஆச்சு ‘கம் பேக்’ வார்த்தையைக் கேட்டு, இப்ப என்னுடைய பெயரும் கூட அதில் இருக்கு. ‘நிவின்பாலி கம்பேக்’. ‘ பர்சனலா சொல்லணும்னா, எல்லா படமும் கம் பேக் முயற்சி தான், இப்போ இந்த படமும் ஒரு கம்பேக் டூ தமிழ் சினிமா.. அப்படி இருக்கட்டும் என்றார்.

இயக்குநர் ராம் பேசும்போது, ஏழு கடல் ஏழுமலை’ அக்டோபர் ஒன்றாம் தேதி வருகிறது. ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் எலியோ, யானையோ, மரமோ, புல்லோ எல்லாமே உயிர் தான். அதுதான் படத்தில் கதை. இப்ப ஒரு வாரத்துக்கு முன்னாடி ‘கற்றது தமிழ்’ படம் பார்த்தேன். அப்ப நாம எல்லாம் எப்படி இருந்தோம் இன்னைக்கு அப்படி இருக்கோமா அப்படின்னு தோணுச்சு. நிறைய மாற்றமாகி இருக்கு. ஆனால் நான் அப்படியே தானே இருக்கிறேன். முதன் முதலில் கற்றது தமிழ் படம் எடுத்தப்ப நா முத்துக்குமார் தான் என்னை யுவன் சங்கர் ராஜா கிட்ட கூட்டிட்டு போனார். ஒரு 30 நிமிஷம் கூட கதை சொல்லி இருக்க மாட்டேன். இந்தப் படம் நான் பண்றேன் அப்படின்னு சொல்லிட்டாரு. அன்று தொடங்கிய நட்புதான்.. அவர் நோ சொன்னால்தான் நான் வேறு இடத்துக்குப் போக முடியும். அடுத்த படமும் அவர்தான் பண்றாரு. அதே சமயம் எங்களுக்கு இடையேயானது வெறும் மியூசிக் டைரக்டர் இயக்குநர் நட்பு அல்ல  நலம் விரும்பிகளின் நட்பு எங்களுடையது.

‘பறந்து போ’ டைம்ல திடீர்னு ஒரு சிச்சுவேஷன் 22 பாட்டு ஆயிடுச்சு. ஆனா அவரு துபாயில் இருக்காரு. அப்ப அவர் நம்ம பிரண்டு சந்தோஷ் தயாநிதி இருக்காரு. அவர வச்சு பண்ணுங்க நான் உங்களுக்கு சப்போர்ட் பண்றேன்னு  சொன்னாரு.. இப்ப அதே மாதிரி ‘ஏழு கடல் ஏழுமலை’ படத்தை எல்லாமே முடிச்சிட்டோம் ஒரு வருஷம் இருக்கு ஆனா நான் மொத்த ஆர்டரை மாத்திட்டேன் அந்த டைத்துல திரும்ப போன அவர் கான்செர்ட்ல இருக்காரு நாங்க இங்க ஓடிடில படம் கொடுக்கணும். அப்பவும் என்ன சொன்னார் என்றால் சந்தோஷ்  கிட்ட போங்க கரெக்டா பண்ணித் தருவாரு அப்படின்னு சொன்னாரு. அந்த வகையில் தன் படத்துக்குள்ள இன்னொரு இசையமைப்பாளருக்கு வாய்ப்பு கொடுக்கக்கூடிய தன்னம்பிக்கையும் என் மேல் இருக்கக்கூடிய அன்பும் வேண்டுமே.. அவர்கிட்ட இருக்கு என்று கூறினார்.

dhamaraimurasu

dhamaraimurasu

dhamaraimurasu admin

Related Posts

கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் “ஊர் கூடும் இரவு” ஆவணப்படம் !

சென்னையைச் சேர்ந்த ரம்யா ஸ்ரீராம் புகைப்படக் கலைஞராகவும், பலகலைகள் பற்றிய தேடுதல் மனம் கொண்ட பயணியாகவும் இருக்கிறார்.மக்களிடையே பின்பற்றப்படும் சடங்கு வடிவங்களையும்,  விழாக்களையும் தனது கேமராவிற்குள் சிறைப் பிடிப்பது அவருக்கு விருப்பமான ஒன்று. அந்த வகையில்நமது பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவற்றை ஆவணப்படுத்துவதில்…

Read more

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரிப்பில், யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் நடிகர்கள் ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ‘ஹைக்கூ’. வரும் அக்டோபர் 23…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்கத்தவறிய செய்திகள்

“E 1” படத்தின் விமர்சனம்

“E 1” படத்தின் விமர்சனம்

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழாவில் 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழாவில் 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழா ! ஓவியர் ஜீவானந்தனுக்கு 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழா ! ஓவியர் ஜீவானந்தனுக்கு 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு 13.78 லட்சம் நிதியுதவி !

கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் “ஊர் கூடும் இரவு” ஆவணப்படம் !

கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் “ஊர் கூடும் இரவு” ஆவணப்படம் !

“ஆல்பாஸ்” விமர்சனம்

“ஆல்பாஸ்” விமர்சனம்

“தாய்நிலம்” விமர்சனம்

“தாய்நிலம்” விமர்சனம்

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

அதிமுகவின் பலவீனமா ? த.வெ.க வினரின் மோசடியா ?

அதிமுகவின் பலவீனமா ? த.வெ.க வினரின் மோசடியா ?

“அமெரிக்க ஆவி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“அமெரிக்க ஆவி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

அட்லான்டா இந்தியத் திரைப்பட விழாவில் “என்ன விலை” படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது !

அட்லான்டா இந்தியத் திரைப்பட விழாவில் “என்ன விலை” படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது !

நலிவுற்ற திருநங்கைகளுங்கு நிதியுதவி வழங்கிய “டோரதி” படக்குழு !

நலிவுற்ற திருநங்கைகளுங்கு நிதியுதவி வழங்கிய “டோரதி” படக்குழு !

“அன்பில் அவன் படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“அன்பில் அவன் படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“பத்தா” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“பத்தா” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

நாள்தோறும் நற்பணி ! ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன்

நாள்தோறும் நற்பணி ! ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன்

“ஒட்டாரம்” திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு !

“ஒட்டாரம்” திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு !

“சிக்மா” படத்தில் அறிமுகமானது எனக்கு பெருமை ! நடிகை ஃபரியா அப்துல்லா

“சிக்மா” படத்தில் அறிமுகமானது எனக்கு பெருமை ! நடிகை ஃபரியா அப்துல்லா

“அன்பில் அவன்” படத்தின் விமர்சனம்

“அன்பில் அவன்” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த நடிகர் !

“சிக்மா” படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த நடிகர் !

“பத்தா” படத்தின் விமர்சனம்

“பத்தா” படத்தின் விமர்சனம்

இயக்கமா ? நடிப்பா ? “சிக்மா” இயக்குநர் பேட்டி !

இயக்கமா ? நடிப்பா ? “சிக்மா” இயக்குநர் பேட்டி !

கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான் “சிக்மா” – இயக்குநர் சஞ்சய்

கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான் “சிக்மா” – இயக்குநர் சஞ்சய்

“தி டார்க் ஹெவன் படத்தின் வெற்றிக்கு, சொந்த ஊரில் விழா எடுத்த இயக்குநர் !

“தி டார்க் ஹெவன் படத்தின் வெற்றிக்கு, சொந்த ஊரில் விழா எடுத்த இயக்குநர் !

தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய பிரபல நடிகரின் மனைவி !

தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய பிரபல நடிகரின் மனைவி !

“கோல்டன் பாக்கியம்” டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு !

“கோல்டன் பாக்கியம்” டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு !

“கிட்டி” படத்தின் விமர்சனம்

“கிட்டி” படத்தின் விமர்சனம்

“த்ரிஷ்யம்_3” படத்தின் இந்தி பதிப்பை வெளியிட தடை கோரி வழக்கு !

“த்ரிஷ்யம்_3” படத்தின் இந்தி பதிப்பை வெளியிட தடை கோரி வழக்கு !

நான்கு மாநில டிஜிட்டல் & தொலைக்காட்சி துறைகளை ஒருங்கிணைக்கும் முயற்சி !

நான்கு மாநில டிஜிட்டல் & தொலைக்காட்சி துறைகளை ஒருங்கிணைக்கும் முயற்சி !

“துரோகம் பழகு படத்தின் டீசர் வெளியீட்டு விழா !

“துரோகம் பழகு படத்தின் டீசர் வெளியீட்டு விழா !

25 மாவட்டங்கள், 2 ஆயிரம் ரசிகர்கள் ! நடிகர் சூர்யா தலைமையில் பிரமாண்டமான விழா !

25 மாவட்டங்கள், 2 ஆயிரம் ரசிகர்கள் ! நடிகர் சூர்யா தலைமையில் பிரமாண்டமான விழா !

மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள “மக்கள் காவலன்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள “மக்கள் காவலன்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“பூஜா மேரி ஜான்” திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ஜீ_5 ஹிந்தியில் வெளியாகிறது

“பூஜா மேரி ஜான்” திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ஜீ_5 ஹிந்தியில் வெளியாகிறது

சாதிய வன்மத்தை விதைக்கும் “தி கிராண்ட் மாஸ்டர்” ! படத்தின் விமர்சனம்

சாதிய வன்மத்தை விதைக்கும் “தி கிராண்ட் மாஸ்டர்” ! படத்தின் விமர்சனம்

“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“#LOVE” வெப் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“#LOVE” வெப் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“தாய்நிலம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

“தாய்நிலம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

தனுஷின் ( D_56 ) புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

தனுஷின் ( D_56 ) புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

“ஏழு கடல் ஏழு மலை” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“ஏழு கடல் ஏழு மலை” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“டோரதி” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“டோரதி” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“தி டார்க் ஹெவன்” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“தி டார்க் ஹெவன்” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

மர்மம், ரகசியங்கள் நிறைந்த “ஆக்டோபஸ்” தொடர் ஜீ_5 தமிழில் வெளியாகிறது

மர்மம், ரகசியங்கள் நிறைந்த “ஆக்டோபஸ்” தொடர் ஜீ_5 தமிழில் வெளியாகிறது

ரசிகர்களின் அமோக வரவேற்பில் “என்ன விலை” திரைப்படம் !

ரசிகர்களின் அமோக வரவேற்பில் “என்ன விலை” திரைப்படம் !

“நல்ல படம்” திரைப்படத்தின் விமர்சனம்

“நல்ல படம்” திரைப்படத்தின் விமர்சனம்

“துரோகம் பழகு” படக்குழுவினரை  பாராட்டிய முதலமைச்சர் !

“துரோகம் பழகு” படக்குழுவினரை  பாராட்டிய முதலமைச்சர் !

பா. ரஞ்சித்தின் “வேட்டுவம்” படத்தின் அறிமுக வீடியோ வெளியீடு !

பா. ரஞ்சித்தின் “வேட்டுவம்” படத்தின் அறிமுக வீடியோ வெளியீடு !

விஜய் சேதுபதியின் “பத்தா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

விஜய் சேதுபதியின் “பத்தா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

பறிபோன மானத்திற்கு “என்ன விலை” என்ன விலை படத்தின் விமர்சனம்

பறிபோன மானத்திற்கு “என்ன விலை” என்ன விலை படத்தின் விமர்சனம்

“மண்டாடி” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“மண்டாடி” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“கஸ்தூரி வீடு” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“கஸ்தூரி வீடு” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

பாவனா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் “பிக்னிக்” படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு !

பாவனா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் “பிக்னிக்” படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு !

துல்கர் சல்மானின் “ஆகாசம்லோ ஓக தாரா” (AOT) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

துல்கர் சல்மானின் “ஆகாசம்லோ ஓக தாரா” (AOT) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

எம்.எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி “எம்.எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்” படத்தின் துவக்க விழா !

எம்.எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி “எம்.எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்” படத்தின் துவக்க விழா !

அர்ஜூன் தாஸ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

அர்ஜூன் தாஸ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

“அன்பில் அவன்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

நானி நடிப்பில் உருவாகியுள்ள “தி பாரடைஸ்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

நானி நடிப்பில் உருவாகியுள்ள “தி பாரடைஸ்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“என்ன விலை” படம் மறக்க முடியாத அனுபவம் ! நிமிஷா சஜயன்

“என்ன விலை” படம் மறக்க முடியாத அனுபவம் ! நிமிஷா சஜயன்

தி டார்க் ஹெவன் படத்தின் முன் வெளியீட்டு விழா !

தி டார்க் ஹெவன் படத்தின் முன் வெளியீட்டு விழா !

“பனங்காட்டான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“பனங்காட்டான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

அரசியலும் சமூக அக்கறையும் சேர்ந்து உருவான படம் தான் “ஆகாயம்” ! தினந்தோறும் நாகராஜ்

அரசியலும் சமூக அக்கறையும் சேர்ந்து உருவான படம் தான் “ஆகாயம்” ! தினந்தோறும் நாகராஜ்

“என்ன விலை” படத்தில் நான் நடித்த கதாப்பாத்திரம் மிகவும் சவாலானது ! கருணாஸ்

“என்ன விலை” படத்தில் நான் நடித்த கதாப்பாத்திரம் மிகவும் சவாலானது ! கருணாஸ்

“என்ன விலை” படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியது எனக்கு கிடைத்த வரம் !

“என்ன விலை” படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியது எனக்கு கிடைத்த வரம் !

“மண்டாடி” மூலம் மாஸ் ஹீரோவான சூரி ! மண்டாடி விமர்சனம்

“மண்டாடி” மூலம் மாஸ் ஹீரோவான சூரி ! மண்டாடி விமர்சனம்

வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகியுள்ள “நல்லபடம்” செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியீடு !

வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகியுள்ள “நல்லபடம்” செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியீடு !

சூர்யா நடித்துள்ள “சீன்” ( SCENE ) படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு !

சூர்யா நடித்துள்ள “சீன்” ( SCENE ) படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு !

“என்ன விலை” படத்தில் நடித்தது மிகவும் சவாலாக இருந்தது ! நடிகை ஷாஷா சிவக்குமார்

“என்ன விலை” படத்தில் நடித்தது மிகவும் சவாலாக இருந்தது ! நடிகை ஷாஷா சிவக்குமார்

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

அசோக் செல்வன் நடித்துள்ள “அன்பில் அவன்” வெளியீட்டு தேதி அறிவிப்பு !

அசோக் செல்வன் நடித்துள்ள “அன்பில் அவன்” வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“வதந்தி சீசன்_2” பற்றி மெய்சிலிர்க்கும் நடிகர் !

“வதந்தி சீசன்_2” பற்றி மெய்சிலிர்க்கும் நடிகர் !

“என்ன விலை” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“என்ன விலை” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

திரைப்பிரபலங்களுக்கு புதிய தீர்ப்பை பெற்றுத்தந்துள்ள நடிகை !

திரைப்பிரபலங்களுக்கு புதிய தீர்ப்பை பெற்றுத்தந்துள்ள நடிகை !

“வைல்ட் தமிழ்நாடு” இன்று முதல் பிவிஆர் திரையரங்குகளில் வெளியீடு !

“வைல்ட் தமிழ்நாடு” இன்று முதல் பிவிஆர் திரையரங்குகளில் வெளியீடு !

“மொத ராத்திரி” படக்குழுவினரின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“மொத ராத்திரி” படக்குழுவினரின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

கமல்ஹாசனின் புதிய படத்தின் “புகைப்படம்” சமூக வலைதளங்களில் வைரல் !

கமல்ஹாசனின் புதிய படத்தின் “புகைப்படம்” சமூக வலைதளங்களில் வைரல் !

நயன்தாராவின் “ஹாய்” படத்தின் விமர்சனம் !

நயன்தாராவின் “ஹாய்” படத்தின் விமர்சனம் !

மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க அலட்சியப்படுத்தும் அரசு அதிகாரிகள் ! நரிக்குறவர் இன மக்களின் போராட்டத்திற்கு தீர்வு எப்போது ?.!

மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க அலட்சியப்படுத்தும் அரசு அதிகாரிகள் ! நரிக்குறவர் இன மக்களின் போராட்டத்திற்கு தீர்வு எப்போது ?.!

“ஒன்ஸ்மோர்” படத்தின் திரைவிமர்சனம்

“ஒன்ஸ்மோர்” படத்தின் திரைவிமர்சனம்

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் மரணம் ! சோகத்தில் கிராம மக்கள் !

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் மரணம் ! சோகத்தில் கிராம மக்கள் !

தந்தை கொலை, பழிவாங்க துடிக்கும் மகள் ! “அமரம்” படத்தின் விமர்சனம்

தந்தை கொலை, பழிவாங்க துடிக்கும் மகள் ! “அமரம்” படத்தின் விமர்சனம்

திருப்பூரில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி தெருநாய்கள் கொடூர கொலை !

திருப்பூரில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி தெருநாய்கள் கொடூர கொலை !

தந்தை, மகன் உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் “ஃபாதர்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

தந்தை, மகன் உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் “ஃபாதர்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

“டாக்ஸிக்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“டாக்ஸிக்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

200 கோடி வசூல் சாதனை படைத்த “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம்

200 கோடி வசூல் சாதனை படைத்த “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம்

“ஒன்ஸ்மோர்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“ஒன்ஸ்மோர்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம் ! தெளிவில்லாத முதல்வரின் அறிவிப்பு !

கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம் ! தெளிவில்லாத முதல்வரின் அறிவிப்பு !

“Yourbackers play” உலகின் லாப நோக்கமற்ற OTT தளம் அறிமுகம் !

“Yourbackers play” உலகின் லாப நோக்கமற்ற OTT தளம் அறிமுகம் !

“இருமுடி கட்டு” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“இருமுடி கட்டு” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குரு சங்கருக்கு கொலை மிரட்டல் !

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குரு சங்கருக்கு கொலை மிரட்டல் !

“ஹலோ மிஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“ஹலோ மிஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

பழனி அருகே “தார் & டீசல்” திருட்டு ! புகார்தாரரை மிரட்டும் காவல் ஆய்வாளர் !.?

பழனி அருகே “தார் & டீசல்” திருட்டு ! புகார்தாரரை மிரட்டும் காவல் ஆய்வாளர் !.?

“அன்பில் அவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு !

“அன்பில் அவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு !

“ஐ ம் கேம்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“ஐ ம் கேம்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“பியார் பிரேமா கல்யாணம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“பியார் பிரேமா கல்யாணம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“பத்தா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“பத்தா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் டிரெய்லருக்கு அமோக வரவேற்பு !

டாக்ஸிக் படத்தின் டிரெய்லருக்கு அமோக வரவேற்பு !

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு !

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“வதந்தி சீசன் 2” குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“வதந்தி சீசன் 2” குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட “பியார் பிரேமா கல்யாணம்” தொடரின் முன்னோட்டம் !

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட “பியார் பிரேமா கல்யாணம்” தொடரின் முன்னோட்டம் !