“#LOVE” வெப் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்ற, பாலாஜி மோகன் இயக்கத்தில் நவீன காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள  ‘#Love’ வெப் சீரிஸின் டிரெய்லர்  வெளியிடப்பட்டது.

அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் தொடர், இன்றைய டிஜிட்டல் உலகில் காதல், டேட்டிங், உறவுகள் மற்றும் உணர்வுகள் எப்படி மாறியிருக்கின்றன என்பதை நகைச்சுவையுடனும் உணர்வுப்பூர்வமாகவும் பேசுகிறது.

சென்னையில் நடைபெற்ற ‘#Love’ தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டு தொடரைப் பற்றிய தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

இந்நிகழ்வினில், நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மோனிகா ஸ்ரீவாஸ்தவ் பேசியதாவது..,
நெட்ஃப்ளிக்ஸின் முதல் தமிழ் காதல் டிராமா தொடராக ‘#Love’ உருவாகியுள்ளது. தென்னிந்தியக் கதைகளில் நெட்ஃப்ளிக்ஸ் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக தமிழ் படைப்புகளில் வித்தியாசமான கதைக்களங்கள், தனித்துவமான குரல்கள் மற்றும் புதிய அணுகுமுறைகளை வழங்க விரும்புகிறோம். அந்த வகையில் ‘#Love’ காதல் கதையை நவீனமான மற்றும் விளையாட்டுத்தனமான பார்வையில் சொல்லும் படைப்பாக அமைந்துள்ளது.

‘#Love’ தொடரில் இரண்டு போட்டியாளர்களான டேட்டிங் ஆப் நிறுவனர்கள் இடம்பெறுகின்றனர். ஒருவர் காதல் என்பது பொருத்தத்தை அடிப்படையாகக் கொண்டது என நம்புகிறார்; மற்றொருவர் கெமிஸ்ட்ரிதான் முக்கியம் என்கிறார். தங்களது கருத்து சரி என்பதை நிரூபிக்க இருவரும் போட்டியில் இறங்கும் நிலையில், காதல் அவர்களது திட்டங்களையே மாற்றுகிறது. டேட்டிங் ஆப்களை பயன்படுத்தியிருக்கிறோமா இல்லையா என்பதைத் தாண்டி, காதல் குறித்த நம்முடைய எண்ணங்களை சில நேரங்களில் காதலே மாற்றிவிடும் என்பதை இந்தத் தொடர் பேசுகிறது.
இந்தத் தொடரை உருவாக்கிய இயக்குநர் பாலாஜி மோகன், அன்றாட உறவுகளில் இருக்கும் உண்மையான விஷயங்களை தனக்கே உரிய நகைச்சுவையான பார்வையில் சொல்லும் திறமை கொண்டவர்.

ஷோ-ரன்னரும் தயாரிப்பாளருமான சௌந்தர்யா ரஜினிகாந்த், ஆரம்பம் முதலே தெளிவான பார்வையுடன் ‘#Love’ தொடரின் உலகத்தை உருவாக்கியுள்ளார். எழுத்தாளர் நிர்மல் வில்லியம்ஸ், இணை எழுத்தாளர்கள் ஷரதா சுப்ரமணியன், ஸ்வேதா சக்ரவர்த்தி, இசையமைப்பாளர் ஷான் ரோல்டன், எடிட்டர்கள் சாய் முத்துராமன், சிவா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி.

மேத்யூ மற்றும் தாரா கதாபாத்திரங்களில் நடித்துள்ள அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோரின் கெமிஸ்ட்ரி இந்தத் தொடரின் முக்கிய பலமாக அமைந்துள்ளது. ஒவ்வொரு முறையும் பார்வையாளர்களுக்கு வித்தியாசமான உலகம் மற்றும் உணர்வை வழங்க வேண்டும் என்பதே நெட்ஃப்ளிக்ஸின் நோக்கம் என்றும், அந்த வகையில் ‘Love’ சமகால இளைஞர்களின் காதல் மற்றும் உறவுகளை பிரதிபலிக்கும் படைப்பாக இருக்கும் என்றார்.

ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ள சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசியதாவது,
என்னை நம்பி இந்தக் கதையை வழங்கிய நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்கும், குறிப்பாக மோனிகாவுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மும்பையில் ‘#Love’ தொடருக்கான வாசிப்பு நிகழ்வு நடைபெற்றபோது அவருடன் இருந்த அனுபவம் எனக்கு மிகவும் சிறப்பானது. என்னை ஒரு சிறந்த தயாரிப்பாளராகவும், சிறந்த கதை சொல்லியாகவும் உருவாக அவர் அளித்த உத்வேகம் மறக்க முடியாதது.

நான் அதிகமான விஷயங்களால் எளிதில் வியப்படைவதில்லை. ஏனென்றால், நான் தலைவரின் மகள். அனைவராலும் போற்றப்படும் ஒருவருடன் வாழும்போது, மற்றவர்களைப் பார்த்து வியக்கும் பழக்கம் குறைந்துவிடும். ஆனால் மோனிகா என்னை மிகவும் வியக்க வைத்தவர். அவர் ஒரு சிறந்த தலைவர், மிகப்பெரிய உத்வேகம் தருபவர். நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்திற்காக தயாரிப்பாளராகவும் ஷோ-ரன்னராகவும் பணியாற்றும் வாய்ப்பை வழங்கியதற்கு அவருக்கு நன்றி. அதேபோல், ஒவ்வொரு கட்டத்திலும் என்னுடன் பயணித்த அபிஷேக் மற்றும் சுதான்ஷு ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நெட்ஃப்ளிக்ஸ் ஒரிஜினல் தொடரின் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பது எனக்கு மிகப்பெரிய பொறுப்பு. ‘ஸ்பைடர்மேன்’ படத்தில் வரும் ‘With great power comes great responsibility’ என்ற வசனம் உண்மைதான். ஒரு கதையை ஆரம்பத்திலிருந்து இறுதிக்கட்டம் வரை கொண்டு செல்வது என்னுடைய பொறுப்பாக மாறியது. அந்தப் பயணத்தில் பல கடினமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. எடுத்த முடிவுகளில் உறுதியாக இருப்பதோடு, தேவையான நேரத்தில் அவற்றை மாற்றிக்கொள்ளவும் கற்றுக்கொண்டேன்.

இறுதியில், இந்தத் தொடரை நாங்கள் நினைத்த இடத்திற்கு சரியாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் எங்களது ஒரே நோக்கமாக இருந்தது. இந்தப் பயணத்தில் நான் கற்றுக்கொண்ட மிகப்பெரிய விஷயம், முடிவுகளை எடுப்பது கடினமாக இருந்தாலும், சரியான நேரத்தில் அந்த முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதுதான். ‘#Love’ தொடரின் டிரெய்லரையும், தொடர்ந்து முழுத் தொடரையும் ரசிகர்கள் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.

இயக்குநர் பாலாஜி மோகன் பேசியதாவது.., காதல் என்பது உலகில் யாராலும் முழுமையாக புரிந்துகொள்ள முடியாத ஒரு விஷயம். அதனால்தான் நான் மீண்டும் மீண்டும் காதலைப் பற்றி கதைகள் சொல்லி வருகிறேன். ஆண்கள் பெண்களைப் பற்றியும், பெண்கள் ஆண்களைப் பற்றியும் தெரிந்துகொள்வது என்பது பல தலைமுறைகளாக தொடர்ந்து கொண்டிருக்கும் ஒரு பயணம். இன்னும் பல ஆண்டுகள் சென்றாலும் காதலை முழுமையாக புரிந்துகொள்ள முடியாது என்பதுதான் அதன் சிறப்பு.

காதலைப் பற்றி எனக்கு எல்லாம் தெரியும் என்பதற்காக நான் தொடர்ந்து அதைப் பற்றி பேசவில்லை. உண்மையில், எனக்கும் காதலைப் பற்றி முழுமையாக எதுவும் தெரியாது. மற்ற அனைவரையும் போலவே நானும் தொடர்ந்து அதை புரிந்துகொள்ள முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அதுதான் காதலை எப்போதும் சுவாரஸ்யமாகவும், புதுமையாகவும் வைத்திருக்கிறது. அதனால்தான் காதல் கதைகளை தொடர்ந்து திரையில் சொல்ல வேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருக்கிறது.

என்னுடைய படைப்புகளைப் பார்த்து ரசிகர்கள் காதல் குறித்து பல விஷயங்களை கற்றுக்கொள்கிறார்கள் என்று கூறுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. அதே நேரத்தில், திரைப்படங்களில் வரும் காதல் கதைகளைப் பார்த்து நிஜ வாழ்க்கையிலும் அதேபோன்ற எதிர்பார்ப்புகளை உருவாக்கிக் கொள்ளக்கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன். முடிந்தவரை என்னுடைய கதைகளை நிஜ வாழ்க்கைக்கு நெருக்கமாகவும், அதே நேரத்தில் பார்வையாளர்கள் கனவு காணவும், தங்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்கவும் முடியும் வகையிலும் உருவாக்க முயற்சிக்கிறேன்.

அந்த வகையில்தான் ‘Love’ தொடரையும் உருவாக்கியுள்ளோம். காதலைப் பற்றிய சில கனவுகளையும், நிஜ வாழ்க்கைக்கு நெருக்கமான உணர்வுகளையும் இணைத்து இந்தக் கதையை சொல்ல முயற்சித்திருக்கிறோம். பார்வையாளர்கள் இந்தத் தொடரைப் பார்க்கும்போது தங்களது அனுபவங்களுடன் தொடர்புபடுத்திப் பார்க்க முடியும் என்று நம்புகிறேன் என்றார்,

தொடர்ந்து, ‘#Love’ தொடரில் காதலுக்கு கெமிஸ்ட்ரியா அல்லது காம்பாட்டிபிலிட்டியா முக்கியம் என்ற தலைப்பில் இருவரிடமும் கேள்விகள் கேட்கப்பட்டன. எது கெமிஸ்ட்ரி, எது காம்பாட்டிபிலிட்டி என இருவரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். குறிப்பாக நல்ல முத்தம் குறித்து கேட்கப்பட்டபோது, கெமிஸ்ட்ரியும் காம்பாட்டிபிலிட்டியும் இரண்டுமே முக்கியம் என்று இருவரும் தெரிவித்தனர்.

நிஜ வாழ்க்கையில் காதலுக்கு இரண்டில் எது முக்கியம் என்று கேட்டபோது, அர்ஜுன் தாஸ் காம்பாட்டிபிலிட்டிதான் முக்கியம் என்றார். கெமிஸ்ட்ரி சில காலம் மட்டுமே நீடிக்கலாம்; அதன் பிறகு உறவு தொடர காம்பாட்டிபிலிட்டி அவசியம் என்ற கருத்தை அவர் தெரிவித்தார். அதே நேரத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, “கெமிஸ்ட்ரிதான் முதலில் உருவாகி, அதன் மூலம் காம்பாட்டிபிலிட்டியை நோக்கி உறவு செல்லும்” என்று தனது கருத்தைப் பகிர்ந்துகொண்டார். இருவரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். குறிப்பாக நல்ல முத்தம் குறித்து கேட்கப்பட்டபோது, கெமிஸ்ட்ரியும் காம்பாட்டிபிலிட்டியும் இரண்டுமே முக்கியம் என்று இருவரும் தெரிவித்தனர்.

இன்றைய காலகட்டத்தில் காதல் என்பது நேரில் சந்தித்து தொடங்குவதைத் தாண்டி, டேட்டிங் ஆப்களில் ஸ்வைப், மேட்ச், மெசேஜ் என டிஜிட்டல் உலகத்திலேயே ஆரம்பிக்கும் சூழல் உருவாகியுள்ளது. இந்த நவீன காதல் மற்றும் உறவுகளின் மாற்றத்தை மையமாக வைத்தே ‘Love’ தொடர் உருவாகியுள்ளது.

dhamaraimurasu

dhamaraimurasu

dhamaraimurasu admin

Related Posts

“பூஜா மேரி ஜான்” திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ஜீ_5 ஹிந்தியில் வெளியாகிறது

ஒவ்வொரு கதையும் எளிதான பதில்களை வழங்குவதற்காக உருவாக்கப்படுவதில்லை. சில கதைகள் நம்மை அசௌகரியத்திற்கு உள்ளாக்கி, நாம் ஏற்றுக்கொள்வதை கேள்விக்குள்ளாக்கி, நாம் பார்க்காமல் தவிர்க்க விரும்பும் உண்மைகளை எதிர்கொள்ள வைக்கின்றன. Navjot Gulati இயக்கத்தில், Dinesh Vijan மற்றும் Amar Kaushik தயாரிப்பில்,…

Read more

மர்மம், ரகசியங்கள் நிறைந்த “ஆக்டோபஸ்” தொடர் ஜீ_5 தமிழில் வெளியாகிறது

பல்வேறு வகைகளில் சிறப்பான பிராந்தியக் கதைகளை வழங்கி, Original Series பிரிவில் தனக்கென ஒரு தனித்துவமான இடத்தை உருவாக்கி வரும் Tamil Zee 5, தற்போது ‘Octopus’ எனும் பரபரப்பான Suspense Thriller தொடரை பார்வையாளர்களிடம் கொண்டு வரத் தயாராகியுள்ளது. வழக்கமான…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்கத்தவறிய செய்திகள்

“E 1” படத்தின் விமர்சனம்

“E 1” படத்தின் விமர்சனம்

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழாவில் 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழாவில் 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழா ! ஓவியர் ஜீவானந்தனுக்கு 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழா ! ஓவியர் ஜீவானந்தனுக்கு 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு 13.78 லட்சம் நிதியுதவி !

கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் “ஊர் கூடும் இரவு” ஆவணப்படம் !

கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் “ஊர் கூடும் இரவு” ஆவணப்படம் !

“ஆல்பாஸ்” விமர்சனம்

“ஆல்பாஸ்” விமர்சனம்

“தாய்நிலம்” விமர்சனம்

“தாய்நிலம்” விமர்சனம்

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

அதிமுகவின் பலவீனமா ? த.வெ.க வினரின் மோசடியா ?

அதிமுகவின் பலவீனமா ? த.வெ.க வினரின் மோசடியா ?

“அமெரிக்க ஆவி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“அமெரிக்க ஆவி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

அட்லான்டா இந்தியத் திரைப்பட விழாவில் “என்ன விலை” படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது !

அட்லான்டா இந்தியத் திரைப்பட விழாவில் “என்ன விலை” படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது !

நலிவுற்ற திருநங்கைகளுங்கு நிதியுதவி வழங்கிய “டோரதி” படக்குழு !

நலிவுற்ற திருநங்கைகளுங்கு நிதியுதவி வழங்கிய “டோரதி” படக்குழு !

“அன்பில் அவன் படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“அன்பில் அவன் படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“பத்தா” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“பத்தா” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

நாள்தோறும் நற்பணி ! ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன்

நாள்தோறும் நற்பணி ! ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன்

“ஒட்டாரம்” திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு !

“ஒட்டாரம்” திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு !

“சிக்மா” படத்தில் அறிமுகமானது எனக்கு பெருமை ! நடிகை ஃபரியா அப்துல்லா

“சிக்மா” படத்தில் அறிமுகமானது எனக்கு பெருமை ! நடிகை ஃபரியா அப்துல்லா

“அன்பில் அவன்” படத்தின் விமர்சனம்

“அன்பில் அவன்” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த நடிகர் !

“சிக்மா” படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த நடிகர் !

“பத்தா” படத்தின் விமர்சனம்

“பத்தா” படத்தின் விமர்சனம்

இயக்கமா ? நடிப்பா ? “சிக்மா” இயக்குநர் பேட்டி !

இயக்கமா ? நடிப்பா ? “சிக்மா” இயக்குநர் பேட்டி !

கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான் “சிக்மா” – இயக்குநர் சஞ்சய்

கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான் “சிக்மா” – இயக்குநர் சஞ்சய்

“தி டார்க் ஹெவன் படத்தின் வெற்றிக்கு, சொந்த ஊரில் விழா எடுத்த இயக்குநர் !

“தி டார்க் ஹெவன் படத்தின் வெற்றிக்கு, சொந்த ஊரில் விழா எடுத்த இயக்குநர் !

தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய பிரபல நடிகரின் மனைவி !

தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய பிரபல நடிகரின் மனைவி !

“கோல்டன் பாக்கியம்” டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு !

“கோல்டன் பாக்கியம்” டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு !

“கிட்டி” படத்தின் விமர்சனம்

“கிட்டி” படத்தின் விமர்சனம்

“த்ரிஷ்யம்_3” படத்தின் இந்தி பதிப்பை வெளியிட தடை கோரி வழக்கு !

“த்ரிஷ்யம்_3” படத்தின் இந்தி பதிப்பை வெளியிட தடை கோரி வழக்கு !

நான்கு மாநில டிஜிட்டல் & தொலைக்காட்சி துறைகளை ஒருங்கிணைக்கும் முயற்சி !

நான்கு மாநில டிஜிட்டல் & தொலைக்காட்சி துறைகளை ஒருங்கிணைக்கும் முயற்சி !

“துரோகம் பழகு படத்தின் டீசர் வெளியீட்டு விழா !

“துரோகம் பழகு படத்தின் டீசர் வெளியீட்டு விழா !

25 மாவட்டங்கள், 2 ஆயிரம் ரசிகர்கள் ! நடிகர் சூர்யா தலைமையில் பிரமாண்டமான விழா !

25 மாவட்டங்கள், 2 ஆயிரம் ரசிகர்கள் ! நடிகர் சூர்யா தலைமையில் பிரமாண்டமான விழா !

மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள “மக்கள் காவலன்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள “மக்கள் காவலன்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“பூஜா மேரி ஜான்” திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ஜீ_5 ஹிந்தியில் வெளியாகிறது

“பூஜா மேரி ஜான்” திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ஜீ_5 ஹிந்தியில் வெளியாகிறது

சாதிய வன்மத்தை விதைக்கும் “தி கிராண்ட் மாஸ்டர்” ! படத்தின் விமர்சனம்

சாதிய வன்மத்தை விதைக்கும் “தி கிராண்ட் மாஸ்டர்” ! படத்தின் விமர்சனம்

“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“#LOVE” வெப் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“#LOVE” வெப் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“தாய்நிலம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

“தாய்நிலம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

தனுஷின் ( D_56 ) புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

தனுஷின் ( D_56 ) புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

“ஏழு கடல் ஏழு மலை” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“ஏழு கடல் ஏழு மலை” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“டோரதி” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“டோரதி” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“தி டார்க் ஹெவன்” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“தி டார்க் ஹெவன்” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

மர்மம், ரகசியங்கள் நிறைந்த “ஆக்டோபஸ்” தொடர் ஜீ_5 தமிழில் வெளியாகிறது

மர்மம், ரகசியங்கள் நிறைந்த “ஆக்டோபஸ்” தொடர் ஜீ_5 தமிழில் வெளியாகிறது

ரசிகர்களின் அமோக வரவேற்பில் “என்ன விலை” திரைப்படம் !

ரசிகர்களின் அமோக வரவேற்பில் “என்ன விலை” திரைப்படம் !

“நல்ல படம்” திரைப்படத்தின் விமர்சனம்

“நல்ல படம்” திரைப்படத்தின் விமர்சனம்

“துரோகம் பழகு” படக்குழுவினரை  பாராட்டிய முதலமைச்சர் !

“துரோகம் பழகு” படக்குழுவினரை  பாராட்டிய முதலமைச்சர் !

பா. ரஞ்சித்தின் “வேட்டுவம்” படத்தின் அறிமுக வீடியோ வெளியீடு !

பா. ரஞ்சித்தின் “வேட்டுவம்” படத்தின் அறிமுக வீடியோ வெளியீடு !

விஜய் சேதுபதியின் “பத்தா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

விஜய் சேதுபதியின் “பத்தா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

பறிபோன மானத்திற்கு “என்ன விலை” என்ன விலை படத்தின் விமர்சனம்

பறிபோன மானத்திற்கு “என்ன விலை” என்ன விலை படத்தின் விமர்சனம்

“மண்டாடி” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“மண்டாடி” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“கஸ்தூரி வீடு” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“கஸ்தூரி வீடு” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

பாவனா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் “பிக்னிக்” படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு !

பாவனா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் “பிக்னிக்” படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு !

துல்கர் சல்மானின் “ஆகாசம்லோ ஓக தாரா” (AOT) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

துல்கர் சல்மானின் “ஆகாசம்லோ ஓக தாரா” (AOT) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

எம்.எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி “எம்.எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்” படத்தின் துவக்க விழா !

எம்.எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி “எம்.எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்” படத்தின் துவக்க விழா !

அர்ஜூன் தாஸ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

அர்ஜூன் தாஸ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

“அன்பில் அவன்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

நானி நடிப்பில் உருவாகியுள்ள “தி பாரடைஸ்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

நானி நடிப்பில் உருவாகியுள்ள “தி பாரடைஸ்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“என்ன விலை” படம் மறக்க முடியாத அனுபவம் ! நிமிஷா சஜயன்

“என்ன விலை” படம் மறக்க முடியாத அனுபவம் ! நிமிஷா சஜயன்

தி டார்க் ஹெவன் படத்தின் முன் வெளியீட்டு விழா !

தி டார்க் ஹெவன் படத்தின் முன் வெளியீட்டு விழா !

“பனங்காட்டான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“பனங்காட்டான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

அரசியலும் சமூக அக்கறையும் சேர்ந்து உருவான படம் தான் “ஆகாயம்” ! தினந்தோறும் நாகராஜ்

அரசியலும் சமூக அக்கறையும் சேர்ந்து உருவான படம் தான் “ஆகாயம்” ! தினந்தோறும் நாகராஜ்

“என்ன விலை” படத்தில் நான் நடித்த கதாப்பாத்திரம் மிகவும் சவாலானது ! கருணாஸ்

“என்ன விலை” படத்தில் நான் நடித்த கதாப்பாத்திரம் மிகவும் சவாலானது ! கருணாஸ்

“என்ன விலை” படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியது எனக்கு கிடைத்த வரம் !

“என்ன விலை” படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியது எனக்கு கிடைத்த வரம் !

“மண்டாடி” மூலம் மாஸ் ஹீரோவான சூரி ! மண்டாடி விமர்சனம்

“மண்டாடி” மூலம் மாஸ் ஹீரோவான சூரி ! மண்டாடி விமர்சனம்

வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகியுள்ள “நல்லபடம்” செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியீடு !

வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகியுள்ள “நல்லபடம்” செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியீடு !

சூர்யா நடித்துள்ள “சீன்” ( SCENE ) படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு !

சூர்யா நடித்துள்ள “சீன்” ( SCENE ) படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு !

“என்ன விலை” படத்தில் நடித்தது மிகவும் சவாலாக இருந்தது ! நடிகை ஷாஷா சிவக்குமார்

“என்ன விலை” படத்தில் நடித்தது மிகவும் சவாலாக இருந்தது ! நடிகை ஷாஷா சிவக்குமார்

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

அசோக் செல்வன் நடித்துள்ள “அன்பில் அவன்” வெளியீட்டு தேதி அறிவிப்பு !

அசோக் செல்வன் நடித்துள்ள “அன்பில் அவன்” வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“வதந்தி சீசன்_2” பற்றி மெய்சிலிர்க்கும் நடிகர் !

“வதந்தி சீசன்_2” பற்றி மெய்சிலிர்க்கும் நடிகர் !

“என்ன விலை” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“என்ன விலை” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

திரைப்பிரபலங்களுக்கு புதிய தீர்ப்பை பெற்றுத்தந்துள்ள நடிகை !

திரைப்பிரபலங்களுக்கு புதிய தீர்ப்பை பெற்றுத்தந்துள்ள நடிகை !

“வைல்ட் தமிழ்நாடு” இன்று முதல் பிவிஆர் திரையரங்குகளில் வெளியீடு !

“வைல்ட் தமிழ்நாடு” இன்று முதல் பிவிஆர் திரையரங்குகளில் வெளியீடு !

“மொத ராத்திரி” படக்குழுவினரின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“மொத ராத்திரி” படக்குழுவினரின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

கமல்ஹாசனின் புதிய படத்தின் “புகைப்படம்” சமூக வலைதளங்களில் வைரல் !

கமல்ஹாசனின் புதிய படத்தின் “புகைப்படம்” சமூக வலைதளங்களில் வைரல் !

நயன்தாராவின் “ஹாய்” படத்தின் விமர்சனம் !

நயன்தாராவின் “ஹாய்” படத்தின் விமர்சனம் !

மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க அலட்சியப்படுத்தும் அரசு அதிகாரிகள் ! நரிக்குறவர் இன மக்களின் போராட்டத்திற்கு தீர்வு எப்போது ?.!

மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க அலட்சியப்படுத்தும் அரசு அதிகாரிகள் ! நரிக்குறவர் இன மக்களின் போராட்டத்திற்கு தீர்வு எப்போது ?.!

“ஒன்ஸ்மோர்” படத்தின் திரைவிமர்சனம்

“ஒன்ஸ்மோர்” படத்தின் திரைவிமர்சனம்

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் மரணம் ! சோகத்தில் கிராம மக்கள் !

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் மரணம் ! சோகத்தில் கிராம மக்கள் !

தந்தை கொலை, பழிவாங்க துடிக்கும் மகள் ! “அமரம்” படத்தின் விமர்சனம்

தந்தை கொலை, பழிவாங்க துடிக்கும் மகள் ! “அமரம்” படத்தின் விமர்சனம்

திருப்பூரில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி தெருநாய்கள் கொடூர கொலை !

திருப்பூரில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி தெருநாய்கள் கொடூர கொலை !

தந்தை, மகன் உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் “ஃபாதர்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

தந்தை, மகன் உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் “ஃபாதர்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

“டாக்ஸிக்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“டாக்ஸிக்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

200 கோடி வசூல் சாதனை படைத்த “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம்

200 கோடி வசூல் சாதனை படைத்த “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம்

“ஒன்ஸ்மோர்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“ஒன்ஸ்மோர்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம் ! தெளிவில்லாத முதல்வரின் அறிவிப்பு !

கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம் ! தெளிவில்லாத முதல்வரின் அறிவிப்பு !

“Yourbackers play” உலகின் லாப நோக்கமற்ற OTT தளம் அறிமுகம் !

“Yourbackers play” உலகின் லாப நோக்கமற்ற OTT தளம் அறிமுகம் !

“இருமுடி கட்டு” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“இருமுடி கட்டு” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குரு சங்கருக்கு கொலை மிரட்டல் !

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குரு சங்கருக்கு கொலை மிரட்டல் !

“ஹலோ மிஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“ஹலோ மிஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

பழனி அருகே “தார் & டீசல்” திருட்டு ! புகார்தாரரை மிரட்டும் காவல் ஆய்வாளர் !.?

பழனி அருகே “தார் & டீசல்” திருட்டு ! புகார்தாரரை மிரட்டும் காவல் ஆய்வாளர் !.?

“அன்பில் அவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு !

“அன்பில் அவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு !

“ஐ ம் கேம்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“ஐ ம் கேம்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“பியார் பிரேமா கல்யாணம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“பியார் பிரேமா கல்யாணம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“பத்தா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“பத்தா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் டிரெய்லருக்கு அமோக வரவேற்பு !

டாக்ஸிக் படத்தின் டிரெய்லருக்கு அமோக வரவேற்பு !

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு !

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“வதந்தி சீசன் 2” குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“வதந்தி சீசன் 2” குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட “பியார் பிரேமா கல்யாணம்” தொடரின் முன்னோட்டம் !

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட “பியார் பிரேமா கல்யாணம்” தொடரின் முன்னோட்டம் !