பாரதீய ஜனதா கட்சியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாபிறகு, தேர்தல் தோல்விக்கு மாநில, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட தேர்தல் பொறுப்பாளர்கள் அனைவர் மீதும் சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர். இந்த கருத்துக்கள சில மூத்த நிர்வாகிகளின் உழைப்பையும், கட்சிக்கு அவப்பெயரையும் ஏற்படுத்தும் விதமாக இருந்ததால், பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் முதற்கட்டமாக சில நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தலைமையினை பற்றியும் கட்சிக்காக பணியாற்றுபவர்கள் மீதும் சமூக வலைதளங்களில் அவதூறுகளை பரப்பி வருகின்றனர்.
இது கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் செயலாக இருப்பதால் கட்சியின் பொறுப்பில் இருந்தும், அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் பொறுப்பாளர்கள் நீக்கப்படுகிறார்கள் என அவர்களின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார்.




































































































