திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் மாயராஜலட்சுமி தலைமையில் சார்பு ஆய்வாளர் சத்தியகுமார் மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, பட்டாகத்தியுடன் சுற்றித்திரிந்த சிலுக்குவார்பட்டியை சேர்ந்த ஜான்பிரிட்டோ மகன் நிர்மல்ராஜ் (20), சேவியர் செல்லையா மகன் டேனியல் கெவின் (20) ஆகிய இரண்டு பேரையும் கைது செய்ததோடு, அவர்களிடமிருந்த பட்டாகத்தியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பின்னர் கைதுசெய்யப்பட்ட இருவரையும் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.



































































































