10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில், மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்ற மாணவிக்கு தங்க நாணயம் பரிசு !

Spread the love

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு தங்க நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் 16 மே ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பார்த்திபனூரில் உள்ள சென்மேரிஸ் மெட்ரிக் பள்ளியில் பயின்ற நூர்ஜகான் என்ற மாணவி 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் அளவிலும் மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்றும் சாதனை படைத்துள்ளார்.

இவரது பெற்றோர் பலசரக்கு கடை நடத்தி வருகின்றனர். மாணவியின் சொந்த ஊர் பார்த்திபனூர் அருகே பரளை கிராமமாகும். பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவி மாநில அளவில் இரண்டாம் மதிப்பெண் பெற்று பரளை கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இதனை அடுத்து மாநில அளவில் இரண்டாம் மதிப்பெண் பெற்ற மாணவி நூர் ஜகானுக்கு பரளை ஜமாத் சார்பில் பொன்னாடை அணிவித்து தங்க நாணயம் பரிசாக வழங்கி கௌரவிக்கப்பட்டது.

அதேபோல் அந்த மாணவியின் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 498 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த கிராமபுறத்தை சேர்ந்த மாணவிக்கு தங்க நாணயம் வழங்கி பாராட்டிய சம்பவம் மகழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

முதல்வர் வருகைக்கு எதிரான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ரத்து ! சமாதான கூட்டத்தில் விவசாயிகள் முடிவு !

Spread the love

Spread the loveபசும்பொன் வருகை தரும் முதல்வருக்கு எதிரான விவசாயிகளின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்படுவதாக சமாதான கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் குருபூஜைக்கு அக்டோபர் 30ஆம் தேதி தமிழக முதல்வர்மு க ஸ்டாலின்…

Read more

தொடர்மழையால் களையிழந்த ஆட்டுச் சந்தை !

Spread the love

Spread the loveதீபாவளியை முன்னிட்டு பரமக்குடி வார சந்தையில் ஆடுகள் வரத்து அதிகமாக இருந்ததால் விலை அடியோடு சரிந்ததுடன் தொடர் மழை காரணமாக ஆட்டுச் சந்தை களை இழந்து காணப்பட்டது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் வாரம்தோறும் வியாழக்கிழமை கால்நடை சந்தை நடைபெறும்.…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

இளைய தலைமுறையினர் விரும்பும் ஹர்ஷவர்தனின் “மாயம் நீயடி” மியூசிக் ஆல்பம்

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

“ஜமா” புகழ் பாரி இளவழகன் நடித்துள்ள புதிய படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில், ஏகமனதாக விடியல் ராஜூ தேர்வு  !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

“அந்தோனி” படத்தின் இசை & ட்ரெய்லர் வெளியீட்டு விழா !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !

ஹாரர் & த்ரில்லர் படமாக உருவாகியுள்ள “99/66” திரைப்படம் மார்ச் 6 ஆம் தேதி வெளியீடு !