கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் “ஊர் கூடும் இரவு” ஆவணப்படம் !

சென்னையைச் சேர்ந்த ரம்யா ஸ்ரீராம் புகைப்படக் கலைஞராகவும், பலகலைகள் பற்றிய தேடுதல் மனம் கொண்ட பயணியாகவும் இருக்கிறார்.
மக்களிடையே பின்பற்றப்படும் சடங்கு வடிவங்களையும்,  விழாக்களையும் தனது கேமராவிற்குள் சிறைப் பிடிப்பது அவருக்கு விருப்பமான ஒன்று. அந்த வகையில்
நமது பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவற்றை ஆவணப்படுத்துவதில் ஆர்வத்தோடு இயங்கி வருகிறார்.

கேரளாவில் கண்ணனூரில் உள்ள ஒரு கோயிலில் இவரால் எடுக்கப்பட்ட ‘தெய்வம்’ புகைப்படம் நேஷனல் ஜியோ கிராபிக் காலண்டரில் இடம் பெற்ற பெருமை கொண்டது. அப்படம் 2025 ஆம் ஆண்டு உலகப் புகைப்பட தினமான ஆகஸ்ட் 19 ஆம் தேதி அது சர்வதேசக் கவனம் பெற்றது. அதேபோல் இவர் தமிழ்நாட்டில்  மயானக் கொள்ளை, குலசை தசரா, வட இந்தியாவில்  வாரணாசியில் மாசான் ஹோலி போன்ற சடங்கு நிகழ்ச்சிகளையும்
புஷ்கர் ஒட்டகத் திருவிழா, மகா கும்பமேளா போன்றவற்றையும்
புகைப்படமாக ஆவணப்படுத்தி இருக்கிறார். 

பண்டிகைகள், நம்பிக்கைகள் மற்றும் மனித உறவுகளை ஆவணப்படுத்தியுள்ள இவரது படங்கள், ஒரு கதை சொல்லியைப் போலப் பார்ப்பவர்களுடன் பேசுபவை.
அப்படிப்பட்ட ரம்யா ஸ்ரீராம் தெருக்கூத்துக் கலைஞர்கள், அவர்களின் வாழ்வு சார்ந்து ‘ஊர் கூடும் இரவு’ என்ற பெயரில் ஒரு தெருக்கூத்து ஆவணப் படத்தை இயக்கியிருக்கிறார் .

கூத்து பற்றிச் சொல்ல வேண்டுமென்றால்,
கூத்து நிகழும் போது ‘ஊர் உறங்கும் நேரம், ஒரு கலை விழித்துக் கொள்கிறது’ எனலாம். அதுமட்டுமல்ல, ‘கூத்து தொடங்கும் போது கதை மட்டும் கூடுவதில்லை ஊரும் கூடுகிறது’ என்றும் கூறலாம். அப்படிப்பட்ட கூத்தின் பெருமையைக் கூறும்
‘ஊர் கூடும் இரவு’  ஆவணப்படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட  தென்னிந்திய ஒளிப்பதிவாளர் சங்கத்தின் தலைவர் கார்த்திக் ராஜா பேசும்போது, எங்கள் சிறு வயது காலத்தில் நாங்கள் தெருக்கூத்தைப் பார்த்து மகிழ்ந்திருக்கிறோம். இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு அந்த வாய்ப்பு இருக்குமா என்று தெரியாது. விவசாயக் கிராமங்களில் உழைத்து களைத்த போது ஊரெல்லாம் ஒன்று கூடி திருவிழாக்கள் நடத்தும் போது அங்கே ஆடல், பாடல், இது மாதிரி கூத்துகள் எல்லாம் நடக்கும். அப்படி நடக்கும்போது அந்தக் கூத்துக்குள் ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் என்று ராமாயணம், மகாபாரதம் போன்றவை பற்றிய கருத்துக்கள் எல்லாம் அதில் இருக்கும்.

இன்றைய டிஜிட்டல் உலகத்தில் எல்லாமே மாறிக் கொண்டிருக்கின்றன. இப்போது அதையெல்லாம் நினைவூட்டும் வகையில் ரம்யா அதை ஆவணப்படுத்தி இருக்கிறார். அவருக்கு எனது வாழ்த்துக்கள்.
இவையெல்லாம் பலருக்கு மறந்து போயிருக்கும், பலருக்குக் கிடைக்காமல் இருக்கும். அதை நினைவூட்டும் வகையில் ரம்யா அதை ஆவணப்படுத்தி இருக்கிறார். இன்று சமூக ஊடக வடிவங்கள் மாறி ரீல்ஸ் வரை  வந்து, நிறைவே மாறி உள்ளது. அதற்குள் இதையும் கொண்டு வருவதற்கு முயற்சிகள் எடுக்க வேண்டும். எல்லா மக்களையும் அது சென்றடைய வழிவகை செய்ய வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் சி.ஜே. ராஜ்குமார் பேசும்போது,
கார்த்திக் ராஜா தேசிய விருதுக் குழுவில் இருப்பவர். அவரது பாராட்டும்  அங்கீகார மும் ரம்யாவுக்குக் கிடைத்திருப்பது இங்கே முக்கியமானது என்று நினைக்கிறேன். நமது தேசிய விருதுக் குழுவில் இருக்கும் அவருக்குப் பிடித்தால் சர்வதேச அளவில் இது பிடிக்கும் என்று நான் நம்புகிறேன். ரம்யா ஸ்ரீராம் சர்வதேச அளவில் புகைப்படக் கலைஞராக விருதுகள் பெற்றவர். சினிமா ஃபேக்டரி அகாடமிக்கு அவர் பலமுறை வந்து விருந்தினராக அமர்வுகளில் கலந்து கொண்டுள்ளார். அவரது அமர்வுகள் எப்போதும் மாணவர்களால் பாராட்டப்பட்டுள்ளன.
மாணவர்கள் அவரிடம் நிறைய கற்றுக் கொண்டதாகக் கூறுவார்கள்.

அவர் ஒரு புகைப்படக் கலைஞராக விருதுகள் பெற்றவர். அசையும் திரைப் படத்திலும் அவரது பார்வை, கோணம் நன்றாக இருக்கிறது. பொதுவாக இது மாதிரி விஷயங்களை ஆவணப்படுத்தும் போது அதன் துயரத்தைத்தான் பெரிதாகச் சொல்வார்கள். அப்படித்தான் நிறைய வந்துள்ளன. இங்கு இவர்களுடைய பார்வை வேறு மாதிரியாக உள்ளது. இந்தக் கலை வடிவத்தை இவர்கள் கொண்டாடி இருக்கிறார்கள். அந்தக் கலைஞரைக் கொண்டாடி இருக்கிறார்கள். அவர்கள் தன்னிறைவோடு வாழ்வதாகவே பதிவு செய்து இருக்கிறார் ரம்யா. இதனை ஒரு முக்கியமான படியாக நான் பார்க்கிறேன்.

இப்படிப்பட்ட கலை வடிவத்தைப் பார்க்கும் போது நமக்கு ஒரு தூண்டுதல் கிடைக்க வேண்டும். அந்தக் கலை நன்றாக இருக்கிறது, கலைஞர்கள் நன்றாக வாழ்கிறார்கள் என்ற நம்பிக்கை வர வேண்டும். அதைச் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார்கள். அவரே ஒரு புகைப்படக் கலைஞராக இருக்கும் போது இதன் ஒளிப்பதிவாளராக இன்னொருவருக்கு வாய்ப்பு கொடுத்தது மகிழ்ச்சியான விஷயம். அப்படியே இதில் ஒளிப்பதிவு செய்துள்ள சுரேஷும் பிரமாதமாகச் செய்திருக்கிறார்.
இசை தொடங்கி பிற எல்லா தொழில்நுட்ப பணிகளும் நன்றாக உள்ளன. விருதுகள் நிறைய வாங்க வேண்டும். அதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கின்றன என்றார்.

இயக்குநரும் கவிஞருமான பிருந்தா சாரதி பேசும் போது, நான் கூட கவிக்கோ அப்துல் ரகுமான் மற்றும் தனிநாயகம் அடிகளார் பற்றி என இரண்டு ஆவணப் படங்களை எடுத்திருக்கிறேன். அதில் இறங்கிய பிறகுதான் திரைப்படத்தைப் போலவே அதற்கும் ஆய்வு செய்ய வேண்டும் திரைக்கதை எழுத வேண்டும் என்றெல்லாம் தெரிந்தது. இவர்கள் இரண்டே நாளில் இந்த ஆவணப்படத்தை அழகாக எடுத்து இருக்கிறார்கள். காட்சிகள் எல்லாமே திகைப்பூட்டும் வகையில் உள்ளன. காட்டுக்குள்  தீப்பந்தத்தோடு அந்தக் கலைஞர்கள் ஓடும் போதும், அந்தத் துரியோதனன் கதாபாத்திரம் ஓடும் போதும் பயமாக இருக்கிறது. கிராமத்தில் இதையெல்லாம் பார்த்தால் பயந்து விடுவார்கள். அதனால் கர்ப்பிணி பெண்கள் எல்லாம் போகக்கூடாது என்று தடை செய்து வைத்திருப்பார்கள்.

சினிமாவில் ஒப்பனை, உடைகள் என்பதற்கெல்லாம் பல ஆட்கள் இருப்பார்கள். ஆனால் இதில் வருபவர் தானே ஒப்பனை செய்து கொள்கிறார். எல்லா வேலைகளையும் தானே செய்து கொண்டு இந்தக் கலைஞர் தோன்றுகிறார். இதற்காகக் கோவில், காடு என்று பல விதமான இடங்களில் எடுத்திருப்பது புதுமையான காட்சிகளைக் கொடுத்துள்ளது. கலைஞர்கள் சுழன்றாடும் காட்சிகளில் ஆடும் நடனம் ஆச்சரிய மூட்டுகிறது. ஒளிப்பதிவாளர் சுரேஷுக்கு வாழ்த்துக்கள். ரம்யா ஏற்கெனவே ஒரு புகைப்படக் கலைஞராக இருப்பதால் உலகத் தரத்திற்கு இதை எடுத்துள்ளார். நேஷனல் ஜியோகிராபிக் காலண்டரில் இவரது படம் இடம் பெற்றுப் பரிசு வாங்கியது போல் இந்தக் காட்சிகளும் முக்கியமான காலண்டர்களில் இடம்பெறும்.
எல்லா மாவட்டங்களிலும் உள்ள இந்த வகைக் கலைஞர்களுக்கு வறுமை கிடையாது. அரசு மூலம் அவர்களுக்கு நாடகம் போட வாய்ப்பு தருகிறார்கள். இந்த ஆவணப்படம் இந்தக் கலை மேலும் வளர்வதற்கு  உதவும். பங்கு பெற்ற அனைத்துக் கலைஞர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் என்றார்.

படத்தின் இயக்குநர் ரம்யா ஸ்ரீராம் பேசும் போது, இந்தப் படத்தை எடுப்பதற்கு பல்வேறு சிரமங்களைத் தாங்கிக் கொண்டு எனக்குப் பெரிதும் ஒத்துழைப்பு கொடுத்த ஒளிப்பதிவாளர் அருண் சுரேஷ், படத்தொகுப்பாளர் செல்வ பாண்டி, இசையமைப்பாளர் யானி போன்ற அனைவருக்கும் நன்றி.

அருகில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் இருட்டுக்குள் வயலில் எல்லாம் எடுத்தோம். ஆயிரம் ஆண்டுக்கு மேற்பட்ட கோயிலில் எல்லாம் படப்பிடிப்பு நடத்தினோம். நான் என்ன நினைத்தேனோ அதையே இந்த இசையமைப்பாளர் யானி இசையாகக் கொடுத்த போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இங்கே பலரும் பாராட்டிப் பேசியதே விருது கிடைத்தது போல் மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.

நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் அருண் சுரேஷ், படத்தொகுப்பாளர் செல்வ பாண்டி, இசையமைப்பாளர் யானி, நடன இயக்குநர் எஸ்.எல். பாலாஜி, புகைப்படக் கலை நிபுணர் ஆர். பிரசன்ன வெங்கடேஷ், சுகமுருகன் ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.

dhamaraimurasu

dhamaraimurasu

dhamaraimurasu admin

Related Posts

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரிப்பில், யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் நடிகர்கள் ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ‘ஹைக்கூ’. வரும் அக்டோபர் 23…

Read more

“அமெரிக்க ஆவி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

ஜீவன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் தனுஷ் நெப்போலியன், குணால் நெப்போலியன் ஆகியோரின் தயாரிப்பில் தஞ்சை ஜே பி ஆர் இயக்கத்தில் நெப்போலியன் நடிப்பில் உருவான ‘அமெரிக்க ஆவி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்கத்தவறிய செய்திகள்

“E 1” படத்தின் விமர்சனம்

“E 1” படத்தின் விமர்சனம்

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழாவில் 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழாவில் 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழா ! ஓவியர் ஜீவானந்தனுக்கு 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழா ! ஓவியர் ஜீவானந்தனுக்கு 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு 13.78 லட்சம் நிதியுதவி !

கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் “ஊர் கூடும் இரவு” ஆவணப்படம் !

கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் “ஊர் கூடும் இரவு” ஆவணப்படம் !

“ஆல்பாஸ்” விமர்சனம்

“ஆல்பாஸ்” விமர்சனம்

“தாய்நிலம்” விமர்சனம்

“தாய்நிலம்” விமர்சனம்

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

அதிமுகவின் பலவீனமா ? த.வெ.க வினரின் மோசடியா ?

அதிமுகவின் பலவீனமா ? த.வெ.க வினரின் மோசடியா ?

“அமெரிக்க ஆவி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“அமெரிக்க ஆவி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

அட்லான்டா இந்தியத் திரைப்பட விழாவில் “என்ன விலை” படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது !

அட்லான்டா இந்தியத் திரைப்பட விழாவில் “என்ன விலை” படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது !

நலிவுற்ற திருநங்கைகளுங்கு நிதியுதவி வழங்கிய “டோரதி” படக்குழு !

நலிவுற்ற திருநங்கைகளுங்கு நிதியுதவி வழங்கிய “டோரதி” படக்குழு !

“அன்பில் அவன் படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“அன்பில் அவன் படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“பத்தா” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“பத்தா” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

நாள்தோறும் நற்பணி ! ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன்

நாள்தோறும் நற்பணி ! ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன்

“ஒட்டாரம்” திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு !

“ஒட்டாரம்” திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு !

“சிக்மா” படத்தில் அறிமுகமானது எனக்கு பெருமை ! நடிகை ஃபரியா அப்துல்லா

“சிக்மா” படத்தில் அறிமுகமானது எனக்கு பெருமை ! நடிகை ஃபரியா அப்துல்லா

“அன்பில் அவன்” படத்தின் விமர்சனம்

“அன்பில் அவன்” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த நடிகர் !

“சிக்மா” படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த நடிகர் !

“பத்தா” படத்தின் விமர்சனம்

“பத்தா” படத்தின் விமர்சனம்

இயக்கமா ? நடிப்பா ? “சிக்மா” இயக்குநர் பேட்டி !

இயக்கமா ? நடிப்பா ? “சிக்மா” இயக்குநர் பேட்டி !

கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான் “சிக்மா” – இயக்குநர் சஞ்சய்

கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான் “சிக்மா” – இயக்குநர் சஞ்சய்

“தி டார்க் ஹெவன் படத்தின் வெற்றிக்கு, சொந்த ஊரில் விழா எடுத்த இயக்குநர் !

“தி டார்க் ஹெவன் படத்தின் வெற்றிக்கு, சொந்த ஊரில் விழா எடுத்த இயக்குநர் !

தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய பிரபல நடிகரின் மனைவி !

தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய பிரபல நடிகரின் மனைவி !

“கோல்டன் பாக்கியம்” டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு !

“கோல்டன் பாக்கியம்” டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு !

“கிட்டி” படத்தின் விமர்சனம்

“கிட்டி” படத்தின் விமர்சனம்

“த்ரிஷ்யம்_3” படத்தின் இந்தி பதிப்பை வெளியிட தடை கோரி வழக்கு !

“த்ரிஷ்யம்_3” படத்தின் இந்தி பதிப்பை வெளியிட தடை கோரி வழக்கு !

நான்கு மாநில டிஜிட்டல் & தொலைக்காட்சி துறைகளை ஒருங்கிணைக்கும் முயற்சி !

நான்கு மாநில டிஜிட்டல் & தொலைக்காட்சி துறைகளை ஒருங்கிணைக்கும் முயற்சி !

“துரோகம் பழகு படத்தின் டீசர் வெளியீட்டு விழா !

“துரோகம் பழகு படத்தின் டீசர் வெளியீட்டு விழா !

25 மாவட்டங்கள், 2 ஆயிரம் ரசிகர்கள் ! நடிகர் சூர்யா தலைமையில் பிரமாண்டமான விழா !

25 மாவட்டங்கள், 2 ஆயிரம் ரசிகர்கள் ! நடிகர் சூர்யா தலைமையில் பிரமாண்டமான விழா !

மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள “மக்கள் காவலன்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள “மக்கள் காவலன்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“பூஜா மேரி ஜான்” திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ஜீ_5 ஹிந்தியில் வெளியாகிறது

“பூஜா மேரி ஜான்” திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ஜீ_5 ஹிந்தியில் வெளியாகிறது

சாதிய வன்மத்தை விதைக்கும் “தி கிராண்ட் மாஸ்டர்” ! படத்தின் விமர்சனம்

சாதிய வன்மத்தை விதைக்கும் “தி கிராண்ட் மாஸ்டர்” ! படத்தின் விமர்சனம்

“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“#LOVE” வெப் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“#LOVE” வெப் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“தாய்நிலம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

“தாய்நிலம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

தனுஷின் ( D_56 ) புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

தனுஷின் ( D_56 ) புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

“ஏழு கடல் ஏழு மலை” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“ஏழு கடல் ஏழு மலை” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“டோரதி” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“டோரதி” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“தி டார்க் ஹெவன்” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“தி டார்க் ஹெவன்” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

மர்மம், ரகசியங்கள் நிறைந்த “ஆக்டோபஸ்” தொடர் ஜீ_5 தமிழில் வெளியாகிறது

மர்மம், ரகசியங்கள் நிறைந்த “ஆக்டோபஸ்” தொடர் ஜீ_5 தமிழில் வெளியாகிறது

ரசிகர்களின் அமோக வரவேற்பில் “என்ன விலை” திரைப்படம் !

ரசிகர்களின் அமோக வரவேற்பில் “என்ன விலை” திரைப்படம் !

“நல்ல படம்” திரைப்படத்தின் விமர்சனம்

“நல்ல படம்” திரைப்படத்தின் விமர்சனம்

“துரோகம் பழகு” படக்குழுவினரை  பாராட்டிய முதலமைச்சர் !

“துரோகம் பழகு” படக்குழுவினரை  பாராட்டிய முதலமைச்சர் !

பா. ரஞ்சித்தின் “வேட்டுவம்” படத்தின் அறிமுக வீடியோ வெளியீடு !

பா. ரஞ்சித்தின் “வேட்டுவம்” படத்தின் அறிமுக வீடியோ வெளியீடு !

விஜய் சேதுபதியின் “பத்தா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

விஜய் சேதுபதியின் “பத்தா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

பறிபோன மானத்திற்கு “என்ன விலை” என்ன விலை படத்தின் விமர்சனம்

பறிபோன மானத்திற்கு “என்ன விலை” என்ன விலை படத்தின் விமர்சனம்

“மண்டாடி” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“மண்டாடி” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“கஸ்தூரி வீடு” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“கஸ்தூரி வீடு” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

பாவனா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் “பிக்னிக்” படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு !

பாவனா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் “பிக்னிக்” படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு !

துல்கர் சல்மானின் “ஆகாசம்லோ ஓக தாரா” (AOT) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

துல்கர் சல்மானின் “ஆகாசம்லோ ஓக தாரா” (AOT) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

எம்.எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி “எம்.எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்” படத்தின் துவக்க விழா !

எம்.எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி “எம்.எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்” படத்தின் துவக்க விழா !

அர்ஜூன் தாஸ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

அர்ஜூன் தாஸ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

“அன்பில் அவன்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

நானி நடிப்பில் உருவாகியுள்ள “தி பாரடைஸ்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

நானி நடிப்பில் உருவாகியுள்ள “தி பாரடைஸ்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“என்ன விலை” படம் மறக்க முடியாத அனுபவம் ! நிமிஷா சஜயன்

“என்ன விலை” படம் மறக்க முடியாத அனுபவம் ! நிமிஷா சஜயன்

தி டார்க் ஹெவன் படத்தின் முன் வெளியீட்டு விழா !

தி டார்க் ஹெவன் படத்தின் முன் வெளியீட்டு விழா !

“பனங்காட்டான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“பனங்காட்டான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

அரசியலும் சமூக அக்கறையும் சேர்ந்து உருவான படம் தான் “ஆகாயம்” ! தினந்தோறும் நாகராஜ்

அரசியலும் சமூக அக்கறையும் சேர்ந்து உருவான படம் தான் “ஆகாயம்” ! தினந்தோறும் நாகராஜ்

“என்ன விலை” படத்தில் நான் நடித்த கதாப்பாத்திரம் மிகவும் சவாலானது ! கருணாஸ்

“என்ன விலை” படத்தில் நான் நடித்த கதாப்பாத்திரம் மிகவும் சவாலானது ! கருணாஸ்

“என்ன விலை” படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியது எனக்கு கிடைத்த வரம் !

“என்ன விலை” படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியது எனக்கு கிடைத்த வரம் !

“மண்டாடி” மூலம் மாஸ் ஹீரோவான சூரி ! மண்டாடி விமர்சனம்

“மண்டாடி” மூலம் மாஸ் ஹீரோவான சூரி ! மண்டாடி விமர்சனம்

வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகியுள்ள “நல்லபடம்” செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியீடு !

வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகியுள்ள “நல்லபடம்” செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியீடு !

சூர்யா நடித்துள்ள “சீன்” ( SCENE ) படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு !

சூர்யா நடித்துள்ள “சீன்” ( SCENE ) படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு !

“என்ன விலை” படத்தில் நடித்தது மிகவும் சவாலாக இருந்தது ! நடிகை ஷாஷா சிவக்குமார்

“என்ன விலை” படத்தில் நடித்தது மிகவும் சவாலாக இருந்தது ! நடிகை ஷாஷா சிவக்குமார்

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

அசோக் செல்வன் நடித்துள்ள “அன்பில் அவன்” வெளியீட்டு தேதி அறிவிப்பு !

அசோக் செல்வன் நடித்துள்ள “அன்பில் அவன்” வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“வதந்தி சீசன்_2” பற்றி மெய்சிலிர்க்கும் நடிகர் !

“வதந்தி சீசன்_2” பற்றி மெய்சிலிர்க்கும் நடிகர் !

“என்ன விலை” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“என்ன விலை” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

திரைப்பிரபலங்களுக்கு புதிய தீர்ப்பை பெற்றுத்தந்துள்ள நடிகை !

திரைப்பிரபலங்களுக்கு புதிய தீர்ப்பை பெற்றுத்தந்துள்ள நடிகை !

“வைல்ட் தமிழ்நாடு” இன்று முதல் பிவிஆர் திரையரங்குகளில் வெளியீடு !

“வைல்ட் தமிழ்நாடு” இன்று முதல் பிவிஆர் திரையரங்குகளில் வெளியீடு !

“மொத ராத்திரி” படக்குழுவினரின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“மொத ராத்திரி” படக்குழுவினரின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

கமல்ஹாசனின் புதிய படத்தின் “புகைப்படம்” சமூக வலைதளங்களில் வைரல் !

கமல்ஹாசனின் புதிய படத்தின் “புகைப்படம்” சமூக வலைதளங்களில் வைரல் !

நயன்தாராவின் “ஹாய்” படத்தின் விமர்சனம் !

நயன்தாராவின் “ஹாய்” படத்தின் விமர்சனம் !

மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க அலட்சியப்படுத்தும் அரசு அதிகாரிகள் ! நரிக்குறவர் இன மக்களின் போராட்டத்திற்கு தீர்வு எப்போது ?.!

மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க அலட்சியப்படுத்தும் அரசு அதிகாரிகள் ! நரிக்குறவர் இன மக்களின் போராட்டத்திற்கு தீர்வு எப்போது ?.!

“ஒன்ஸ்மோர்” படத்தின் திரைவிமர்சனம்

“ஒன்ஸ்மோர்” படத்தின் திரைவிமர்சனம்

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் மரணம் ! சோகத்தில் கிராம மக்கள் !

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் மரணம் ! சோகத்தில் கிராம மக்கள் !

தந்தை கொலை, பழிவாங்க துடிக்கும் மகள் ! “அமரம்” படத்தின் விமர்சனம்

தந்தை கொலை, பழிவாங்க துடிக்கும் மகள் ! “அமரம்” படத்தின் விமர்சனம்

திருப்பூரில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி தெருநாய்கள் கொடூர கொலை !

திருப்பூரில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி தெருநாய்கள் கொடூர கொலை !

தந்தை, மகன் உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் “ஃபாதர்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

தந்தை, மகன் உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் “ஃபாதர்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

“டாக்ஸிக்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“டாக்ஸிக்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

200 கோடி வசூல் சாதனை படைத்த “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம்

200 கோடி வசூல் சாதனை படைத்த “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம்

“ஒன்ஸ்மோர்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“ஒன்ஸ்மோர்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம் ! தெளிவில்லாத முதல்வரின் அறிவிப்பு !

கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம் ! தெளிவில்லாத முதல்வரின் அறிவிப்பு !

“Yourbackers play” உலகின் லாப நோக்கமற்ற OTT தளம் அறிமுகம் !

“Yourbackers play” உலகின் லாப நோக்கமற்ற OTT தளம் அறிமுகம் !

“இருமுடி கட்டு” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“இருமுடி கட்டு” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குரு சங்கருக்கு கொலை மிரட்டல் !

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குரு சங்கருக்கு கொலை மிரட்டல் !

“ஹலோ மிஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“ஹலோ மிஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

பழனி அருகே “தார் & டீசல்” திருட்டு ! புகார்தாரரை மிரட்டும் காவல் ஆய்வாளர் !.?

பழனி அருகே “தார் & டீசல்” திருட்டு ! புகார்தாரரை மிரட்டும் காவல் ஆய்வாளர் !.?

“அன்பில் அவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு !

“அன்பில் அவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு !

“ஐ ம் கேம்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“ஐ ம் கேம்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“பியார் பிரேமா கல்யாணம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“பியார் பிரேமா கல்யாணம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“பத்தா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“பத்தா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் டிரெய்லருக்கு அமோக வரவேற்பு !

டாக்ஸிக் படத்தின் டிரெய்லருக்கு அமோக வரவேற்பு !

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு !

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“வதந்தி சீசன் 2” குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“வதந்தி சீசன் 2” குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட “பியார் பிரேமா கல்யாணம்” தொடரின் முன்னோட்டம் !

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட “பியார் பிரேமா கல்யாணம்” தொடரின் முன்னோட்டம் !