திண்டுக்கல் பேருந்து நிலையம், நத்தம் பேருந்துகள் நிற்கும் இடம் அருகே இருசக்கரவாகனம் மோதியது தொடர்பாக வேல்முருகன் என்பவருக்கும் நந்தகோபால் என்பவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாகியுள்ளது.
இதனை தொடர்ந்து நந்தகோபால் மற்றும் சிவக்குமார், மகேஸ்வரி, ஹரிஹரன் உள்ளிட்ட 6 பேர் வேல்முருகன் வேலை பார்க்கும் கடையை அடித்து நொறுக்கி வேல்முருகன் மற்றும் கடையின் உரிமையாளரை தாக்கியுள்ளனர்.

இது குறித்து நகர் வடக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சூரியகலா, தாக்குதலில் ஈடுபட்ட நந்தகோபால், சிவக்குமார், மகேஸ்வரி, ஹரிஹரன் உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்ததோடு, சிவகுமாரை கைது செய்துள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது



































































































