வினையும், எதிர்வினையும் பேசும் “அறுவடை” திரைப்படம் !

ஆன்மீக தத்துவங்களின்படி கர்மா என்பது பேசப்படுகிறது. அதன்படி , ‘நீங்கள் வெளிப்படுத்தும் எண்ணங்கள் அல்லது ஆற்றல் எதுவாக இருந்தாலும் அது நல்லதாகவோ, கெட்டதாகவோ உங்களுக்கே திரும்பக் கிடைக்கும்’ என்கிறது. சுருக்கமாக ‘விதைத்ததையே அறுப்பாய்’ என்கிறது.

அறிவியல் ரீதியாகப் பார்க்கும்போது நியூட்டனின் மூன்றாவது விதி இது பற்றிக் கூறும்போது, ‘ஒவ்வொரு வினைக்கும் அதற்கு இணையான எதிர்வினை உண்டு’ என்று கூறுகிறது. ஒவ்வொரு செயலுக்கும் உள்ள எதிர்வினை பற்றித்தான் ‘அறுவடை’ படம் பேசுகிறது.

‘வினை விதைத்தவன் வினை அறுப்பான் ‘என்கிற கருத்தின் அடிப்படையில் உருவாகி இருக்கும் படம்தான் ‘அறுவடை’. ஆக அறுவடை என்கிற இந்தப் படத்திற்குத் தலைப்பாக வந்திருக்கிற சொல் செயலுக்கான எதிர்வினையைக் குறிக்கிறது எனலாம்.

இந்த ‘அறுவடை’ திரைப்படத்தை எம். கே ஃபிலிம் மீடியா ஒர்க்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எம். கார்த்திகேசன் தயாரித்துள்ளார். படத்தை அவரே இயக்கியது மட்டுமல்லாமல் கதையின் நாயகனாக வேடமேற்று நடித்தும் இருக்கிறார். இவர் ஏற்கெனவே ‘லாரா’ படத்தைத் தயாரித்திருந்தார். அதில் அவர் ஏற்றிருந்த போலீஸ் கதாபாத்திரம் பேசப்பட்டது. ஒரு நடிகராக அவர் ‘ஒண்டிமுனி’ என்கிற படத்திலும் வில்லனாக செய்து கவனத்தைப் பெற்றவர். இப்படத்திற்கு பிரேம்குமார் முருகேசன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரகு ஸ்ரவன் குமார் இசையமைத்துள்ளார். கே. கே. விக்னேஷ் படத்தொகுப்பு செய்துள்ளார்.

இத்திரைப்படத்தைப் பற்றி நடிகரும் தயாரிப்பாளரும் இயக்குநருமான கார்த்திகேசன் கூறுகையில், இந்த ‘அறுவடை’ திரைப்படம் மிகவும் சிறப்பாக வந்துள்ளது, அதில் நடித்தவர்கள் அந்தந்த கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள் என்று தான் சொல்வேன். இதில் கதாநாயகியாக நடித்துள்ள சிம்ரன் ராஜ் இப்படத்திற்குப் பிறகு கவனிக்கப்படுவார். படத்தின் சில காட்சிகளை வாகனங்கள் செல்லக்கூட முடியாத காடுகளுக்குள் சென்று படப்பிடிப்பை நடத்தினோம். அப்போது உடை மாற்றுவதற்குச் சிரமங்கள் இருந்த போதும் படத்தின் நாயகி சிம்ரன் ராஜ் அதைப் பொருட்படுத்தாமல் ஒத்துழைப்பு கொடுத்தார். சற்றும் தாமதமாகாமல் சரியான நேரத்திற்குப் படப்பிடிப்புக்கு வருவார். அவருடைய இந்தக் குணமும் இந்தப் பண்பும் நிச்சயம் அவரைத் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு முன்னணி நடிகையாக கொண்டு வரும்.
அவருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது. நடிகர் கஜராஜ் இதுவரை ஏற்றிராத பாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். பருத்திவீரன் சரவணன் அந்தக் கதாபாத்திரமாகவே மாறி இருந்தார். அவரது அனுபவம் நடிப்பில் தெரியும்படி காட்சிகள் அமைந்துள்ளன. படத்தின் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் எதிர்பாராத விதமாக நடிகர் ராஜ சிம்மனுக்குக் காயம் ஏற்பட்டது படப்பிடிப்பை அன்று நிறுத்தி வைக்கலாம்
என்று முடிவு செய்தோம். ஆனால் ராஜசிம்மன் படப்பிடிப்பை நிறுத்த வேண்டாம் சற்று நேரத்தில் சரியாகிவிடும் என்று சொல்ல அதன் பின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்றது. அவரும் அந்தச் சண்டைக்காட்சியில் சிறப்பாகச் செய்து கொடுத்தார். அதேபோ பாபுஸ் பாபுராஜ் நடித்துள்ள கதாபாத்திரம் மக்கள் பேசும் படியாக இருக்கும். இப்படி நடிப்புக் கலைஞர்கள் பலரும் எங்களுக்கு ஒத்துழைப்பு கொடுத்து நடித்துக் கொடுத்ததை மறக்க முடியாது.

ஏற்கெனவே நான் தயாரித்த ‘லாரா’ படத்தில் ஒரு பாத்திரத்தில் நடித்திருந்தேன். அதற்கு ஊடகங்களிடம் பாராட்டு கிடைத்தது. அதற்குப் பிறகு ஒரு நடிகனாக நான் நடித்திருந்த ‘ஒண்டிமுனி’ படம் எனக்கு நல்ல பெயர் பெற்றுத் தந்துள்ளது. நல்ல கதையும் கதாபாத்திரமும் அமைந்தால் ஒரு நடிகனாக நான் தொடர்ந்து நடிப்பேன்.
இந்தப் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களை எடுத்துக் கொண்டால் அவர்கள் அனைவரும் அவர்களுடைய பணியை மிகவும் சிறப்பாகச் செய்துள்ளனர். படம் சிறப்பாக வந்ததை அடுத்து படக் குழுவினர் உற்சாகமாக இருக்கிறோம் என்று கூறினார்.

‘அறுவடை’ படத்திற்கான படப்பிடிப்பிற்குப் பிந்தைய தொழில்நுட்ப மெருகேற்றும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா விரைவில் நடைபெற உள்ளது.
கோடை விடுமுறையை ஒட்டி வெளியிடும் திட்டத்தில் படக்குழு மும்முரமாகச் செயல்பட்டு வருகிறது.

dhamaraimurasu

dhamaraimurasu

dhamaraimurasu admin

Related Posts

“லைட் வெயிட் பேபி” விறுவிறுப்பான படப்பிடிப்பில் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் !

பிக் பாஸ்’ பிரபலம் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் ‘லைட் வெயிட் பேபி ‘ படத்தின் அறுபது சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு, படக் குழுவினர் மகிழ்ச்சி.  தெரிவித்துள்ளனர். இயக்குநர் கே. சி. குரு இயக்கத்தில்…

Read more

“சம்ஹாரம்” திரைப்படத்தின் விமர்சனம்

வித்யா புரொடக்சன்ஸ் நிறுவனம் சார்பில் வேல்முருகன் தயாரிப்பில், பிரஜின் பத்மநாபன், ஷருமிதா, நியா வர்கீஸ், கணேஷ் சாவரட்டில் உள்ளிட்டோர் நடிப்பில், ராம் பிரபா இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “சம்ஹாரம்”. கதைப்படி.. திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஷருமிதா இரவு நேரத்தில் வீட்டைவிட்டு தப்பித்து, தான்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்கத்தவறிய செய்திகள்

நெய்க்காரப்பட்டி கோவில் திருவிழாவில், கூட்ட நெரிசலில் சிக்கி 20_க்கும் மேற்பட்டோர் காயம் !

18 ஆம் நூற்றாண்டின் “வாள்” பழனி அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு !

போதைப்பொருள் நடமாட்டத்தை வனத்துறையினருடன் இணைந்து கண்காணித்த காவல்துறையினர் !

பழனி அருகே.. நெய்க்காரப்பட்டி கோவில் திருவிழா ! கூட்டத்தை கட்டுப்படுத்த திணறும் காவல்துறையினர் !

பழனி அருகே.. நெய்க்காரப்பட்டி கோவில் திருவிழா ! கூட்டத்தை கட்டுப்படுத்த திணறும் காவல்துறையினர் !

“லைட் வெயிட் பேபி” விறுவிறுப்பான படப்பிடிப்பில் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் !

“லைட் வெயிட் பேபி” விறுவிறுப்பான படப்பிடிப்பில் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் !

மடத்துக்குளம் அருகே.. கார் மோதி 2 வயது குழந்தை பலி ! பெற்றோர் படுகாயம் ! 

மடத்துக்குளம் அருகே.. கார் மோதி 2 வயது குழந்தை பலி ! பெற்றோர் படுகாயம் ! 

“சம்ஹாரம்” திரைப்படத்தின் விமர்சனம்

“சம்ஹாரம்” திரைப்படத்தின் விமர்சனம்

“மூன்றாம் கண்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

கேன்ஸ் திரைப்பட விழாவில் “பாலன் தி பாய்” திரைப்படத்திற்கு வரவேற்பு !

“அந்தரன்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !

“ஸ்லம் டாக்” படத்தின் டீசர் ஜூன் 8 ஆம் தேதி வெளியாகிறது !

தி இந்தியா ஸ்டோரி திரைப்படம் ஜூலை 24 ஆம் தேதி வெளியாகிறது !

அங்கீகாரம் படத்திற்கு “U” சான்றிதழ் வழங்கிய தணிக்கை வாரியம் !

ஒப்பந்ததாரரிடம் 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது ! பல்லடம் அருகே பரபரப்பு !

“கலர்ஸ்” நிறுவனத்தை திறந்து வைத்த நடிகை பிரியா பவானி சங்கர் !

“ஈகோ ராமன்” படத்தின் விமர்சனம்

“ஈகோ ராமன்” படத்தின் விமர்சனம்

பெத்தி படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !

பழனி அருகே அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் காவலப்பட்டி கிராமத்தினர் !

நடன இயக்குனர் “ஷெரீப்_250” கொண்டாட்டம் !

தனித்துவமான வேடத்தில் சசிகுமார் நடித்துள்ள புதிய படத்தின் அப்டேட்ஸ் !

“உயிரிணையே” இசை ஆல்பம் வெளியீட்டு விழா !

“பெத்தி” திரைப்படம் ராம் சரணுக்கு தேசிய விருதை பெற்றுத்தரும் ! – சிவராஜ்குமார்

சிம்பு நடிக்கும் “அரசன்” படத்தின் புதிய தகவல்கள் !

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தால், கொள்ளை லாபம் பார்க்கும் FL-2 பார் உரிமையாளர்கள் !

பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே ? அதிகரிக்கும் பாலியல் சீண்டல்கள் !

“பாதாம்கீர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியீடு !

பரபரப்பான ஆக்ஷ்ன் த்ரில்லர் கதைகளத்தில் உருவாகும் “சமவர்த்தி” !

“நாக பந்தம் திரைப்படம் ஜூலை 3 ஆம் தேதி வெளியீடு !

“தி இந்தியா ஸ்டோரி” படத்தின் டீசர் விரைவில் வெளியீடு !

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “கான் சிட்டி” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்ட ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் !

ஆக்ஷ்ன், த்ரில்லர் கதையில் உருவாகிவரும் “கொம்பா” திரைப்படம் !

“கங்கணம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“அதிரடி” படவிழாவில் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் !

வரவேற்பை குவிக்கும் “தாழ் திறவா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் !

“விசாரணை கைதி” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“பிளாஸ்ட்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“பெத்தி” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“பெத்தி” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“ஹபீபி” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“ஹபீபி” படத்தின் இசை வெளியீட்டு விழா !

கருப்பசாமியாக களமிறங்கி அநீதியை அழிக்கும் சூர்யா ! “கருப்பு” படத்தின் விமர்சனம்

சிவகார்த்திகேயன் நடிக்கும் “சேயோன்” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்த கமல்ஹாசன்

“சட்டென்று மாறுது வானிலை” படத்தின் விமர்சனம்

“சிலம்பம்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

நலத்திட்ட உதவிகள் வழங்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த் !

மாமியாரை தாக்கிய மருமகன் கொலை ! பல்லடம் அருகே பரபரப்பு !

இயக்குனராக அவதாரம் எடுத்த நடிகர் ராம் போதினேனி !

பிரபுதேவா, வடிவேலு நடித்துள்ள “பேங் பேங்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

மர்மம், கொலை, கிராமத்து ரகசியங்கள் நிறைந்த “கொலை சேவல்” திரைப்படம் ஜீ_5 தளத்தில் ஒளிபரப்பு !

கலை துறையினருக்கு, கலை ஞானியின் கோரிக்கை !

நிலக்கோட்டை அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் கைது !

திண்டுக்கல்லில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் பலி !

மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஹபீபி” படத்திற்கு யூ சான்றிதழ் !

“உத்சவ் 2026” விழாவில் “தேவி ரத்னா” விருதால் கௌரவிக்கப்பட்ட நடிகர் ரவி மோகன் !

பழமையான கதையின் பதிவாக உருவாகும் நாட்டார் மர்மகதை !

“பெத்தி” படம் மூலம் சர்வதேச விநியோகத்தில் களமிறங்கும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ்

சிவகார்த்திகேயனின் “வேலும் மயிலும்” ஆன்மீக இசைப் பாடல் வெளியீடு !

“சைலண்ட் இன்ஃபுளூயன்சர்” இசை ஆல்பம் வெளியீடு !

“எக்ஸாம்” இணைய தொடரில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள துரை சுதாகர் !

பாராட்டுக்களை குவிக்கும் “அங்கீகாரம்” படத்தின் டிரெய்லர் !

வடசென்னை_2 படத்தின் புதிய அப்டேட் அறிவித்த ஐஸ்வர்யா ராஜேஷ் !

“சட்டென்று மாறுது வானிலை” படத்தின் முன் வெளியீட்டு விழா !

நகைச்சுவை, த்ரில்லர் கதையில் சந்தானம் நடிப்பில் உருவாகும் “லவ் பைட்” !

ப்ரைம் வீடியோ தயாரிப்பில் உருவாகியுள்ள “சிஸ்டம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

மாணவர்களின் எதிர்காலம் ஒளிர, கபிலன் வைரமுத்து வாழ்த்து !

“29” படத்தின் விமர்சனம்

“29” படத்தின் விமர்சனம்

சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் ஶ்ரீ லீலா மாணவர்களுடன் கலந்துரையாடல் !

ஜீ_5 தமிழில் ஒளிபரப்பாக உள்ள “வாரண்ட்” தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

விலங்கு தொடர் இயக்குனரின் அடுத்த படைப்பு “வாரண்ட்” ஜீ_5 தமிழில் மே 22 முதல் ஒளிபரப்பு !

“கான் சிட்டி” படத்தின் வைரலாகும் “நான் தான் கிங்கு” லிரிக்கல் வீடியோ !

“பவர் பேட்டா” படத்தின் அதிரடி கிளிம்ப்ஸ் வெளியீடு !

மாளவிகா மேனன் நடிப்பில் 6 மொழிகளில் பிரமாண்டமாக உருவாகும் “சிலந்தி_2” திரைப்படம் !

சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய பாஜக நிர்வாகிகள் மீது நடவடிக்கை !

மெகா ஸ்டார் ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள “பெத்தி” படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” திரைப்படம் !

“சேயோன்” படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்த நடிகை பாக்யஶ்ரீ  போர்ஸ் !

“காவிய காதல்” படத்தின் தலைப்பு அறிவிப்பு வீடியோவுக்கு வரவேற்பு !

கேன்ஸ் பட விழாவில் “மஞ்சும்மல் பாய்ஸ்” இயக்குநரின் அடுத்த படைப்பு !

தனுஷ் திறமைக்கும், புகழுக்கும் “கர” வலு சேர்த்ததா !.? “கர” படத்தின் விமர்சனம்

“பிரௌன் மணி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட நடிகர் ரியோ ராஜ் !

ராம்சரண் நடிப்பில் உருவாகியுள்ள “பெத்தி” திரைப்படம் ஜூன் 4 ஆம் தேதி வெளியாகிறது !

“தமிழ் கிறுக்கன்” ஆல்பம், லோகோ & தலைப்பு வெளியீடு !

படம் வெளியாவதற்கு முன்பே விருதுகளை குவிக்கும் “என்ன விலை” திரைப்படம் !

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்திற்கு “மொத ராத்திரி” என பெயர் அறிவிப்பு !

“பரிமளா & கோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !

மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள் குறித்த முதல் தமிழ் பிரெய்லி நூல் வெளியீடு !

“எடிசன் விருதுகள்” 18 வது ஆண்டு முன்னோட்ட நிகழ்வு !

“29” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“29” படத்தின் முன் வெளியீட்டு விழா !

காரைக்குடியில் பிரபல மருத்துவ தம்பதிகளின் குழந்தைக்கு பரதநாட்டிய அரங்கேற்றம் !

“சூப்பர் பி மேன்” படத்தின் முதல் பார்வை வெளியீடு !

கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைநீர் வடிகால், பாசன கால்வாயில் கலப்பதால் சுகாதார சீர்கேடு !

“சத்யவான் சாவித்திரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“எக்ஸாம்”தமிழ் ஒரிஜினல் இணைய தொடரின் முன்னோட்டம் வெளியீடு !

யாஷ் நடித்துள்ள “டாக்ஸிக்” படத்தின் வெளியீட்டு தேதி மாற்றம் !

சன் நெக்ஸ்ட் தளத்தில் தேவிஶ்ரீ பிரசாத் ! பிரமாண்டமாக தொடங்கிய “ஜாலி ஓ ஜிம்கானா” நிகழ்ச்சி !

டிஜிட்டல் வடிவில் புதுப்பிக்கப்பட்ட “மூன்றாம் பிறை” திரைப்படம் இன்றுமுதல் அமேசான் பிரைம் வீடியோவில் !

பிரபல பாடகி சாருலதா மணி எழுதி, இசையமைத்து, பாடிய பாடலை வெளியிட்ட விஜய் சேதுபதி !

“லவ் ஓ லவ்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு – பின்னணி பணிகள் தீவிரம் !

அமெரிக்காவை வீழ்த்திய அனுபவங்களை வழங்க தயாராக உள்ளோம் – ஈரான் அமைச்சர்

குழந்தைகள் மனதில் தவறான எண்ணத்தை விதைத்த விஜய் ! 4 ஆம் தேதிக்குப் பிறகு ஷூட்டிங் செல்வார் !

பாஞ்சாபில் காலியாகும் ஆம் ஆத்மி கூடாரம் !