சேரநாட்டு யானைதந்தம் படத்தின் இசை வெளியீட்டு விழா

தி யாழினி கிரியேஷன்ஸ் மற்றும் லத்திகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனங்கள் தயாரிப்பில், இயக்குநர் பூலோகம் ரவி இயக்கத்தில், அறிமுக நாயகன் மும்பை முத்து நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘சேரநாட்டு யானைதந்தம்’. எதார்த்தமான கிராமத்து காதல் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில் ராஜசிம்மன், பாண்டி அக்கா, விஜயன் தியாகராஜன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். ஏ.சி. குமரேசன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு எஸ்.பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். வையாபுரி குமார் தயாரித்திருக்கும் இப்படத்திற்கு, அஸ்வசக்தி முத்து பழனிசாமி, லத்திகா புரொடக்‌ஷன்ஸ் சசி, ஏ.கே.கோவிந்தராஜ் ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பணியாற்றியுள்ளனர். வரும் டிசம்பர் 4 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள ‘சேரநாட்டு யானைதந்தம்’ படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில், இயக்குநர்கள் பேரரசு, சுப்பிரமணிய சிவா, பி.ஆர்.ஓ விஜயமுரளி, விநியோகஸ்தர் ஜின்னா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.

நிகழ்ச்சியில் ’சிந்துநதி பூ’ புகழ் இயக்குநர் செந்தமிழன் பேசுகையில், பூலோகம் ரவி பாக்யராஜ் சாரை தனது மானசீக குருவாக ஏற்றுக்கொண்டவர். அவரைப் பற்றி ரொம்பவே சிலாகித்து பேசுவார். அவர் படத்தில் வரும் காட்சி, வசனங்கள் அனைத்தும் ரவிக்கு அத்துப்படி. பாக்யராஜ் சார் ஒரு திரைக்கதை மன்னன், இந்திய அளவில் பாராட்டப்பட்டவர், அவர் ஒரு லெஜண்ட். எனவே, இந்த ‘சேரநாட்டு யானை தந்தம்’ படத்தின் திரைக்கதை அவரோட மானசீக குருவின் பாணியில் பூலோகம் ரவி மிக சிறப்பாக பண்ணியிருப்பார் என்று நான் நம்புகிறேன், எதிர்பார்க்கிறேன். படம் தயாரான பிறகு என்னை பார்க்க சொல்லி அழைத்தார், இரண்டு முறை வாய்ப்பு வந்தும் என்னால் பார்க்க முடியாமல் போய்விட்டது. சீக்கிரமே படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் இருக்கிறது. ‘பாரதி கண்ணம்மா’ படம் வெளியான போது, அந்த படத்தை பார்த்த கே.எஸ். ரவிக்குமார் சார், ”சேரன் நம்ம கூட்டத்தில் இருந்தவனா, நம்ம ஆளாடா இப்படி ஒரு படத்தை எடுத்திருக்கிறான்” என்று சொன்னாராம். அதே பீலிங் தான் இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலரை பார்க்கும் போது எனக்கு ஏற்படுகிறது. எங்களுடன் பயணித்த மற்ற நண்பர்களுக்கும் இதே பீலிங் தான் ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன். அந்த அளவுக்கு படத்தை மிக சிறப்பாக பண்ணியிருக்காங்க.

இசையமைப்பாளர் குமரேசன் அருமையான பாடல்களை கொடுத்திருக்கிறார். பாடல்கள் தொடர்ந்து ஒளிபரப்பினாலும், எப்பா இது… என்ற உணர்வு ஏற்படாமல், பாடல்களுடன் பயணித்த அனுபவம் ஏற்பட்டது. பாடல்கள் அனைத்தும் சுகமான அனுபவத்தை கொடுத்தது. படத்தின் டிரைலர் நல்லா இருக்கும். படம் டிசம்பர் 4 ஆம் தேதி வெளியாகிறது. நிச்சயம் படம் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

எனோட ‘சிந்துநதி பூ’ படத்தின் போது இப்போதுள்ள இணையதளம் மற்றும் சோசியல் மீடியா வசதிகள் இருந்திருந்தால் பாடல்கள் எந்த அளவுக்கு பிரபலமடைந்திருக்கும் என்று நினைத்து பார்க்கிறேன். ஆனால், எனக்கு இப்போதும் ஒரு அடையாளமாக இருப்பது அந்த படமும், பாடல்களும் தான். அந்த பாடல்கள் வாங்கியது ஒரு பெரிய கதை. பாடல்கள் குறித்த நேரத்தில் வரவில்லை என்று நான் கோபமடைந்து வைரமுத்து சாரின் உதவியாளரிடம், உங்க பாடலாசிரியர் அறிமுக இயக்குநருக்கு உடனே பாடல் கொடுக்க மாட்டாரா, நிங்க மெட்டு ஆடியோ மற்றும் அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுங்க, என்று சொல்லி விட்டேன். அதன் பிறகு வைரமுத்து சாருக்கு விசயம் போய், அவர் என்னை அழைத்தார். அப்போது எனக்கு பேச்சே வரவில்லை, அப்போது தான் அவர் சொன்னார், நல்ல மெட்டு இருக்கு இதற்கு சாதாரணமான வார்த்தைகளை போட்டு விட முடியுமா, புதிய வார்த்தைகளை தேடிக்கொண்டிருக்கிறேன். சிறப்பாக செய்ய வேண்டும் அல்லவா, என்று சொன்னார். அதேபோல், அந்த படத்திற்கு அவர் சிறப்பான பாடல் வரிகளை கொடுத்தார். அதுபோல் பூலோகம் ரவியும் அவருடைய படத்திற்கு மிக அருமையான பாடல்களை கொண்டு வந்திருக்கிறார். மீண்டும் இந்த படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். நான் பிரார்த்தனை செய்து கொள்கிறேன், ரவி நீங்க நிறைய படங்கள் இயக்கி பிஸியான இயக்குநராக வருவீர்கள், என்று வாழ்த்துகிறேன் என்றார்.

ஆக்‌ஷன் பிரகாஷ் பேசுகையில், “இந்த படத்தில் கடைசியில் இணைந்தது நான் தான். நாயகன் மும்பை முத்து இந்த படத்திற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். அவர் கொடுத்த ஒத்துழைப்பால் படம் சிறப்பாக வந்திருக்கிறது. படம் நிச்சயம் அனைவருக்கும் பிடித்தது போல் இருக்கும் என்றார்.

நடிகர் காந்தராஜ் பேசுகையில், இந்த படத்தில் நாளு ஐந்து காட்சிகள் நடித்திருக்கிறேன். இந்த படத்திற்காக பூலோகம் ரவி ரொம்பவே கஷ்ட்டப்பட்டிருக்கிறார். அதை உடன் இருந்து நான் பார்த்தேன். முதலில் படப்பிடிப்பு திட்டம் போடுவார்கள், பிறகு அது நடக்காமல் போகும், நேரம் மட்டுமே போகும் வேலை நடக்காது. இதனால் நாங்க அனைவரும் அப்செட் ஆகிவிடுவோம். அடுத்து என்ன பண்றது என்று தெரியாது. பட்ம எடுக்கிறது சாதாரண விசயம் கிடையாது. படப்பிடிப்பின் போது அவ்வளவு பிரச்சனைகளை பேஸ் பண்ணியிருக்கோம். அனைத்து பிரச்சனைகளையும் தாண்டி, மனம் தளராமல் ரவி தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருப்பார். யாரிடமும் எந்த வருத்தத்தையும் காட்டிக்கொள்ள மாட்டார், ஜாலியாக இருப்பார். கடவுள் நம்முடன் இருக்கிறார், நாம் கண்டிப்பாக ஜெயிப்போம் என்று சொல்லிக்கொண்டே பயணிப்பவர்.

செந்தமிழன்  இயக்கியிருக்கும் ‘பிடிவாதம்’ படத்துல ஒரு நல்ல கேரக்டர் கொடுத்தார். இதுவரைக்கும் நான் தமிழ் சினிமாவுல வாங்குன அதிக சம்பளம் எனக்கு அவர்தான் கொடுத்தாரு. குருவை மிஞ்சிய சிஷ்யன் சொல்லுவாங்கல்ல அந்த மாதிரி இந்த படத்துல இதுவரைக்கும் நான் 22 வருஷமா இந்த பீல்டில் இருக்கிறேன். இதுவரை நான் வாங்காத ஒரு பெரிய தொகையை பூலோகம் ரவி எனக்கு சம்பளமாக கொடுத்தார். எனக்கு மட்டும் இல்ல என் கூட நடிச்ச நண்பர் யுவன்சுவானுக்கும் பெரிய சம்பளத்தைகொடுத்து இருக்காரு. இந்த படத்தில் நடித்ததால் சொல்லவில்லை, இந்த படத்தை பார்த்து விட்டேன், ஒரு ரசிகனாக சொல்கிறேன், படம் மிக சிறப்பாக வந்திருக்கிறது. எதிர்பார்க்காமல் இந்த படத்தை பாருங்கள், உங்கள் மனதில் என்ன படுகிறதோ அதை தெள்ளத் தெளிவாக உங்கள் நண்பர்களிடம் சொல்லி, அவர்களையும் படம் பார்க்க சொல்லுங்கள். படம் வெற்றியடைய கடவுளை பிரார்த்திக்கிறேன் என்றார்.

விநியோகஸ்தர் பிரைடே பிக்சர்ஸ் ஜின்னா பேசுகையில், சிறிய படம், பெரிய படம் என்பது கிடையாது. அருமையான கதை, நல்ல கண்டெண்ட் உள்ள படங்களை சரியான முறையில் திரையரங்கில் கொண்டு போய் சேர்க்க வேண்டும். அப்படி சேர்க்கும் போது, தற்போதைய சூழ்நிலையில் 25 பேர் காலைக்காட்சிக்கு வந்தாலே, படம் நன்றாக இருந்தால் அந்த 25 பேர் நண்பர்களுக்கு செய்தி அனுப்பி, சோசியேல் மீடியாவில் மெசஜ் போட்டு, அது 50 ஆகவும், 100 ஆகவும் மாறி படம் பெரிய வெற்றி பெறும். அப்படி தான் தற்போது பல படங்கள் வெற்றி பெற்று வருகிறது.

சினிமாவை முழுமையாக நேசித்த ஒரு இயக்குநர் பூலோகம் ரவி. அவர் என்னை சந்தித்து அரை மணி நேரம் பேசினார். சினிமாவில் அடுத்தடுத்து என்ன பண்ணனும், இன்னும் என்ன மாதிரியான விளம்பரங்கள் செய்ய வேண்டும், இந்த படத்தை எப்படி கொண்டு போகணும், என்று பேசினார். அவர் என்னை அலுவலகத்தில் சந்தித்த மறுநாளே நான் படம் பார்க்க சென்றேன். என்னுடன் இயக்குநர் சீனு ராமசாமி சாரும் வந்திருந்தார். படம் எபப்டி இருக்குமோ என்ற தயக்கத்துடன் தான் பார்த்தோம், ஆனால் ஒரு நேச்சுரலான கிராமத்து கதையை மிக சிறப்பாக சொல்லியிருக்கிறார். நாயகன் ஒரு மாவு மில் வைத்திருக்கிறார், இப்படி பல கதாபாத்திரங்களை ஒன்றிணைத்து அருமையான படத்தை கொடுத்திருக்கிறார். படம் பார்த்த மறுநாளே இந்த படத்தின் தமிழக விநியோக உரிமையை நான் வாங்கி விட்டேன். நிச்சயம் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும். இந்த படத்தில் நடித்த ஒவ்வொருத்தரும் கடுமையாக உழைத்திருக்கிறார்கள், என்பது படம் பார்க்கும் போது தெரிந்தது என்றார்.

தயாரிப்பாளர் ஜியோ ராஜகோபால் பேசுகையில், இந்த பூலோகத்தில் இருக்கும் எல்லா நாடுகளிலும் ‘சேரநாட்டு யானை தந்தம்’ படத்தை திரையிட்டு வெற்றி பெற வாழ்த்துகிறேன். நான்கு வருடங்களுக்கு முன்பு அவரை சந்தித்த போது இந்த படம் பற்றி சொல்லியிருந்தார். படத்திற்காக பல விசயங்கள் செய்துக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் பல இடங்களில், பல தடங்கல்கள் வந்தாலும், அனைத்தையும் முறியடித்து இந்த தூரம் வந்ததற்காக கடவுள்ளுக்கு நன்றி. படம் நிச்சயம் வெற்றி பெறும் என்றார்.

நாயகன் மும்பை முத்து பேசுகையில், “பூலோகம் ரவி எனக்கு நடிக்க வாய்ப்பளித்தார். அவர் சொன்னது போல் நடித்திருக்கிறேன். படத்தை பார்த்துவிட்டு எங்களுக்கு ஆதரவளிக்க வேண்டும், என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இசையமைப்பாளர் ஏ.சி.குமரேசன் பேசுகையில், இந்த படத்திற்காக நான், இயக்குநர் மற்றும் ஹீரோ அனைவரும் பல வருடங்களாக போராடிக் கொண்டிருக்கிறோம். இயக்குநரிடம் எப்போது பணம் இருக்கிறதோ அப்போது தான் பாடல்கள் உருவாகும். அப்படி தான் இந்த பாடல்களை உருவாக்கினோம். இதில், மூன்று பாடல்கல் யுகபாரதி எழுதியிருக்கிறார். அவரை வைத்து பாடல் எழுத வேண்டும் என்று சொன்ன போது இயக்குநர் ரூ.50 ஆயிரத்தில் ஐந்து பாடல்கள் எழுத சொன்னார். எனக்கு அதிர்ச்சியாகி விட்டது, நீங்கள் படங்கள் பார்ப்பதில்லையா, அவர் எவ்வளவு பெரிய பாடலாசிரியர், அவர் எப்படி 50 ஆயிரத்திற்கு எழுதுவார், என்று தோன்றியது. இருந்தாலும் பூலோகம் ரவி என்னை விடவில்லை. அவர் சொன்னது போல் நான் யுகபாரதியை சந்தித்து விசயத்தை சொன்ன போது அவரும் அதிர்ச்சியாகி விட்டார். பிறகு எப்படியோ சமாளித்து அவரை மூன்று பாடல்கள் எழுத வைத்து விட்டோம். தோழன் இரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறார். இசையமைப்பாளர் சத்யாவின் மகள் ஒரு பாடல் பாடியிருக்கிறார். இந்த பாடல் படத்தின் கிளைமாக்ஸில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் விதமாக வந்திருக்கிறது. அவர் ஹம்மிங் பாட வந்த போது, அவரது குரலில் ரெக்கார்டிங் செய்து வைத்துக்கொண்டேன், பிறகு அதை கிளைமாக்ஸில் பயன்படுத்திய போது, அந்த காட்சியின் பலம் அதிகரித்திருக்கிறது. படம் பார்க்கும் போது நீங்கள் அதை உணர்வீர்கள்.

மிகவும் கடினமான ஒரு சூழ்நிலையில் பணியாற்றி படத்தை உருவாக்கியிருந்தாலும், படம் மிக சிறப்பாக வந்திருப்பதோடு, படத்தில் பாடல்கள் அனைத்தும் பாராட்டும்படி வந்திருப்பது மகிழ்ச்சி. படத்தை போல் பாடல்களும் மிகப்பெரிய அளவில் வரவேற்பு பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

நடிகர் ராஜசிம்மன் பேசுகையில், இந்த படத்துல நான் நெகட்டிவ் ரோல் பண்ணி இருக்கேன். ஒருநாள் திடீர்னு போன் பண்ணாங்க போன் பண்ணி இந்த மாதிரி படம் இருக்கு பண்ணனும் வாங்கன்னு சொன்னாங்க. போனோம் நடிச்சோம். ரொம்ப சிரமப்பட்டு தான் இந்த படத்தை இவங்க முடிச்சாங்க. ஹீரோவுக்கு கால்ல அடிபட்டு பிளேட் வச்சி அவரு ஒரு பாடு பட்டுட்டு இருக்காரு. பயிற்சி பண்ணும் போது அவர் அந்த வலியை பொருட்படுத்தாம நொண்டி நொண்டி செய்து முடித்தார். கால் அடிபடாம அவர் மேல படுத்து புரளனும், என்று மாஸ்டர் சொல்வார். எப்படியோ படத்தை பாடுபட்டு முடித்தோம். இந்த படத்துக்கு பொதுமக்களும் சரி எல்லாருமே ஆதரவு தந்து இந்த படத்தை நல்ல இடத்திற்கு கொண்டு போய் சேர்க்கனும் என்பது தாழ்மையான வேண்டுகோள் என்றார்.

நடிகை பாண்டி அக்கா பேசுகையில், எந்த ஒரு ஆடம்பரமும், ஆர்பாட்டமும் இல்லாமல் எளிமையாக அனைத்தையும் செய்து, சத்தமில்லாமல் ஒரு பிரமிக்க வைக்க கூடிய படத்தை பூலோகம் ரவி எடுத்திருக்கிறார். சினிமாவில் பல வருடங்களாக போராடிட்டு இருக்கும் பூலோகம் ரவி சார், இந்த படத்தை மிக சிறப்பாக எடுத்தது மட்டும் அல்ல, அதை மிக சாதாரணமாக செய்து சாதித்திருக்கிறார். இந்த படத்தை இந்த அளவுக்கு சிறப்பாக கொடுத்த அவரால் மேலும் பல படங்களை சிறப்பாக கொடுக்க முடியும். அவர் நிச்சயம் பெரிய இயக்குநராக வருவார் என்றார்.

இயக்குநர் சுப்பிரமணிய சிவா பேசுகையில், சேரநாட்டு யானை தந்தம்’ சேர நாடு யானைகளுடைய மிகப்பெரிய புகலிடம் இருக்கிறதால அது வந்து கொங்கு மண்டலம் கேரளா சேர்ந்தது சேர நாடுனு உங்களுக்கு தெரியும். சேரன் செங்குட்டுவன் நம்மளுக்கு ரொம்ப புகழ் பெற்ற ஒரு அரசராக இருந்தாங்க. ஆனால், இந்த படம் ஒரு அழகான காதல் கதையை பேசுகிறது. மனிதன் காதலால் ஆனவன் ரோமியோ ஜூலியட்டாக இருக்கட்டும், நம்ம மணிமேகலை கதையா இருக்கட்டும், பாசம் அன்பு எல்லாமே ஒரு காதல் சம்மந்தப்பட்டது தான், ஒரு தாயின் மீது வைத்திருக்கிறது அப்பா, அம்மா மீது வச்சிருக்கிறது நண்பர்கள் மீது வைத்திருப்பது என அனைத்தும் அன்பு தான், காதல் தான்.

இயக்குநர் பூலோகம் ரவி மிகச்சிறந்த தலைமை கட்டமைப்பை அமைச்சிருக்கார் என்பது இந்த நிகழ்ச்சியை பார்க்கும் போது தெரிகிறது. அப்படி ஒரு தலைமை பண்புள்ளவன் மிகச்சிறந்த தாய் தந்தையர் மாதிரி இருக்கணும். ஒரு தலைமை பண்புள்ளவன் யாரையும் அலட்சியப்படுத்தக் கூடாது. சினிமாவுல ஒரு டைரக்டரா இருப்பான், எல்லாத்தையும் திட்டுவான். குறிப்பாக தனக்கு கீழ் இருப்பவர்களை அலட்சியமாக பேசுவார்கள். இங்கு அவர் ஒரு சாதாரணமான ஆபீஸ் பாயாக இருக்கலாம், ஆனால் அவர் குடும்பத்தில் அவர் தான் தலைவர், அங்கு என்ன நடக்க வேண்டும் என்பதை அவர் முடிவு செய்வார். எனவே யாரையும் அலட்சியம் செய்ய கூடாது.

பூலோகம் ரவி இயக்கிய இந்த சேரநாட்டு யானை தந்தம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும். சிறிய படங்கள், பெரிய படங்கள் என்று எதுவும் இல்லை. ஐந்து லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட 16 வயதினிலே படம் தான் இந்திய சினிமாவை புரட்டிப்போட்டது. பாலா இயக்கத்தில் வெளியான ‘சேது’ படத்திற்கு சுமார் 100 வியாபார காட்சிகள் போட்டிருப்பார்கள், அப்படி இருந்தும் அந்த படத்தை யாரும் வாங்கவில்லை. ஆனால், அந்த படம் தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டராக மாறியது. ஒரு விசயத்திற்கு பழக்கப்பட்டவர்கள், புதியதை ஏற்க தயங்குவார்கள், அது பற்றி புரியாது. சிறிய படங்கள் தான் தமிழ் சினிமாவில் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. அதுபோல் இந்த படமும் மிகப்பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அனைவருக்கும் வாழ்த்துகள் என்றார்.

இயக்குநர் பூலோகம் ரவி பேசுகையில், இந்த கதை பல வருடங்களுக்கு முன்பே பண்ண வேண்டியது. இந்த கதையில் சாந்தனு தான் நடிக்க இருந்தது. அவரிடம் கதை சொல்லி, அவருக்கும் கதை பிடித்து விட்டது. விஜயா வாஹினி ஸ்டுடியோஸ் தயாரிப்பதாக இருந்தது. பிறகு சில காரணங்களால் நடக்காமல் போய் விட்டது. அதுக்குப் பிறகு தான் எனக்கு முத்து கிடைத்தார். அவர் எனக்கு ரொம்ப பழக்கமானவர். அவர் மும்பைக்காரர். அவரது பூர்வீகம் பழனி. சினிமா ஆசையில் இங்க வந்திருக்காரு. சென்னைக்கு சின்ன வயசுல வந்தவர், நடிகை மனோரமா உள்ளிட்ட பல வீடுகளில் வேலை செய்து இருக்கார். பிறகு கஷ்ட்டமாக இருக்குணு இதை விட்டுட்டு மெரினா கடற்கரைக்கு சென்றவர், அங்கு குதிரை ஓட்டுபவர்களிடம் பழகி, அங்கேயே கொஞ்ச நாட்கள் இருந்திருக்கார். 16 வயது இருக்கும் போது, ஒரு நாள் செண்ட்ரல் ரயில் நிலையத்திற்கு சென்றவர், அங்கு ஒரு ரயிலில் ஏறி தூங்கியிருக்கார். அந்த ரயில் மும்பை சென்றிருக்கிறது. பிறகு அங்கு இருப்பவர்கள் இவரை வளர்த்திருக்கிறார்கள், பிறகு இவர் ஒரு பைசா அங்கு பெரிய டானாக மாறியிருக்கிறார். கபாலி போல ஆயிட்டார். அவருக்கு எம்.ஜி.ஆர் ரொம்ப பிடிக்கும். சினிமா ஆசை அவர் மனதில் இருக்கு. அதனால் பணம் சம்பாதித்து விட்டு மீண்டும் இங்கு சினிமாவில் நடிக்க வந்திருக்கிறார்.

இவர வச்சி படத்தை ஆரம்பித்துடலாம் என்று முடிவு செய்து படத்தை தொடங்கினோம். ஆனால், முத்துக்கு நிறைய இயக்குநர்கள் தெரியும், இங்கு அவர் நிறைய நாட்கள் இருந்திருக்கிறார், நிறைய பேரை சந்திபார். அதனால், சிறிய படங்கள் ரூ.30 லட்சம் இருந்தால் எடுத்து விடலாம் என்று சொல்லியிருக்கிறார்கள். அதனால், அவர் அதையே பிடித்துக்கொண்டார். 30 லட்சம் போதும் படம் எடுக்கலாம் என்ற மனநிலைக்கு வந்து விட்டார். சரி அவர் கொடுக்கும் 30 லட்சத்தை வைத்து படத்தை தொடங்கி விடலாம், பிறகு வேறு ஒரு ஏற்பாட்டின் மூலம் படத்தை நகர்த்தலாம் என்று முடிவு செய்து தான் இந்த படத்தை தொடங்கினேன். பாடல்களை பதிவு செய்தேன். பிறகு அவர் மும்பை சென்றுவிட்டார். மீண்டும் அவர் சென்னை வந்ததும், பாடல் காட்சிகளை படமாக்குவதற்கு மட்டுமே பணம் தருவதாக சொல்லி விட்டார். சரி என்று சொல்லி அவர் கொடுத்த பணத்தில் பாடல் காட்சிகளை படமாக்கினோம். பிறகு பிரேக் ஆகிவிட்டது. பிறகு ஜார்ஜ் மூலமாக அடுத்தக்கட்ட படப்பிடிப்பை நடத்தினோம். அது முடிந்ததும் மீண்டும் பிரேக். பிறகு எனது நண்பர்களின் உதவியால் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை நடத்தினேன். அதன் பிறகும் தொடர்ந்து படப்பிடிப்பு நடத்த முடியாமல் போய் விட்டது. அதன் பிறகு தான் எனக்கு வையாபுரி கணேஷ் கிடைத்தார். அவர் என் மனைவியின் அண்ணன் தான். அவரிடம் ஏற்கனவே கதை சொல்லியிருக்கிறேன். அதை கேட்ட பிறகு தான் அவருக்கு என் மீது நம்பிக்கை வந்தது. அவர் இந்த படத்தை கையில் எடுத்தது எனக்கு மிகப்பெரிய உதவியாக இருந்தது.

படப்பிடிப்பு எப்படி என்பது தெரியாது. ஆனால் போஸ்ட் புரொடக்‌ஷன் பொறுத்தவரை சின்ன படங்கள், பெரிய படங்கள் அனைத்திற்கும் ஒரே அளவு தான் செலவு ஆகும். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிக்காக சுமார் 40 லட்சம் ரூபாய் செலவு செய்திருக்கிறேன். படம் சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக தான் அவ்வளவு பெரிய தொகையை செலவு செய்தேன். இன்று படத்தை பார்க்கும் போது திருப்தியாக இருக்கிறது. பாடல், ஒளிப்பதிவு என அனைத்தும் பாராட்டும்படி இருப்பது மகிழ்ச்சி. படமும் நிச்சயம் ரசிகர்களை ஏமாற்றாது. எனக்கு படம் பிடிச்சிருக்கு, நிச்சயம் மக்களுக்கும் பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

இயக்குநர் பேரரசு பேசுகையில், இப்போது வெளியாகும் சிறிய படங்களுக்கு பிரச்சனையே வியாபாரம் தான். ஆனால், இந்த படத்தின் வியாபாரத்திற்கு ஜின்னா கைகொடுத்திருப்பது மகிழ்ச்சி. இங்கு நிறைய விசயங்களை இசையமைப்பாளர் சொன்னார். குறிப்பாக யுகபாரதியின் சம்பள ரகசியத்தை சொல்லி விட்டார். அவர் வீட்டுக்கு வருமான வரித்துறை சோதனை செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. இசையமைப்பாளர் ஏ.சி.குமரசேனிடம் 40 ஆயிரம் கொடுத்து அனைத்து பாடல்களையும் செய்து கொடுக்க சொல்லியிருக்கிறார். இதை கேட்பவர்கள், இனி அவரை ஓசி குமரேசனாக பயன்படுத்த வாய்ப்பு இருக்கிறது.

இந்த படத்திற்காக நிறைய பேர் கஷ்ட்டப்பட்டிருக்கிறார்கள். அது பாடல்கள் மற்றும் டிரைலரை பார்க்கும் போது தெரிகிறது. பாடல் காட்சிகளும், ஒளிப்பதுவும் மிக சிறப்பாக வந்திருக்கிறது. இந்த படத்தை பார்க்கும் போது எனக்கு ‘பருத்தீவிரன்’ நினைவு வருகிறது. அதன் தாக்கம் மற்றும் சாயல் படத்தில் தெரிகிறது. ஏதோ ஒரு விசயத்தை படத்தில் சொல்லியிருக்கிறார்கள் என்பதை டிரைலர் உணர்த்துகிறது, படம் பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. இயக்குநர் பூலோகம் ரவி குரு மீது வைத்திருக்கும் மரியாதை நெகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த படத்தின் பூஜை, பிரஸ் மீட் என அனைத்திற்கும் நான் சென்றிருக்கிறேன். அனைத்திலும் அவரது குரு செந்தமிழன் சாருக்கு தான் முதல் மரியாதை. இப்படி ஒரு குரு, சிஷ்யன் பாசத்தை இப்போது பார்க்க முடியவில்லை. எனவே, இதற்காகவே இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறும்.

இந்த படம் ஒரு நல்ல காதல் கதையாக இருக்கும் என்ற நம்பிக்கை பிறக்கிறது. பாடல்களும், டிரைலரும் சிறப்பாக இருக்கிறது. நாயகன் முத்து எதார்த்தமான மனிதராக இருக்கிறார். இந்த படம் பூலோகம் ரவிக்கு எதிர்காலத்தை கொடுப்பதோடு, படத்தில் பங்கேற்ற அனைவருக்கும் கைகொடுக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. கதாநாயகி நன்றாக இருக்காங்க, அவர்களை குளோஷப்பில் பார்க்க முடிகிறது. அதற்காகவே பாடல் காட்சிகளை வெறும் ஷாட்களாகவே வெச்சு பூலோகம் ரவி முடித்திருக்கிறார். படம் தரமாக இருக்கும் என்பதும் தெரிகிறது. அனைத்தையும் மிக அழகாகவும், தரமாகவும் கையாண்டிருக்கும் இயக்குநர் பூலோகம் ரவி, நிச்சயம் இந்த படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றி பெறுவார். அவருக்கு என் வாழ்த்துகள் என்றார்.

dhamaraimurasu

dhamaraimurasu

dhamaraimurasu admin

Related Posts

கோவா சர்வதேச திரைப்பட விழா ! சிறப்பு விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட “SCROLL” திரைப்படம் !

K16 ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘Scroll’ திரைப்படம், கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (57th International Film Festival of India – IFFI 2026), ‘Indian Panaroma’ பிரிவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு   ICFT-UNESCO…

Read more

“சத்தியவான் சாவித்திரி” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

Drumsticks Productions மற்றும் Zee Studios நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘சத்தியவான் சாவித்திரி’. வெடிக்காரன்பட்டி S. சக்திவேல் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S. விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்திலும், மிஷ்கின் முக்கியக் கதாபாத்திரத்திலும்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்கத்தவறிய செய்திகள்

சேரநாட்டு யானைதந்தம் படத்தின் இசை வெளியீட்டு விழா

சேரநாட்டு யானைதந்தம் படத்தின் இசை வெளியீட்டு விழா

காவிரி விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் ! – ஸ்டாலின் அறிவிப்பு

காவிரி விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் ! – ஸ்டாலின் அறிவிப்பு

அச்சுறுத்திய வெடிச்சத்தம் ! அசுர வேகத்தில் சொகுசு காரை இயக்கிய பட்டதாரி இளைஞர்

அச்சுறுத்திய வெடிச்சத்தம் ! அசுர வேகத்தில் சொகுசு காரை இயக்கிய பட்டதாரி இளைஞர்

கோவா சர்வதேச திரைப்பட விழா ! சிறப்பு விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட “SCROLL” திரைப்படம் !

கோவா சர்வதேச திரைப்பட விழா ! சிறப்பு விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட “SCROLL” திரைப்படம் !

அதிகரிக்கும் போதைப்பொருள் நடமாட்டம் ! 700 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் ! 

அதிகரிக்கும் போதைப்பொருள் நடமாட்டம் ! 700 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் ! 

“சத்தியவான் சாவித்திரி” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“சத்தியவான் சாவித்திரி” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“சிட்டுக்குறிஞ்சி” படத்தின் இசை வெளியீட்டு விழா

“சிட்டுக்குறிஞ்சி” படத்தின் இசை வெளியீட்டு விழா

குற்றச் செயல்களில் ஈடுபடும் தவெக நிர்வாகிகளை கைது செய்யாதது ஏன் ?.!

குற்றச் செயல்களில் ஈடுபடும் தவெக நிர்வாகிகளை கைது செய்யாதது ஏன் ?.!

“பிளாக் கோல்டு” விமர்சனம்

“பிளாக் கோல்டு” விமர்சனம்

சர்வதேச விழாக்களில் 7 விருதுகள் வென்ற “வன மடி” திரைப்படம் !

சர்வதேச விழாக்களில் 7 விருதுகள் வென்ற “வன மடி” திரைப்படம் !

“அப்பா குட்டி” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“அப்பா குட்டி” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

பெற்றோர்களே உஷார் ! கராத்தே சங்கங்களுக்கு தடை ! இந்திய ஒலிம்பிக் சங்கம் நடவடிக்கை

பெற்றோர்களே உஷார் ! கராத்தே சங்கங்களுக்கு தடை ! இந்திய ஒலிம்பிக் சங்கம் நடவடிக்கை

கடந்த ஆட்சியைவிட குறைந்த விலைக்கு சைக்கிள் டெண்டர் !

கடந்த ஆட்சியைவிட குறைந்த விலைக்கு சைக்கிள் டெண்டர் !

எம்எல்ஏக்கள் மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன் ? – திமுக

எம்எல்ஏக்கள் மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன் ? – திமுக

அஜய் கார்த்தி, தீபா பாலு நடிக்கும் “ஸ்டேஷன்” திரைப்படம்

அஜய் கார்த்தி, தீபா பாலு நடிக்கும் “ஸ்டேஷன்” திரைப்படம்

“மௌன மொழிகள்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“மௌன மொழிகள்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“மூக்குத்தி அம்மன்_2” விமர்சனம்

“மூக்குத்தி அம்மன்_2” விமர்சனம்

சூர்யாவின் “சீன்” படத்தின் விமர்சனம்

சூர்யாவின் “சீன்” படத்தின் விமர்சனம்

“பௌமா” மற்றும் “டூக்ஸ்” படங்களை ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் தென்னிந்தியாவில் வெளியிடுகிறது

“பௌமா” மற்றும் “டூக்ஸ்” படங்களை ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் தென்னிந்தியாவில் வெளியிடுகிறது

ஆதரவற்றோருடன் தீபாவளி கொண்டாடிய காவல்துறையினர் !

ஆதரவற்றோருடன் தீபாவளி கொண்டாடிய காவல்துறையினர் !

பிறந்தநாளில் “சண்டியர்” படப்பிடிப்பை தொடங்கிய கமல்ஹாசன்

பிறந்தநாளில் “சண்டியர்” படப்பிடிப்பை தொடங்கிய கமல்ஹாசன்

மாநில உரிமையை பாதுகாக்கத் தவறிய அரசு ! – எஸ்டிபிஐ கண்டனம்

மாநில உரிமையை பாதுகாக்கத் தவறிய அரசு ! – எஸ்டிபிஐ கண்டனம்

பெரியார் அறிவுலக புத்தக முறைகேடு புகார் ! நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல் !

பெரியார் அறிவுலக புத்தக முறைகேடு புகார் ! நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல் !

அதிமுக பிரமுகர் மன்னன் காலையில் கைது ! மாலையில் விடுவிப்பு !

அதிமுக பிரமுகர் மன்னன் காலையில் கைது ! மாலையில் விடுவிப்பு !

சூப்பர் ஸ்டார் நடிக்கும் “தர்மன்” திரைப்படத்தில் இணைந்த நடிகை ஶ்ரீ லீலா

சூப்பர் ஸ்டார் நடிக்கும் “தர்மன்” திரைப்படத்தில் இணைந்த நடிகை ஶ்ரீ லீலா

உ.வே.சா நூலகத்தில் ஆய்வு செய்த நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் !

உ.வே.சா நூலகத்தில் ஆய்வு செய்த நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் !

பல்லடத்தில் விதிமீறி கட்டப்படும் பிரபல நகைக்கடை கட்டிடம் ! கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம் !

பல்லடத்தில் விதிமீறி கட்டப்படும் பிரபல நகைக்கடை கட்டிடம் ! கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம் !

சோதனைகளை கடந்து.. விடாமுயற்சியால் நாட்டிற்காக இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற சிம்ரன் !

சோதனைகளை கடந்து.. விடாமுயற்சியால் நாட்டிற்காக இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற சிம்ரன் !

35 நாட்களுக்கு முன் காணாமல் போன பெண் குழந்தையை மீட்ட போலீசார் !

35 நாட்களுக்கு முன் காணாமல் போன பெண் குழந்தையை மீட்ட போலீசார் !

அகவிலைப்படி உயர்வால், உற்சாகத்தில் மத்திய அரசு ஊழியர்கள் !

அகவிலைப்படி உயர்வால், உற்சாகத்தில் மத்திய அரசு ஊழியர்கள் !

“லவ் 3 ஓ” படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு !

“லவ் 3 ஓ” படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு !

யோகி பாபுவின் “அர்ஜூனன் பேர் பத்து” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

யோகி பாபுவின் “அர்ஜூனன் பேர் பத்து” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

“ஹைக்கூ” படத்தின் விமர்சனம்

“ஹைக்கூ” படத்தின் விமர்சனம்

கௌதம்மேனனின் 25 ஆண்டுகள் திரையுலக பயணம் ! கோலாலம்பூரில் இசைக் கொண்டாட்டம்

கௌதம்மேனனின் 25 ஆண்டுகள் திரையுலக பயணம் ! கோலாலம்பூரில் இசைக் கொண்டாட்டம்

யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள “சிங்காரம்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள “சிங்காரம்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

பெண்களின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் “ஹைக்கூ” திரைப்படம் ! – நடிகை ஃபெமினா ஜார்ஜ்

பெண்களின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் “ஹைக்கூ” திரைப்படம் ! – நடிகை ஃபெமினா ஜார்ஜ்

“ஹைக்கூ” ஒரு ஃபீல் குட் எண்டர்டெயின்மெண்ட் திரைப்படம் !

“ஹைக்கூ” ஒரு ஃபீல் குட் எண்டர்டெயின்மெண்ட் திரைப்படம் !

திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ! “ஹைக்கூ” பட தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி !

திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ! “ஹைக்கூ” பட தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி !

“ஹைக்கூ” படத்தில் மௌனமாக ஒரு கதாப்பாத்திரமாகவே பயணிக்கும் இசை !

“ஹைக்கூ” படத்தில் மௌனமாக ஒரு கதாப்பாத்திரமாகவே பயணிக்கும் இசை !

ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் “ஹைக்கூ”. – நடிகர் ஏகன்

ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் “ஹைக்கூ”. – நடிகர் ஏகன்

அமைச்சர் பதவிக்காக அடிப்படை கொள்கையிலிருந்து விலகி நிற்கும் விசிக ! – பனையூர் பாபு

அமைச்சர் பதவிக்காக அடிப்படை கொள்கையிலிருந்து விலகி நிற்கும் விசிக ! – பனையூர் பாபு

குற்றச்சாட்டு எழுந்ததால் பணியிடை மாற்றம் ! உடனடியாக பதவி உயர்வு கொடுத்ததன் பின்னனி என்ன ?.!

குற்றச்சாட்டு எழுந்ததால் பணியிடை மாற்றம் ! உடனடியாக பதவி உயர்வு கொடுத்ததன் பின்னனி என்ன ?.!

நகைச்சுவை கலந்த வித்தியாசமான காதல் கதை !

நகைச்சுவை கலந்த வித்தியாசமான காதல் கதை !

“மெர்சல்” படத்தின் பணப்பரிவர்த்தனை விவகாரம் ! நடிகை ஶ்ரீ பிரியா நிறுவனத்திற்கு வெற்றி !

“மெர்சல்” படத்தின் பணப்பரிவர்த்தனை விவகாரம் ! நடிகை ஶ்ரீ பிரியா நிறுவனத்திற்கு வெற்றி !

கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளில் “அக்கா” தொடரின் டீசர் வெளியானது !

கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளில் “அக்கா” தொடரின் டீசர் வெளியானது !

“சட்டமும் நீதியும் 2” தொடரின் டிரெய்லரை வெளியிடப்பட்டது தமிழ் ZEE 5 !

“சட்டமும் நீதியும் 2” தொடரின் டிரெய்லரை வெளியிடப்பட்டது தமிழ் ZEE 5 !

சந்தீப் கிஷன் நடிக்கும் “கரிகாலா” திரைப்படம் பூஜையுடன் ஆரம்பம் !

சந்தீப் கிஷன் நடிக்கும் “கரிகாலா” திரைப்படம் பூஜையுடன் ஆரம்பம் !

துல்கர் சல்மானின் “ஏ ஓ டி” ( AOT ) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

துல்கர் சல்மானின் “ஏ ஓ டி” ( AOT ) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“ஸ்லம் டாக்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு, வெளியீட்டு தேதி விரைவில்..

“ஸ்லம் டாக்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு, வெளியீட்டு தேதி விரைவில்..

தேவா மண்ணை விட்டு மறைந்தாலும், அவரது தேனிசை தென்றல் காற்று வீசுவது நிற்காது ! – முக ஸ்டாலின்

தேவா மண்ணை விட்டு மறைந்தாலும், அவரது தேனிசை தென்றல் காற்று வீசுவது நிற்காது ! – முக ஸ்டாலின்

“ராமாயணா” படத்தின் புதிய சர்வதேச டிரெய்லர் வெளியானது !

“ராமாயணா” படத்தின் புதிய சர்வதேச டிரெய்லர் வெளியானது !

“சிக்னல் அட் 11.30” படத்தின் “ஜோ ஜோ மாமா” பாடல் வெளியீடு !

“சிக்னல் அட் 11.30” படத்தின் “ஜோ ஜோ மாமா” பாடல் வெளியீடு !

“இது நம்ம குடும்பம்” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“இது நம்ம குடும்பம்” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“ஹபீபி” படக்குழுவினருக்கு பாராட்டுவிழா !

“ஹபீபி” படக்குழுவினருக்கு பாராட்டுவிழா !

ஊர்வசி நடிப்பில் உருவாகியுள்ள “ஆஷா” திரைப்படம் அக்டோபர் 16 முதல் மலையாளம் ஜீ_5 ல் வெளியாகிறது

ஊர்வசி நடிப்பில் உருவாகியுள்ள “ஆஷா” திரைப்படம் அக்டோபர் 16 முதல் மலையாளம் ஜீ_5 ல் வெளியாகிறது

சூரியின் புதிய திரைப்படத்த கிளாப் அடித்து துவக்கி வைத்த சிவகார்த்திகேயன் !

சூரியின் புதிய திரைப்படத்த கிளாப் அடித்து துவக்கி வைத்த சிவகார்த்திகேயன் !

“டோரதி” திரைப்படம் நான் எதிர்பார்த்த அங்கீகாரம் பெற்றுத் தந்துள்ளது. ஜீவா சுப்பிரமணியம் !

“டோரதி” திரைப்படம் நான் எதிர்பார்த்த அங்கீகாரம் பெற்றுத் தந்துள்ளது. ஜீவா சுப்பிரமணியம் !

டுபாக்கூர் முதலமைச்சரும், கூடுதல் விலைக்கு மின்சார கொள்முதலும் ! – உதயநிதி விமர்சனம்

டுபாக்கூர் முதலமைச்சரும், கூடுதல் விலைக்கு மின்சார கொள்முதலும் ! – உதயநிதி விமர்சனம்

அ,தி,மு,கவை த,வெ,க வின் சார்பு இயக்கமாக மாற்ற நினைக்கும் வேலுமணி ! கட்சியை காப்பாற்ற கூட்டுத் தலைமை அவசியம் !

அ,தி,மு,கவை த,வெ,க வின் சார்பு இயக்கமாக மாற்ற நினைக்கும் வேலுமணி ! கட்சியை காப்பாற்ற கூட்டுத் தலைமை அவசியம் !

“ஜெய்” நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் !

“ஜெய்” நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் !

“E 1” படத்தின் விமர்சனம்

“E 1” படத்தின் விமர்சனம்

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழாவில் 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழாவில் 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழா ! ஓவியர் ஜீவானந்தனுக்கு 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழா ! ஓவியர் ஜீவானந்தனுக்கு 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு 13.78 லட்சம் நிதியுதவி !

கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் “ஊர் கூடும் இரவு” ஆவணப்படம் !

கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் “ஊர் கூடும் இரவு” ஆவணப்படம் !

“ஆல்பாஸ்” விமர்சனம்

“ஆல்பாஸ்” விமர்சனம்

“தாய்நிலம்” விமர்சனம்

“தாய்நிலம்” விமர்சனம்

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

அதிமுகவின் பலவீனமா ? த.வெ.க வினரின் மோசடியா ?

அதிமுகவின் பலவீனமா ? த.வெ.க வினரின் மோசடியா ?

“அமெரிக்க ஆவி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“அமெரிக்க ஆவி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

அட்லான்டா இந்தியத் திரைப்பட விழாவில் “என்ன விலை” படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது !

அட்லான்டா இந்தியத் திரைப்பட விழாவில் “என்ன விலை” படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது !

நலிவுற்ற திருநங்கைகளுங்கு நிதியுதவி வழங்கிய “டோரதி” படக்குழு !

நலிவுற்ற திருநங்கைகளுங்கு நிதியுதவி வழங்கிய “டோரதி” படக்குழு !

“அன்பில் அவன் படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“அன்பில் அவன் படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“பத்தா” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“பத்தா” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

நாள்தோறும் நற்பணி ! ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன்

நாள்தோறும் நற்பணி ! ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன்

“ஒட்டாரம்” திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு !

“ஒட்டாரம்” திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு !

“சிக்மா” படத்தில் அறிமுகமானது எனக்கு பெருமை ! நடிகை ஃபரியா அப்துல்லா

“சிக்மா” படத்தில் அறிமுகமானது எனக்கு பெருமை ! நடிகை ஃபரியா அப்துல்லா

“அன்பில் அவன்” படத்தின் விமர்சனம்

“அன்பில் அவன்” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த நடிகர் !

“சிக்மா” படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த நடிகர் !

“பத்தா” படத்தின் விமர்சனம்

“பத்தா” படத்தின் விமர்சனம்

இயக்கமா ? நடிப்பா ? “சிக்மா” இயக்குநர் பேட்டி !

இயக்கமா ? நடிப்பா ? “சிக்மா” இயக்குநர் பேட்டி !

கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான் “சிக்மா” – இயக்குநர் சஞ்சய்

கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான் “சிக்மா” – இயக்குநர் சஞ்சய்

“தி டார்க் ஹெவன் படத்தின் வெற்றிக்கு, சொந்த ஊரில் விழா எடுத்த இயக்குநர் !

“தி டார்க் ஹெவன் படத்தின் வெற்றிக்கு, சொந்த ஊரில் விழா எடுத்த இயக்குநர் !

தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய பிரபல நடிகரின் மனைவி !

தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய பிரபல நடிகரின் மனைவி !

“கோல்டன் பாக்கியம்” டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு !

“கோல்டன் பாக்கியம்” டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு !

“கிட்டி” படத்தின் விமர்சனம்

“கிட்டி” படத்தின் விமர்சனம்

“த்ரிஷ்யம்_3” படத்தின் இந்தி பதிப்பை வெளியிட தடை கோரி வழக்கு !

“த்ரிஷ்யம்_3” படத்தின் இந்தி பதிப்பை வெளியிட தடை கோரி வழக்கு !

நான்கு மாநில டிஜிட்டல் & தொலைக்காட்சி துறைகளை ஒருங்கிணைக்கும் முயற்சி !

நான்கு மாநில டிஜிட்டல் & தொலைக்காட்சி துறைகளை ஒருங்கிணைக்கும் முயற்சி !

“துரோகம் பழகு படத்தின் டீசர் வெளியீட்டு விழா !

“துரோகம் பழகு படத்தின் டீசர் வெளியீட்டு விழா !

25 மாவட்டங்கள், 2 ஆயிரம் ரசிகர்கள் ! நடிகர் சூர்யா தலைமையில் பிரமாண்டமான விழா !

25 மாவட்டங்கள், 2 ஆயிரம் ரசிகர்கள் ! நடிகர் சூர்யா தலைமையில் பிரமாண்டமான விழா !

மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள “மக்கள் காவலன்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள “மக்கள் காவலன்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“பூஜா மேரி ஜான்” திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ஜீ_5 ஹிந்தியில் வெளியாகிறது

“பூஜா மேரி ஜான்” திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ஜீ_5 ஹிந்தியில் வெளியாகிறது

சாதிய வன்மத்தை விதைக்கும் “தி கிராண்ட் மாஸ்டர்” ! படத்தின் விமர்சனம்

சாதிய வன்மத்தை விதைக்கும் “தி கிராண்ட் மாஸ்டர்” ! படத்தின் விமர்சனம்

“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“#LOVE” வெப் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“#LOVE” வெப் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“தாய்நிலம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

“தாய்நிலம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

தனுஷின் ( D_56 ) புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

தனுஷின் ( D_56 ) புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

“ஏழு கடல் ஏழு மலை” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“ஏழு கடல் ஏழு மலை” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“டோரதி” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“டோரதி” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !