ஸ்லம் டாக் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு

Puri Connects மற்றும் JB Motion Pictures நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பான்-இந்தியா ஆக்சன் திரைப்படம் “ஸ்லம் டாக்”. பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள இந்த திரைப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் பிரம்மாண்ட டீசர்  வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர். டைட்டில் அறிவிப்பு மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரிலிருந்தே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள “ஸ்லம் டாக்” திரைப்படம் குறித்து நிகழ்வில் பல சுவாரஸ்யமான தகவல்கள் பகிரப்பட்டன.

இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் JB நாராயண் ராவ் கொண்ட்ரோலா   பேசியதாவது: இது தயாரிப்பாளராக எனது முதல் திரைப்படம். இயக்குநர் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி ஆகியோருடன் இணைந்து இந்த படத்தை தயாரித்தது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. மேலும், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி போன்ற சிறந்த நடிகருடன் எனது முதல் திரைப்படத்தை தொடங்கியிருப்பது மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.

கதாநாயகி சம்யுக்தா, தபு, துனியா விஜய் உள்ளிட்ட அனைத்து நடிகர், நடிகைகளுக்கும் எனது நன்றிகள். விஷ்வா, விடிவி கணேஷ், பிரம்மாஜி மற்றும் இந்த படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

தயாரிப்பாளர் சார்மி கௌர் பேசியதாவது: 2002-ஆம் ஆண்டு ‘காதல் அழிவதில்லை’ படத்தின் மூலம் முதன்முதலாக சென்னை வந்த நாட்கள் இன்னும் நினைவில் இருக்கின்றன. அதன் பிறகு பல படங்களில் நடித்தேன். ‘ஸ்லம் டாக்’ திரைப்படத்தின் மூலம் மீண்டும் சென்னை வந்துள்ளேன். ஆனால் இந்த முறை நடிகையாக அல்ல, தயாரிப்பாளராக. எங்கள் Puri Connects நிறுவனத்தின் சார்பில் பல வெற்றிப் படங்களை தயாரித்துள்ளோம். ஆனால் நேரடி தமிழ் திரைப்படமாக இது எங்களின் முதல் முயற்சி. அதனால் இந்தப் படம் எனக்கு மிகவும் சிறப்பானது. ‘ஸ்லம் டாக்’ ஒரு ஆக்சன் மற்றும் உணர்வுகளின் கலவையாக உருவாகியுள்ளது. இதில் நீங்கள் மிகவும் இயல்பான, நிஜத்தன்மை கொண்ட ஆக்சன் காட்சிகளையும், மனிதர்களின் வாழ்க்கையோடு நெருக்கமாக இணைந்த உணர்வுகளையும் காண்பீர்கள். பூரி ஜெகன்நாத் சாரின் திரைக்கதை சொல்லும் விதமும், விஜய் சேதுபதியின் நடிப்பும் இணைந்து இந்தப் படத்தை மேலும் சிறப்பாக்கியுள்ளன.

விஜய் சேதுபதி முதலில் ஒரு சிறந்த நடிகர். அதே நேரத்தில் மிகப்பெரிய நட்சத்திரமும் கூட. ஒரு திரைப்படத்திற்கு நடிப்பு திறமையும், வணிக ரீதியான மதிப்பும் ஒருசேர தேவைப்படும் போது, அந்த இரண்டையும் சமநிலைப்படுத்தும் நடிகர் அவர். இந்தப் படத்தில் இணைந்ததற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். உலகம் முழுவதும் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் சிறந்த முறையில் இந்தப் படத்தை வெளியிடுவோம் என்று உறுதியளிக்கிறேன். தபு பற்றி சொல்ல வேண்டுமென்றால், இந்தக் கதாபாத்திரத்திற்கு ஆரம்பத்திலிருந்தே அவரைத்தான் நினைத்திருந்தோம். கதையை கேட்டவுடனேயே அவர் சம்மதித்தார். தனது கதாபாத்திரம் மட்டுமல்லாமல், முழுக் கதையையும் பாராட்டி எங்களுக்கு நம்பிக்கையளித்தார். இன்றுவரை எங்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார்.

துனியா விஜய் இந்தப் படத்தின் முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதையை கேட்டவுடனேயே உடனடியாக ஒப்புக்கொண்டார். தனது படப்பிடிப்பு தேதிகளையும் எங்களுக்காக மாற்றி அமைத்துக் கொடுத்தார். அவருடைய ஒத்துழைப்பிற்கும், அன்பிற்கும் எப்போதும் நன்றிக்கடன்பட்டிருப்போம்.
சம்யுக்தாவை முதன்முதலில் சந்தித்த தருணம் இன்னும் நினைவில் இருக்கிறது. கதாபாத்திரத்திற்கு மிகவும் இயல்பான தோற்றமும், நடிப்புத் திறமையும் கொண்ட நடிகை தேவைப்பட்டது. சம்யுக்தா அந்த கதாபாத்திரத்தை மிக அழகாக உயிர்ப்பித்தார். அவருடைய இயல்பான நடிப்பும், எளிமையான தோற்றமும் ரசிகர்களை நிச்சயம் கவரும்.

விடிவி கணேஷ் பற்றி சொல்ல வேண்டுமென்றால், சமூக வலைதளங்களில் அவருடைய வீடியோக்களை பார்த்தாலே சிரிப்பு வந்துவிடும். இந்தக் கதாபாத்திரத்திற்கு அவரைத்தான் தேர்வு செய்ய வேண்டும் என்று நினைத்தோம். படத்தில் அவர் வரும் ஒவ்வொரு காட்சியும் ரசிகர்களுக்கு புத்துணர்ச்சியை அளிக்கும். இந்தப் படத்தில் பிரம்மாஜியும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய பங்களிப்பும் குறிப்பிடத்தக்கது.

எங்கள் நிறுவனத்தின் CEO விஷு ரெட்டிக்கு சிறப்பு நன்றி. படப்பிடிப்பு தளத்தில் இயக்குநருக்கு எந்தவிதமான அழுத்தமும் வராமல் பார்த்துக் கொண்டவர் அவர். தயாரிப்பு, மார்க்கெட்டிங், விற்பனை, விளம்பரம் என அனைத்து துறைகளையும் ஒரே நேரத்தில் கவனித்து இந்தப் படத்தை சிறப்பாக உருவாக்க உதவியுள்ளார். அவருடைய உழைப்பிற்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் அது போதாது.

இந்தப் படத்தை ஆதரித்த ஜேபி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் முழு படக்குழுவிற்கும் என் நன்றிகள். ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ ரசிகர்களை பெரிதும் கவரும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது என்றார்.

இசையமைப்பாளர்  ஹர்ஷவர்தன் ராமேஷ்வர்   பேசியதாவது, இந்த படத்தில் மொத்தம் ஆறு பாடல்கள் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடலும் வித்தியாசமான அனுபவத்தை தரக்கூடிய வகையில் உருவாகியுள்ளது. ரசிகர்களுக்கு இது ஒரு இனிய ஆச்சரியமாக இருக்கும். பாடல்கள் மட்டுமின்றி, பின்னணி இசையிலும் நிறைய புதுமைகளை கொண்டு வர முயற்சித்துள்ளோம் என்றார்.

நடிகர் விடிவி கணேஷ் பேசியதாவது: இந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு திடீரென வந்தது. ஒரு நாள் பூரி ஜெகன்நாத் அழைத்தார். உடனே எனக்கு நினைவுக்கு வந்தது ‘போக்கிரி’. இன்றைய தமிழக முதலமைச்சர் நடித்த அந்த பிரம்மாண்ட வெற்றிப் படத்தின் ஒரிஜினலை இயக்கியவர் அவர்தான். அதோடு பல மாஸ் ஹிட் படங்களை கொடுத்த மிகப்பெரிய இயக்குநர். என் மேனேஜரும் அவரைப் பற்றி நிறைய சொல்லியிருந்தார். அதனால் அவரை சந்திக்கும்போது ஒரு விதமான எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால் நேரில் சந்தித்தபோது, அவ்வளவு பெரிய வெற்றிகளைப் பெற்ற இயக்குநர் என்ற எந்த பந்தாவும் இல்லாமல், மிகவும் எளிமையான, மென்மையான மனிதராக அவரை பார்த்தேன். அவருடன் அமர்ந்து பேசியதும், ஒன்றாக உணவருந்தியதும் மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது.

இந்தப் படத்தில் நான் இதுவரை நடித்திராத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். அந்த கதாபாத்திரம் பற்றிய விவரங்களை இப்போது சொல்ல முடியாது. ஆனால் அதை நடித்தபோதே மிகவும் ரசித்தேன். பூரி சார் நடிகர்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து வேலை வாங்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

தபு மேடம் ரசிகன் நான்  அவருடைய அன்பையும் அவர் குழுவினரின் அன்பை நான் மறக்க முடியாது. குறிப்பாக ஹைதராபாத்தில் படப்பிடிப்பு நடந்தபோது, தினமும் எங்களுக்கு அவர் அனுப்பிய உணவுகள் மிகவும் பிரமாண்டமாக இருக்கும். மட்டன், சிக்கன், புலாவ் என பல வகையான உணவுகளை நிறைய அளவில் அனுப்புவார் அவர் கூட நடித்த அனுபவம் மறக்க முடியாதது. அந்த அன்பும், உபசரிப்பும் என்னை மிகவும் கவர்ந்தது. படப்பிடிப்பு அனுபவத்தை இன்னும் இனிமையாக்கிய விஷயங்களில் இதுவும் ஒன்று.

படப்பிடிப்பின் முதல் நாளிலேயே விஜய் சேதுபதி சாரின் அர்ப்பணிப்பை பார்த்து ஆச்சரியப்பட்டேன். தெலுங்கு டயலாக்குகளை எழுதி வைத்து மனப்பாடம் செய்வார். கேரவனில் உட்கார்ந்து ஓய்வெடுப்பதை விட, வெளியிலேயே அமர்ந்து தொடர்ந்து தனது வேலையில் முழு கவனத்துடன் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்த அர்ப்பணிப்பைப் பார்த்தபோது, நான் முன்பு பணியாற்றிய இன்றைய தமிழக முதலமைச்சரின் உழைப்பும், அர்ப்பணிப்பும் நினைவுக்கு வந்தது. அதே அளவிலான ஈடுபாட்டையும், உழைப்பையும் விஜய் சேதுபதி சாரிடமும் பார்த்தேன்.

நடிகர்கள் அனைவரிடமிருந்தும் சிறந்த நடிப்பை வாங்கிக் கொள்ளும் திறமை பூரி சாருக்கு இருக்கிறது. அதே நேரத்தில் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் ஒழுக்கமாகவும், நேர்த்தியாகவும் செயல்படுவார். கலைஞர்களை சரியான நேரத்தில் அழைத்து, திட்டமிட்டபடி பணிகளை முடித்து விடுவார். அந்த தொழில்முறை அணுகுமுறையே அவரை இந்த உயரத்தில் நிலைநிறுத்தியுள்ளது.

இந்தப் படத்தில் நான் சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும், மிகவும் மகிழ்ச்சியுடன் நடித்தேன். படக்குழுவில் இருந்த உதவி இயக்குநர்கள் முதல் தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை அனைவரும் அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளனர். இந்தப் படத்திற்காக மிகப்பெரிய அளவில் முதலீடு செய்யப்பட்டிருக்கிறது. டீசரிலேயே அதன் தரம் தெரிகிறது. ‘ஸ்லம் டாக்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். இந்தப் படத்திற்காக உழைத்த ஒவ்வொருவருக்கும் எனது பாராட்டுகள் என்றார்.

நடிகை சம்யுக்தா பேசியதாவது,
பூரி ஜெகன்நாத் சாருடன் பணியாற்றியது ஒரு தனித்துவமான அனுபவமாக இருந்தது. ஒரு காட்சியை மிகவும் எளிமையாகவும், அதே நேரத்தில் ஸ்டைலாகவும் இயக்கக்கூடியவர் அவர். இயக்கம் என்பது ஒரு கலை. அதை அவர் மிகவும் இயல்பாக கையாள்கிறார். சரியான நேரத்தில் படப்பிடிப்பை முடித்து, கலைஞர்களிடம் இருந்து சிறந்த நடிப்பை வெளிக்கொணரும் திறமை அவருக்கு இருக்கிறது.

இந்த படத்தில் விஜய் சேதுபதி சாருடன் இணைந்து நடித்தது மிகவும் மகிழ்ச்சியான அனுபவம்.அவரின் ரசிகை நான், ரசிகர்கள் திரையில் ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் ஒரு இணை நடிகையாக, ஒரு நடிகர் கதாபாத்திரமாக மாறும் அந்த அற்புதமான பயணத்தை நேரில் பார்த்திருக்கிறேன். விஜய் சேதுபதி சார் அந்த மாற்றத்தை மிக அழகாக வெளிப்படுத்துகிறார். அவருடன் பணியாற்றியது எனக்கு மறக்க முடியாத அனுபவம். அவர் மிகவும் அன்பானவர், எளிமையானவர்.

இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் பற்றி சொல்ல வேண்டுமென்றால், அவர் உருவாக்கியுள்ள பாடல்கள் அனைத்தும் அற்புதமாக இருக்கின்றன. இதுவரை நான் கேட்ட பாடல்களே மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. முழு ஆல்பத்தையும் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன்.

மேலும் பூரி ஜெகன்நாத் சாருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருப்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். படப்பிடிப்பு முடிந்த பிறகு அவருடன் புகைப்படம் எடுக்க மக்கள் காத்திருப்பார்கள். அவரது பெயரையே கொண்டாடும் ரசிகர்களை நான் பார்த்திருக்கிறேன். ஒரு இயக்குநராக அவர் உருவாக்கியிருக்கும் அந்த பிராண்ட் மதிப்பே அவருடைய வெற்றிக்கு சான்று. முழு படத்தையும் திரையில் பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறேன் என்றார்.

இயக்குநர் பூரி ஜெகன்நாத் பேசியதாவது, ‘ஸ்லம் டாக் – 33 டெம்பிள் ரோடு’ திரைப்படம் எனது முதல் நேரடி தமிழ் திரைப்படம். இந்த வாய்ப்பை அளித்த விஜய் சேதுபதி சாருக்கு முதலில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். ஒரு இயக்குநராக, விஜய் சேதுபதி போன்ற திறமையான நடிகர் என் மீது நம்பிக்கை வைத்து இந்த படத்தில் இணைந்தது எனக்கு மிகவும் பெருமையான விஷயம். அவரைப் பற்றி என்னை மிகவும் கவர்ந்தது அவரது எளிமை. எப்போதும் மிகவும் இயல்பாகவும், எளிமையான மனிதராகவும் இருக்கிறார். படப்பிடிப்பு தளத்திற்கு வரும் ஒவ்வொரு நாளும் ஒரு புதுமுக நடிகரைப் போலவே உற்சாகத்துடன் வருவார். அவரது நடிப்பில் ஒரு துளி கர்வத்தைக் கூட பார்க்க முடியாது. அந்த குணங்கள் என்னை மிகவும் ஈர்த்தன. இந்த படத்தில் ரசிகர்கள் இதுவரை பார்த்திராத ஒரு வித்தியாசமான, சக்திவாய்ந்த விஜய் சேதுபதியை காண்பார்கள்.

சம்யுக்தாவுடன் முதல் முறையாக பணியாற்றினேன். அவர் மிகவும் உற்சாகமானவர். இந்த படத்தில் அவர் ஏற்றுள்ள கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். அதேபோல் விடிவி கணேஷ் சார் எப்போதும் படப்பிடிப்பு தளத்தை உற்சாகமாக வைத்திருப்பார். அவர் இருக்கும் இடத்தில் அனைவரின் முகத்திலும் சிரிப்பு இருக்கும். மிகவும் பாஸிடிவான மனிதர்.

கன்னட திரையுலகின் முன்னணி நட்சத்திரமான துனியா விஜய் இந்த படத்தில் முக்கியமான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடைய பங்களிப்பு படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. அதேபோல் ஜரீனா வஹாப் அம்மாவாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சில காட்சிகளில் அவருடைய நடிப்பைப் பார்த்தபோது என் கண்களில் கண்ணீர் வந்தது.

பிரம்மாஜி, ரோஹன் உள்ளிட்ட அனைத்து நடிகர்களும் தங்களுடைய கதாபாத்திரங்களுக்கு முழு நியாயம் செய்துள்ளனர். இந்த படத்தின் நடிகர் தேர்வுக்கான பெருமை முழுவதும் சார்மி கௌருக்கே சேரும். இந்த படத்திற்காக மிகச் சிறந்த நடிகர் பட்டாளத்தை அவர் ஒருங்கிணைத்துள்ளார்.

தயாரிப்பாளர்களான ஜேபி நாராயண ராவ் மற்றும் மகேந்திர ராவ் ஆகியோருக்கு எனது நன்றிகள். அவர்கள் திரைப்படத் துறையில் புதியவர்களாக இருந்தாலும், இந்த படத்திற்காக மிகுந்த அர்ப்பணிப்புடன் செயல்பட்டுள்ளனர். மேலும், இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் அற்புதமான பாடல்களையும் பின்னணி இசையையும் வழங்கியுள்ளார். பாடல்கள் மட்டுமல்ல, பின்னணி இசையும் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும்.

‘ஸ்லம் டாக்’ திரைப்படத்தின் கதை இரண்டு உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. நம் அன்றாட வாழ்க்கையில் நாம் பல பிச்சைக்காரர்களைக் கடந்து செல்கிறோம். ஆனால் அவர்களின் பின்னால் இருக்கும் வாழ்க்கை, உணர்வுகள் மற்றும் கதைகளை நாம் பெரும்பாலும் அறிந்திருக்க மாட்டோம். அந்த மனிதர்களின் உலகத்தை மையமாகக் கொண்ட உணர்வுப்பூர்வமான கதையாக இந்த படம் உருவாகியுள்ளது.

இது ஒரு ஆக்ஷன் திரைப்படம் மட்டுமல்ல; வலுவான உணர்வுகளையும் கொண்ட திரைப்படம். குறிப்பாக இன்றைய இளைஞர்கள் மற்றும் குடும்ப ரசிகர்களுக்காக இந்த படத்தை உருவாக்கியுள்ளோம் என்றார்.

நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது, இந்த படக்குழுவில் உள்ள அனைவரும் படத்தைப் பற்றியும், தங்களது அனுபவங்களைப் பற்றியும் மிகவும் அழகாக பகிர்ந்து கொண்டார்கள். அதை கேட்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

முதலில் துனியா விஜய் சாரைப் பற்றி சொல்ல வேண்டும். அவர் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார் என்றபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவரை நான் நீண்ட காலமாக கவனித்து வருகிறேன். கன்னடத்தில் அவர் ஒரு மிகப்பெரிய நட்சத்திரம். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் பார்த்தபோது, மிகவும் ஒழுக்கமான, அர்ப்பணிப்பான நடிகராக இருந்தார். இயக்குநர் சொல்வதை முழுமையாகக் கேட்டு, அந்த கதாபாத்திரத்திற்காக தன்னை முழுமையாக தயார் செய்து கொள்வார். அவர் ஒரு சிறந்த மனிதர், அற்புதமான நடிகர். அவருடன் பணியாற்றியது எனக்கு பெருமையாக இருக்கிறது.

விடிவி கணேஷ் சாருக்கு என் நன்றிகள். அவரைப் பற்றி எனக்கு இருந்த எண்ணம் வேறு, ஆனால் அவருடன் இணைந்து நடித்த பிறகு அவருடைய நடிப்பு திறமையை இன்னும் நெருக்கமாக புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு காட்சியை எப்படி இன்னும் சிறப்பாக மாற்றலாம் என்பதில் எப்போதும் ஆர்வமாக இருப்பார். படப்பிடிப்பு தளத்திலும், திரையிலும் அனைவரையும் மகிழ்விக்கக் கூடிய ஒரு அற்புதமான கலைஞர். அவர் இருக்கும் இடத்தில் எப்போதும் உற்சாகம் இருக்கும்.

சம்யுக்தாவுக்கு நன்றி. மிகவும் திறமையான மற்றும் புத்திசாலித்தனமான நடிகை. ஒரு கதாபாத்திரத்தை விரைவாகப் புரிந்து கொண்டு, அதை மிக இயல்பாக வெளிப்படுத்தும் திறமை அவருக்கு இருக்கிறது.  படத்திற்காக அவர் எடுத்த முயற்சியும், அர்ப்பணிப்பும் பாராட்டத்தக்கது. இன்று இந்த மேடையில் அவர் பேசிய விதமும் மிகவும் அழகாக இருந்தது.

இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வரின் இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலமாக இருக்கும். நான் தற்போது டீசர் இசையை மட்டுமே கேட்டிருக்கிறேன். அது மிகவும் சிறப்பாக இருந்தது. படத்தின் முழு இசை ரசிகர்களை வெகுவாக கவரும் என்று நம்புகிறேன்.

முதலில் சார்மி மேடத்திற்கு என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவிக்க விரும்புகிறேன். படப்பிடிப்பு தளத்தில் எவ்வளவு பெரிய சவால்கள் இருந்தாலும், அதை மிகுந்த அமைதியுடனும் உறுதியுடனும் கையாண்டார். ஒரு தயாரிப்பாளராக மட்டுமல்லாமல், முழு படத்தின் மீது மிகுந்த அக்கறை கொண்டவராக செயல்பட்டார். இயக்குநருக்கு என்ன தேவை, அதை எப்படி சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் என்பதில் மட்டுமே அவர் கவனம் செலுத்துவார். இன்று நீங்கள் திரையில் பார்க்கப் போகும் இந்தப் படத்தின் தரத்தில் அவருடைய பங்கு மிகப்பெரியது. அவருடைய மன உறுதியையும், அர்ப்பணிப்பையும் நான் மிகவும் மதிக்கிறேன்.

பூரி ஜெகன்நாத் சார் ஒரு வரலாறு. அவருடைய சினிமா பயணமும், வாழ்க்கை அனுபவங்களும் மிகவும் ஊக்கமளிப்பவை. பல ஆண்டுகளாக தொடர்ந்து எழுதிக் கொண்டே இருக்கிறார். ஒரு கதையை முடித்தவுடன் அடுத்த கதையைப் பற்றி யோசிக்கத் தொடங்கிவிடுவார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு காலத்திலும் அவர் பல கதைகளை என்னிடம் பகிர்ந்திருக்கிறார். ஒவ்வொரு கதையும் தனித்துவமாகவும், சுவாரஸ்யமாகவும் இருந்தது.

ஒரு காட்சியை உருவாக்குவதிலும், அதை திரையில் வெளிப்படுத்துவதிலும் அவருக்கு இருக்கும் தெளிவு அபாரமானது. அவருக்கு என்ன வேண்டும், ஒரு ஃபிரேமில் என்ன இருக்க வேண்டும், எந்த அளவுக்கு இருக்க வேண்டும் என்பதில் மிகுந்த தெளிவு இருக்கும். அப்படிப்பட்ட இயக்குநருடன் பணியாற்றும்போது ஒரு நடிகராக நமக்கு மிகுந்த நம்பிக்கையும், பாதுகாப்பான உணர்வும் கிடைக்கும். ‘நீங்கள் பாதுகாப்பான கைகளில் இருக்கிறீர்கள்’ என்ற நம்பிக்கையை அவர் எப்போதும் கொடுப்பார்.

படம் மிகவும் வலுவான கதையுடன் உருவாகியுள்ளது. ஆக்சன், உணர்வுகள், மனித உறவுகள் என அனைத்தும் இதில் இருக்கின்றன. பூரி ஜெகன்நாத் சாரின் சிறந்த படங்களில் ஒன்றாக ‘ஸ்லம் டாக்’ இருக்கும் என்று நான் நம்புகிறேன். இந்தப் படத்தில் அவருடைய ஈடுபாடும், நம்பிக்கையும், உழைப்பும் மிகத் தெளிவாக தெரிகிறது.

இந்தப் படத்தில் நடித்த அனுபவத்தை நான் மிகவும் ரசித்தேன். இயக்குநர் மற்றும் நடிகர் இடையே உருவாகும் அந்த நம்பிக்கையும், புரிதலும் இந்தப் படத்தில் மிகவும் அழகாக அமைந்தது. பூரி சார் மீது எனக்கு மிகுந்த மரியாதையும், அன்பும் இருக்கிறது. அவருடன் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம்.

‘ஸ்லம் டாக்’ திரைப்படம் அனைத்து மொழி ரசிகர்களையும் கவரும் என்று உறுதியாக நம்புகிறேன். இந்த படத்திற்காக உழைத்த இயக்குநர் பூரி ஜெகன்நாத் சார், தயாரிப்பாளர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் நடிகர்கள் அனைவருக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

  • dhamaraimurasu

    dhamaraimurasu

    dhamaraimurasu admin

    Related Posts

    சர்வதேச விழாக்களில் 7 விருதுகள் வென்ற “வன மடி” திரைப்படம் !

    சென்டர் சீட் சினிமாஸ் (Center Seat Cinemas) விஜயராகவன் தயாரிப்பில், ஞானம் சுப்பரமணியனின் நிர்வாக மேலாண்மையில் உருவாகும் படம் ‘வன மடி’. ‘மாத்தி யோசி’, ‘தொட்டால் தொடரும்’, ‘அழகு குட்டி செல்லம்’, ‘புகைப்படம்’ உள்ளிட்ட  திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய விஜய் ஆம்ஸ்ட்ராங்…

    Read more

    “அப்பா குட்டி” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

    விஜய் ஆண்டனி நடிப்பில், மு. மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அப்பா குட்டி’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு திரைப்படம் குறித்த தங்களது அனுபவங்களையும், படத்தின் உருவாக்கம் குறித்த சுவாரஸ்யமான தகவல்களையும் பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்வினில்.., பாடலாசிரியர் ஏகாதசி…

    Read more

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    பார்க்கத்தவறிய செய்திகள்

    குற்றச் செயல்களில் ஈடுபடும் தவெக நிர்வாகிகளை கைது செய்யாதது ஏன் ?.!

    குற்றச் செயல்களில் ஈடுபடும் தவெக நிர்வாகிகளை கைது செய்யாதது ஏன் ?.!

    “பிளாக் கோல்டு” விமர்சனம்

    “பிளாக் கோல்டு” விமர்சனம்

    சர்வதேச விழாக்களில் 7 விருதுகள் வென்ற “வன மடி” திரைப்படம் !

    சர்வதேச விழாக்களில் 7 விருதுகள் வென்ற “வன மடி” திரைப்படம் !

    “அப்பா குட்டி” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

    “அப்பா குட்டி” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

    பெற்றோர்களே உஷார் ! கராத்தே சங்கங்களுக்கு தடை ! இந்திய ஒலிம்பிக் சங்கம் நடவடிக்கை

    பெற்றோர்களே உஷார் ! கராத்தே சங்கங்களுக்கு தடை ! இந்திய ஒலிம்பிக் சங்கம் நடவடிக்கை

    கடந்த ஆட்சியைவிட குறைந்த விலைக்கு சைக்கிள் டெண்டர் !

    கடந்த ஆட்சியைவிட குறைந்த விலைக்கு சைக்கிள் டெண்டர் !

    எம்எல்ஏக்கள் மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன் ? – திமுக

    எம்எல்ஏக்கள் மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன் ? – திமுக

    அஜய் கார்த்தி, தீபா பாலு நடிக்கும் “ஸ்டேஷன்” திரைப்படம்

    அஜய் கார்த்தி, தீபா பாலு நடிக்கும் “ஸ்டேஷன்” திரைப்படம்

    “மௌன மொழிகள்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

    “மௌன மொழிகள்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

    “மூக்குத்தி அம்மன்_2” விமர்சனம்

    “மூக்குத்தி அம்மன்_2” விமர்சனம்

    சூர்யாவின் “சீன்” படத்தின் விமர்சனம்

    சூர்யாவின் “சீன்” படத்தின் விமர்சனம்

    “பௌமா” மற்றும் “டூக்ஸ்” படங்களை ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் தென்னிந்தியாவில் வெளியிடுகிறது

    “பௌமா” மற்றும் “டூக்ஸ்” படங்களை ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் தென்னிந்தியாவில் வெளியிடுகிறது

    ஆதரவற்றோருடன் தீபாவளி கொண்டாடிய காவல்துறையினர் !

    ஆதரவற்றோருடன் தீபாவளி கொண்டாடிய காவல்துறையினர் !

    பிறந்தநாளில் “சண்டியர்” படப்பிடிப்பை தொடங்கிய கமல்ஹாசன்

    பிறந்தநாளில் “சண்டியர்” படப்பிடிப்பை தொடங்கிய கமல்ஹாசன்

    மாநில உரிமையை பாதுகாக்கத் தவறிய அரசு ! – எஸ்டிபிஐ கண்டனம்

    மாநில உரிமையை பாதுகாக்கத் தவறிய அரசு ! – எஸ்டிபிஐ கண்டனம்

    பெரியார் அறிவுலக புத்தக முறைகேடு புகார் ! நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல் !

    பெரியார் அறிவுலக புத்தக முறைகேடு புகார் ! நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல் !

    அதிமுக பிரமுகர் மன்னன் காலையில் கைது ! மாலையில் விடுவிப்பு !

    அதிமுக பிரமுகர் மன்னன் காலையில் கைது ! மாலையில் விடுவிப்பு !

    சூப்பர் ஸ்டார் நடிக்கும் “தர்மன்” திரைப்படத்தில் இணைந்த நடிகை ஶ்ரீ லீலா

    சூப்பர் ஸ்டார் நடிக்கும் “தர்மன்” திரைப்படத்தில் இணைந்த நடிகை ஶ்ரீ லீலா

    உ.வே.சா நூலகத்தில் ஆய்வு செய்த நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் !

    உ.வே.சா நூலகத்தில் ஆய்வு செய்த நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் !

    பல்லடத்தில் விதிமீறி கட்டப்படும் பிரபல நகைக்கடை கட்டிடம் ! கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம் !

    பல்லடத்தில் விதிமீறி கட்டப்படும் பிரபல நகைக்கடை கட்டிடம் ! கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம் !

    சோதனைகளை கடந்து.. விடாமுயற்சியால் நாட்டிற்காக இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற சிம்ரன் !

    சோதனைகளை கடந்து.. விடாமுயற்சியால் நாட்டிற்காக இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற சிம்ரன் !

    35 நாட்களுக்கு முன் காணாமல் போன பெண் குழந்தையை மீட்ட போலீசார் !

    35 நாட்களுக்கு முன் காணாமல் போன பெண் குழந்தையை மீட்ட போலீசார் !

    அகவிலைப்படி உயர்வால், உற்சாகத்தில் மத்திய அரசு ஊழியர்கள் !

    அகவிலைப்படி உயர்வால், உற்சாகத்தில் மத்திய அரசு ஊழியர்கள் !

    “லவ் 3 ஓ” படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு !

    “லவ் 3 ஓ” படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு !

    யோகி பாபுவின் “அர்ஜூனன் பேர் பத்து” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

    யோகி பாபுவின் “அர்ஜூனன் பேர் பத்து” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

    “ஹைக்கூ” படத்தின் விமர்சனம்

    “ஹைக்கூ” படத்தின் விமர்சனம்

    கௌதம்மேனனின் 25 ஆண்டுகள் திரையுலக பயணம் ! கோலாலம்பூரில் இசைக் கொண்டாட்டம்

    கௌதம்மேனனின் 25 ஆண்டுகள் திரையுலக பயணம் ! கோலாலம்பூரில் இசைக் கொண்டாட்டம்

    யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள “சிங்காரம்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

    யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள “சிங்காரம்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

    பெண்களின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் “ஹைக்கூ” திரைப்படம் ! – நடிகை ஃபெமினா ஜார்ஜ்

    பெண்களின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் “ஹைக்கூ” திரைப்படம் ! – நடிகை ஃபெமினா ஜார்ஜ்

    “ஹைக்கூ” ஒரு ஃபீல் குட் எண்டர்டெயின்மெண்ட் திரைப்படம் !

    “ஹைக்கூ” ஒரு ஃபீல் குட் எண்டர்டெயின்மெண்ட் திரைப்படம் !

    திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ! “ஹைக்கூ” பட தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி !

    திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ! “ஹைக்கூ” பட தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி !

    “ஹைக்கூ” படத்தில் மௌனமாக ஒரு கதாப்பாத்திரமாகவே பயணிக்கும் இசை !

    “ஹைக்கூ” படத்தில் மௌனமாக ஒரு கதாப்பாத்திரமாகவே பயணிக்கும் இசை !

    ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் “ஹைக்கூ”. – நடிகர் ஏகன்

    ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் “ஹைக்கூ”. – நடிகர் ஏகன்

    அமைச்சர் பதவிக்காக அடிப்படை கொள்கையிலிருந்து விலகி நிற்கும் விசிக ! – பனையூர் பாபு

    அமைச்சர் பதவிக்காக அடிப்படை கொள்கையிலிருந்து விலகி நிற்கும் விசிக ! – பனையூர் பாபு

    குற்றச்சாட்டு எழுந்ததால் பணியிடை மாற்றம் ! உடனடியாக பதவி உயர்வு கொடுத்ததன் பின்னனி என்ன ?.!

    குற்றச்சாட்டு எழுந்ததால் பணியிடை மாற்றம் ! உடனடியாக பதவி உயர்வு கொடுத்ததன் பின்னனி என்ன ?.!

    நகைச்சுவை கலந்த வித்தியாசமான காதல் கதை !

    நகைச்சுவை கலந்த வித்தியாசமான காதல் கதை !

    “மெர்சல்” படத்தின் பணப்பரிவர்த்தனை விவகாரம் ! நடிகை ஶ்ரீ பிரியா நிறுவனத்திற்கு வெற்றி !

    “மெர்சல்” படத்தின் பணப்பரிவர்த்தனை விவகாரம் ! நடிகை ஶ்ரீ பிரியா நிறுவனத்திற்கு வெற்றி !

    கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளில் “அக்கா” தொடரின் டீசர் வெளியானது !

    கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளில் “அக்கா” தொடரின் டீசர் வெளியானது !

    “சட்டமும் நீதியும் 2” தொடரின் டிரெய்லரை வெளியிடப்பட்டது தமிழ் ZEE 5 !

    “சட்டமும் நீதியும் 2” தொடரின் டிரெய்லரை வெளியிடப்பட்டது தமிழ் ZEE 5 !

    சந்தீப் கிஷன் நடிக்கும் “கரிகாலா” திரைப்படம் பூஜையுடன் ஆரம்பம் !

    சந்தீப் கிஷன் நடிக்கும் “கரிகாலா” திரைப்படம் பூஜையுடன் ஆரம்பம் !

    துல்கர் சல்மானின் “ஏ ஓ டி” ( AOT ) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

    துல்கர் சல்மானின் “ஏ ஓ டி” ( AOT ) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

    “ஸ்லம் டாக்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு, வெளியீட்டு தேதி விரைவில்..

    “ஸ்லம் டாக்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு, வெளியீட்டு தேதி விரைவில்..

    தேவா மண்ணை விட்டு மறைந்தாலும், அவரது தேனிசை தென்றல் காற்று வீசுவது நிற்காது ! – முக ஸ்டாலின்

    தேவா மண்ணை விட்டு மறைந்தாலும், அவரது தேனிசை தென்றல் காற்று வீசுவது நிற்காது ! – முக ஸ்டாலின்

    “ராமாயணா” படத்தின் புதிய சர்வதேச டிரெய்லர் வெளியானது !

    “ராமாயணா” படத்தின் புதிய சர்வதேச டிரெய்லர் வெளியானது !

    “சிக்னல் அட் 11.30” படத்தின் “ஜோ ஜோ மாமா” பாடல் வெளியீடு !

    “சிக்னல் அட் 11.30” படத்தின் “ஜோ ஜோ மாமா” பாடல் வெளியீடு !

    “இது நம்ம குடும்பம்” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

    “இது நம்ம குடும்பம்” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

    “ஹபீபி” படக்குழுவினருக்கு பாராட்டுவிழா !

    “ஹபீபி” படக்குழுவினருக்கு பாராட்டுவிழா !

    ஊர்வசி நடிப்பில் உருவாகியுள்ள “ஆஷா” திரைப்படம் அக்டோபர் 16 முதல் மலையாளம் ஜீ_5 ல் வெளியாகிறது

    ஊர்வசி நடிப்பில் உருவாகியுள்ள “ஆஷா” திரைப்படம் அக்டோபர் 16 முதல் மலையாளம் ஜீ_5 ல் வெளியாகிறது

    சூரியின் புதிய திரைப்படத்த கிளாப் அடித்து துவக்கி வைத்த சிவகார்த்திகேயன் !

    சூரியின் புதிய திரைப்படத்த கிளாப் அடித்து துவக்கி வைத்த சிவகார்த்திகேயன் !

    “டோரதி” திரைப்படம் நான் எதிர்பார்த்த அங்கீகாரம் பெற்றுத் தந்துள்ளது. ஜீவா சுப்பிரமணியம் !

    “டோரதி” திரைப்படம் நான் எதிர்பார்த்த அங்கீகாரம் பெற்றுத் தந்துள்ளது. ஜீவா சுப்பிரமணியம் !

    டுபாக்கூர் முதலமைச்சரும், கூடுதல் விலைக்கு மின்சார கொள்முதலும் ! – உதயநிதி விமர்சனம்

    டுபாக்கூர் முதலமைச்சரும், கூடுதல் விலைக்கு மின்சார கொள்முதலும் ! – உதயநிதி விமர்சனம்

    அ,தி,மு,கவை த,வெ,க வின் சார்பு இயக்கமாக மாற்ற நினைக்கும் வேலுமணி ! கட்சியை காப்பாற்ற கூட்டுத் தலைமை அவசியம் !

    அ,தி,மு,கவை த,வெ,க வின் சார்பு இயக்கமாக மாற்ற நினைக்கும் வேலுமணி ! கட்சியை காப்பாற்ற கூட்டுத் தலைமை அவசியம் !

    “ஜெய்” நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் !

    “ஜெய்” நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் !

    “E 1” படத்தின் விமர்சனம்

    “E 1” படத்தின் விமர்சனம்

    ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழாவில் 13.78 லட்சம் நிதியுதவி !

    ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழாவில் 13.78 லட்சம் நிதியுதவி !

    ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழா ! ஓவியர் ஜீவானந்தனுக்கு 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு 13.78 லட்சம் நிதியுதவி !

    ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழா ! ஓவியர் ஜீவானந்தனுக்கு 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு 13.78 லட்சம் நிதியுதவி !

    கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் “ஊர் கூடும் இரவு” ஆவணப்படம் !

    கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் “ஊர் கூடும் இரவு” ஆவணப்படம் !

    “ஆல்பாஸ்” விமர்சனம்

    “ஆல்பாஸ்” விமர்சனம்

    “தாய்நிலம்” விமர்சனம்

    “தாய்நிலம்” விமர்சனம்

    “ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

    “ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

    அதிமுகவின் பலவீனமா ? த.வெ.க வினரின் மோசடியா ?

    அதிமுகவின் பலவீனமா ? த.வெ.க வினரின் மோசடியா ?

    “அமெரிக்க ஆவி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

    “அமெரிக்க ஆவி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

    அட்லான்டா இந்தியத் திரைப்பட விழாவில் “என்ன விலை” படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது !

    அட்லான்டா இந்தியத் திரைப்பட விழாவில் “என்ன விலை” படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது !

    நலிவுற்ற திருநங்கைகளுங்கு நிதியுதவி வழங்கிய “டோரதி” படக்குழு !

    நலிவுற்ற திருநங்கைகளுங்கு நிதியுதவி வழங்கிய “டோரதி” படக்குழு !

    “அன்பில் அவன் படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

    “அன்பில் அவன் படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

    “பத்தா” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

    “பத்தா” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

    நாள்தோறும் நற்பணி ! ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன்

    நாள்தோறும் நற்பணி ! ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன்

    “ஒட்டாரம்” திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு !

    “ஒட்டாரம்” திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு !

    “சிக்மா” படத்தில் அறிமுகமானது எனக்கு பெருமை ! நடிகை ஃபரியா அப்துல்லா

    “சிக்மா” படத்தில் அறிமுகமானது எனக்கு பெருமை ! நடிகை ஃபரியா அப்துல்லா

    “அன்பில் அவன்” படத்தின் விமர்சனம்

    “அன்பில் அவன்” படத்தின் விமர்சனம்

    “சிக்மா” படத்தின் விமர்சனம்

    “சிக்மா” படத்தின் விமர்சனம்

    “சிக்மா” படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த நடிகர் !

    “சிக்மா” படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த நடிகர் !

    “பத்தா” படத்தின் விமர்சனம்

    “பத்தா” படத்தின் விமர்சனம்

    இயக்கமா ? நடிப்பா ? “சிக்மா” இயக்குநர் பேட்டி !

    இயக்கமா ? நடிப்பா ? “சிக்மா” இயக்குநர் பேட்டி !

    கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான் “சிக்மா” – இயக்குநர் சஞ்சய்

    கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான் “சிக்மா” – இயக்குநர் சஞ்சய்

    “தி டார்க் ஹெவன் படத்தின் வெற்றிக்கு, சொந்த ஊரில் விழா எடுத்த இயக்குநர் !

    “தி டார்க் ஹெவன் படத்தின் வெற்றிக்கு, சொந்த ஊரில் விழா எடுத்த இயக்குநர் !

    தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய பிரபல நடிகரின் மனைவி !

    தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய பிரபல நடிகரின் மனைவி !

    “கோல்டன் பாக்கியம்” டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு !

    “கோல்டன் பாக்கியம்” டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு !

    “கிட்டி” படத்தின் விமர்சனம்

    “கிட்டி” படத்தின் விமர்சனம்

    “த்ரிஷ்யம்_3” படத்தின் இந்தி பதிப்பை வெளியிட தடை கோரி வழக்கு !

    “த்ரிஷ்யம்_3” படத்தின் இந்தி பதிப்பை வெளியிட தடை கோரி வழக்கு !

    நான்கு மாநில டிஜிட்டல் & தொலைக்காட்சி துறைகளை ஒருங்கிணைக்கும் முயற்சி !

    நான்கு மாநில டிஜிட்டல் & தொலைக்காட்சி துறைகளை ஒருங்கிணைக்கும் முயற்சி !

    “துரோகம் பழகு படத்தின் டீசர் வெளியீட்டு விழா !

    “துரோகம் பழகு படத்தின் டீசர் வெளியீட்டு விழா !

    25 மாவட்டங்கள், 2 ஆயிரம் ரசிகர்கள் ! நடிகர் சூர்யா தலைமையில் பிரமாண்டமான விழா !

    25 மாவட்டங்கள், 2 ஆயிரம் ரசிகர்கள் ! நடிகர் சூர்யா தலைமையில் பிரமாண்டமான விழா !

    மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள “மக்கள் காவலன்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

    மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள “மக்கள் காவலன்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

    “பூஜா மேரி ஜான்” திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ஜீ_5 ஹிந்தியில் வெளியாகிறது

    “பூஜா மேரி ஜான்” திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ஜீ_5 ஹிந்தியில் வெளியாகிறது

    சாதிய வன்மத்தை விதைக்கும் “தி கிராண்ட் மாஸ்டர்” ! படத்தின் விமர்சனம்

    சாதிய வன்மத்தை விதைக்கும் “தி கிராண்ட் மாஸ்டர்” ! படத்தின் விமர்சனம்

    “டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

    “டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

    “#LOVE” வெப் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

    “#LOVE” வெப் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

    “அன்பில் அவன்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

    “அன்பில் அவன்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

    “தாய்நிலம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

    “தாய்நிலம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

    தனுஷின் ( D_56 ) புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

    தனுஷின் ( D_56 ) புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

    “ஏழு கடல் ஏழு மலை” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

    “ஏழு கடல் ஏழு மலை” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

    “டோரதி” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

    “டோரதி” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

    “தி டார்க் ஹெவன்” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

    “தி டார்க் ஹெவன்” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

    மர்மம், ரகசியங்கள் நிறைந்த “ஆக்டோபஸ்” தொடர் ஜீ_5 தமிழில் வெளியாகிறது

    மர்மம், ரகசியங்கள் நிறைந்த “ஆக்டோபஸ்” தொடர் ஜீ_5 தமிழில் வெளியாகிறது

    ரசிகர்களின் அமோக வரவேற்பில் “என்ன விலை” திரைப்படம் !

    ரசிகர்களின் அமோக வரவேற்பில் “என்ன விலை” திரைப்படம் !

    “நல்ல படம்” திரைப்படத்தின் விமர்சனம்

    “நல்ல படம்” திரைப்படத்தின் விமர்சனம்

    “துரோகம் பழகு” படக்குழுவினரை  பாராட்டிய முதலமைச்சர் !

    “துரோகம் பழகு” படக்குழுவினரை  பாராட்டிய முதலமைச்சர் !

    பா. ரஞ்சித்தின் “வேட்டுவம்” படத்தின் அறிமுக வீடியோ வெளியீடு !

    பா. ரஞ்சித்தின் “வேட்டுவம்” படத்தின் அறிமுக வீடியோ வெளியீடு !

    விஜய் சேதுபதியின் “பத்தா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

    விஜய் சேதுபதியின் “பத்தா” படத்தின் இசை வெளியீட்டு விழா !