ஶ்ரீ சக்ராஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ், A+S மூவிஸ், பெட்டர் இன்வெஸ்ட் மீடியா விஷன் நிறுவனங்கள் தயாரிப்பில், சத்யதேவ், விகாஸ் முப்பலா, தீபா தாமஸ், ஆணந்த் பாரதி உள்ளிட்டோர் நடிப்பில், வெங்கடேஷ் மகா இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “ராவ் பகதூர் ( தெலுங்கு ).
கதைப்படி.. புவனாலயம் என பெயரிடப்பட்ட பழமையான பொழிவிழந்த அரண்மனையில், ராமப்பா ராவ் பகதூர் ( சத்யதேவ் ) கல்லீரல் புற்றுநோய் பாதிப்பால் மரணத்தை நோக்கி காத்திருக்கும் நோயாளியாக இருந்து வருகிறார். தனது இளைய மகன் குசுமா இறந்துபோன சம்பவம் அவர் மனதை மிகவும் பாதித்துள்ளது. மகனின் பிறப்பில் அடங்கியுள்ள ரகசியத்திற்கு பதில் கிடைத்தால் மட்டுமே தனது உயிர் பிரியும் என தனது நெருங்கிய நண்பர் ஆச்சாரியிடம் ( விகாஸ் முப்பலா ) கூறுகிறார். பின்னர் தான் கடந்த காலங்களில் செய்த தவறுகளுக்காக குற்ற உணர்வுடன், மனம் வருந்தும் போது, ஃபிளாஷ் பேக்கில் ராவ் பகதூரின் காதல், குடும்பம், மகனுடன் ஏற்பட்ட விரிசல் என பல்வேறு ரகசியங்களுடன் பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்களை நினைவு படுத்துகிறது. விடுதலைக்காக ஏங்கும் கூண்டு பறவையுடன் தன்னை ஒப்பிடும் ராவ் பகதூர், குணப்படுத்த முடியாத நோய் இருந்த போதிலும், மீண்டும் மீண்டும் உயிர் பிழைத்து ஆச்சர்யமூட்டுகிறார்.

ராமப்பா ராவ் பகதூர் இறுதிக்காலம் என்னானது ? ரகசியங்களுக்கு பதில் கிடைத்ததா ? இல்லையா ? என்பது மீதிக்கதை..
மர்மம், கற்பனை, மாயை, காதல், எதார்த்தம் என பலவிதமான பரிணாமத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் சத்யதேவ். அதேபோல் விகாஸ் முப்பலா, தீபா தாமஸ், வேலைக்காரி அச்சம்மா கதாப்பாத்திரத்தில் நடித்தவர் என அனைவரும் பார்வையாளர்கள் மனதில் பதியும்படியாக சிறப்பாக நடித்துள்ளனர்.


































































































