“நாகபந்தம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

புராணக் கதைகள், மர்மங்கள் மற்றும் பிரம்மாண்டமான ஆக்சன் காட்சிகளின் கலவையாக உருவாகியுள்ள பான்-இந்தியா திரைப்படம் “நாகபந்தம்”. இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கத்தில், இளம் நடிகர் விராட் கர்ணா கதாநாயகனாக நடிக்கும் இப்படம், இந்திய சினிமாவில் இதுவரை இல்லாத அளவிலான காட்சியமைப்புகள் மற்றும் தொழில்நுட்ப பிரம்மாண்டத்துடன் உருவாகியுள்ளது. வரும் ஜூலை 3 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில்  நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் கலந்து கொண்டு, படத்தை உருவாக்கிய பயணம், பிரம்மாண்டமான தயாரிப்பு அம்சங்கள், மிதாலஜிக்கல் உலகத்தின் தனித்துவம் மற்றும் ரசிகர்களுக்காக காத்திருக்கும் திரை அனுபவம் குறித்து பகிர்ந்து கொண்டனர்.

நிகழ்வில் கலைப்புலி எஸ். தாணு பேசியதாவது… நாகபந்தம் படத்தின் காட்சிகளைப் பார்த்தபோது, மிகப்பெரிய பிரம்மாண்டம் கண்ணெதிரே தோன்றியது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் அதன் உழைப்பையும், தரத்தையும் வெளிப்படுத்துகிறது.
தயாரிப்பாளர் அபிஷேக் நாமா இந்தப் படத்தை மிகுந்த அர்ப்பணிப்புடன் உருவாக்கியிருக்கிறார். அவருடன் எனக்கு நீண்டகால நட்பு உள்ளது. ஒரு சிறிய சம்பவத்தை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். பல ஆண்டுகளுக்கு முன்பு நான் வெளியிட்ட ‘அமுதவல்லி’ திரைப்படத்தின் விளம்பரத்தில், ஒரு நாகப்பாம்பு, ஒரு குழந்தை மற்றும் ‘பாம்பு குழந்தையை கொஞ்ச வருகிறதா ? கொத்த வருகிறதா ?’ என்ற ஒரு வரி வாசகம் மட்டுமே இடம்பெற்றிருந்தது. அந்த விளம்பரம் மக்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி, படம் மாபெரும் வெற்றியைப் பெற்றது.

நாகம் என்றாலே மக்களிடையே ஒரு தனி ஈர்ப்பும், நம்பிக்கையும், ஆன்மீகத் தொடர்பும் இருக்கிறது. நாகத்தை மையமாக வைத்து உருவான பல படங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. நாகக் கன்னிகை, நாக தேவதை கதைகள் முதல் பல படைப்புகள் வரை, நாகத்தின் மீது மக்களுக்கு எப்போதும் ஒரு தனிப்பட்ட ஈர்ப்பு உள்ளது. அந்த வகையில், ‘நாகபந்தம்’ திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்தப் படத்தின் குழுவினருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துகிறேன் என்றார்.

தயாரிப்பாளர் ஏ எம் ரத்னம் பேசியதாவது… தொழில்நுட்பம் மாறிக்கொண்டே இருக்கும் நிலையில், சினிமாவும் தொடர்ந்து புதிய பரிமாணங்களை நோக்கி பயணித்து வருகிறது. குறிப்பாக டிஜிட்டல் மீடியாவின் வருகைக்குப் பிறகு, மக்கள் திரையரங்குகளுக்கு வருவது குறைந்துள்ளது. ஆனால் சில திரைப்படங்கள் மட்டுமே ‘இதை கண்டிப்பாக திரையரங்கில் பார்த்தால்தான் முழு அனுபவம் கிடைக்கும்’ என்ற உணர்வை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் ‘நாகபந்தம்’ திரைப்படம் நிச்சயமாக இருக்கும்.

இந்தப் படத்தின் காட்சிப் பிரம்மாண்டம் மிகப்பெரியது. இதை சிறிய திரையில் பார்ப்பதை விட, பெரிய திரையில் பார்த்தால்தான் அதன் முழு தாக்கத்தையும் உணர முடியும். ‘நாகபந்தம்’ என்ற தலைப்பைப் பார்த்தவுடனேயே எனக்கு திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவிலின் மர்ம அறைகள் நினைவுக்கு வந்தன. குறிப்பாக இன்னும் திறக்கப்படாத அந்தப் புகழ்பெற்ற ‘நாகபந்தம்’ அறை குறித்து மக்கள் மத்தியில் எப்போதும் ஒரு ஆவலும் மர்மமும் இருந்து வருகிறது. அந்த பெயரே இந்தப் படத்தின் மீது தனி ஆர்வத்தை உருவாக்குகிறது.
இந்தப் படத்தின் முழுக் கதை எனக்கு தெரியாது. ஆனால் டிரெய்லர் மற்றும் காட்சிகளைப் பார்க்கும்போது, வரலாறு, மர்மம் மற்றும் சாகசம் கலந்த ஒரு பிரம்மாண்டமான திரை அனுபவமாக இது இருக்கும் என்று தோன்றுகிறது.

இயக்குநர் அபிஷேக் நாமா இந்தப் படத்திற்கு மிகப்பெரிய காட்சிப் பிரம்மாண்டத்தை வழங்கியிருக்கிறார். அவருடைய உழைப்பும் அர்ப்பணிப்பும் திரையில் தெளிவாக தெரிகிறது. இந்தப் படத்தில் பணியாற்றிய ஹீரோ, ஹீரோயின்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் என்றார்.

நடிகர் அஜய் ரத்னம் பேசியதாவது… இயக்குநர் அபிஷேக் நாமா பற்றி பேச வேண்டும். அவர் வெறும் இயக்குநர் மட்டுமல்ல. சினிமாவிற்கு முதலில் விநியோகஸ்தராக வந்து, பல இந்திய மற்றும் தெலுங்கு திரைப்படங்களை வெளியிட்டவர். ஒரு படம் ஏன் வெற்றி பெறுகிறது, ஏன் தோல்வியடைகிறது என்பதை ஆழமாக ஆராய்ந்த அனுபவம் அவருக்கு இருக்கிறது. அதன் பிறகு தயாரிப்பாளராக பல படங்களை உருவாக்கினார். இன்று இயக்குநராக இந்தப் படத்தை உருவாக்கியுள்ளார். இத்தனை ஆண்டுகளாக அவர் பெற்ற அனுபவத்தின் மொத்த வெளிப்பாடாகவே ‘நாகபந்தம்’ உருவாகியுள்ளது என்றார்.

நடிகர் ஜான் கொக்கேன் பேசியதாவது, புராணக் கதைகளை மையமாகக் கொண்ட திரைப்படங்களை நாம் ஏற்கனவே நிறைய பார்த்திருக்கிறோம். ஆனால் மிகப்பெரிய பொருட்செலவில், உலகத் தரத்தில், பான்-இந்தியா அளவில் உருவாகியுள்ள புராணப் பின்னணியிலான திரைப்படமாக ‘நாகபந்தம்’ அமைந்துள்ளது.

டிரெய்லரில் பார்த்ததுபோல, நாகபந்தம், பிரம்மகமலம் மற்றும் அதனைச் சுற்றிய மர்மங்கள் கதையின் மையமாக இருக்கின்றன. நாயகன் விராட் கர்ணா அந்த மர்மத்தைத் தேடும் பயணத்தில் செல்லும்போது, பார்வையாளர்களும் அவருடன் இணைந்து அந்தப் பயணத்தை அனுபவிப்பார்கள். படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவரும் அந்தத் தேடலின் ஒரு பகுதியாக மாறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. இந்தப் படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது என்றார்.

நடிகை நபா நடேஷ் பேசியதாவது… ‘நாகபந்தம்’ திரைப்படம் வரும் ஜூலை 3 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இது சாதாரணமான திரைப்படம் அல்ல. நமது வரலாறு, மர்மம், சாகசம், ஆக்சன், திரில்லர் மற்றும் உணர்வுப்பூர்வமான தருணங்கள் அனைத்தும் இணைந்த ஒரு பிரம்மாண்டமான திரை அனுபவம். இந்தப் படத்தில் பணியாற்றியது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக இருந்தது. படத்தின் கதையும், உருவாக்கப்பட்ட உலகமும் பார்வையாளர்களுக்கு புதுமையான அனுபவத்தை வழங்கும். டிரெய்லருக்கு அளித்த வரவேற்பைப் பார்த்து நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளோம் என்றார்‌.

நடிகர் விராட் கர்ணா பேசியதாவது… ‘நாகபந்தம்’ திரைப்படத்தின் புரமோஷனுக்காக இங்கு வந்திருப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ஆன்மிகம் மற்றும் பக்தி சார்ந்த விஷயங்களில் அதிகமாக ஈடுபட ஊக்குவித்து வருகிறார்கள். ஏனெனில் அது மனதிற்கும் உடலுக்கும் அமைதியையும் சக்தியையும் அளிக்கிறது. ‘நாகபந்தம்’ திரைப்படத்தில் பணியாற்றிய அனுபவமும் எனக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை முடித்த பிறகு நான் ஆன்மிக ரீதியாகவும், மனதளவிலும் மிகவும் வலிமையாக உணர்கிறேன்.

“நாகபந்இந்தப் படம் இந்திய கலாச்சாரம், பாரம்பரியம், தைரியம், கோவில்களின் மரபு மற்றும் நமது தொன்மையான நாகரீகத்தின் பல அம்சங்களை பேசுகிறது. நம் நாட்டின் வரலாறு மற்றும் ஆன்மிக மரபுகளை புதிய தலைமுறைக்கு கொண்டு செல்லும் ஒரு முயற்சியாக இந்தப் படம் இருக்கும். ‘நாகபந்தம்’ திரைப்படத்தில் நான் ‘ருத்ரா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். ஒரு அறிமுக நடிகராக இந்த வாய்ப்பு எனக்கு மிகவும் முக்கியமானது. இந்தக் கதாபாத்திரத்திற்காக நான் முழு அர்ப்பணிப்புடன் உழைத்துள்ளேன் என்றார்.

dhamaraimurasu

dhamaraimurasu

dhamaraimurasu admin

Related Posts

“ராவ் பகதூர்” ( தெலுங்கு ) திரைப்படத்தின் விமர்சனம்

ஶ்ரீ சக்ராஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ், A+S மூவிஸ், பெட்டர் இன்வெஸ்ட் மீடியா விஷன் நிறுவனங்கள் தயாரிப்பில், சத்யதேவ், விகாஸ் முப்பலா, தீபா தாமஸ், ஆணந்த் பாரதி உள்ளிட்டோர் நடிப்பில், வெங்கடேஷ் மகா இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “ராவ் பகதூர் ( தெலுங்கு ).…

Read more

யோகி பாபு நடித்துள்ள “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

நடிகர் யோகி பாபு நடித்து 300 ஆவது திரைப்படமாக வருகிற ஜூலை 17-ஆம் தேதி வெளி வர இருக்கும் திரைப்படைப்பு ‘அர்ஜுனன் பேர் பத்து’. இப்படத்தை ரா. ராஜ்மோகன் எழுதி இயக்கியுள்ளார்.இப்படத்தில் யோகி பாபுவுடன், அனாமிகா மஹி, காளி வெங்கட், அருள் தாஸ்,…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்கத்தவறிய செய்திகள்

“லெட்சுமி காந்தன் கொலை வழக்கு” படத்தின் திரைவிமர்சனம்

ஐ, நோபடி ( I, Nobody ) திரைப்படத்தின் விமர்சனம்

ஐ, நோபடி ( I, Nobody ) திரைப்படத்தின் விமர்சனம்

“ராவ் பகதூர்” ( தெலுங்கு ) திரைப்படத்தின் விமர்சனம்

“ராவ் பகதூர்” ( தெலுங்கு ) திரைப்படத்தின் விமர்சனம்

திண்டுக்கல்லில் பெருகிவரும் கள்ளத் துப்பாக்கி கலாசாரம் ! திணறும் வனத்துறை, கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

திண்டுக்கல்லில் பெருகிவரும் கள்ளத் துப்பாக்கி கலாசாரம் ! திணறும் வனத்துறை, கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

யோகி பாபு நடித்துள்ள “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

யோகி பாபு நடித்துள்ள “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“முதற்கனல்” படத்தின் திரைவிமர்சனம்

“முதற்கனல்” படத்தின் திரைவிமர்சனம்

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

“தாதா தி சவுரவ் கங்குலி ஸ்டோரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“வஞ்சி” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“கட்டா குஸ்தி_2” திரைப்படத்தின் விமர்சனம்

அருள்வான் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“டார்க்” படத்தின் திரைவிமர்சனம்

“டார்க்” படத்தின் திரைவிமர்சனம்

அமெரிக்க தமிழ்ச்சங்க விழாவில் கவனம் ஈர்த்த “திருக்குறள்_2” திரைப்படம் !

பிரமாண்டமாக தயாராகும் “திருக்குறள்_2” திரைப்படம் !

“மனு” திரைப்படத்தின் விமர்சனம்

“மனு” திரைப்படத்தின் விமர்சனம்

“நாகபந்தம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“நாகபந்தம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“லவ் ஓ லவ்” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

பூஜையிடன் படப்பிடிப்பை தொடங்கிய “லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி” படக்குழுவினர் !

பூஜையிடன் துவங்கிய “குட் நியூஸ்” படத்தின் படப்பிடிப்பு !

“லவ் ஓ லவ்” படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரித்த டீசர் !

குறும்பட போட்டியில் திறமைசாலிகளை வாழ்த்திய பிரபலங்கள் !

“ஹபீபி” படக்குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா !

நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் “சூப்பர் சுப்பு” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

திருமுட்டம் அருகே.. தொடரும் மணல் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

“எங்கள் தங்கம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

வடசென்னையில் தினந்தோறும் 1000 கிலோ ரேசன் அரிசியை கடத்தும் அரசு ஊழியர் சடகோபால் !

திருப்பூரில் மாணவிகளுக்கு ஆபாச கராத்தே பயிற்சி ! கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் கண்டனம்

கராத்தே பயிற்சி என ஆபாச வீடியோ வெளியீடு ! வலுக்கும் கண்டனங்கள், கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

“மக்கள் தலைவா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“ஆட்டி” திரைப்படத்தின் விமர்சனம்

“ஆட்டி” திரைப்படத்தின் விமர்சனம்

“நிழல்” திரைப்படத்தின் விமர்சனம்

“நிழல்” திரைப்படத்தின் விமர்சனம்

இஸ்லாமிய குடும்பத்தின் வாழ்வியல் ” ஹபீபி” ! விமர்சனம்

ஸ்லம் டாக் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு

நெய்க்காரப்பட்டி கோவில் திருவிழாவில், கூட்ட நெரிசலில் சிக்கி 20_க்கும் மேற்பட்டோர் காயம் !

18 ஆம் நூற்றாண்டின் “வாள்” பழனி அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு !

போதைப்பொருள் நடமாட்டத்தை வனத்துறையினருடன் இணைந்து கண்காணித்த காவல்துறையினர் !

பழனி அருகே.. நெய்க்காரப்பட்டி கோவில் திருவிழா ! கூட்டத்தை கட்டுப்படுத்த திணறும் காவல்துறையினர் !

“லைட் வெயிட் பேபி” விறுவிறுப்பான படப்பிடிப்பில் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் !

மடத்துக்குளம் அருகே.. கார் மோதி 2 வயது குழந்தை பலி ! பெற்றோர் படுகாயம் ! 

“சம்ஹாரம்” திரைப்படத்தின் விமர்சனம்

“சம்ஹாரம்” திரைப்படத்தின் விமர்சனம்

“மூன்றாம் கண்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

கேன்ஸ் திரைப்பட விழாவில் “பாலன் தி பாய்” திரைப்படத்திற்கு வரவேற்பு !

“அந்தரன்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !

“ஸ்லம் டாக்” படத்தின் டீசர் ஜூன் 8 ஆம் தேதி வெளியாகிறது !

தி இந்தியா ஸ்டோரி திரைப்படம் ஜூலை 24 ஆம் தேதி வெளியாகிறது !

அங்கீகாரம் படத்திற்கு “U” சான்றிதழ் வழங்கிய தணிக்கை வாரியம் !

ஒப்பந்ததாரரிடம் 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது ! பல்லடம் அருகே பரபரப்பு !

“கலர்ஸ்” நிறுவனத்தை திறந்து வைத்த நடிகை பிரியா பவானி சங்கர் !

“ஈகோ ராமன்” படத்தின் விமர்சனம்

“ஈகோ ராமன்” படத்தின் விமர்சனம்

பெத்தி படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !

பழனி அருகே அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் காவலப்பட்டி கிராமத்தினர் !

நடன இயக்குனர் “ஷெரீப்_250” கொண்டாட்டம் !

தனித்துவமான வேடத்தில் சசிகுமார் நடித்துள்ள புதிய படத்தின் அப்டேட்ஸ் !

“உயிரிணையே” இசை ஆல்பம் வெளியீட்டு விழா !

“பெத்தி” திரைப்படம் ராம் சரணுக்கு தேசிய விருதை பெற்றுத்தரும் ! – சிவராஜ்குமார்

சிம்பு நடிக்கும் “அரசன்” படத்தின் புதிய தகவல்கள் !

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தால், கொள்ளை லாபம் பார்க்கும் FL-2 பார் உரிமையாளர்கள் !

பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே ? அதிகரிக்கும் பாலியல் சீண்டல்கள் !

“பாதாம்கீர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியீடு !

பரபரப்பான ஆக்ஷ்ன் த்ரில்லர் கதைகளத்தில் உருவாகும் “சமவர்த்தி” !

“நாக பந்தம் திரைப்படம் ஜூலை 3 ஆம் தேதி வெளியீடு !

“தி இந்தியா ஸ்டோரி” படத்தின் டீசர் விரைவில் வெளியீடு !

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “கான் சிட்டி” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்ட ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் !

ஆக்ஷ்ன், த்ரில்லர் கதையில் உருவாகிவரும் “கொம்பா” திரைப்படம் !

“கங்கணம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“அதிரடி” படவிழாவில் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் !

வரவேற்பை குவிக்கும் “தாழ் திறவா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் !

“விசாரணை கைதி” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“பிளாஸ்ட்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“பெத்தி” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“பெத்தி” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“ஹபீபி” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“ஹபீபி” படத்தின் இசை வெளியீட்டு விழா !

கருப்பசாமியாக களமிறங்கி அநீதியை அழிக்கும் சூர்யா ! “கருப்பு” படத்தின் விமர்சனம்

சிவகார்த்திகேயன் நடிக்கும் “சேயோன்” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்த கமல்ஹாசன்

“சட்டென்று மாறுது வானிலை” படத்தின் விமர்சனம்

“சிலம்பம்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

நலத்திட்ட உதவிகள் வழங்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த் !

மாமியாரை தாக்கிய மருமகன் கொலை ! பல்லடம் அருகே பரபரப்பு !

இயக்குனராக அவதாரம் எடுத்த நடிகர் ராம் போதினேனி !

பிரபுதேவா, வடிவேலு நடித்துள்ள “பேங் பேங்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

மர்மம், கொலை, கிராமத்து ரகசியங்கள் நிறைந்த “கொலை சேவல்” திரைப்படம் ஜீ_5 தளத்தில் ஒளிபரப்பு !

கலை துறையினருக்கு, கலை ஞானியின் கோரிக்கை !

நிலக்கோட்டை அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் கைது !

திண்டுக்கல்லில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் பலி !

மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஹபீபி” படத்திற்கு யூ சான்றிதழ் !

“உத்சவ் 2026” விழாவில் “தேவி ரத்னா” விருதால் கௌரவிக்கப்பட்ட நடிகர் ரவி மோகன் !

பழமையான கதையின் பதிவாக உருவாகும் நாட்டார் மர்மகதை !

“பெத்தி” படம் மூலம் சர்வதேச விநியோகத்தில் களமிறங்கும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ்

சிவகார்த்திகேயனின் “வேலும் மயிலும்” ஆன்மீக இசைப் பாடல் வெளியீடு !

“சைலண்ட் இன்ஃபுளூயன்சர்” இசை ஆல்பம் வெளியீடு !

“எக்ஸாம்” இணைய தொடரில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள துரை சுதாகர் !

பாராட்டுக்களை குவிக்கும் “அங்கீகாரம்” படத்தின் டிரெய்லர் !

வடசென்னை_2 படத்தின் புதிய அப்டேட் அறிவித்த ஐஸ்வர்யா ராஜேஷ் !

“சட்டென்று மாறுது வானிலை” படத்தின் முன் வெளியீட்டு விழா !

நகைச்சுவை, த்ரில்லர் கதையில் சந்தானம் நடிப்பில் உருவாகும் “லவ் பைட்” !

ப்ரைம் வீடியோ தயாரிப்பில் உருவாகியுள்ள “சிஸ்டம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

மாணவர்களின் எதிர்காலம் ஒளிர, கபிலன் வைரமுத்து வாழ்த்து !

“29” படத்தின் விமர்சனம்

“29” படத்தின் விமர்சனம்

சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் ஶ்ரீ லீலா மாணவர்களுடன் கலந்துரையாடல் !