தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஜெய் கதையின் நாயகனாக நடிக்கும் ‘தியாகராஜா டாக்கீஸ், புரொடக்ஷன் நம்பர் ஒன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பாரம்பரிய முறைப்படி பூஜையுடன் தென்காசியில் தொடங்கியது.
அறிமுக இயக்குநர் சிவ பிரசன்னா இயக்கத்தில் உருவாகும் ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’ திரைப்படத்தில் ஜெய் கதையின் நாயகனாகவும், அவருக்கு ஜோடியாக நடிகை டெல்னா டேவிஸ் நடிக்கிறார். விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்கிறார், ஹாரர் காமெடியாகத் தயாராகும் இந்தத் திரைப்படத்தைத் தியாகராஜா டாக்கீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏ. எம். பிரபாகரன் தயாரிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் பாரம்பரிய முறைப்படி தொடங்கியது. இதில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், IAS., சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கேமராவை இயக்கி வைத்தார். தொழிலதிபர் எஸ். சாமிநாத பாண்டியன் முன்னிலையில், தயாரிப்பாளர் ஏ. எம். பிரபாகரன் கிளாப் அடித்து படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.
தென்காசியில் தொடங்கியுள்ள இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 23 நாட்கள் நடைபெறும் எனப் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.


































































































