“காலனி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

அதிதி மூவிஸ் தயாரிப்பில் டாக்டர் R.நாகராஜன் வழங்க, கோபி நயினார் இயக்கத்தில், ராதிகா முன்னணி வேடத்தில் நடித்துள்ள “காலனி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்டனர்.

ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற அறம் படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கோபி நயினார், வெளியீட்டுக்கு தயாராக உள்ள “மனுஷி” படத்திற்கு பின், சமூக அக்கறை மிக்க இன்னொரு அழுத்தமான படைப்பாக “காலனி” படத்தை உருவாக்கியுள்ளார். தாய்கிழவி படத்தின் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்ற ராதிகா, இப்படத்தில் மீண்டும் வலுவான மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தனது மகனின் இறப்புக்கு நீதி தேடி போராடும் ஒரு தாயின் உணர்ச்சி மிகுந்த பயணமே இப்படத்தின் கரு. வெளியான ஃபர்ஸ்ட் லுக்கில், கண்களில் கனல் பொங்கும் கோபத்துடன் அமர்ந்திருக்கும் ராதிகாவின் தோற்றம் வலுவாக பதிகிறது. பின்னணியில் கலவர சூழலில் பொதுமக்களை விரட்டும் போலீஸ் காட்சி இடம்பெற்றுள்ளதால், சமூக அவலங்களை வெளிப்படுத்தும் படமாக இது அமையும் என எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அறம் போலவே இதுவும் தீவிரமான தாக்கம் ஏற்படுத்தும் படைப்பாக இருக்கும் என்பதைக் காட்டும் வகையில் இந்த போஸ்டர் அமைந்துள்ளது. இந்த போஸ்டர் திரை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.

இப்படத்தில் “கலையரசி” ராதிகா முதன்மைப் பாத்திரத்தில் நடிக்க, அவரது மகனாக அறிமுக நடிகர் லியோ நடிக்கிறார். இவர்களுடன் அஞ்சலி நாயர், எம்.எஸ். பாஸ்கர், சேத்தன், ஆர்.கே. விஜயமுருகன், வினோத்சாகர், மூணார் ரமேஷ், அஜித் கோஷி, ரவி வெங்கட்ராம், ஜே கே, ஏ. வெங்கடேஷ், ராம்ஸ், இயக்குநர் தமிழ், செந்தி, ஜானகி, அஸ்வினி தங்கராஜ், கீதா கைலாசம், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சிறு இடைவெளிக்குப் பிறகு, தேனிசைத் தென்றல் தேவா இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணிகளை R. வேல்ராஜ் மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பை ஆண்டனி கவனித்துள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் திருவண்ணாமலை முதலான  வட மாவட்டங்களில்  நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது இறுதிக்கட்ட பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் டீசர், டிரெய்லர் மற்றும் திரையரங்கு வெளியீடு குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

dhamaraimurasu

dhamaraimurasu

dhamaraimurasu admin

Related Posts

“லெனின் பாண்டியன்” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் D.D.பாலச்சந்திரன் இயக்கத்தில் , சிவாஜி கணேசன் பேரன் தர்ஷன், கங்கை அமரன், ரோஜா நடிப்பில், நம் மண்ணின் வாழ்வியல் பேசும் அழுத்தமான படைப்பாக, மணல் கொள்ளையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “லெனின்…

Read more

வினையும், எதிர்வினையும் பேசும் “அறுவடை” திரைப்படம் !

ஆன்மீக தத்துவங்களின்படி கர்மா என்பது பேசப்படுகிறது. அதன்படி , ‘நீங்கள் வெளிப்படுத்தும் எண்ணங்கள் அல்லது ஆற்றல் எதுவாக இருந்தாலும் அது நல்லதாகவோ, கெட்டதாகவோ உங்களுக்கே திரும்பக் கிடைக்கும்’ என்கிறது. சுருக்கமாக ‘விதைத்ததையே அறுப்பாய்’ என்கிறது. அறிவியல் ரீதியாகப் பார்க்கும்போது நியூட்டனின் மூன்றாவது…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்கத்தவறிய செய்திகள்

“லெனின் பாண்டியன்” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“லெனின் பாண்டியன்” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“காலனி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“காலனி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

தொகுதி மறுசீரமைப்பு சட்டத்திருத்தம் ! கருப்புக் கொடி ஏற்றி போராட முதல்வர் அழைப்பு !

தொகுதி மறுசீரமைப்பு சட்டத்திருத்தம் ! கருப்புக் கொடி ஏற்றி போராட முதல்வர் அழைப்பு !

இளைஞர்களின் கலாச்சார அடையாளமாக மாறிய இசை நிகழ்ச்சி !

இளைஞர்களின் கலாச்சார அடையாளமாக மாறிய இசை நிகழ்ச்சி !

கண்ணதாசனின் “தாலாட்டும் பூங்காற்று” நூல் வெளியீடு மற்றும் விருது வழங்கும் விழா !

கண்ணதாசனின் “தாலாட்டும் பூங்காற்று” நூல் வெளியீடு மற்றும் விருது வழங்கும் விழா !

கவுண்டம்பாளையம் தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு !.?

கவுண்டம்பாளையம் தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு !.?

வினையும், எதிர்வினையும் பேசும் “அறுவடை” திரைப்படம் !

வினையும், எதிர்வினையும் பேசும் “அறுவடை” திரைப்படம் !

“TN 2026 தங்க நட்சத்திரம்” படத்தின் விமர்சனம்

“TN 2026 தங்க நட்சத்திரம்” படத்தின் விமர்சனம்

விஜய்க்கு எதிராக வைரம் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் நடிகர் தக்ஷன் விஜய் !

விஜய்க்கு எதிராக வைரம் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் நடிகர் தக்ஷன் விஜய் !

இயக்குனர் காந்தி கிருஷ்ணாவின் “பிரேக் பாஸ்ட்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

இயக்குனர் காந்தி கிருஷ்ணாவின் “பிரேக் பாஸ்ட்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !