பொன்முடியின் ஆபாச பேச்சு ! சமூக ஆர்வலர் புகார்.. அமைச்சர் பதவியில் நீடிப்பாரா பொன்முடி !

Spread the love

கடந்த 06.04.2025 ஞாயிறு அன்று மாலை சென்னை அன்பகத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் தமிழ்நாடு அரசின் வனம் மற்றும் கதர் துறையின் அமைச்சர் க. பொன்முடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அமைச்சர் சைவமா? வைணவமா? என ஆபாசமாக பேசியது பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பொன்முடியின் பேச்சிற்கு கண்டனங்கள் வழுத்த நிலையில், பொன்முடியின் அமைச்சர் பதவி பறிபோகும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், திமுக வின் துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து பொன்முடியை நீக்கி திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் பொன்முடி மீது பல்லடத்தில் சமூக ஆர்வலர் கூட்டமைப்பின் தலைவர் ஆ. அண்ணாதுரை பல்லடம் காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்க உள்ளதாக தெரிவித்தார். புகாரில் சமூக வலைதளங்களில் அமைச்சர் பொன்முடி சைவமா? வைணவமா? என விலைமாது கேட்டதாக இந்து மதத்தையும், பெண்களையும் கொச்சைப்படுத்தி ஆபாசமாக பேசிய வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்ததாகவும், மேற்படி ஆபாசமாக பேசிய அமைச்சர் பொன்முடி மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார் மனு அளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அமைச்சர் பொன்முடி மீது சமூக ஆர்வலர் அண்ணாதுரையின் புகார் பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Posts

“லவ் மேரேஜ்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

Spread the love

Spread the loveஅஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில், விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட் நடித்திருக்கும் ‘லவ் மேரேஜ்’ எனும் திரைப்படத்தின் முன்னோட்ட வெளியிட்டு விழா  நடைபெற்றது. இவ்விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்…

Read more

புதிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க  பல்லடம் பாஜகவினர் கோரிக்கை !

Spread the love

Spread the loveபல்லடம் நகர பாரதீய ஜனதா கட்சியின் சார்பாக  பல்லடத்திலிருந்து செல்லும் மாநில நெடுஞ்சாலைகள் வழியாக புதிய வழித்தடத்தில் அரசு புறநகர் பேருந்துகளை இயக்க வலியுறுத்தி பாரதிய ஜனதா கட்சியின் பல்லடம் நகரத் தலைவர் பன்னீர் செல்வகுமார் தலைமையில், பல்லடம்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்க தவறிய செய்திகள்

“லவ் மேரேஜ்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

“லவ் மேரேஜ்” படத்தின் முன்னோட்டம் வெளியீடு !

நூற்பாலையை திறக்கக் கோரி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !

நூற்பாலையை திறக்கக் கோரி ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் !

ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை !

ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் கோரிக்கை !

ராமநாதபுரம் பேருந்து நிலையத்திற்கு “ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி” பெயர் சூட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் !

ராமநாதபுரம் பேருந்து நிலையத்திற்கு “ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி” பெயர் சூட்ட வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் !

“மெட்ராஸ் மேட்னி” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா !

“மெட்ராஸ் மேட்னி” படக்குழுவினரின் நன்றி அறிவிப்பு விழா !