“அன்பில் அவன் படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

ஐங்கரன் இன்டர்நேஷனல் (Ayngaran International)  மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் (Happy High Pictures ) நிறுவனங்கள் இணைந்து தயாரித்த, அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், இயக்குநர் ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் வெளியான ‘அன்பில் அவன்’ திரைப்படம் ரசிகர்களின் ஆதரவுடன் திரையரங்குகளில் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் படக்குழுவினர் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியை நடத்தினர். இந்நிகழ்ச்சியில் இயக்குநர் கார்த்திகேயன், நடிகர்கள் அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், கதிர்பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு படத்தின் உருவாக்க அனுபவங்களையும், ரசிகர்களிடம் கிடைத்த வரவேற்பையும் பகிர்ந்துகொண்டனர்.

இந்நிகழ்வில், ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் அபிநயா செல்வம் பேசியதாவது, ‘அன்பில் அவன்’ படம் வெளியான முதல் நாளிலிருந்து வார இறுதி நாட்களில் கிடைத்த வரவேற்பு எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. இந்தப் படத்தில் நடித்த அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், கதிர், மகா, ஆகாஷ், பிரவீன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. எழுத்தாளர் விக்னேஷ், இயக்குநர் கார்த்திக், ஒளிப்பதிவாளர் கௌதம் ராஜேந்திரன், இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, எடிட்டர் செல்வா உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களுடைய சிறந்த உழைப்பைக் கொடுத்திருக்கிறார்கள். ‘அன்பில் அவன்’ படத்தைப் பற்றிய நல்ல கருத்துகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்வது குறித்த பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன; தெலுங்கிலும் ரீமேக் செய்யத் திட்டமிட்டிருக்கிறோம். எங்கள் படத்துக்கு ஆதரவு கொடுத்த அனைவருக்கும் மீண்டும் நன்றி என்றார்.

தயாரிப்பாளர் மற்றும்  டைரக்டர் ஆப் ப்ரமோஷன்ஸ் கவிதா பேசியதாவது, ஒரு திரைப்படத்தை உருவாக்குவதில் தயாரிப்புக் குழு எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு விளம்பரப் பணிகளும் மிகவும் முக்கியமானவை. ‘அன்பில் அவன்’ திரைப்படம் வெளியானதிலிருந்து இன்று வரை, ஒவ்வொரு நாளும் திரையரங்குகளின் எண்ணிக்கையும் காட்சிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றன. ரசிகர்களிடமிருந்து கிடைத்த ஆதரவும், நடிகர்கள் உள்ளிட்ட பலரும் படத்தைப் பற்றி பகிர்ந்துகொண்ட விமர்சனங்கள், செய்திகள் மற்றும் தகவல்களும் எங்களுக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளன. குறிப்பாக, சனிக்கிழமைக்குப் பிறகு படத்தைப் பற்றிய செய்திகள் தொடர்ந்து வரத் தொடங்கியதும் எங்களுக்கு மிகுந்த உற்சாகம் ஏற்பட்டது.

இந்தப் படத்தை இன்னும் சிறப்பாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம். என்னுடன் இணைந்து பணியாற்றிய மங்க், சித் உள்ளிட்ட விளம்பரக் குழுவினர், வெளிப்புற விளம்பரப் பணிகளை மேற்கொண்டவர்கள், செய்தித்தாள்கள், போஸ்டர்கள் மற்றும் சுவர் விளம்பரங்களை உருவாக்கியவர்கள் என அனைவரும் மிகுந்த அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருக்கிறார்கள். ஒவ்வொரு பணியையும் சிறப்பாகச் செய்வதற்காக அனைவரும் இணைந்து செயல்பட்டது மகிழ்ச்சியளிக்கிறது என்றார்.

ஸ்டன்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் மகன் கிரண் ஹெய்ன் பேசியதாவது, இந்தப் படக்குழுவினர் அனைவரும் இவ்வளவு அன்புக்கும் பாராட்டுக்கும் தகுதியானவர்கள். ஒவ்வொருவரும் இந்தப் படத்திற்காகக் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். அவர்களுடைய உழைப்பை மக்கள் பாராட்டுவதையும் ஆதரவு அளிப்பதையும் பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது.  இன்னும் அதிகமான பார்வையாளர்கள் திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்க்க உதவ வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.

கிரியேட்டிவ் புரொடியூசர் ஆப்ரஹாம் பேசியதாவது, இப்படம் பற்றி ரசிகர்கள் தொடர்ந்து எங்களுக்கு வாழ்த்துச் செய்தி அனுப்பி வருகிறார்கள். இதுபோன்ற பல நூற்றுக்கணக்கான செய்திகள் எங்களுக்கு தினமும் கிடைத்து வருகின்றன. ஹேப்பி ஹை பிக்சர்ஸ் ஆரம்பித்தபோது அசோக்கும் அபியும் மகிழ்ச்சியுடன் இந்தப் பயணத்தில் எங்களுடன் இணைந்தார்கள். திரையரங்கில் படம் முடிந்தவுடன் பார்வையாளர்கள் அதை மறந்துவிடக் கூடாது, வீட்டிற்குச் சென்ற பிறகும் படத்தைப் பற்றி யோசிக்க வேண்டும், பேச வேண்டும், ஏதோ ஒரு வகையில் அந்தப் படத்தைத் தங்களுடைய வாழ்க்கையுடன் தொடர்புபடுத்திப் பார்க்க வேண்டும் என்பதுதான் தயாரிப்பில் எங்களுடைய நோக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தப் படத்தை உருவாக்குவதற்காகப் பல சவால்களைச் சந்தித்தோம். இருந்தாலும், அசோக்கும் அபியும் இந்தப் படத்தின் மீது நம்பிக்கை வைத்து, அனைத்தையும் பணயம் வைத்து எங்களுடன் நின்றார்கள். எனக்குத் தனிப்பட்ட முறையில், ரசிகர்களிடமிருந்து கிடைக்கும் இதுபோன்ற உணர்வுபூர்வமான செய்திகள் தான் மிகப்பெரிய வெற்றி. அன்பையும் மரியாதையையும் விலைக்கு வாங்க முடியாது. அதை நம்முடைய உழைப்பால் சம்பாதிக்க வேண்டும். அந்த வகையில், ரசிகர்கள் எங்கள் மீது காட்டும் அன்பும் ஆதரவும் மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

திரையரங்குகளின் எண்ணிக்கையும் காட்சிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அதன் மூலம் படத்தின் வருவாயும் அதிகரிக்கும் என்று நம்புகிறோம். ஆனால், ‘அன்பில் அவன்’ படத்தின் வெற்றியை வெறும் வருவாயுடன் மட்டும் சுருக்கிவிட முடியாது. சினிமாவையும் வசூல், மதிப்பீடுகள் ஆகியவற்றுடன் மட்டும் ஒப்பிட்டுப் பார்க்கக் கூடாது. ஒரு திரைப்படம் மனிதர்களிடையே ஏற்படுத்தும் தாக்கமும், கலாச்சார ரீதியாக உருவாக்கும் உரையாடல்களும் மிகவும் முக்கியமானவை. ‘மண்டாடி’, ‘பத்தா’, ‘மீசைய முறுக்கு 2’, ‘ஏழு கடல் ஏழு மலை’ உள்ளிட்ட நல்ல படங்களுடன் இணைந்து திரையரங்குகளில் எங்கள் படமும் வெளியாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இந்தப் படங்கள் அனைத்தும் தமிழ் சினிமாவின் எல்லைகளை விரிவுபடுத்துகின்றன. எங்களுடைய முதல் தயாரிப்பில் உருவான திரைப்படத்தை மக்கள் இன்றும் நினைவுகூர்வதைப் போல, காதல் மற்றும் திருமணம் குறித்துப் பேசும்போதெல்லாம் ‘அன்பில் அவன்’ படமும் நினைவுகூரப்படும் என்று நம்புகிறேன்.

காதலிப்பவர்கள், காதலிக்க விரும்புபவர்கள், காதலித்துத் திருமணம் செய்துகொள்பவர்கள், திருமணத்திற்குப் பிறகும் காதலைப் பாதுகாக்க நினைப்பவர்கள் என அனைவருக்குமான படம் இது. அதேபோல், தங்களுடைய கனவுகளுக்காகக் காதலை இழந்துவிடக் கூடாது என்றும், காதலுக்காகத் தங்களுடைய கனவுகளைத் தொலைத்துவிடக் கூடாது என்றும் நினைப்பவர்களும் இந்தப் படத்துடன் தொடர்புபடுத்திக்கொள்ள முடியும். தொடர்ந்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கும் ‘அன்பில் அவன்’ படத்தை அனைவரும் திரையரங்கிற்குச் சென்று பாருங்கள். படம் உங்களைச் சிரிக்க வைக்கும், அழ வைக்கும். சில விஷயங்களில் உடன்பட வைக்கும், சிலவற்றில் மாறுபடவும் வைக்கும். ஆனால், படம் முடிந்து வெளியே வரும்போது அந்தப் படத்தை உங்களுடன் வீட்டிற்குக் கொண்டு செல்வீர்கள். இந்தப் படத்தை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்றார்.

இயக்குநர் கார்த்திகேயன் பேசியதாவது.., ரசிகர்கள் படத்துடன் உணர்வுப்பூர்வமாகத் தொடர்புபடுத்திக் கொண்டு தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வது மகிழ்ச்சியாக இருக்கிறது. தயாரிப்பாளர்களுக்கு லாபம் கிடைப்பதுடன், நாம் உருவாக்கிய படம் மக்களிடம் சரியாகச் சென்றடைவதும் முக்கியம். ‘அன்பில் அவன்’ படத்தைப் பொறுத்தவரை இந்த இரண்டு விஷயங்களும் நடந்திருக்கின்றன. குறிப்பாக, குடும்பத்தை நேசிக்கும் ஆண்களைப் பற்றியும் கதாபாத்திரங்கள் ஏற்படுத்திய தாக்கத்தைப் பற்றியும் ரசிகர்கள் பகிர்ந்துகொள்ளும் கருத்துகள் எங்களை நெகிழச் செய்கின்றன.

அசோக் செல்வன் இந்தப் படத்தை என்னிடம் ஒப்படைத்தபோது மிகப்பெரிய பொறுப்பை உணர்ந்தேன். விக்னேஷ் ராஜ் எழுதிய கதையைத் திரைக்கதையாகச் செம்மைப்படுத்துவதற்கும், அதைத் திரையில் சிறப்பாகக் கொண்டுவருவதற்கும் உதவிய அனைவருக்கும் நன்றி. ஒரு நல்ல தயாரிப்பு நிறுவனத்தின் ஆதரவு புதிய இயக்குநர்களுக்கு மிகவும் முக்கியம். இந்தப் படத்தின் திரைக்கதையைப் பலரும் பாராட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது. பல இயக்குநர்கள் படத்தைப் பார்த்துவிட்டு பாராட்டியதும் எங்களுக்கு ஊக்கமளிக்கிறது.

என் வாழ்க்கையில் என் தந்தை எனக்கு வழிகாட்டியதைப் போல, சினிமாவில் அசோக் அண்ணா எனக்கு வழிகாட்டியிருக்கிறார். நான் எழுதிய முதல் திரைக்கதையை அவரிடம் கொடுத்தபோது, அதை வாசித்துவிட்டு மறுநாளே மிகவும் பிடித்திருப்பதாகத் தெரிவித்தார். அது எனக்குப் பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. புதிய இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்து, அவர்கள் பயணிப்பதற்கான பாதையை உருவாக்கித் தருகிறார். நான் கேட்டதைவிட அதிகமாகவே இந்தப் படத்திற்காகச் செய்து கொடுத்திருக்கிறார். அவருக்கு மனமார்ந்த நன்றி. இந்தப் படத்தில் பணியாற்றியதையும், அவருடைய வெற்றிப் பயணத்தில் ஒரு பகுதியாக இருந்ததையும் பெருமையாகக் கருதுகிறேன்.

நடிகர் கதிர் பாலு பேசியதாவது.., ‘அன்பில் அவன்’ என் வாழ்க்கையிலும் திரைப்பயணத்திலும் முக்கியமான படம். என் அப்பாவைப் போல இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் தான் சினிமாவுக்கு வந்தேன். இன்றும் அந்தக் கனவு என்னுள் இருக்கிறது. இந்தப் பயணத்தில் எனக்கு ஆதரவளித்த அன்பில் அவனுக்கு நன்றி. இயக்குநர் கார்த்திகேயன், மகேஷ் உள்ளிட்டவர்கள் என்னுடைய நடிப்பில் புதிய மாற்றத்தைக் கொண்டுவர உதவியிருக்கிறார்கள். இந்தப் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள், உதவி இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பு நிர்வாகக் குழுவினர் அனைவருக்கும் நன்றி. படப்பிடிப்பில் அவர்கள் காட்டிய உழைப்பையும் அர்ப்பணிப்பையும் நேரில் பார்த்திருக்கிறேன்.

இதுவரை பல கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், ‘அன்பில் அவன்’ எனக்கு ஒரு புதிய அடையாளத்தைக் கொடுத்திருக்கிறது. வில்லன் கதாபாத்திரத்தை வெறுமனே கத்திப் பேசாமல், நடிப்பின் மூலம் எப்படிக் கொண்டு செல்லலாம் என்பதை இந்தப் படம் கற்றுக்கொடுத்தது. வழக்கமான பாணியிலிருந்து வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்பதற்காகவே அசோக் செல்வன் எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்தார். திறமை இருந்தும் வாய்ப்புக்காகக் காத்திருப்பவர்களுக்கு அவர் ஆதரவளிப்பது பாராட்டுக்குரியது.

மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் அவர்களுடன் பணியாற்றிய அனுபவத்தையும் மறக்க முடியாது. இரவு முதல் மறுநாள் காலை வரை குளிரில் சண்டைக் காட்சிகளில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். படப்பிடிப்பில் அசோக் செல்வன் எனக்கு உதவியாக இருந்தார். இந்தப் படத்தின் மூலம் கிடைத்த அனுபவமும் அங்கீகாரமும் மகிழ்ச்சியளிக்கின்றன. எனக்கு இந்த வாய்ப்பை வழங்கிய அசோக் செல்வன், இயக்குநர் கார்த்திகேயன் உள்ளிட்ட அனைவருக்கும் மனமார்ந்த நன்றி என்றார்.

நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசியதாவது, படம் வெளியானதிலிருந்து ரசிகர்களிடமிருந்து நிறைய செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாகப் பெண்களும் இளம் பெண்களும் தங்களுடைய உணர்வுகளைப் பகிர்ந்துகொண்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது. ஒரு திரைப்படம் பார்வையாளர்களின் மனதைத் தொட்டு, அவர்களை உணர்ச்சிவசப்பட வைக்கிறது என்றால், அதுவே மிகப்பெரிய விஷயம். எனக்குப் பிடித்த சில திரைப்படங்கள் என் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. அதேபோல, நாங்கள் உருவாக்கிய ஒரு படம் மற்றவர்களின் மனதிலும் அப்படியொரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றால், அதை ஒரு வரமாகத்தான் பார்க்கிறேன். படத்தைத் திரையரங்கில் பார்த்து, எங்களுடைய உழைப்பைப் பாராட்டி, தங்களுடைய அன்பையும் ஆதரவையும் பகிர்ந்துகொண்ட அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி.

இந்தப் படத்தை முதன்முதலில் பார்த்த அனுபவம் எனக்கு மிகவும் உணர்ச்சிகரமானதாக இருந்தது. அப்போது எனக்கு ஏற்பட்ட பதற்றத்தால், படத்தைத் தொடக்கத்திலிருந்து திரையரங்கில் அமர்ந்து பார்க்க முடியவில்லை. படம் ஓடிக்கொண்டிருந்தபோது உள்ளே சென்று, பக்கவாட்டுப் படிக்கட்டில் நின்றபடியே பார்க்கத் தொடங்கினேன். இயக்குநர் கார்த்திக், அசோக் உள்ளிட்ட படக்குழுவினரும் அப்போது என்னுடன் இருந்தார்கள். அப்படியே சுமார் ஒன்றரை மணி நேரம் நின்றுகொண்டே முழுப் படத்தையும் பார்த்தேன். அப்போது கண்களில் கண்ணீர் வந்தது. படம் எப்படிப்பட்ட வரவேற்பைப் பெறும் என்பதைத் தாண்டி, நாங்கள் உருவாக்கிய படத்தைப் பார்த்து மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்தேன். அவ்வளவு உணர்வுப்பூர்வமாகவும் அழகாகவும் படம் அமைந்திருந்தது. ஒரு நடிகையாக இப்படிப்பட்ட திரைப்படத்தில் நடிப்பது உண்மையிலேயே ஒரு வரம். எதிர்காலத்தில் இந்தப் படத்தைத் திரும்பிப் பார்க்கும்போதும், இதில் நடித்ததற்காகப் பெருமைப்படுவேன்.

இந்தப் படத்தின் காட்சியமைப்பும் ஒளிப்பதிவும் மிகவும் அழகாக இருந்தன. ஒவ்வொரு காட்சியிலும் இருக்கும் பரபரப்பு, உணர்வுகள், காதல் என அனைத்தையும் திரையரங்கில் அமர்ந்து உணர முடிந்தது. ஒரு சிறந்த சினிமா அனுபவத்தை இந்தப் படம் கொடுத்திருக்கிறது. இந்தப் படத்தில் எனக்குக் கிடைத்த வாய்ப்புக்காக இயக்குநர் கார்த்திக்கிற்கு நன்றி சொல்ல வேண்டும். எனக்கு நடிப்பதற்கு நிறைய இடம் கொடுத்து, என்னுடைய கதாபாத்திரத்தையும் அழகாக எழுதியிருந்தார். குறிப்பாக, இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்துடன் எனக்கு வரும் காட்சிகளைப் பலரும் பாராட்டினார்கள். அந்தக் காட்சிகளைப் பற்றிப் பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்துகொண்டதைப் பார்க்கும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படம் உண்மையிலேயே மனதைத் தொடும் அழகான சினிமா அனுபவம். எனவே, அனைவரும் திரையரங்கிற்குச் சென்று படத்தைப் பார்த்து எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். மக்கள் படத்தை ரசித்துப் பாராட்டுவதைப் பார்ப்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி என்றார்.

நடிகரும் தயாரிப்பாளருமான அசோக் செல்வன் பேசியதாவது:
இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய மக்களுக்கு முதலில் நன்றி. ‘ஓ மை கடவுளே’ உள்ளிட்ட படங்களுக்கு மக்கள் கொடுத்த ஆதரவுதான் எனக்கு மிகப்பெரிய பலம். அந்த வரிசையில் ‘அன்பில் அவன்’ படத்தையும் பார்க்கிறேன். காதல் கதையாகத் தொடங்கி, த்ரில்லர், ஆக்‌ஷன் எனப் பல ஜானர்களில் பயணிக்கும் வகையில் இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறோம். படம் பார்த்துப் பலர் உணர்ச்சிவசப்பட்டதாகக் கூறுகிறார்கள். இந்தப் படத்தில் சில குறைகள் இருக்கலாம். ஆனால், இதன் இதயமும் ஆன்மாவும் சரியான இடத்தில் இருப்பதாக நம்புகிறேன்.

படம் வெளியானது முதல்  ரசிகர்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. கடும் போட்டிகளுக்கு மத்தியில் வெளியானாலும், படம் தொடர்ந்து வளர்ந்து தற்போது லாபகரமான நிலையை எட்டியிருக்கிறது. இன்னும் பலர் இந்தப் படத்தைத் திரையரங்கில் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். மற்றவர்களின் விமர்சனங்களை மட்டும் நம்பாமல், படத்தைப் பார்த்து உங்களுடைய கருத்தை நீங்களே முடிவு செய்யுங்கள். இந்தப் படம் பின்னாளில் இன்னும் அதிகமாகப் பேசப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

ஒரு தயாரிப்பாளராக இந்தப் படத்தின் மூலம் திறமையான நடிகர்களுக்கு வாய்ப்பளிக்க முடிந்தது எனக்குப் பெரிய மகிழ்ச்சி. நானும் சினிமாவுக்கு வருவதற்காகப் பல ஆடிஷன்களில் பங்கேற்றிருக்கிறேன். அதனால் திறமையானவர்களுக்குச் சரியான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் எப்போதும் இருந்தது. மஹா, கதிர், ஆகாஷ், பிரவீன், தீபன் உள்ளிட்ட பலருக்கு இந்தப் படம் நல்ல அடையாளத்தைத் தந்திருப்பதாக நம்புகிறேன். காதலின் ஆழத்தையும் உணர்வுகளையும் பேசும் இந்தப் படம், காதலிப்பவர்கள், காதலித்தவர்கள் எனப் பலருக்கும் நெருக்கமான அனுபவமாக இருக்கும். இன்னும் திரையரங்கில் பார்க்காதவர்கள் அவசியம் பார்த்து ஆதரவு தர வேண்டும் என்றார்.

dhamaraimurasu

dhamaraimurasu

dhamaraimurasu admin

Related Posts

கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் “ஊர் கூடும் இரவு” ஆவணப்படம் !

சென்னையைச் சேர்ந்த ரம்யா ஸ்ரீராம் புகைப்படக் கலைஞராகவும், பலகலைகள் பற்றிய தேடுதல் மனம் கொண்ட பயணியாகவும் இருக்கிறார்.மக்களிடையே பின்பற்றப்படும் சடங்கு வடிவங்களையும்,  விழாக்களையும் தனது கேமராவிற்குள் சிறைப் பிடிப்பது அவருக்கு விருப்பமான ஒன்று. அந்த வகையில்நமது பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவற்றை ஆவணப்படுத்துவதில்…

Read more

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரிப்பில், யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் நடிகர்கள் ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ‘ஹைக்கூ’. வரும் அக்டோபர் 23…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்கத்தவறிய செய்திகள்

“E 1” படத்தின் விமர்சனம்

“E 1” படத்தின் விமர்சனம்

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழாவில் 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழாவில் 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழா ! ஓவியர் ஜீவானந்தனுக்கு 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழா ! ஓவியர் ஜீவானந்தனுக்கு 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு 13.78 லட்சம் நிதியுதவி !

கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் “ஊர் கூடும் இரவு” ஆவணப்படம் !

கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் “ஊர் கூடும் இரவு” ஆவணப்படம் !

“ஆல்பாஸ்” விமர்சனம்

“ஆல்பாஸ்” விமர்சனம்

“தாய்நிலம்” விமர்சனம்

“தாய்நிலம்” விமர்சனம்

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

அதிமுகவின் பலவீனமா ? த.வெ.க வினரின் மோசடியா ?

அதிமுகவின் பலவீனமா ? த.வெ.க வினரின் மோசடியா ?

“அமெரிக்க ஆவி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“அமெரிக்க ஆவி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

அட்லான்டா இந்தியத் திரைப்பட விழாவில் “என்ன விலை” படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது !

அட்லான்டா இந்தியத் திரைப்பட விழாவில் “என்ன விலை” படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது !

நலிவுற்ற திருநங்கைகளுங்கு நிதியுதவி வழங்கிய “டோரதி” படக்குழு !

நலிவுற்ற திருநங்கைகளுங்கு நிதியுதவி வழங்கிய “டோரதி” படக்குழு !

“அன்பில் அவன் படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“அன்பில் அவன் படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“பத்தா” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“பத்தா” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

நாள்தோறும் நற்பணி ! ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன்

நாள்தோறும் நற்பணி ! ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன்

“ஒட்டாரம்” திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு !

“ஒட்டாரம்” திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு !

“சிக்மா” படத்தில் அறிமுகமானது எனக்கு பெருமை ! நடிகை ஃபரியா அப்துல்லா

“சிக்மா” படத்தில் அறிமுகமானது எனக்கு பெருமை ! நடிகை ஃபரியா அப்துல்லா

“அன்பில் அவன்” படத்தின் விமர்சனம்

“அன்பில் அவன்” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த நடிகர் !

“சிக்மா” படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த நடிகர் !

“பத்தா” படத்தின் விமர்சனம்

“பத்தா” படத்தின் விமர்சனம்

இயக்கமா ? நடிப்பா ? “சிக்மா” இயக்குநர் பேட்டி !

இயக்கமா ? நடிப்பா ? “சிக்மா” இயக்குநர் பேட்டி !

கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான் “சிக்மா” – இயக்குநர் சஞ்சய்

கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான் “சிக்மா” – இயக்குநர் சஞ்சய்

“தி டார்க் ஹெவன் படத்தின் வெற்றிக்கு, சொந்த ஊரில் விழா எடுத்த இயக்குநர் !

“தி டார்க் ஹெவன் படத்தின் வெற்றிக்கு, சொந்த ஊரில் விழா எடுத்த இயக்குநர் !

தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய பிரபல நடிகரின் மனைவி !

தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய பிரபல நடிகரின் மனைவி !

“கோல்டன் பாக்கியம்” டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு !

“கோல்டன் பாக்கியம்” டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு !

“கிட்டி” படத்தின் விமர்சனம்

“கிட்டி” படத்தின் விமர்சனம்

“த்ரிஷ்யம்_3” படத்தின் இந்தி பதிப்பை வெளியிட தடை கோரி வழக்கு !

“த்ரிஷ்யம்_3” படத்தின் இந்தி பதிப்பை வெளியிட தடை கோரி வழக்கு !

நான்கு மாநில டிஜிட்டல் & தொலைக்காட்சி துறைகளை ஒருங்கிணைக்கும் முயற்சி !

நான்கு மாநில டிஜிட்டல் & தொலைக்காட்சி துறைகளை ஒருங்கிணைக்கும் முயற்சி !

“துரோகம் பழகு படத்தின் டீசர் வெளியீட்டு விழா !

“துரோகம் பழகு படத்தின் டீசர் வெளியீட்டு விழா !

25 மாவட்டங்கள், 2 ஆயிரம் ரசிகர்கள் ! நடிகர் சூர்யா தலைமையில் பிரமாண்டமான விழா !

25 மாவட்டங்கள், 2 ஆயிரம் ரசிகர்கள் ! நடிகர் சூர்யா தலைமையில் பிரமாண்டமான விழா !

மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள “மக்கள் காவலன்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள “மக்கள் காவலன்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“பூஜா மேரி ஜான்” திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ஜீ_5 ஹிந்தியில் வெளியாகிறது

“பூஜா மேரி ஜான்” திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ஜீ_5 ஹிந்தியில் வெளியாகிறது

சாதிய வன்மத்தை விதைக்கும் “தி கிராண்ட் மாஸ்டர்” ! படத்தின் விமர்சனம்

சாதிய வன்மத்தை விதைக்கும் “தி கிராண்ட் மாஸ்டர்” ! படத்தின் விமர்சனம்

“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“#LOVE” வெப் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“#LOVE” வெப் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“தாய்நிலம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

“தாய்நிலம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

தனுஷின் ( D_56 ) புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

தனுஷின் ( D_56 ) புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

“ஏழு கடல் ஏழு மலை” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“ஏழு கடல் ஏழு மலை” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“டோரதி” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“டோரதி” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“தி டார்க் ஹெவன்” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“தி டார்க் ஹெவன்” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

மர்மம், ரகசியங்கள் நிறைந்த “ஆக்டோபஸ்” தொடர் ஜீ_5 தமிழில் வெளியாகிறது

மர்மம், ரகசியங்கள் நிறைந்த “ஆக்டோபஸ்” தொடர் ஜீ_5 தமிழில் வெளியாகிறது

ரசிகர்களின் அமோக வரவேற்பில் “என்ன விலை” திரைப்படம் !

ரசிகர்களின் அமோக வரவேற்பில் “என்ன விலை” திரைப்படம் !

“நல்ல படம்” திரைப்படத்தின் விமர்சனம்

“நல்ல படம்” திரைப்படத்தின் விமர்சனம்

“துரோகம் பழகு” படக்குழுவினரை  பாராட்டிய முதலமைச்சர் !

“துரோகம் பழகு” படக்குழுவினரை  பாராட்டிய முதலமைச்சர் !

பா. ரஞ்சித்தின் “வேட்டுவம்” படத்தின் அறிமுக வீடியோ வெளியீடு !

பா. ரஞ்சித்தின் “வேட்டுவம்” படத்தின் அறிமுக வீடியோ வெளியீடு !

விஜய் சேதுபதியின் “பத்தா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

விஜய் சேதுபதியின் “பத்தா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

பறிபோன மானத்திற்கு “என்ன விலை” என்ன விலை படத்தின் விமர்சனம்

பறிபோன மானத்திற்கு “என்ன விலை” என்ன விலை படத்தின் விமர்சனம்

“மண்டாடி” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“மண்டாடி” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“கஸ்தூரி வீடு” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“கஸ்தூரி வீடு” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

பாவனா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் “பிக்னிக்” படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு !

பாவனா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் “பிக்னிக்” படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு !

துல்கர் சல்மானின் “ஆகாசம்லோ ஓக தாரா” (AOT) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

துல்கர் சல்மானின் “ஆகாசம்லோ ஓக தாரா” (AOT) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

எம்.எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி “எம்.எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்” படத்தின் துவக்க விழா !

எம்.எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி “எம்.எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்” படத்தின் துவக்க விழா !

அர்ஜூன் தாஸ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

அர்ஜூன் தாஸ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

“அன்பில் அவன்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

நானி நடிப்பில் உருவாகியுள்ள “தி பாரடைஸ்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

நானி நடிப்பில் உருவாகியுள்ள “தி பாரடைஸ்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“என்ன விலை” படம் மறக்க முடியாத அனுபவம் ! நிமிஷா சஜயன்

“என்ன விலை” படம் மறக்க முடியாத அனுபவம் ! நிமிஷா சஜயன்

தி டார்க் ஹெவன் படத்தின் முன் வெளியீட்டு விழா !

தி டார்க் ஹெவன் படத்தின் முன் வெளியீட்டு விழா !

“பனங்காட்டான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“பனங்காட்டான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

அரசியலும் சமூக அக்கறையும் சேர்ந்து உருவான படம் தான் “ஆகாயம்” ! தினந்தோறும் நாகராஜ்

அரசியலும் சமூக அக்கறையும் சேர்ந்து உருவான படம் தான் “ஆகாயம்” ! தினந்தோறும் நாகராஜ்

“என்ன விலை” படத்தில் நான் நடித்த கதாப்பாத்திரம் மிகவும் சவாலானது ! கருணாஸ்

“என்ன விலை” படத்தில் நான் நடித்த கதாப்பாத்திரம் மிகவும் சவாலானது ! கருணாஸ்

“என்ன விலை” படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியது எனக்கு கிடைத்த வரம் !

“என்ன விலை” படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியது எனக்கு கிடைத்த வரம் !

“மண்டாடி” மூலம் மாஸ் ஹீரோவான சூரி ! மண்டாடி விமர்சனம்

“மண்டாடி” மூலம் மாஸ் ஹீரோவான சூரி ! மண்டாடி விமர்சனம்

வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகியுள்ள “நல்லபடம்” செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியீடு !

வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகியுள்ள “நல்லபடம்” செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியீடு !

சூர்யா நடித்துள்ள “சீன்” ( SCENE ) படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு !

சூர்யா நடித்துள்ள “சீன்” ( SCENE ) படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு !

“என்ன விலை” படத்தில் நடித்தது மிகவும் சவாலாக இருந்தது ! நடிகை ஷாஷா சிவக்குமார்

“என்ன விலை” படத்தில் நடித்தது மிகவும் சவாலாக இருந்தது ! நடிகை ஷாஷா சிவக்குமார்

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

அசோக் செல்வன் நடித்துள்ள “அன்பில் அவன்” வெளியீட்டு தேதி அறிவிப்பு !

அசோக் செல்வன் நடித்துள்ள “அன்பில் அவன்” வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“வதந்தி சீசன்_2” பற்றி மெய்சிலிர்க்கும் நடிகர் !

“வதந்தி சீசன்_2” பற்றி மெய்சிலிர்க்கும் நடிகர் !

“என்ன விலை” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“என்ன விலை” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

திரைப்பிரபலங்களுக்கு புதிய தீர்ப்பை பெற்றுத்தந்துள்ள நடிகை !

திரைப்பிரபலங்களுக்கு புதிய தீர்ப்பை பெற்றுத்தந்துள்ள நடிகை !

“வைல்ட் தமிழ்நாடு” இன்று முதல் பிவிஆர் திரையரங்குகளில் வெளியீடு !

“வைல்ட் தமிழ்நாடு” இன்று முதல் பிவிஆர் திரையரங்குகளில் வெளியீடு !

“மொத ராத்திரி” படக்குழுவினரின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“மொத ராத்திரி” படக்குழுவினரின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

கமல்ஹாசனின் புதிய படத்தின் “புகைப்படம்” சமூக வலைதளங்களில் வைரல் !

கமல்ஹாசனின் புதிய படத்தின் “புகைப்படம்” சமூக வலைதளங்களில் வைரல் !

நயன்தாராவின் “ஹாய்” படத்தின் விமர்சனம் !

நயன்தாராவின் “ஹாய்” படத்தின் விமர்சனம் !

மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க அலட்சியப்படுத்தும் அரசு அதிகாரிகள் ! நரிக்குறவர் இன மக்களின் போராட்டத்திற்கு தீர்வு எப்போது ?.!

மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க அலட்சியப்படுத்தும் அரசு அதிகாரிகள் ! நரிக்குறவர் இன மக்களின் போராட்டத்திற்கு தீர்வு எப்போது ?.!

“ஒன்ஸ்மோர்” படத்தின் திரைவிமர்சனம்

“ஒன்ஸ்மோர்” படத்தின் திரைவிமர்சனம்

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் மரணம் ! சோகத்தில் கிராம மக்கள் !

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் மரணம் ! சோகத்தில் கிராம மக்கள் !

தந்தை கொலை, பழிவாங்க துடிக்கும் மகள் ! “அமரம்” படத்தின் விமர்சனம்

தந்தை கொலை, பழிவாங்க துடிக்கும் மகள் ! “அமரம்” படத்தின் விமர்சனம்

திருப்பூரில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி தெருநாய்கள் கொடூர கொலை !

திருப்பூரில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி தெருநாய்கள் கொடூர கொலை !

தந்தை, மகன் உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் “ஃபாதர்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

தந்தை, மகன் உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் “ஃபாதர்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

“டாக்ஸிக்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“டாக்ஸிக்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

200 கோடி வசூல் சாதனை படைத்த “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம்

200 கோடி வசூல் சாதனை படைத்த “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம்

“ஒன்ஸ்மோர்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“ஒன்ஸ்மோர்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம் ! தெளிவில்லாத முதல்வரின் அறிவிப்பு !

கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம் ! தெளிவில்லாத முதல்வரின் அறிவிப்பு !

“Yourbackers play” உலகின் லாப நோக்கமற்ற OTT தளம் அறிமுகம் !

“Yourbackers play” உலகின் லாப நோக்கமற்ற OTT தளம் அறிமுகம் !

“இருமுடி கட்டு” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“இருமுடி கட்டு” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குரு சங்கருக்கு கொலை மிரட்டல் !

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குரு சங்கருக்கு கொலை மிரட்டல் !

“ஹலோ மிஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“ஹலோ மிஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

பழனி அருகே “தார் & டீசல்” திருட்டு ! புகார்தாரரை மிரட்டும் காவல் ஆய்வாளர் !.?

பழனி அருகே “தார் & டீசல்” திருட்டு ! புகார்தாரரை மிரட்டும் காவல் ஆய்வாளர் !.?

“அன்பில் அவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு !

“அன்பில் அவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு !

“ஐ ம் கேம்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“ஐ ம் கேம்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“பியார் பிரேமா கல்யாணம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“பியார் பிரேமா கல்யாணம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“பத்தா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“பத்தா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் டிரெய்லருக்கு அமோக வரவேற்பு !

டாக்ஸிக் படத்தின் டிரெய்லருக்கு அமோக வரவேற்பு !

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு !

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“வதந்தி சீசன் 2” குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“வதந்தி சீசன் 2” குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட “பியார் பிரேமா கல்யாணம்” தொடரின் முன்னோட்டம் !

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட “பியார் பிரேமா கல்யாணம்” தொடரின் முன்னோட்டம் !