“TN 2026 தங்க நட்சத்திரம்” படத்தின் விமர்சனம்

கண்ணன் ரவி குரூஸ் நிறுவனம் சார்பில், கண்ணன் ரவி, தீபக் ரவி தயாரிப்பில், நட்டி நடராஜ், தம்பி ராமையா, எம்எஸ் பாஸ்கர், இளவரசு, ஷிரத்தா ராவ், சாந்தினி தமிழரசன், யாசிகா ஆணந்த் உள்ளிட்டோர் நடிப்பில், உமாபதி ராமையா இயக்கத்தில் வெளிவந்துள்ள படம் “TN 2026 தங்க நட்சத்திரம்”.

கதைப்படி.. தமிழகத்திற்கு பிழைப்பு தேடி, வட மாநிலத்திலிருந்து வந்த குல்கந்த் குமாருக்கு ( நட்டி நடராஜ் ), ஏதேச்சையாக சினிமாவில் நாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைக்கிறது. முதல்படம் ஓரளவு பேசப்படுகிறது. பின்னர் படிப்புக்காக பொள்ளாச்சி செல்கிறார். அந்த பகுதியின் மிகப்பெரிய பணக்காரரான மன்றாடியார் ( தம்பி ராமையா ) எம்ஜிஆரின் தீவிர ரசிகர். அவர் குல்கந்த் குமாரை பெரிய நடிகராக மாற்ற பல்வேறு உதவிகளை செய்கிறார். குல்கந்த் குமாரும் பெரிய நடிகராக வளர்கிறார். பின்னர் அரசியல் பிரவேசத்துக்கு தயார் படுத்துகிறார். அதன்படியே ரசிகர் மன்றம் மக்கள் மன்றமாக மாறுகிறது. கூடவே குல்கந்த் குமாருக்கு ஆளும் கட்சியினரின் நெருக்கடிகளும் ஆரம்பமாகிறது.

பின்னர் குல்கந்த் குமார் தீவிர அரசியலுக்கு வர முடிவெடுக்கிறார். அதன்பிறகு என்னானது என்பது மீதிக்கதை…

தமிழகத்தில் நடைபெற்ற, தற்போது நடைபெறும் சம்பவங்களை திரைக்கதை அமைத்து இயக்கியிருக்கிறார் உமாபதி. படத்தின் முதல்பாதியை ஓரளவு கலகலப்பாக நகர்த்தி, இரண்டாம் பாதியை கோட்டைவிட்டுள்ளார். அதிலும் நிறைய குழப்பங்கள். நடிகர் ரஜினிகாந்த் ஜெயலலிதாவுக்கு எதிராக பேசியதற்காக, காவல்துறையினர் அவரது காரை மறித்ததும், ரஜினிகாந்த் காரிலிருந்து இறங்கி நடந்தே வீட்டிற்கு சென்றது, பின்னர் உடல்நிலையை காரணம் காட்டி, அரசியலுக்கு வராமல் தவிர்த்தது உள்ளிட்ட சம்பவங்களுடன், தற்போது நடிகர் விஜய் அரசியல் என்கிற பெயரில் செய்யும் அநாகரீகங்களை கலந்து குழப்பியிருக்கிறார்.

இந்த படத்திற்கு கதை எழுதிய தம்பி ராமையாவிற்கு ரஜினிகாந்த் மீது என்ன கோபமோ ! அவர் மீதுள்ள வன்மத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

நாயகனாக நடித்துள்ள நட்டி நடராஜ் வடமாநில இளைஞர் கதாப்பாத்திரத்தில், அச்சு அசலான உடல் மொழியை வெளிப்படுத்தி சிறப்பாக நடித்திருக்கிறார். அதேபோல் எம்எஸ் பாஸ்கரை அதிகம் பயன்படுத்தவில்லை என்றாலும், கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். இளவரசு தனது இயல்பான நடிப்புடன், நடனம், சண்டை காட்சிகளிலும் கலக்கியிருக்கிறார்.

இப்படத்தின் விளம்பரங்கள் அனைத்தும் நடிகர் விஜய்யின் அரசியலை மையப்படுத்திய படம் என்பதுபோல் இருந்தது. அதேபோல் அந்த கட்சியினரும் எதிர்ப்பை பதிவு செய்தனர். விளம்பரங்களை நம்பி தியேட்டருக்கு சென்றால் ஏமாற்றமே !

dhamaraimurasu

dhamaraimurasu

dhamaraimurasu admin

Related Posts

“லெனின் பாண்டியன்” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் D.D.பாலச்சந்திரன் இயக்கத்தில் , சிவாஜி கணேசன் பேரன் தர்ஷன், கங்கை அமரன், ரோஜா நடிப்பில், நம் மண்ணின் வாழ்வியல் பேசும் அழுத்தமான படைப்பாக, மணல் கொள்ளையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் “லெனின்…

Read more

“காலனி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

அதிதி மூவிஸ் தயாரிப்பில் டாக்டர் R.நாகராஜன் வழங்க, கோபி நயினார் இயக்கத்தில், ராதிகா முன்னணி வேடத்தில் நடித்துள்ள “காலனி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்டனர். ப்ளாக்பஸ்டர்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்கத்தவறிய செய்திகள்

“லெனின் பாண்டியன்” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“லெனின் பாண்டியன்” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“காலனி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“காலனி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

தொகுதி மறுசீரமைப்பு சட்டத்திருத்தம் ! கருப்புக் கொடி ஏற்றி போராட முதல்வர் அழைப்பு !

தொகுதி மறுசீரமைப்பு சட்டத்திருத்தம் ! கருப்புக் கொடி ஏற்றி போராட முதல்வர் அழைப்பு !

இளைஞர்களின் கலாச்சார அடையாளமாக மாறிய இசை நிகழ்ச்சி !

இளைஞர்களின் கலாச்சார அடையாளமாக மாறிய இசை நிகழ்ச்சி !

கண்ணதாசனின் “தாலாட்டும் பூங்காற்று” நூல் வெளியீடு மற்றும் விருது வழங்கும் விழா !

கண்ணதாசனின் “தாலாட்டும் பூங்காற்று” நூல் வெளியீடு மற்றும் விருது வழங்கும் விழா !

கவுண்டம்பாளையம் தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு !.?

கவுண்டம்பாளையம் தொகுதியில் வெற்றி வாய்ப்பு யாருக்கு !.?

வினையும், எதிர்வினையும் பேசும் “அறுவடை” திரைப்படம் !

வினையும், எதிர்வினையும் பேசும் “அறுவடை” திரைப்படம் !

“TN 2026 தங்க நட்சத்திரம்” படத்தின் விமர்சனம்

“TN 2026 தங்க நட்சத்திரம்” படத்தின் விமர்சனம்

விஜய்க்கு எதிராக வைரம் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் நடிகர் தக்ஷன் விஜய் !

விஜய்க்கு எதிராக வைரம் சின்னத்திற்கு வாக்கு சேகரிக்கும் நடிகர் தக்ஷன் விஜய் !

இயக்குனர் காந்தி கிருஷ்ணாவின் “பிரேக் பாஸ்ட்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

இயக்குனர் காந்தி கிருஷ்ணாவின் “பிரேக் பாஸ்ட்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !