நயன்தாரா, கவின் இருவரும் முதன் முதலாக இணைந்து நடித்திருக்கும் ‘ஹாய்’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ரசகுல்லா’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.
அறிமுக இயக்குநர் விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஹாய்’ திரைப்படத்தில் நயன்தாரா, கவின், கே. பாக்யராஜ், பிரபு, ராதிகா சரத்குமார், வி டி வி கணேஷ், சத்யன், ‘ஆதித்யா’ கதிர், குரேஷி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
ஃபீல் குட் ஃபேமிலி என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோஸ், தி ரவுடி பிக்சர்ஸ், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ ஆகிய நிறுவனங்கள் சார்பில் நயன்தாரா, விக்னேஷ் சிவன், எஸ். எஸ். லலித்குமார் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். வினோத் சி.ஜே. மற்றும் கே.எஸ். மயில் வாகனன் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாகவும், வி.கே. குபேந்திரன் கிரியேட்டிவ் புரொடியூசராகவும் பொறுப்பேற்றிருக்கிறார்கள்.

ஆகஸ்ட் மாதம் 14ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருப்பதால், இப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தில் இடம்பெற்ற ‘ கன்னக் குழியா’ என்ற முதல் பாடல் ஏற்கனவே வெளியாகி, ஏறத்தாழ மூன்று மில்லியன் டிஜிட்டல் பார்வைகளை பெற்று சாதனை படைத்த நிலையில், தற்போது ‘ரசகுல்லா’ எனத் தொடங்கும் இரண்டாவது பாடலும், பாடலுக்கான காணொளியும் வெளியிடப்பட்டிருக்கிறது.


































































































