“டோரதி” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது.

நடிகர் செளந்தரராஜன் பேசுகையில், கார்த்திக் சுப்புராஜ்ஜை ஷார்ட் பிலிம் காலத்திலிருந்து தெரியும். மிகச்சிறந்த திறமையான இயக்குநர். அவருடைய எண்ணம் செயலெல்லாம் ஒன்று போல இருக்கும். அவர் மதுரையையும் அந்த மனிதர்களையும் மிகவும் நேசிப்பார். இந்திய அளவிலும் அவர் பெரிய இயக்குநராக வளர வேண்டும். ‘டோரதி’ படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. சனந்த், ரிஷி இருவரின் வளர்ச்சியும் மகிழ்ச்சியாக உள்ளது. கீர்த்தி சுரேஷ் இயக்குநரின் நடிகை. ஆட்டோகிராஃப் அவரிடம் வாங்கி இருக்கிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.

கலை இயக்குநர் குமார் பேசுகையில், திண்டுக்கல், மதுரை ஆகிய ஊர்களில் லொகேஷன் பார்த்தோம். நிறைய சவாலான விஷயங்கள் இருந்தது. விஷூவலாக நன்றாக இருக்கும். படக்குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர். நிச்சயமாக படம் வெற்றி பெறும் என்றார்.

நடிகை ஜீவா பேசுகையில், முதன்முறையாக என்னை உலக மேடைக்கு அழைத்து சென்றது ‘டோரதி’ திரைப்படம் தான். படம் வெளியான பின்பு நிச்சயம் அதை பற்றி பேசுவீர்கள். கார்த்திக் சுப்புராஜ் சாருக்கு நன்றி. தமிழ்நாட்டில் இருந்து முதன்முறையாக திருநங்கை ஒருவர் டொரன்டோ ஃபிலிம் பெஸ்டிவல் போனது நான்தான் என்று சொன்னார்கள். நெகிழ்ச்சியாக இருந்தது. என்னை நன்றாக பார்த்துக் கொண்ட படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. என் வாழ்நாள் சாதனையாக இந்தப் படம் இருக்கும் என்று நம்புகிறேன். சனந்த், ரிஷி என்னுடைய தம்பிகள். எல்லோருடைய அன்பிற்கும் நன்றி. இளையராஜா சார் இசையில் நடித்திருப்பது கனவு நனவான தருணம் என்றார்.

படத்தொகுப்பாளர் கணேஷ் சிவா பேசுகையில், நான் சினிமாவிற்கு வர காரணமாக இருந்த படம் ஜிகர்தண்டா. அப்படி இருக்கும் பொழுது கார்த்திக் சுப்புராஜ் சார் படத்தில் பணிபுரிவேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. இந்த படமே மேஜிக் போல இருந்தது. படம் நன்றாக வந்திருக்கிறது என்றார்.

நடிகர் முத்துக்குமார் பேசுகையில், இந்திய சினிமாவிற்கு அவசியமான தேவையான படம் இது. ‘டோரதி’ படத்தில் நல்ல கதாபாத்திரம் செய்திருப்பது நிறைவாக உள்ளது. படம் பார்த்துவிட்டு சொல்லுங்கள் என்றார்.

நடிகர் ரிஷிகாந்த் பேசுகையில்,  இந்தப் படத்திற்காக மதுரையில் இரண்டு மாதம் பயிற்சி எடுத்தோம். கார்த்திக் சார் எங்களை மிகத் திறமையாக வழி நடத்தினார். இந்த படத்திற்கு எங்களுக்கு பாராட்டு கிடைத்தால் அது முழுக்க முழுக்க அவரையை சாரும். படக்குழுவினர் அனைவரும் கடுமையாக உழைத்து உள்ளனர். கீர்த்தி மேமின் நல்ல மனதிற்கு அவர் இன்னும் பல விருதுகள் பெறுவார். சனந்தும் நானும் பல வருட நண்பர்கள். நாங்கள் இணைந்து நடித்திருப்பது மகிழ்ச்சி. ‘மொதராத்திரி’ படத்திற்கு முன்பே ‘டோரதி’ நடித்து முடித்து விட்டேன். ராஜா சாரின் இசையில் நடிப்பேன் என்ற கனவில் கூட நினைக்கவில்லை. எல்லாவற்றிற்கும் நன்றி என்றார்.

நடிகர் சனந்த் பேசுகையில், டொரன்டோ பிலிம் பெஸ்ட்டிவலில் படம் பார்த்த நிறைய பேர் பாராட்டினார்கள். அதோடு என்னை கட்டி பிடித்தார்கள். அது என் வாழ்வின் சிறப்பான தருணம். எங்கள் அணியினர் அனைவருக்கும் இது ஸ்பெஷலான படம். ரிலீஸூக்கு பின் உங்களுக்கும் இது ஸ்பெஷல் படமாக மாறும். இந்த படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் நல்ல நண்பராகியுள்ளார். கார்த்திக் அண்ணனோடு பணிபுரிந்தது மீண்டும் ஷார்ட் ஃபிலிம் காலத்திற்கு சென்றது போல இருந்தது. அவர் என் மீது வைத்துள்ள நம்பிக்கையால் தான் எனக்கு வாய்ப்புகள் கொடுக்கிறார். அந்த நம்பிக்கையை எப்போதும் காப்பாற்ற வேண்டும். இந்தப் படத்தை வெளியிடும் சக்தி ஃபிலிம் ஃபேக்டரிக்கும் இந்த படம் ஸ்பெஷலானதாக இருக்கும். ராஜா சார் இசையில் நடிப்பேன் என்று கனவில் கூட நினைத்ததில்லை. இப்பொழுது அவரது பாடலுக்கு நடனமாடி அவருடன் ஒரு பாடலிலும் நடித்து விட்டோம் என்றார்.

விநியோகஸ்தர், சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன் பேசுகையில், இது எனக்கு முக்கியமான படம். கார்த்திக் சார் இயக்கம், ராஜா சார் மியூசிக் மட்டுமே நம்பி படம் பார்த்தேன். இந்தப் படம் நிச்சயம் எல்லோருக்கும் நினைவில் இருக்கும். எக்ஸ்ட்ரீம் லெவல் கமர்ஷியல் படம். சுப்ரமணியபுரம்  படம் போல கார்த்திக் சுப்புராஜ் சார் ஸ்டைலில் மதுரை படம் இது. கொண்டாட்டமான கமர்ஷியல் படம் இது. சிறந்த அனுபவம் இந்தப் படம் கொடுக்கும். ரஜினி- விஜயகாந்த் சார் சேர்ந்து ஒரு படம் எண்பதுகளில் நடித்தால் எப்படி இருக்குமோ அப்படி ரிஷி- சனந்த் காம்பினேஷன் இருக்கும் என்றார்.

நடிகை கீர்த்தி சுரேஷ் பேசுகையில், இந்தப் படத்தின் கதை படித்ததும் உடனே ஒத்துக்கொண்டேன். ஏனெனில், இது போன்ற படத்தில் நடிப்பது எனக்கு தான் பெருமை. சில நாட்கள் வேலை செய்தாலும் கார்த்திக் சாரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். ராஜா சார் இசையில் நடிப்பேன் என்று கனவில் கூட நினைக்கவில்லை. தொழில்நுட்ப கலைஞர்கள் எல்லோருமே சிறப்பாக உழைத்திருக்கிறார்கள் ரிஷி, சனந்த் இருவருடனும் கொஞ்ச நாட்களே பணிபுரிந்திருந்தாலும் அவர்களுடன் நல்ல பாண்ட் கிரியேட் ஆகி இருக்கிறது. செப்டம்பர் 25 அன்று படம் வெளியாகிறது. நிச்சயம் உலகளவில் பேசப்படும் ஒரு படமாக இருக்கும் என நம்புகிறேன் என்றார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், எனக்கு சினிமா மீது ஆர்வம் வர காரணம் நான் பிறந்து வளர்ந்த மதுரை மண் தான். சினிமா ரசனைக்கு பெயர் போன ஊர் அது. என்னுடைய படங்களிலேயே இறைவி தான் மிகப்பிடித்தது என பலர் சொல்லி கேட்டிருக்கிறேன். அதற்கு காரணம் அது மனித உணர்வுகளுடன் நெருக்கமாக உள்ளது. என்னுடைய சொந்த அனுபவத்திலிருந்து வந்த கதையும் கூட. ‘இறைவி’யை விட உணர்வுபூர்வமான கதை ‘டோரதி’. இந்த படம் தொடங்கியதில் இருந்து ஒரு மேஜிக் போல உள்ளது. படம் பார்த்த எல்லோரும் பாராட்டி வருகின்றனர். கலை இயக்குநர், எடிட்டர் என படத்தின் ஒவ்வொரு தொழில்நுட்ப குழுவினரும் திறமையானவர்கள். எல்லோரும் எல்லா வேலையும் இந்த படத்தில் பார்த்தோம். ராஜா சார் இசை கேட்டு வளர்ந்தவர்கள் நாங்கள். இந்தப் படத்திற்கு மிகப்பெரிய ஆசீர்வாதம் ராஜா சாரின் இசைதான். டோரதி படத்தின் ஆன்மாவாக இருப்பதற்கு நன்றி சார். சனந்த் திறமையான நடிகர். ரிஷியை ஆடிஷன் செய்துதான் எடுத்தோம். சனந்தும் ரிஷியும் நிஜமாகவே நண்பர்கள் என்பதால் நன்றாகவே திரையில் வொர்க்கவுட் ஆனது. கதை கேட்டதும் கீர்த்தி சுரேஷ் உடனே ஒத்துக்கொண்டார். அவரது திரையிருப்பு படத்திற்கு இன்னும் அதிக வேல்யூ கொடுத்தது. எல்லா நடிகர்களும் சிறப்பாக நடித்துள்ளனர். இது என்னுடைய 10ஆவது படம் என்றார்.

dhamaraimurasu

dhamaraimurasu

dhamaraimurasu admin

Related Posts

“தி டார்க் ஹெவன்” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

அண்மையில் வெளியான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. இப்படத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா, ரித்விகா ஆகியோருடன் பிரதீப், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால், ஆர்த்தி…

Read more

ரசிகர்களின் அமோக வரவேற்பில் “என்ன விலை” திரைப்படம் !

சமீபத்தில் வெளியான ‘என்ன விலை’ திரைப்படம், அதன்  விறுப்பான கதைக்களம், நடிகர்களின் சிறப்பான நடிப்பு ஆகியவற்றிற்காக ரசிகர்களிடமிருந்து அமோக வரவேற்பு பெற்று வருகிறது. திரையரங்குகளில் ரசிகர்கள் கொடுத்து வரும் இந்த வரவேற்பு படக்குழுவினரையும் உற்சாகப்படுத்தியுள்ளது. ஊடகங்கள் மத்தியிலும் இப்படத்திற்கு பாராட்டுகள் குவிந்து…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்கத்தவறிய செய்திகள்

“டோரதி” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“டோரதி” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“தி டார்க் ஹெவன்” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“தி டார்க் ஹெவன்” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

மர்மம், ரகசியங்கள் நிறைந்த “ஆக்டோபஸ்” தொடர் ஜீ_5 தமிழில் வெளியாகிறது

மர்மம், ரகசியங்கள் நிறைந்த “ஆக்டோபஸ்” தொடர் ஜீ_5 தமிழில் வெளியாகிறது

ரசிகர்களின் அமோக வரவேற்பில் “என்ன விலை” திரைப்படம் !

ரசிகர்களின் அமோக வரவேற்பில் “என்ன விலை” திரைப்படம் !

“நல்ல படம்” திரைப்படத்தின் விமர்சனம்

“நல்ல படம்” திரைப்படத்தின் விமர்சனம்

“துரோகம் பழகு” படக்குழுவினரை  பாராட்டிய முதலமைச்சர் !

பா. ரஞ்சித்தின் “வேட்டுவம்” படத்தின் அறிமுக வீடியோ வெளியீடு !

விஜய் சேதுபதியின் “பத்தா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

பறிபோன மானத்திற்கு “என்ன விலை” என்ன விலை படத்தின் விமர்சனம்

“மண்டாடி” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“கஸ்தூரி வீடு” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

பாவனா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் “பிக்னிக்” படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு !

துல்கர் சல்மானின் “ஆகாசம்லோ ஓக தாரா” (AOT) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

எம்.எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி “எம்.எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்” படத்தின் துவக்க விழா !

அர்ஜூன் தாஸ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

“அன்பில் அவன்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

நானி நடிப்பில் உருவாகியுள்ள “தி பாரடைஸ்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“என்ன விலை” படம் மறக்க முடியாத அனுபவம் ! நிமிஷா சஜயன்

தி டார்க் ஹெவன் படத்தின் முன் வெளியீட்டு விழா !

“பனங்காட்டான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

அரசியலும் சமூக அக்கறையும் சேர்ந்து உருவான படம் தான் “ஆகாயம்” ! தினந்தோறும் நாகராஜ்

“என்ன விலை” படத்தில் நான் நடித்த கதாப்பாத்திரம் மிகவும் சவாலானது ! கருணாஸ்

“என்ன விலை” படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியது எனக்கு கிடைத்த வரம் !

“மண்டாடி” மூலம் மாஸ் ஹீரோவான சூரி ! மண்டாடி விமர்சனம்

வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகியுள்ள “நல்லபடம்” செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியீடு !

சூர்யா நடித்துள்ள “சீன்” ( SCENE ) படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு !

“என்ன விலை” படத்தில் நடித்தது மிகவும் சவாலாக இருந்தது ! நடிகை ஷாஷா சிவக்குமார்

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

அசோக் செல்வன் நடித்துள்ள “அன்பில் அவன்” வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“வதந்தி சீசன்_2” பற்றி மெய்சிலிர்க்கும் நடிகர் !

“என்ன விலை” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

திரைப்பிரபலங்களுக்கு புதிய தீர்ப்பை பெற்றுத்தந்துள்ள நடிகை !

“வைல்ட் தமிழ்நாடு” இன்று முதல் பிவிஆர் திரையரங்குகளில் வெளியீடு !

“மொத ராத்திரி” படக்குழுவினரின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

கமல்ஹாசனின் புதிய படத்தின் “புகைப்படம்” சமூக வலைதளங்களில் வைரல் !

நயன்தாராவின் “ஹாய்” படத்தின் விமர்சனம் !

மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க அலட்சியப்படுத்தும் அரசு அதிகாரிகள் ! நரிக்குறவர் இன மக்களின் போராட்டத்திற்கு தீர்வு எப்போது ?.!

“ஒன்ஸ்மோர்” படத்தின் திரைவிமர்சனம்

“ஒன்ஸ்மோர்” படத்தின் திரைவிமர்சனம்

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் மரணம் ! சோகத்தில் கிராம மக்கள் !

தந்தை கொலை, பழிவாங்க துடிக்கும் மகள் ! “அமரம்” படத்தின் விமர்சனம்

திருப்பூரில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி தெருநாய்கள் கொடூர கொலை !

தந்தை, மகன் உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் “ஃபாதர்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

“டாக்ஸிக்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

200 கோடி வசூல் சாதனை படைத்த “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம்

“ஒன்ஸ்மோர்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம் ! தெளிவில்லாத முதல்வரின் அறிவிப்பு !

“Yourbackers play” உலகின் லாப நோக்கமற்ற OTT தளம் அறிமுகம் !

“இருமுடி கட்டு” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குரு சங்கருக்கு கொலை மிரட்டல் !

“ஹலோ மிஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

பழனி அருகே “தார் & டீசல்” திருட்டு ! புகார்தாரரை மிரட்டும் காவல் ஆய்வாளர் !.?

“அன்பில் அவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு !

“ஐ ம் கேம்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“பியார் பிரேமா கல்யாணம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“பத்தா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் டிரெய்லருக்கு அமோக வரவேற்பு !

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“வதந்தி சீசன் 2” குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட “பியார் பிரேமா கல்யாணம்” தொடரின் முன்னோட்டம் !

துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ஆம் கேம்” ( I am Game ) படத்தின் டிரெய்லர் வெளியீடு !

வதந்தி சீசன் 2 “தி மிஸ்டரி ஆஃப் மணி” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

“நடு நாடு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“பிரஜாபதி” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

நயன்தாரா, கவின் நடித்துள்ள “ஹாய்” படத்தின் ரசகுல்லா பாடல் வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் இரண்டாவது பாடல் “தடுமாறுதே” வெளியீடு !

“அருள்வான்” படத்தின் திரைவிமர்சனம்

“அருள்வான்” படத்தின் திரைவிமர்சனம்

“அன்பே டயானா” திரைப்படத்தின் விமர்சனம்

“அன்பே டயானா” திரைப்படத்தின் விமர்சனம்

கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான “அமரன்” படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் !

“தார்” டீசல் திருட்டை மாவட்டந்தோறும் விரிவுபடுத்தும் பலே கில்லாடி !

பழனி அருகே டீசல், தார் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

“வாழ்க்கையே போராட்டம்” படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் !

“லெட்சுமி காந்தன் கொலை வழக்கு” படத்தின் திரைவிமர்சனம்

ஐ, நோபடி ( I, Nobody ) திரைப்படத்தின் விமர்சனம்

“ராவ் பகதூர்” ( தெலுங்கு ) திரைப்படத்தின் விமர்சனம்

திண்டுக்கல்லில் பெருகிவரும் கள்ளத் துப்பாக்கி கலாசாரம் ! திணறும் வனத்துறை, கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

யோகி பாபு நடித்துள்ள “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“முதற்கனல்” படத்தின் திரைவிமர்சனம்

“முதற்கனல்” படத்தின் திரைவிமர்சனம்

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

“தாதா தி சவுரவ் கங்குலி ஸ்டோரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“வஞ்சி” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“கட்டா குஸ்தி_2” திரைப்படத்தின் விமர்சனம்

அருள்வான் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“டார்க்” படத்தின் திரைவிமர்சனம்

“டார்க்” படத்தின் திரைவிமர்சனம்

அமெரிக்க தமிழ்ச்சங்க விழாவில் கவனம் ஈர்த்த “திருக்குறள்_2” திரைப்படம் !

பிரமாண்டமாக தயாராகும் “திருக்குறள்_2” திரைப்படம் !

“மனு” திரைப்படத்தின் விமர்சனம்

“மனு” திரைப்படத்தின் விமர்சனம்

“நாகபந்தம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“லவ் ஓ லவ்” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

பூஜையிடன் படப்பிடிப்பை தொடங்கிய “லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி” படக்குழுவினர் !

பூஜையிடன் துவங்கிய “குட் நியூஸ்” படத்தின் படப்பிடிப்பு !

“லவ் ஓ லவ்” படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரித்த டீசர் !

குறும்பட போட்டியில் திறமைசாலிகளை வாழ்த்திய பிரபலங்கள் !

“ஹபீபி” படக்குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா !

நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் “சூப்பர் சுப்பு” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

திருமுட்டம் அருகே.. தொடரும் மணல் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

“எங்கள் தங்கம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

வடசென்னையில் தினந்தோறும் 1000 கிலோ ரேசன் அரிசியை கடத்தும் அரசு ஊழியர் சடகோபால் !