“அன்பில் அவன்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபுமோன் அப்துசமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ்  மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. ஆர். கார்த்திகேயன் இயக்கியுள்ள இப் படத்தின் கதையை ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்க, கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய, ஆர்.கே. செல்வா படத்தொகுப்பு செய்ய, மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை மேற்கொண்டுள்ளார்.

ஐங்கரன் இண்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் கே. கருணாமூர்த்தி, அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர். ஸ்ரீ குமரன் ஃபிலிம்ஸ் ராசி சிதம்பரம் வெளியிடுகிறார்.

இவ்விழாவில் ஹேப்பி ஹை பிச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபிநயா பேசும்போது, இந்தப் படம் எடுக்க முடிவு செய்வதற்குக் காரணம் கதை தான். கதை பிடித்துப் போய் தான் இந்தப் படத்தை எடுக்க முடிவு செய்தோம். அந்த அளவுக்குத் தரமாக இருந்தது. பிறகு நல்லதொரு ஒரு புத்திசாலித்தனமான குழுவினர் அமைந்தார்கள். கனவுப் படம் போலவே இந்தப் படக்குழுவையும் கனவுப் படக்குழு என்று கூறலாம்.

என் தம்பிக்கும் எனக்கும் எப்போதும் நல்ல ஒரு நல்லிணக்கம் இருக்கும். நான் தான் அதிகமாக ஏதாவது பேசிக் கொண்டிருப்பேன். செய்து கொண்டிருப்பேன். நாங்கள் இருவரும் எப்போதும் பேசிக் கொண்டே இருப்போம். எந்த விஷயத்திலாவது எனக்குச் சந்தேகம் வந்தால் தம்பி தான் ஓகே சொல்வார். அசோக் நடித்திருக்கும் கதை, பாத்திரங்களை வைத்து அவர் சீரியஸான ஆள் என்று நினைக்க வேண்டாம். நாங்கள் எப்போதும் பேசி சிரித்துக் கொண்டே இருப்போம். நான் எதையும் இரண்டு முறை சொன்னால் அவர் கேட்டுக் கொள்வார். நானும் அப்படித்தான். அசோக்  எனது சகோதரன் மட்டுமல்ல நல்ல நண்பனும் கூட. ’அன்பில் அவன்’ படத்தின் கதை அன்புள்ள தம்பதிகள் சிக்கலிலிருந்து எப்படி போராடி மீள்கிறார்கள் என்பதுதான். நமக்கு இப்படி ஒருவர் கணவராகக் கிடைக்க மாட்டாரா என்று நிறைய பேர் ஆசைப்படும்படியாக அந்தப் பாத்திரம் இருக்கும் என்றார்.

ஐங்கரன் இன்டர்நேஷனல் சார்பில் அதன் விளம்பர இயக்குநர் கவிதா பாண்டியன் பேசும்போது, இந்தப் படம் எனது மனதுக்கு நெருக்கமான படம். இந்தப் படத்தில் நடித்தவர்கள், படக் குழுவினர், அவர்கள் செய்கிற முயற்சிகள் எல்லாம் பார்த்து வியப்பாக இருந்தது. நான் எங்கள் கருணாமூர்த்தி சார் சார்பில் வந்தேன். அசோக் செல்வன் இப்படத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். அவர் என் சகோதரனாக மட்டுமல்ல நண்பராகவும் இருப்பவர். நாங்கள் இரட்டையர் போல் இருப்போம். அனைவரும் திரையரங்கு சென்று இந்தப் படத்தைப் பாருங்கள் என்றார்.

நடிகர் கௌதம் ராம் கார்த்திக் பேசும்போது, இந்தப் படத்தின் டிரெய்லர், டீசர் எல்லாமும் பார்த்து மகிழ்ந்தேன். எல்லாம் பிரமாதமாக இருக்கின்றன. என்னுடைய நண்பன் அசோக் செல்வன். கனவுக் காதலன் என்று சொல்வது போல அவரைக் கனவு நண்பன் என்று சொல்ல வேண்டும். கடந்த இரண்டு ஆண்டுகளாக நாங்கள் மிகவும் நெருக்கமாகி விட்டோம். அவரிடம் பேசினாலே நமது பிரச்சினைகளை மறக்கச் செய்து விடுவார். அவரது நட்பை நினைத்து, நான் பாக்கியம் செய்ததாக நினைக்கின்றேன். இந்தப் படம் பிரமாதமாக வந்திருக்கிறது. அதில் ஒரு மேஜிக் இருக்கிறது. இதில் ஒலி அமைப்புகள் கூட நன்றாக இருக்கின்றன என்றார்.

திங்க் மியூசிக் சந்தோஷ் பேசும்போது, அசோக் செல்வனுடன் அவரது முதல் படத்தில் இருந்து பெரும்பாலான படங்களில் நாங்கள் இணைந்திருக்கிறோம். இந்தப் படத்தில் இணைந்திருப்பது மகிழ்ச்சி. கோவிந்த் வசந்தா எங்கள் கலைஞரைப் போன்றவர். இதில் அவரது ஐந்தாறு பாடல்கள் வந்துள்ளன. அதில் ‘ஆசை வரமே’, ‘கல்லா நிக்கிறியே’ பிரமாதமான வெற்றி பெற்றுள்ளன.

கோவிந்த் வசந்தா ஓராண்டுக்கு முன்பே சொன்னார். இந்த ஆல்பம் பெரிய வெற்றி அடையும் என்று, அது போலவே வெற்றியடைந்திருக்கிறது. படத்தில் அனைவரும் போட்டி போட்டுக் கொண்டு நடித்துள்ளார்கள். அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நன்றாக நடனமாடி நடித்துள்ளார்கள். கிளைமாக்ஸ் காட்சி யாரும் எதிர்பாராத விதமாக இருக்கும்.  திங்க் மியூசிக்கிற்கு வாய்ப்பு தந்ததற்கு நன்றி என்றார்.

நடிகர் ஹரிஷ் கல்யாண் பேசும்போது, அசோக் ஒரு நடிகராக நடித்து நிறைய படங்கள் நமக்குக் கொடுத்திருக்கிறார். நிறைய வெற்றியும் பெற்றுள்ளன. இப்போது பெரிய நடிகராக வளர்ந்திருக்கிறார். அவரது எல்லா முயற்சிக்கும் எனது வாழ்த்துக்கள். சண்டைக்காட்சியில் 70 அடி உயரத்தில் இருந்து குதித்தேன் என்றார். அதற்கு ஆதாரமாக ஆவணப்படுத்தி இருக்கிறீர்களா? என்று நான் கேட்டேன். அவர் அப்படிக் குதித்ததில் ஆச்சரியம் இல்லை. ஏனென்றால் அவ்வளவு துணிவு மிக்கவர். அவர் பலருக்கும் தூண்டுதலாக இருப்பவர். நிஜமான சாதனை நிஜமான சாகசங்கள் செய்பவர்.

பிரீத்தி முகுந்தன் நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம் என்று மூன்று மொழிகளில் நடித்து வருகிறார். அர்ப்பணிப்புள்ள நடிகை. அபி திறமையானவர். திறமைசாலிகளை இணைத்து இந்தப் படத்தை உருவாக்கி இருக்கிறார். இந்தப் படத்தை வாழ்த்துபவர்கள் பட்டியலில் நானும் இருப்பதில் மகிழ்ச்சி. கோவிந்த் வசந்தாவின் இசை பெரிய வெற்றி பெற்றுள்ளது. அனைவரும் இந்தப் படத்தை ஆதரிக்க வேண்டும். இன்னும் ஐந்து ஆண்டுகளில் பான் இந்தியா நட்சத்திரமாக அசோக் செல்வன் வருவார் என்று நம்புகிறேன் என்றார்.

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா பேசும்போது, நீண்ட இடைவெளிக்குப் பிறகு நான் ரசித்து செய்த படம் என்று இதைச் சொல்லலாம். இந்தப் படத்தில் பணியாற்றியது மகிழ்ச்சியான அனுபவம். நான் பணியாற்றியதில் 99 சதவீதப் படங்கள் முதல் முறை படம் இயக்கும் இயக்குநர்களுடன் தான். அவற்றில் நான் பல பாடல்களைத் தந்திருக்கிறேன் என்றாலும் பலரும் சிறந்த தொழில்நுட்ப கலைஞராக வந்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் பலரும் சிறந்த தொழில்நுட்பத் திறமைசாலிகள். நம்பிக்கை அளிக்கும் தரத்தில் இந்தப்  படம் உருவாகி இருக்கிறது என்றார்.

கதாசிரியரும் ‘போர் தொழில்’ இயக்குநருமான விக்னேஷ் ராஜா பேசும்போது, ஓர் எழுத்தாளராக நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். சினிமாவுக்கு வருவதற்கு முன்பு நான் கார்ப்பரேட் பிலிம்ஸ் படங்கள் எடுத்திருக்கிறேன். அந்த சமயத்தில் நாங்கள் வட இந்தியாவில் ஜெய்ப்பூர் பக்கம் காரில் சென்று கொண்டிருந்தோம். அப்போது நல்ல மழை பெய்தது. காரின் மேல் உள்ள சாதனங்கள் எல்லாம் நனைந்து விடப் போகிறது என்று அந்த இன்னோவா காரை ஓரம் கட்டி விட்டு அருகில் கிடைத்த பிளக்ஸ் பேனரை உடைத்து வைத்துக் கட்டிக் கொண்டு போய்க் கொண்டிருந்தோம். அந்த பிளக்ஸ் பேனரில் இருந்தது யார் என்று நாங்கள் பார்க்கவில்லை. அதனால் நாங்கள் பெரிய பிரச்சினையில் சிக்கிக் கொண்டோம். அதுதான் இந்தக் கதையின் முதல் விதை. இது ஒரு காதல் கதை. கனவு கண்ட வாழ்க்கை வாழ நினைக்கும் தம்பதியினர் சிக்கல்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைச் சொல்லும் கதை.

அபிநயா, அசோக் செல்வன் என்று வந்த பிறகு கார்த்திக் வந்தார். நான் கற்பனை செய்ததை விடப் படம் பிரமாதமாக வந்திருக்கிறது. அசோக் செல்வன் எனக்கு 15 ஆண்டுகாலப் பழக்கம். அப்போது நாங்கள் ‘மிஷன் இம்பாசிபிள்’ படம் பார்த்துவிட்டு அதைப்போல பேசிப் பார்ப்போம். எனது முதல் படத்தில் முதல் கதாநாயகன் அவர்தான். இப்போது குடும்பம் போல் ஆகி இருக்கிறோம். நானும் அவரும் தெருத்தெருவாக ஓடி அலைந்திருக்கிறோம். அவரை நினைத்தால் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது என்றார்.

வில்லனாக நடித்திருக்கும் கதிர்பாலு பேசும் போது, இந்தப் படம் எடுக்கும் போதே தெரிந்தது படம் எவ்வளவு நன்றாக வரும் என்று. கோவிந்த் வசந்தா வின் பாடல்கள் நன்றாக அமைந்துள்ளன. இதில் ஒரே ஷாட்டில் காட்சி எடுத்து பல படங்கள் வந்துள்ளன. ஆனால் எல்லாம் பயிற்சி அளிக்கப்பட்ட சண்டைக் கலைஞர்களை வைத்து எடுத்திருப்பார்கள். ஆனால் இதில் அப்படி அல்ல. ஆனாலும் அந்தக் காட்சியை எடுத்திருக்கிறார்கள். அது பாராட்டும் படி இருக்கும். என்னைத் தேர்வு செய்ததற்கு அசோக் செல்வன், அபிநயா, இயக்குநர் மூன்று பேருக்கும் நன்றி என்றார்.

மற்றொரு வில்லனாக நடித்திருக்கும் டெல்லி கணேஷின் மகன் மஹா டெல்லி கணேஷ் பேசும்போது, படத்தில் சிரமமான நெருக்கடியான காட்சிகளை எடுக்கும் போது கூட அந்த அசௌகரியத்தை பொருட்படுத்தாமல் முகம் சுளிக்காமல் ப்ரீத்தி முகுந்தன் நடித்தார். சந்தேகம் வரும் போதெல்லாம் இயக்குநர் வந்து எங்களுக்கு தெளிவுபடுத்தினார். அதற்குப் பக்க பலமாக படக்குழு இருந்தது. பீட்டர் ஹெய்ன் மாஸ்டரின் சண்டைக் காட்சிகள் பிரமாதமாக வந்திருக்கிறது. அவர் இயக்கத்தில் நடித்தது பெருமையாக இருக்கிறது என்றார்.

நடிகர் சபு மோன் பேசும்போது, நான் கேரளாவில் இருந்து தமிழ்நாடு வந்திருக்கிறேன். இங்கு நான் மலையாளம் பேசக்கூடாது என நினைத்தேன். கேரளாவில் பிறந்தாலும் சிறுவயதில் எல்லைப் பகுதியில் இருந்தேன். அதனால் எனக்குக் கொஞ்சம் தமிழ் தெரியும். எனக்குத் தமிழ் பிடிக்கும். தமிழ் கலாச்சாரம், தமிழ் மக்கள், தமிழ் சினிமா எல்லாமே எனக்குப் பிடிக்கும். இந்தப் படத்தில் குடும்பம் போல நாங்கள் பணியாற்றி இருக்கிறோம். முன்பே தமிழ் படத்தில் நடித்திருந்தாலும் இது முக்கியமான மறக்க முடியாத அனுபவம். அசோக் செல்வன், கார்த்திக் என்று எங்களுக்குள் அடிக்கடி சண்டை வரும்.

நான் சாதுவான ஆள். ஆனால் கொடூரமானவனாக நடித்திருக்கிறேன். அதைவிட படப்பிடிப்பின் போது என்னை மோசமாக நடத்தினார்கள். மைனஸ் டிகிரி குளிரில் கூட சாதாரணமாக என்னை நடிக்க வைத்தார்கள். நான்நேரில் அமைதியானவன். படத்தில் மோசமாக நடித்திருப்பேன். அதைவிட அவர்கள் என்னை மோசமாக நடத்தினார்கள். என்னை ஓட ஓட விரட்டி அடித்து வேலை வாங்கினார்கள். மூச்சு விடக் கூட நேரம் கொடுக்கவில்லை. அந்த அளவிற்கு வேலை வாங்கினார்கள். அப்போது வருத்தமாகத் தெரிந்தது. வலியாக இருந்தது எல்லாம் படத்தைப் பார்க்கும் போது காணாமல் போய்விட்டது. இந்த விழாவில் இப்போது என்ன பேசுவது என்று எனக்குத் தெரியவில்லை. என் மனைவியிடம் சாட் ஜிபிடியில் தமிழில் என்ன பேசுவது என்று எழுதிக் கொடுக்கும்படிக் கேட்டேன். ஆனால் எனக்குப் படிக்க முடியவில்லை. எல்லாம் மறந்து விட்டது. உங்கள் அன்பும் ஆதரவும் எங்களுக்கு வேண்டும்.
இந்தப் படத்தில் எனக்குத் தயாரிப்பாளர் மட்டும் கிடைக்கவில்லை. நண்பராகவும் கிடைத்தார். இதயத்துக்கு நெருக்கமாக நண்பர்கள் இதில் எனக்குக் கிடைத்தார்கள். அனைவருக்கும் நன்றி என்றார்.

ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் பேசும்போது, இந்தப் படம் எனக்குத் தனிப்பட்ட முறையில் முக்கியமான படம். இது வழக்கமாகச் சொல்வது போன்றதில்லை. முதலில் விக்னேஷ் ராஜாவுடன் பணியாற்றி இருக்கிறேன். நண்பர்களாகி விட்டோம். தயாரிப்பாளர் அபிநயா  இந்தத் திரைக்கதையைக் கொடுத்துப் படித்து பாருங்கள், பிடித்தால் செய்யுங்கள் என்றார். நான் அப்போது 17 படங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தேன். இயக்குநர் பார்வையில் சண்டைக் காட்சிகள் எப்படி இருக்கும் என்று அறிய விரும்பினேன். அவரது கோணத்தில் காட்சி எப்படி எப்படி இருக்க வேண்டும் என்றேன். இந்தப் படத்திற்கு வந்த பிறகு எனது போக்கே மாறியது. ஒரு குடும்ப உறுப்பினர் போல் நான் ஆகிவிட்டேன். அசோக் செல்வன் எனக்குச் சகோதரர் போல் ஆகி விட்டார். நான் ஒரு மூத்த அண்ணன் போல் பெரியண்ணன் போல இந்த படத்துடன் இருந்தேன். எனது 34 ஆண்டுக்கால அனுபவத்தில் இந்த மாதிரி உணர்வு எனக்கு ஏற்பட்டதில்லை. இதை எனது சொந்தக் கம்பெனி போல உணர்ந்தேன். இது எனது சொந்தப்பட நிறுவனம் போல உணர வைத்தது. நான் சொந்த சகோதரன் போல் ஆகி விட்டேன்.

சொன்னால் நம்ப மாட்டீர்கள் எனது தனிப்பட்ட சூழலால் படப்பிடிப்பு இடத்தில் நான் தனியாக உட்கார்ந்து அழுதிருக்கிறேன். அழுதுவிட்டு உடனே இந்தப் படத்தின் சண்டைக் காட்சிகளை அமைப்பேன். இந்தப் படம் சார்ந்து நான் மிகவும் அக்கறையாக இருந்தேன். இயக்குநர், அசோக் செல்வன் அனைவரிடமும் விவாதிப்போம். அப்படித்தான் எடுத்தோம்.

அது எனக்குப் புது அனுபவமாக இருந்தது. இதில் மூன்று வில்லன்கள் நடித்திருந்தார்கள். பிரமாதமாக செய்து இருக்கிறார்கள். இது ஒரு என்டர்டெய்ன்மென்ட் படம் தான், இருந்தாலும் சீரியஸாக எடுத்தோம். இந்தப் படத்தில் பிளேடு, ஆணிகள் நடுவில் இருக்கும் ரோஜா போல ப்ரீத்தி முகுந்தன் இருந்தார். இந்தப் படத்தில் எனக்கு நிறைய அனுபவங்கள் கிடைத்தன. ‘மண்டாடி’ அப்போது தான் பணியாற்றிக் கொண்டிருந்தேன். நிறைய படங்கள் கையில் இருந்தாலும் நான் எனது செயலாளரிடம் சொன்னேன், 45 நாட்கள் வேறு வேலை செய்யவில்லை, யாருக்கும் தேதிகள் கொடுக்க வேண்டாம், இதை விட்டுவிட்டு இடையில் எல்லாம் போக முடியாது என்று கூறி இருந்தேன்.

இந்த ஒரு படத்திற்காக பலவற்றையும் அனுசரித்தேன். ஏனென்றால் இதை ஒரு குடும்பப் படம் போல் நினைத்து நான் ஈடுபாட்டுடன் இருந்தேன். இந்தப் படத்தின் இசை நன்றாக இருந்தது. ஒளிப்பதிவாளர் கௌதம் நன்றாக வருவார் அசோக் செல்வன், அபிநயா எப்போதும் நான் உங்கள் பின்னால் இருப்பேன். இப்படத்தில் ஆக்ஷன் காட்சிகள் எதிர்பாராத விருந்தாக இருக்கும். இப்போது ஒரு வீடியோ வைரலாக போய்க்கொண்டிருக்கிறது. 20 வயது 25 வயது பெண் எனக்கு இரண்டு லட்சம் வேண்டும் ஐந்து லட்சம் வேண்டும் என் கணவர் யாஷ் போல் இருக்க வேண்டும் என்றெல்லாம் கூறுகிற வீடியோ அது. இந்தப் படத்தை பார்த்திருந்தால் இந்தப் படம் முன்பே வந்திருந்தால் அசோக் செல்வன் மாதிரி எனக்கு கணவர் வேண்டும் என்றுதான் கூறுவார்கள் என்றார்.

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேசும்போது, நான் இப்போது படப்பிடிப்பில் இருந்து வந்தேன். இந்த விழாவுக்கு வர வேண்டும் என்பதற்காகவே 2 மணி நேரம் முன்னதாக படப்பிடிப்பினைத் தொடங்கி இரண்டு மணி நேரம் முன்பே முடித்துவிட்டு வந்திருக்கிறேன். எனக்கு இங்கிருந்து தான் எல்லாம் கிடைத்தது. முதல் படம்  ‘ஓ மை கடவுளே’. படம் நன்றாக வர, கதை தான் காரணம், அதில் விக்னேஷ் ராஜாவுக்கு முக்கிய பங்கு உண்டு. நாங்கள் ஒரே குழுவாக இருப்போம், விவாதிப்போம் இந்தப் படத்தில் சண்டைக் காட்சிகள் தான் அடிப்படை. அதனால் பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் பெரிய பலமாக இருக்கிறார். அடுத்து இசை அமைப்பாளர் கோவிந்த் வசந்தா பெரிய பலமாக இருக்கிறார். இவர்கள் வெற்றி பெறுவது எனக்கு முக்கியம். ஒரு படத்திற்கு அடிப்படை சரியாக இருந்தால் படம் நன்றாக இருக்கும் என்பதற்கு இந்தப் படமே சிறந்த உதாரணம்.

ப்ரீத்தி முகுந்தன் ‘டிராகன்’ படத்தில் நடிக்கக் கேட்டபோது மறுத்துவிட்டார். பிறகு அவரிடம் அருமையான ஒரு படம் வருகிறது என்று கூறினேன். அதுதான் இந்தப் படம். அசோக்செல்வன் 70 அடி உயரத்தில் இருந்து குதித்து இருப்பதாகக் கூறினார்கள். அது எனக்கு ஆச்சரியமாகத் தெரியவில்லை. ஏனென்றால் அவர் 150 அடி உயரம் இருந்தால் கூட குதிக்கக் கூடியவர். அவர் ஒரு ஆக்சன் ஹீரோவாக இருக்கிறார்.

அவரை வைத்து நான் படம் இயக்கும் போது ஒருநாளும் அவர் தாமதமாக வந்ததில்லை. இப்போது நான் இயக்கும் ‘தர்மன்’ படத்தில் தலைவர் ரஜினி சாரும் இந்த வயதிலும் ஒரு நாளும் தாமதமாக வந்ததில்லை. ஒவ்வொரு நாளும் உற்சாகமாக இருக்கிறார். 50 ஆண்டு அனுபவத்திற்குப் பிறகும் அவர் இன்று என்ன செய்யப் போகிறோம் என்று ஆர்வத்தோடு கேட்கிறார். முதலில் எனக்கு அவரை வைத்து எப்படி இயக்குவது என்று பயமாகத்தான் இருந்தது. ஆனால் தலைவர் எனக்கு ஏற்றபடி சகஜமாகி சௌகரியமாக மாற்றிக் கொண்டார். அவரது அர்ப்பணிப்பு ஆச்சரியமாக இருக்கும். அசோக் செல்வன் சினிமாவை நேசிக்கிறார், மதிக்கிறார். இந்த தருணம் எனக்கு மிகவும் முக்கியமானது என்றார்.

இயக்குநர் ஆர். கார்த்திகேயன் பேசும்போது, முதலில் என்னுடன் பணியாற்றிய எனது உதவி இயக்குநர்களுக்கும் உதவி ஒளிப்பதியாளர்களுக்கும் நன்றி. கடந்த இரண்டு ஆண்டுகளில் எனது மனைவியுடன் பேசியதை விட என் இணை இயக்குரிடம்தான் நான் அதிகம் பேசி இருக்கிறேன். அசோக் செல்வனை எனக்குப் பத்து வருடங்களாகத் தெரியும். 2017 முதல் பலமுறை படங்கள் தொடங்கி தொடங்கி நின்று தொடர முடியாமல் போயிருக்கிறது. ஒரு படத்தில் தயாரிப்பாளர் எங்களை வேண்டாம் என்றால் இன்னொரு படத்தில் நாங்கள் இந்தத் தயாரிப்பாளர் வேண்டாம் என்போம். ஒரு நாள் படப்பிடிப்பிலிருந்து 13 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது வரை பல்வேறு முயற்சி அனுபவங்கள் உண்டு.

அசோக் செல்வன், அபிநயா இவர்களை நினைத்தால் எனக்குப் பெருமையாக இருக்கிறது. ஹேப்பி ஹை பிச்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் என்பதை நினைத்தாலும் பெருமையாக இருக்கிறது. தமிழ் சினிமாவில் புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு தரத் தயாராக இருக்கிறார்கள். நல்ல கதையோடு வாருங்கள். அசோக்செல்வன் கதையைத் தேர்வு செய்வதில் தெகிடி முதல் அவரது திறமையைக் காணலாம்.

என்னை இயக்குநர் ஆக்கியதற்கு நன்றி. விக்னேஷ் ராஜா இல்லையென்றால் இந்தப் படம் உருவாகி இருக்காது. அப்படிப்பட்ட கதை. அபிநயா நல்ல கதைகளைத் தேர்வு செய்கிறார். ஒருமுறை நான் மதுரைக்கு எங்கள் அக்காவுக்கு உடல்நிலை சரி இல்லை என்று போய்க் கொண்டிருந்தபோது எனக்கு ஒரு போன் வந்தது. அப்படித்தான் தொடங்கியது. அவர் நம்பிக்கை அளித்து இந்த பட வாய்ப்பு கொடுத்தார். இந்தப் படத்தில் முழுக்க முழுக்க இந்த நம்பிக்கைதான் இப்படி மாயமாக நடந்து இருக்கிறது.

அசோக்செல்வன் கொடுத்த ஊக்கம் ஆதரவு முக்கியமானது. அவர் எனது படத்தில் ஒரு உதவி இயக்குநரைப் போல ஈடுபாடு காட்டினார். விளம்பர விஷயங்களில் கூட அவரது உதவி பெரிது. படத்தைச் சரியாகச் செய்ததாக மகிழ்ச்சியாக இருக்கிறது. ஹாப்பி ஹை நிறுவனம் இன்னும் மேலே உயர்ந்து வளர்ந்து வர வேண்டும். அறிமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பு தருகிறார்கள். திறமையானவர்களுக்கு வாய்ப்பு தருகிறார்கள். நல்ல ஒரு திறமையான குழுவினரை வைத்திருக்கிறார்கள். நாம் ஒரு யோசனை சொன்னால் திரும்பி பத்து யோசனைகளாகத் தரும் அளவிற்கு இருக்கிறார்கள். அப்படி இந்தப் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், எடிட்டர், சவுண்ட் இன்ஜினியர் எல்லாரும் திறமைசாலிகள்.

இந்தப் படத்திற்கு பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் காட்டிய ஈடுபாடு சாதாரணமானதல்ல. அவர் பார்ப்பதற்குத் தான் குழந்தை போல இருப்பார் வேலை என்று வந்துவிட்டால் வெள்ளைக்காரன் சீனாக்காரன் எல்லாம் தாண்டி விடுவார். இந்தப் படத்தில் கடைசி 30 நிமிடம் பீட்டர் ஹெய்ன் மாஸ்டரின் படம் என்று கூறலாம். அவருக்குத் தனிப்பட்ட முறையில் பல பிரச்சினைகள் இருந்தாலும் 40 நாட்களுக்கும் மேல் தொடர்ந்து இந்தப் படத்திற்காகப் பணியாற்றினார்.

கோவிந்த் வந்தா நல்ல இசையில் நல்ல வரிகளையும் தேர்வு செய்பவர். தமிழ்ப் பாடகர்களைப் பாட வைத்துள்ளார். அற்புதமான பாடல்கள் அற்புதமான வரிகள். அவர் வீட்டுக்குக் கொச்சி சென்ற போது அவர் இசையமைக்கும் விதத்தைப் பார்த்து நான் வியந்து போனேன்.

நான் திருத்தங்கள் சொல்லிக் கொண்டே வந்த போது வரியை மாற்ற சொன்னபோது அப்படி செய்தால் இது என் பாட்டாக இருக்காது உங்கள் பாட்டாக இருக்கும் என்றார். அதெல்லாம் மறக்க முடியாது. சிலருக்கு உதவியாளர்கள் என்று பெரும் கூட்டமே வைத்திருப்பார்கள். ஆனால் அவர் ஒன் மேன் ஆர்மி. அவரே வயலின் வாசிப்பார், வீணை வாசிப்பார், பெயர் தெரியாத கருவிகளையும்  வாசிப்பார். இந்த தலைமுறையில் இப்படி ஒரு இசையமைப்பாளர் புதிதாக தெரிந்தார்.

அபிநயா செல்வம் ஒரு துணிச்சல் மிக்க பெண்மணி தைரியம் மிக்க பெண்மணிக்கு உதாரணமாக அவர் இருக்கிறார். உதவி இயக்குநர்கள் அவரிடம் திரைக்கதையை அனுப்பினால் மூன்று மணி நேரத்தில் பதில் வரும். அனைவரும் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ப்ரீத்தி முகுந்தன் ஒரு காட்சியில் சுமாராக நடித்திருந்தார். ஆனாலும் என்ன செய்ய வேண்டும் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டே இருந்தார். அவ்வளவு உற்சாகமானவர். எப்போதும் முயற்சி செய்து கொண்டே இருப்பவர். அவர் நட்சத்திரம் அல்ல  நடிப்புக் கலைஞர்.

ஒளிப்பதிவாளர் கௌதம் எனது செல்லப்பிள்ளை. சினிமாவில் சம்பாதிப்பதை சினிமாவில் முதலீடு செய்பவர்கள் மிகச் சிலரே. கமல் சார் போல் அசோக் செல்வனும் சினிமாவில் சம்பாதித்து எல்லாம் இதிலேயே போடுவார். இது மாதிரி தயாரிப்பாளர் கிடைப்பது அரிது. அபிநயா, அசோக் செல்வன் எல்லாம் பெரிய பணக்காரர்கள் இல்லை. நடுத்தரமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான். சொன்னால் நம்ப மாட்டார்கள் சிரமப்பட்டுத் தான் இந்தப் படத்தை எடுத்தார்கள். அவர் வெள்ளையாக இருப்பதால் அவரைப் பெரிய பணக்காரர் என்று நினைக்கிறார்கள் என்றார்.

நடிகை ப்ரீத்தி முகுந்தன் பேசும் போது, இந்த நிகழ்ச்சி எனக்கு மிகவும் முக்கியமானது. மகிழ்ச்சி தரக்கூடியது. முதலில் அபிநயா பற்றிச் சொல்ல வேண்டும். அவர் ஒரு பவர் ஹவுஸ். அதுவே அழகு, அவர் மிகவும் சக்தி வாய்ந்த பெண்மணி. படம் பார்க்கும்போது படத்தில் நடித்திருப்பவர்கள் தான் பார்வையாளர்களுக்குத் தெரிவார்கள். அதற்குப் பின்னே இருக்கக்கூடிய சக்தி மிக்க மனிதர்களைத் தெரியாது. ஆனால் ஒரு படத்திற்கு அவர்கள் தான் பலம். அதில் முதன்மையானவர் அபிநயா. எனக்கு அவரே பெரிய தூண்டுதலாக இருந்தார். அவரை நான் மிகவும் நேசிக்கிறேன். அசோக் செல்வனும் அபிநயாவும் என்னைத், தத்து எடுத்துக் கொண்டது போல் தங்கள் குழுவோடு சேர்த்துக் கொண்டார்கள். வழிகாட்டினார்கள். என்னை நம்பி உயர்த்தினார்கள். ஏன் இவர்கள் இவ்வளவு அன்பாக இருக்கிறார்கள் என்று எனக்குத் தோன்றும். அசோக் செல்வன் அற்புதமான அவருடன் இணைந்து நடித்த இந்தப் படம் ஒரு அற்புதமான பயணம். முழு படமும் இப்படிப் பயணம் செய்தது மகிழ்ச்சி. அவர் இந்தப் படத்தில் நடிப்பில் ஒரு பெரிய உயரத்துக்கு நகர்ந்துள்ளார். அது மட்டுமல்லாமல் எனக்கும் நடிப்பதற்கு இடம் கொடுத்தார். நடிப்பில் அந்த இடத்திற்கு என்னை நகர்த்திக் கொண்டு போனார்.

கல்லூரி நண்பர்கள் இருப்பார்கள், பேசிக்கொண்டிருப்போம், சண்டை போட்டுக் கொண்டிருப்போம் முட்டாள்தனமாக ஏதாவது செய்து கொண்டிருப்போம். எது பற்றி வேண்டுமானாலும் விவாதிப்போம் சண்டை போடுவோம் அப்படி ஒரு நண்பராக எனக்கு அசோக் செல்வன் இருந்தார். இயக்குநர் கார்த்திகேயன் என்னை முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்த வைத்துள்ளார். அதற்கு வாய்ப்பு கொடுத்துள்ளார். உணர்ச்சிமிக்க காட்சிகளில் டப்பிங் பேசும் போது என் குரலே எனக்குக் கேட்கவில்லை. அப்போதெல்லாம் அவர் என்னைத் தவிர்க்காமல் கற்றுக் கொடுத்து பயன்படுத்தினார். என் மீது நம்பிக்கை வைத்து அவர்கள் பணியாற்ற வைத்தது எனக்கு சக்தியும் பலமும் கொடுத்தது. அதற்கு பிறகு நல்ல எழுத்தாளர், நல்ல இயக்குநர் படத்தில் நடிக்க வேண்டும் என்று ஆசை வந்தது. எனக்குக் கொடுத்த பலமுள்ள பாத்திரத்திற்கும்  அதற்கான வாய்ப்பு கொடுத்ததற்கும் நன்றி.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் கௌதம் என் வயது உள்ளவர். இந்த குழுவிலே இளைஞர்.. அவர்தான். ஆனால் பரஸ்பரம் எங்களது உணர்வுகளைப் பரிமாறிக் கொள்வோம்.

ஒவ்வொரு காட்சிக்கும் பின்னூட்டம் தந்து எனக்கு நண்பரைப் போல அவர் உதவினார் நன்றி. எனக்கு வண்ணங்களில் ஆர்வம் உண்டு. எனக்குப் பிடித்த வண்ணங்களில் என்னை அழகாகக் காண்பித்திருப்பார். அதற்கு நன்றி. சேது அவர்கள் எனக்கு பக்கபலமாக உதவினார். அவருக்கு நிச்சயமாக நன்றி சொல்ல வேண்டும் பீட்டர் ஹெய்ன் மாஸ்டர் இயக்கத்தில் நடித்தது எனக்குப் பெருமையாக இருந்தது. என்னைக் கௌரவப் படுத்தியது போல் இருந்தது.

அவர் எனக்குப் பலவகையில் வழிகாட்டினார் அதற்கு நான் என்றும் நன்றியுடன் இருப்பேன். கோவிந்த் வசந்தாவின் மிகப்பெரிய ரசிகை நான். 96 படத்திலிருந்து அவரது பாடல்கள் என்றால் எனக்குப் பிடிக்கும் . இதிலும் பாடல்கள் நன்றாக வந்துள்ளன. படத்தில் நடித்திருக்கும் கதிர், மகா, சபு அவர்கள் நடிப்பை பார்த்து நான் வியந்து போனேன். எப்படி இவர்களால் இப்படி நடிக்க முடிகிறது என்று கேட்டேன். எல்லா உதவி இயக்குநர்களுக்கும் நன்றி. என்னை இதை ஒரு குடும்பம் போல உணர வைத்தார்கள் என்றார்.

படத்தின் நாயகன் அசோக் செல்வன் பேசும்போது, இது மகிழ்ச்சியான விழா இதில் பேசுவதற்காக எதுவும் தயாரித்துக் கொண்டு வரவில்லை. அந்த அளவுக்கு சென்சார் தொடங்கிப் பட வேலைகள் இருந்து கொண்டே இருந்தன. நான் நடித்து படம் வந்து இரண்டரை ஆண்டுகள் ஆகின்றன. சினிமாவில் இரண்டரை ஆண்டுகள் என்பது ஐந்து ஆண்டுகள் போன்றது. ஒரு திரைப்படம் என்பது ஏதோ செய்துவிட்டுச் செல்வதல்ல. சினிமா என்றால் நான் நினைப்பேன் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அப்படிப்பட்ட படத்தில் தான் நான் நடிக்க வேண்டும் என்று இருக்கிறேன். நல்ல கதைகள், நல்ல கதா பாத்திரம் பார்த்து நடிக்க வேண்டும். அனைத்தும் இதில் தேர்ந்தெடுத்து செய்தோம். இந்தப் படத்தில் எனக்குப் பல நண்பர்கள் கிடைத்தார்கள். பல அனுபவங்களைக் கற்றுக் கொண்டோம்.

நான் இந்த விழாவுக்குக் கூப்பிட்ட அனைவரும் இங்கே வந்திருக்கிறார்கள். அது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. ஏதோ ஒரு முயற்சி செய்ய வேண்டும் மக்களிடம் ஏதாவது கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஒரு படத்தின் போஸ்டரில் என்னுடைய பெயர் போட்டிருந்தால் 100 சதவீதம் எனது உழைப்பு அதில் இருக்க வேண்டும் என்று நினைப்பேன். அதற்கான மறு கண்டுபிடிப்பு மறு தேடல் செய்ய வேண்டும்.

இந்த முக்கியமான படம் கொடுத்ததற்கு முதலில் என் அக்காவிற்கு நன்றி. மூன்று நான்கு வருடங்களாக அவர் என்னுடன் இருக்கிறார். பல கடினமான விஷயங்களைக் கடந்து இருக்கிறார். பல சிரமங்களை நான் கடப்பதற்கு அவர்தான் காரணம். எனக்கு அக்கா பலமும் அண்ணன் பலமுமாக அவர் இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் பலரும் மாறி விடுவார்கள். ஆனால் என் அக்கா அப்படியே இருக்கிறார். அப்பா அம்மாவுக்கு நன்றி. படத்தின் பட்ஜெட் தாண்டிய போது செலவு அதிகமாகும் வீடு அடமானம் வைப்பதற்காக பத்திரத்தைக் கேட்டபோது அவர்கள் தயங்காமல் கொடுத்தார்கள். மகன் ஏதோ செய்கிறான் என்று அவனது கனவுக்காக ஆதரவு கொடுத்தார்கள்.

இயக்குநரும் நானும் பத்து ஆண்டுகளாக நண்பர்களாக இருக்கிறோம். என் படத்தில் அறிமுகமானவர்கள் இன்று பெரிய படங்களை இயக்கும்போது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.
விக்னேஷ் ராஜா தனுஷ் படத்திலும் அஸ்வத், ரஜினி சார் படத்திலும் இருப்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இரண்டு பேரும் வளர வாழ்த்துக்கள். இங்கே வந்திருக்கும் கௌதம் கார்த்திக் என் தம்பி. அதற்கு மேல் சொல்வதற்கு ஒன்றுமில்லை. எடிட்டர் செல்வாவும் நானும் கல்லூரிக் காலத்திலிருந்து நண்பர்கள். அவர் தனது சிறந்த பங்களிப்பைக் கொடுத்திருக்கிறார்.

பீட்டர் ஹெய்ன் மாஸ்டருக்கு நன்றி. இந்தப் படத்தைப் பெரிய படமாக்கியது அவர் தான். பெரிய படங்களில் தொடர்ந்து பணியாற்றுபவர் இது மாதிரி சின்ன படத்திற்கு பணியாற்றுவாரா என்று சந்தேகமாக இருந்தது. ஆனால் அவர் சிறந்த வகையில் உருவாக்கி இருக்கிறார். ஒளிப்பதிவாளர் கௌதம் நல்ல காட்சிகளைக் கொடுத்திருக்கிறார்.
 
ப்ரீத்தி முகுந்தன் எங்கள் படத்தில் நடித்த போது அவரது ஒரு படம் தான் வந்திருந்தது. அவர் நான் முதலீடு செய்துள்ள பிட்காயின் என்று சொல்வேன். இப்போது நான் கல்லூரி விழாக்களுக்கு எங்கு சென்றாலும் ப்ரீத்தி முகுந்தனைக் கேட்டதாகச் சொல்லுங்கள் என்று கத்துகிறார்கள். இந்த படத்தின் இரண்டாம் பாகத்திலும் அவர் நடிக்கலாம்.

சபு சேட்டன் எங்களுக்கு படப்பிடிப்பில் பிரட் சப்ளை செய்தார். அங்கே ஒரு ஸ்டாலே போட்டு எங்களுக்கெல்லாம் கொடுத்தார். நான் நூறு இருநூறு ஆடிஷன் போயிருப்பேன். இந்தப் படத்திலும் அப்படி ஆடிஷன் வைத்து தான் தேர்ந்தெடுத்தோம். அப்படி ஒரு தங்கம் போல மகா, கதிர் போன்றவர்களைத் தேர்ந்தெடுத்தோம். அவர்கள் பெரிய இடத்துக்கு செல்வார்கள்.
நல்ல கதையைத் தேர்ந்தெடுத்து உருவாகி இருக்கும் இந்தப் படம் மறக்க முடியாத திரையரங்க அனுபவமாக  இருக்கும். இதை உலகில் சிறந்த படம் என்று நான் சொல்ல மாட்டேன். ஆனால் நல்ல திரையரங்கு அனுபவமாக இருக்கும்.

இந்தப் படத்தில் ஐங்கரன் இண்டர் நேஷனல் இணைந்த போது கருணாமூர்த்தி சார் ஒன்று கூறினார். அவர் கதையை மட்டும் கேட்டார். மற்றபடி என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்றார். அவர் தந்த ஆதரவுக்கு நன்றி. எனது மனைவி கீர்த்திக்கு நன்றி என்றார்.

நிறைவாக ஹேப்பி ஹை பிச்சர்ஸ் தயாரிப்பாளர் அபிநயா அனைவருக்கும் நன்றி கூறினார்.

dhamaraimurasu

dhamaraimurasu

dhamaraimurasu admin

Related Posts

கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் “ஊர் கூடும் இரவு” ஆவணப்படம் !

சென்னையைச் சேர்ந்த ரம்யா ஸ்ரீராம் புகைப்படக் கலைஞராகவும், பலகலைகள் பற்றிய தேடுதல் மனம் கொண்ட பயணியாகவும் இருக்கிறார்.மக்களிடையே பின்பற்றப்படும் சடங்கு வடிவங்களையும்,  விழாக்களையும் தனது கேமராவிற்குள் சிறைப் பிடிப்பது அவருக்கு விருப்பமான ஒன்று. அந்த வகையில்நமது பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவற்றை ஆவணப்படுத்துவதில்…

Read more

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரிப்பில், யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் நடிகர்கள் ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ‘ஹைக்கூ’. வரும் அக்டோபர் 23…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்கத்தவறிய செய்திகள்

“E 1” படத்தின் விமர்சனம்

“E 1” படத்தின் விமர்சனம்

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழாவில் 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழாவில் 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழா ! ஓவியர் ஜீவானந்தனுக்கு 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழா ! ஓவியர் ஜீவானந்தனுக்கு 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு 13.78 லட்சம் நிதியுதவி !

கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் “ஊர் கூடும் இரவு” ஆவணப்படம் !

கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் “ஊர் கூடும் இரவு” ஆவணப்படம் !

“ஆல்பாஸ்” விமர்சனம்

“ஆல்பாஸ்” விமர்சனம்

“தாய்நிலம்” விமர்சனம்

“தாய்நிலம்” விமர்சனம்

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

அதிமுகவின் பலவீனமா ? த.வெ.க வினரின் மோசடியா ?

அதிமுகவின் பலவீனமா ? த.வெ.க வினரின் மோசடியா ?

“அமெரிக்க ஆவி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“அமெரிக்க ஆவி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

அட்லான்டா இந்தியத் திரைப்பட விழாவில் “என்ன விலை” படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது !

அட்லான்டா இந்தியத் திரைப்பட விழாவில் “என்ன விலை” படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது !

நலிவுற்ற திருநங்கைகளுங்கு நிதியுதவி வழங்கிய “டோரதி” படக்குழு !

நலிவுற்ற திருநங்கைகளுங்கு நிதியுதவி வழங்கிய “டோரதி” படக்குழு !

“அன்பில் அவன் படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“அன்பில் அவன் படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“பத்தா” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“பத்தா” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

நாள்தோறும் நற்பணி ! ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன்

நாள்தோறும் நற்பணி ! ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன்

“ஒட்டாரம்” திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு !

“ஒட்டாரம்” திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு !

“சிக்மா” படத்தில் அறிமுகமானது எனக்கு பெருமை ! நடிகை ஃபரியா அப்துல்லா

“சிக்மா” படத்தில் அறிமுகமானது எனக்கு பெருமை ! நடிகை ஃபரியா அப்துல்லா

“அன்பில் அவன்” படத்தின் விமர்சனம்

“அன்பில் அவன்” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த நடிகர் !

“சிக்மா” படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த நடிகர் !

“பத்தா” படத்தின் விமர்சனம்

“பத்தா” படத்தின் விமர்சனம்

இயக்கமா ? நடிப்பா ? “சிக்மா” இயக்குநர் பேட்டி !

இயக்கமா ? நடிப்பா ? “சிக்மா” இயக்குநர் பேட்டி !

கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான் “சிக்மா” – இயக்குநர் சஞ்சய்

கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான் “சிக்மா” – இயக்குநர் சஞ்சய்

“தி டார்க் ஹெவன் படத்தின் வெற்றிக்கு, சொந்த ஊரில் விழா எடுத்த இயக்குநர் !

“தி டார்க் ஹெவன் படத்தின் வெற்றிக்கு, சொந்த ஊரில் விழா எடுத்த இயக்குநர் !

தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய பிரபல நடிகரின் மனைவி !

தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய பிரபல நடிகரின் மனைவி !

“கோல்டன் பாக்கியம்” டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு !

“கோல்டன் பாக்கியம்” டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு !

“கிட்டி” படத்தின் விமர்சனம்

“கிட்டி” படத்தின் விமர்சனம்

“த்ரிஷ்யம்_3” படத்தின் இந்தி பதிப்பை வெளியிட தடை கோரி வழக்கு !

“த்ரிஷ்யம்_3” படத்தின் இந்தி பதிப்பை வெளியிட தடை கோரி வழக்கு !

நான்கு மாநில டிஜிட்டல் & தொலைக்காட்சி துறைகளை ஒருங்கிணைக்கும் முயற்சி !

நான்கு மாநில டிஜிட்டல் & தொலைக்காட்சி துறைகளை ஒருங்கிணைக்கும் முயற்சி !

“துரோகம் பழகு படத்தின் டீசர் வெளியீட்டு விழா !

“துரோகம் பழகு படத்தின் டீசர் வெளியீட்டு விழா !

25 மாவட்டங்கள், 2 ஆயிரம் ரசிகர்கள் ! நடிகர் சூர்யா தலைமையில் பிரமாண்டமான விழா !

25 மாவட்டங்கள், 2 ஆயிரம் ரசிகர்கள் ! நடிகர் சூர்யா தலைமையில் பிரமாண்டமான விழா !

மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள “மக்கள் காவலன்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள “மக்கள் காவலன்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“பூஜா மேரி ஜான்” திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ஜீ_5 ஹிந்தியில் வெளியாகிறது

“பூஜா மேரி ஜான்” திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ஜீ_5 ஹிந்தியில் வெளியாகிறது

சாதிய வன்மத்தை விதைக்கும் “தி கிராண்ட் மாஸ்டர்” ! படத்தின் விமர்சனம்

சாதிய வன்மத்தை விதைக்கும் “தி கிராண்ட் மாஸ்டர்” ! படத்தின் விமர்சனம்

“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“#LOVE” வெப் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“#LOVE” வெப் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“தாய்நிலம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

“தாய்நிலம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

தனுஷின் ( D_56 ) புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

தனுஷின் ( D_56 ) புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

“ஏழு கடல் ஏழு மலை” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“ஏழு கடல் ஏழு மலை” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“டோரதி” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“டோரதி” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“தி டார்க் ஹெவன்” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“தி டார்க் ஹெவன்” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

மர்மம், ரகசியங்கள் நிறைந்த “ஆக்டோபஸ்” தொடர் ஜீ_5 தமிழில் வெளியாகிறது

மர்மம், ரகசியங்கள் நிறைந்த “ஆக்டோபஸ்” தொடர் ஜீ_5 தமிழில் வெளியாகிறது

ரசிகர்களின் அமோக வரவேற்பில் “என்ன விலை” திரைப்படம் !

ரசிகர்களின் அமோக வரவேற்பில் “என்ன விலை” திரைப்படம் !

“நல்ல படம்” திரைப்படத்தின் விமர்சனம்

“நல்ல படம்” திரைப்படத்தின் விமர்சனம்

“துரோகம் பழகு” படக்குழுவினரை  பாராட்டிய முதலமைச்சர் !

“துரோகம் பழகு” படக்குழுவினரை  பாராட்டிய முதலமைச்சர் !

பா. ரஞ்சித்தின் “வேட்டுவம்” படத்தின் அறிமுக வீடியோ வெளியீடு !

பா. ரஞ்சித்தின் “வேட்டுவம்” படத்தின் அறிமுக வீடியோ வெளியீடு !

விஜய் சேதுபதியின் “பத்தா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

விஜய் சேதுபதியின் “பத்தா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

பறிபோன மானத்திற்கு “என்ன விலை” என்ன விலை படத்தின் விமர்சனம்

பறிபோன மானத்திற்கு “என்ன விலை” என்ன விலை படத்தின் விமர்சனம்

“மண்டாடி” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“மண்டாடி” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“கஸ்தூரி வீடு” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“கஸ்தூரி வீடு” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

பாவனா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் “பிக்னிக்” படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு !

பாவனா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் “பிக்னிக்” படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு !

துல்கர் சல்மானின் “ஆகாசம்லோ ஓக தாரா” (AOT) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

துல்கர் சல்மானின் “ஆகாசம்லோ ஓக தாரா” (AOT) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

எம்.எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி “எம்.எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்” படத்தின் துவக்க விழா !

எம்.எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி “எம்.எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்” படத்தின் துவக்க விழா !

அர்ஜூன் தாஸ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

அர்ஜூன் தாஸ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

“அன்பில் அவன்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

நானி நடிப்பில் உருவாகியுள்ள “தி பாரடைஸ்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

நானி நடிப்பில் உருவாகியுள்ள “தி பாரடைஸ்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“என்ன விலை” படம் மறக்க முடியாத அனுபவம் ! நிமிஷா சஜயன்

“என்ன விலை” படம் மறக்க முடியாத அனுபவம் ! நிமிஷா சஜயன்

தி டார்க் ஹெவன் படத்தின் முன் வெளியீட்டு விழா !

தி டார்க் ஹெவன் படத்தின் முன் வெளியீட்டு விழா !

“பனங்காட்டான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“பனங்காட்டான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

அரசியலும் சமூக அக்கறையும் சேர்ந்து உருவான படம் தான் “ஆகாயம்” ! தினந்தோறும் நாகராஜ்

அரசியலும் சமூக அக்கறையும் சேர்ந்து உருவான படம் தான் “ஆகாயம்” ! தினந்தோறும் நாகராஜ்

“என்ன விலை” படத்தில் நான் நடித்த கதாப்பாத்திரம் மிகவும் சவாலானது ! கருணாஸ்

“என்ன விலை” படத்தில் நான் நடித்த கதாப்பாத்திரம் மிகவும் சவாலானது ! கருணாஸ்

“என்ன விலை” படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியது எனக்கு கிடைத்த வரம் !

“என்ன விலை” படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியது எனக்கு கிடைத்த வரம் !

“மண்டாடி” மூலம் மாஸ் ஹீரோவான சூரி ! மண்டாடி விமர்சனம்

“மண்டாடி” மூலம் மாஸ் ஹீரோவான சூரி ! மண்டாடி விமர்சனம்

வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகியுள்ள “நல்லபடம்” செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியீடு !

வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகியுள்ள “நல்லபடம்” செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியீடு !

சூர்யா நடித்துள்ள “சீன்” ( SCENE ) படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு !

சூர்யா நடித்துள்ள “சீன்” ( SCENE ) படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு !

“என்ன விலை” படத்தில் நடித்தது மிகவும் சவாலாக இருந்தது ! நடிகை ஷாஷா சிவக்குமார்

“என்ன விலை” படத்தில் நடித்தது மிகவும் சவாலாக இருந்தது ! நடிகை ஷாஷா சிவக்குமார்

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

அசோக் செல்வன் நடித்துள்ள “அன்பில் அவன்” வெளியீட்டு தேதி அறிவிப்பு !

அசோக் செல்வன் நடித்துள்ள “அன்பில் அவன்” வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“வதந்தி சீசன்_2” பற்றி மெய்சிலிர்க்கும் நடிகர் !

“வதந்தி சீசன்_2” பற்றி மெய்சிலிர்க்கும் நடிகர் !

“என்ன விலை” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“என்ன விலை” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

திரைப்பிரபலங்களுக்கு புதிய தீர்ப்பை பெற்றுத்தந்துள்ள நடிகை !

திரைப்பிரபலங்களுக்கு புதிய தீர்ப்பை பெற்றுத்தந்துள்ள நடிகை !

“வைல்ட் தமிழ்நாடு” இன்று முதல் பிவிஆர் திரையரங்குகளில் வெளியீடு !

“வைல்ட் தமிழ்நாடு” இன்று முதல் பிவிஆர் திரையரங்குகளில் வெளியீடு !

“மொத ராத்திரி” படக்குழுவினரின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“மொத ராத்திரி” படக்குழுவினரின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

கமல்ஹாசனின் புதிய படத்தின் “புகைப்படம்” சமூக வலைதளங்களில் வைரல் !

கமல்ஹாசனின் புதிய படத்தின் “புகைப்படம்” சமூக வலைதளங்களில் வைரல் !

நயன்தாராவின் “ஹாய்” படத்தின் விமர்சனம் !

நயன்தாராவின் “ஹாய்” படத்தின் விமர்சனம் !

மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க அலட்சியப்படுத்தும் அரசு அதிகாரிகள் ! நரிக்குறவர் இன மக்களின் போராட்டத்திற்கு தீர்வு எப்போது ?.!

மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க அலட்சியப்படுத்தும் அரசு அதிகாரிகள் ! நரிக்குறவர் இன மக்களின் போராட்டத்திற்கு தீர்வு எப்போது ?.!

“ஒன்ஸ்மோர்” படத்தின் திரைவிமர்சனம்

“ஒன்ஸ்மோர்” படத்தின் திரைவிமர்சனம்

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் மரணம் ! சோகத்தில் கிராம மக்கள் !

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் மரணம் ! சோகத்தில் கிராம மக்கள் !

தந்தை கொலை, பழிவாங்க துடிக்கும் மகள் ! “அமரம்” படத்தின் விமர்சனம்

தந்தை கொலை, பழிவாங்க துடிக்கும் மகள் ! “அமரம்” படத்தின் விமர்சனம்

திருப்பூரில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி தெருநாய்கள் கொடூர கொலை !

திருப்பூரில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி தெருநாய்கள் கொடூர கொலை !

தந்தை, மகன் உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் “ஃபாதர்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

தந்தை, மகன் உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் “ஃபாதர்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

“டாக்ஸிக்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“டாக்ஸிக்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

200 கோடி வசூல் சாதனை படைத்த “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம்

200 கோடி வசூல் சாதனை படைத்த “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம்

“ஒன்ஸ்மோர்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“ஒன்ஸ்மோர்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம் ! தெளிவில்லாத முதல்வரின் அறிவிப்பு !

கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம் ! தெளிவில்லாத முதல்வரின் அறிவிப்பு !

“Yourbackers play” உலகின் லாப நோக்கமற்ற OTT தளம் அறிமுகம் !

“Yourbackers play” உலகின் லாப நோக்கமற்ற OTT தளம் அறிமுகம் !

“இருமுடி கட்டு” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“இருமுடி கட்டு” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குரு சங்கருக்கு கொலை மிரட்டல் !

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குரு சங்கருக்கு கொலை மிரட்டல் !

“ஹலோ மிஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“ஹலோ மிஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

பழனி அருகே “தார் & டீசல்” திருட்டு ! புகார்தாரரை மிரட்டும் காவல் ஆய்வாளர் !.?

பழனி அருகே “தார் & டீசல்” திருட்டு ! புகார்தாரரை மிரட்டும் காவல் ஆய்வாளர் !.?

“அன்பில் அவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு !

“அன்பில் அவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு !

“ஐ ம் கேம்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“ஐ ம் கேம்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“பியார் பிரேமா கல்யாணம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“பியார் பிரேமா கல்யாணம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“பத்தா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“பத்தா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் டிரெய்லருக்கு அமோக வரவேற்பு !

டாக்ஸிக் படத்தின் டிரெய்லருக்கு அமோக வரவேற்பு !

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு !

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“வதந்தி சீசன் 2” குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“வதந்தி சீசன் 2” குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட “பியார் பிரேமா கல்யாணம்” தொடரின் முன்னோட்டம் !

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட “பியார் பிரேமா கல்யாணம்” தொடரின் முன்னோட்டம் !