மாற்றுத்திறனாளி சாதனையாளர்களின் பயணங்கள், இலக்கிய திறமைகளை ஆவணப்படுத்தும் வகையில், மெய்ப்பொருள் பதிப்பகம் புத்தகங்களை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் பல்வேறு துறைகளில் செயல்படும் 26 மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள் குறித்த முதல் தமிழ் பிரெய்லி புத்தகத்தை வெளியிட்டுள்ளது.

பத்திரிகை, இசை, அறிவியல், ராணுவம், விளையாட்டு, மென்பொருள், சட்டம், வங்கி மற்றும் அரசாங்க உயர் பதவிகள் என பலதுறைகளில் செயல்படும் 26 பார்வை மாற்றுத்திறனாளி சாதனையாளர்களைக் குறித்த முதல் தமிழ் பிரெய்லி புத்தகம் “காண்பதெல்லம் மறையுமென்றால்”
மெய்பொருள் பதிப்பகம் சார்பாக பிரெய்லி மற்றும் அச்சு வடிவங்களில் வெளியிடப்பட்டுள்ளது .

புத்தகத்தை பெறவும், பார்வை மாற்றுத்திறனாளி சாதனையாளர்களின் குரல்களையும், பயணங்களையும் மேன்மேலும் புத்தகங்களாக மாற்றவும் அவர்களது இலக்கியத் திறமைகளையும் ஆவணப்படுத்த 93636 87259 என்ற எண்ணில் மெய்ப்பொருள் பதிப்பகத்தை தொடர்பு கொள்ளவும்.


































































































