“Yourbackers play” உலகின் லாப நோக்கமற்ற OTT தளம் அறிமுகம் !

யுவர்பேக்கர்ஸ் ஃபவுண்டேஷன் (Yourbackers Foundation) தனது ‘யுவர்பேக்கர்ஸ் பிளே’ (Yourbackers Play) என்னும் உலகின் முதல் இலாப நோக்கற்ற OTT (Over-The-Top) டிஜிட்டல் தளத்தை பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது. பொழுதுபோக்கையும், சமூக சேவையையும் இணைக்கும் இந்த முன்னோடி முயற்சியின் மூலம், பயனர்கள் பார்க்கும் ஒவ்வொரு திரையிடலும் நேரடியாக சமூகத்தில் ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும் முயற்சி. இந்த ஓடிடி தளத்தின் நிறுவனர் கிஷோர் ஆதித்யா ஏற்கனவே மனிதம் படத்தை தயாரித்திருக்கிறார். தற்போது மைம் கோபி கதாநாயகனாக நடிக்கும் ஒரு படத்தையும் தயாரித்து வருகிறார்.

இந்த ஓடிடி கலைஞர்கள், பார்வையாளர்கள் மற்றும் திரையுலகினரை ஒன்றிணைத்து, பொழுதுபோக்கை சமூக மாற்றத்திற்கான கருவியாக மாற்றியமைக்கும் ஒரு வரலாற்று முயற்சி. இந்த தளத்தில் இலவசமாக திரைப்படத்தை கண்டுகளிக்கலாம். அதே சமயம் நாம் ஏதாவது பங்களிப்பு செய்ய விரும்பினால் அதையும் நன்கொடையாக தாராளமாக அளிக்கலாம். அந்த தொகையும் ஆதரவற்ற மக்களின் சேவைக்காக பயன்படுத்தப்படும்.

இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க யுவர்பேக்கர்ஸ் பிளே ஓடிடி துவக்க விழா தமிழ் திரையுலகின் முன்னணி பிரபலங்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. முன்னதாக இந்த ஓடிடி தளத்தில் தற்போது காணக் கிடைக்கும் மனிதம், வி3, கோட்டா, மெல்லிசை, தாவுத், ஓ பட்டர் ஃபிளை போன்ற திரைப்படங்களின் டிரைலரும் திரையிடப்பட்டது.

இந்த நிகழ்வில் யுவர்பேக்கர்ஸ் ஓடிடி நிறுவனர் கிஷோர் ஆதித்யா பேசும்போது, இந்த யுவர்பேக்கர்ஸ் பவுண்டேஷன் துவக்கி 6 ஆண்டுகள் ஆகிறது. பாண்டிச்சேரியில் பிளாஸ்டிக்கை ஒழிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டோம். கடலுக்குள் சென்று கடலுக்குள் இருக்கும் பிளாஸ்டிக்கை கிளீன் செய்து கின்னஸ் சாதனை படைத்தோம். பிரதமர் மோடி கூட எங்கள் சேவை குறித்து பாராட்டினார். பெண்கள் மேம்பாட்டிற்கும் தொடர்ந்து உழைத்து வருகிறோம்.

சினிமாவை பொறுத்தவரை விஜய் சேதுபதியின் மாமனிதன் படத்தை நாங்கள் வட ஆற்காடு, தென் ஆற்காடு ஏரியாவில் வினியோகம் செய்தோம். தொடர்ந்து இன்ஃபினிட்டி, கழுமரம் போன்ற படங்களையும், அதனைத் தொடர்ந்து மனிதம் படத்தையும் தயாரித்தோம்.

ஓடிடியிலும் மக்கள் பெரிய படங்களையே பார்க்க விரும்புகிறார்கள், முன் வருகிறார்கள். இந்த நிலையில் எங்கள் ஓடிடியின் மூலம் சின்ன படங்களை பார்க்க வைக்க ஒரு முயற்சி எடுத்திருக்கிறோம். இதில் சப்ஸ்க்ரிப்ஷன் கட்டணம் கிடையாது. இலவசமாக படத்தை பார்க்கலாம். இம்பாக்ட் டிக்கெட் என்ற ஆப்ஷன் உண்டு, அதில் பயனர்கள் விரும்பும் தொகையை அளிக்கலாம். அந்த தொகையிலும் பெரும்பகுதி சமூக சேவைக்கு தான் செல்கிறது. மீதம் உள்ள ஒரு பங்கு திரைப்படம் சம்பந்தப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும். இந்த ஓடிடியில் இன்னொரு SOS சிறப்பு அம்சமும் உண்டு. இது பெரும்பாலும் இரவு நேரங்களில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களையும் தடுக்கும் ஒரு முயற்சி. மேலும் AI மூலம் திரைப்படங்களையும் உருவாக்க இருக்கிறோம். இது அடுத்த கட்டமாக செயல்பாட்டுக்கு வரும்.

அவுட் ரைட் முறையிலும், ஷேர் முறையிலும் படத்தை வாங்கி இந்த ஓடிடியில் வெளியிட இருக்கிறோம். இந்த ஓடிடியின் வளர்ச்சி பல சிறிய படங்களுக்கு நிரந்தர வருமானத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கும். நாம் முயற்சி செய்தால் முடியாதது எதுவும் இல்லை. எதையும் எதிர்பாராமல் நம் கடமையை செய்து வந்தால் நாம் எதிர்பாராத நல்லது நமக்கு நடக்கும் என்றார்.

FEFSI தலைவர் ஆர்.கே.செல்வமணி பேசும்போது, ஓடிடியும் ஒரு தியேட்டர் தான். ஆரம்பத்தில் சினிமாவுக்கு பலம் சேர்க்கும் ஒரு கருவி போல ஓடிடி வந்தது. இப்போது ஓடிடி சினிமாவை கட்டுப்படுத்தும் நிலைக்கு வந்து விட்டது. முன்பு போட்டி போட்டுக் கொண்டு படத்தை வாங்கிய ஓடிடி நிறுவனங்கள் இப்போது படம் வாங்குவதை நிறுத்தி விட்டார்கள். மேலும் அவர்கள் தான் ரிலீஸ் தேதியையே முடிவு செய்கிறார்கள். இப்போது தமிழ் சினிமாவில் எந்த ஒரு ஹீரோவும் ரிலீஸ் தேதியை முடிவு செய்ய முடியாது. அப்படி ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமா இருக்கிறது.

தமிழில் ஒரு ஓடிடி நிறுவனம் துவங்கியது மகிழ்ச்சி. இந்த விழாவுக்கு நான் வருவதற்கு ஒரு முக்கியமான சுய நல காரணமும் உண்டு. இந்த லாபத்தில் 20% தொழிலாளர்களுக்கு தரப் போகிறேன் என கிஷோர் உறுதி அளித்திருக்கிறார். நல்ல தரமான படங்களை வாங்கி ரசிகர்களுக்கு தாருங்கள். அப்போது தான் நிறைய ரசிகர்கள் உங்களை நம்பி வருவார்கள்.

ஒரு திரைப்படம் வெற்றி அடையலாம் அல்லது தோல்வி அடையலாம். ஆனால் தற்போது நிறைய குப்பையான படங்கள் வெளி வருகின்றன. அப்படி இருக்கும் சூழலில் நல்ல படங்களை மட்டுமே வாங்கி வெளியிடுங்கள். தமிழ் சினிமாவில் சுமார் 1000 திரைப்படங்கள் ரிலீஸ் ஆகாமல் முடங்கிக் கிடக்கின்றன. அதில் நிச்சயம் ஒரு 200 நல்ல படங்களாவது இருக்கும். அதை வாங்க முயற்சி செய்யுங்கள். உங்கள் வரவு நல்வரவாகட்டும் என்றார்.

நடிகர் எஸ்.வீ.சேகர் பேசும்போது,
வழக்கமாக சில விழாக்களில் சம்பந்தம் இல்லாதவர்கள் வந்து சம்பந்தம் இல்லாதவற்றை பேசி அது பேசுபொருளாகி விடுகிறது. விழாவின் நோக்கம் மறைந்து விடுகிறது. அப்படி இல்லாமல் இந்த விழாவுக்கு சம்பந்தப்பட்டதை மட்டும் பேசுகிறேன். 6 ஆண்டுகளாக சமூக சேவையில் ஈடுபட்டு வரும் இந்த ஃபவுண்டேஷன் தற்போது லாப நோக்கமற்ற ஓடிடி தளத்தை துவக்கியிருப்பது வரவேற்கத்தக்கது. இந்த ஓடிடியில் கஜானா என்ற ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். வெள்ளை அறிக்கையும் விடுகிறார்கள். பணம் போடுபவர்களுக்கு திரும்ப பணம் வந்தால் தான் அது வியாபாரம். உலகில் எதுவுமே இலவசம் கிடையாது. நல்ல தொழிலாகவும் இது அமைய வேண்டும். நீங்கள் இலவசமாக தருகிறீர்கள் என்பதாலேயே மக்கள் உங்கள் கண்டெண்டை பார்க்க மாட்டார்கள். தரம் மிகவும் முக்கியம், அதற்கேற்ப நல்ல நல்ல கண்டெண்டை பார்த்து வாங்குங்கள். ஓடிடி என்றாலே ஒரு சில முன்னணி நிறுவனங்கள் மட்டுமே கோலோச்சி வருகிறது. அதை தாண்டி ஜெயிக்க வேண்டும். நல்ல அனுபவசாலிகளின் ஆலோசனைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். மக்களின் ரசனைகளை புரிந்து கொண்டு படங்களை எடுங்கள். நீங்கள் செய்யும் சேவையே உங்களை காப்பாற்றும் என்றார்.

நடிகர் போஸ் வெங்கட் பேசும்போது, ஓடிடி என்றாலே பண முதலைகளின் கோட்டை. உலகில் எங்கு சென்றாலும் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம் இருக்கிறது. தமிழ் நாட்டில் ஒரு ஓடிடி வேண்டுமென்றால் அதற்கு அரசு தான் ஏதாவது முன்னெடுப்பு எடுக்க வேண்டும். இதுவரை அப்படி ஒரு முயற்சி எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. நெட்ஃபிளிக்ஸில், அமேசானில் லட்சக்கணக்கான படங்கள் இருக்கின்றன. அனாலும் அதில் எல்லாவற்றையும் நாம் பார்ப்பதில்லை, தேர்வு செய்து தான் பார்க்கிறோம். அது போல தான் மக்களும் தேர்வு செய்து தான் படங்களை பார்ப்பார்கள். அதனால் புதுப்புது கண்டெண்டை கொடுக்க முயற்சி செய்யுங்கள். இளைஞர்களின் கற்பனைகளை எடுத்துக் கொள்ளுங்கள். அது உங்களை நல்ல உயரத்துக்கு எடுத்துச் செல்லும் என்றார்.

நடிகர் மைம் கோபி பேசும்போது,
நான் நடிப்பு சொல்லிக் கொடுக்க தான் கிஷோர் சாரிடம் வந்தேன். அவர் நல்ல விஷயங்களை மட்டுமே பேசுவார். அவர் ஒரு கடும் உழைப்பாளி. எப்போது தூங்குவார் என்பது கூட தெரியவில்லை. திடீரென ஒரு நாள் அவருக்கு நடிக்க வந்த வாய்ப்பை தூக்கி எனக்கு கொடுத்தார். அந்த படத்தில் தான் நான் நடிக்கிறேன். எங்கோ எவரோ ஆரம்பித்த விஷயத்தை நாம் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். முதல் அடியை நாம் என்று எடுத்து வைக்கிறோமோ அன்று தான் சாதனை ஆகிறது. நல்ல ஒரு முயற்சியை முன்னெடுத்திருக்கிறார். அவருக்கு எல்லோரும் ஆதரவு கொடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

தயாரிப்பாளர் மதியழகன் பேசும்போது, பணம் சம்பாதிக்க தான் எல்லோரும் சினிமாவுக்கு வருகிறோம். ஆனால் அப்படி பணம் சம்பாதித்து சேர்த்து வைக்காமல் லாப நோக்கமற்ற ஒரு சேவையை செய்ய முன்வந்திருக்கும் கிஷோர் சாருக்கு வாழ்த்துக்கள். இன்றைய சூழலில் தமிழ் சினிமாவுக்கு மிக முக்கியமான தேவை. நல்ல நோக்கத்திற்கு நன்றி என்றார்.

நடிகர் யூகி சேது பேசும்போது, ஓடிடி என்பது எனக்கு புரியாத விஷயமாகவே இருக்கிறது. பஞ்ச தந்திரம் தியேட்டரில் சாதாரண வெற்றி தான். ஆனா ஓடிடியில் மிகப்பெரிய வெற்றி என்று சொல்கிறார்கள். ரீல்ஸ் பார்த்து பழக்கப்பட்ட இன்றைய இணைய உலகில் எல்லாமே வேகமாக இருக்க வேண்டும் என கேட்கிறார்கள். சினிமா அழகியலே மாறி விட்டது. 100 மார்க் வாங்கினால் தான் பாஸ் என்ற சூழலும் உருவாகியிருக்கிறது. ஏற்கனவே ஓடிடி படங்களை வாங்குவதில்லை. இதில் 8 வாரங்கள் கழித்து தான் படங்களை வெளியிட வேண்டும் என்ற கண்டிஷனை எல்லாம் நாம் போட முடியாது.

சினிமாவில் வெற்றி சதவீதம் எப்போதுமே 10 முதல் 20% தான் இருந்து வருகிறது. கருத்து சொல்ற படம் என்றால் நீங்களே வீட்டில் வைத்துக் கொள்ள வேண்டியது தான். ஜனரஞ்சகம் என்பது மிக முக்கியம். நல்ல படங்களை கொடுங்கள். சினிமா மட்டும் தான் என்ன ஏது என தெரியாமலே டிக்கெட் வாங்கி பார்ப்பார்கள். சினிமாவில் மட்டும் தான் ரீஃபண்ட் கிடையாது. இந்த ஓடிடி மிகப்பெரிய வெற்றியை அடைய வேண்டும் என்றார்.

நடிகர் கூல் சுரேஷ் பேசும்போது,
ஒரே தட்டில் சாப்பிட்டோம் என சொல்வார்கள், ஆனால் நானும் கிஷோர் சாரும் உண்மையிலேயே ஒரே தட்டில் சாப்பிட்டவர்கள் தான். கிஷோர் சார் எவ்வளவோ பேருக்கு உதவிகளை செய்து வருபவர். அவரை ஒரு ஆண் அன்னை தெரஸா என்று கூட சொல்லலாம். அவர் ஆரம்பித்திருக்கும் இந்த ஓடிடி நிறுவனம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன் என்றார்.

இந்த நிகழ்வில் ஆதரவற்ற மற்றும் நலிவடைந்த பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன. மேலும் யுவர்பேக்கர்ஸ் சி இ ஓ ஜான் ஜூலியஸ், இயக்குனர் புருனோ, தயாரிப்பாளர் ஜேகே சரவணன், ஜேகே சதிஷ், ஸ்டார் ஹோம்ஸ் செல்வக்குமார் ஆகியோரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

dhamaraimurasu

dhamaraimurasu

dhamaraimurasu admin

Related Posts

கோவா சர்வதேச திரைப்பட விழா ! சிறப்பு விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட “SCROLL” திரைப்படம் !

K16 ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘Scroll’ திரைப்படம், கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (57th International Film Festival of India – IFFI 2026), ‘Indian Panaroma’ பிரிவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு   ICFT-UNESCO…

Read more

“சத்தியவான் சாவித்திரி” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

Drumsticks Productions மற்றும் Zee Studios நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘சத்தியவான் சாவித்திரி’. வெடிக்காரன்பட்டி S. சக்திவேல் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S. விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்திலும், மிஷ்கின் முக்கியக் கதாபாத்திரத்திலும்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்கத்தவறிய செய்திகள்

காவிரி விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் ! – ஸ்டாலின் அறிவிப்பு

காவிரி விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் ! – ஸ்டாலின் அறிவிப்பு

அச்சுறுத்திய வெடிச்சத்தம் ! அசுர வேகத்தில் சொகுசு காரை இயக்கிய பட்டதாரி இளைஞர்

அச்சுறுத்திய வெடிச்சத்தம் ! அசுர வேகத்தில் சொகுசு காரை இயக்கிய பட்டதாரி இளைஞர்

கோவா சர்வதேச திரைப்பட விழா ! சிறப்பு விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட “SCROLL” திரைப்படம் !

கோவா சர்வதேச திரைப்பட விழா ! சிறப்பு விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட “SCROLL” திரைப்படம் !

அதிகரிக்கும் போதைப்பொருள் நடமாட்டம் ! 700 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் ! 

அதிகரிக்கும் போதைப்பொருள் நடமாட்டம் ! 700 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் ! 

“சத்தியவான் சாவித்திரி” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“சத்தியவான் சாவித்திரி” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“சிட்டுக்குறிஞ்சி” படத்தின் இசை வெளியீட்டு விழா

“சிட்டுக்குறிஞ்சி” படத்தின் இசை வெளியீட்டு விழா

குற்றச் செயல்களில் ஈடுபடும் தவெக நிர்வாகிகளை கைது செய்யாதது ஏன் ?.!

குற்றச் செயல்களில் ஈடுபடும் தவெக நிர்வாகிகளை கைது செய்யாதது ஏன் ?.!

“பிளாக் கோல்டு” விமர்சனம்

“பிளாக் கோல்டு” விமர்சனம்

சர்வதேச விழாக்களில் 7 விருதுகள் வென்ற “வன மடி” திரைப்படம் !

சர்வதேச விழாக்களில் 7 விருதுகள் வென்ற “வன மடி” திரைப்படம் !

“அப்பா குட்டி” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“அப்பா குட்டி” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

பெற்றோர்களே உஷார் ! கராத்தே சங்கங்களுக்கு தடை ! இந்திய ஒலிம்பிக் சங்கம் நடவடிக்கை

பெற்றோர்களே உஷார் ! கராத்தே சங்கங்களுக்கு தடை ! இந்திய ஒலிம்பிக் சங்கம் நடவடிக்கை

கடந்த ஆட்சியைவிட குறைந்த விலைக்கு சைக்கிள் டெண்டர் !

கடந்த ஆட்சியைவிட குறைந்த விலைக்கு சைக்கிள் டெண்டர் !

எம்எல்ஏக்கள் மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன் ? – திமுக

எம்எல்ஏக்கள் மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன் ? – திமுக

அஜய் கார்த்தி, தீபா பாலு நடிக்கும் “ஸ்டேஷன்” திரைப்படம்

அஜய் கார்த்தி, தீபா பாலு நடிக்கும் “ஸ்டேஷன்” திரைப்படம்

“மௌன மொழிகள்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“மௌன மொழிகள்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“மூக்குத்தி அம்மன்_2” விமர்சனம்

“மூக்குத்தி அம்மன்_2” விமர்சனம்

சூர்யாவின் “சீன்” படத்தின் விமர்சனம்

சூர்யாவின் “சீன்” படத்தின் விமர்சனம்

“பௌமா” மற்றும் “டூக்ஸ்” படங்களை ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் தென்னிந்தியாவில் வெளியிடுகிறது

“பௌமா” மற்றும் “டூக்ஸ்” படங்களை ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் தென்னிந்தியாவில் வெளியிடுகிறது

ஆதரவற்றோருடன் தீபாவளி கொண்டாடிய காவல்துறையினர் !

ஆதரவற்றோருடன் தீபாவளி கொண்டாடிய காவல்துறையினர் !

பிறந்தநாளில் “சண்டியர்” படப்பிடிப்பை தொடங்கிய கமல்ஹாசன்

பிறந்தநாளில் “சண்டியர்” படப்பிடிப்பை தொடங்கிய கமல்ஹாசன்

மாநில உரிமையை பாதுகாக்கத் தவறிய அரசு ! – எஸ்டிபிஐ கண்டனம்

மாநில உரிமையை பாதுகாக்கத் தவறிய அரசு ! – எஸ்டிபிஐ கண்டனம்

பெரியார் அறிவுலக புத்தக முறைகேடு புகார் ! நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல் !

பெரியார் அறிவுலக புத்தக முறைகேடு புகார் ! நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல் !

அதிமுக பிரமுகர் மன்னன் காலையில் கைது ! மாலையில் விடுவிப்பு !

அதிமுக பிரமுகர் மன்னன் காலையில் கைது ! மாலையில் விடுவிப்பு !

சூப்பர் ஸ்டார் நடிக்கும் “தர்மன்” திரைப்படத்தில் இணைந்த நடிகை ஶ்ரீ லீலா

சூப்பர் ஸ்டார் நடிக்கும் “தர்மன்” திரைப்படத்தில் இணைந்த நடிகை ஶ்ரீ லீலா

உ.வே.சா நூலகத்தில் ஆய்வு செய்த நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் !

உ.வே.சா நூலகத்தில் ஆய்வு செய்த நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் !

பல்லடத்தில் விதிமீறி கட்டப்படும் பிரபல நகைக்கடை கட்டிடம் ! கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம் !

பல்லடத்தில் விதிமீறி கட்டப்படும் பிரபல நகைக்கடை கட்டிடம் ! கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம் !

சோதனைகளை கடந்து.. விடாமுயற்சியால் நாட்டிற்காக இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற சிம்ரன் !

சோதனைகளை கடந்து.. விடாமுயற்சியால் நாட்டிற்காக இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற சிம்ரன் !

35 நாட்களுக்கு முன் காணாமல் போன பெண் குழந்தையை மீட்ட போலீசார் !

35 நாட்களுக்கு முன் காணாமல் போன பெண் குழந்தையை மீட்ட போலீசார் !

அகவிலைப்படி உயர்வால், உற்சாகத்தில் மத்திய அரசு ஊழியர்கள் !

அகவிலைப்படி உயர்வால், உற்சாகத்தில் மத்திய அரசு ஊழியர்கள் !

“லவ் 3 ஓ” படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு !

“லவ் 3 ஓ” படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு !

யோகி பாபுவின் “அர்ஜூனன் பேர் பத்து” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

யோகி பாபுவின் “அர்ஜூனன் பேர் பத்து” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

“ஹைக்கூ” படத்தின் விமர்சனம்

“ஹைக்கூ” படத்தின் விமர்சனம்

கௌதம்மேனனின் 25 ஆண்டுகள் திரையுலக பயணம் ! கோலாலம்பூரில் இசைக் கொண்டாட்டம்

கௌதம்மேனனின் 25 ஆண்டுகள் திரையுலக பயணம் ! கோலாலம்பூரில் இசைக் கொண்டாட்டம்

யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள “சிங்காரம்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள “சிங்காரம்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

பெண்களின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் “ஹைக்கூ” திரைப்படம் ! – நடிகை ஃபெமினா ஜார்ஜ்

பெண்களின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் “ஹைக்கூ” திரைப்படம் ! – நடிகை ஃபெமினா ஜார்ஜ்

“ஹைக்கூ” ஒரு ஃபீல் குட் எண்டர்டெயின்மெண்ட் திரைப்படம் !

“ஹைக்கூ” ஒரு ஃபீல் குட் எண்டர்டெயின்மெண்ட் திரைப்படம் !

திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ! “ஹைக்கூ” பட தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி !

திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ! “ஹைக்கூ” பட தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி !

“ஹைக்கூ” படத்தில் மௌனமாக ஒரு கதாப்பாத்திரமாகவே பயணிக்கும் இசை !

“ஹைக்கூ” படத்தில் மௌனமாக ஒரு கதாப்பாத்திரமாகவே பயணிக்கும் இசை !

ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் “ஹைக்கூ”. – நடிகர் ஏகன்

ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் “ஹைக்கூ”. – நடிகர் ஏகன்

அமைச்சர் பதவிக்காக அடிப்படை கொள்கையிலிருந்து விலகி நிற்கும் விசிக ! – பனையூர் பாபு

அமைச்சர் பதவிக்காக அடிப்படை கொள்கையிலிருந்து விலகி நிற்கும் விசிக ! – பனையூர் பாபு

குற்றச்சாட்டு எழுந்ததால் பணியிடை மாற்றம் ! உடனடியாக பதவி உயர்வு கொடுத்ததன் பின்னனி என்ன ?.!

குற்றச்சாட்டு எழுந்ததால் பணியிடை மாற்றம் ! உடனடியாக பதவி உயர்வு கொடுத்ததன் பின்னனி என்ன ?.!

நகைச்சுவை கலந்த வித்தியாசமான காதல் கதை !

நகைச்சுவை கலந்த வித்தியாசமான காதல் கதை !

“மெர்சல்” படத்தின் பணப்பரிவர்த்தனை விவகாரம் ! நடிகை ஶ்ரீ பிரியா நிறுவனத்திற்கு வெற்றி !

“மெர்சல்” படத்தின் பணப்பரிவர்த்தனை விவகாரம் ! நடிகை ஶ்ரீ பிரியா நிறுவனத்திற்கு வெற்றி !

கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளில் “அக்கா” தொடரின் டீசர் வெளியானது !

கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளில் “அக்கா” தொடரின் டீசர் வெளியானது !

“சட்டமும் நீதியும் 2” தொடரின் டிரெய்லரை வெளியிடப்பட்டது தமிழ் ZEE 5 !

“சட்டமும் நீதியும் 2” தொடரின் டிரெய்லரை வெளியிடப்பட்டது தமிழ் ZEE 5 !

சந்தீப் கிஷன் நடிக்கும் “கரிகாலா” திரைப்படம் பூஜையுடன் ஆரம்பம் !

சந்தீப் கிஷன் நடிக்கும் “கரிகாலா” திரைப்படம் பூஜையுடன் ஆரம்பம் !

துல்கர் சல்மானின் “ஏ ஓ டி” ( AOT ) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

துல்கர் சல்மானின் “ஏ ஓ டி” ( AOT ) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“ஸ்லம் டாக்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு, வெளியீட்டு தேதி விரைவில்..

“ஸ்லம் டாக்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு, வெளியீட்டு தேதி விரைவில்..

தேவா மண்ணை விட்டு மறைந்தாலும், அவரது தேனிசை தென்றல் காற்று வீசுவது நிற்காது ! – முக ஸ்டாலின்

தேவா மண்ணை விட்டு மறைந்தாலும், அவரது தேனிசை தென்றல் காற்று வீசுவது நிற்காது ! – முக ஸ்டாலின்

“ராமாயணா” படத்தின் புதிய சர்வதேச டிரெய்லர் வெளியானது !

“ராமாயணா” படத்தின் புதிய சர்வதேச டிரெய்லர் வெளியானது !

“சிக்னல் அட் 11.30” படத்தின் “ஜோ ஜோ மாமா” பாடல் வெளியீடு !

“சிக்னல் அட் 11.30” படத்தின் “ஜோ ஜோ மாமா” பாடல் வெளியீடு !

“இது நம்ம குடும்பம்” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“இது நம்ம குடும்பம்” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“ஹபீபி” படக்குழுவினருக்கு பாராட்டுவிழா !

“ஹபீபி” படக்குழுவினருக்கு பாராட்டுவிழா !

ஊர்வசி நடிப்பில் உருவாகியுள்ள “ஆஷா” திரைப்படம் அக்டோபர் 16 முதல் மலையாளம் ஜீ_5 ல் வெளியாகிறது

ஊர்வசி நடிப்பில் உருவாகியுள்ள “ஆஷா” திரைப்படம் அக்டோபர் 16 முதல் மலையாளம் ஜீ_5 ல் வெளியாகிறது

சூரியின் புதிய திரைப்படத்த கிளாப் அடித்து துவக்கி வைத்த சிவகார்த்திகேயன் !

சூரியின் புதிய திரைப்படத்த கிளாப் அடித்து துவக்கி வைத்த சிவகார்த்திகேயன் !

“டோரதி” திரைப்படம் நான் எதிர்பார்த்த அங்கீகாரம் பெற்றுத் தந்துள்ளது. ஜீவா சுப்பிரமணியம் !

“டோரதி” திரைப்படம் நான் எதிர்பார்த்த அங்கீகாரம் பெற்றுத் தந்துள்ளது. ஜீவா சுப்பிரமணியம் !

டுபாக்கூர் முதலமைச்சரும், கூடுதல் விலைக்கு மின்சார கொள்முதலும் ! – உதயநிதி விமர்சனம்

டுபாக்கூர் முதலமைச்சரும், கூடுதல் விலைக்கு மின்சார கொள்முதலும் ! – உதயநிதி விமர்சனம்

அ,தி,மு,கவை த,வெ,க வின் சார்பு இயக்கமாக மாற்ற நினைக்கும் வேலுமணி ! கட்சியை காப்பாற்ற கூட்டுத் தலைமை அவசியம் !

அ,தி,மு,கவை த,வெ,க வின் சார்பு இயக்கமாக மாற்ற நினைக்கும் வேலுமணி ! கட்சியை காப்பாற்ற கூட்டுத் தலைமை அவசியம் !

“ஜெய்” நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் !

“ஜெய்” நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் !

“E 1” படத்தின் விமர்சனம்

“E 1” படத்தின் விமர்சனம்

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழாவில் 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழாவில் 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழா ! ஓவியர் ஜீவானந்தனுக்கு 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழா ! ஓவியர் ஜீவானந்தனுக்கு 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு 13.78 லட்சம் நிதியுதவி !

கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் “ஊர் கூடும் இரவு” ஆவணப்படம் !

கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் “ஊர் கூடும் இரவு” ஆவணப்படம் !

“ஆல்பாஸ்” விமர்சனம்

“ஆல்பாஸ்” விமர்சனம்

“தாய்நிலம்” விமர்சனம்

“தாய்நிலம்” விமர்சனம்

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

அதிமுகவின் பலவீனமா ? த.வெ.க வினரின் மோசடியா ?

அதிமுகவின் பலவீனமா ? த.வெ.க வினரின் மோசடியா ?

“அமெரிக்க ஆவி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“அமெரிக்க ஆவி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

அட்லான்டா இந்தியத் திரைப்பட விழாவில் “என்ன விலை” படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது !

அட்லான்டா இந்தியத் திரைப்பட விழாவில் “என்ன விலை” படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது !

நலிவுற்ற திருநங்கைகளுங்கு நிதியுதவி வழங்கிய “டோரதி” படக்குழு !

நலிவுற்ற திருநங்கைகளுங்கு நிதியுதவி வழங்கிய “டோரதி” படக்குழு !

“அன்பில் அவன் படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“அன்பில் அவன் படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“பத்தா” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“பத்தா” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

நாள்தோறும் நற்பணி ! ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன்

நாள்தோறும் நற்பணி ! ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன்

“ஒட்டாரம்” திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு !

“ஒட்டாரம்” திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு !

“சிக்மா” படத்தில் அறிமுகமானது எனக்கு பெருமை ! நடிகை ஃபரியா அப்துல்லா

“சிக்மா” படத்தில் அறிமுகமானது எனக்கு பெருமை ! நடிகை ஃபரியா அப்துல்லா

“அன்பில் அவன்” படத்தின் விமர்சனம்

“அன்பில் அவன்” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த நடிகர் !

“சிக்மா” படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த நடிகர் !

“பத்தா” படத்தின் விமர்சனம்

“பத்தா” படத்தின் விமர்சனம்

இயக்கமா ? நடிப்பா ? “சிக்மா” இயக்குநர் பேட்டி !

இயக்கமா ? நடிப்பா ? “சிக்மா” இயக்குநர் பேட்டி !

கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான் “சிக்மா” – இயக்குநர் சஞ்சய்

கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான் “சிக்மா” – இயக்குநர் சஞ்சய்

“தி டார்க் ஹெவன் படத்தின் வெற்றிக்கு, சொந்த ஊரில் விழா எடுத்த இயக்குநர் !

“தி டார்க் ஹெவன் படத்தின் வெற்றிக்கு, சொந்த ஊரில் விழா எடுத்த இயக்குநர் !

தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய பிரபல நடிகரின் மனைவி !

தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய பிரபல நடிகரின் மனைவி !

“கோல்டன் பாக்கியம்” டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு !

“கோல்டன் பாக்கியம்” டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு !

“கிட்டி” படத்தின் விமர்சனம்

“கிட்டி” படத்தின் விமர்சனம்

“த்ரிஷ்யம்_3” படத்தின் இந்தி பதிப்பை வெளியிட தடை கோரி வழக்கு !

“த்ரிஷ்யம்_3” படத்தின் இந்தி பதிப்பை வெளியிட தடை கோரி வழக்கு !

நான்கு மாநில டிஜிட்டல் & தொலைக்காட்சி துறைகளை ஒருங்கிணைக்கும் முயற்சி !

நான்கு மாநில டிஜிட்டல் & தொலைக்காட்சி துறைகளை ஒருங்கிணைக்கும் முயற்சி !

“துரோகம் பழகு படத்தின் டீசர் வெளியீட்டு விழா !

“துரோகம் பழகு படத்தின் டீசர் வெளியீட்டு விழா !

25 மாவட்டங்கள், 2 ஆயிரம் ரசிகர்கள் ! நடிகர் சூர்யா தலைமையில் பிரமாண்டமான விழா !

25 மாவட்டங்கள், 2 ஆயிரம் ரசிகர்கள் ! நடிகர் சூர்யா தலைமையில் பிரமாண்டமான விழா !

மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள “மக்கள் காவலன்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள “மக்கள் காவலன்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“பூஜா மேரி ஜான்” திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ஜீ_5 ஹிந்தியில் வெளியாகிறது

“பூஜா மேரி ஜான்” திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ஜீ_5 ஹிந்தியில் வெளியாகிறது

சாதிய வன்மத்தை விதைக்கும் “தி கிராண்ட் மாஸ்டர்” ! படத்தின் விமர்சனம்

சாதிய வன்மத்தை விதைக்கும் “தி கிராண்ட் மாஸ்டர்” ! படத்தின் விமர்சனம்

“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“#LOVE” வெப் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“#LOVE” வெப் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“தாய்நிலம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

“தாய்நிலம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

தனுஷின் ( D_56 ) புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

தனுஷின் ( D_56 ) புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

“ஏழு கடல் ஏழு மலை” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“ஏழு கடல் ஏழு மலை” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“டோரதி” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“டோரதி” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“தி டார்க் ஹெவன்” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“தி டார்க் ஹெவன்” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !