திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் கோடங்கிபட்டியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் மனைவி பொன்மாரியம்மாள் (30). இவர் இருசக்கர வாகனத்தில் திண்டுக்கல் பேருந்து நிலையம் அருகே உள்ள மருத்துவமனைக்கு வந்துள்ளார். பின்னர் காய்கறிகள் வாங்குவதற்காக காந்தி மார்க்கெட் செல்லும்போது இருசக்கர வாகனத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்ததால், தலையில் பலத்த காயமடைந்ததால் உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வெங்கடாசலபதி, சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் பொன்மாரியம்மாளின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



































































































