“ஒன்ஸ்மோர்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில், நடிகர் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் இணைந்து நடித்திருக்கும் திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. காதல், உணர்வுகள் மற்றும் பொழுதுபோக்கை மையமாகக் கொண்ட படைப்பாக உருவாகியுள்ளது. இதில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் ஆகியோருடன், பிரபல மாடல் சோனா ஒலிக்கல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். வரும் ஆகஸ்ட் 28 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில்  இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்து கொள்ள கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில் இயக்குநர்  தயாரிப்பாளர் இரா சரவணன் பேசியதாவது.., ஆகஸ்ட் 28ஆம் தேதி ‘அன்பே டயானா’ ஓடிடியிலும், ‘ஒன்ஸ்மோர்’ திரையரங்குகளிலும் வெளியாகிறது. இந்த நாள் என் நண்பர் தயாரிப்பாளர் யுவராஜுக்கு மிக முக்கியமான நாள். ‘அன்பே டயானா’ படத்தில்  என்னுடைய பணி எதுவும் இல்லாவிட்டாலும் என்னையும் தயாரிப்பாளராக இணைத்துக்கொண்ட அவரது அன்பை நான் எப்போதும் மதிக்கிறேன். ‘ஒன்ஸ்மோர்’ படத்தைப் பார்த்தபோது, கவிதை போல அவ்வளவு அழகாக இருந்ததால் எங்கேயாவது என் பெயரைப் போட்டுவிடுங்கள் என்று அவரிடம் கெஞ்சினேன்.

அர்ஜுன் தாஸ் வில்லனாக நடித்தாலே எனக்கு பிடிக்கும். ஆனால் இந்தப் படத்தில் கதாநாயகனாக, ஹீரோவாக அவர் கலக்கியிருக்கிறார். . அவருடைய அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. அதிதி ஷங்கர் எனக்கு மிகவும் பிடித்த நடிகை. இயக்குநர் ஷங்கரின் மகள் நடிக்க வருகிறார் என்று தெரிந்தபோது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டது. அவர் அறிமுகமாகும்போது சிவகார்த்திகேயனிடம் பேசி, அவருடன் இணைந்து அறிமுகமானால் நன்றாக இருக்கும் என்று சொன்னேன். பின்னர் அவர் சிவகார்த்திகேயன் படத்தில் அறிமுகமாகி நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்தப் படத்திலும் அதிதி மிக அற்புதமான நடிப்பை வழங்கியிருக்கிறார். தயாரிப்பாளர் யுவராஜ் எனக்கு மிகச் சிறந்த நண்பராக மாறியிருக்கிறார். அவருடைய நட்பு கிடைத்த பிறகு என்னுடைய மற்ற நண்பர்கள் எல்லாம் மறைந்துவிட்டார்கள் என்று சொல்லும் அளவுக்கு அத்தனை நெருக்கமான நண்பராகிவிட்டார்.
ரசிகர்கள் திரையரங்கில் ‘ஒன்ஸ்மோர்’ என்று கேட்கும் அளவுக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும். என் நெருங்கிய நண்பர் யுவராஜுக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தர வேண்டும் என்றார்.

நடிகை கலா பேசியதாவது..,
ஒன்ஸ்மோர்’ திரைப்படம் எனக்கு என்னுடைய கல்லூரி நாட்களை நினைவுபடுத்தியது. ‘என்னுடைய கல்லூரி நாட்களும் இப்படி இருந்திருக்கலாமே’ என்று ஏங்க வைக்கும் அளவுக்கு இப்படம் பல நினைவுகளை ஏற்படுத்தியது. ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படம் என்றும் மறக்க முடியாத கல்லூரி நினைவுகளைப் போல இருக்கிறது. இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் அதை மிகச் சிறப்பாக இயக்கியிருக்கிறார்.
அர்ஜுன் தாஸை வில்லனாகப் பார்த்தாலே எனக்கு பிடிக்கும். இந்தப் படத்தில் அவர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். அதிதி எனக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவர். அவரும் அழகாக நடித்திருக்கிறார். இந்தத் திரைப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என்னுடைய நன்றிகள் என்றார்.

இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் பேசியதாவது..,
மலையாளத்தில் ‘ஹிருதயம்’ திரைப்படத்திற்குப் பிறகு, தமிழில் நான் மிகவும் எஞ்சாய் செய்து பணியாற்றிய திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. தமிழில் என் முதல் படம்,  இப்படத்தின் ஆல்பம் முழுவதிலும் மிகுந்த கொண்டாட்டத்துடன் உழைத்தோம்.அனைவரும் எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய ஒரு அழகான கதையை இயக்குநர் மிகச் சிறப்பாக உருவாக்கியிருக்கிறார். படத்தில் பணியாற்றிய அனைவருமே மிகச் சிறப்பாக உழைத்திருக்கிறார்கள்.
என்னுடன் பணியாற்றிய இசைக்கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. பாடல்களை எழுதிய கவிஞர் ஸ்ரீகாந்துக்கும் எனது நன்றிகள். இப்படத்தின் பாடல்களை ரசிகர்கள் ஏற்கனவே கொண்டாடி வருகின்றனர். இந்தப் பாடல்கள் காலம் கடந்தும் ரசிகர்களால் ரசிக்கப்படும் என்று நம்புகிறேன் என்றார்.

நடிகை சோனா பேசியதாவது..,
இன்று எனக்கு மிகவும் முக்கியமான நாள். ‘ஒன்ஸ்மோர்’ திரைப்படத்திற்காக நான் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருந்தேன். இப்படத்தில் எனக்கு மிகவும் முக்கியமான இந்திரா கதாபாத்திரத்தை வழங்கிய இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் மற்றும் தயாரிப்பாளர் யுவராஜ் அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். அர்ஜுன் தாஸ் எனக்கு மிகவும் ஆதரவாக  இருந்தார். நிறைய சாப்பாடு கொடுத்து என்னை சந்தோஷப்படுத்தினார். அதேபோல் அதிதியும் படப்பிடிப்பின் முதல் நாளிலிருந்தே எனக்கு மிகச் சிறந்த தோழியாக இருந்தார். அவருக்கும் எனது நன்றிகள். இப்படத்தில் உழைத்த அனைத்து நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கண்டிப்பாக இப்படம் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் பேசியதாவது.., இந்த மேடைக்காக நான் பல காலமாக காத்திருக்கிறேன். நானும் இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்தும் இதற்காகத்தான் காத்துக் கொண்டிருந்தோம். இப்படத்திற்கு பல வெளியீட்டுத் தேதிகளைத் நிர்ணயித்தும், சில காரணங்களால் அது சரியாக அமையாமல் போனது. ஆனால் இம்முறை ஆகஸ்ட் 28ஆம் தேதி படம் திரைக்கு வருவது உறுதியாகிவிட்டது. இயக்குநர் கதை சொன்ன நொடியில் இருந்து, ஒவ்வொரு காட்சியிலும் ஏதாவது வித்தியாசமாக செய்ய வேண்டும் என்ற துடிப்புடன் பணியாற்றினார். அவரது திறமைக்கு இப்படம் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகவும், அவருக்கு ஒரு முக்கியமான அடையாளமாகவும் இருக்கும்.

இது ஒரு மியூசிக்கல் படம் என்பதால் இசையமைப்பாளர் குறித்து பலருடன் விவாதித்தோம். இறுதியில் ‘ஹிருதயம்’ படத்தின் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாபை சந்தித்து இப்படத்தை ஒப்புக்கொள்ளச் சொன்னோம். அவர் நாங்கள் எதிர்பார்த்ததைவிட மிகச் சிறப்பான இசையை வழங்கியிருக்கிறார். அவரது இசையை ரசிகர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள்.அதிதி ஷங்கர் இப்படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ‘மாவீரன்’ படத்தைப் பார்த்த பிறகு அவரை அணுகினோம். அந்தப் படத்தில் அவர் பெற்ற சம்பளத்துடன் ஒப்பிடும்போது, இப்படத்திற்காக மிகவும் குறைவான சம்பளத்தில் நடித்து, எங்களுக்கு மிகச் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கினார். அவருக்கு எனது நன்றிகள்.

அதேபோல் அர்ஜுன் தாஸ் இல்லாமல் இந்தப் படமே இல்லை. அவருடைய அர்ப்பணிப்பும் ஆதரவும் இப்படத்தின் மிகப்பெரிய பலம். இது அவருக்கு மிகவும் முக்கியமான பிடித்தமான படம். அவரும் இப்படத்தை மிகவும் ரசித்து நடித்திருக்கிறார். கால்ஷீட் உள்ளிட்ட எதைப் பற்றியும் கவலைப்படாமல், நாங்கள் அழைத்தபோதெல்லாம் வந்து முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றினார். இவர்கள் அனைவரின் அர்ப்பணிப்பும் உழைப்பும்தான் ‘ஒன்ஸ்மோர்’ படத்தின் பலம். எனக்கு ஆதரவாக இருந்த இயக்குநரும் தயாரிப்பாளருமான இரா சரவணன் அவர்களுக்கும், என்னுடன் இருந்து உழைத்த என்னுடைய குழுவினர் அனைவருக்கும் எனது நன்றிகள் என்றார்.

இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்த் பேசியதாவது.., இந்த நாளுக்காக நான் பல காலமாகக் காத்திருந்தேன். அழுவதற்கு காலம் வந்தால் மகிழ்ச்சியாக இருக்கவும் ஒரு காலம் வரும். அந்த மகிழ்ச்சியான காலம் இதுதான். ஆகஸ்ட் 28ஆம் தேதி ‘ஒன்ஸ்மோர்’ திரைக்கு வருகிறது.
இந்தத் திரைப்படத்தை இயக்குநர் மணிரத்னம் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். அவருடைய படங்களைப் பார்த்துதான் நான் இயக்குநராக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அவருக்கான என்னுடைய லவ் லெட்டர்தான் இந்தத் திரைப்படம். இப்படத்திற்காக ஆதரவு அளித்த என்னுடைய அப்பா, அம்மா, உறவினர்கள், திரைத்துறை நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. என்னுடன் பயணித்து இப்படத்தைத் தயாரித்த தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.

இப்படத்தை எழுத ஆரம்பித்த முதல் நாளிலிருந்தே என் மனதில் இருந்த ஒரே நடிகர் அர்ஜுன் தாஸ். ரகு கதாபாத்திரமாக அவரை மனதில் வைத்துதான் எழுதினேன். அவர் இப்படத்தில் ரகுவாக முழுமையாக வாழ்ந்திருக்கிறார். நான் எதிர்பார்த்ததைவிட எடிட்டிங்கில் அவருடைய நடிப்பு இன்னும் புதிதாகவும் அற்புதமாகவும் இருந்தது. அதேபோல் அதிதி ஷங்கர் அவர்களுக்கும் நன்றி. படப்பிடிப்பில் பல சிரமங்களுக்கு இடையிலும் எங்களுடன் இணைந்து முழு ஆதரவு கொடுத்து மிக அற்புதமாக நடித்துக் கொடுத்தார். இந்திரா கதாபாத்திரத்தில் நடித்துள்ள சோனாவுக்கும் நன்றி. அவருக்கும் எனக்கும் இதுதான் அறிமுகத் திரைப்படம். பல காலமாக நாங்கள் இருவரும் இந்த நாளுக்காகக் காத்திருந்தோம். இறுதியாக அந்த நாள் வந்ததில் மகிழ்ச்சி.

இப்படத்தின் இசை மிகவும் முக்கியமானது. ‘ஹிருதயம்’ படத்தின் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அவரது இசை படத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது. காட்சிகளையும் இசையையும் தனித்தனியாகப் பிரித்துப் பார்க்க முடியாத அளவுக்கு அழகாக ஒன்றோடு ஒன்று இணைந்திருக்கிறது. ஒளிப்பதிவாளர், எடிட்டர் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும், என்னுடைய உதவி இயக்குநர்களுக்கும் நன்றி. இது என்னுடைய முதல் திரைப்படம். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

நடிகை அதிதி ஷங்கர் பேசியதாவது.., முதலில் தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் அவர்களுக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். ‘ஒன்ஸ்மோர்’ போன்ற ஒரு திரைப்படத்தை திரையில் கொண்டு வந்ததற்கும், விக்னேஷ் ஸ்ரீகாந்த் போன்ற ஒரு திறமையான இயக்குநரை அறிமுகப்படுத்தியதற்கும் அவருக்கு நன்றி.

நான் வாழ்க்கையில் மிகவும் கடினமான காலகட்டத்தில் இருந்தபோது இந்தத் திரைப்படம் எனக்கு கிடைத்தது. அந்த நேரத்தில் படப்பிடிப்புக்கு வந்து அஞ்சலியாக வாழ்ந்த ஒவ்வொரு நாளும் என்னை மனதளவில் மருந்தாக அமைந்து உற்சாகப்படுத்தியது. எனக்கு மிகப்பெரிய உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் கொடுத்தது. அதனால் இந்தப் படம் எனக்கும் மிகவும் முக்கியமானது.

இப்படத்தின் இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப், ‘ஹிருதயம்’ படத்தின் மூலம் எனக்கு மிகவும் பிடித்தவர். இந்தப் படத்தில் எனக்காக ஒரு அழகான பாடலைக் கொடுத்திருக்கிறார். அந்தப் பாடல் என் மனதிற்கு மிகவும் பிடித்த பாடல். இப்படத்தில் நடித்திருக்கும் சோனா மிகவும் அற்புதமான நடிகை. அவருடைய நடிப்பை நான் மிகவும் ரசித்தேன். அவருக்கு இன்னும் பல நல்ல வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
அர்ஜுன் தாஸை முதன்முதலில் அனிருத் கான்சர்ட்டில் பார்த்தபோது, ரசிகையாக அவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அப்போது அவர் என்னைப் பார்த்து சிரித்தார். இப்போது அவருடன் இணைந்து நடித்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி. அவர் எனக்கு மிகச் சிறந்த நண்பராகிவிட்டார். அர்ஜுன் தாஸை வித்தியாசமான கதாபாத்திரத்தில் அனைவரும் ரசித்திருப்பீர்கள். இந்தப் படத்தில் அவரை லவர் பாயாகவும் கண்டிப்பாக கொண்டாடுங்கள். அவர் நிச்சயம் உங்கள் அனைவரையும் கவருவார். ‘ஒன்ஸ்மோர்’ ஒரு அழகான டிராமா. அனைவருக்கும் கண்டிப்பாக பிடிக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

நடிகர் அர்ஜுன் தாஸ் பேசியதாவது.., விக்னேஷ் ஸ்ரீகாந்த் என்னிடம் கதை சொல்ல வந்தபோது, முதலில் ஒன்லைனை மட்டும் சொன்னார். அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன்பிறகு முழு திரைக்கதையையும் தயார் செய்துவிட்டு வருவதாகக் கூறினார். ஆனால் அவர் சொல்லாமல் விட்ட ஒரு விஷயம் இருக்கிறது. திரைக்கதையைத் தயார் செய்த பிறகு பல நிறுவனங்களிடம் இந்தக் கதையைப் பிட்ச் செய்திருக்கிறார். அப்போது பலரும், ‘அர்ஜுன் தாஸ் ஹீரோவாக வேண்டாமே, வேறு ஹீரோவை வைத்து செய்யலாமே’ என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் விக்னேஷ், ‘அர்ஜுன் தாஸ் மட்டும்தான் இந்தக் கதையில் ரகுவாக நடிக்க முடியும். அவரை வைத்துதான் இந்தப் படத்தை எடுப்பேன்’ என்று எனக்காக உறுதியாக நின்றிருக்கிறார். என்னை முழுமையாக நம்பி இந்தப் படத்திற்காக நின்ற இயக்குநர் விக்னேஷ் ஸ்ரீகாந்துக்கு எனது நன்றி. ரகு கதாபாத்திரத்தை என்னால் செய்ய முடியும் என்று நான் கூட சில நேரங்களில் நினைக்கவில்லை. ஆனால் அவர் என்னை முழுமையாக நம்பினார்.
அவருக்கு இந்தத் திரைப்படம் எவ்வளவு முக்கியம் என்பது எனக்குத் தெரியும். நாங்கள் அனைவரும் படத்தை முடித்துவிட்டு அடுத்தடுத்த படங்களுக்குச் சென்றுவிட்டோம். ஆனால் இன்றுவரை அவர் இந்தப் படத்திற்காக தொடர்ந்து நின்று கொண்டிருக்கிறார். இது அவருடைய அறிமுகப் படம்.  அவருடைய திறமையை நிச்சயம் சொல்லும்.

இசையமைப்பாளர் ஹேஷாம் அப்துல் வஹாப், ‘ஹிருதயம்’ படம் பார்த்து, அவருடைய இசை எனக்கு மிகவும் பிடித்ததால் அவருக்கு போன் செய்து பாராட்டினேன். அப்போது விரைவில் இணைந்து ஒரு படம் செய்யலாம் என்று பேசினோம். விக்னேஷ் இந்தக் கதையைச் சொன்னபோது, இது ஒரு மியூசிக்கல் படம் என்பதால் இசைக்கு முக்கியத்துவம் அதிகம் என்பதால் ஹேஷாமிடம் கேட்கலாம் என்று கூறினேன். அவர் கதையைக் கேட்டவுடன் உடனே ஒப்புக்கொண்டு, இப்படத்திற்கு மிக அற்புதமான இசையைத் தந்திருக்கிறார். அவருக்கு எனது நன்றிகள்.
இந்திரா கதாபாத்திரத்தில் நடித்த சோனாவைப் பற்றி விக்னேஷ் பல்வேறு விதமாகக் கற்பனை செய்து சொல்லிக்கொண்டே இருந்தார். இறுதியாக சோனா இந்திராவாக வந்தார். மிக அற்புதமாக நடித்திருக்கிறார். ஒரு சிறந்த தோழியாகவும் மாறிவிட்டார். இந்தத் திரைப்படம் அவருக்கு மிகச் சிறந்த அடையாளமாக இருக்கும்.
அதேபோல் அதிதி ஷங்கர் இந்தப் படத்திற்கு தேவையான அந்த எனர்ஜியை அற்புதமாகக் கொண்டு வந்திருக்கிறார். படப்பிடிப்பின் முதல் நாளில் ‘வாங்க சார்’ என்று அழைத்தவர், அடுத்த நாளிலிருந்தே ‘வாடி’ என்று அழைக்கும் அளவுக்கு நெருக்கமான தோழியாகிவிட்டார். அவருடைய நட்பு கிடைத்தது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.
பல பிரச்சனைகளைச் சந்தித்தபோதும், இப்படத்தை முழுமையாக முடிக்க வேண்டும் என்ற உறுதியுடன் நின்ற தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் அவர்களுக்கும், மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனத்திற்கும் நன்றி. இந்தப் படம் அந்த நிறுவனத்தின் வெற்றிச் சரித்திரத்தில் இடம்பெற வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். யுவராஜ் கணேசன் அவர்களுக்கு இப்படம் மிகப்பெரிய வெற்றியைத் தரட்டும். ‘ஒன்ஸ்மோர்’ அழகான காதலைச் சொல்லும் ஒரு உண்மையான டிராமா. எனக்கு மிகவும் நெருக்கமான திரைப்படம். கண்டிப்பாக உங்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

dhamaraimurasu

dhamaraimurasu

dhamaraimurasu admin

Related Posts

“டாக்ஸிக்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்கள் தயாரிப்பில், ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் ‘டாக்ஸிக்: A Fairy Tale for Grown-Ups’. ஆக்‌ஷன்,…

Read more

200 கோடி வசூல் சாதனை படைத்த “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம்

சூர்யா நடிப்பில், வெங்கி அட்லூரி இயக்கத்தில் வெளியான “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம் உலகளவில் ரூ.200 கோடி வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 2026 ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில்  வெளியான இப்படம், வெளியான குறுகிய காலத்திலேயே…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்கத்தவறிய செய்திகள்

“டாக்ஸிக்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“டாக்ஸிக்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

200 கோடி வசூல் சாதனை படைத்த “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம்

200 கோடி வசூல் சாதனை படைத்த “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம்

“ஒன்ஸ்மோர்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“ஒன்ஸ்மோர்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம் ! தெளிவில்லாத முதல்வரின் அறிவிப்பு !

கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம் ! தெளிவில்லாத முதல்வரின் அறிவிப்பு !

“Yourbackers play” உலகின் லாப நோக்கமற்ற OTT தளம் அறிமுகம் !

“Yourbackers play” உலகின் லாப நோக்கமற்ற OTT தளம் அறிமுகம் !

“இருமுடி கட்டு” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“இருமுடி கட்டு” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குரு சங்கருக்கு கொலை மிரட்டல் !

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குரு சங்கருக்கு கொலை மிரட்டல் !

“ஹலோ மிஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“ஹலோ மிஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

பழனி அருகே “தார் & டீசல்” திருட்டு ! புகார்தாரரை மிரட்டும் காவல் ஆய்வாளர் !.?

பழனி அருகே “தார் & டீசல்” திருட்டு ! புகார்தாரரை மிரட்டும் காவல் ஆய்வாளர் !.?

“அன்பில் அவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு !

“அன்பில் அவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு !

“ஐ ம் கேம்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“ஐ ம் கேம்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“பியார் பிரேமா கல்யாணம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“பியார் பிரேமா கல்யாணம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“பத்தா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“பத்தா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் டிரெய்லருக்கு அமோக வரவேற்பு !

டாக்ஸிக் படத்தின் டிரெய்லருக்கு அமோக வரவேற்பு !

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு !

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“வதந்தி சீசன் 2” குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“வதந்தி சீசன் 2” குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட “பியார் பிரேமா கல்யாணம்” தொடரின் முன்னோட்டம் !

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட “பியார் பிரேமா கல்யாணம்” தொடரின் முன்னோட்டம் !

துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ஆம் கேம்” ( I am Game ) படத்தின் டிரெய்லர் வெளியீடு !

துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ஆம் கேம்” ( I am Game ) படத்தின் டிரெய்லர் வெளியீடு !

வதந்தி சீசன் 2 “தி மிஸ்டரி ஆஃப் மணி” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

வதந்தி சீசன் 2 “தி மிஸ்டரி ஆஃப் மணி” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

“நடு நாடு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“நடு நாடு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“பிரஜாபதி” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“பிரஜாபதி” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

நயன்தாரா, கவின் நடித்துள்ள “ஹாய்” படத்தின் ரசகுல்லா பாடல் வெளியீடு !

நயன்தாரா, கவின் நடித்துள்ள “ஹாய்” படத்தின் ரசகுல்லா பாடல் வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் இரண்டாவது பாடல் “தடுமாறுதே” வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் இரண்டாவது பாடல் “தடுமாறுதே” வெளியீடு !

“அருள்வான்” படத்தின் திரைவிமர்சனம்

“அருள்வான்” படத்தின் திரைவிமர்சனம்

“அன்பே டயானா” திரைப்படத்தின் விமர்சனம்

“அன்பே டயானா” திரைப்படத்தின் விமர்சனம்

கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான “அமரன்” படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் !

கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான “அமரன்” படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் !

“தார்” டீசல் திருட்டை மாவட்டந்தோறும் விரிவுபடுத்தும் பலே கில்லாடி !

“தார்” டீசல் திருட்டை மாவட்டந்தோறும் விரிவுபடுத்தும் பலே கில்லாடி !

பழனி அருகே டீசல், தார் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

பழனி அருகே டீசல், தார் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

“வாழ்க்கையே போராட்டம்” படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் !

“வாழ்க்கையே போராட்டம்” படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் !

“லெட்சுமி காந்தன் கொலை வழக்கு” படத்தின் திரைவிமர்சனம்

“லெட்சுமி காந்தன் கொலை வழக்கு” படத்தின் திரைவிமர்சனம்

ஐ, நோபடி ( I, Nobody ) திரைப்படத்தின் விமர்சனம்

ஐ, நோபடி ( I, Nobody ) திரைப்படத்தின் விமர்சனம்

“ராவ் பகதூர்” ( தெலுங்கு ) திரைப்படத்தின் விமர்சனம்

“ராவ் பகதூர்” ( தெலுங்கு ) திரைப்படத்தின் விமர்சனம்

திண்டுக்கல்லில் பெருகிவரும் கள்ளத் துப்பாக்கி கலாசாரம் ! திணறும் வனத்துறை, கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

திண்டுக்கல்லில் பெருகிவரும் கள்ளத் துப்பாக்கி கலாசாரம் ! திணறும் வனத்துறை, கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

யோகி பாபு நடித்துள்ள “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

யோகி பாபு நடித்துள்ள “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“முதற்கனல்” படத்தின் திரைவிமர்சனம்

“முதற்கனல்” படத்தின் திரைவிமர்சனம்

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

“தாதா தி சவுரவ் கங்குலி ஸ்டோரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“தாதா தி சவுரவ் கங்குலி ஸ்டோரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“வஞ்சி” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“வஞ்சி” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“கட்டா குஸ்தி_2” திரைப்படத்தின் விமர்சனம்

“கட்டா குஸ்தி_2” திரைப்படத்தின் விமர்சனம்

அருள்வான் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

அருள்வான் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“டார்க்” படத்தின் திரைவிமர்சனம்

“டார்க்” படத்தின் திரைவிமர்சனம்

அமெரிக்க தமிழ்ச்சங்க விழாவில் கவனம் ஈர்த்த “திருக்குறள்_2” திரைப்படம் !

அமெரிக்க தமிழ்ச்சங்க விழாவில் கவனம் ஈர்த்த “திருக்குறள்_2” திரைப்படம் !

பிரமாண்டமாக தயாராகும் “திருக்குறள்_2” திரைப்படம் !

பிரமாண்டமாக தயாராகும் “திருக்குறள்_2” திரைப்படம் !

“மனு” திரைப்படத்தின் விமர்சனம்

“மனு” திரைப்படத்தின் விமர்சனம்

“நாகபந்தம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“நாகபந்தம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“லவ் ஓ லவ்” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“லவ் ஓ லவ்” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

பூஜையிடன் படப்பிடிப்பை தொடங்கிய “லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி” படக்குழுவினர் !

பூஜையிடன் படப்பிடிப்பை தொடங்கிய “லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி” படக்குழுவினர் !

பூஜையிடன் துவங்கிய “குட் நியூஸ்” படத்தின் படப்பிடிப்பு !

பூஜையிடன் துவங்கிய “குட் நியூஸ்” படத்தின் படப்பிடிப்பு !

“லவ் ஓ லவ்” படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரித்த டீசர் !

“லவ் ஓ லவ்” படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரித்த டீசர் !

குறும்பட போட்டியில் திறமைசாலிகளை வாழ்த்திய பிரபலங்கள் !

குறும்பட போட்டியில் திறமைசாலிகளை வாழ்த்திய பிரபலங்கள் !

“ஹபீபி” படக்குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா !

“ஹபீபி” படக்குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா !

நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் “சூப்பர் சுப்பு” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் “சூப்பர் சுப்பு” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

திருமுட்டம் அருகே.. தொடரும் மணல் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

திருமுட்டம் அருகே.. தொடரும் மணல் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

“எங்கள் தங்கம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“எங்கள் தங்கம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

வடசென்னையில் தினந்தோறும் 1000 கிலோ ரேசன் அரிசியை கடத்தும் அரசு ஊழியர் சடகோபால் !

வடசென்னையில் தினந்தோறும் 1000 கிலோ ரேசன் அரிசியை கடத்தும் அரசு ஊழியர் சடகோபால் !

திருப்பூரில் மாணவிகளுக்கு ஆபாச கராத்தே பயிற்சி ! கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் கண்டனம்

திருப்பூரில் மாணவிகளுக்கு ஆபாச கராத்தே பயிற்சி ! கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் கண்டனம்

கராத்தே பயிற்சி என ஆபாச வீடியோ வெளியீடு ! வலுக்கும் கண்டனங்கள், கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

கராத்தே பயிற்சி என ஆபாச வீடியோ வெளியீடு ! வலுக்கும் கண்டனங்கள், கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

“மக்கள் தலைவா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“மக்கள் தலைவா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“ஆட்டி” திரைப்படத்தின் விமர்சனம்

“ஆட்டி” திரைப்படத்தின் விமர்சனம்

“நிழல்” திரைப்படத்தின் விமர்சனம்

“நிழல்” திரைப்படத்தின் விமர்சனம்

இஸ்லாமிய குடும்பத்தின் வாழ்வியல் ” ஹபீபி” ! விமர்சனம்

இஸ்லாமிய குடும்பத்தின் வாழ்வியல் ” ஹபீபி” ! விமர்சனம்

ஸ்லம் டாக் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு

ஸ்லம் டாக் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு

நெய்க்காரப்பட்டி கோவில் திருவிழாவில், கூட்ட நெரிசலில் சிக்கி 20_க்கும் மேற்பட்டோர் காயம் !

நெய்க்காரப்பட்டி கோவில் திருவிழாவில், கூட்ட நெரிசலில் சிக்கி 20_க்கும் மேற்பட்டோர் காயம் !

18 ஆம் நூற்றாண்டின் “வாள்” பழனி அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு !

18 ஆம் நூற்றாண்டின் “வாள்” பழனி அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு !

போதைப்பொருள் நடமாட்டத்தை வனத்துறையினருடன் இணைந்து கண்காணித்த காவல்துறையினர் !

போதைப்பொருள் நடமாட்டத்தை வனத்துறையினருடன் இணைந்து கண்காணித்த காவல்துறையினர் !

பழனி அருகே.. நெய்க்காரப்பட்டி கோவில் திருவிழா ! கூட்டத்தை கட்டுப்படுத்த திணறும் காவல்துறையினர் !

பழனி அருகே.. நெய்க்காரப்பட்டி கோவில் திருவிழா ! கூட்டத்தை கட்டுப்படுத்த திணறும் காவல்துறையினர் !

“லைட் வெயிட் பேபி” விறுவிறுப்பான படப்பிடிப்பில் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் !

“லைட் வெயிட் பேபி” விறுவிறுப்பான படப்பிடிப்பில் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் !

மடத்துக்குளம் அருகே.. கார் மோதி 2 வயது குழந்தை பலி ! பெற்றோர் படுகாயம் ! 

மடத்துக்குளம் அருகே.. கார் மோதி 2 வயது குழந்தை பலி ! பெற்றோர் படுகாயம் ! 

“சம்ஹாரம்” திரைப்படத்தின் விமர்சனம்

“சம்ஹாரம்” திரைப்படத்தின் விமர்சனம்

“மூன்றாம் கண்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“மூன்றாம் கண்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

கேன்ஸ் திரைப்பட விழாவில் “பாலன் தி பாய்” திரைப்படத்திற்கு வரவேற்பு !

கேன்ஸ் திரைப்பட விழாவில் “பாலன் தி பாய்” திரைப்படத்திற்கு வரவேற்பு !

“அந்தரன்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !

“அந்தரன்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !

“ஸ்லம் டாக்” படத்தின் டீசர் ஜூன் 8 ஆம் தேதி வெளியாகிறது !

“ஸ்லம் டாக்” படத்தின் டீசர் ஜூன் 8 ஆம் தேதி வெளியாகிறது !

தி இந்தியா ஸ்டோரி திரைப்படம் ஜூலை 24 ஆம் தேதி வெளியாகிறது !

தி இந்தியா ஸ்டோரி திரைப்படம் ஜூலை 24 ஆம் தேதி வெளியாகிறது !

அங்கீகாரம் படத்திற்கு “U” சான்றிதழ் வழங்கிய தணிக்கை வாரியம் !

அங்கீகாரம் படத்திற்கு “U” சான்றிதழ் வழங்கிய தணிக்கை வாரியம் !

ஒப்பந்ததாரரிடம் 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது ! பல்லடம் அருகே பரபரப்பு !

ஒப்பந்ததாரரிடம் 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது ! பல்லடம் அருகே பரபரப்பு !

“கலர்ஸ்” நிறுவனத்தை திறந்து வைத்த நடிகை பிரியா பவானி சங்கர் !

“கலர்ஸ்” நிறுவனத்தை திறந்து வைத்த நடிகை பிரியா பவானி சங்கர் !

“ஈகோ ராமன்” படத்தின் விமர்சனம்

“ஈகோ ராமன்” படத்தின் விமர்சனம்

பெத்தி படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !

பெத்தி படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !

பழனி அருகே அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் காவலப்பட்டி கிராமத்தினர் !

பழனி அருகே அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் காவலப்பட்டி கிராமத்தினர் !

நடன இயக்குனர் “ஷெரீப்_250” கொண்டாட்டம் !

நடன இயக்குனர் “ஷெரீப்_250” கொண்டாட்டம் !

தனித்துவமான வேடத்தில் சசிகுமார் நடித்துள்ள புதிய படத்தின் அப்டேட்ஸ் !

தனித்துவமான வேடத்தில் சசிகுமார் நடித்துள்ள புதிய படத்தின் அப்டேட்ஸ் !

“உயிரிணையே” இசை ஆல்பம் வெளியீட்டு விழா !

“உயிரிணையே” இசை ஆல்பம் வெளியீட்டு விழா !

“பெத்தி” திரைப்படம் ராம் சரணுக்கு தேசிய விருதை பெற்றுத்தரும் ! – சிவராஜ்குமார்

“பெத்தி” திரைப்படம் ராம் சரணுக்கு தேசிய விருதை பெற்றுத்தரும் ! – சிவராஜ்குமார்

சிம்பு நடிக்கும் “அரசன்” படத்தின் புதிய தகவல்கள் !

சிம்பு நடிக்கும் “அரசன்” படத்தின் புதிய தகவல்கள் !

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தால், கொள்ளை லாபம் பார்க்கும் FL-2 பார் உரிமையாளர்கள் !

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தால், கொள்ளை லாபம் பார்க்கும் FL-2 பார் உரிமையாளர்கள் !

பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே ? அதிகரிக்கும் பாலியல் சீண்டல்கள் !

பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே ? அதிகரிக்கும் பாலியல் சீண்டல்கள் !

“பாதாம்கீர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியீடு !

“பாதாம்கீர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியீடு !

பரபரப்பான ஆக்ஷ்ன் த்ரில்லர் கதைகளத்தில் உருவாகும் “சமவர்த்தி” !

பரபரப்பான ஆக்ஷ்ன் த்ரில்லர் கதைகளத்தில் உருவாகும் “சமவர்த்தி” !

“நாக பந்தம் திரைப்படம் ஜூலை 3 ஆம் தேதி வெளியீடு !

“நாக பந்தம் திரைப்படம் ஜூலை 3 ஆம் தேதி வெளியீடு !

“தி இந்தியா ஸ்டோரி” படத்தின் டீசர் விரைவில் வெளியீடு !

“தி இந்தியா ஸ்டோரி” படத்தின் டீசர் விரைவில் வெளியீடு !

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “கான் சிட்டி” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “கான் சிட்டி” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்ட ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் !

சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்ட ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் !

ஆக்ஷ்ன், த்ரில்லர் கதையில் உருவாகிவரும் “கொம்பா” திரைப்படம் !

ஆக்ஷ்ன், த்ரில்லர் கதையில் உருவாகிவரும் “கொம்பா” திரைப்படம் !

“கங்கணம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“கங்கணம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“அதிரடி” படவிழாவில் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் !

“அதிரடி” படவிழாவில் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் !

வரவேற்பை குவிக்கும் “தாழ் திறவா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் !

வரவேற்பை குவிக்கும் “தாழ் திறவா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் !

“விசாரணை கைதி” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“விசாரணை கைதி” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !