லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரிப்பில், சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா, சம்பத் ராஜ், சிவ் பண்டிட், அன்புதாசன் உள்ளிட்டோர் நடிப்பில், ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “சிக்மா”.
கதைப்படி.. பிரபல கடத்தல் மன்னன் தான் சம்பாதித்த பணம் ஆயிரம் கோடியை வெளிநாட்டில் ஒரு லாக்கரில் பதுக்கி வைத்திருக்கிறார். சென்னையில் கேம்லிங் கிளப் நடத்தும் தனது நண்பர் வின்சென்ட் மூலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என எழில் கூறுகிறார். சம்பத் ராஜ் தனது லாக்கர் சாவியை கொடுத்து அனுப்புகிறார்.

சென்னையில் பழமையான கட்டிடத்தில் நூலகம் நடத்துகிறார் குரு ( சந்திப் கிஷன் ). புத்தக வாசிப்பு குறைந்த நிலையில், புத்தகங்களை டியூப்பில் வாய்ஸ் கொடுத்து வெளியிடுகிறார். ஏற்கனவே அவரது தந்தை வாங்கிய கடனை அடைக்க முடியாமல், வருமானமும் இல்லாமல் சமாளித்து வருகிறார்.
இதேபோல் ஆர் ஜே சாம் ( ஃபரியா அப்துல்லா ) தனது தந்தை நடத்திவரும் பழமையான பொருட்கள் விற்பனை தொழிலில் வருமானம் இல்லாததால், பணம் சம்பாதிக்க ஓடிக்கொண்டிருக்கிறார்.

ஒரு கட்டத்தில் சாம், குரு இருவரும் இணைந்து யூ டியூப் மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள். கடன் பிரச்சினை காரணமாக சூதாட்ட கிளப்பிற்கு செல்கிறார் குரு. அங்கு கையில் இருந்த பணம் முழுவதையும் இழக்கிறார். அங்கு நடைபெறும் ஏமாற்று வேலைகளை தெரிந்துகொண்டு தகராறு செய்ய, சூதாட்ட கிளப் உரிமையாளர் வின்சென்ட் அவரை மிரட்டி அனுப்புகிறார்.

பின்னர் சூதாட்ட கிளப் வின்சென்டுக்கு எதிரான ஆதாரங்களை திரட்டி மிரட்டி பணம் சம்பாதிக்க முற்படுகிறார் குரு. இதற்கிடையில் லாக்கர் சாவியை கொடுத்த எழிலைத் தேடி சென்னைக்கு வருகிறார் சம்பத் ராஜ்.
கடன் பிரச்சினையில் இருந்து மீண்டு, தனது நூலகத்தை காப்பாற்றினாரா ? சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை தடுக்கப்பட்டதா ? இல்லையா ? என்பது மீதிக்கதை..

நூலகத்தில் உள்ள புத்தகங்கள்தான் அறிவாளியை உருவாக்குகிறது என்கிற ஆழமான கருத்தை அடிப்படையாக வைத்து, நூலகத்தின் முக்கியத்துவத்தையும், அதை நேசித்து நடத்துபவர்களின் வாழ்க்கை முறையையும் இன்றைய காலத்திற்கேற்ப அற்புதமாக திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர். அதோடு சமூகத்தில் நடைபெறும் சட்டவிரோத செயல்பாடுகளையும் சுட்டிக்காட்ட தவறவில்லை. இன்றைய இளம் தலைமுறையினர் ரசிக்கும்படியாக கதையை நகர்த்தியிருக்கிறார் ஜேசன் சஞ்சய்.
சந்தீப் கிஷன் கதாப்பாத்திரத்தின் தன்மையை உணர்ந்து நடித்திருக்கிறார். ஆனாலும் தனது நடிப்பில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். ஃபரியா அப்துல்லாவுக்கு காட்சிகள் குறைவு என்றாலும் நன்றாக நடித்திருக்கிறார். சண்டை காட்சிகள், ஒளிப்பதிவு சிறப்பு.


































































































