தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைந்ததும், முதலமைச்சரான ஜோசப் விஜய் பதிவியேற்புவிழா, சட்டசபை உள்ளிட்ட பொது மேடைகளில் பேசும்போது, நாங்கள் ஒரு பைசா ஊழல் செய்ய மாட்டோம். அரசுப் பணத்தை தொடவும் மாட்டோம், தொட்டவர்களையும் விட மாட்டோம் என பேசினார்.
ஆனால் தாம்பரம் மாநகராட்சி ஆணையராக எஸ். பாலச்சந்தர் ஐஏஎஸ் பதவியில் இருந்தபோது, 45.9 லட்சம் ரூபாய் மதிப்பிலான பெருங்களத்தூர் ரவுண்டுட்டானா பாலம் மற்றும் சிட்லபாக்கம் ரவுண்ட்டானா பாலங்களை அழகுபடுத்தும் திட்டங்களுக்கு பொது ஏலத்திற்காக டெண்டர்கள் விடப்பட்டன. ஆனால் டெண்டர் திறக்கப்படுவதற்கு முன்பாகவே பணி முடிக்கப்பட்டு, திறந்து வைத்தார் என அறப்போர் இயக்கத்தினர் குற்றம் சாட்டினர். புகார் எழுந்த சில மணி நேரங்களிலேயே பாலச்சந்தர் ஐஏஎஸ் பணியிட மாறுதல் செய்யப்பட்டு கட்டாய காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டார். இந்த இடமாற்ற உத்தரவின் நகல், Vigilance Commissioner க்கும் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால் பாலசந்தர் ஐஏஎஸ் தற்போது மின்சார துறையில் Joint Managing Director பதவி உயர்வு பெற்று அமர்ந்துள்ளார். இவர்மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்றால், ஏன் பொதுவெளியில் தெரிவிக்கப்படவில்லை, எதற்காக பணியிட மாறுதல் செய்தார்கள் என்கிற கேள்வியும் பொதுவெளியில் எழுந்துள்ளது.




































































































