“அப்பா குட்டி” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

விஜய் ஆண்டனி நடிப்பில், மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு திரைப்படம் குறித்த தங்களது அனுபவங்களையும், படத்தின் உருவாக்கம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்துகொண்டனர்.

இந்நிகழ்வினில்.., பாடலாசிரியர் ஏகாதசி பேசியதாவது.., இயக்குநர் சாருடன் நான் முதன்முதலில் ‘அவள் பெயர் தமிழரசி’ படத்தில் பணியாற்றினேன். அந்தப் படத்தில் ஐந்து, ஆறு பாடல்கள் எழுதினேன். அதன் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இந்தப் படத்தின் மூலம் அவர்களுடன் இணைந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தில் அப்பாவைப் பற்றியும், மகளைப் பற்றியும் இரண்டு உணர்வுபூர்வமான பாடல்களை எழுதியிருக்கிறேன். குறிப்பாக, ‘திருவிழா தேர்த்திண்ணையில் உறங்கும்… அது உறக்கத்தில்கூட என் பேரை உளறும்’ என்ற வரிகள் பலரையும் நெகிழ வைத்திருக்கின்றன. இந்தப் பாடல்களைக் கேட்டுவிட்டு பலரும் எனக்குத் தொலைபேசியிலும், குறுஞ்செய்தியிலும் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

என்னுடைய பாடல்களில் ஏற்கெனவே அம்மாவைப் பற்றிய பாடல் மிகவும் பிரபலமானது. அதேபோல் அப்பாவைப் பற்றிய ஒரு பாடலும் இந்தப் படத்தில் அமைந்திருப்பது எனக்கு மகிழ்ச்சி. குறிப்பாக, அப்பாவைப் பற்றிய பாடலை எழுதும்போது என்னுடைய சொந்த வாழ்க்கை அனுபவங்களும் அதில் கலந்திருந்தன. சிறு வயதிலேயே அப்பா வேறொரு திருமணம் செய்துகொண்டதால், அப்பாவின் அன்பையும் அரவணைப்பையும் நான் அனுபவித்ததில்லை. அப்பா என்ற உறவு எனக்கு எப்படி இருக்கும் என்பதுகூடத் தெரியாது. ஆனால், ஒரு எழுத்தாளராக இந்தப் படத்தின் அப்பா கதாபாத்திரத்தின் வலியை உணர்ந்து எழுத முடிந்தது.

அந்த உணர்வுகளைப் பாடல் வரிகளாக வெளிப்படுத்த வாய்ப்பளித்த விஜய் ஆண்டனி சார் மற்றும் இயக்குநருக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். படம் மிகப்பெரிய வெற்றிபெற வாழ்த்துகிறேன் என்றார். 

பாடலாசிரியர் அருண் பாரதி பேசியதாவது.., ‘பிச்சைக்காரன்’ படத்தில் இடம்பெற்ற ‘நூறு சாமிகள் பார்த்து’ பாடலைப் போல, இந்தப் படத்திலும் அப்பா – மகள் உறவைப் பேசும் பாடல்கள் எனக்கு மிகவும் நெருக்கமானவை. நான் பிளஸ் டூ படிக்கும்போது மண் சரிந்து விழுந்த விபத்தில் என் அப்பா உயிரிழந்தார். அப்போது அவரைப் பற்றிக் கவிதை ஒன்றை எழுதினேன். அந்த நினைவுகள் இன்றும் என் மனதில் இருக்கின்றன. அப்பா – மகள் உறவு எவ்வளவு ஆழமானது என்பதை இந்தப் படத்தின் டிரைலரிலேயே உணர முடிகிறது. குழந்தை சொல்லும், ‘நீ சாமியைப் பார்த்ததில்லை, ஆனாலும் சாமியை நம்புகிறாய்’ என்ற கருத்தைப் போலவே, பார்க்காமலேயே அன்பையும் உறவையும் உணர முடியும் என்பதை இந்தப் படம் அழகாகச் சொல்லும் என நம்புகிறேன் என்றார்.

நடிகை ஹரிப்ரியா பேசியதாவது,
‘அப்பா குட்டி’ திரைப்படம் என்னுடைய முதல் படம். என்னை நம்பி இந்த வாய்ப்பை வழங்கிய விஜய் ஆண்டனி, அழகான கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநர் மு. மாறன் இருவருக்கும் மனமார்ந்த நன்றி. அனுபவம் வாய்ந்த பல கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஒளிப்பதிவாளர் ராஜீவ், இயக்குநர் குழு, ஒளிப்பதிவுக் குழு உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி. அனைவரும் நவம்பர் 20-ம் தேதி திரையரங்குகளில் படத்தைப் பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

நடிகை ஹரிதா பேசியதாவது,
‘அப்பா குட்டி’ படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. விஜய் ஆண்டனி மிகவும் அன்பான மனிதர். தயாரிப்பாளர், இசையமைப்பாளர், படத்தொகுப்பாளர் எனப் பல பொறுப்புகளில் இருக்கும் அவர், கலைஞர்கள் அனைவரிடமும் அன்பாகவும் மரியாதையாகவும் நடந்துகொள்வது மிகவும் சிறப்பானது. இந்தப் படத்தில் தந்தையின் அன்பு, குழந்தைப் பருவ உணர்வுகள் எனப் பல ஆழமான உணர்வுகளையும் உறவுகளையும் அழகாகப் பேசியிருக்கிறோம். இந்தப் படத்தை அனைவரும் மக்களிடம் கொண்டு சேர்த்து ஆதரிக்க வேண்டும். திரையரங்குகளுக்கு வந்து படத்தைப் பார்த்து ரசிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

நடிகர் மூணாறு ரமேஷ் பேசியதாவது, ‘அப்பா குட்டி’ திரைப்படத்தில் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இயக்குநர் மு. மாறன் அனைவரின் மனதையும் தொடும் வகையில் ஆழமான உணர்வுகளைக் கொண்ட கதையை உருவாக்கியிருக்கிறார். விஜய் ஆண்டனி எப்போதுமே வித்தியாசமான கதைகளையும் முயற்சிகளையும் தேர்ந்தெடுப்பவர். இந்தப் படத்தின் தலைப்பு முதல் பத்திரிகையாளர் சந்திப்பின் மேடை அமைப்பு வரை அனைத்திலும் அவரது தனித்துவம் தெரிகிறது. ‘அப்பா குட்டி’ திரைப்படம் நிச்சயம் அனைத்துத் தரப்பு மக்களையும் சென்றடைந்து வெற்றிபெறும் என்று நம்புகிறேன் என்றார்.

நடிகை லிஸ்ஸி ஆண்டனி பேசியதாவது, விஜய் ஆண்டனியின் இசைக்கும், அவர் தேர்ந்தெடுக்கும் கதைகளுக்கும் நான் மிகப்பெரிய ரசிகை. அவருடைய ஒவ்வொரு படத்திலும் கதை தேர்வு வித்தியாசமாக இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கதையில் எனக்கும் பணியாற்ற வாய்ப்பளித்த இயக்குநர் மு. மாறனுக்கு நன்றி. ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகள். அம்மாவைப் பற்றிப் பல பாடல்கள் வந்திருக்கின்றன. ஆனால் அப்பாவுக்காகவும் ஒரு பாடல் இருக்க வேண்டும் என்று நான் நினைத்திருக்கிறேன். இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள அப்பாவைப் பற்றிய பாடல் என்னை மிகவும் நெகிழ வைத்தது. நானும் இந்தப் படத்தைப் பார்க்க ஆவலாகக் காத்திருக்கிறேன். அனைவரும் படத்தைப் பார்த்து ஆதரவு தர வேண்டும் என்றார்.

நடிகை ஹரிப்ரியா விஸ்வநாதன் பேசியதாவது, இயக்குநர் மு. மாறனுடன் எனக்கு இது இரண்டாவது படம். இதற்கு முன்பு அவர் இயக்கிய படத்திலும், இந்தப் படத்திலும் எனக்கு வித்தியாசமான, சவாலான கதாபாத்திரங்களைக் கொடுத்ததற்கு நன்றி. இந்தப் படத்தின் முழுக் கதையையும் கேட்டதுமே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. குறிப்பாக, இதில் எனக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தில் பல்வேறு பரிமாணங்கள் இருப்பதால் நடிக்க மிகவும் ஆர்வமாக இருந்தேன். இந்தப் படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி என்றார்.

விநியோகஸ்தர் ஃபைவ் ஸ்டார் செந்தில் பேசியதாவது, அப்பாவுக்கும் மகளுக்கும் இடையிலான அழகான பாசத்தை இயக்குநர் மு. மாறன் மிகவும் உணர்வுபூர்வமாகப் படமாக்கியிருக்கிறார். விஜய் ஆண்டனி சிறப்பாக நடித்திருக்கிறார். படத்தில் அப்பா குட்டியாக நடித்த சிறுமியும் தனது கதாபாத்திரத்தை அருமையாகச் செய்திருக்கிறார். மற்ற நடிகர்களும் சிறப்பாகப் பங்களித்துள்ளனர் என்றார்.

இயக்குநர் மு மாறன் பேசியதாவது, ‘அப்பா குட்டி’ என்னுடைய நான்காவது படம். இதற்கு முன்பு நான் இயக்கிய மூன்று படங்களும் கிரைம் த்ரில்லர் ஜானரில் அமைந்திருந்தன. விஜய் ஆண்டனி சாரைச் சந்தித்து கதையின் முதல் பாதியைச் சொன்னதுமே இந்தப் படத்தில் நடிக்கிறேன் என்று ஒப்புக்கொண்டார். இரண்டாம் பாதியைக் கேட்டதும் உடனடியாகப் படத்தைத் தொடங்கலாம் என்றார். நல்ல கதைகளுக்கு எப்போதும் அங்கீகாரம் கிடைக்கும் என்பதற்கு இந்தப் படம் ஓர் உதாரணம். இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த வைஜெயந்தி மேமுக்கு நன்றி. படத்தின் வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றிய செந்தில், தனஞ்செயன், சசி உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. என்னுடன் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள், சக நடிகர்கள் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.

இயக்குநர் மந்திரமூர்த்தி பேசியதாவது, விஜய் ஆண்டனியுடன் கடந்த 15 ஆண்டுகளாகப் பழகி வருகிறேன். கடின உழைப்பாளியான அவர், கொடுத்த வாக்கைக் காப்பாற்றக்கூடிய மனிதர். ஒரு பொறுப்பை ஏற்றுக்கொண்டால் அதைச் சரியாகச் செய்து முடிப்பதில் மிகவும் உறுதியாக இருப்பவர். இந்தப் படத்தின் கதாநாயகி ப்ரீத்தி அஸ்ராணி தமிழ் சினிமாவில் என் அறிமுகத்தில் நுழைந்தது எனக்குப் பெருமை தரக்கூடிய ஒரு கலைஞர். எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் அதைச் சிறப்பாகவும், எதிர்பார்ப்புகளைத் தாண்டியும் நடிக்கக்கூடிய திறமை அவரிடம் இருக்கிறது. அவர் இன்னும் பெரிய உயரத்தை அடைய வேண்டும் என்று விரும்புகிறேன். படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும், நடிகர் தேர்வுப் பொறுப்பைக் கவனித்த சுகுமார் சண்முகத்துக்கும் வாழ்த்துகள். அனைவரும் சிறப்பான வளர்ச்சியைப் பெற வேண்டும் என்றார்.

நடிகர் ஜென்சன் திவாகர் பேசியதாவது, ‘அப்பா குட்டி’ திரைப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். இயக்குநர் மு. மாறன் சார் கொடுத்த ஸ்கிரிப்டைப் படிக்கும்போது முதல் 15 பக்கங்களிலேயே கதை என்னை ஈர்த்துவிட்டது. கிரைம் த்ரில்லராகத் தொடங்கும் கதை, தொடர்ந்து உணர்வுபூர்வமான அனுபவமாக மாறி, முதல் பாதி முடியும் வரை விறுவிறுப்பைக் குறைக்கவில்லை. ஸ்கிரிப்டில் இருந்த உணர்வுகளைத் திரையில் அப்படியே கொண்டுவந்ததற்கு முக்கியக் காரணம் படத்தின் நடிகர் தேர்வு. அனைவரும் தங்களது கதாபாத்திரங்களை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள் என்றார்.

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது, ‘அப்பா குட்டி’ படத்தைப் பார்த்தேன். விஜய் ஆண்டனி தனது படத்தின் எடிட்டிங் முடிந்தவுடன் என்னை அழைத்து, தனிப்பட்ட முறையில் படத்தைப் பார்த்து கருத்துச் சொல்லச் சொல்வார். அப்படித்தான் நானும் என் மனைவியும் இந்தப் படத்தைப் பார்த்தோம். படம் முடிந்தபோது என் கண்களில் கண்ணீர் வந்தது. என் மனைவியும் அழுதுவிட்டார். அந்த அளவுக்கு படம் எங்களை உணர்வுபூர்வமாகப் பாதித்தது. விஜய் ஆண்டனியிடம் படத்தைப் பார்த்து உண்மையிலேயே நெகிழ்ந்துவிட்டதாகத் தெரிவித்தேன். இதற்கு முன்பு எங்கள் தயாரிப்பில் வெளியான ‘தெய்வத்திருமகள்’ படத்தில் விக்ரம் தந்தையாக அற்புதமாக நடித்திருந்தார். அந்தப் படத்தைப் போலவே ஒரு தந்தை மகளுக்காக எவ்வளவு தூரம் செல்ல முடியும் என்பதை இந்தப் படத்தில் விஜய் ஆண்டனி வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தப் படத்திற்குப் பிறகு அவரது நடிப்பை ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன் என்றார்.

இந்தப் படத்தைத் தமிழ் தெரியாத ஒரு சர்வதேச ஓடிடி நிறுவனப் பிரதிநிதிகளுக்குத் திரையிட்டபோது, அவர்கள் மொழி புரியாமலேயே கதையுடன் உணர்வுபூர்வமாகப் பயணித்தனர். இடைவேளையின்போது கூட படத்தை நிறுத்த வேண்டாம், தொடர்ந்து பார்க்க விரும்புகிறோம் என்று தெரிவித்தனர். படம் முடிந்ததும் நெகிழ்ச்சியுடன் பாராட்டியதோடு, உடனடியாகப் படத்தை வாங்குவதற்கான பேச்சுவார்த்தையையும் தொடங்கினர். பின்னர் Zee தொலைக்காட்சி நிறுவனமும் படத்தின் சாட்டிலைட் உரிமையைக் கைப்பற்றியது. விநியோகஸ்தர் ஃபைவ் ஸ்டார் செந்தில் தனது குடும்பத்துடன் படத்தைப் பார்த்துவிட்டு, ‘இந்தப் படம் எனக்குத்தான் வேண்டும்’ என்று உடனடியாக வெளியீட்டு உரிமையைக் கைப்பற்றினார். படம் வெளியாகும் முன்பே கிடைத்த இந்த அங்கீகாரம், அதன் உள்ளடக்கத்திற்குக் கிடைத்த மரியாதையாக நான் பார்க்கிறேன் என்றார்.

நடிகர் முருகானந்தம் பேசியதாவது, இயக்குநர் மு. மாறன் இதற்கு முன்பு இயக்கிய படங்களிலிருந்து ‘அப்பா குட்டி’ முற்றிலும் வித்தியாசமான படம். மணிரத்னம் சார் பல்வேறு ஜானர்களில் படங்களை இயக்குவதுபோல, மாறனிடமும் பல்வேறு கதைக்களங்களில் படம் இயக்கும் திறமை இருக்கிறது. படப்பிடிப்பில் ஒரு நடிகர் தனது குடும்பப் பிரச்சினையைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோதுகூட, அவரிடம் கோபப்படாமல் பொறுமையாகப் பேசிய மாறனின் குணம் என்னை மிகவும் கவர்ந்தது. மற்றவர்களின் மனதைப் புண்படுத்தக் கூடாது என்ற அவரது அணுகுமுறையே அவரை உயரத்துக்குக் கொண்டு செல்லும். நிச்சயம் பெரிய இயக்குநராக வருவார்.

விஜய் ஆண்டனி சாருடன் பணியாற்றுவது எனக்கு மகிழ்ச்சி. அவரை ஒரு நதியுடன் ஒப்பிடுவேன். எத்தனை தடைகள் வந்தாலும் தொடர்ந்து பயணித்துக்கொண்டே இருப்பவர். பல்வேறு துறைகளில் தன்னை நிரூபித்துக்கொண்டே இருக்கிறார். அவருடன் பணியாற்றும் கலைஞர்களைத் தொடர்ந்து தனது படங்களில் வாய்ப்பளித்து ஊக்குவிப்பதும் சிறப்பானது. அவரது உழைப்பும் பயணமும் என்றும் தொடர வேண்டும் என்றார்.

நடிகை ப்ரீத்தி அஸ்ராணி பேசியதாவது, “அப்பா குட்டி’ திரைப்படம் எனக்கு மிகவும் தனிப்பட்ட முறையில் நெருக்கமான படம். இயக்குநர் மு. மாறன் ஒவ்வொரு காட்சியையும் மிகத் தெளிவான பார்வையுடன் உருவாக்கியிருந்தார். இந்தப் படத்தின் கதையைக் கேட்டபோதே எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. குறிப்பாக, ஒரு மகளாக அப்பாவின் அன்பையும் தியாகத்தையும் உணரக்கூடிய பல தருணங்கள் படத்தில் இருக்கின்றன. அம்மாவின் அன்பைப் பற்றி நாம் அதிகம் பேசுகிறோம். ஆனால் அப்பாக்கள் தங்களுடைய அன்பையும் உணர்வுகளையும் அதிகம் வெளிப்படுத்துவதில்லை. அவர்கள் நமக்காகச் செய்யும் தியாகங்களையும் முயற்சிகளையும் நாம் பல நேரங்களில் கவனிப்பதில்லை. இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு பலரும் தங்களுடைய அப்பாவுக்குத் தொலைபேசியில் அழைத்துப் பேசுவார்கள் என்று நம்புகிறேன். இந்தப் படம் அப்பா – மகள் உறவை மட்டும் பேசும் வழக்கமான உணர்வுபூர்வமான படமாக இருக்காது. இதில் வித்தியாசமான கதைக்களம், வணிக அம்சங்கள் மற்றும் உணர்வுபூர்வமான தருணங்கள் என அனைத்தும் கலந்திருக்கின்றன என்றார்.

பேபி லிதன்யா பேசியதாவது,
‘அப்பா குட்டி’ திரைப்படம் எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். இந்தப் படத்தில் அனைவருடனும் இணைந்து பயணித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. விஜய் ஆண்டனி அங்கிளும், ப்ரீத்தி அக்காவும் படப்பிடிப்பில் மிகவும் ஜாலியாக இருப்பார்கள். அதனால் நடிப்பதும் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது என்றார்.

இயக்குநர் சசி பேசியதாவது, ‘நூறு சாமிகள்’ படப்பிடிப்பின்போது விஜய் ஆண்டனியிடம் அடுத்த படம் என்ன என்று கேட்டேன். அப்போது ‘அப்பா குட்டி’ என்ற தலைப்பைப் பற்றிச் சொன்னார். அந்தத் தலைப்பைக் கேட்டவுடனேயே இதைத் தவறவிடாதீர்கள், மிகவும் அழகான தலைப்பு என்று கூறினேன். அப்பாவைப் பற்றிய கதைக்கு மிகவும் எளிமையாகவும், அனைவரது மனதிலும் பதியக்கூடியதாகவும் இந்தத் தலைப்பு அமைந்திருக்கிறது.

ப்ரீத்தி அஸ்ராணி இந்தப் படத்தில் நடிப்பதாகக் கேள்விப்பட்டதும் மகிழ்ச்சியாக இருந்தது. பின்னர் ஜென்சன் திவாகர் இந்தப் படத்தைப் பற்றிப் பலமுறை என்னிடம் பாராட்டிப் பேசினார். குறிப்பாக, பேபி லிதன்யாவின் நடிப்பையும் படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளையும் வெகுவாகப் பாராட்டினார். தனஞ்செயன், தமிழ் தெரியாத அமேசான் பிரைம் பிரதிநிதிகளுக்குப் படத்தைத் திரையிட்டபோது, அவர்கள் இடைவேளைகூட வேண்டாம் என்று தொடர்ந்து பார்த்து, இறுதியில் உணர்ச்சிவசப்பட்டு அழுததாகக் கூறினார். ஒரு மொழி தெரியாதவர்களையும் கதை உணர்வுப்பூர்வமாகப் பாதித்திருப்பது படத்தின் தரத்தைக் காட்டுகிறது.

ஒரு திரைப்படத்தை உருவாக்கிய பிறகு அதை ஓடிடி நிறுவனங்களுக்கும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் கொண்டு செல்வது இயக்குநர்களுக்கு மிகப்பெரிய சவால். அந்தச் சூழலில் அமேசான் பிரைம் போன்ற முன்னணி தளம் படத்தைப் பார்த்துப் பாராட்டி வாங்கியிருப்பது, விஜய் ஆண்டனி மற்றும் மு. மாறன் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
‘பிச்சைக்காரன்’ படத்தில் ஒரு மகனாக விஜய் ஆண்டனி ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதேபோல் ‘அப்பா குட்டி’ படத்தில் ஒரு அப்பாவாக அனைவரது மனதிலும் இடம்பிடிக்கப் போகிறார். விஜய் ஆண்டனி உள்ளிட்ட ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் என்றார்.

நடிகர் விஜய் ஆண்டனி பேசியதாவது, ‘அப்பா குட்டி’ படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். இந்தக் கதையைக் கேட்டபோது முதல் பாதியே மிகவும் பிடித்திருந்தது. இரண்டாம் பாதியைக் கேட்டதும் உடனடியாகப் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன். குறிப்பாக, படத்தின் கிளைமாக்ஸ் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. இந்தப் படத்தின் பாடல்களும் உணர்வுபூர்வமாக வந்திருக்கின்றன. ‘பிச்சைக்காரன்’ படத்தின் பாடல்களைப் பல நிறுவனங்கள் வாங்க முன்வராததால் அந்த ஆல்பத்தை நானே வைத்துக்கொண்டேன். அதேபோல், ‘அப்பா குட்டி’ படத்தின் அப்பா பாடலைக் கேட்டபோது, இந்தப் படத்தின் பாடல்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

இயக்குநர் மு. மாறன் மிகவும் திறமையானவர். குறுகிய காலத்திலேயே திட்டமிட்டு, வேகமாகவும் சிறப்பாகவும் படத்தை முடித்திருக்கிறார். அவருடைய அடுத்தடுத்த படங்கள் வெற்றிகரமாக அமைய வாழ்த்துகிறேன்.

ப்ரீத்தி அஸ்ராணி எந்தக் கோணத்தில் கேமரா வைத்தாலும் சிறப்பாக நடிக்கக்கூடியவர். தமிழ் மொழி அவருக்குத் தாய்மொழி இல்லையென்றாலும், வசனங்களைப் பேசி நடித்த விதம் பாராட்டுக்குரியது. பேபி லிதன்யாவின் நடிப்பும் வியக்க வைக்கிறது. இந்த வயதிலேயே ஒரு அனுபவம் வாய்ந்த நடிகையைப் போலத் தொழில்முறையுடன் நடித்திருக்கிறார். ஹரிப்ரியா பாடிய பாடலும் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், விநியோகஸ்தர் செந்தில், தனஞ்செயன் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. ‘பிச்சைக்காரன்’ படத்தின் மூலம் எனக்கு அளித்த அன்பையும் வரவேற்பையும் தொடர்ந்து வழங்கி வரும் ரசிகர்களுக்கு நன்றி. இந்த நிகழ்வில் ‘பிச்சைக்காரன் 3’ குறித்த அறிவிப்பு வெளியானது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்தப் படமும் விரைவில் வெளியாகும் என நம்புகிறேன். ‘அப்பா குட்டி’ படத்தையும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு தருமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

dhamaraimurasu

dhamaraimurasu

dhamaraimurasu admin

Related Posts

கோவா சர்வதேச திரைப்பட விழா ! சிறப்பு விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட “SCROLL” திரைப்படம் !

K16 ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘Scroll’ திரைப்படம், கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (57th International Film Festival of India – IFFI 2026), ‘Indian Panaroma’ பிரிவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு   ICFT-UNESCO…

Read more

“சத்தியவான் சாவித்திரி” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

Drumsticks Productions மற்றும் Zee Studios நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘சத்தியவான் சாவித்திரி’. வெடிக்காரன்பட்டி S. சக்திவேல் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S. விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்திலும், மிஷ்கின் முக்கியக் கதாபாத்திரத்திலும்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்கத்தவறிய செய்திகள்

கோவா சர்வதேச திரைப்பட விழா ! சிறப்பு விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட “SCROLL” திரைப்படம் !

கோவா சர்வதேச திரைப்பட விழா ! சிறப்பு விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட “SCROLL” திரைப்படம் !

அதிகரிக்கும் போதைப்பொருள் நடமாட்டம் ! 700 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் ! 

அதிகரிக்கும் போதைப்பொருள் நடமாட்டம் ! 700 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் ! 

“சத்தியவான் சாவித்திரி” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“சத்தியவான் சாவித்திரி” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“சிட்டுக்குறிஞ்சி” படத்தின் இசை வெளியீட்டு விழா

“சிட்டுக்குறிஞ்சி” படத்தின் இசை வெளியீட்டு விழா

குற்றச் செயல்களில் ஈடுபடும் தவெக நிர்வாகிகளை கைது செய்யாதது ஏன் ?.!

குற்றச் செயல்களில் ஈடுபடும் தவெக நிர்வாகிகளை கைது செய்யாதது ஏன் ?.!

“பிளாக் கோல்டு” விமர்சனம்

“பிளாக் கோல்டு” விமர்சனம்

சர்வதேச விழாக்களில் 7 விருதுகள் வென்ற “வன மடி” திரைப்படம் !

சர்வதேச விழாக்களில் 7 விருதுகள் வென்ற “வன மடி” திரைப்படம் !

“அப்பா குட்டி” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“அப்பா குட்டி” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

பெற்றோர்களே உஷார் ! கராத்தே சங்கங்களுக்கு தடை ! இந்திய ஒலிம்பிக் சங்கம் நடவடிக்கை

பெற்றோர்களே உஷார் ! கராத்தே சங்கங்களுக்கு தடை ! இந்திய ஒலிம்பிக் சங்கம் நடவடிக்கை

கடந்த ஆட்சியைவிட குறைந்த விலைக்கு சைக்கிள் டெண்டர் !

கடந்த ஆட்சியைவிட குறைந்த விலைக்கு சைக்கிள் டெண்டர் !

எம்எல்ஏக்கள் மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன் ? – திமுக

எம்எல்ஏக்கள் மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன் ? – திமுக

அஜய் கார்த்தி, தீபா பாலு நடிக்கும் “ஸ்டேஷன்” திரைப்படம்

அஜய் கார்த்தி, தீபா பாலு நடிக்கும் “ஸ்டேஷன்” திரைப்படம்

“மௌன மொழிகள்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“மௌன மொழிகள்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“மூக்குத்தி அம்மன்_2” விமர்சனம்

“மூக்குத்தி அம்மன்_2” விமர்சனம்

சூர்யாவின் “சீன்” படத்தின் விமர்சனம்

சூர்யாவின் “சீன்” படத்தின் விமர்சனம்

“பௌமா” மற்றும் “டூக்ஸ்” படங்களை ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் தென்னிந்தியாவில் வெளியிடுகிறது

“பௌமா” மற்றும் “டூக்ஸ்” படங்களை ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் தென்னிந்தியாவில் வெளியிடுகிறது

ஆதரவற்றோருடன் தீபாவளி கொண்டாடிய காவல்துறையினர் !

ஆதரவற்றோருடன் தீபாவளி கொண்டாடிய காவல்துறையினர் !

பிறந்தநாளில் “சண்டியர்” படப்பிடிப்பை தொடங்கிய கமல்ஹாசன்

பிறந்தநாளில் “சண்டியர்” படப்பிடிப்பை தொடங்கிய கமல்ஹாசன்

மாநில உரிமையை பாதுகாக்கத் தவறிய அரசு ! – எஸ்டிபிஐ கண்டனம்

மாநில உரிமையை பாதுகாக்கத் தவறிய அரசு ! – எஸ்டிபிஐ கண்டனம்

பெரியார் அறிவுலக புத்தக முறைகேடு புகார் ! நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல் !

பெரியார் அறிவுலக புத்தக முறைகேடு புகார் ! நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல் !

அதிமுக பிரமுகர் மன்னன் காலையில் கைது ! மாலையில் விடுவிப்பு !

அதிமுக பிரமுகர் மன்னன் காலையில் கைது ! மாலையில் விடுவிப்பு !

சூப்பர் ஸ்டார் நடிக்கும் “தர்மன்” திரைப்படத்தில் இணைந்த நடிகை ஶ்ரீ லீலா

சூப்பர் ஸ்டார் நடிக்கும் “தர்மன்” திரைப்படத்தில் இணைந்த நடிகை ஶ்ரீ லீலா

உ.வே.சா நூலகத்தில் ஆய்வு செய்த நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் !

உ.வே.சா நூலகத்தில் ஆய்வு செய்த நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் !

பல்லடத்தில் விதிமீறி கட்டப்படும் பிரபல நகைக்கடை கட்டிடம் ! கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம் !

பல்லடத்தில் விதிமீறி கட்டப்படும் பிரபல நகைக்கடை கட்டிடம் ! கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம் !

சோதனைகளை கடந்து.. விடாமுயற்சியால் நாட்டிற்காக இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற சிம்ரன் !

சோதனைகளை கடந்து.. விடாமுயற்சியால் நாட்டிற்காக இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற சிம்ரன் !

35 நாட்களுக்கு முன் காணாமல் போன பெண் குழந்தையை மீட்ட போலீசார் !

35 நாட்களுக்கு முன் காணாமல் போன பெண் குழந்தையை மீட்ட போலீசார் !

அகவிலைப்படி உயர்வால், உற்சாகத்தில் மத்திய அரசு ஊழியர்கள் !

அகவிலைப்படி உயர்வால், உற்சாகத்தில் மத்திய அரசு ஊழியர்கள் !

“லவ் 3 ஓ” படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு !

“லவ் 3 ஓ” படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு !

யோகி பாபுவின் “அர்ஜூனன் பேர் பத்து” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

யோகி பாபுவின் “அர்ஜூனன் பேர் பத்து” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

“ஹைக்கூ” படத்தின் விமர்சனம்

“ஹைக்கூ” படத்தின் விமர்சனம்

கௌதம்மேனனின் 25 ஆண்டுகள் திரையுலக பயணம் ! கோலாலம்பூரில் இசைக் கொண்டாட்டம்

கௌதம்மேனனின் 25 ஆண்டுகள் திரையுலக பயணம் ! கோலாலம்பூரில் இசைக் கொண்டாட்டம்

யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள “சிங்காரம்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள “சிங்காரம்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

பெண்களின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் “ஹைக்கூ” திரைப்படம் ! – நடிகை ஃபெமினா ஜார்ஜ்

பெண்களின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் “ஹைக்கூ” திரைப்படம் ! – நடிகை ஃபெமினா ஜார்ஜ்

“ஹைக்கூ” ஒரு ஃபீல் குட் எண்டர்டெயின்மெண்ட் திரைப்படம் !

“ஹைக்கூ” ஒரு ஃபீல் குட் எண்டர்டெயின்மெண்ட் திரைப்படம் !

திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ! “ஹைக்கூ” பட தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி !

திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ! “ஹைக்கூ” பட தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி !

“ஹைக்கூ” படத்தில் மௌனமாக ஒரு கதாப்பாத்திரமாகவே பயணிக்கும் இசை !

“ஹைக்கூ” படத்தில் மௌனமாக ஒரு கதாப்பாத்திரமாகவே பயணிக்கும் இசை !

ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் “ஹைக்கூ”. – நடிகர் ஏகன்

ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் “ஹைக்கூ”. – நடிகர் ஏகன்

அமைச்சர் பதவிக்காக அடிப்படை கொள்கையிலிருந்து விலகி நிற்கும் விசிக ! – பனையூர் பாபு

அமைச்சர் பதவிக்காக அடிப்படை கொள்கையிலிருந்து விலகி நிற்கும் விசிக ! – பனையூர் பாபு

குற்றச்சாட்டு எழுந்ததால் பணியிடை மாற்றம் ! உடனடியாக பதவி உயர்வு கொடுத்ததன் பின்னனி என்ன ?.!

குற்றச்சாட்டு எழுந்ததால் பணியிடை மாற்றம் ! உடனடியாக பதவி உயர்வு கொடுத்ததன் பின்னனி என்ன ?.!

நகைச்சுவை கலந்த வித்தியாசமான காதல் கதை !

நகைச்சுவை கலந்த வித்தியாசமான காதல் கதை !

“மெர்சல்” படத்தின் பணப்பரிவர்த்தனை விவகாரம் ! நடிகை ஶ்ரீ பிரியா நிறுவனத்திற்கு வெற்றி !

“மெர்சல்” படத்தின் பணப்பரிவர்த்தனை விவகாரம் ! நடிகை ஶ்ரீ பிரியா நிறுவனத்திற்கு வெற்றி !

கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளில் “அக்கா” தொடரின் டீசர் வெளியானது !

கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளில் “அக்கா” தொடரின் டீசர் வெளியானது !

“சட்டமும் நீதியும் 2” தொடரின் டிரெய்லரை வெளியிடப்பட்டது தமிழ் ZEE 5 !

“சட்டமும் நீதியும் 2” தொடரின் டிரெய்லரை வெளியிடப்பட்டது தமிழ் ZEE 5 !

சந்தீப் கிஷன் நடிக்கும் “கரிகாலா” திரைப்படம் பூஜையுடன் ஆரம்பம் !

சந்தீப் கிஷன் நடிக்கும் “கரிகாலா” திரைப்படம் பூஜையுடன் ஆரம்பம் !

துல்கர் சல்மானின் “ஏ ஓ டி” ( AOT ) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

துல்கர் சல்மானின் “ஏ ஓ டி” ( AOT ) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“ஸ்லம் டாக்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு, வெளியீட்டு தேதி விரைவில்..

“ஸ்லம் டாக்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு, வெளியீட்டு தேதி விரைவில்..

தேவா மண்ணை விட்டு மறைந்தாலும், அவரது தேனிசை தென்றல் காற்று வீசுவது நிற்காது ! – முக ஸ்டாலின்

தேவா மண்ணை விட்டு மறைந்தாலும், அவரது தேனிசை தென்றல் காற்று வீசுவது நிற்காது ! – முக ஸ்டாலின்

“ராமாயணா” படத்தின் புதிய சர்வதேச டிரெய்லர் வெளியானது !

“ராமாயணா” படத்தின் புதிய சர்வதேச டிரெய்லர் வெளியானது !

“சிக்னல் அட் 11.30” படத்தின் “ஜோ ஜோ மாமா” பாடல் வெளியீடு !

“சிக்னல் அட் 11.30” படத்தின் “ஜோ ஜோ மாமா” பாடல் வெளியீடு !

“இது நம்ம குடும்பம்” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“இது நம்ம குடும்பம்” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“ஹபீபி” படக்குழுவினருக்கு பாராட்டுவிழா !

“ஹபீபி” படக்குழுவினருக்கு பாராட்டுவிழா !

ஊர்வசி நடிப்பில் உருவாகியுள்ள “ஆஷா” திரைப்படம் அக்டோபர் 16 முதல் மலையாளம் ஜீ_5 ல் வெளியாகிறது

ஊர்வசி நடிப்பில் உருவாகியுள்ள “ஆஷா” திரைப்படம் அக்டோபர் 16 முதல் மலையாளம் ஜீ_5 ல் வெளியாகிறது

சூரியின் புதிய திரைப்படத்த கிளாப் அடித்து துவக்கி வைத்த சிவகார்த்திகேயன் !

சூரியின் புதிய திரைப்படத்த கிளாப் அடித்து துவக்கி வைத்த சிவகார்த்திகேயன் !

“டோரதி” திரைப்படம் நான் எதிர்பார்த்த அங்கீகாரம் பெற்றுத் தந்துள்ளது. ஜீவா சுப்பிரமணியம் !

“டோரதி” திரைப்படம் நான் எதிர்பார்த்த அங்கீகாரம் பெற்றுத் தந்துள்ளது. ஜீவா சுப்பிரமணியம் !

டுபாக்கூர் முதலமைச்சரும், கூடுதல் விலைக்கு மின்சார கொள்முதலும் ! – உதயநிதி விமர்சனம்

டுபாக்கூர் முதலமைச்சரும், கூடுதல் விலைக்கு மின்சார கொள்முதலும் ! – உதயநிதி விமர்சனம்

அ,தி,மு,கவை த,வெ,க வின் சார்பு இயக்கமாக மாற்ற நினைக்கும் வேலுமணி ! கட்சியை காப்பாற்ற கூட்டுத் தலைமை அவசியம் !

அ,தி,மு,கவை த,வெ,க வின் சார்பு இயக்கமாக மாற்ற நினைக்கும் வேலுமணி ! கட்சியை காப்பாற்ற கூட்டுத் தலைமை அவசியம் !

“ஜெய்” நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் !

“ஜெய்” நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் !

“E 1” படத்தின் விமர்சனம்

“E 1” படத்தின் விமர்சனம்

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழாவில் 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழாவில் 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழா ! ஓவியர் ஜீவானந்தனுக்கு 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழா ! ஓவியர் ஜீவானந்தனுக்கு 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு 13.78 லட்சம் நிதியுதவி !

கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் “ஊர் கூடும் இரவு” ஆவணப்படம் !

கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் “ஊர் கூடும் இரவு” ஆவணப்படம் !

“ஆல்பாஸ்” விமர்சனம்

“ஆல்பாஸ்” விமர்சனம்

“தாய்நிலம்” விமர்சனம்

“தாய்நிலம்” விமர்சனம்

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

அதிமுகவின் பலவீனமா ? த.வெ.க வினரின் மோசடியா ?

அதிமுகவின் பலவீனமா ? த.வெ.க வினரின் மோசடியா ?

“அமெரிக்க ஆவி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“அமெரிக்க ஆவி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

அட்லான்டா இந்தியத் திரைப்பட விழாவில் “என்ன விலை” படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது !

அட்லான்டா இந்தியத் திரைப்பட விழாவில் “என்ன விலை” படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது !

நலிவுற்ற திருநங்கைகளுங்கு நிதியுதவி வழங்கிய “டோரதி” படக்குழு !

நலிவுற்ற திருநங்கைகளுங்கு நிதியுதவி வழங்கிய “டோரதி” படக்குழு !

“அன்பில் அவன் படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“அன்பில் அவன் படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“பத்தா” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“பத்தா” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

நாள்தோறும் நற்பணி ! ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன்

நாள்தோறும் நற்பணி ! ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன்

“ஒட்டாரம்” திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு !

“ஒட்டாரம்” திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு !

“சிக்மா” படத்தில் அறிமுகமானது எனக்கு பெருமை ! நடிகை ஃபரியா அப்துல்லா

“சிக்மா” படத்தில் அறிமுகமானது எனக்கு பெருமை ! நடிகை ஃபரியா அப்துல்லா

“அன்பில் அவன்” படத்தின் விமர்சனம்

“அன்பில் அவன்” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த நடிகர் !

“சிக்மா” படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த நடிகர் !

“பத்தா” படத்தின் விமர்சனம்

“பத்தா” படத்தின் விமர்சனம்

இயக்கமா ? நடிப்பா ? “சிக்மா” இயக்குநர் பேட்டி !

இயக்கமா ? நடிப்பா ? “சிக்மா” இயக்குநர் பேட்டி !

கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான் “சிக்மா” – இயக்குநர் சஞ்சய்

கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான் “சிக்மா” – இயக்குநர் சஞ்சய்

“தி டார்க் ஹெவன் படத்தின் வெற்றிக்கு, சொந்த ஊரில் விழா எடுத்த இயக்குநர் !

“தி டார்க் ஹெவன் படத்தின் வெற்றிக்கு, சொந்த ஊரில் விழா எடுத்த இயக்குநர் !

தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய பிரபல நடிகரின் மனைவி !

தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய பிரபல நடிகரின் மனைவி !

“கோல்டன் பாக்கியம்” டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு !

“கோல்டன் பாக்கியம்” டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு !

“கிட்டி” படத்தின் விமர்சனம்

“கிட்டி” படத்தின் விமர்சனம்

“த்ரிஷ்யம்_3” படத்தின் இந்தி பதிப்பை வெளியிட தடை கோரி வழக்கு !

“த்ரிஷ்யம்_3” படத்தின் இந்தி பதிப்பை வெளியிட தடை கோரி வழக்கு !

நான்கு மாநில டிஜிட்டல் & தொலைக்காட்சி துறைகளை ஒருங்கிணைக்கும் முயற்சி !

நான்கு மாநில டிஜிட்டல் & தொலைக்காட்சி துறைகளை ஒருங்கிணைக்கும் முயற்சி !

“துரோகம் பழகு படத்தின் டீசர் வெளியீட்டு விழா !

“துரோகம் பழகு படத்தின் டீசர் வெளியீட்டு விழா !

25 மாவட்டங்கள், 2 ஆயிரம் ரசிகர்கள் ! நடிகர் சூர்யா தலைமையில் பிரமாண்டமான விழா !

25 மாவட்டங்கள், 2 ஆயிரம் ரசிகர்கள் ! நடிகர் சூர்யா தலைமையில் பிரமாண்டமான விழா !

மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள “மக்கள் காவலன்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள “மக்கள் காவலன்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“பூஜா மேரி ஜான்” திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ஜீ_5 ஹிந்தியில் வெளியாகிறது

“பூஜா மேரி ஜான்” திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ஜீ_5 ஹிந்தியில் வெளியாகிறது

சாதிய வன்மத்தை விதைக்கும் “தி கிராண்ட் மாஸ்டர்” ! படத்தின் விமர்சனம்

சாதிய வன்மத்தை விதைக்கும் “தி கிராண்ட் மாஸ்டர்” ! படத்தின் விமர்சனம்

“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“#LOVE” வெப் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“#LOVE” வெப் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“தாய்நிலம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

“தாய்நிலம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

தனுஷின் ( D_56 ) புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

தனுஷின் ( D_56 ) புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

“ஏழு கடல் ஏழு மலை” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“ஏழு கடல் ஏழு மலை” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“டோரதி” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“டோரதி” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“தி டார்க் ஹெவன்” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“தி டார்க் ஹெவன்” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

மர்மம், ரகசியங்கள் நிறைந்த “ஆக்டோபஸ்” தொடர் ஜீ_5 தமிழில் வெளியாகிறது

மர்மம், ரகசியங்கள் நிறைந்த “ஆக்டோபஸ்” தொடர் ஜீ_5 தமிழில் வெளியாகிறது

ரசிகர்களின் அமோக வரவேற்பில் “என்ன விலை” திரைப்படம் !

ரசிகர்களின் அமோக வரவேற்பில் “என்ன விலை” திரைப்படம் !