“அமெரிக்க ஆவி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

ஜீவன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் தனுஷ் நெப்போலியன், குணால் நெப்போலியன் ஆகியோரின் தயாரிப்பில் தஞ்சை ஜே பி ஆர் இயக்கத்தில் நெப்போலியன் நடிப்பில் உருவான ‘அமெரிக்க ஆவி’ படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த திரைப்படத்தின் இசையை சென்னையில் உள்ள ஜப்பான் நாட்டின் துணை தூதரான டாக்கா ஹாசி மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆதித்யா ராம் ஆகியோர் இணைந்து வெளியிட, தயாரிப்பாளர் கண்ணன் ரவி பெற்றுக்கொண்டார்.

அறிமுக இயக்குநர் தஞ்சை ஜே பி ஆர் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அமெரிக்க ஆவி’ திரைப்படத்தில் நடிகர் நெப்போலியன் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார். இவருடன் 200க்கும் மேற்பட்ட அமெரிக்கா வாழ் புதுமுக நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். ‘நேஷ் வில்’ பிரபு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஆதிஷ் உத்ரியன் இசையமைத்திருக்கிறார். வினு படத் தொகுப்பு பணிகளை மேற்கொள்ள இந்து ராஜ்குமார் கலை இயக்குநராக பணியாற்றிருக்கிறார்.

முழுக்க முழுக்க அமெரிக்காவில் உருவாக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம் இது என்ற பெருமிதத்துடன், விரைவில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட விழா சென்னையில் உள்ள கமலா திரையரங்க வளாகத்தில் நடைபெற்றது. படக் குழுவினருடன் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் குணால் நெப்போலியன் பேசுகையில், இந்த படத்தைப் பற்றி சொல்ல வேண்டும் என்றால், இது வேற மாதிரியான படம். தமிழ் சினிமாவில் இந்த திரைப்படம் தான் முழுவதும் அமெரிக்காவில் படமாக்கப்பட்ட முதல் தமிழ் திரைப்படம். அமெரிக்காவில் வாழும் நம்முடைய இனத்தினரிடம் இவ்வளவு திறமைகள் மறைந்திருக்கிறது என்பதை காணும் போது ஆச்சரியமாக இருந்தது. இது சின்ன விசயம் அல்ல. அனைவரும் தங்களுடைய வாழ்க்கைக்கான வேலையை செய்து கொண்டே கிடைத்த சிறிய ஓய்வு நேரத்தில் இப்படத்தில் பணியாற்றினார்கள். அதை நினைக்கும் போது எங்கள் அனைவருக்கும் பெருமிதமாக இருக்கிறது.

‘அமெரிக்க ஆவி’ என்ற டைட்டிலை பற்றி சொல்ல வேண்டும். ஆவி என்றால் நாம் பேய் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அதுவும் இந்த திரைப்படத்தில் இருக்கிறது. அதே தருணத்தில் ஆவி என்பதற்கு அமெரிக்காவை பொறுத்தவரை மற்றொரு பொருளும் இருக்கிறது. அமெரிக்காவில் பல நாடுகளில் இருந்தும் இங்கு வந்து குடியேறியவர்கள் அதிகம். அவர்கள் ஒவ்வொருவரும் வெற்றி பெற்றவர்கள். அவர்கள் வெற்றியை நோக்கி பயணிப்பவர்கள். முயற்சி செய்து வெற்றி பெறுபவர்கள். அந்த கோணத்திலான பொருளும் இப்படத்தில் கதாபாத்திரங்களாக இடம் பிடித்திருக்கிறது. எனவே இந்த படத்தில் பேயும், பிசாசும் இருக்கிறது அத்துடன் சுவாரசியமான மற்ற விசயங்களும் இருக்கிறது.

இந்தப் படத்தில் மற்றொரு சுவராசியமான விசயமும் இருக்கிறது. இந்த படத்தின் இணை தயாரிப்பாளர் தனுஷ் நெப்போலியன். உண்மையை சொல்ல வேண்டுமென்றால், அவர் தான் எனக்கு முதலாளி. அவரால் இங்கு வர இயலவில்லை. ஆனால் இந்த நிகழ்ச்சியின் நேரலையை அவர் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

அனைவரும் இந்த திரைப்படத்திற்கு குடும்பத்துடன் திரையரங்கத்திற்கு வருகை தந்து மகிழ்ச்சியுடன் கண்டு ரசிக்க வேண்டும் என அவர் இங்குள்ள ரசிகர்களுக்கு செய்தி அனுப்பியுள்ளார். இந்தப் படத்தை வெற்றி பெற செய்வது நம்முடைய கடமை என்றார்.

நடிகர் நெப்போலியன் பேசுகையில், இந்த திரைப்படத்தில் ஆண்டோ, தியான், அர்லூ, பிரேமா, பிஜூ, மகேஷ், பப்லு, அருண் ஆண்டனி, சாம் ஆண்டோ, பிரகாஷ், ஐஸ்வர்யா, ராஜ்குமார், இந்து ராஜ்குமார், ராகுல், ஹேமமாலினி, ஊர்வசி, மைதிலி என தோராயமாக 200 பேர் புதுமுகமாக அறிமுகமாகி இருக்கிறார்கள். அவர்களில் மிக சிலர் மட்டுமே இந்த நிகழ்விற்காக இங்கு வருகை தந்திருக்கிறார்கள்.

இதில் நடித்திருக்கும் அனைவரும் சாப்ட்வேர் இன்ஜினியர்கள், டாக்டர்கள், சயின்டிஸ்ட்,  புரொபசர்ஸ் என எல்லோரும் பெரிய பெரிய நிறுவனங்களில் பெரிய பொறுப்பில் பணியாற்றுகிறார்கள். அவர்கள் இந்த படத்திற்காக ஒதுக்கி தரும் நேரத்தை பயன்படுத்தி, 75 நாட்களில் இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறோம். திங்கள் முதல் வெள்ளி வரை அனைவரும் பரபரப்பாக இயங்குவார்கள். அதில் அவர்கள் எங்களுக்காக ஒதுக்கித் தரும் நேரத்தை சரியாக திட்டமிட்டு அந்த நேரத்தில் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். இது மிகவும் கடினமான விசயம் தான். அமெரிக்காவில், இதுவரை சினிமா சூட்டிங்கை நேரில் வேடிக்கை பார்க்காதவர்கள் எல்லாம் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் நானும், இயக்குநரும் பயிற்சி கொடுத்து இதில் நடிக்க வைத்திருக்கிறோம்.

சிவாஜி சார் நடித்த ‘பாரத விலாஸ், படத்தில் இந்தியாவில் உள்ள அனைவரும் நடித்திருப்பார்கள். இதில் உலகம் முழுவதிலும் உள்ளவர்கள் நடித்திருக்கிறார்கள். ஏறத்தாழ 40க்கும் மேற்பட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் இதில் நடித்திருக்கிறார்கள். இந்த அளவிற்கு இந்த படம் மிகவும் வித்தியாசமான படம். பொழுதுபோக்காகவும் இருக்கும்.
1994 ஆம் ஆண்டில் சன் டிவி நேரலை காட்சி தொடங்கிய போது, நானும், இயக்குநர் பாண்டியராஜனும் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள மணிலாவிற்கு சென்று தொடங்கி வைத்தோம். அன்று முதல் எங்களுக்குள் ஏற்பட்ட நெருங்கிய நட்பு இன்று வரை நீடிக்கிறது. அவர் இங்கு வந்து எங்கள் படக் குழுவை வாழ்த்தியதற்கு நன்றி. மேலும் இங்கு வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி என்றார்.

அறிமுக நடிகர் மகேஷ் பேசுகையில், இந்த படத்தில் நடிக்க வைப்பதற்காக ஜனவரி மாதத்தில் அனைவரையும் ஒரு பிரத்யேக உடையில் வர வேண்டும் என நெப்போலியன் சொன்னார். அப்போது நாங்கள் எல்லோரும் ஆடிஷன் தான் நடைபெறப் போகிறது என நினைத்திருந்தோம். ஆனால் அவர் உங்களுக்கெல்லாம் ஆடிஷன் இல்லை நடிக்கலாம் என்றார். அதன் பிறகு அனைவருக்கும் நெப்போலியன் சார் நடிக்க கற்றுக் கொடுத்தார். அவர் எங்களுக்காக நடித்துக் காட்டியது மறக்க முடியாத அனுபவம். ஒரு திரைப்படத்தை உருவாக்கும் போது நடைபெறும் அனைத்து தொழில்நுட்ப விசயங்களை நேரில் பார்த்து ரசித்தோம். இந்தப் படத்தில் என்னுடைய அம்மா தான் நெப்போலியன் சாரின் அம்மாவாக நடித்திருக்கிறார். அது எனக்கு பெருமிதமாக இருக்கிறது. இந்த திரைப்படத்தைக் காண நாங்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கிறோம் என்றார்.

இயக்குநர் தஞ்சை ஜே பி ஆர் பேசுகையில், நான் ஒன்பது வயதிலேயே பழைய ஃபிலிம் வைத்து சூரிய ஒளி மூலம் சுவற்றில் அந்த படத்தை காண்பித்திருக்கிறேன். இதுதான் என்னுடைய தொடக்க கால பிலிம் டைரக்ஷன் ஆர்வம். அதற்கு பின் ‘ஓநாய்கள் ஜாக்கிரதை’ என்ற பெயரில் ஒரு திரைப்படத்தை தயாரித்து இயக்கியிருந்தேன். அதன் பிறகு குடும்ப சூழல் காரணமாக அமெரிக்காவில் செட்டிலாகி விட்டேன். அங்கு இருந்த காரணத்தினால் சினிமா பற்றிய தொடர்பு துண்டித்து போய்விடுமோ..! என பயந்தேன். அதற்காக இப்போதும் பல கதைகளை தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கிறேன். இந்த தருணத்தில் ஒரு முறை நெப்போலியனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவரை சந்தித்து ஒரு கதையை சொன்னேன். அவருக்கு கதை மிகவும் பிடித்திருந்தது. ஆனால் என்னால் தனுஷை விட்டுவிட்டு வெளியில் வந்து நடிக்க முடியாது என்றார். அந்தத் தருணத்தில் அமெரிக்காவிலேயே ஏதாவது படத்தை உருவாக்க முடியுமா? அதற்கான கதை இருக்கிறதா? என கேட்டார். அதன் பிறகு மதிய உணவு அருந்தினோம். அத்துடன் அவர் புதிதாக வாங்கியிருக்கும் வீட்டை காண்பித்தார். மூன்றரை ஏக்கரில் அமைந்திருக்கும் பிரம்மாண்டமான வீடு அது. மரங்களுக்கு நடுவே அழகாக அமைந்திருந்த அந்த வீட்டை பார்த்ததும் ஆங்கில திரைப்படங்களில் வருவதை போல் இருந்தது. அதன் பிறகு இந்த வீட்டை மையப்படுத்தி ஏதேனும் கதையை உருவாக்க முடியுமா? எனக் கேட்டார். முடியும் என்று சொல்லிவிட்டு ஒரு வாரம் கழித்து கதையை சொன்னேன். அது அவருக்கு மிகவும் பிடித்து போனது. அப்போது அவர் இது வழக்கமான ஹாரர் படமாக இருக்கக் கூடாது. காமெடி கலந்த ஹாரர் படமாக இருக்க வேண்டும் என்றார். அதற்குப் பிறகு ஒரு கதையை உருவாக்கினோம். அந்தக் கதையை நெப்போலியனும், அவரது வாரிசுகளான குணால், தனுஷ் என அனைவரும் இணைந்து அட்டகாசமான திரைக்கதையாக உருவாக்கினோம். இந்தப் படத்திற்காக பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்கள், நடிகைகள் அனைவருக்கும் நன்றி என்றார்.

ஒளிப்பதிவாளர் ‘நேஷ் வில்’ பிரபு பேசுகையில், என்னுடைய முழு பெயர் பிரபு தொப்புடு அமரேசன். என்னுடைய தாத்தா டி. எஸ். அமரேசனுக்கு நன்றி. அவர் ஆர் எஸ் மனோகர் நடித்த மேடை நாடகங்களை இயக்கியவர். 1920 களில் அவர் மறைந்து விட்டார். அவர் இப்போது இருந்தால் மிகவும் சந்தோஷம் அடைந்திருப்பார். நான் சென்னையில் தற்போது பிரபலமான ஒளிப்பதிவாளர்களாக திகழும் மனோஜ் பரஹாம்சா, அறிவழகன் ஆகியோரின் அறையில் தான் நான் இருந்தேன். அதனால் கேமரா லென்ஸ், லைட்ஸ் அதைப்பற்றி எல்லாம் தெரியும். அதன் பிறகு அமெரிக்காவிற்கு சென்றபோது அங்கு நடைபெறும் சிறிய நிகழ்வுகளை எல்லாம் கேமரா மூலம் பதிவு செய்தேன். அப்போதுதான் நெப்போலியன் அறிமுகமானார். அவர்களுடைய குடும்ப நிகழ்வுகளுக்கெல்லாம் கேமரா மேனாக இருந்தேன். அதன் பிறகு தான் ஜப்பானில் தனுஷின் கல்யாணம் நடைபெற்ற போது அதனை பதிவு செய்தேன். அப்படி என்னை படிப்படியாக மெருகேற்றி தற்போது ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தி இருக்கிறார். அதற்காக அவருக்கு நன்றி என்றார்.

ஃபெப்சி தலைவர் இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசுகையில்,
இந்த திரைப்படத்தை திரையரங்கில் பார்க்கும் போது ‘மை டியர் குட்டிச்சாத்தான்’ படத்தை பார்ப்பது போல் இருக்கும். இந்தப் படத்தை நான் பார்த்து விட்டேன். ஒரு திரைப்படத்தில் ஒருவரை புது முகமாக அறிமுகப்படுத்தி நடிக்க வைப்பது எளிது. ஆனால் ஒட்டுமொத்த திரைப்படத்திலும் அனைவரையும் புதுமுகமாக அறிமுகப்படுத்தி, அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து நடிக்க வைப்பது என்பது உலக மகா கடினமான வேலை. படப்பிடிப்பு தளத்தில் அனைவருக்கும் நம்பிக்கையை கொடுத்து அவர்களிடமிருந்து நடிப்பை வாங்கியிருக்கிறார்கள். அதிலும் பாடல் காட்சியில் அனைவரும் ரிதத்துடன் இணைந்து நடனமாடி இருக்கிறார்கள். இது அவர்களின் நடிப்பின் மீதான ஆர்வத்தை வெளிப்படுத்தியது. இதற்காக கலா மாஸ்டருக்கு நன்றி. 

நெப்போலினை பொறுத்தவரை ஒரு வேலையை செய்தால் அதனை சரியாக செய்திட வேண்டும் என நினைப்பவர். அது நடிகர் சங்க தலைவராக இருந்தாலும் சரி, நடிகராக இருந்தாலும் சரி, அரசியல்வாதியாக இருந்தாலும் சரி, ஒரு வேலையை செய்தால் அதனை சரியாக செய்ய வேண்டும் என நினைப்பார். அந்த அளவிற்கு அவர் நல்ல மனிதர்.
இப்படத்தின் ஹீரோயின் ஒரு டாக்டர். அமெரிக்காவில் உள்ள அவரது வீட்டில் படப்பிடிப்பு நடந்தது. அவருடைய ஓய்வு நேரத்தின் போது அவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடிப்பார். அதுவரை படக்குழுவினர் அங்கு காத்திருப்பார்கள். இந்த படத்தின் உச்சகட்ட காட்சியில் அட்டகாசமான சண்டை காட்சியை சண்டை பயிற்சி இயக்குநர் பி சி. ஸ்டண்ட் வடிவமைத்திருக்கிறார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்றார்.

திருமதி ரோஜா செல்வமணி பேசுகையில், வி சேகர் இயக்கத்தில் ‘வீட்டோட மாப்பிள்ளை’ படத்தில் நான் நெப்போலியுடன் நடித்திருக்கிறேன் அவர் என் சக நடிகர். அவரைப் பற்றி என்ன சொன்னாலும் அது குறைவு தான் அவர் ஒரு நல்ல கலைஞர், நல்ல அரசியல்வாதி, நல்ல தொழிலதிபர், நல்லதொரு தந்தை, இதற்கு மேல் அவர் நல்ல மனிதரும் கூட. நீண்ட நாட்களுக்குப் பிறகு நெப்போலியனை ஒரு நடிகராக திரையில் பார்க்கும்போது சக நடிகையாக எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நானும் கூட 12 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி இருக்கிறேன். ஒரு கலைஞருக்கு ரசிகர்கள், கேமரா, படப்பிடிப்பு தளம் ஆகியவற்றுடன் பழகிய பிறகு, அதை விட வேண்டும் என்பது கடினமானதாக இருக்கும். எங்களுடைய குடும்ப பணி இருந்தாலும் ரசிகர்களுக்காக, கலைக்காக மீண்டும் நடிக்க வருவதில் மகிழ்ச்சி தான். அதிலும் அவர் நல்ல கதையுடன் மீண்டும் ரசிகர்களை சந்திக்க வருகை தந்திருக்கிறார். இதற்காகவே நாம் அனைவரும் அவருக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அதனால் இந்தப் படத்தை வெற்றி படமாக மாற்றுவதற்கு மவுத் பப்ளிசிட்டி, சோசியல் மீடியா பப்ளிசிட்டி ஆகியவற்றை அனைவரும் செய்திட வேண்டும். எனக்கும், என் மகளுக்கும் பேய் படம் என்றால் பயம். இருந்தாலும் இந்தத் திரைப்படத்தை பார்த்து மகிழ்ச்சி அடைந்தோம் என்றார்.

நடிகர் நாசர் பேசுகையில், நெப்போலியன் உடனான பயணம் ‘கிழக்கும் மேற்கும்’ படத்தில் தொடங்கி, ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும் மேலாக  தொடர்கிறது. அந்தப் படத்திற்காக நாங்கள் இருவரும் ஏறத்தாழ 30 நாட்கள் ஒன்றாகவே இருந்தோம். இப்போது எப்படி இருக்கிறாரோ…! அப்போதே அப்படித்தான் இருந்தார்.‌ அப்போது அவர் வாழ்க்கையை எப்படி திட்டமிட்டாரோ, அதே போன்ற வாழ்க்கையை அவர் வாழ்ந்து வருகிறார். இது எனக்கு மிக பெருமையாக இருக்கிறது. சில பட்டங்கள், சில நற்பெயர்களை சம்பாதிப்பது கடினம். கஷ்டப்பட்டு உழைத்தால் கோடீஸ்வரன் ஆகலாம். கஷ்டப்பட்டு நடித்தால் சூப்பர் ஸ்டார் ஆகலாம். ஆனால் மனதார எப்போதும் நெப்போலியனை வாழ்த்தும் போது ‘நல்ல’ என்றொரு வார்த்தையை சேர்த்துக் கொள்வார்கள். அது எல்லோருக்கும் கிடைக்காது.

என்னுடைய மகன் விபத்தில் சிக்கிய போது எனக்கு மிகப்பெரும் ஆறுதலை சொல்லியவர் நெப்போலியன் தான். ‘நல்ல’ என்ற பெயரை.. நெப்போலியன் மட்டும் சம்பாதிக்கவில்லை. அவருடைய மனைவியும் சேர்த்து தான் சம்பாதித்திருக்கிறார்கள்.
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக என் மனமார்ந்த நன்றியை அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தென்னிந்திய நடிகர் சங்க கட்டடத்திற்கு நாங்கள் யாரும் கேட்காமல் அவராக முன் வந்து ஒரு கோடி ரூபாயை வைப்புத் தொகையாக கொடுத்தார். இந்தப் படத்தின் முன்னோட்டத்தில் நெப்போலியன் இளமையாக தோன்றுகிறார்.

தற்போது தான் ஒரு பத்திரிகைக்கு கட்டுரையை எழுதி விட்டு வந்தேன். இந்தியாவில் குழந்தைகளுக்கான படம் என்பது .0 சதவீதத்தில் கூட இல்லை. நாம் குழந்தைகளுக்காக படத்தை உருவாக்கியது இல்லை. அந்த வகையில் இந்த படம் குழந்தைகளுக்கான படமாக இருக்கும் என்று நினைக்கிறேன். குழந்தைகள் பெற்றோர்களை அழைத்துக்கொண்டு இந்த திரைப்படத்தை பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இவருக்கு உறுதுணையாக இருந்த நேஷ் வில் இருந்து இங்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி என்றார்.

தயாரிப்பாளர் டி. சிவா பேசுகையில், நெப்போலியன் நடிக்க தொடங்கும் காலகட்டத்திலேயே நல்ல நடிகர் என்ற பெயருடன், நல்ல மனிதர் என்ற பெயரையும் சம்பாதித்திருக்கிறார். எல்லோருடைய மனதிலும் இடம் பிடித்திருந்தார். அவர் நடிகர் சங்கத்தின் துணைத் தலைவராக இருந்தபோது சங்க நிகழ்வுகளுக்காக கடினமாக உழைத்தவர். அவர் எல்லா இடத்திலும் ஒரு ராணுவ வீரரை போல் செயல்படுவார். நான் இந்தப் படத்தை பார்த்தேன் நிச்சயமாக பொழுதுபோக்கு அம்சம் உள்ள படமாக உருவாகி இருக்கிறது. இது நிச்சயம் கமர்சியல் திரைப்படமாக உருவாகி இருக்கும் என நம்புகிறேன். பெப்சிக்கான கட்டிடத்திற்கு முதல் நன்கொடையை கொடுத்தவர் நெப்போலியன் தான். இவருக்கு திரைத்துறை சார்பில் தனியாக பாராட்டு விழா நடத்திட வேண்டும். என்னுடைய திரையுலக அனுபவத்தில் நான் பார்த்த இரண்டு ‘நல்ல’ மனிதர்களில் ஒருவர் விஜயகாந்த். மற்றொருவர் நெப்போலியன் தான் அனைவருக்கும் நன்றி என்றார்.

நடன இயக்குநர் கலா பேசுகையில், இங்கு மூன்று பாடல்களை தான் திரையிட்டார்கள். படத்தில் மேலும் சில பாடல்கள் இருக்கிறது.  நெப்போலியனும் நானும் எவ்வளவுதான் கற்றுக் கொடுத்தாலும் அதை அவர்கள் கற்றுக்கொண்டு நடித்ததற்கு நன்றி.

நெப்போலியன் என்னுடைய முப்பது ஆண்டுகால நெருங்கிய குடும்ப நண்பர். அவர் நடிகர் சங்கத்திற்கு மட்டுமல்ல எங்களுடைய நடன இயக்குநர்கள் சங்கத்திற்கும் நன்கொடை வழங்கி இருக்கிறார். அவரைப் போலே அவருடைய வீட்டின் பெண்மணியான சுதாவும் நல்ல மனுஷி. அவர்களை நான் திருமணமான தருணத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறேன். எப்போதும் மகிழ்ச்சியாகவே இருப்பார். இந்த திரைப்படம் ஆவி சம்பந்தப்பட்ட படம் அல்ல. இது ஒரு அழகான குடும்ப திரைப்படம். இந்தப் படம் நிச்சயமாக சூப்பர் ஹிட் ஆகும் என்றார்.

இசையமைப்பாளர் ஆதிஷ் உத்ரியன் பேசுகையில், இயக்குநர் ஜே பி ஆர் மூலமாக நெப்போலியனை சந்தித்து, இப்படத்திற்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது என்னுடைய திரை இசை பயணத்தில் இந்தப் படம் ஒரு மைக்கல். இந்தப் படத்தில் ஐந்து பாடல்கள் இடம் பிடித்திருக்கிறது. அனைவருக்கும் நன்றி என்றார். 

பாடலாசிரியர் சினேகன் பேசுகையில், இந்த மேடை பேரன்பிற்கான மேடை. அவரைப் பற்றி நான் மணி கணக்கில் பேசலாம். அவரிடம் நான் whatsapp மூலம் ஏராளமான தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.‌ உடன்பிறந்த சகோதரர் போன்றதொரு உணர்வு எனக்குள் இருக்கிறது. மிகச்சிறந்த மனிதர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி இருக்கும் இந்த திரைப்படத்தில் நானும் ஒரு புள்ளியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவரை பாராட்டுவதற்கு மற்றொரு மேடை கிடைக்கும் என ஆவலுடன் காத்திருக்கிறேன் அனைவருக்கும் நன்றி என்றார்.

இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசுகையில், புது நெல்லு புது நாத்து என்ற படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்தபோது நான் ‘உறுதிமொழி’ படத்தை இயக்கிக் கொண்டிருந்தேன். அப்போது ஒளிப்பதிவாளர் ரவி யாதவ், ஒல்லியாக உயரமாக இருந்த ஒருவரை ‘இவர் தான் குமரேசன்’ என அறிமுகப்படுத்தினார்.‌ அப்போது அவரிடம் ‘நான் உன்னை மிகப்பெரிய வில்லனாக நடிக்க வைக்கிறேன்’ என உறுதிமொழி கொடுத்தேன். அதன் பிறகு ‘எஜமான்: படத்தில் அவரை நடிக்க வைத்திருந்தேன் அதற்காக கடுமையாக போராட வேண்டியது இருந்தது ரஜினி சாரே வேண்டாம் என்று சொன்னார். அப்போது அவரிடம் ஏன் நெப்போலியன் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் ? என்பதற்கான காரணத்தை சொன்னேன். அதைக் கேட்டு இது புதிதாக இருக்கிறதே..? என சொல்லிய பிறகு அவர் ஒப்புக்கொண்டார்.  நெப்போலியனுக்காக அந்தக் கதையில் பல மாற்றங்களை செய்தேன். அந்தப் படத்தில் அவர் பேசுவதை போல் இடம்பெறும் ஒரு வசனம் ( கல்யாண வீடாக இருந்தால் மாப்பிள்ளை…) இன்று வரை பிரபலம். அவருடன் அந்த ஒரு படத்தில் மட்டும் தான் பணியாற்ற முடிந்தது. அது எனக்கு நிறைவானதாகவும் இருந்தது.

இந்த ‘அமெரிக்க ஆவி’ படத்தில் ஆவி யார்? என்பதை சொல்லவே இல்லையே..? இந்த படத்தின் போஸ்டரில் நெப்போலியன் ஒரு கிளென் ஈஸ்ட்வுட் போல்  இருக்கிறார். நாம் வயசான ஆவி, நல்ல ஆவி, கெட்ட ஆவி, இளம் ஆவி, விபத்தில் இறந்து போன ஆவி, காதலில் தோல்வி அடைந்த ஆவி, வீட்டை வாங்க முடியாமல் உயிரிழந்த ஆவி என பல ஆவிகளை பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். இதில் எந்த ஆவி அமெரிக்கா ஆவி என தெரியவில்லை. எந்த ஆவியாக இருந்தாலும் நெப்போலியன் ஒரு சிறப்பான ஆவியைத்தான் நமக்கு காண்பிப்பார். இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன் என்றார்.

dhamaraimurasu

dhamaraimurasu

dhamaraimurasu admin

Related Posts

கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் “ஊர் கூடும் இரவு” ஆவணப்படம் !

சென்னையைச் சேர்ந்த ரம்யா ஸ்ரீராம் புகைப்படக் கலைஞராகவும், பலகலைகள் பற்றிய தேடுதல் மனம் கொண்ட பயணியாகவும் இருக்கிறார்.மக்களிடையே பின்பற்றப்படும் சடங்கு வடிவங்களையும்,  விழாக்களையும் தனது கேமராவிற்குள் சிறைப் பிடிப்பது அவருக்கு விருப்பமான ஒன்று. அந்த வகையில்நமது பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவற்றை ஆவணப்படுத்துவதில்…

Read more

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரிப்பில், யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் நடிகர்கள் ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ‘ஹைக்கூ’. வரும் அக்டோபர் 23…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்கத்தவறிய செய்திகள்

“E 1” படத்தின் விமர்சனம்

“E 1” படத்தின் விமர்சனம்

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழாவில் 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழாவில் 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழா ! ஓவியர் ஜீவானந்தனுக்கு 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழா ! ஓவியர் ஜீவானந்தனுக்கு 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு 13.78 லட்சம் நிதியுதவி !

கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் “ஊர் கூடும் இரவு” ஆவணப்படம் !

கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் “ஊர் கூடும் இரவு” ஆவணப்படம் !

“ஆல்பாஸ்” விமர்சனம்

“ஆல்பாஸ்” விமர்சனம்

“தாய்நிலம்” விமர்சனம்

“தாய்நிலம்” விமர்சனம்

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

அதிமுகவின் பலவீனமா ? த.வெ.க வினரின் மோசடியா ?

அதிமுகவின் பலவீனமா ? த.வெ.க வினரின் மோசடியா ?

“அமெரிக்க ஆவி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“அமெரிக்க ஆவி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

அட்லான்டா இந்தியத் திரைப்பட விழாவில் “என்ன விலை” படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது !

அட்லான்டா இந்தியத் திரைப்பட விழாவில் “என்ன விலை” படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது !

நலிவுற்ற திருநங்கைகளுங்கு நிதியுதவி வழங்கிய “டோரதி” படக்குழு !

நலிவுற்ற திருநங்கைகளுங்கு நிதியுதவி வழங்கிய “டோரதி” படக்குழு !

“அன்பில் அவன் படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“அன்பில் அவன் படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“பத்தா” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“பத்தா” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

நாள்தோறும் நற்பணி ! ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன்

நாள்தோறும் நற்பணி ! ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன்

“ஒட்டாரம்” திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு !

“ஒட்டாரம்” திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு !

“சிக்மா” படத்தில் அறிமுகமானது எனக்கு பெருமை ! நடிகை ஃபரியா அப்துல்லா

“சிக்மா” படத்தில் அறிமுகமானது எனக்கு பெருமை ! நடிகை ஃபரியா அப்துல்லா

“அன்பில் அவன்” படத்தின் விமர்சனம்

“அன்பில் அவன்” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த நடிகர் !

“சிக்மா” படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த நடிகர் !

“பத்தா” படத்தின் விமர்சனம்

“பத்தா” படத்தின் விமர்சனம்

இயக்கமா ? நடிப்பா ? “சிக்மா” இயக்குநர் பேட்டி !

இயக்கமா ? நடிப்பா ? “சிக்மா” இயக்குநர் பேட்டி !

கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான் “சிக்மா” – இயக்குநர் சஞ்சய்

கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான் “சிக்மா” – இயக்குநர் சஞ்சய்

“தி டார்க் ஹெவன் படத்தின் வெற்றிக்கு, சொந்த ஊரில் விழா எடுத்த இயக்குநர் !

“தி டார்க் ஹெவன் படத்தின் வெற்றிக்கு, சொந்த ஊரில் விழா எடுத்த இயக்குநர் !

தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய பிரபல நடிகரின் மனைவி !

தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய பிரபல நடிகரின் மனைவி !

“கோல்டன் பாக்கியம்” டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு !

“கோல்டன் பாக்கியம்” டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு !

“கிட்டி” படத்தின் விமர்சனம்

“கிட்டி” படத்தின் விமர்சனம்

“த்ரிஷ்யம்_3” படத்தின் இந்தி பதிப்பை வெளியிட தடை கோரி வழக்கு !

“த்ரிஷ்யம்_3” படத்தின் இந்தி பதிப்பை வெளியிட தடை கோரி வழக்கு !

நான்கு மாநில டிஜிட்டல் & தொலைக்காட்சி துறைகளை ஒருங்கிணைக்கும் முயற்சி !

நான்கு மாநில டிஜிட்டல் & தொலைக்காட்சி துறைகளை ஒருங்கிணைக்கும் முயற்சி !

“துரோகம் பழகு படத்தின் டீசர் வெளியீட்டு விழா !

“துரோகம் பழகு படத்தின் டீசர் வெளியீட்டு விழா !

25 மாவட்டங்கள், 2 ஆயிரம் ரசிகர்கள் ! நடிகர் சூர்யா தலைமையில் பிரமாண்டமான விழா !

25 மாவட்டங்கள், 2 ஆயிரம் ரசிகர்கள் ! நடிகர் சூர்யா தலைமையில் பிரமாண்டமான விழா !

மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள “மக்கள் காவலன்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள “மக்கள் காவலன்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“பூஜா மேரி ஜான்” திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ஜீ_5 ஹிந்தியில் வெளியாகிறது

“பூஜா மேரி ஜான்” திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ஜீ_5 ஹிந்தியில் வெளியாகிறது

சாதிய வன்மத்தை விதைக்கும் “தி கிராண்ட் மாஸ்டர்” ! படத்தின் விமர்சனம்

சாதிய வன்மத்தை விதைக்கும் “தி கிராண்ட் மாஸ்டர்” ! படத்தின் விமர்சனம்

“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“#LOVE” வெப் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“#LOVE” வெப் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“தாய்நிலம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

“தாய்நிலம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

தனுஷின் ( D_56 ) புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

தனுஷின் ( D_56 ) புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

“ஏழு கடல் ஏழு மலை” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“ஏழு கடல் ஏழு மலை” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“டோரதி” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“டோரதி” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“தி டார்க் ஹெவன்” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“தி டார்க் ஹெவன்” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

மர்மம், ரகசியங்கள் நிறைந்த “ஆக்டோபஸ்” தொடர் ஜீ_5 தமிழில் வெளியாகிறது

மர்மம், ரகசியங்கள் நிறைந்த “ஆக்டோபஸ்” தொடர் ஜீ_5 தமிழில் வெளியாகிறது

ரசிகர்களின் அமோக வரவேற்பில் “என்ன விலை” திரைப்படம் !

ரசிகர்களின் அமோக வரவேற்பில் “என்ன விலை” திரைப்படம் !

“நல்ல படம்” திரைப்படத்தின் விமர்சனம்

“நல்ல படம்” திரைப்படத்தின் விமர்சனம்

“துரோகம் பழகு” படக்குழுவினரை  பாராட்டிய முதலமைச்சர் !

“துரோகம் பழகு” படக்குழுவினரை  பாராட்டிய முதலமைச்சர் !

பா. ரஞ்சித்தின் “வேட்டுவம்” படத்தின் அறிமுக வீடியோ வெளியீடு !

பா. ரஞ்சித்தின் “வேட்டுவம்” படத்தின் அறிமுக வீடியோ வெளியீடு !

விஜய் சேதுபதியின் “பத்தா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

விஜய் சேதுபதியின் “பத்தா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

பறிபோன மானத்திற்கு “என்ன விலை” என்ன விலை படத்தின் விமர்சனம்

பறிபோன மானத்திற்கு “என்ன விலை” என்ன விலை படத்தின் விமர்சனம்

“மண்டாடி” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“மண்டாடி” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“கஸ்தூரி வீடு” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“கஸ்தூரி வீடு” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

பாவனா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் “பிக்னிக்” படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு !

பாவனா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் “பிக்னிக்” படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு !

துல்கர் சல்மானின் “ஆகாசம்லோ ஓக தாரா” (AOT) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

துல்கர் சல்மானின் “ஆகாசம்லோ ஓக தாரா” (AOT) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

எம்.எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி “எம்.எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்” படத்தின் துவக்க விழா !

எம்.எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி “எம்.எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்” படத்தின் துவக்க விழா !

அர்ஜூன் தாஸ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

அர்ஜூன் தாஸ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

“அன்பில் அவன்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

நானி நடிப்பில் உருவாகியுள்ள “தி பாரடைஸ்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

நானி நடிப்பில் உருவாகியுள்ள “தி பாரடைஸ்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“என்ன விலை” படம் மறக்க முடியாத அனுபவம் ! நிமிஷா சஜயன்

“என்ன விலை” படம் மறக்க முடியாத அனுபவம் ! நிமிஷா சஜயன்

தி டார்க் ஹெவன் படத்தின் முன் வெளியீட்டு விழா !

தி டார்க் ஹெவன் படத்தின் முன் வெளியீட்டு விழா !

“பனங்காட்டான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“பனங்காட்டான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

அரசியலும் சமூக அக்கறையும் சேர்ந்து உருவான படம் தான் “ஆகாயம்” ! தினந்தோறும் நாகராஜ்

அரசியலும் சமூக அக்கறையும் சேர்ந்து உருவான படம் தான் “ஆகாயம்” ! தினந்தோறும் நாகராஜ்

“என்ன விலை” படத்தில் நான் நடித்த கதாப்பாத்திரம் மிகவும் சவாலானது ! கருணாஸ்

“என்ன விலை” படத்தில் நான் நடித்த கதாப்பாத்திரம் மிகவும் சவாலானது ! கருணாஸ்

“என்ன விலை” படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியது எனக்கு கிடைத்த வரம் !

“என்ன விலை” படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியது எனக்கு கிடைத்த வரம் !

“மண்டாடி” மூலம் மாஸ் ஹீரோவான சூரி ! மண்டாடி விமர்சனம்

“மண்டாடி” மூலம் மாஸ் ஹீரோவான சூரி ! மண்டாடி விமர்சனம்

வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகியுள்ள “நல்லபடம்” செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியீடு !

வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகியுள்ள “நல்லபடம்” செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியீடு !

சூர்யா நடித்துள்ள “சீன்” ( SCENE ) படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு !

சூர்யா நடித்துள்ள “சீன்” ( SCENE ) படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு !

“என்ன விலை” படத்தில் நடித்தது மிகவும் சவாலாக இருந்தது ! நடிகை ஷாஷா சிவக்குமார்

“என்ன விலை” படத்தில் நடித்தது மிகவும் சவாலாக இருந்தது ! நடிகை ஷாஷா சிவக்குமார்

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

அசோக் செல்வன் நடித்துள்ள “அன்பில் அவன்” வெளியீட்டு தேதி அறிவிப்பு !

அசோக் செல்வன் நடித்துள்ள “அன்பில் அவன்” வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“வதந்தி சீசன்_2” பற்றி மெய்சிலிர்க்கும் நடிகர் !

“வதந்தி சீசன்_2” பற்றி மெய்சிலிர்க்கும் நடிகர் !

“என்ன விலை” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“என்ன விலை” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

திரைப்பிரபலங்களுக்கு புதிய தீர்ப்பை பெற்றுத்தந்துள்ள நடிகை !

திரைப்பிரபலங்களுக்கு புதிய தீர்ப்பை பெற்றுத்தந்துள்ள நடிகை !

“வைல்ட் தமிழ்நாடு” இன்று முதல் பிவிஆர் திரையரங்குகளில் வெளியீடு !

“வைல்ட் தமிழ்நாடு” இன்று முதல் பிவிஆர் திரையரங்குகளில் வெளியீடு !

“மொத ராத்திரி” படக்குழுவினரின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“மொத ராத்திரி” படக்குழுவினரின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

கமல்ஹாசனின் புதிய படத்தின் “புகைப்படம்” சமூக வலைதளங்களில் வைரல் !

கமல்ஹாசனின் புதிய படத்தின் “புகைப்படம்” சமூக வலைதளங்களில் வைரல் !

நயன்தாராவின் “ஹாய்” படத்தின் விமர்சனம் !

நயன்தாராவின் “ஹாய்” படத்தின் விமர்சனம் !

மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க அலட்சியப்படுத்தும் அரசு அதிகாரிகள் ! நரிக்குறவர் இன மக்களின் போராட்டத்திற்கு தீர்வு எப்போது ?.!

மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க அலட்சியப்படுத்தும் அரசு அதிகாரிகள் ! நரிக்குறவர் இன மக்களின் போராட்டத்திற்கு தீர்வு எப்போது ?.!

“ஒன்ஸ்மோர்” படத்தின் திரைவிமர்சனம்

“ஒன்ஸ்மோர்” படத்தின் திரைவிமர்சனம்

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் மரணம் ! சோகத்தில் கிராம மக்கள் !

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் மரணம் ! சோகத்தில் கிராம மக்கள் !

தந்தை கொலை, பழிவாங்க துடிக்கும் மகள் ! “அமரம்” படத்தின் விமர்சனம்

தந்தை கொலை, பழிவாங்க துடிக்கும் மகள் ! “அமரம்” படத்தின் விமர்சனம்

திருப்பூரில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி தெருநாய்கள் கொடூர கொலை !

திருப்பூரில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி தெருநாய்கள் கொடூர கொலை !

தந்தை, மகன் உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் “ஃபாதர்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

தந்தை, மகன் உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் “ஃபாதர்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

“டாக்ஸிக்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“டாக்ஸிக்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

200 கோடி வசூல் சாதனை படைத்த “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம்

200 கோடி வசூல் சாதனை படைத்த “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம்

“ஒன்ஸ்மோர்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“ஒன்ஸ்மோர்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம் ! தெளிவில்லாத முதல்வரின் அறிவிப்பு !

கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம் ! தெளிவில்லாத முதல்வரின் அறிவிப்பு !

“Yourbackers play” உலகின் லாப நோக்கமற்ற OTT தளம் அறிமுகம் !

“Yourbackers play” உலகின் லாப நோக்கமற்ற OTT தளம் அறிமுகம் !

“இருமுடி கட்டு” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“இருமுடி கட்டு” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குரு சங்கருக்கு கொலை மிரட்டல் !

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குரு சங்கருக்கு கொலை மிரட்டல் !

“ஹலோ மிஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“ஹலோ மிஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

பழனி அருகே “தார் & டீசல்” திருட்டு ! புகார்தாரரை மிரட்டும் காவல் ஆய்வாளர் !.?

பழனி அருகே “தார் & டீசல்” திருட்டு ! புகார்தாரரை மிரட்டும் காவல் ஆய்வாளர் !.?

“அன்பில் அவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு !

“அன்பில் அவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு !

“ஐ ம் கேம்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“ஐ ம் கேம்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“பியார் பிரேமா கல்யாணம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“பியார் பிரேமா கல்யாணம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“பத்தா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“பத்தா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் டிரெய்லருக்கு அமோக வரவேற்பு !

டாக்ஸிக் படத்தின் டிரெய்லருக்கு அமோக வரவேற்பு !

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு !

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“வதந்தி சீசன் 2” குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“வதந்தி சீசன் 2” குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட “பியார் பிரேமா கல்யாணம்” தொடரின் முன்னோட்டம் !

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட “பியார் பிரேமா கல்யாணம்” தொடரின் முன்னோட்டம் !