ஐங்கரன் இன்டர்நேஷனல், ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனங்களின் தயாரிப்பில், அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் உள்ளிட்டோர் நடிப்பில், ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “அன்பில் அவன்”.
கதைப்படி.. பெற்றோர் எதிர்பை மீறி சூர்யா ( அசோக் செல்வன் ), இயல் ( பிரீத்தி முகுந்தன் ) இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு, நட்சத்திர விடுதியில் வேலை பார்க்கின்றனர். வாழ்க்கையை நடத்த ஓய்வில்லாமல் உழைக்கின்றனர். ஆனாலும் பணிச்சுமை, அவமானங்கள் காரணமாக இருவருமே பல நெருக்கடிகளுக்கு உள்ளாகின்றனர். இந்நிலையில் சொந்தமாக ஹோம் ஸ்டே ஓட்டல் நடத்தலாம் என முடிவெடுக்கின்றனர்.

பின்னர் கையில் இருந்த பணம், நகை, நண்பர்களிடம் கடன் என பணத்தை தயார்செய்து மலைப்பிரதேசத்தில் ஒரு பழைய வீட்டை வாங்கி வேலை பார்க்கிறார்கள். வேலை முடிந்து திறப்புவிழா நடத்த ஆயத்தமாகும் நிலையில், அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கிறார்கள். பின்னர் அப்பகுதி எம்எல்ஏ ராஜநாயகம் ( கதிர் பாலு ), இன்ஸ்பெக்டர், வழக்கறிஞர் போன்றோர் தொல்லைகள் அதிகரித்து, கைகலப்பு வரை தொடர்கிறது.

அதிகாரிகள், அரசியல்வாதிகள் நெருக்கடிகளை மீறி சொந்தமாக வாங்கிய இடத்தில் ஹோம் ஸ்டே ஹோட்டல் திறந்தார்களா ? இல்லையா ? என்பது மீதிக்கதை..
அன்பில் அவன் தலைப்பிற்கேற்ப அழகான மனைவி, அன்பான கணவன் என இளம் தம்பதியரின் காதல், பாசம், கனவு, கஷ்டம் என எதார்த்தமாக சந்திக்கும் பிரச்சினைகளை மையமாக வைத்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர்.

அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் இருவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். அதேபோல் கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் இருவருக்கும் சிறப்பான படமாக இந்தப் படம் அமைந்துள்ளது என்றே சொல்லலாம். படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகைகள் அனைவரும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட பணிகளைச் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.


































































































