சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பிரபல மருத்துவ தம்பதிகளின் மகள் பரதநாட்டிய கலையின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டு, அப்பகுதியில் புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞரிடம் நன்கு பயிற்சி பெற்றதால், அந்த மாணவிக்கு அரங்கேற்றம் நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
சி எஸ் பல்நோக்கு மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர் ஸ்டாலின் ராஜா, செயற்கை கருத்தரித்தல் மகப்பேறு மருத்துவ நிபுணர் டாக்டர் அமலா ஸ்டாலின்ராஜா இவர்களது புதல்வி சி.எஸ். தர்ஷனா சாய்-ன் பரதநாட்டிய அரங்கேற்றம்
வரும் மே 8-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு எல்.சி.டி.எல். பழனியப்ப செட்டியார் அரங்கில் நடக்கிறது. காரைக்குடி மற்றும் கல்லல் பகுதியில் முத்து டான்ஸ் அகாடமி நடத்தி வரும் கலைச்சுடர்மணி டாக்டர் எம்.முத்துமாரி இளஞ்செழியன் அவர்களது மாணவி சி.எஸ். தர்ஷனா சாய் என்பது குறிப்பிடத்தக்கது.



































































































