ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழா ! ஓவியர் ஜீவானந்தனுக்கு 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு 13.78 லட்சம் நிதியுதவி !

சென்னை தியாகராயா நகரில் உள்ள அகரம் ஃபவுண்டேஷன் அலுவலகத்தில் ஸ்ரீ சிவகுமார் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் ப்ளஸ்-டூ முடித்து கல்லூரியில் சேர்ந்திருக்கும் 25 மாணவ, மாணவிகளுக்கு நிதியுதவியும், மூத்த ஓவியர் ஒருவருக்கு நிதியும், விருதும், விளிம்புநிலை மக்களின் கல்வி மேம்பாட்டிற்காகத் தன்னலமற்று உழைத்து வரும் மூன்று முக்கிய அமைப்புகளுக்கு நிதியுதவியும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டன. 
 
1979 ஆம் ஆண்டு திரைக்கலைஞர் சிவகுமாரின் 100 வது திரைப்படமான ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்திற்காகப் பெற்ற முழுச் சம்பளமான ரூ.25,000-ஐ வங்கியில் முதலீடு செய்து, அதன் வட்டித் தொகையைக் கொண்டு மாணவர்களுக்கு உதவும் நோக்கில் இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்ட நிலையில், பின்னர் சிவகுமாரின் சொந்த நிதியில் இருந்து உதவித்தொகைகள் வழங்கப்பட்டன. 2006 ஆம் ஆண்டு முதல் ‘அகரம் ஃபவுண்டேஷன்’ இந்த அறக்கட்டளையின் பொறுப்பை முழுமையாக ஏற்று, ஆண்டுதோறும் உதவித்தொகைகளையும் விருதுகளையும் வழங்கி வருகிறது. 
 
கல்வியில் சிறந்த மாணவர்களை ஊக்குவிப்பதோடு, ஓவியத் துறையில் நீண்ட காலம் சிறப்பாகப் பங்காற்றிய மூத்த கலைஞர்களைக் கௌரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ரூ 1 லட்சம் பரிசுத்தொகையுடன் சிவகுமார் கல்வி அறக்கட்டளை விருது வழங்கி வருகிறது. இதுவரை ஓவியர்கள் அம்புலிமாமா சங்கர், ராமு, ஜெயராஜ், மாயா, மணியம் செல்வன் ஆகியோர் பெற்றுள்ள நிலையில், இந்த 47-வது ஆண்டு விழாவில் சிறந்த ஓவியரும் கலைத்துறையின் குறிப்பிடத்தக்க ஆளுமையுமான ஓவியர் ஜீவானந்தனுக்கு ரூ 1 லட்சம் பொற்கிழியுடன் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
 
பொருளாதாரச் சவால்களையும் பல்வேறு தடைகளையும் கடந்து, பிளஸ் டூ பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்று கல்லூரியில் சேர்ந்துள்ள 25 மாணவ, மாணவியர் ஒவ்வொருவருக்கும் தலா ரூ 10,000 வீதம் மொத்தம் ரூ 2,50,000 கல்வி ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டது. மாணவர்களின் சாதனையைப் பாராட்டி, அவர்களை மேலும் ஊக்குவிக்கும் வகையில் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.  

மேலும் திண்டிவனம் ரோசனை பகுதியில் ‘தாய்மொழிக் கல்வியே சிறந்த கல்விமுறை’ என்ற உயரிய சிந்தனையோடு கடந்த 25 ஆண்டுகளாக இயங்கி வரும் பள்ளி ‘தாய் தமிழ் தொடக்கப்பள்ளி’. இப்பள்ளி மாணவர்களுக்கு இலவசக் கல்வியோடு மதிய உணவுத் திட்டத்தையும் வழங்கி வருகிறது. இப்பள்ளியின் சீரிய பணிகளுக்குக் கடந்த 16 ஆண்டுகளாக அகரம் துணைநின்று வருகிறது. அதன் தொடர்ச்சியாக, 2026 – 2027 கல்வியாண்டில் அங்கு பணியாற்றும் ஆசிரியர்களின் மாதச் சம்பளப் பங்களிப்பிற்காக ரூ 6,28,000/- வழங்குவதற்கான உறுதியேற்பு கடிதம் தாய் தமிழ்ப் பள்ளி நிர்வாகிகளிடம் வழங்கப்பட்டது. 
 
அதேபோல் ஈரோடு மாவட்டப் பழங்குடி குழந்தைகளின் கல்வி மேம்பாட்டிற்காக கடந்த 20 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் அமைப்பு ‘சுடர்’. சத்தியமங்கலம் மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில் பள்ளி இடைநின்ற குழந்தைகளை மீண்டும் பள்ளிக்கு வரவழைக்கவும், கற்றல் இடைவெளியைப் போக்கவும் 25 மாலை நேரப் படிப்பகங்களை நடத்தி வருகிறார்கள். இந்த நற்பணிகளுக்குத் தேவைப்படும் நிதி ஆதாரத்தின் சிறு பகுதியாக ரூ 2,00,000/-க்கான காசோலை சுடர் அமைப்பின் நிறுவனர் நடராஜனிடம் வழங்கப்பட்டது. 
 
மேலும் சென்னை மாநிலக் கல்லூரி முன்னாள் மாணவர்களால் தொடங்கப்பட்டு, தருமபுரி, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டும் (Mentoring) பணிகளை மேற்கொண்டு வந்த ‘வாழை’ அமைப்பு. தற்போது கிருஷ்ணகிரி மாவட்டம் அய்யூர் வனப்பகுதியில் அமைந்துள்ள 7 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமித்து கல்வி மேம்பாட்டு பணிகளை முன்னெடுத்து வருகிறார்கள். இவர்களின் தன்னார்வப் பணிகளுக்கு உதவும் வகையில், மாதந்தோறும் ரூ 25,000/- வீதம் இந்த ஆண்டிற்கான பங்களிப்பாக ரூ 3,00,000/- வழங்குவதற்கான உறுதியேற்பு கடிதம் வாழை அமைப்பின் தன்னார்வலர்களிடம் வழங்கப்பட்டது. 
 
விழாவில் மாணவர்களைப் பாராட்டி, திரைக்கலைஞர் சிவகுமார் பேசியதாவது, 
மாணவ, மாணவிகளுக்கு நான் ஒன்னு சொல்லிக்கிற ஒரே ஒரு விஷயம், கல்வியும் ஒழுக்கமும் இருந்தால், உலகத்திலே எந்த மூலையில் போய் வேண்டும் என்றாலும் நீங்கள் சாதிக்க முடியும். அந்த ஒன்றுதான் அடிப்படை. நீங்கள் ஏழைப் பெற்றோருக்கு பிறந்தீர்களா, பெற்றோர் இழந்த குழந்தைகளா, கிராமத்தில் பிறந்தீர்களா எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம். உங்களுக்குக் கல்வியும் ஒழுக்கமும் இருந்தால், உலகத்திலே எந்த மூலையிலும் போய் சாதிக்க முடியும் என்பதை நீங்கள் மனதில் புரிந்து கொள்ளுங்கள். அதற்கு ஒரு சின்ன, மிகச் சின்ன உதாரணம் நான். 

நாங்க படிச்ச காலத்துல பள்ளிக்கூடம் என்று ஒன்று கிடையாது, பள்ளிக்கூட கட்டிடம் கிடையாது, வாத்தியார்கள் முறையா கிடையாது. எல்லாம் பிரைவேட் பள்ளிக்கூடம், பிரைவேட் வாத்தியாரு. ‘கலங்கள்’ என்பது எங்க கிராமத்துல இருந்து கரெக்டா நாலு ஃபர்லாங் தூரத்துல இருக்குது. அதுல ஜி.டி. நாயுடு பிறந்த ஊரு. அதுல ஊருக்கு நடுவுல ஒரு மொட்டை மண்டபம், 30 அடிக்கு 60 அடி நீளத்துல ஒரு மண்டபம். அந்த மண்டபத்துல தரையெல்லாம் தூசி படிஞ்சுட்டு இருக்கும். நாங்க ஊர்ல இருந்து வரும்போது வழியில மாடு சாணம் போட்டுருக்கும். அந்த சாணத்தை எல்லாம் நாங்க எடுத்துட்டு வந்து, கூடையில் போட்டு, ஒரு சட்டிக்குள்ள போட்டு நல்லா கரைச்சு, அந்த சாணத்துல நாங்க தான் தரையில மெழுகி குடுப்போம், இல்லைன்னா உள்ள புழுதி பறக்கும். அதை மெழுகி விட்டு, அதுலதான் நான் உட்கார்ந்து படிச்சோம். சைடுல யார் வேடிக்கை பார்ப்பாங்கன்னு மூங்கில் தட்டி அடிச்சு, ஒரு மூணு மூங்கில் தட்டி சுத்தியும் மறைச்சிருப்போம்.

எங்க வாத்தியார் கல்யாணசுவாமி நாயுடு. அவர், 1940 களிலேயே ஸ்டேட் மேத்ஸ்ல ஸ்டேட் செகண்ட் வாங்கினவர். 1940-கள்ல மேத்ஸ்ல மிகப்பெரிய ஆளு. அவரு பிரைவேட் பள்ளிக்கூடம் வச்சிருக்காரு. ஒன்னாம் கிளாஸுக்கு 1 ரூபாய், ரெண்டாம் கிளாஸுக்கு 2 ரூபாய், மூணாம் கிளாஸுக்கு 3 ரூபாய், நாலாம் கிளாஸுக்கு 4 ரூபாய். இதான் மாச ஃபீஸ். நான் ரெண்டாம் கிளாஸ் படிச்சேன், எங்க அக்கா மூணாம் கிளாஸ் போனாங்க. நாங்க படிச்ச காலத்துல ஒரு சவரன் தங்கம் வந்து 12 ரூபாய். அப்போ அக்காவுக்கு 3 ரூபாய், எனக்கு 2 ரூபாய்னா 5 ரூபாய், கிட்டத்தட்ட பாதி சவரன் விலை. நான் பிறந்து 10 மாச குழந்தையா இருக்கும்போது எங்க அப்பா இறந்துட்டார். காலம் பூரா எங்க அம்மா வெள்ளைச் சேலையில தான் நான் பார்த்திருக்கேன். நம்ம காடு கரையில பாடுபட்டு, ஒரு காய்ஞ்சு போன பூமியை எங்க அப்பா விட்டுட்டு போயிருந்தாரு. அதுல பாடுபட்டு தான் எங்க அம்மா படிக்க வச்சாங்க. அதனால 5 ரூபாய் மாசத்துக்கு செலவு பண்ண முடியாதுனு எங்க அக்காவை மூணாம் கிளாஸோட நிறுத்திட்டாங்க. 

கிராமப்புறங்களில் ஏழ்மையான குடும்பங்களில் பிறந்து வளர்ந்து, கல்வி கற்பதற்காக மாணவர்கள் எவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கிறார்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.  கல்வி ஒருவருடைய வாழ்க்கைத் தரத்தை எந்த அளவுக்கு உயர்த்த முடியும் என்பதையும் நான் அனுபவபூர்வமாக உணர்ந்திருக்கிறேன். என்னைப் போலவே ஏழ்மையான குடும்பப் பின்னணியில் இருந்து வந்து, நன்றாகப் படித்து முன்னேறத் துடிக்கும் மாணவர்களுக்கு என்னால் இயன்ற உதவியைச் செய்வதில் எனக்கு மிகுந்த மனநிறைவு கிடைக்கிறது. தடைகளைத் தாண்டி அவர்கள் பெறும் ஒவ்வொரு வெற்றியும் அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு புதிய தொடக்கமாக அமையும். இந்த பயணத்தில் உங்களுக்கு கிடைத்த முதல் வெற்றி மட்டுமே. இனி கடக்க வேண்டிய பாதை இன்னும் நீண்டது. மாணவர்கள் தங்களுடைய இலக்கில் உறுதியாக இருந்து, ஒழுக்கத்துடன், கவனம் சிதறாமல் தொடர்ந்து உழைத்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். கல்வி தரும் வாய்ப்புகளை முழுமையாகப் பயன்படுத்தி, தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டும். கவனம் சிதறாமல் தொடர்ந்து உழைத்து சமூகத்திற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்றார். 

dhamaraimurasu

dhamaraimurasu

dhamaraimurasu admin

Related Posts

கௌதம்மேனனின் 25 ஆண்டுகள் திரையுலக பயணம் ! கோலாலம்பூரில் இசைக் கொண்டாட்டம்

இந்தியத் திரையுலகில் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் தனித்துவமான பங்களிப்பின் 25 சிறப்புமிக்க ஆண்டுகளைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா – GVM இன் 25 ஆண்டுகள்’ நிகழ்ச்சி, அக்டோபர் 10, 2026 அன்று மலேசியாவின் கோலாலம்பூரில் 5,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள்…

Read more

பிரச்சாரம் ஓய்ந்த நிலையில், கோவையில் மக்கள் பிரச்சினைகளை தீர்க்கப்போவது யார் !.?

2026 சட்டமன்றத் தேர்தலில் கொங்கு மண்டலத்தை கைப்பற்றுவது யார்.? என்ற கோதாவில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் வரிந்து கட்டிக்கொண்டு, கோடை வெயிலை காட்டிலும் இரண்டு டிகிரி செல்சியஸ் வெப்பம் அதிகரித்தது போல கொங்கு மண்டலத்தின் தலைநகரான கோயம்புத்தூர்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்கத்தவறிய செய்திகள்

குற்றச் செயல்களில் ஈடுபடும் தவெக நிர்வாகிகளை கைது செய்யாதது ஏன் ?.!

குற்றச் செயல்களில் ஈடுபடும் தவெக நிர்வாகிகளை கைது செய்யாதது ஏன் ?.!

“பிளாக் கோல்டு” விமர்சனம்

“பிளாக் கோல்டு” விமர்சனம்

சர்வதேச விழாக்களில் 7 விருதுகள் வென்ற “வன மடி” திரைப்படம் !

சர்வதேச விழாக்களில் 7 விருதுகள் வென்ற “வன மடி” திரைப்படம் !

“அப்பா குட்டி” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“அப்பா குட்டி” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

பெற்றோர்களே உஷார் ! கராத்தே சங்கங்களுக்கு தடை ! இந்திய ஒலிம்பிக் சங்கம் நடவடிக்கை

பெற்றோர்களே உஷார் ! கராத்தே சங்கங்களுக்கு தடை ! இந்திய ஒலிம்பிக் சங்கம் நடவடிக்கை

கடந்த ஆட்சியைவிட குறைந்த விலைக்கு சைக்கிள் டெண்டர் !

கடந்த ஆட்சியைவிட குறைந்த விலைக்கு சைக்கிள் டெண்டர் !

எம்எல்ஏக்கள் மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன் ? – திமுக

எம்எல்ஏக்கள் மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன் ? – திமுக

அஜய் கார்த்தி, தீபா பாலு நடிக்கும் “ஸ்டேஷன்” திரைப்படம்

அஜய் கார்த்தி, தீபா பாலு நடிக்கும் “ஸ்டேஷன்” திரைப்படம்

“மௌன மொழிகள்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“மௌன மொழிகள்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“மூக்குத்தி அம்மன்_2” விமர்சனம்

“மூக்குத்தி அம்மன்_2” விமர்சனம்

சூர்யாவின் “சீன்” படத்தின் விமர்சனம்

சூர்யாவின் “சீன்” படத்தின் விமர்சனம்

“பௌமா” மற்றும் “டூக்ஸ்” படங்களை ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் தென்னிந்தியாவில் வெளியிடுகிறது

“பௌமா” மற்றும் “டூக்ஸ்” படங்களை ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் தென்னிந்தியாவில் வெளியிடுகிறது

ஆதரவற்றோருடன் தீபாவளி கொண்டாடிய காவல்துறையினர் !

ஆதரவற்றோருடன் தீபாவளி கொண்டாடிய காவல்துறையினர் !

பிறந்தநாளில் “சண்டியர்” படப்பிடிப்பை தொடங்கிய கமல்ஹாசன்

பிறந்தநாளில் “சண்டியர்” படப்பிடிப்பை தொடங்கிய கமல்ஹாசன்

மாநில உரிமையை பாதுகாக்கத் தவறிய அரசு ! – எஸ்டிபிஐ கண்டனம்

மாநில உரிமையை பாதுகாக்கத் தவறிய அரசு ! – எஸ்டிபிஐ கண்டனம்

பெரியார் அறிவுலக புத்தக முறைகேடு புகார் ! நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல் !

பெரியார் அறிவுலக புத்தக முறைகேடு புகார் ! நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல் !

அதிமுக பிரமுகர் மன்னன் காலையில் கைது ! மாலையில் விடுவிப்பு !

அதிமுக பிரமுகர் மன்னன் காலையில் கைது ! மாலையில் விடுவிப்பு !

சூப்பர் ஸ்டார் நடிக்கும் “தர்மன்” திரைப்படத்தில் இணைந்த நடிகை ஶ்ரீ லீலா

சூப்பர் ஸ்டார் நடிக்கும் “தர்மன்” திரைப்படத்தில் இணைந்த நடிகை ஶ்ரீ லீலா

உ.வே.சா நூலகத்தில் ஆய்வு செய்த நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் !

உ.வே.சா நூலகத்தில் ஆய்வு செய்த நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் !

பல்லடத்தில் விதிமீறி கட்டப்படும் பிரபல நகைக்கடை கட்டிடம் ! கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம் !

பல்லடத்தில் விதிமீறி கட்டப்படும் பிரபல நகைக்கடை கட்டிடம் ! கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம் !

சோதனைகளை கடந்து.. விடாமுயற்சியால் நாட்டிற்காக இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற சிம்ரன் !

சோதனைகளை கடந்து.. விடாமுயற்சியால் நாட்டிற்காக இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற சிம்ரன் !

35 நாட்களுக்கு முன் காணாமல் போன பெண் குழந்தையை மீட்ட போலீசார் !

35 நாட்களுக்கு முன் காணாமல் போன பெண் குழந்தையை மீட்ட போலீசார் !

அகவிலைப்படி உயர்வால், உற்சாகத்தில் மத்திய அரசு ஊழியர்கள் !

அகவிலைப்படி உயர்வால், உற்சாகத்தில் மத்திய அரசு ஊழியர்கள் !

“லவ் 3 ஓ” படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு !

“லவ் 3 ஓ” படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு !

யோகி பாபுவின் “அர்ஜூனன் பேர் பத்து” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

யோகி பாபுவின் “அர்ஜூனன் பேர் பத்து” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

“ஹைக்கூ” படத்தின் விமர்சனம்

“ஹைக்கூ” படத்தின் விமர்சனம்

கௌதம்மேனனின் 25 ஆண்டுகள் திரையுலக பயணம் ! கோலாலம்பூரில் இசைக் கொண்டாட்டம்

கௌதம்மேனனின் 25 ஆண்டுகள் திரையுலக பயணம் ! கோலாலம்பூரில் இசைக் கொண்டாட்டம்

யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள “சிங்காரம்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள “சிங்காரம்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

பெண்களின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் “ஹைக்கூ” திரைப்படம் ! – நடிகை ஃபெமினா ஜார்ஜ்

பெண்களின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் “ஹைக்கூ” திரைப்படம் ! – நடிகை ஃபெமினா ஜார்ஜ்

“ஹைக்கூ” ஒரு ஃபீல் குட் எண்டர்டெயின்மெண்ட் திரைப்படம் !

“ஹைக்கூ” ஒரு ஃபீல் குட் எண்டர்டெயின்மெண்ட் திரைப்படம் !

திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ! “ஹைக்கூ” பட தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி !

திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ! “ஹைக்கூ” பட தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி !

“ஹைக்கூ” படத்தில் மௌனமாக ஒரு கதாப்பாத்திரமாகவே பயணிக்கும் இசை !

“ஹைக்கூ” படத்தில் மௌனமாக ஒரு கதாப்பாத்திரமாகவே பயணிக்கும் இசை !

ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் “ஹைக்கூ”. – நடிகர் ஏகன்

ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் “ஹைக்கூ”. – நடிகர் ஏகன்

அமைச்சர் பதவிக்காக அடிப்படை கொள்கையிலிருந்து விலகி நிற்கும் விசிக ! – பனையூர் பாபு

அமைச்சர் பதவிக்காக அடிப்படை கொள்கையிலிருந்து விலகி நிற்கும் விசிக ! – பனையூர் பாபு

குற்றச்சாட்டு எழுந்ததால் பணியிடை மாற்றம் ! உடனடியாக பதவி உயர்வு கொடுத்ததன் பின்னனி என்ன ?.!

குற்றச்சாட்டு எழுந்ததால் பணியிடை மாற்றம் ! உடனடியாக பதவி உயர்வு கொடுத்ததன் பின்னனி என்ன ?.!

நகைச்சுவை கலந்த வித்தியாசமான காதல் கதை !

நகைச்சுவை கலந்த வித்தியாசமான காதல் கதை !

“மெர்சல்” படத்தின் பணப்பரிவர்த்தனை விவகாரம் ! நடிகை ஶ்ரீ பிரியா நிறுவனத்திற்கு வெற்றி !

“மெர்சல்” படத்தின் பணப்பரிவர்த்தனை விவகாரம் ! நடிகை ஶ்ரீ பிரியா நிறுவனத்திற்கு வெற்றி !

கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளில் “அக்கா” தொடரின் டீசர் வெளியானது !

கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளில் “அக்கா” தொடரின் டீசர் வெளியானது !

“சட்டமும் நீதியும் 2” தொடரின் டிரெய்லரை வெளியிடப்பட்டது தமிழ் ZEE 5 !

“சட்டமும் நீதியும் 2” தொடரின் டிரெய்லரை வெளியிடப்பட்டது தமிழ் ZEE 5 !

சந்தீப் கிஷன் நடிக்கும் “கரிகாலா” திரைப்படம் பூஜையுடன் ஆரம்பம் !

சந்தீப் கிஷன் நடிக்கும் “கரிகாலா” திரைப்படம் பூஜையுடன் ஆரம்பம் !

துல்கர் சல்மானின் “ஏ ஓ டி” ( AOT ) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

துல்கர் சல்மானின் “ஏ ஓ டி” ( AOT ) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“ஸ்லம் டாக்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு, வெளியீட்டு தேதி விரைவில்..

“ஸ்லம் டாக்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு, வெளியீட்டு தேதி விரைவில்..

தேவா மண்ணை விட்டு மறைந்தாலும், அவரது தேனிசை தென்றல் காற்று வீசுவது நிற்காது ! – முக ஸ்டாலின்

தேவா மண்ணை விட்டு மறைந்தாலும், அவரது தேனிசை தென்றல் காற்று வீசுவது நிற்காது ! – முக ஸ்டாலின்

“ராமாயணா” படத்தின் புதிய சர்வதேச டிரெய்லர் வெளியானது !

“ராமாயணா” படத்தின் புதிய சர்வதேச டிரெய்லர் வெளியானது !

“சிக்னல் அட் 11.30” படத்தின் “ஜோ ஜோ மாமா” பாடல் வெளியீடு !

“சிக்னல் அட் 11.30” படத்தின் “ஜோ ஜோ மாமா” பாடல் வெளியீடு !

“இது நம்ம குடும்பம்” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“இது நம்ம குடும்பம்” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“ஹபீபி” படக்குழுவினருக்கு பாராட்டுவிழா !

“ஹபீபி” படக்குழுவினருக்கு பாராட்டுவிழா !

ஊர்வசி நடிப்பில் உருவாகியுள்ள “ஆஷா” திரைப்படம் அக்டோபர் 16 முதல் மலையாளம் ஜீ_5 ல் வெளியாகிறது

ஊர்வசி நடிப்பில் உருவாகியுள்ள “ஆஷா” திரைப்படம் அக்டோபர் 16 முதல் மலையாளம் ஜீ_5 ல் வெளியாகிறது

சூரியின் புதிய திரைப்படத்த கிளாப் அடித்து துவக்கி வைத்த சிவகார்த்திகேயன் !

சூரியின் புதிய திரைப்படத்த கிளாப் அடித்து துவக்கி வைத்த சிவகார்த்திகேயன் !

“டோரதி” திரைப்படம் நான் எதிர்பார்த்த அங்கீகாரம் பெற்றுத் தந்துள்ளது. ஜீவா சுப்பிரமணியம் !

“டோரதி” திரைப்படம் நான் எதிர்பார்த்த அங்கீகாரம் பெற்றுத் தந்துள்ளது. ஜீவா சுப்பிரமணியம் !

டுபாக்கூர் முதலமைச்சரும், கூடுதல் விலைக்கு மின்சார கொள்முதலும் ! – உதயநிதி விமர்சனம்

டுபாக்கூர் முதலமைச்சரும், கூடுதல் விலைக்கு மின்சார கொள்முதலும் ! – உதயநிதி விமர்சனம்

அ,தி,மு,கவை த,வெ,க வின் சார்பு இயக்கமாக மாற்ற நினைக்கும் வேலுமணி ! கட்சியை காப்பாற்ற கூட்டுத் தலைமை அவசியம் !

அ,தி,மு,கவை த,வெ,க வின் சார்பு இயக்கமாக மாற்ற நினைக்கும் வேலுமணி ! கட்சியை காப்பாற்ற கூட்டுத் தலைமை அவசியம் !

“ஜெய்” நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் !

“ஜெய்” நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் !

“E 1” படத்தின் விமர்சனம்

“E 1” படத்தின் விமர்சனம்

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழாவில் 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழாவில் 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழா ! ஓவியர் ஜீவானந்தனுக்கு 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழா ! ஓவியர் ஜீவானந்தனுக்கு 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு 13.78 லட்சம் நிதியுதவி !

கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் “ஊர் கூடும் இரவு” ஆவணப்படம் !

கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் “ஊர் கூடும் இரவு” ஆவணப்படம் !

“ஆல்பாஸ்” விமர்சனம்

“ஆல்பாஸ்” விமர்சனம்

“தாய்நிலம்” விமர்சனம்

“தாய்நிலம்” விமர்சனம்

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

அதிமுகவின் பலவீனமா ? த.வெ.க வினரின் மோசடியா ?

அதிமுகவின் பலவீனமா ? த.வெ.க வினரின் மோசடியா ?

“அமெரிக்க ஆவி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“அமெரிக்க ஆவி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

அட்லான்டா இந்தியத் திரைப்பட விழாவில் “என்ன விலை” படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது !

அட்லான்டா இந்தியத் திரைப்பட விழாவில் “என்ன விலை” படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது !

நலிவுற்ற திருநங்கைகளுங்கு நிதியுதவி வழங்கிய “டோரதி” படக்குழு !

நலிவுற்ற திருநங்கைகளுங்கு நிதியுதவி வழங்கிய “டோரதி” படக்குழு !

“அன்பில் அவன் படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“அன்பில் அவன் படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“பத்தா” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“பத்தா” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

நாள்தோறும் நற்பணி ! ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன்

நாள்தோறும் நற்பணி ! ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன்

“ஒட்டாரம்” திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு !

“ஒட்டாரம்” திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு !

“சிக்மா” படத்தில் அறிமுகமானது எனக்கு பெருமை ! நடிகை ஃபரியா அப்துல்லா

“சிக்மா” படத்தில் அறிமுகமானது எனக்கு பெருமை ! நடிகை ஃபரியா அப்துல்லா

“அன்பில் அவன்” படத்தின் விமர்சனம்

“அன்பில் அவன்” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த நடிகர் !

“சிக்மா” படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த நடிகர் !

“பத்தா” படத்தின் விமர்சனம்

“பத்தா” படத்தின் விமர்சனம்

இயக்கமா ? நடிப்பா ? “சிக்மா” இயக்குநர் பேட்டி !

இயக்கமா ? நடிப்பா ? “சிக்மா” இயக்குநர் பேட்டி !

கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான் “சிக்மா” – இயக்குநர் சஞ்சய்

கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான் “சிக்மா” – இயக்குநர் சஞ்சய்

“தி டார்க் ஹெவன் படத்தின் வெற்றிக்கு, சொந்த ஊரில் விழா எடுத்த இயக்குநர் !

“தி டார்க் ஹெவன் படத்தின் வெற்றிக்கு, சொந்த ஊரில் விழா எடுத்த இயக்குநர் !

தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய பிரபல நடிகரின் மனைவி !

தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய பிரபல நடிகரின் மனைவி !

“கோல்டன் பாக்கியம்” டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு !

“கோல்டன் பாக்கியம்” டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு !

“கிட்டி” படத்தின் விமர்சனம்

“கிட்டி” படத்தின் விமர்சனம்

“த்ரிஷ்யம்_3” படத்தின் இந்தி பதிப்பை வெளியிட தடை கோரி வழக்கு !

“த்ரிஷ்யம்_3” படத்தின் இந்தி பதிப்பை வெளியிட தடை கோரி வழக்கு !

நான்கு மாநில டிஜிட்டல் & தொலைக்காட்சி துறைகளை ஒருங்கிணைக்கும் முயற்சி !

நான்கு மாநில டிஜிட்டல் & தொலைக்காட்சி துறைகளை ஒருங்கிணைக்கும் முயற்சி !

“துரோகம் பழகு படத்தின் டீசர் வெளியீட்டு விழா !

“துரோகம் பழகு படத்தின் டீசர் வெளியீட்டு விழா !

25 மாவட்டங்கள், 2 ஆயிரம் ரசிகர்கள் ! நடிகர் சூர்யா தலைமையில் பிரமாண்டமான விழா !

25 மாவட்டங்கள், 2 ஆயிரம் ரசிகர்கள் ! நடிகர் சூர்யா தலைமையில் பிரமாண்டமான விழா !

மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள “மக்கள் காவலன்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள “மக்கள் காவலன்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“பூஜா மேரி ஜான்” திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ஜீ_5 ஹிந்தியில் வெளியாகிறது

“பூஜா மேரி ஜான்” திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ஜீ_5 ஹிந்தியில் வெளியாகிறது

சாதிய வன்மத்தை விதைக்கும் “தி கிராண்ட் மாஸ்டர்” ! படத்தின் விமர்சனம்

சாதிய வன்மத்தை விதைக்கும் “தி கிராண்ட் மாஸ்டர்” ! படத்தின் விமர்சனம்

“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“#LOVE” வெப் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“#LOVE” வெப் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“தாய்நிலம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

“தாய்நிலம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

தனுஷின் ( D_56 ) புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

தனுஷின் ( D_56 ) புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

“ஏழு கடல் ஏழு மலை” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“ஏழு கடல் ஏழு மலை” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“டோரதி” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“டோரதி” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“தி டார்க் ஹெவன்” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“தி டார்க் ஹெவன்” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

மர்மம், ரகசியங்கள் நிறைந்த “ஆக்டோபஸ்” தொடர் ஜீ_5 தமிழில் வெளியாகிறது

மர்மம், ரகசியங்கள் நிறைந்த “ஆக்டோபஸ்” தொடர் ஜீ_5 தமிழில் வெளியாகிறது

ரசிகர்களின் அமோக வரவேற்பில் “என்ன விலை” திரைப்படம் !

ரசிகர்களின் அமோக வரவேற்பில் “என்ன விலை” திரைப்படம் !

“நல்ல படம்” திரைப்படத்தின் விமர்சனம்

“நல்ல படம்” திரைப்படத்தின் விமர்சனம்

“துரோகம் பழகு” படக்குழுவினரை  பாராட்டிய முதலமைச்சர் !

“துரோகம் பழகு” படக்குழுவினரை  பாராட்டிய முதலமைச்சர் !

பா. ரஞ்சித்தின் “வேட்டுவம்” படத்தின் அறிமுக வீடியோ வெளியீடு !

பா. ரஞ்சித்தின் “வேட்டுவம்” படத்தின் அறிமுக வீடியோ வெளியீடு !

விஜய் சேதுபதியின் “பத்தா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

விஜய் சேதுபதியின் “பத்தா” படத்தின் இசை வெளியீட்டு விழா !