விஜய் சேதுபதியின் “பத்தா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. படக்குழுவினர், திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

ஸ்டார் ஸ்டுடியோ 18  (Star Studio18) மற்றும் இயக்குநர் அட்லி வழங்கும் இப்படத்தை ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் ( A for Apple Studios) மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்‌ஷன்  Cine1 Studios Production நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. அக்டோபர் 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ள நிலையில், இசை வெளியீட்டு விழாவும் அதற்கு மேலும் வலு சேர்க்கும் வகையில் அமைந்தது.

விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் ஏற்கனவே ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ மற்றும் ‘சீதக்காதி’ ஆகிய படங்களில் இணைந்து பணியாற்றிய இந்தக் கூட்டணி, தற்போது மீண்டும் இணைந்திருப்பதால் படத்தின் கதை மற்றும் உருவாக்கம் குறித்து ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

விழாவில் பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பேசியதாவது.., இந்தப் படம் வாழ்க்கையைப் பார்த்து, வாழ்க்கையிலிருந்து பாடம் கற்று, ஒவ்வொரு நொடியையும் கவனித்து தெளிந்து வரக்கூடிய ஒவ்வொரு மனிதனுக்குமான ஒரு விழிப்புணர்வாக இருக்கும். இந்த உலகம் எப்போதுமே சிக்கலானதுதான். அந்த சிக்கல்களை அறிவாலும் அன்பாலும் புரிந்துகொண்டு கடந்து வரக்கூடியவர்களால்தான் இந்த உலகம் இனிமையானதாக மாறும். அந்த விஷயத்தை ‘பத்தா’ அழகாகப் பேசுகிறது. இந்தப் படம் என்ன என்பதை நான் தெரிந்தவன் என்பதால் இதை உறுதியாகச் சொல்கிறேன்.

பாலாஜி தரணிதரன் கலையை கண்மூடித்தனமாக நேசிக்கும் மனிதர். கலை அவருக்கு தரக்கூடிய வசதிகள் எதுவும் தேவையில்லை; கலை தரக்கூடிய மன அமைதியும் அந்த உயர்ந்த மன மகிழ்ச்சியும் மட்டுமே அவருக்கு போதும். அவருக்காக நான் எதையும் செய்வேன். இந்தப் படத்துக்காக மட்டுமல்ல, இன்னும் நூறு ‘மகளே’ பாடல்கள்கூட எழுதுவேன். இந்த மேடையில் நின்று பேசும்போது, இந்த வாழ்க்கையில் அன்பைத் தாண்டி வேறு எதுவுமே இல்லை என்பது எனக்கு இன்னும் தெளிவாகப் புரிகிறது என்றார்.

ஒளிப்பதிவாளர் செல்வகுமார் பேசியதாவது… அட்லி இந்தப்படம் பற்றி சொன்ன போது முதலில் பாலாஜி சாருக்கு போன் செய்து, ‘உங்க படம் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். நான்  பார்த்த சிறந்த படங்களில் ஒன்றுன்னு சொன்னேன்’. நேரில் வந்து பேசலாம் என்று சொல்லி மூன்று நாட்கள் தொடர்ந்து மீட்டிங் நடந்தது. அதன்பிறகு இந்தப் படத்தில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. பதிமூன்று வருடங்களுக்கு முன்பு ‘ராஜா ராணி’ படத்தில் அசிஸ்டன்ட் ஒளிப்பதிவாளராக பணியாற்றினேன். பதிமூன்று வருடங்களுக்கு முன்பு என்னுடைய நம்பரை சேமித்து வைத்திருந்தவர், இந்தப் படத்துக்காக என்னை அழைத்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாகவும் சந்தோஷமாகவும் இருந்தது. நான் நல்ல படங்களில் பணியாற்றும்போதெல்லாம் அவர் எங்கிருந்தாலும் மெசேஜ் செய்து பாராட்டுவார். அது எனக்கு எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்கும். பாலாஜி சார் இந்தப் படத்தில் நிறைய டேக்குகள் செல்லும் என்று முன்பே சொன்னார். அதற்கேற்ற மாதிரி நாம் வேலை செய்ய வேண்டும் என்றார். படத்தில் பணியாற்றும்போது ஒவ்வொரு லுக் டெஸ்ட்டையும், லுக் அண்ட் ஃபீலையும் முத்துராஜ் சார் உள்ளிட்ட அனைவருடனும் கலந்து பேசி உருவாக்கினோம். அந்த ‘பத்தா’ உலகம் முழுமையாக உருவான பிறகுதான் நாங்கள் ஃப்ளோருக்குச் சென்றோம். நிறைய டேக்குகள் போனாலும் அந்தப் பணியில் ஒரு நல்ல எனர்ஜி இருந்தது. விஜய் சேதுபதி சாரைப் பொறுத்தவரை அவரை நடிப்பு அரக்கன் என்று சொல்வார்கள். அவருடன் முதல் முறையாக பணியாற்றிய எனக்கு அது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. லிஜோமோல் ஜோஸ் வேற லெவலில் பண்ணியிருக்காங்க. அவர்களுடைய கண்களிலேயே நடிப்பு தெரியும். இந்தப் படத்தின் உலகமே கொஞ்சம் வித்தியாசமாக இருக்கும். கதையைப் பற்றி நான் இப்போது எதுவும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இது ஒரு பயங்கரமான நல்ல படமாக இருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார்.

தயாரிப்பாளர் அஜித் அந்தாரே பேசியதாவது… 100-க்கும் மேற்பட்ட படங்களை நாங்கள் தயாரித்திருக்கிறோம். ஆனால் இன்று இந்த மேடையில் நிற்கும்போது, ஒரு மாணவனைப் போல உணர்கிறேன். ஒரு நல்ல மாணவன் எப்போதுமே கற்றுக்கொண்டே இருப்பான். தமிழ் சினிமாவையும், இங்குள்ள படைப்பாளிகளையும் பார்க்கும்போது நாங்கள் வியந்து போகிறோம், காதலிக்கிறோம். ஆனால் உங்களிடமிருந்து கற்றுக்கொள்வது என்பது வேறு விஷயம். நீங்கள் செய்யும் அந்த மேஜிக்கை அப்படியே கற்றுக்கொள்ள முடியாது. அதனால்தான் அட்லியை மும்பைக்கு அழைத்து வந்து எங்களுடைய சூப்பர் ஸ்டார்களை மேலும் வலுப்படுத்த வேண்டியிருக்கிறது. இந்த உறவுக்கு அட்லிதான் மிகப்பெரிய காரணம்.

இந்தப் பயணம் எப்படி தொடங்கியது என்பதும் சுவாரஸ்யமானது. என்னுடைய சக ஊழியர் ஷஹானாவுடன் சேர்ந்து அட்லியுடன் ஏதாவது செய்யலாம் என்று பேசிக்கொண்டிருந்தோம். அப்போது ஒரு தமிழ் ஸ்கிரிப்ட் இருப்பதாக அவர் சொன்னார். எங்களுக்கு தமிழ் தெரியாததால், ‘இந்தக் கதையை எப்படி புரிந்துகொள்வது?’ என்று கேட்டோம். ஆனால் அட்லி, ‘நீங்கள் பாலாஜி சாரின் narration-ஐ மட்டும் கேளுங்கள்’ என்றார். ‘பத்தா’வின் உலகம் படத்தில் உருவாவதற்கு முன்பே பாலாஜி சாரின் narration மூலம் எங்களுக்கு முன்னால் உருவாகிவிட்டது. மொழியின் பல நுணுக்கங்கள் எனக்கு புரியவில்லை என்றாலும், அவர் கதை சொன்ன விதத்தில் சினிமாவின் மொழியும் கதையும் எங்களை சென்றடைந்தது. அந்த narration எங்களை மிகவும் பாதித்தது. ஒரு conference room-ல் கதை கேட்டுக்கொண்டிருக்கும்போது எங்களுக்கு கண்ணீர் வந்தது. அந்த அளவுக்கு பாலாஜி சாரின் narration எங்களை உணர வைத்தது. அதனால்தான் இந்தப் பயணத்தில் இணைந்தோம்.

“அட்லி ஒரு bundle of energy என்றால், அந்த energy-க்கு ஒரு அமைதியான தலைவும் தேவை. அந்த இடத்தில் மும்பையைச் சேர்ந்த என்னுடைய நண்பர் முராத் இருக்கிறார். இந்தப் படம் மூலம் சென்னை மற்றும் மும்பையைச் சேர்ந்த தயாரிப்பாளர்களுக்கு இடையே ஒரு அழகான உறவு உருவாகியிருக்கிறது. விஜய் சேதுபதி சார் குறித்து எங்களுடைய முழு studio team-க்கும் மிகப்பெரிய மரியாதை இருக்கிறது. ‘Super Deluxe’, சமீபத்திய ‘Maharaja’ உள்ளிட்ட அவரது படைப்புகளைப் பார்த்து, ‘இப்படி எப்படி படங்களை செய்கிறார்?’ என்று நாங்கள் வியந்திருக்கிறோம். எங்களுடைய புரிதலுக்கு அப்பாற்பட்ட விஷயங்களை அவர் தொடர்ந்து செய்து வருகிறார். அட்லி தனது மாணவர் பயணத்தைத் தொடங்கிய இடத்திலேயே இன்று இந்தப் படம் தொடர்பான நிகழ்வில் இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.

தயாரிப்பாளர் முராத் கெதானி பேசியதாவது… ‘பத்தா’ எனக்கு மிகவும் சிறப்பான படம். நான் எப்போதுமே தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ரசிகன். அந்த வகையில், Cine1 Studios நிறுவனத்துக்கு இது மிகவும் முக்கியமான ஒரு படி. எங்களுடைய நிறுவனத்தின் முதல் தமிழ் படம் ‘பத்தா’ என்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இதை சாத்தியமாக்கிய அட்லி மற்றும் பிரியா இருவருக்கும் என்னுடைய நன்றி.

“அட்லி, பிரியா இருவருடனும் இது எனக்கு இரண்டாவது கூட்டணி. Star Studios உடனான எனது இரண்டாவது கூட்டணியும் இதுதான். இந்தப் படத்துக்காக என்னுடன் இணைந்து பணியாற்றிய பாலாஜி சார், விஜய் சேதுபதி சார், சாய் அப்யங்கர் மற்றும் அனைத்து துறை தலைவர்களுக்கும் என்னுடைய நன்றி. அஷ்வின் மற்றும் A for Apple குழுவினர், அகான்ஷா, கார்த்திக், Cine1 குழுவைச் சேர்ந்த ஷஹானா, ஜியோ உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி. என்னுடன் இணைந்து இந்தப் படத்தை உருவாக்கிய அஜித் அந்தாரே, பிரியா, அட்லி உள்ளிட்ட சக தயாரிப்பாளர்களுக்கும் நன்றி என்றார்.

பாடலாசிரியர் விவேக் பேசியதாவது… ஒரு உறவை இன்னொரு உறவால் மாற்ற முடியாது. ஒரு உறவு எவ்வளவு சிறப்பானது என்பதை ‘பத்தா’ அழகாகச் சொல்லும். அட்லி இந்தப் படத்தைப் பற்றி என்னிடம் சொன்னபோது, அவர் சொன்ன ஒரே ஒரு வரியே என்னை மிகவும் கவர்ந்தது. விஜய் சேதுபதியின் பயணமும் தமிழ் சினிமாவுக்கு மிகவும் முக்கியமானது. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சூதுகவ்வும்’, ‘பீட்சா’, ‘விக்ரம் வேதா’, ‘விடுதலை’ என தொடர்ந்து சிறந்த படைப்புகளில் பயணித்து வரும் அவர், தனக்கென ஒரு முக்கியமான இடத்தை உருவாக்கியிருக்கிறார். அந்த வரிசையில் ‘பத்தா’வும் சேர வேண்டும் என்று நான் நம்புகிறேன் என்றார்.
வெளிநாடுகளில் பார்த்து வியக்கும் விஷயங்களை நம்முடைய தமிழ் சினிமாவில் உருவாக்கிக்கொண்டிருக்கிறார் அட்லி. ஒவ்வொரு படத்திலும் அவர் வளர்ந்துகொண்டே இருக்கிறார். எங்கள் அனைவருக்கும் அவர் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார். சாய், நானும் ‘பவழமல்லி’, ‘ரதிம்மா’ பாடல்களில் இணைந்து பணியாற்றியிருக்கிறோம். இப்போது ‘பத்தா’ படத்தின் பாடலைக் கேட்டபோது மிகவும் அற்புதமாக இருந்தது. இயக்குநர் எந்தக் களத்தில் பணியாற்ற விரும்பினாரோ, அந்தக் களத்தில் அவருக்கு முழுமையான சுதந்திரம் கொடுத்து வேலை செய்ய வைத்திருக்கிறார்கள். அதற்கான பெருமை தயாரிப்பாளர்களையே சேரும். லிஜோமோல் உள்ளிட்ட சிறப்பான கலைஞர்களும், திறமையான படக்குழுவினரும் இந்தப் படத்தில் இருக்கிறார்கள். ‘பத்தா’ மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று நம்புகிறேன். ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துகள் என்றார்.

இயக்குநர் சிபி சக்கரவர்த்தி பேசியதாவது… பாலாஜி தரணீதரனின் இந்தப் படத்தைப் பார்க்க எனக்கு மிகுந்த ஆர்வம் இருக்கிறது. விஜய் சேதுபதி சார் மாஸ், தீவிரமான நடிப்பு, பொழுதுபோக்கு என எல்லாவற்றையும் ஒரே நேரத்தில் கொடுக்கக்கூடிய மிகச் சில நடிகர்களில் ஒருவர். அவருடைய படங்களுக்கு நான் மிகப்பெரிய ரசிகன். சாய் அபயங்கர் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறார்; நான் இயக்கும் அடுத்த படத்திற்கும் அவர்தான் இசையமைக்கிறார். மிகவும் கடினமாக உழைக்கக்கூடியவர். இன்னும் பல மடங்கு உயர வேண்டும். “பத்தா” படம் தமிழ் சினிமாவில் சமீப காலமாக இருந்த பொழுதுபோக்கு படங்களுக்கான இடைவெளியை நிரப்பும் என்று நம்புகிறேன் என்றார்.

நடிகை லிஜோமோல் ஜோஸ் பேசியதாவது… ‘பத்தா’ எனக்கு பல விதங்களில் மிகவும் சிறப்பான படம். அட்லீ சார் தயாரிப்பு நிறுவனத்திலிருந்து இந்தப் படத்துக்காக எனக்கு அழைப்பு வந்தது முதல், இப்போது இந்த மேடையில் நிற்கும் தருணம் வரை எல்லாமே கனவு போல இருக்கிறது. பாலாஜி சாருடன் பணியாற்றியது உண்மையிலேயே ஒரு சிறந்த அனுபவம். விஜய் சேதுபதி சார், நீங்கள் எனக்கு மிகவும் பிடித்த நடிகர் என்று ஏற்கனவே உங்களிடமே சொல்லியிருக்கிறேன். உங்களுடன் இணைந்து பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நீங்கள் என்னிடம் மிகவும் அன்பாகவும், ஊக்கப்படுத்தும் விதமாகவும் நடந்துகொண்டீர்கள். என்னுடைய நடிப்பைப் பற்றி நீங்கள் பாராட்டிப் பேசியது எனக்கு மிகப்பெரிய விருது கிடைத்தது போன்ற உணர்வைத் தந்தது. இந்த தருணத்தில் எனக்கு ஒன்றை மட்டும் சொல்லத் தோன்றுகிறது. இந்த அழகான ‘பத்தா’ உலகத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். இந்தப் படத்தில் ஒரு பகுதியாக இருந்தது எனக்கு கிடைத்த மிகப்பெரிய மகிழ்ச்சி என்றார்.

இயக்குநர் பாலாஜி தரணீதரன் பேசியதாவது… ‘பத்தா’ படத்தின் கதையை நான் கொரானா ஊரடங்கு காலத்தில்தான் எழுத ஆரம்பித்தேன். இந்தத் திரைக்கதையை முடிக்க எனக்கு நிறைய காலம் எடுத்துக்கொண்டது. முடித்தவுடன் முதலில் சேதுவிடம்தான் கதையைச் சொன்னேன். அவர் அட்லியிடம் கூட்டிப்போனார். அவர் கதை கேட்டதும் அதிக நேரம் எடுத்துக்கொள்ளாமல், உடனே இந்தப் படத்தைப் பண்ணலாம் என்று சொன்னார். அதன்பிறகு தயாரிப்பாளர்கள் முராத் கெதானி சார், அஜித் அந்தாரே சார் ஆகியோரிடம் கதையைச் சொன்னபோதும், அவர்களும் உடனடியாக படத்தைப் பண்ணலாம் என்று சம்மதித்தார்கள். அதனால் இந்தப் படம் உருவான பயணம் எனக்கு மிகவும் எளிமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. படப்பிடிப்புத் தளத்தில் சேதுவும் நானும் மிகவும் நட்பாகப் பழகி, அனைவரும் ரசித்து வேலை செய்யும் சூழலை உருவாக்கினோம். நான் நினைத்த தோற்றத்தையும் கதைக்கான உலகத்தையும் சரியாக திரையில் கொண்டு வந்த ஒளிப்பதிவாளர் செல்வகுமாருக்கு என் நன்றிகள்.

சாய் அபயங்கர் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியிருக்கிறார். எங்களுடைய இசைப் பயணம் வித்தியாசமானது. நான் நினைத்த எல்லைகளைக் கடந்து புதிய விஷயங்களைச் செய்ய வைத்திருக்கிறார்.  பாடல்கள் மட்டுமல்லாமல் பின்னணி இசையையும் அவர் அற்புதமாகச் செய்திருக்கிறார். இந்தப் படத்துக்காக சாய் இன்னும் மிகப்பெரிய உயரங்களை அடைய வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். இந்தப் படத்தில் நடித்த லிஜோமோல், ஹரிகிருஷ்ணன், ஷாந்தி பாலச்சந்திரன், சகஸ்ரா, சாய் பிரித்வி, விஜயகோவிந்த், அர்ஜுன் சர்மா உள்ளிட்ட அனைவரும் படப்பிடிப்புத் தளத்தில் மிகவும் அன்பாகவும், அதே நேரத்தில் மிகுந்த அர்ப்பணிப்புடனும் பணியாற்றினார்கள். அவர்களுடைய நேர்மையான உழைப்பு என்னையும் இன்னும் சிறப்பாக வேலை செய்ய வேண்டும் என்ற பொறுப்புணர்வை ஏற்படுத்தியது. ‘பத்தா’ படத்தை நம்பி இருக்கும் அனைவருக்கும் இந்தப் படம் அந்த நம்பிக்கையை நிறைவேற்றும் வகையில் இருக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பேசியதாவது… நான் ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, அதைவிட ‘சீதக்காதி’ படத்தின் மிகப்பெரிய ரசிகன். அதனால் இந்தப் படத்தின் கதையை இசை மூலம் இன்னும் சிறப்பாக்கலாம் என்ற எண்ணத்தில் உடனே உற்சாகமடைந்தேன்.
“பாலாஜி சார் மிகவும் நேர்மையானவர். என்ன பிடித்திருக்கிறது, என்ன பிடிக்கவில்லை என்பதை முகத்துக்கு நேராகச் சொல்லிவிடுவார். அதனால் அவருடன் பணியாற்றுவது மிகவும் எளிதாக இருந்தது. என்னிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்பதையும் மிகத் தெளிவாகச் சொல்வார். இந்தப் படத்தின் இசை அமர்வுகள் எனக்கு மிகவும் சிறப்பான அனுபவம். பிடித்திருந்தால் அப்படியே பாராட்டுவார்; பிடிக்கவில்லை என்றால் வேறு முயற்சி செய்யலாம் என்பார். அந்த நேர்மையான அணுகுமுறை என்னை இன்னும் சிறப்பாக வேலை செய்ய வைத்தது. இந்த வாய்ப்புக்காக பாலாஜி சாருக்கு நன்றி. இன்னும் பல படங்களில் அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். விஜய் சேதுபதி அண்ணாவின் மிகப்பெரிய ரசிகன் நான். அவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. இந்தப் படத்தின் மூலம் அந்த வாய்ப்பு கிடைத்தது எனக்கு கடவுளின் ஆசீர்வாதம் போல இருக்கிறது. ‘பத்தா’ மீது எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. இந்தப் படம் நிச்சயமாக மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று நம்புகிறேன். இந்தப் படத்தில் பணியாற்றிய ஒவ்வொருவரும் மிகச்சிறப்பாக உழைத்திருக்கிறார்கள். அவர்களுடன் பணியாற்றியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான அனுபவம். ‘பத்தா’ ஒரு நீண்ட காலம் நினைவில் நிற்கும் படமாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருந்ததில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன் என்றார்.

நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது… பாலாஜி தரணீதரனை எனக்கு கிட்டத்தட்ட 15 ஆண்டுகளாகத் தெரியும். ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘ஒரு பக்கக் கதை’, ‘சீதக்காதி’ உள்ளிட்ட அவருடைய படங்களைப் பாருங்கள். இத்தனை ஆண்டுகளாக ஒரு மனிதர் தன்னைச் சுற்றி இருப்பவர்களிடம் அன்பையும் மரியாதையையும் இழக்காமல் இருப்பது பெரிய விஷயம். யாராவது தன்னைப் பாதித்திருந்தாலும் அவர்களைப் பற்றி தவறாகப் பேசாத ஒரு நல்ல மனிதர். அவருக்கு இரண்டு முகங்கள் கிடையாது. அவர் ஒரு அழகான மனிதர். பாலாஜி மாதிரியான ஒருவரால்தான் இந்தப் படத்தை எடுக்க முடியும் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை இருக்கிறது. அவரைப் போன்ற ஒரு நெருக்கமான நண்பர் எனக்கு இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.

லிஜோமோல் இந்தப் படத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். படப்பிடிப்பில் அவருடைய நடிப்பை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் திரையில் பார்த்தபோது, நாங்கள் கணவன், மனைவியாக வாழும் அந்த வாழ்க்கை, வீடு, குழந்தை என அந்த உலகத்துக்குள் அவர் முழுமையாகச் சென்றிருந்தது தெரிந்தது. வீட்டில் இருக்கும் ஒருவரைப் போல அந்த இடத்தையும், பொருட்களையும் அவர் பயன்படுத்திய விதம் மிகவும் இயல்பாக இருந்தது. அதை எப்படி அவர் செய்தார் என்று எனக்கே ஆச்சரியமாக இருந்தது. 

அதேபோல் சாய் அபயங்கர் இந்தப் படத்தில் மிக முக்கியமான பங்கு வகித்திருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் அவர் வேறொரு உயரத்துக்கு சென்றிருக்கிறார். அவருடைய இசை இந்தப் படத்துக்கு மிகப்பெரிய பலம். அதே போல் அந்த சின்னப்பையன் ஆவன், கலக்கியிருக்கிறான். சகஸ்ரா இந்தக் கதையைத் தாங்கிச் செல்லும் மிக முக்கியமான கதாபாத்திரமாக இருக்கிறார். ஆறு, எட்டு மாதங்களுக்கு முன்பு பார்த்த அந்தக் குழந்தை இப்போது எவ்வளவு பெரிய பொறுப்பை ஏற்று நடித்திருக்கிறது என்பதைப் பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அவன் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறான்.

இந்தப் படம் எப்படிப்பட்டதாக இருக்கும், என்ன மாதிரியான கதையாக இருக்கும் என்று உங்களுக்கு நிறைய கேள்விகள் இருக்கலாம். ஒரு பக்கம் விருதுகளைப் பெறும் படம், இன்னொரு பக்கம் மிகப்பெரிய வசூலைப் பெறும் படம் என்று இரண்டையும் எப்படி ஒரே படத்தில் சாத்தியப்படுத்த முடியும் என்ற கேள்வியும் இருக்கலாம். அந்தக் கேள்விகளுக்கெல்லாம் ‘பத்தா’ பதில் சொல்லும் என்று நான் நம்புகிறேன். ஒரு வீரனும், ஒரு அறிவாளியும் சந்தித்தால் அவர்களுக்குள் போட்டி இருக்கும். ஆனால் ஒரு வீரனோ, அறிவாளியோ ஒரு அப்பாவியான மனிதனைச் சந்திக்கும்போது நடக்கும் மாயம் வேறொரு விதமானது. அந்த அப்பாவித்தனத்துக்குள் இருக்கும் அறிவை எவ்வளவு பெரிய சக்தியாலும் வெல்ல முடியாது. அந்த உணர்வுதான் இந்தப் படத்தின் அடிப்படையில் இருக்கிறது என்று நான் நம்புகிறேன். விஷ்ணு, பாலா, ஹரிஷ், அர்ஜுன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். படத்தில் வரும் ஒவ்வொருவரையும் நீங்கள் ரசிப்பீர்கள்.

படத்தைப் பார்த்து முடித்த பிறகு சபரி எனக்கு தொலைபேசியில் அழைத்து, இந்தப் படத்தை ஆஸ்கர் விருதுக்கு அனுப்ப வேண்டும் என்று சொன்னார். அந்த அளவுக்கு ஒருவர் நம்முடைய படத்தை நம்புகிறார் என்பதே எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. இந்தப் படம் அந்த அளவுக்கு சிறப்பாக இருக்கிறது என்று நானும் முழுமையாக நம்புகிறேன். செல்வா உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், பாடலாசிரியர்கள், படக்குழுவினர் அனைவருக்கும் என் நன்றி என்றார்.

இயக்குநர் அட்லீ பேசியதாவது…
‘பத்தா’ எனக்கு ஒரு படம் மட்டுமல்ல. காலம் கடந்தும் நம்மை யோசிக்க வைக்கும் சில படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். அப்பாக்கள், பெண்கள், குழந்தைகள் என அனைவருக்கும் மனிதநேயத்தோடு ஒரு நல்ல மனிதராக எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்தப் படம் சொல்லும். அதே நேரத்தில் இது முற்றிலும் ஒரு புதிய விதமான மாஸ் பொழுதுபோக்கு படமாகவும் இருக்கும். இந்தப் படத்தை தயாரித்து, அஜித் சார் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் உடன் இணைந்து வழங்கியிருப்பதில் மிகவும் மகிழ்ச்சி. முராத் கெதானி சார் எனக்கு குடும்பத்தில் ஒருவரைப் போன்றவர். அவருக்கும் ஜியோ ஸ்டுடியோஸ் குழுவினருக்கும் நன்றி.

பாலாஜி தரணீதரன் போன்ற இயக்குநரை உலக சினிமாவிலேயே தேடினாலும் கண்டுபிடிப்பது கடினம். நம்ம ஊரில் இருக்கும் திறமைகளை நாமே கொண்டாடாமல், வெளியுலகத்தை மட்டுமே பெரிதாகப் பார்க்கிறோம். ஆனால் பாலாஜி போன்ற இயக்குநர்கள் நம்முடைய சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய சொத்து. சாய் அபயங்கரை முதன்முதலில் சந்தித்தபோது அவர் மிகவும் இளம் வயதில் இருந்தார். ஒரு நாளைக்கு ஒரு பாடலை உருவாக்கிவிட்டு அதனுடன் தூங்குவேன் என்று சொன்னார். அவரிடம் இருந்த அந்த ஆர்வத்தைப் பார்த்துதான் அவருடன் பணியாற்ற வேண்டும் என்று முடிவு செய்தேன். இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான், ஹாரிஸ் ஜெயராஜ், யுவன், அனிருத் என ஒவ்வொரு காலகட்டத்துக்கும் ஒரு தனித்துவமான இசையமைப்பாளர் இருப்பதைப் போல, சாய் அபயங்கருக்கும் தனியான ஒரு காலகட்டம் உருவாகும் என்று நான் நம்புகிறேன்.

லிஜோமோல் ஒரு அற்புதமான நடிகை. அவரை இந்தப் படத்தில் பார்த்தபோது, இவ்வளவு திறமையான நடிகையை நாம் இதற்கு முன்பு பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்ற உணர்வு வந்தது. செல்வா என் குறும்பட காலத்திலிருந்தே என்னுடன் பயணித்தவர். நம்முடன் இருப்பவர்களை நன்றாகப் பார்த்துக்கொண்டால், நம்மையும் வாழ்க்கை நன்றாகப் பார்த்துக்கொள்ளும் என்று என் அம்மா சிறுவயதிலிருந்தே சொல்லிக் கொடுத்திருக்கிறார். அந்த நம்பிக்கையில் நான் தேர்ந்தெடுத்தவர்களில் செல்வாவும் ஒருவர். முத்துராஜ் அண்ணா, கார்த்திக் நேதா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி என்றார்.

dhamaraimurasu

dhamaraimurasu

dhamaraimurasu admin

Related Posts

“மண்டாடி” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

அண்மையில் வெளியாகி விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் வெற்றி பெற்றுள்ள படம் ‘மண்டாடி’. இப்படத்தில் சூரி, சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால சரவணன், மிதுன் மற்றும் ஸ்டன் சிவா உள்ளிட்ட பலர்  நடித்திருந்தனர். இயக்குநர் மதிமாறன் புகழேந்தி…

Read more

“கஸ்தூரி வீடு” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

ரென்டெக் ஃபிலிம், லயன் வி ஃபிலிம்ஸ், அன்னை சினிமாஸ்  நிறுவனங்கள் இணைந்து வழங்க, விஜய் ஆர். ஆனந்த்  இயக்கத்தில் சமுத்திரக்கனி, யோகி பாபு, தம்பி ராமையா, டேவிட் டிட்டோ, தனுஜா, ஸ்ரீ வர்ஷத் ஆனந்த், நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம்   ‘கஸ்தூரி…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்கத்தவறிய செய்திகள்

விஜய் சேதுபதியின் “பத்தா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

விஜய் சேதுபதியின் “பத்தா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

பறிபோன மானத்திற்கு “என்ன விலை” என்ன விலை படத்தின் விமர்சனம்

பறிபோன மானத்திற்கு “என்ன விலை” என்ன விலை படத்தின் விமர்சனம்

“மண்டாடி” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“மண்டாடி” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“கஸ்தூரி வீடு” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“கஸ்தூரி வீடு” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

பாவனா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் “பிக்னிக்” படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு !

பாவனா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் “பிக்னிக்” படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு !

துல்கர் சல்மானின் “ஆகாசம்லோ ஓக தாரா” (AOT) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

துல்கர் சல்மானின் “ஆகாசம்லோ ஓக தாரா” (AOT) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

எம்.எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி “எம்.எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்” படத்தின் துவக்க விழா !

எம்.எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி “எம்.எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்” படத்தின் துவக்க விழா !

அர்ஜூன் தாஸ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

அர்ஜூன் தாஸ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

“அன்பில் அவன்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

நானி நடிப்பில் உருவாகியுள்ள “தி பாரடைஸ்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

நானி நடிப்பில் உருவாகியுள்ள “தி பாரடைஸ்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“என்ன விலை” படம் மறக்க முடியாத அனுபவம் ! நிமிஷா சஜயன்

“என்ன விலை” படம் மறக்க முடியாத அனுபவம் ! நிமிஷா சஜயன்

தி டார்க் ஹெவன் படத்தின் முன் வெளியீட்டு விழா !

தி டார்க் ஹெவன் படத்தின் முன் வெளியீட்டு விழா !

“பனங்காட்டான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“பனங்காட்டான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

அரசியலும் சமூக அக்கறையும் சேர்ந்து உருவான படம் தான் “ஆகாயம்” ! தினந்தோறும் நாகராஜ்

அரசியலும் சமூக அக்கறையும் சேர்ந்து உருவான படம் தான் “ஆகாயம்” ! தினந்தோறும் நாகராஜ்

“என்ன விலை” படத்தில் நான் நடித்த கதாப்பாத்திரம் மிகவும் சவாலானது ! கருணாஸ்

“என்ன விலை” படத்தில் நான் நடித்த கதாப்பாத்திரம் மிகவும் சவாலானது ! கருணாஸ்

“என்ன விலை” படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியது எனக்கு கிடைத்த வரம் !

“என்ன விலை” படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியது எனக்கு கிடைத்த வரம் !

“மண்டாடி” மூலம் மாஸ் ஹீரோவான சூரி ! மண்டாடி விமர்சனம்

“மண்டாடி” மூலம் மாஸ் ஹீரோவான சூரி ! மண்டாடி விமர்சனம்

வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகியுள்ள “நல்லபடம்” செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியீடு !

வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகியுள்ள “நல்லபடம்” செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியீடு !

சூர்யா நடித்துள்ள “சீன்” ( SCENE ) படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு !

சூர்யா நடித்துள்ள “சீன்” ( SCENE ) படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு !

“என்ன விலை” படத்தில் நடித்தது மிகவும் சவாலாக இருந்தது ! நடிகை ஷாஷா சிவக்குமார்

“என்ன விலை” படத்தில் நடித்தது மிகவும் சவாலாக இருந்தது ! நடிகை ஷாஷா சிவக்குமார்

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

அசோக் செல்வன் நடித்துள்ள “அன்பில் அவன்” வெளியீட்டு தேதி அறிவிப்பு !

அசோக் செல்வன் நடித்துள்ள “அன்பில் அவன்” வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“வதந்தி சீசன்_2” பற்றி மெய்சிலிர்க்கும் நடிகர் !

“வதந்தி சீசன்_2” பற்றி மெய்சிலிர்க்கும் நடிகர் !

“என்ன விலை” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“என்ன விலை” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

திரைப்பிரபலங்களுக்கு புதிய தீர்ப்பை பெற்றுத்தந்துள்ள நடிகை !

திரைப்பிரபலங்களுக்கு புதிய தீர்ப்பை பெற்றுத்தந்துள்ள நடிகை !

“வைல்ட் தமிழ்நாடு” இன்று முதல் பிவிஆர் திரையரங்குகளில் வெளியீடு !

“வைல்ட் தமிழ்நாடு” இன்று முதல் பிவிஆர் திரையரங்குகளில் வெளியீடு !

“மொத ராத்திரி” படக்குழுவினரின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“மொத ராத்திரி” படக்குழுவினரின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

கமல்ஹாசனின் புதிய படத்தின் “புகைப்படம்” சமூக வலைதளங்களில் வைரல் !

கமல்ஹாசனின் புதிய படத்தின் “புகைப்படம்” சமூக வலைதளங்களில் வைரல் !

நயன்தாராவின் “ஹாய்” படத்தின் விமர்சனம் !

நயன்தாராவின் “ஹாய்” படத்தின் விமர்சனம் !

மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க அலட்சியப்படுத்தும் அரசு அதிகாரிகள் ! நரிக்குறவர் இன மக்களின் போராட்டத்திற்கு தீர்வு எப்போது ?.!

மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க அலட்சியப்படுத்தும் அரசு அதிகாரிகள் ! நரிக்குறவர் இன மக்களின் போராட்டத்திற்கு தீர்வு எப்போது ?.!

“ஒன்ஸ்மோர்” படத்தின் திரைவிமர்சனம்

“ஒன்ஸ்மோர்” படத்தின் திரைவிமர்சனம்

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் மரணம் ! சோகத்தில் கிராம மக்கள் !

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் மரணம் ! சோகத்தில் கிராம மக்கள் !

தந்தை கொலை, பழிவாங்க துடிக்கும் மகள் ! “அமரம்” படத்தின் விமர்சனம்

தந்தை கொலை, பழிவாங்க துடிக்கும் மகள் ! “அமரம்” படத்தின் விமர்சனம்

திருப்பூரில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி தெருநாய்கள் கொடூர கொலை !

திருப்பூரில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி தெருநாய்கள் கொடூர கொலை !

தந்தை, மகன் உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் “ஃபாதர்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

தந்தை, மகன் உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் “ஃபாதர்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

“டாக்ஸிக்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“டாக்ஸிக்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

200 கோடி வசூல் சாதனை படைத்த “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம்

200 கோடி வசூல் சாதனை படைத்த “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம்

“ஒன்ஸ்மோர்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“ஒன்ஸ்மோர்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம் ! தெளிவில்லாத முதல்வரின் அறிவிப்பு !

கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம் ! தெளிவில்லாத முதல்வரின் அறிவிப்பு !

“Yourbackers play” உலகின் லாப நோக்கமற்ற OTT தளம் அறிமுகம் !

“Yourbackers play” உலகின் லாப நோக்கமற்ற OTT தளம் அறிமுகம் !

“இருமுடி கட்டு” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“இருமுடி கட்டு” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குரு சங்கருக்கு கொலை மிரட்டல் !

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குரு சங்கருக்கு கொலை மிரட்டல் !

“ஹலோ மிஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“ஹலோ மிஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

பழனி அருகே “தார் & டீசல்” திருட்டு ! புகார்தாரரை மிரட்டும் காவல் ஆய்வாளர் !.?

பழனி அருகே “தார் & டீசல்” திருட்டு ! புகார்தாரரை மிரட்டும் காவல் ஆய்வாளர் !.?

“அன்பில் அவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு !

“அன்பில் அவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு !

“ஐ ம் கேம்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“ஐ ம் கேம்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“பியார் பிரேமா கல்யாணம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“பியார் பிரேமா கல்யாணம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“பத்தா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“பத்தா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் டிரெய்லருக்கு அமோக வரவேற்பு !

டாக்ஸிக் படத்தின் டிரெய்லருக்கு அமோக வரவேற்பு !

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு !

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“வதந்தி சீசன் 2” குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“வதந்தி சீசன் 2” குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட “பியார் பிரேமா கல்யாணம்” தொடரின் முன்னோட்டம் !

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட “பியார் பிரேமா கல்யாணம்” தொடரின் முன்னோட்டம் !

துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ஆம் கேம்” ( I am Game ) படத்தின் டிரெய்லர் வெளியீடு !

துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ஆம் கேம்” ( I am Game ) படத்தின் டிரெய்லர் வெளியீடு !

வதந்தி சீசன் 2 “தி மிஸ்டரி ஆஃப் மணி” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

வதந்தி சீசன் 2 “தி மிஸ்டரி ஆஃப் மணி” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

“நடு நாடு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“நடு நாடு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“பிரஜாபதி” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“பிரஜாபதி” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

நயன்தாரா, கவின் நடித்துள்ள “ஹாய்” படத்தின் ரசகுல்லா பாடல் வெளியீடு !

நயன்தாரா, கவின் நடித்துள்ள “ஹாய்” படத்தின் ரசகுல்லா பாடல் வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் இரண்டாவது பாடல் “தடுமாறுதே” வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் இரண்டாவது பாடல் “தடுமாறுதே” வெளியீடு !

“அருள்வான்” படத்தின் திரைவிமர்சனம்

“அருள்வான்” படத்தின் திரைவிமர்சனம்

“அன்பே டயானா” திரைப்படத்தின் விமர்சனம்

“அன்பே டயானா” திரைப்படத்தின் விமர்சனம்

கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான “அமரன்” படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் !

கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான “அமரன்” படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் !

“தார்” டீசல் திருட்டை மாவட்டந்தோறும் விரிவுபடுத்தும் பலே கில்லாடி !

“தார்” டீசல் திருட்டை மாவட்டந்தோறும் விரிவுபடுத்தும் பலே கில்லாடி !

பழனி அருகே டீசல், தார் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

பழனி அருகே டீசல், தார் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

“வாழ்க்கையே போராட்டம்” படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் !

“வாழ்க்கையே போராட்டம்” படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் !

“லெட்சுமி காந்தன் கொலை வழக்கு” படத்தின் திரைவிமர்சனம்

“லெட்சுமி காந்தன் கொலை வழக்கு” படத்தின் திரைவிமர்சனம்

ஐ, நோபடி ( I, Nobody ) திரைப்படத்தின் விமர்சனம்

ஐ, நோபடி ( I, Nobody ) திரைப்படத்தின் விமர்சனம்

“ராவ் பகதூர்” ( தெலுங்கு ) திரைப்படத்தின் விமர்சனம்

“ராவ் பகதூர்” ( தெலுங்கு ) திரைப்படத்தின் விமர்சனம்

திண்டுக்கல்லில் பெருகிவரும் கள்ளத் துப்பாக்கி கலாசாரம் ! திணறும் வனத்துறை, கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

திண்டுக்கல்லில் பெருகிவரும் கள்ளத் துப்பாக்கி கலாசாரம் ! திணறும் வனத்துறை, கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

யோகி பாபு நடித்துள்ள “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

யோகி பாபு நடித்துள்ள “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“முதற்கனல்” படத்தின் திரைவிமர்சனம்

“முதற்கனல்” படத்தின் திரைவிமர்சனம்

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

“தாதா தி சவுரவ் கங்குலி ஸ்டோரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“தாதா தி சவுரவ் கங்குலி ஸ்டோரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“வஞ்சி” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“வஞ்சி” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“கட்டா குஸ்தி_2” திரைப்படத்தின் விமர்சனம்

“கட்டா குஸ்தி_2” திரைப்படத்தின் விமர்சனம்

அருள்வான் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

அருள்வான் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“டார்க்” படத்தின் திரைவிமர்சனம்

“டார்க்” படத்தின் திரைவிமர்சனம்

அமெரிக்க தமிழ்ச்சங்க விழாவில் கவனம் ஈர்த்த “திருக்குறள்_2” திரைப்படம் !

அமெரிக்க தமிழ்ச்சங்க விழாவில் கவனம் ஈர்த்த “திருக்குறள்_2” திரைப்படம் !

பிரமாண்டமாக தயாராகும் “திருக்குறள்_2” திரைப்படம் !

பிரமாண்டமாக தயாராகும் “திருக்குறள்_2” திரைப்படம் !

“மனு” திரைப்படத்தின் விமர்சனம்

“மனு” திரைப்படத்தின் விமர்சனம்

“நாகபந்தம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“நாகபந்தம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“லவ் ஓ லவ்” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“லவ் ஓ லவ்” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

பூஜையிடன் படப்பிடிப்பை தொடங்கிய “லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி” படக்குழுவினர் !

பூஜையிடன் படப்பிடிப்பை தொடங்கிய “லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி” படக்குழுவினர் !

பூஜையிடன் துவங்கிய “குட் நியூஸ்” படத்தின் படப்பிடிப்பு !

பூஜையிடன் துவங்கிய “குட் நியூஸ்” படத்தின் படப்பிடிப்பு !

“லவ் ஓ லவ்” படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரித்த டீசர் !

“லவ் ஓ லவ்” படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரித்த டீசர் !

குறும்பட போட்டியில் திறமைசாலிகளை வாழ்த்திய பிரபலங்கள் !

குறும்பட போட்டியில் திறமைசாலிகளை வாழ்த்திய பிரபலங்கள் !

“ஹபீபி” படக்குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா !

“ஹபீபி” படக்குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா !

நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் “சூப்பர் சுப்பு” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் “சூப்பர் சுப்பு” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

திருமுட்டம் அருகே.. தொடரும் மணல் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

திருமுட்டம் அருகே.. தொடரும் மணல் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

“எங்கள் தங்கம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“எங்கள் தங்கம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

வடசென்னையில் தினந்தோறும் 1000 கிலோ ரேசன் அரிசியை கடத்தும் அரசு ஊழியர் சடகோபால் !

வடசென்னையில் தினந்தோறும் 1000 கிலோ ரேசன் அரிசியை கடத்தும் அரசு ஊழியர் சடகோபால் !

திருப்பூரில் மாணவிகளுக்கு ஆபாச கராத்தே பயிற்சி ! கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் கண்டனம்

திருப்பூரில் மாணவிகளுக்கு ஆபாச கராத்தே பயிற்சி ! கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் கண்டனம்

கராத்தே பயிற்சி என ஆபாச வீடியோ வெளியீடு ! வலுக்கும் கண்டனங்கள், கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

கராத்தே பயிற்சி என ஆபாச வீடியோ வெளியீடு ! வலுக்கும் கண்டனங்கள், கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

“மக்கள் தலைவா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“மக்கள் தலைவா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“ஆட்டி” திரைப்படத்தின் விமர்சனம்

“ஆட்டி” திரைப்படத்தின் விமர்சனம்

“நிழல்” திரைப்படத்தின் விமர்சனம்

“நிழல்” திரைப்படத்தின் விமர்சனம்

இஸ்லாமிய குடும்பத்தின் வாழ்வியல் ” ஹபீபி” ! விமர்சனம்

இஸ்லாமிய குடும்பத்தின் வாழ்வியல் ” ஹபீபி” ! விமர்சனம்

ஸ்லம் டாக் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு

ஸ்லம் டாக் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு