அருள்வான் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் S.G.சரவணன் தயாரிப்பில், கணேஷ் விநாயகன் இயக்கத்தில் நடிகர்கள் அருள்நிதி, ஆரவ், ரம்யா பாண்டியன், கிருத்திகா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் ‘அருள்வான்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்நிகழ்வில் நடிகர் காளி வெங்கட் பேசுகையில், இந்தப் படத்தில் நடித்தது மறக்க முடியாத அனுபவம். மனிதர்களும், மிருகங்களும் நடமாட முடியாத கடினமான மலைப் பகுதியில் தான் படப்பிடிப்பு நடைபெற்றது. மலைப்பகுதியில் முட்புதர்களாக இருக்கும் இடத்தில் ஒளிப்பதிவாளர் சுகுமார் பின்னோக்கி ஓடிக் கொண்டிருப்பார். நாங்கள் அவரை பின்தொடர்ந்து செல்வதே சவாலானதாக இருக்கும். இப்படி ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பு தளத்திற்கு செல்வதே சவாலானதாக இருக்கும்.

ஒரு நாள் நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளத்தாக்கு பகுதியில் படப்பிடிப்பு நடந்தது. அங்கு செல்வதற்கு எந்த வசதியும் இல்லை. நடந்து தான் செல்ல வேண்டும். ஒவ்வொரு நடிகர்களும் தங்களுக்கான ‘டென்ட்’டை அவர்களே தூக்கிக் கொண்டு சென்று, அங்கு டென்ட் அடித்து தங்க வேண்டும். படப்பிடிப்பு தளத்திற்கு உள்ளூர் வழிகாட்டி ஒருவர் வேகமாக மலைப்பகுதியில் இறங்கி நடந்து சென்றார். அவரை பின் தொடர்வது கடினமானதாக இருந்தது. ஓரிடத்தில் செங்குத்தான மலைப்பாதையில் நடந்து செல்லும் போது திக் திக் என்று இருந்தது. இவ்வளவு இருந்தும் இறுதி கட்ட படப்பிடிப்பில் இரண்டு நாள் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. அந்தப் படத்தில் சின்ன வேடத்தில் நடித்த எனக்கே அவ்வளவு சவால்கள் இருந்தது என்றால், இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்த நடிகர்களுக்கு எப்படி இருந்திருக்கும். அனைவருக்கும் இது கடினமான மறக்க முடியாத அனுபவமாக இருந்திருக்கும். ஆனால் இப்படத்தின் காட்சிகளை இயக்குநர் எனக்கு காண்பித்த போது மிகவும்  உற்சாகமாக இருந்தது. ஒளிப்பதிவாளர் சுகுமார் ஏற்கனவே காட்டில் பிறந்த மனிதரைப் போலவே படமெடுப்பார். ஆனால் இந்த படத்தில் காட்டை வேறொரு கோணத்தில் காண்பித்திருக்கிறார். படத்தில் எல்லா படப்பிடிப்பு தளங்களும் மேகத்திற்கு மேலே தான் இருந்தது. அதாவது சொர்க்கத்தில் படப்பிடிப்பு நடைபெற்றது போல் இருந்தது.
இவற்றையெல்லாம் கடந்து இப்படத்தின் கதை மிகவும் முக்கியமானது. அடிப்படைக் கல்வியைப் பற்றி பேசும் ஒரு படம். இந்த படம் வெளியான பிறகு நிச்சயமாக பேசப்படும்.

நடிகர் அருள்நிதி ஒரு படத்திற்கு சாதாரணமாக நடிக்க ஒப்புக்கொள்ள மாட்டார். அவருடைய கதை தேர்வு பற்றி அனைவருக்கும் தெரியும். அவர் இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்றால், இந்தப் படம் மிக நன்றாக இருக்கும். இப்படத்தில் உடன் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்தி வேலன் பேசுகையில், பொதுவாக திரைப்பட விநியோகம் என்பது வர்த்தகத்தை சார்ந்தது. இதில் ஒரு சில திரைப்படங்கள் மட்டும் மனதிற்கு நெருக்கமானதாக இருக்கும். அது கருத்தியல் ரீதியாகவும், காட்சி அமைப்பு ரீதியாகவும் அல்லது அதில் பங்களிப்பு செய்திருக்கும் கலைஞர்களுக்காக என ஏதோ ஒரு விசயம் மனதிற்கு நெருக்கமாக அமைந்திருக்கும். அதுபோன்ற படங்களையும் வெளியிட்டிருக்கிறோம். ஒரு அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை பற்றி எனக்குள் நிறைய கேள்விகள் இருக்கிறது. இது தொடர்பாக பல விசயங்களை நான் பகிர்ந்து கொண்டதில்லை. அரசு பள்ளியில் கல்வி பயில்வதற்கான வாய்ப்பு கிடைக்காதவர்களை பற்றி 2026 ஆம் ஆண்டில் ஒரு படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தில் 2000 ஆம் ஆண்டில் கதை நடப்பது போல் விவரித்திருக்கிறார்கள்.‌ இந்த படத்தை பார்க்கும் போதே என்னவோ செய்தது.‌ இந்தக் கதையில் இடம்பெறும் ஒவ்வொரு சிறிய கதை மாந்தர்கள் கூட நேர்த்தியாக செதுக்கப்பட்டிருந்தது.

இயக்குநர் கணேஷ் விநாயகனும், ஒளிப்பதிவாளர் சுகுமாரும் ஏற்கனவே இணைந்து ‘தேன்’ எனும் ஒரு திரைப்படத்தை உருவாக்கி இருந்தார்கள். நாங்கள் தான் அந்த படத்தை வெளியிட்டோம். இந்த இருவருக்கும் காடு, மலை, மக்கள் எனும் விசயத்தில் ஒற்றுமை உண்டு என நினைக்கிறேன். அதனால் மீண்டும் இருவரும் இணைந்து இப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
சினிமாவில் காடு, மலை, அருவி என்றால் சுகுமார் தான் என ஒரு ‘பேட்டர்ன்’னை உருவாக்கி வைத்திருக்கிறார். இந்தப் படத்தில் காட்டின் மொத்த அழகியலையும் காட்சிப்படுத்தி இருக்கிறார் சுகுமார்.

ஆரவ், ரம்யா பாண்டியன் தம்பதியினரின் நடிப்பும் முதிர்ச்சியாக இருக்கும்.  பேபி கிருத்திகாவின் நடிப்பும் நன்றாக இருக்கும். இவற்றையெல்லாம் கடந்து கல்வியைப் பற்றிய ஒரு கடினமான உண்மையை இப்படம் பேசி இருக்கிறது. இந்த படத்தில் அருள் நிதியின் பங்களிப்பையும் அவசியம் குறிப்பிட வேண்டும். திரைக்கதையில் அவர் வருகை தந்த பிறகு கலை படைப்பாக இருந்த படத்தை கமர்ஷியல் படமாக மாற்றிவிட்டார். அருள்நிதி மிகப் பெரிய பர்ஃபெக்ஷனிஸ்ட். தயாரிப்பாளருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குபவர்.

இந்தப் படத்தை வெளியிடுவதை பெருமிதமாக நினைக்கிறேன். ஏனெனில் இன்றைய சூழலில் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை திரை மொழியில் பேசக்கூடிய அரசியல் புரிதலுடன் கூடிய இயக்குநர்கள் மிகவும் குறைவு. இவரைப் போன்ற இயக்குநர்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த வரப்பிரசாதம். அரசு பள்ளியில் பயிலும் முன்னாள் மாணவர்களின் நல சங்கத்திற்காக நடிகர் காளி வெங்கட் தன்னாலான பங்களிப்பை வழங்கி உள்ளது குறித்த செய்தியை பார்த்திருக்கிறேன். இது மிகவும் அழகான விசயம். இதற்காக அவரை பாராட்டுகிறேன். 

இப்போதுள்ள இளைய தலைமுறையினர் அனைவரும் தங்களுடன் படித்த மாணவர்களுடன் தொடர்ந்து இணைய வழியிலான தொடர்பில் இருக்கிறார்கள். ஆனால் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு இது போன்ற சமூக ஊடக தொடர்புகள் இல்லை. நல்லதொரு விசயத்தை சொல்வதற்காக பிரம்மாண்டமான பட்ஜெட்டில் இப்படத்தை தயாரித்து விளம்பரப்படுத்தி வரும் தயாரிப்பாளருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். இது போன்ற படங்கள் வெற்றி பெற்றால், தொடர்ந்து நல்ல விசயத்தை சொல்லும் படங்கள் வரும் என்றார்.

நடிகை பேபி கிருத்திகா பேசுகையில், நான் வளர்ந்து வரும் இளம் நடிகை. திரைத்துறையில் எனக்கு எந்த  பின்னணியும் இல்லை. இந்நிலையில் ‘அருள்வான்’ படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கும்,  தயாரிப்பாளருக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முதல் படத்தில் இவ்வளவு பெரிய நட்சத்திரங்களுடன் இணைந்து பணியாற்றுவேனா ! என்ற கனவு இருந்தது. அந்தக் கனவு நிஜமாகி இருக்கிறது. இந்தப் படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமாரின் இசையில் யுக பாரதியின் வரியில் வெளியான ‘அல்லிப்பூவே ‘ எனும் பாடல் என்னுடைய ஃபேவரைட், அந்தப் பாடலை இதுவரை நூறு முறைக்கும் மேல் கேட்டிருக்கிறேன். இந்தப் படத்தில் அனைவருடனும் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். இந்தப் படத்திற்காக நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் கடினமான சவால்களை எதிர்கொண்டு உருவாக்கி இருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு ரசிகர்கள் ஆதரவு தர வேண்டும் என்றார்.

நடிகை ரம்யா பாண்டியன் பேசுகையில், இந்தப் படத்தின் கதையை கேட்பதற்கு முன் கிராமத்து கதைகளில் சிறிது நாட்கள் வரை நடிக்க வேண்டாம் என்ற மனநிலையில் தான் இருந்தேன். இருந்தாலும் இயக்குனருக்காக இந்த கதையை கேட்டேன். கதையை முழுவதுமாக கேட்ட பிறகு இந்த கதையில் நடிக்கலாம் என விரும்பினேன். ஏனெனில் இந்தப் படத்தின் கரு எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
படிக்கும் போது ஒரு பள்ளியில் இந்த வசதி இல்லை என கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் கல்வி கற்பதற்கான வாய்ப்புகளோ, வசதிகளோ இல்லை என்று நம் மண்ணிலேயே ஒரு இடம் இருக்கிறது. மக்கள் இருக்கிறார்கள். அந்த நிலையிலும் மக்கள் வாழ்கிறார்கள். என கேள்விப்பட்டவுடன் இதில் நிச்சயமாக என்னுடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என தீர்மானித்தேன். இதை என்னுடைய பொறுப்பாகவும் நினைத்தேன். இதுபோன்ற கதையை நம்பி முதலீடு செய்திருக்கும் தயாரிப்பாளருக்கு நன்றி.

வரைபடத்திலேயே இல்லாத ஒரு படப்பிடிப்பு தளத்தை, தொலை தொடர்பு வசதிகளே இல்லாத ஒரு படப்பிடிப்பு தளத்தை, தூங்குவதற்கோ சாப்பிடுவதற்கோ எந்த வசதிகளும் இல்லாத ஒரு படப்பிடிப்பு தளத்தை இந்த படத்தில் தான் நாங்கள் பார்த்தோம். ஆனால் அப்படிப்பட்ட ஒரு இடத்தில் ஒரு ஜீவன் இருக்கிறது. அங்கு மக்கள் வாழ்கிறார்கள். அங்கு செல்வதற்கு கடினமானதாக இருந்தாலும் அங்கு சென்ற பிறகு படப்பிடிப்பில் கலந்து கொண்டதும். அங்குள்ள மக்களுடன் உரையாடியதும். மகிழ்ச்சியாக இருந்தது. அவர்களுடன் பழகி வாழும் போது அதுவும் சுவாரசியமாகவே இருந்தது.

ஒளிப்பதிவாளர் சுகுமாருடன் இணைந்து ஏற்கனவே ‘ரா ரா’ என்ற ஒரு படத்தில் பணியாற்றி இருக்கிறேன். அவர் கிராமங்களை அழகியலுடன் காட்சிப்படுத்துவதை விட, இந்தப் படத்தில் பிரம்மாண்டமாக காண்பித்து இருக்கிறார். அதை இந்தப் படத்தின் முன்னோட்டத்திலேயே நீங்கள் பார்த்திருப்பீர்கள். ஒவ்வொரு காட்சியும் அற்புதமான விஷுவல்  ட்ரீட்டாக இருந்தது.

அருள்நிதி நம்பிக்கை நாயகன். இந்த படத்தில் அருள்நிதி சார் இருக்கிறார் என்று சொன்னவுடன் என்னுடைய நண்பர்களும், தோழிகளும் ‘அவர் இருக்கிறாரா ! அப்போ படம் நன்றாக இருக்கும். படம் வித்தியாசமாக இருக்கும் படத்தில் ஏதேனும் ஒரு விசயம் இருக்கும்’ என்று சொல்கிறார்கள். அவர் அப்படி ஒரு நல்ல பெயரை சம்பாதித்து இருக்கிறார். அதேபோல் இந்தப் படத்திலும் நிச்சயமாக ஒரு நல்ல விசயம் இருக்கிறது. அதைத்தான் அவரும் நம்பி இருக்கிறார். என்னுடைய சக நடிகர் ஆரவ். அற்புதமான அர்ப்பணிப்புள்ள நடிகர். நடிகர் காளி வெங்கட் சொன்னது போல் மலையில் செங்குத்தாக ஏறி, அதன் பிறகு மேலே சென்று அங்குள்ள மரத்தில் ஏறி ஆரவ் நடித்தார். அதேபோல் அருவி ஒன்றின் கீழ் பகுதியில் நடுங்கும் குளிரில் அவர் உடல் முழுவதும் சந்தனத்தை பூசிக்கொண்டு நடித்தார். இவை எல்லாம் மிகவும் கடினமானது. நாங்கள் அனைவரும் அவர் உடனிருந்து பார்த்தோம். அவருடைய அர்ப்பணிப்பை கண்டு வியந்தேன் என்றார்.

இயக்குநர் கணேஷ் விநாயகன் பேசுகையில், இந்த திரைப்படத்தை சாதாரணமாக கடந்து சென்று விட முடியாது. இதில் நிறைய வலிகளும் இருக்கிறது. துன்பங்களும் இருக்கிறது. ‘தகராறு’, ‘வீர சிவாஜி’ ‘ஹைப்பர்’ ( கன்னடம் ) ‘தேன்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறேன். இதை தொடர்ந்து ‘அருள்வான்’ படத்தை இயக்கினேன். அருள்வான் படத்திற்கு முன்னதாக நான் இயக்கிய அனைத்து படத்திற்கும் நான் ஒரு தயாரிப்பாளரை சந்தித்து, கதை சொல்லி, வாய்ப்பு கேட்டு தான் இயக்கினேன். ஆனால் இந்த படத்திற்கு மட்டும் தயாரிப்பாளர் என்னை தொடர்பு கொண்டு இயக்குமாறு கேட்டுக் கொண்டார். இதனால் நான் இந்த தயாரிப்பாளரை நினைத்து பெருமிதம் கொள்கிறேன்.

படத்தின் தயாரிப்பாளரான S.G.சரவணன் அடிப்படையில் ஒரு தொழிலதிபர். இருந்தாலும் சினிமா மீது தீராத ஆர்வம் கொண்டவர். காளி வெங்கட் கதையின் நாயகனாக நடிக்க வைத்து சிறிய அளவில் தொடங்கப்பட்டது தான் இந்தத் திரைப்படம். ஆனால் தயாரிப்பாளர்தான் இப்படத்தினை பெரிதாக்கினார். இந்த படத்திற்கு பெரிய டெக்னீசியனை பயன்படுத்துங்கள். ஜீ வி பிரகாஷ் குமாரிடம் கேளுங்கள் என்றார். தமிழில் 90க்கும் மேற்பட்ட படங்களை தயாரிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதால் என்னுடைய நிறுவனத்திற்கு 90 பிக்சர்ஸ் என பெயரிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். நிச்சயம் அவர் 90க்கும் மேற்பட்ட படங்களை தயாரிப்பார். அவர் சினிமாவைப் பற்றி எப்போதும் சிந்தித்துக் கொண்டிருக்கிறார். இந்த நிறுவனம் தொடர்ந்து வெற்றி பெற்று வளர வேண்டும். இப்படத்தை இயக்க வாய்ப்பளித்ததற்காக தயாரிப்பாளருக்கு நன்றி. 

இந்தப் படத்திற்கு மூன்று ஹீரோக்கள். ஆரவ், அருள்நிதி, பேபி கிருத்திகா. இதில் பேபி கிருத்திகாவின் பார்வையில் தான் இப்படத்தின் கதை இருக்கும்.‌ படப்பிடிப்பு தளம் சாலை வசதி இல்லாத மலை பகுதி என்பதால்.. 18 நாட்கள் அங்கேயே அனைத்து கலைஞர்களும் தங்கினார்கள்.  சரியான உணவு கிடையாது. நடைபாதை கூட இருக்காது. இரவு நேரத்தில் விலங்குகள் வரக்கூடிய அபாயம். இவ்வளவு இருந்தும் பேபி கிருத்திகா அர்ப்பணிப்புடன் நடித்தார். அதனால் இந்தப் படத்தில் பேபி கிருத்திகாவிற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும். அவருக்கு என் வாழ்த்துக்கள்.

நடிகர் ஆரவ்விடம் கதை சொல்லும் முன் இந்தக் கதையில் மாவட்ட கலெக்டர் மற்றும் ஒரு மாணவி என இரண்டு முக்கியமான கதாபாத்திரங்கள் இருக்கிறது. உங்களுக்கு சரியாக வருமா ? என கேட்டுவிட்டு தான் கதையை சொல்லத் தொடங்கினேன். கதையை முழுவதும் கேட்டுவிட்டு, ‘கதை எனக்குப் பிடித்திருக்கிறது’ என்றார். இந்தக் கதையை நாம் சொல்லாமல் வேறு யார் சொல்வார் ? இது தனிப்பட்ட விசயம் இல்ல. சமூகம் சார்ந்த விசயம். அதனால் நான் நடிக்கிறேன்’ என முழு மனதுடன் சம்மதம் தெரிவித்தார். அவருடைய லைஃப் ஸ்டைல் என்ன ? என்று எனக்குத் தெரியாது. ஆனால் 18 நாட்கள் அந்த மலைப்பகுதியில் டென்ட் அடித்து எங்களுடன் தங்கி முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார்.

இப்படத்தின் கதையின் முற்பகுதியில் இந்த மண்ணுக்கும், மக்களுக்குமான உரிமைகளுக்காக போராடும் போராளியாக ஆரவ் இருப்பார். படத்தில் இரண்டாம் பகுதியில் இந்த சமூகத்திற்காக போராடும் மனிதராக அருள்நிதி நடித்திருக்கிறார். இந்தத் தருணத்தில் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் இப்படத்தில் நடித்ததற்காக நடிகர் ஆரவ்விற்கு நன்றி.

நடிகர் அருள் நிதியுடன் எனக்கு 14 ஆண்டு கால நட்பு இருக்கிறது. அவருடன் நான் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படம் இது. எளிமையானவர். அன்பானவர். எல்லோரிடத்திலும் இயல்பாக பழகக்கூடியவர். இவர் வெற்றி பெற்றவர் இவர் தோல்வி அடைந்தவர் என்ற பாரபட்சம் இல்லாமல் பழகக் கூடியவர். அவருக்கு கதை பிடித்திருந்தால் இணைந்து பணியாற்றுவார். இந்தப் படத்தின் கதையை அவரிடம் சொன்னேன். கதையைக் கேட்டு விட்டு இதை நாம் அவசியம் சொல்ல வேண்டிய படம். நான் நடிக்கிறேன் என்றார். அவருக்கும் நன்றி.

இதன் பின்னர் நடிகர் அருள்நிதி பகிர்ந்து கொண்டதாவது, இந்தப் படத்தின் கதையை இயக்குநர் சொல்லிவிட்டு, ஐந்து நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் போதும் என்றார். பிறகு படப்பிடிப்பு தளத்திற்கு சென்றவுடன் ஐந்து நாள் என்பது பத்து நாளாகவும், பிறகு 15 நாளாகவும், பிறகு 20 நாளாகவும் உயர்ந்தது. இப்படத்தின் கதையை கேட்ட பிறகு நான் முழு நீள படத்தில் நடித்திருந்தாலும் இது போன்றதொரு கதையை, கதாபாத்திரத்தை என்னால் ஏற்று நடித்திருக்க முடியுமா ? என தெரியாது. இந்த படத்தில் முத்துவேல் என்ற மாவட்ட ஆட்சியர் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். குழந்தைகளுக்கான கல்வியின் அவசியம் குறித்து விவரித்திருக்கும், பேசியிருக்கும் படம். அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

நடிகர் ஆரவ் பகிர்ந்து கொண்டதாவது, இந்தப் படத்தின் கதையை இயக்குநர் சொன்ன பிறகு, இதுபோன்ற கதாபாத்திரம் திரையுலக பயணத்தில் எனக்கு மீண்டும் அமையுமா ? என தெரியாது. அதனால் நடிக்க ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்பு தளத்தில் அருள்நிதியுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால் காளி வெங்கட் உடன் இணைந்து நடித்திருக்கிறேன். அந்த காட்சிகளில் அவர் ஒரு அற்புதமான நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார். அவருடைய நடிப்பை பார்த்து நான் வியந்திருக்கிறேன் என்றார்.

dhamaraimurasu

dhamaraimurasu

dhamaraimurasu admin

Related Posts

“ராவ் பகதூர்” ( தெலுங்கு ) திரைப்படத்தின் விமர்சனம்

ஶ்ரீ சக்ராஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ், A+S மூவிஸ், பெட்டர் இன்வெஸ்ட் மீடியா விஷன் நிறுவனங்கள் தயாரிப்பில், சத்யதேவ், விகாஸ் முப்பலா, தீபா தாமஸ், ஆணந்த் பாரதி உள்ளிட்டோர் நடிப்பில், வெங்கடேஷ் மகா இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “ராவ் பகதூர் ( தெலுங்கு ).…

Read more

யோகி பாபு நடித்துள்ள “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

நடிகர் யோகி பாபு நடித்து 300 ஆவது திரைப்படமாக வருகிற ஜூலை 17-ஆம் தேதி வெளி வர இருக்கும் திரைப்படைப்பு ‘அர்ஜுனன் பேர் பத்து’. இப்படத்தை ரா. ராஜ்மோகன் எழுதி இயக்கியுள்ளார்.இப்படத்தில் யோகி பாபுவுடன், அனாமிகா மஹி, காளி வெங்கட், அருள் தாஸ்,…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்கத்தவறிய செய்திகள்

“லெட்சுமி காந்தன் கொலை வழக்கு” படத்தின் திரைவிமர்சனம்

“லெட்சுமி காந்தன் கொலை வழக்கு” படத்தின் திரைவிமர்சனம்

ஐ, நோபடி ( I, Nobody ) திரைப்படத்தின் விமர்சனம்

ஐ, நோபடி ( I, Nobody ) திரைப்படத்தின் விமர்சனம்

“ராவ் பகதூர்” ( தெலுங்கு ) திரைப்படத்தின் விமர்சனம்

“ராவ் பகதூர்” ( தெலுங்கு ) திரைப்படத்தின் விமர்சனம்

திண்டுக்கல்லில் பெருகிவரும் கள்ளத் துப்பாக்கி கலாசாரம் ! திணறும் வனத்துறை, கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

திண்டுக்கல்லில் பெருகிவரும் கள்ளத் துப்பாக்கி கலாசாரம் ! திணறும் வனத்துறை, கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

யோகி பாபு நடித்துள்ள “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

யோகி பாபு நடித்துள்ள “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“முதற்கனல்” படத்தின் திரைவிமர்சனம்

“முதற்கனல்” படத்தின் திரைவிமர்சனம்

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

“தாதா தி சவுரவ் கங்குலி ஸ்டோரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“தாதா தி சவுரவ் கங்குலி ஸ்டோரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“வஞ்சி” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“வஞ்சி” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“கட்டா குஸ்தி_2” திரைப்படத்தின் விமர்சனம்

“கட்டா குஸ்தி_2” திரைப்படத்தின் விமர்சனம்

அருள்வான் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

அருள்வான் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“டார்க்” படத்தின் திரைவிமர்சனம்

“டார்க்” படத்தின் திரைவிமர்சனம்

அமெரிக்க தமிழ்ச்சங்க விழாவில் கவனம் ஈர்த்த “திருக்குறள்_2” திரைப்படம் !

அமெரிக்க தமிழ்ச்சங்க விழாவில் கவனம் ஈர்த்த “திருக்குறள்_2” திரைப்படம் !

பிரமாண்டமாக தயாராகும் “திருக்குறள்_2” திரைப்படம் !

பிரமாண்டமாக தயாராகும் “திருக்குறள்_2” திரைப்படம் !

“மனு” திரைப்படத்தின் விமர்சனம்

“மனு” திரைப்படத்தின் விமர்சனம்

“நாகபந்தம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“நாகபந்தம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“லவ் ஓ லவ்” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“லவ் ஓ லவ்” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

பூஜையிடன் படப்பிடிப்பை தொடங்கிய “லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி” படக்குழுவினர் !

பூஜையிடன் படப்பிடிப்பை தொடங்கிய “லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி” படக்குழுவினர் !

பூஜையிடன் துவங்கிய “குட் நியூஸ்” படத்தின் படப்பிடிப்பு !

பூஜையிடன் துவங்கிய “குட் நியூஸ்” படத்தின் படப்பிடிப்பு !

“லவ் ஓ லவ்” படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரித்த டீசர் !

“லவ் ஓ லவ்” படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரித்த டீசர் !

குறும்பட போட்டியில் திறமைசாலிகளை வாழ்த்திய பிரபலங்கள் !

குறும்பட போட்டியில் திறமைசாலிகளை வாழ்த்திய பிரபலங்கள் !

“ஹபீபி” படக்குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா !

“ஹபீபி” படக்குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா !

நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் “சூப்பர் சுப்பு” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் “சூப்பர் சுப்பு” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

திருமுட்டம் அருகே.. தொடரும் மணல் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

திருமுட்டம் அருகே.. தொடரும் மணல் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

“எங்கள் தங்கம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“எங்கள் தங்கம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

வடசென்னையில் தினந்தோறும் 1000 கிலோ ரேசன் அரிசியை கடத்தும் அரசு ஊழியர் சடகோபால் !

வடசென்னையில் தினந்தோறும் 1000 கிலோ ரேசன் அரிசியை கடத்தும் அரசு ஊழியர் சடகோபால் !

திருப்பூரில் மாணவிகளுக்கு ஆபாச கராத்தே பயிற்சி ! கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் கண்டனம்

திருப்பூரில் மாணவிகளுக்கு ஆபாச கராத்தே பயிற்சி ! கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் கண்டனம்

கராத்தே பயிற்சி என ஆபாச வீடியோ வெளியீடு ! வலுக்கும் கண்டனங்கள், கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

கராத்தே பயிற்சி என ஆபாச வீடியோ வெளியீடு ! வலுக்கும் கண்டனங்கள், கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

“மக்கள் தலைவா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“மக்கள் தலைவா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“ஆட்டி” திரைப்படத்தின் விமர்சனம்

“ஆட்டி” திரைப்படத்தின் விமர்சனம்

“நிழல்” திரைப்படத்தின் விமர்சனம்

“நிழல்” திரைப்படத்தின் விமர்சனம்

இஸ்லாமிய குடும்பத்தின் வாழ்வியல் ” ஹபீபி” ! விமர்சனம்

இஸ்லாமிய குடும்பத்தின் வாழ்வியல் ” ஹபீபி” ! விமர்சனம்

ஸ்லம் டாக் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு

ஸ்லம் டாக் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு

நெய்க்காரப்பட்டி கோவில் திருவிழாவில், கூட்ட நெரிசலில் சிக்கி 20_க்கும் மேற்பட்டோர் காயம் !

நெய்க்காரப்பட்டி கோவில் திருவிழாவில், கூட்ட நெரிசலில் சிக்கி 20_க்கும் மேற்பட்டோர் காயம் !

18 ஆம் நூற்றாண்டின் “வாள்” பழனி அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு !

18 ஆம் நூற்றாண்டின் “வாள்” பழனி அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு !

போதைப்பொருள் நடமாட்டத்தை வனத்துறையினருடன் இணைந்து கண்காணித்த காவல்துறையினர் !

போதைப்பொருள் நடமாட்டத்தை வனத்துறையினருடன் இணைந்து கண்காணித்த காவல்துறையினர் !

பழனி அருகே.. நெய்க்காரப்பட்டி கோவில் திருவிழா ! கூட்டத்தை கட்டுப்படுத்த திணறும் காவல்துறையினர் !

பழனி அருகே.. நெய்க்காரப்பட்டி கோவில் திருவிழா ! கூட்டத்தை கட்டுப்படுத்த திணறும் காவல்துறையினர் !

“லைட் வெயிட் பேபி” விறுவிறுப்பான படப்பிடிப்பில் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் !

“லைட் வெயிட் பேபி” விறுவிறுப்பான படப்பிடிப்பில் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் !

மடத்துக்குளம் அருகே.. கார் மோதி 2 வயது குழந்தை பலி ! பெற்றோர் படுகாயம் ! 

மடத்துக்குளம் அருகே.. கார் மோதி 2 வயது குழந்தை பலி ! பெற்றோர் படுகாயம் ! 

“சம்ஹாரம்” திரைப்படத்தின் விமர்சனம்

“சம்ஹாரம்” திரைப்படத்தின் விமர்சனம்

“மூன்றாம் கண்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“மூன்றாம் கண்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

கேன்ஸ் திரைப்பட விழாவில் “பாலன் தி பாய்” திரைப்படத்திற்கு வரவேற்பு !

கேன்ஸ் திரைப்பட விழாவில் “பாலன் தி பாய்” திரைப்படத்திற்கு வரவேற்பு !

“அந்தரன்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !

“அந்தரன்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !

“ஸ்லம் டாக்” படத்தின் டீசர் ஜூன் 8 ஆம் தேதி வெளியாகிறது !

“ஸ்லம் டாக்” படத்தின் டீசர் ஜூன் 8 ஆம் தேதி வெளியாகிறது !

தி இந்தியா ஸ்டோரி திரைப்படம் ஜூலை 24 ஆம் தேதி வெளியாகிறது !

தி இந்தியா ஸ்டோரி திரைப்படம் ஜூலை 24 ஆம் தேதி வெளியாகிறது !

அங்கீகாரம் படத்திற்கு “U” சான்றிதழ் வழங்கிய தணிக்கை வாரியம் !

அங்கீகாரம் படத்திற்கு “U” சான்றிதழ் வழங்கிய தணிக்கை வாரியம் !

ஒப்பந்ததாரரிடம் 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது ! பல்லடம் அருகே பரபரப்பு !

ஒப்பந்ததாரரிடம் 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது ! பல்லடம் அருகே பரபரப்பு !

“கலர்ஸ்” நிறுவனத்தை திறந்து வைத்த நடிகை பிரியா பவானி சங்கர் !

“கலர்ஸ்” நிறுவனத்தை திறந்து வைத்த நடிகை பிரியா பவானி சங்கர் !

“ஈகோ ராமன்” படத்தின் விமர்சனம்

“ஈகோ ராமன்” படத்தின் விமர்சனம்

பெத்தி படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !

பெத்தி படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !

பழனி அருகே அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் காவலப்பட்டி கிராமத்தினர் !

பழனி அருகே அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் காவலப்பட்டி கிராமத்தினர் !

நடன இயக்குனர் “ஷெரீப்_250” கொண்டாட்டம் !

நடன இயக்குனர் “ஷெரீப்_250” கொண்டாட்டம் !

தனித்துவமான வேடத்தில் சசிகுமார் நடித்துள்ள புதிய படத்தின் அப்டேட்ஸ் !

தனித்துவமான வேடத்தில் சசிகுமார் நடித்துள்ள புதிய படத்தின் அப்டேட்ஸ் !

“உயிரிணையே” இசை ஆல்பம் வெளியீட்டு விழா !

“உயிரிணையே” இசை ஆல்பம் வெளியீட்டு விழா !

“பெத்தி” திரைப்படம் ராம் சரணுக்கு தேசிய விருதை பெற்றுத்தரும் ! – சிவராஜ்குமார்

“பெத்தி” திரைப்படம் ராம் சரணுக்கு தேசிய விருதை பெற்றுத்தரும் ! – சிவராஜ்குமார்

சிம்பு நடிக்கும் “அரசன்” படத்தின் புதிய தகவல்கள் !

சிம்பு நடிக்கும் “அரசன்” படத்தின் புதிய தகவல்கள் !

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தால், கொள்ளை லாபம் பார்க்கும் FL-2 பார் உரிமையாளர்கள் !

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தால், கொள்ளை லாபம் பார்க்கும் FL-2 பார் உரிமையாளர்கள் !

பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே ? அதிகரிக்கும் பாலியல் சீண்டல்கள் !

பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே ? அதிகரிக்கும் பாலியல் சீண்டல்கள் !

“பாதாம்கீர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியீடு !

“பாதாம்கீர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியீடு !

பரபரப்பான ஆக்ஷ்ன் த்ரில்லர் கதைகளத்தில் உருவாகும் “சமவர்த்தி” !

பரபரப்பான ஆக்ஷ்ன் த்ரில்லர் கதைகளத்தில் உருவாகும் “சமவர்த்தி” !

“நாக பந்தம் திரைப்படம் ஜூலை 3 ஆம் தேதி வெளியீடு !

“நாக பந்தம் திரைப்படம் ஜூலை 3 ஆம் தேதி வெளியீடு !

“தி இந்தியா ஸ்டோரி” படத்தின் டீசர் விரைவில் வெளியீடு !

“தி இந்தியா ஸ்டோரி” படத்தின் டீசர் விரைவில் வெளியீடு !

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “கான் சிட்டி” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “கான் சிட்டி” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்ட ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் !

சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்ட ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் !

ஆக்ஷ்ன், த்ரில்லர் கதையில் உருவாகிவரும் “கொம்பா” திரைப்படம் !

ஆக்ஷ்ன், த்ரில்லர் கதையில் உருவாகிவரும் “கொம்பா” திரைப்படம் !

“கங்கணம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“கங்கணம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“அதிரடி” படவிழாவில் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் !

“அதிரடி” படவிழாவில் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் !

வரவேற்பை குவிக்கும் “தாழ் திறவா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் !

வரவேற்பை குவிக்கும் “தாழ் திறவா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் !

“விசாரணை கைதி” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“விசாரணை கைதி” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“பிளாஸ்ட்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“பிளாஸ்ட்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“பெத்தி” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“பெத்தி” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“ஹபீபி” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“ஹபீபி” படத்தின் இசை வெளியீட்டு விழா !

கருப்பசாமியாக களமிறங்கி அநீதியை அழிக்கும் சூர்யா ! “கருப்பு” படத்தின் விமர்சனம்

கருப்பசாமியாக களமிறங்கி அநீதியை அழிக்கும் சூர்யா ! “கருப்பு” படத்தின் விமர்சனம்

சிவகார்த்திகேயன் நடிக்கும் “சேயோன்” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்த கமல்ஹாசன்

சிவகார்த்திகேயன் நடிக்கும் “சேயோன்” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்த கமல்ஹாசன்

“சட்டென்று மாறுது வானிலை” படத்தின் விமர்சனம்

“சட்டென்று மாறுது வானிலை” படத்தின் விமர்சனம்

“சிலம்பம்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“சிலம்பம்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

நலத்திட்ட உதவிகள் வழங்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த் !

நலத்திட்ட உதவிகள் வழங்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த் !

மாமியாரை தாக்கிய மருமகன் கொலை ! பல்லடம் அருகே பரபரப்பு !

மாமியாரை தாக்கிய மருமகன் கொலை ! பல்லடம் அருகே பரபரப்பு !

இயக்குனராக அவதாரம் எடுத்த நடிகர் ராம் போதினேனி !

இயக்குனராக அவதாரம் எடுத்த நடிகர் ராம் போதினேனி !

பிரபுதேவா, வடிவேலு நடித்துள்ள “பேங் பேங்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

பிரபுதேவா, வடிவேலு நடித்துள்ள “பேங் பேங்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

மர்மம், கொலை, கிராமத்து ரகசியங்கள் நிறைந்த “கொலை சேவல்” திரைப்படம் ஜீ_5 தளத்தில் ஒளிபரப்பு !

மர்மம், கொலை, கிராமத்து ரகசியங்கள் நிறைந்த “கொலை சேவல்” திரைப்படம் ஜீ_5 தளத்தில் ஒளிபரப்பு !

கலை துறையினருக்கு, கலை ஞானியின் கோரிக்கை !

கலை துறையினருக்கு, கலை ஞானியின் கோரிக்கை !

நிலக்கோட்டை அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் கைது !

நிலக்கோட்டை அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் கைது !

திண்டுக்கல்லில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் பலி !

திண்டுக்கல்லில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் பலி !

மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஹபீபி” படத்திற்கு யூ சான்றிதழ் !

மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஹபீபி” படத்திற்கு யூ சான்றிதழ் !

“உத்சவ் 2026” விழாவில் “தேவி ரத்னா” விருதால் கௌரவிக்கப்பட்ட நடிகர் ரவி மோகன் !

“உத்சவ் 2026” விழாவில் “தேவி ரத்னா” விருதால் கௌரவிக்கப்பட்ட நடிகர் ரவி மோகன் !

பழமையான கதையின் பதிவாக உருவாகும் நாட்டார் மர்மகதை !

பழமையான கதையின் பதிவாக உருவாகும் நாட்டார் மர்மகதை !

“பெத்தி” படம் மூலம் சர்வதேச விநியோகத்தில் களமிறங்கும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ்

“பெத்தி” படம் மூலம் சர்வதேச விநியோகத்தில் களமிறங்கும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ்

சிவகார்த்திகேயனின் “வேலும் மயிலும்” ஆன்மீக இசைப் பாடல் வெளியீடு !

சிவகார்த்திகேயனின் “வேலும் மயிலும்” ஆன்மீக இசைப் பாடல் வெளியீடு !

“சைலண்ட் இன்ஃபுளூயன்சர்” இசை ஆல்பம் வெளியீடு !

“சைலண்ட் இன்ஃபுளூயன்சர்” இசை ஆல்பம் வெளியீடு !

“எக்ஸாம்” இணைய தொடரில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள துரை சுதாகர் !

“எக்ஸாம்” இணைய தொடரில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள துரை சுதாகர் !

பாராட்டுக்களை குவிக்கும் “அங்கீகாரம்” படத்தின் டிரெய்லர் !

பாராட்டுக்களை குவிக்கும் “அங்கீகாரம்” படத்தின் டிரெய்லர் !

வடசென்னை_2 படத்தின் புதிய அப்டேட் அறிவித்த ஐஸ்வர்யா ராஜேஷ் !

வடசென்னை_2 படத்தின் புதிய அப்டேட் அறிவித்த ஐஸ்வர்யா ராஜேஷ் !

“சட்டென்று மாறுது வானிலை” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“சட்டென்று மாறுது வானிலை” படத்தின் முன் வெளியீட்டு விழா !

நகைச்சுவை, த்ரில்லர் கதையில் சந்தானம் நடிப்பில் உருவாகும் “லவ் பைட்” !

நகைச்சுவை, த்ரில்லர் கதையில் சந்தானம் நடிப்பில் உருவாகும் “லவ் பைட்” !

ப்ரைம் வீடியோ தயாரிப்பில் உருவாகியுள்ள “சிஸ்டம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

ப்ரைம் வீடியோ தயாரிப்பில் உருவாகியுள்ள “சிஸ்டம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

மாணவர்களின் எதிர்காலம் ஒளிர, கபிலன் வைரமுத்து வாழ்த்து !

மாணவர்களின் எதிர்காலம் ஒளிர, கபிலன் வைரமுத்து வாழ்த்து !

“29” படத்தின் விமர்சனம்

“29” படத்தின் விமர்சனம்

சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் ஶ்ரீ லீலா மாணவர்களுடன் கலந்துரையாடல் !

சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் ஶ்ரீ லீலா மாணவர்களுடன் கலந்துரையாடல் !