நடிகர் சூர்யாவின் “கருப்பு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில், சூர்யாவின் நடிப்பில் தயாராகி உள்ள ‘கருப்பு’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் கோலாகலமாக நடைபெற்றது.

நடிகர்- இயக்குனர் என பன்முக ஆளுமை திறன் படைத்த ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படத்தில் சூர்யா, திரிஷா, யோகி பாபு, ஆர் ஜே பாலாஜி, இந்திரன்ஸ், நட்டி நட்ராஜ், சுவாசிகா, ஷிவதா, அனகா மாயா ரவி, சுப்ரீத் ரெட்டி, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜி. கே. விஷ்ணு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ் ஆர் பிரபு மற்றும் எஸ் ஆர் பிரகாஷ் பாபு ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த திரைப்படம் மே 14 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் படக் குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் நடிகர் சூர்யா பேசுகையில், மதுரை எனக்கு எப்போதும் மிகவும் சிறப்பான ஒரு இடமாக திகழ்கிறது. இங்குள்ள உணவு, அரசியல் மற்றும் பெண்களை தெய்வமாக மதிக்கும் பண்பு ஆகியவை என்னை எப்போதும் ஈர்க்கின்றன. மதுரை மண்ணிற்கு நான் கடன் பட்டிருக்கிறேன். நிறைய திரைப்படங்களை நான் இங்கு தான் படமாக்கி இருக்கிறேன். கடந்த 28 ஆண்டுகளாக என்னை ஒரு கதாநாயகனாக ஏற்றுக்கொண்டு, நீங்கள் என் மீது பொழியும் இந்த அன்பிற்கும், பாசத்திற்கும் நான் பெரிதும் நெகிழ்ந்து போயிருக்கிறேன். மதுரையில் நடைபெறும் சித்திரை விழாவிற்கு ஐந்து லட்சம் மக்கள் திரள்வார்கள். அதே போலவே இந்த ‘கருப்பு’ படத்தின் திருவிழாவையும் நான் மற்றொரு சித்திரை திருவிழாவாகவே பார்க்கிறேன்.

நடிகர் இந்திரன்ஸ் திறமையான கலைஞர். அவர் பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருக்கிறார். அவர் நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர். ஆனால் இப்போது தனது ஏழாம் வகுப்பு தேர்வுகளை எழுதி நிறைவு செய்து இருக்கிறார். அவரது இந்த அர்ப்பணிப்பிற்கு எல்லையே இல்லை.‌

இசையமைப்பாளர் சாய் மிகவும் திறமையான கலைஞர். அவருக்கு பிரம்மாண்டமான எதிர்காலம் காத்திருக்கிறது. நான் அவரை முதன் முதலாக சந்தித்தபோது அவர் ஒரு நாளைக்கு ஆயிரம் டியூன்ஸ்களை உருவாக்குவதாக சொன்னார். இப்படம் திரைக்கு வரும் போது இசையின் அடிப்படையில் அது ரசிகர்களுக்கு மிகப்பெரிய அனுபவமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

ட்ரீம் வாரியர் நிறுவனம் எனக்காக சிந்திக்கிறது. சொல்லப்போனால் என்னை விட அதிகமாகவே சிந்திக்கிறது. அவர்களுக்கு ஒரு மிகப்பெரிய தொலைநோக்குப் பார்வை உள்ளது. அதன் மூலமே அவர்களால் ‘கருப்பு’ வின் உலகத்தை படைக்க முடிந்தது. அன்பறிவு மற்றும் விக்ரம் மாஸ்டர்களின் அசாதாரணமான சண்டைக் காட்சி இயக்கத்திற்காக நான் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.‌

இந்தப் படம் இவ்வளவு தூரம் கடந்து வந்திருப்பதற்கு கருப்பசாமி தான் முக்கிய காரணம் என நான் கருதுகிறேன். ஒரு மனிதனுக்குள் தெய்வம் குடிகொள்ளும் போது ஏற்படும் தாக்கத்தை நான் இப்போது கண்கூடாக பார்க்கிறேன். எங்கு நம்பிக்கை இருக்கிறதோ.. அங்கு நிச்சயமாக அற்புதங்கள் நிகழும். இயக்குநர் ஆர் ஜே பாலாஜி பன்முகத் திறமை கொண்டவர். நான் என்னை ஒரு நடிகராக மட்டுமே பார்க்கிறேன். ஆனால் அவர் தன்னை ஒரு இயக்குநராகவும்… நடிகராகவும்… வர்ணனையாளராகவும்… இப்படி எல்லாமாக ஒரே நேரத்தில் பார்க்கிறார்.

இந்தப் படத்தில் நான் கதாநாயகன் அல்ல. கருப்பசாமி தான் கதாநாயகன். என்னை இந்த விதமாக நடிக்கவும்… இந்த விதமாக திரையில் தோன்றவும் வைக்கும் வாய்ப்பை அளித்த எனது இயக்குநர் ஆர் ஜே பாலாஜிக்கு நான் நன்றி கூறுகிறேன்.‌

படத்தைப் பார்த்தவர்கள் படத்தின் முதல் பாதி மிகுந்த உணர்வுபூர்வமாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை உச்சகட்ட விறுவிறுப்புடன் அமைந்திருப்பதாகவும் சொல்லியிருக்கிறார்கள்.‌ மே பதினான்காம் தேதி எல்லாம் உங்கள் கைகளில் தான் உள்ளது. இந்தப் படம் உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்றார்.‌

இயக்குநர் ஆர் ஜே பாலாஜி பேசுகையில், இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நான் கருப்பசாமி கோவிலுக்கு சென்று இருந்தேன். அப்போதே இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மதுரையில் தான் நடைபெற வேண்டும் என்று தயாரிப்பாளர்களிடம் நான் கூறியிருந்தேன். இந்த படம் உருவான முழு பயணத்திலும் கருப்பசாமி என் கையைப் பிடித்துக் கொண்டு என்னுடன் நடந்தே வந்தார். அதுவே எனது மிகப்பெரிய பலம் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

இசையமைப்பாளர் சாய் அபயங்கருடன் பணியாற்றுவதற்காக ஒப்பந்தம் செய்த போது.. அவருக்கு இது முதல் படமாக இருந்தது. ஆனால் இப்போது அவர் 73 படங்களுக்கு ஒப்பந்தம் ஆகிவிட்டார். நான் ஒரு முறை அவரது வீட்டுக்கு சென்று இருந்தேன். அங்கே ஒரு ஹெலிகாப்டர் நின்று கொண்டிருந்தது. அவர் மிகவும் அபாரமான திறமை கொண்ட இசையமைப்பாளர். அவரது பாடல் வெளியாகும் போது மக்கள் நிச்சயம் வியந்து போவார்கள். 15 நிமிடங்களில் அவரது பாடல் ஒரு மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. இப்போது நாங்கள் அவரை எங்கள் படத்தின் மிக சிறந்த மாஸ்டர் ஸ்ட்ரோக் ஆகவே கருதுகிறோம்.

நடிகர் இந்திரன்ஸ் இந்த படத்தில் அருமையாக நடித்திருக்கிறார். அவருடைய நடிப்பை கண்டு நான் பிரமித்து போனேன்.

திரிஷா இன்று எங்களுடன் இணைய முடியவில்லை. ஆனாலும் அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். திரிஷாவாக இருப்பது எளிதல்ல. 23 ஆண்டுகளாக உச்சத்தில் இருப்பது எளிதல்ல. சமீப காலங்களில் இது அவருடைய சிறந்த கதாபாத்திரங்களில் ஒன்றாக இருக்கும்.

ஒரு பெரிய பட்ஜெட்டில் ஆன படத்தையும், ஒரு பெரிய நட்சத்திரத்தையும் எப்படி கையாள்வது என்று எனக்கு தெரியவில்லை. நான் யோசித்துக் கொண்டிருந்தபோது ஒருவர் என் கையைப் பிடித்து வழி நடத்தினார். அவர்தான் ஒளிப்பதிவாளர் ஜி கே விஷ்ணு. ஒரு கதாநாயகனை திரையில் எப்படி மாஸ் ஹீரோவாக காட்டுவது என்பது அவருக்கு துல்லியமாக தெரிந்திருக்கிறது.

‘வலிமை’ படத்தின் அப்டேட்டிற்கு பிறகு ‘கருப்பு’ படத்தின் அப்டேட் தான் அதிகமாக கேட்கப்பட்டது. இரண்டு வருட பயணம் மிகவும் கடினமாக இருந்தது. நானும், எஸ் ஆர் பிரபுவும் சண்டையிட்டுக் கொண்டோம். விவாதித்தோம். எல்லாம் செய்தோம். ஆனால் இப்போது நாங்கள் ஒரு நல்ல நிலையில் இருக்கிறோம். கருப்பு படத்தின் மூலம் எனக்கு ஒரு குடும்பம் கிடைத்திருக்கிறது.‌

இந்தப் படத்தை நாங்கள் ஐந்து பேர் இணைந்து எழுதினோம். இந்தக் குழு இரண்டு வருடங்களாக என்னுடன் இருக்கிறது. இது ஒரே ஒருவரால் தான் சாத்தியமானது.. அவர் சூர்யா சார். அவரிடம் 45 நிமிட கதை சொல்லலை மட்டுமே கொடுத்தேன். அதை கேட்டு அவர் உடனடியாக நடிக்க ஒப்புக் கொண்டார். அவர் என் மீது நம்பிக்கையும் உறுதியும் வைத்திருந்தார். நான் அவருக்கு சிறந்ததை கொடுக்க விரும்பினேன். சூர்யா சார் திரையில் தன்னைத்தானே ரசித்து, ஜாலியாக இருந்து, ஒரு மாஸ் ஹீரோவாக தெரிய வேண்டும் என்று நான் விரும்பினேன். வழக்கமாக பெரிய ஹீரோ படங்களில் ஒவ்வொரு காட்சியிலும் ஹீரோ இருப்பார். ஆனால் ‘கருப்பு’ படத்தில் அவர் இல்லாத பல காட்சிகள் உள்ளன. எங்கள் கதைகளும் படத்தில் இருக்கின்றன. அவர் அதற்கு ஒப்புக் கொண்டார். அதை சிறப்பாக செய்து காட்டினார். திரையில் அவருடைய கண்களே பல விசயங்களை சொல்கின்றன. முதல் பாதியில் கமர்சியலும், இரண்டாம் பாதியில் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கும் ஒரு உச்சகட்டத்துடன் கூடிய பரபரப்பும் இருக்கும். ஒரு மன்னன் தன் சிம்மாசனத்தை திரும்ப பெற வருகிறான்.

படத்தின் போஸ்டர்களில் ரிலீஸ் தேதியை ஏன் குறிப்பிடவில்லை என ரசிகர்கள் கேட்கிறார்கள். அப்படி செய்திருந்தால் தணிக்கை வாரியம் எங்கள் கதவை தட்டி இருக்கும். நாங்கள் அதை விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடுவோம். உங்கள் பட்டாசுகளை தயாராக வைத்துக் கொள்ளுங்கள் மே 14 ஒரு கொண்டாட்டம் வரவுள்ளது என்றார்.

இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பேசுகையில், கருப்பு படத்தின் பாடல்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு மலைக்க வைப்பதாக உள்ளது. அது என்னை மிகவும் நெகிழ்ச்சி அடைய செய்திருக்கிறது. சூர்யா சார் பல கல்ட் ( Cult) திரைப்படங்களை வழங்கி இருக்கிறார். அப்படிப்பட்ட சூழலில் இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பு எனக்கு வந்த போது, நான் உடனடியாக அதை ஏற்றுக் கொண்டேன். பாலாஜி அண்ணா உடன் நடந்த முதல் சந்திப்பு மிக சிறப்பாகவும் மிக விசேஷமானதாகவும் அமைந்தது. ஆரம்பத்தில் எனக்கு சற்று தயக்கம் இருந்தது. இயக்குநர் ஆர் ஜே பாலாஜியை  சந்திப்பதற்காக நான் காரில் சென்று கொண்டிருந்தேன். ஆனால் செல்லும் வழியிலேயே ட்விட்டரில் ‘சூர்யா 45’ படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார் என்ற செய்தியை பார்த்தேன். என் உடல் சிலிர்த்து போனது. அந்த தருணத்தை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது.

இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ஒரு திரைப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் ஒருவரை தேர்வு செய்வதற்கு முன் வேறு எந்த ஒரு சூப்பர் ஹீரோவாக இருந்தாலும் நிச்சயம் இரண்டு முறை யோசித்து இருப்பார்கள். ஆனால் சூர்யா சார் எந்த தயக்கமும் இன்றி என்னை ஏற்றுக்கொண்டு, இந்தப் படத்தில் பணியாற்ற வாய்ப்பளித்தார். நான் இந்தப் படத்தை முழுமையாக பார்த்து விட்டேன். இந்தப் படத்தின் பின்னணி இசை நிச்சயம் பெரிய அளவில் பேசப்படும். மேலும் இந்தப் படம் ஒரு மிகப்பெரிய பிளாக் பஸ்டர் வெற்றியை பெறும் என்பதில் எனக்கு சிறிதும் சந்தேகமில்லை என்றார்.

நடிகர் நட்டி நட்ராஜ் பேசுகையில், கருப்பு திரைப்படம் மிக சிறப்பான திரை கதையை கொண்டிருக்கிறது. இந்த படத்திற்காக நான் பலமுறை ஒத்திகை மேற்கொண்டேன். நாங்கள் நடித்துக் காட்டிய ஒவ்வொரு காட்சியையும் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி நினைவில் வைத்துக் கொண்டு அவற்றை மிக சிறப்பாக முன்னெடுத்துச் சென்றார். சூர்யா சாரின் அழகு இன்றும் அப்படியே சற்று மாறாமல் இருப்பதை கண்டு நான் மிகவும் ரசிக்கிறேன். அதனால் தான் சூர்யா சாருக்கு இன்று வரை ரசிகர்கள் இருக்கிறார்கள். அவருடன் ரசிகர்கள் என்றென்றும் இருப்பார்கள் என்றார்.

பாடலாசிரியர் விவேக் பேசுகையில்,  ‘சூரரைப்போற்று’ படத்தில் இடம்பெற்ற ‘வெய்யோன் சில்லி’ பாடல் மதுரை வட்டார வழக்கில் எழுதப்பட்டது. அதனைத் தொடர்ந்து ‘ரெட்ரோ’ மற்றும் ‘கருப்பு’ என அடுத்தடுத்து இரண்டு படங்களில் சூர்யா சாருடன் மீண்டும் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. சாய் அபயங்கருடன் நான் தொடர்ந்து பலமுறை பணியாற்றி வருகிறேன். சுயாதீன பாடல்கள் முதல் திரைப்பட பாடல்கள் வரை அவருடன் இணைந்து உருவாக்கி உள்ளேன். நாங்கள் இணையும் போதெல்லாம் எங்களுக்கு இடையே ஒரு சிறப்பான உற்சாகம் நிலவும். இந்த படத்தின் அனைத்து பாடல்களுமே மிக சிறப்பாக அமைந்துள்ளன என்றார்.

தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு பேசுகையில், கருப்பு திரைப்படம் குறித்து நான் மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறேன். ஆர் ஜே பாலாஜி இந்தப் படத்தை மிகுந்த கலகலப்பு, உற்சாகம் மற்றும் முழுமையான பொழுதுபோக்கு அம்சங்களுடன் உருவாக்கியுள்ளார். பாலாஜி ஒரு தயாரிப்பாளரின் பணிச்சுமையை வெகுவாக குறைத்து, எங்கள் அனைவருக்கும் மிகவும் சவுகரியமானதொரு சூழலை அமைத்துத் தந்திருக்கிறார். இந்தப்படம் பிரம்மாண்டத்துடன் உருவாகி உள்ளது. இது ஒரு உண்மையான திருவிழா போன்ற உணர்வை ஏற்படுத்தும். ஒளிப்பதிவாளர் ஜி கே விஷ்ணுவுக்கும் தனது முதல் பெரிய திரைப்படத்தை எங்களுடன் இணைந்து உருவாக்கும் சாய் அபயங்கருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நடிகை ஷிவதா பேசுகையில், மதுரையில் ‘கருப்பு ‘படத்தின் படப்பிடிப்பிற்காக வந்த போதே எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இப்போது இந்த மேடை இன்னும் பிரம்மாண்டமான மாஸாக இருக்கிறது. இயக்குநர் ஆர் ஜே பாலாஜி மூலமாக நான் இன்று இந்த மேடையில் நிற்கிறேன். அவருக்கு என் மனமார்ந்த நன்றிகள். சூர்யா சாருடன் நான் இணைந்து நடித்த அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. அது எனது பிறந்த நாளாகவும் அமைந்தது. அந்த அனுபவம் மிகவும் உணர்வுபூர்வமானதாகவும், அழகானதாகவும் இருந்தது. இயக்குநர் ஆர் ஜே பாலாஜி சார் மிகவும் கலகலப்பான ஒரு மனிதர். படப்பிடிப்பின் போது பதற்றமான சூழல்கள் நிலவினாலும் கூட… அவர் மிகவும் இனிமையாக நடந்து கொள்வார்‌ படப்பிடிப்பு தளத்தில் தனது வேலையை அவர் மிகவும் ரசித்து செய்வார் என்றார்.

நடிகை அனகா மாயா ரவி பேசுகையில், மதுரையில் நடைபெறும் இவ்வளவு பிரமாண்டமான ஒரு நிகழ்வில் நான் இதற்கு முன் கலந்து கொண்டதே இல்லை. இவை அனைத்திற்கும் காரணம் இயக்குநர் ஆர் ஜே பாலாஜி சார் தான். இவ்வளவு பெரிய திரைப்படத்தில் எனக்கு வாய்ப்பு அளித்ததற்கு நன்றி சார், சூர்யா சார் மற்றும் ஜோதிகா மேடமின் தீவிர ரசிகையாகவே நான் வளர்ந்தேன். அவரை நேரில் சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும் என்று நான் நினைத்துக் கூட பார்த்ததில்லை. ஆனால் இப்போது அவருடன் இணைந்து ஒரு திரைப்படத்திலேயே நடித்து விட்டேன். எனக்கு தமிழ் மொழி அவ்வளவு சரளமாக வராது. ஆனால் அடுத்த முறை வரும்போது நன்றாக தயாராகிக்கொண்டு வருவேன் என்றார்.

திங்க் மியூசிக் சந்தோஷ் பேசுகையில், சூர்யா சாருக்கு ‘கருப்பு’ திரைப்படம் இதுவரை ரசிகர்கள் கண்டிராத ஒரு புதிய அவதாரமாக அமையும். நான் சமீபத்தில் தான் இந்த படத்தை பார்க்கும் வாய்ப்பைப் பெற்றேன். இயக்குநரின் முழு அனுமதியுடன் நானும் இதை சொல்கிறேன். இது ரசிகர்களுக்கு ஒரு ‘செம விருந்தாக அமையப்போகிறது என்றார்.

dhamaraimurasu

dhamaraimurasu

dhamaraimurasu admin

Related Posts

விஜய் சேதுபதியின் “பத்தா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. படக்குழுவினர், திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் கலந்துகொண்டனர். ஸ்டார் ஸ்டுடியோ 18  (Star Studio18) மற்றும் இயக்குநர்…

Read more

“மண்டாடி” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

அண்மையில் வெளியாகி விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் வெற்றி பெற்றுள்ள படம் ‘மண்டாடி’. இப்படத்தில் சூரி, சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால சரவணன், மிதுன் மற்றும் ஸ்டன் சிவா உள்ளிட்ட பலர்  நடித்திருந்தனர். இயக்குநர் மதிமாறன் புகழேந்தி…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்கத்தவறிய செய்திகள்

விஜய் சேதுபதியின் “பத்தா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

விஜய் சேதுபதியின் “பத்தா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

பறிபோன மானத்திற்கு “என்ன விலை” என்ன விலை படத்தின் விமர்சனம்

பறிபோன மானத்திற்கு “என்ன விலை” என்ன விலை படத்தின் விமர்சனம்

“மண்டாடி” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“மண்டாடி” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“கஸ்தூரி வீடு” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“கஸ்தூரி வீடு” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

பாவனா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் “பிக்னிக்” படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு !

பாவனா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் “பிக்னிக்” படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு !

துல்கர் சல்மானின் “ஆகாசம்லோ ஓக தாரா” (AOT) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

துல்கர் சல்மானின் “ஆகாசம்லோ ஓக தாரா” (AOT) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

எம்.எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி “எம்.எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்” படத்தின் துவக்க விழா !

எம்.எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி “எம்.எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்” படத்தின் துவக்க விழா !

அர்ஜூன் தாஸ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

அர்ஜூன் தாஸ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

“அன்பில் அவன்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

நானி நடிப்பில் உருவாகியுள்ள “தி பாரடைஸ்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

நானி நடிப்பில் உருவாகியுள்ள “தி பாரடைஸ்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“என்ன விலை” படம் மறக்க முடியாத அனுபவம் ! நிமிஷா சஜயன்

“என்ன விலை” படம் மறக்க முடியாத அனுபவம் ! நிமிஷா சஜயன்

தி டார்க் ஹெவன் படத்தின் முன் வெளியீட்டு விழா !

தி டார்க் ஹெவன் படத்தின் முன் வெளியீட்டு விழா !

“பனங்காட்டான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“பனங்காட்டான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

அரசியலும் சமூக அக்கறையும் சேர்ந்து உருவான படம் தான் “ஆகாயம்” ! தினந்தோறும் நாகராஜ்

அரசியலும் சமூக அக்கறையும் சேர்ந்து உருவான படம் தான் “ஆகாயம்” ! தினந்தோறும் நாகராஜ்

“என்ன விலை” படத்தில் நான் நடித்த கதாப்பாத்திரம் மிகவும் சவாலானது ! கருணாஸ்

“என்ன விலை” படத்தில் நான் நடித்த கதாப்பாத்திரம் மிகவும் சவாலானது ! கருணாஸ்

“என்ன விலை” படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியது எனக்கு கிடைத்த வரம் !

“என்ன விலை” படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியது எனக்கு கிடைத்த வரம் !

“மண்டாடி” மூலம் மாஸ் ஹீரோவான சூரி ! மண்டாடி விமர்சனம்

“மண்டாடி” மூலம் மாஸ் ஹீரோவான சூரி ! மண்டாடி விமர்சனம்

வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகியுள்ள “நல்லபடம்” செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியீடு !

வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகியுள்ள “நல்லபடம்” செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியீடு !

சூர்யா நடித்துள்ள “சீன்” ( SCENE ) படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு !

சூர்யா நடித்துள்ள “சீன்” ( SCENE ) படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு !

“என்ன விலை” படத்தில் நடித்தது மிகவும் சவாலாக இருந்தது ! நடிகை ஷாஷா சிவக்குமார்

“என்ன விலை” படத்தில் நடித்தது மிகவும் சவாலாக இருந்தது ! நடிகை ஷாஷா சிவக்குமார்

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

அசோக் செல்வன் நடித்துள்ள “அன்பில் அவன்” வெளியீட்டு தேதி அறிவிப்பு !

அசோக் செல்வன் நடித்துள்ள “அன்பில் அவன்” வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“வதந்தி சீசன்_2” பற்றி மெய்சிலிர்க்கும் நடிகர் !

“வதந்தி சீசன்_2” பற்றி மெய்சிலிர்க்கும் நடிகர் !

“என்ன விலை” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“என்ன விலை” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

திரைப்பிரபலங்களுக்கு புதிய தீர்ப்பை பெற்றுத்தந்துள்ள நடிகை !

திரைப்பிரபலங்களுக்கு புதிய தீர்ப்பை பெற்றுத்தந்துள்ள நடிகை !

“வைல்ட் தமிழ்நாடு” இன்று முதல் பிவிஆர் திரையரங்குகளில் வெளியீடு !

“வைல்ட் தமிழ்நாடு” இன்று முதல் பிவிஆர் திரையரங்குகளில் வெளியீடு !

“மொத ராத்திரி” படக்குழுவினரின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“மொத ராத்திரி” படக்குழுவினரின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

கமல்ஹாசனின் புதிய படத்தின் “புகைப்படம்” சமூக வலைதளங்களில் வைரல் !

கமல்ஹாசனின் புதிய படத்தின் “புகைப்படம்” சமூக வலைதளங்களில் வைரல் !

நயன்தாராவின் “ஹாய்” படத்தின் விமர்சனம் !

நயன்தாராவின் “ஹாய்” படத்தின் விமர்சனம் !

மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க அலட்சியப்படுத்தும் அரசு அதிகாரிகள் ! நரிக்குறவர் இன மக்களின் போராட்டத்திற்கு தீர்வு எப்போது ?.!

மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க அலட்சியப்படுத்தும் அரசு அதிகாரிகள் ! நரிக்குறவர் இன மக்களின் போராட்டத்திற்கு தீர்வு எப்போது ?.!

“ஒன்ஸ்மோர்” படத்தின் திரைவிமர்சனம்

“ஒன்ஸ்மோர்” படத்தின் திரைவிமர்சனம்

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் மரணம் ! சோகத்தில் கிராம மக்கள் !

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் மரணம் ! சோகத்தில் கிராம மக்கள் !

தந்தை கொலை, பழிவாங்க துடிக்கும் மகள் ! “அமரம்” படத்தின் விமர்சனம்

தந்தை கொலை, பழிவாங்க துடிக்கும் மகள் ! “அமரம்” படத்தின் விமர்சனம்

திருப்பூரில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி தெருநாய்கள் கொடூர கொலை !

திருப்பூரில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி தெருநாய்கள் கொடூர கொலை !

தந்தை, மகன் உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் “ஃபாதர்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

தந்தை, மகன் உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் “ஃபாதர்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

“டாக்ஸிக்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“டாக்ஸிக்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

200 கோடி வசூல் சாதனை படைத்த “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம்

200 கோடி வசூல் சாதனை படைத்த “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம்

“ஒன்ஸ்மோர்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“ஒன்ஸ்மோர்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம் ! தெளிவில்லாத முதல்வரின் அறிவிப்பு !

கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம் ! தெளிவில்லாத முதல்வரின் அறிவிப்பு !

“Yourbackers play” உலகின் லாப நோக்கமற்ற OTT தளம் அறிமுகம் !

“Yourbackers play” உலகின் லாப நோக்கமற்ற OTT தளம் அறிமுகம் !

“இருமுடி கட்டு” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“இருமுடி கட்டு” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குரு சங்கருக்கு கொலை மிரட்டல் !

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குரு சங்கருக்கு கொலை மிரட்டல் !

“ஹலோ மிஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“ஹலோ மிஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

பழனி அருகே “தார் & டீசல்” திருட்டு ! புகார்தாரரை மிரட்டும் காவல் ஆய்வாளர் !.?

பழனி அருகே “தார் & டீசல்” திருட்டு ! புகார்தாரரை மிரட்டும் காவல் ஆய்வாளர் !.?

“அன்பில் அவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு !

“அன்பில் அவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு !

“ஐ ம் கேம்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“ஐ ம் கேம்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“பியார் பிரேமா கல்யாணம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“பியார் பிரேமா கல்யாணம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“பத்தா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“பத்தா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் டிரெய்லருக்கு அமோக வரவேற்பு !

டாக்ஸிக் படத்தின் டிரெய்லருக்கு அமோக வரவேற்பு !

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு !

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“வதந்தி சீசன் 2” குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“வதந்தி சீசன் 2” குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட “பியார் பிரேமா கல்யாணம்” தொடரின் முன்னோட்டம் !

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட “பியார் பிரேமா கல்யாணம்” தொடரின் முன்னோட்டம் !

துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ஆம் கேம்” ( I am Game ) படத்தின் டிரெய்லர் வெளியீடு !

துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ஆம் கேம்” ( I am Game ) படத்தின் டிரெய்லர் வெளியீடு !

வதந்தி சீசன் 2 “தி மிஸ்டரி ஆஃப் மணி” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

வதந்தி சீசன் 2 “தி மிஸ்டரி ஆஃப் மணி” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

“நடு நாடு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“நடு நாடு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“பிரஜாபதி” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“பிரஜாபதி” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

நயன்தாரா, கவின் நடித்துள்ள “ஹாய்” படத்தின் ரசகுல்லா பாடல் வெளியீடு !

நயன்தாரா, கவின் நடித்துள்ள “ஹாய்” படத்தின் ரசகுல்லா பாடல் வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் இரண்டாவது பாடல் “தடுமாறுதே” வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் இரண்டாவது பாடல் “தடுமாறுதே” வெளியீடு !

“அருள்வான்” படத்தின் திரைவிமர்சனம்

“அருள்வான்” படத்தின் திரைவிமர்சனம்

“அன்பே டயானா” திரைப்படத்தின் விமர்சனம்

“அன்பே டயானா” திரைப்படத்தின் விமர்சனம்

கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான “அமரன்” படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் !

கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான “அமரன்” படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் !

“தார்” டீசல் திருட்டை மாவட்டந்தோறும் விரிவுபடுத்தும் பலே கில்லாடி !

“தார்” டீசல் திருட்டை மாவட்டந்தோறும் விரிவுபடுத்தும் பலே கில்லாடி !

பழனி அருகே டீசல், தார் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

பழனி அருகே டீசல், தார் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

“வாழ்க்கையே போராட்டம்” படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் !

“வாழ்க்கையே போராட்டம்” படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் !

“லெட்சுமி காந்தன் கொலை வழக்கு” படத்தின் திரைவிமர்சனம்

“லெட்சுமி காந்தன் கொலை வழக்கு” படத்தின் திரைவிமர்சனம்

ஐ, நோபடி ( I, Nobody ) திரைப்படத்தின் விமர்சனம்

ஐ, நோபடி ( I, Nobody ) திரைப்படத்தின் விமர்சனம்

“ராவ் பகதூர்” ( தெலுங்கு ) திரைப்படத்தின் விமர்சனம்

“ராவ் பகதூர்” ( தெலுங்கு ) திரைப்படத்தின் விமர்சனம்

திண்டுக்கல்லில் பெருகிவரும் கள்ளத் துப்பாக்கி கலாசாரம் ! திணறும் வனத்துறை, கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

திண்டுக்கல்லில் பெருகிவரும் கள்ளத் துப்பாக்கி கலாசாரம் ! திணறும் வனத்துறை, கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

யோகி பாபு நடித்துள்ள “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

யோகி பாபு நடித்துள்ள “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“முதற்கனல்” படத்தின் திரைவிமர்சனம்

“முதற்கனல்” படத்தின் திரைவிமர்சனம்

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

“தாதா தி சவுரவ் கங்குலி ஸ்டோரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“தாதா தி சவுரவ் கங்குலி ஸ்டோரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“வஞ்சி” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“வஞ்சி” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“கட்டா குஸ்தி_2” திரைப்படத்தின் விமர்சனம்

“கட்டா குஸ்தி_2” திரைப்படத்தின் விமர்சனம்

அருள்வான் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

அருள்வான் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“டார்க்” படத்தின் திரைவிமர்சனம்

“டார்க்” படத்தின் திரைவிமர்சனம்

அமெரிக்க தமிழ்ச்சங்க விழாவில் கவனம் ஈர்த்த “திருக்குறள்_2” திரைப்படம் !

அமெரிக்க தமிழ்ச்சங்க விழாவில் கவனம் ஈர்த்த “திருக்குறள்_2” திரைப்படம் !

பிரமாண்டமாக தயாராகும் “திருக்குறள்_2” திரைப்படம் !

பிரமாண்டமாக தயாராகும் “திருக்குறள்_2” திரைப்படம் !

“மனு” திரைப்படத்தின் விமர்சனம்

“மனு” திரைப்படத்தின் விமர்சனம்

“நாகபந்தம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“நாகபந்தம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“லவ் ஓ லவ்” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“லவ் ஓ லவ்” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

பூஜையிடன் படப்பிடிப்பை தொடங்கிய “லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி” படக்குழுவினர் !

பூஜையிடன் படப்பிடிப்பை தொடங்கிய “லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி” படக்குழுவினர் !

பூஜையிடன் துவங்கிய “குட் நியூஸ்” படத்தின் படப்பிடிப்பு !

பூஜையிடன் துவங்கிய “குட் நியூஸ்” படத்தின் படப்பிடிப்பு !

“லவ் ஓ லவ்” படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரித்த டீசர் !

“லவ் ஓ லவ்” படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரித்த டீசர் !

குறும்பட போட்டியில் திறமைசாலிகளை வாழ்த்திய பிரபலங்கள் !

குறும்பட போட்டியில் திறமைசாலிகளை வாழ்த்திய பிரபலங்கள் !

“ஹபீபி” படக்குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா !

“ஹபீபி” படக்குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா !

நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் “சூப்பர் சுப்பு” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் “சூப்பர் சுப்பு” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

திருமுட்டம் அருகே.. தொடரும் மணல் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

திருமுட்டம் அருகே.. தொடரும் மணல் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

“எங்கள் தங்கம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“எங்கள் தங்கம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

வடசென்னையில் தினந்தோறும் 1000 கிலோ ரேசன் அரிசியை கடத்தும் அரசு ஊழியர் சடகோபால் !

வடசென்னையில் தினந்தோறும் 1000 கிலோ ரேசன் அரிசியை கடத்தும் அரசு ஊழியர் சடகோபால் !

திருப்பூரில் மாணவிகளுக்கு ஆபாச கராத்தே பயிற்சி ! கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் கண்டனம்

திருப்பூரில் மாணவிகளுக்கு ஆபாச கராத்தே பயிற்சி ! கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் கண்டனம்

கராத்தே பயிற்சி என ஆபாச வீடியோ வெளியீடு ! வலுக்கும் கண்டனங்கள், கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

கராத்தே பயிற்சி என ஆபாச வீடியோ வெளியீடு ! வலுக்கும் கண்டனங்கள், கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

“மக்கள் தலைவா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“மக்கள் தலைவா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“ஆட்டி” திரைப்படத்தின் விமர்சனம்

“ஆட்டி” திரைப்படத்தின் விமர்சனம்

“நிழல்” திரைப்படத்தின் விமர்சனம்

“நிழல்” திரைப்படத்தின் விமர்சனம்

இஸ்லாமிய குடும்பத்தின் வாழ்வியல் ” ஹபீபி” ! விமர்சனம்

இஸ்லாமிய குடும்பத்தின் வாழ்வியல் ” ஹபீபி” ! விமர்சனம்

ஸ்லம் டாக் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு

ஸ்லம் டாக் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு