“வதந்தி சீசன் 2” குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் ஏழாம் தேதி முதல் வால்வாட்சர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் புஷ்கர், காயத்ரி தயாரிப்பில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் சசிகுமார் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் “வதந்தி சீசன்_2” தி மிஸ்டரி ஆஃப் மணி’ எனும் இணைய தொடரை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

இந்த சந்திப்பில் சசிகுமாருடன் யஷ்வந்த், அனகா மருதோரா, அபர்ணா தாஸ், விவேக் பிரசன்னா, ரேவதி சர்மா, அர்ஜுன் நந்தகுமார், இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ், தயாரிப்பாளர்கள் புஷ்கர், காயத்ரி, இசையமைப்பாளர் சிமோன் கே. கிங் மற்றும் பிரைம் வீடியோ உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

தயாரிப்பாளர்கள் புஷ்கர், காயத்ரி பேசுகையில், இந்த இணைய தொடர் மிக சிறப்பாக உருவாகி இருக்கிறது. இதைப்பற்றி நாங்களே பெருமிதமாக பேசக்கூடாது. இயக்குநர் ஆண்ட்ரூஸ், ‘ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது என பணியாற்றும் ஒரு கடமை தவறாத மூசா ராசா என்ற காவல்துறை அதிகாரியை பற்றிய கதையை சொன்னவுடன் எங்களுக்கு பிடித்தது. அதிலும் அந்த கதாபாத்திரத்தில் சசிகுமார் நடிக்கிறார் என்றவுடன், அவருக்கு ஏற்றார் போல் கதையை எழுதியது போல் இருந்தது. மேலும் இந்த இணைய தொடரில் ஏராளமான புது இளம் திறமைசாலிகள் அறிமுகமாகி இருக்கிறார்கள். அமேசான் ப்ரைம் வீடியோவின் ஆதரவு எப்போதும் போல் மிகச் சிறப்பானதாக இருந்தது. இந்தத் தொடரும் அனைத்து தரப்பு ரசிகர்களையும் மிகவும் கவரும்.

வதந்தி சீசன் 1 கதையை இயக்குநர் ஆண்ட்ரஸ் எழுதிக் கொண்டிருக்கும்போதே, சீசன் 2 விற்கான ஐடியாவை அவர் வைத்திருந்தார். சீசன் 1, ஒரு கதையாக இருக்க வேண்டும். ஒரு க்ரைம் இருக்க வேண்டும். ஒரு ஊரில் நடந்திட வேண்டும். சீசன் 2 வேறொரு க்ரைம். அதனை மதுரை பின்னணியில் சொல்லலாம் என சொன்னார். இதுதான் எங்களுக்கு முதல் இன்ப அதிர்ச்சியாக இருந்தது. இயக்குநர் ஆண்ட்ரூஸ் மதுரையை சேர்ந்தவர் அல்ல. இருந்தாலும் அந்த கதைக்களத்தை பற்றி நன்றாக தெரிந்து கொள்வதற்காக பல மாதங்கள் மதுரையில் தங்கி மக்களுடன் கலந்து வாழ்ந்தார். அவர்களுடைய நடவடிக்கைகளை ஆய்வு செய்து அதற்குப் பிறகு திரைக்கதையை இறுதி செய்தார். இதுவும் எங்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது. இதை திரையில் அவர் சின்ன சின்ன விசயங்கள் மூலம் விவரித்திருக்கிறார். அப்போதுதான் பார்வையாளர்களால் மூஸா ராசா எனும் கதாபாத்திரத்துடன் எளிதாக பயணிக்க முடியும்.

மூஸா ராசா என்ற கதாபாத்திரத்தை எழுதி முடித்துவிட்டு, இதற்காக சசிகுமாரிடம் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று சொன்னதும் எனக்கும் கூடுதல் சந்தோஷத்தை கொடுத்தது. நாங்கள் இருவரும் சசிகுமாரின் ‘சுப்ரமணியபுரம் ‘ படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து வெகுவாக கொண்டாடினோம். அது முதல் சசிக்குமாருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது.

மதுரை பின்னணி, சசிகுமார் நடிக்கிறார், ஆனால் ஒரு அருவாள் இல்லை, கத்தியில்லை, ரத்தம் இல்லை என்று தான் முதலில் தோன்றியது. ஆனால் சசிகுமாரிடம் நீங்கள் சில நிமிடங்கள் பேசினாலே அவர் மூஸா ராசா என்ற கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் என்பது தெரியவரும். அவ்வளவு அன்பானவர். அடக்கமானவர். அதிர்ந்தும் பேசாதவர்.

வதந்தி சீசன் 2 படத்தின் பணிகளை தொடங்கிய தருணத்திலிருந்து ஒவ்வொரு விசயமும் எங்களை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருந்தது. கதையாகட்டும், கதாபாத்திரங்கள் ஆகட்டும், இசையாகட்டும் ஒவ்வொரு விசயமும் எங்களுக்கு சந்தோஷத்தை கொடுத்தது.

வதந்தி சீசன் 1 க்கு பிறகு, சீசன் 2 விற்கு இயக்குநர் ஆண்ட்ரூஸ் திரைக்கதையை எழுத நிறைய நேரம் எடுத்துக்கொண்டார். சீசன் 2 விற்காக அவர் எழுதி நிறைவு செய்த மூன்றாவது கதை தான் இது. அதனால் தான் வதந்தி சீசன் 1 வெளியாகி, 4 ஆண்டுகளுக்குப் பிறகு சீசன் 2 வெளியாக உள்ளது என்றனர்.

இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் பேசுகையில், வதந்தி சீசன் 1 ஒரு ஆர்கானிக் சக்சஸ். அதற்குப் பிறகு வதந்தி சீசன் 2 வை அறிமுகப்படுத்தும் போது, இதற்கான எதிர்பார்ப்பு பன்மடங்கு அதிகரித்தது. யாரும் பார்க்காத தருணத்தில் கல்லை தூக்குவது பெருமை அல்ல. எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கல்லை தூக்குவது தான் சவாலானது. எதிர்பார்ப்புகள் இல்லாத தருணத்தில் வதந்தி சீசன் 1 இயக்கியதை விட, அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும் இந்தத் தருணத்தில் இதன் சீசன் 2 வை இயக்கி வெற்றியடைய செய்வதில் தான் எனக்கான சவால் இருக்கிறது என நினைக்கிறேன்.  

இந்த கதையை எழுதி அமேசான் பிரைம் வீடியோவிற்கு சமர்ப்பிப்பதற்கு முன் இயக்குநர்கள் புஷ்கர், காயத்ரி அவர்களிடம் சமர்ப்பித்தேன்.‌ அவர்கள் தான் இன்னும் ஏதாவது புதுமையாக சேர். சேர்த்துக்கொள். சேர்த்துக் கொண்டே இரு, என ஊக்கமளித்துக் கொண்டே இருந்தார்கள். திரைக்கதையை நிறைவு செய்த பின் அவர்களின் கஷ்டம் எதுவும் எனக்குத் தெரியவில்லை. ஏனென்றால் நான் இதனை உருவாக்குவதில் மட்டுமே கவனம் செலுத்தினேன். அவர்கள் தான் அனைத்து விசயங்களையும் ஒன்றிணைத்து ஒருங்கிணைத்தனர்.

ஒரு முழு நீள திரைப்படத்தை உருவாக்குவதற்காக படமாக்கப்படும் படப்பிடிப்பு நாட்களில், மூன்று திரைப்படங்களுக்கான படப்பிடிப்பை நடத்த வேண்டியது இருந்தது. இதற்காக தயாரிப்பாளர்கள் மட்டுமல்லாமல் இதில் இணைந்து பாடுபட்ட அனைவரும் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை அர்ப்பணிப்புடன் வழங்கினர்.
பார்வையாளர்கள் இந்தத் தொடரை பார்க்கும்போது அனைவரும் வதந்தி சீசன் 2 தொடரின் கதை களத்திற்குள் பயணித்து விடுவீர். ஆனால் அந்த உலகத்தை உருவாக்குவதற்காக தொடர்ந்து 43 நாட்கள் மதுரை, காரைக்குடி, ராமநாதபுரம், திருச்சி ஆகிய இடங்களில் தொடர்ச்சியாக படப்பிடிப்பை நடத்தினோம். அனைவரும் தொடர்ந்து 18 மணி நேரம் உழைத்தனர். அனைவருக்கும் இந்த வதந்தி சீசன் 2 நன்றாக வரும் என நம்பிக்கை வைத்தனர்.

வதந்தி சீசன் 2 விற்காக சசிகுமாரை அணுகி கதை சொல்லும் போது நான் முழு கதையையும் எழுதி நிறைவு செய்யவில்லை. அவரை மதுரையில் சந்தித்து கதையை சொன்னதும் அவர் எந்த தாமதமும் செய்யாமல் உடனடியாக நடிக்க ஒப்புக்கொண்டார். அதன் பிறகு முழு திரைக்கதையை எழுதி நிறைவு செய்துவிட்டு வாருங்கள் என்றார். அவர் நடிக்க ஒப்புக்கொண்டவுடன் அவருக்காக மீண்டும் ஒரு முறை மூஸா ராசா கதாபாத்திரத்தை சிறப்பாக எழுத தொடங்கினேன். இதுவே வதந்தி சீசன் 1க்கும் சீசன் இரண்டுக்குமான மிகப்பெரிய வித்தியாசமாக அமைந்துவிட்டது.

இசையமைப்பாளர் சிமோனை பற்றி குறிப்பிட வேண்டும். வதந்தி சீசன் 1க்கான இசை வேறு. சீசன் 2 விற்கான இசை வேறு. அவரும் ஒரு வகையில் கதை சொல்லி தான். நான் கண்ணை மூடிக்கொண்டு இந்த தொடரின் எபிசோட்டை பார்க்கும்போது, இசையே கதையை சொல்லும். அந்த அளவிற்கு அவர் கலை நுட்பம் கொண்டவர் என்றார்.

நடிகர் சசிகுமார் பேசுகையில்,
வதந்தி 2 கதையை இயக்குநர் மதுரையில்  என்னை சந்தித்து சொன்னார். டைட்டிலை கேட்டவுடன் நான் தான் மணி கதாபாத்திரத்தில் நடிக்க போகிறேன் என்று நினைத்திருந்தேன். மதுரை என்பதால் மணி, குட்டி புலி என ரௌடியாகத்தான் யோசிப்பார்கள். நானும் இதுவரை 30 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். யாரும் என்னை போலீசாக நடிக்க வைக்க வேண்டும் என யோசிக்கவில்லை. இயக்குநரிடம் இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்ப கேட்டேன். நான் மணி கதாபாத்திரத்தில் நடிக்கிறேனா? அல்லது போலீஸ் மூஸா ராசா கேரக்டரில் நடிக்கிறனா? என்று கேட்டேன். அவர் தான் நீங்கள் போலீசாக மூஸா ராசா கேரக்டரில் நடிக்கிறீர்கள் என்றார். மதுரை பின்னணியில் என்னை ரவுடியாக இல்லாமல் போலீசாக நினைத்து கதையை எழுதியதால் அந்த கதையை முழுவதுமாக கேட்டேன். இந்தக் கேரக்டர் இவ்வளவு சிறப்பாக மெருகேறி இருக்கிறது என்றால், அதற்கு இயக்குநர் ஆண்ட்ரூஸின் கடும் உழைப்புதான் காரணம்.

போலீஸ் என்றவுடன் அந்த ட்ரெஸ்ஸை போட்டுக் கொண்டு கம்பீரமாக நடக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் இயக்குநர் அப்படி எல்லாம் நடிக்க கூடாது. இயல்பாக இருக்க வேண்டும் என்றார். அந்தக் கதாபாத்திரம் மதுரையில் இருக்கும் ஒரு சாதாரண போலீஸ் என்பதை அடிக்கடி நினைவுப்படுத்திக் கொண்டே இருப்பார். அவர் சொன்ன கதையும் எனக்கு பிடித்திருந்தது. ஒரு நிரபராதியை காப்பாற்ற போலீஸ் போராடும் கதை. போலீஸ் பாயிண்ட் ஆஃப் வ்யூவில் தான் வதந்தி சீசன் 2 வின் கதை நகரும். இதுவரை வெளியான இன்வெஸ்டிகேட்டட் திரில்லர் ஜானரிலான கதைகளில் குற்றவாளிகளை கண்டுபிடித்து விட வேண்டும் என்ற பரபரப்பு தான் இருக்கும். ஆனால் இந்த தொடரில் பாவம் ஹீரோ ..‌! போலீஸ் எப்படியாவது குற்றவாளியை கண்டுபிடித்து, இவனை விடுவித்து விட வேண்டும் என்ற பரபரப்பு இருக்கும்.

அதைவிட வதந்தி சீசன் 1 எஸ் ஜே சூர்யா நடித்து பெரிய ஹிட்டான தொடர். அதற்கும் இந்தத் தொடருக்கும் சம்பந்தம் இல்லை. இருந்தாலும் இந்தத் தொடரும் புதுமையாக இருக்கும். இந்த இணைய தொடர் வெளியான பிறகு நான் நிறைய போலீஸ் கதாபாத்திரங்களில் நடிப்பேன் என நினைக்கிறேன். இந்த கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக மிகவும் சிரமப்பட்டேன். படப்பிடிப்பின் போது ஏதேனும் ஒரு இடத்தில் லேசாக சிரித்தாலும், மூஸா ராசா கேரக்டர் சிரிக்காது என இயக்குநர் சொல்லிக் கொண்டே இருப்பார். படப்பிடிப்பு தொடங்கி இரண்டு நாள் வரை சற்று சிரமமாக இருந்தது. அதன் பிறகு அது பழகிவிட்டது. இந்த கதாபாத்திரத்தில் நடிக்கும் போது இயக்குநர் என்ன சொன்னாரோ..! அதை மட்டும் தான் செய்தேன் என்றார்.

நடிகர் விவேக் பிரசன்னா பேசுகையில், ட்ரீம் ப்ரொடியூசர் மற்றும் ட்ரீம் டைரக்டர் உடன் இருக்கும்போது எங்களுக்கெல்லாம் நடிப்பு தானாகவே வரும்.‌ எல்லாமே பேப்பரில் இருக்கும். படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் என்ன சொல்கிறாரோ…! அதை செய்தால் மட்டும் போதும். புஷ்கர், காயத்ரி அவர்களுடைய தயாரிப்பு என்றால், அதில் பணியாற்றும் அனைவருக்கும் சந்தோஷம் தான். அனைவரையும் அவர்கள் அரவணைத்து அக்கறை காட்டி அன்பு செலுத்துவார்கள்.‌ என்னைப் பொறுத்தவரை இயக்குநர் ஆண்ட்ரூஸ் இந்தியாவிலேயே மிகச்சிறந்த ரைட்டர். இவருடைய எழுத்தையும், ஸ்கிரிப்டையும் வாசிக்க வாசிக்க குஷியாகி விடுவேன். ஆனால் இந்த தொடரின் எட்டாவது எபிசோடின் ஸ்கிரிப்ட்டை மட்டும் அனுப்பவில்லை. நான் ஆர்வமுடன் காத்திருந்தும், நாளை படப்பிடிப்பு என்றால் அதற்கு முதல் நாள் தான் அதற்கான ஸ்க்ரிப்டை அனுப்புவார். வதந்தி சீசன் 1 ஐ விட இந்த சீசன் 2 விற்கு பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது. அதனை இந்தத் தொடர் பூர்த்தி செய்யும் என நம்புகிறேன் என்றார்.

நடிகர் யஷ்வந்த் பேசுகையில்,
என்னைப் போன்ற புது முகங்களை கூட தயாரிப்பாளர்கள் புஷ்கர், காயத்ரி மதிப்பு அளித்து பல விசயங்களை சொல்லிக் கொடுத்து நடிக்க வைத்தனர். அவர்களுடைய குழுவில் உள்ள அனைவரும் எனக்கு சிறந்த முறையில் வழிகாட்டினர். இயக்குநர் ஆண்ட்ரூஸ் வதந்தி மூலம் எனக்கு வாய்ப்பு மட்டும் தரவில்லை…! வாழ்க்கையையே கொடுத்திருக்கிறார். அவருக்கும் நன்றி. இந்தப் படத்தில் நான் நடித்திருக்கும் கதாபாத்திரம் பெரிது. ஒரு புது முகத்திற்கு இவ்வளவு பெரிய கதாபாத்திரமும், அதற்கான சுதந்திரமும் கொடுப்பார்களா..! என எனக்குத் தெரியவில்லை. கொடுத்ததற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் இந்த படத்தில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறேன். இதற்கு வாய்ப்பளித்த இசையமைப்பாளருக்கும் நன்றி என்றார்.

நடிகை அபர்ணா தாஸ் பேசுகையில், ‘டாடா’ படத்திற்குப் பிறகு தமிழில் நல்லதொரு கதையில் நடிக்க வேண்டும் என காத்திருந்தேன்.‌ இந்தத் தருணத்தில் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ் இப்படத்தின் கதையை சொன்னார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இதுவரை ஏற்று நடித்ததில் இந்த ‘சுமையா’ கதாபாத்திரம்தான் சற்று வித்தியாசமான சுவாரசியமான இனிமையான கதாபாத்திரம். படப்பிடிப்பு அனுபவம் அனைத்தும் மறக்க இயலாது.‌

‘கண்கள் இரண்டால்..’ என்ற பாட்டில் சசிகுமாரின் தலையாட்டலுக்கு எங்கள் கேரளா முழுவதும் மிகப்பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. அதில் நானும் ஒருத்தி. அப்போதிருந்தே சசிக்குமாருடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து விட வேண்டும் என்ற கனவு இருந்தது. அந்தக் கனவு இதில் நிறைவேறி இருக்கிறது என்றார்.

நடிகை அனகா மருதோரா பேசுகையில், இந்தத் தொடரில் லீலாவதி எனும் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பளித்த இயக்குநருக்கு நன்றி. முதலில் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க தயக்கம் இருந்தது. ஆனால் இயக்குநர் ஆண்ட்ரூஸ் இந்த கதாபாத்திரத்தை பற்றி விவரித்து என்னை சமாதானப்படுத்தி நடிக்க வைத்தார். அதன் பிறகு தான் இந்த தொடரில் என்னுடைய பங்களிப்பு சிறப்பானதாக இருந்தது என்பதை உணர்ந்தேன். தயாரிப்பாளர்கள் புஷ்கர், காயத்ரி அவர்களுடன் ஒவ்வொருவரும் இணைந்து பணியாற்ற விரும்புவார்கள். ஏனென்றால் அவர்கள் அலுவலகம் எங்களுடைய இரண்டாவது குடும்பம் போல் இருக்கும். ‘கருடன்’ படத்திற்குப் பிறகு நான் சசிகுமார் சார் உடன் இணைந்து இரண்டாவது முறையாக பணியாற்றுகிறேன். இதுவே எனக்கு மகிழ்ச்சியை அளித்தது என்றார்.

இசையமைப்பாளர் சிமோன் கே. கிங் பேசுகையில், வதந்தி சீசன் 1 வதந்தி சீசன் 2 இதற்கு இசையமைக்கும் போது என்னுடைய பார்வையில் அதன் கீழே இருக்கும் ஒரு டேக்லைன் தான் கவனத்தில் இருந்தது. சீசன் 1ல் ஃபேபிள் ஆப் வெலோனி என இருக்கும். சீசன் 2வில் மிஸ்டரி ஆஃப் மணி என இருக்கும் இதைத்தான் நான் வதந்தியாக பார்த்தேன். சீசன் 1 வேறு கதை. வேறு லேண்ட்ஸ்கேப். அதற்கான இசை வேறானதாக இருக்கும். சீசன் 2 வேறு கதை. வேறு லேண்ட்ஸ்கேப். அதனால் இதற்கான இசையும் வேறானதாகவே இருக்கும். வதந்தி சீசன் 1, சீசன் 2 என இரண்டிலும் மனிதர்களுக்கான எமோஷன் கூடுதலாக இருக்கும். அதற்கான இசையைத்தான் நாங்கள் வழங்கி இருக்கிறோம்.
வதந்தி சீசன் 1ல் பாடல்கள் கிடையாது. ஆனால் வதந்தி சீசன் 2 வில் இரண்டு பாடல்கள் இருக்கிறது. இதுவே ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கும் காரணமாக இருக்கும். இதன் மூலம் மணி ரோமியோ என்ற பாடலாசிரியரை அறிமுகப்படுத்தி இருக்கிறோம் என்றார்.

இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோவில் ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் ‘வதந்தி சீசன் 2 : தி மிஸ்ட்ரி ஆஃப் மணி’ எனும் இணைய தொடர் தமிழில் வெளியாகிறது. அத்துடன் தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டும் , ஆங்கிலம் உள்ளிட்ட 15 க்கும் மேற்பட்ட மொழிகளில் சப்டைட்டிலுடன் இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் 240 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் பிரத்யேகமாக ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

dhamaraimurasu

dhamaraimurasu

dhamaraimurasu admin

Related Posts

கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் “ஊர் கூடும் இரவு” ஆவணப்படம் !

சென்னையைச் சேர்ந்த ரம்யா ஸ்ரீராம் புகைப்படக் கலைஞராகவும், பலகலைகள் பற்றிய தேடுதல் மனம் கொண்ட பயணியாகவும் இருக்கிறார்.மக்களிடையே பின்பற்றப்படும் சடங்கு வடிவங்களையும்,  விழாக்களையும் தனது கேமராவிற்குள் சிறைப் பிடிப்பது அவருக்கு விருப்பமான ஒன்று. அந்த வகையில்நமது பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவற்றை ஆவணப்படுத்துவதில்…

Read more

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரிப்பில், யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் நடிகர்கள் ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ‘ஹைக்கூ’. வரும் அக்டோபர் 23…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்கத்தவறிய செய்திகள்

“E 1” படத்தின் விமர்சனம்

“E 1” படத்தின் விமர்சனம்

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழாவில் 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழாவில் 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழா ! ஓவியர் ஜீவானந்தனுக்கு 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழா ! ஓவியர் ஜீவானந்தனுக்கு 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு 13.78 லட்சம் நிதியுதவி !

கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் “ஊர் கூடும் இரவு” ஆவணப்படம் !

கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் “ஊர் கூடும் இரவு” ஆவணப்படம் !

“ஆல்பாஸ்” விமர்சனம்

“ஆல்பாஸ்” விமர்சனம்

“தாய்நிலம்” விமர்சனம்

“தாய்நிலம்” விமர்சனம்

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

அதிமுகவின் பலவீனமா ? த.வெ.க வினரின் மோசடியா ?

அதிமுகவின் பலவீனமா ? த.வெ.க வினரின் மோசடியா ?

“அமெரிக்க ஆவி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“அமெரிக்க ஆவி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

அட்லான்டா இந்தியத் திரைப்பட விழாவில் “என்ன விலை” படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது !

அட்லான்டா இந்தியத் திரைப்பட விழாவில் “என்ன விலை” படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது !

நலிவுற்ற திருநங்கைகளுங்கு நிதியுதவி வழங்கிய “டோரதி” படக்குழு !

நலிவுற்ற திருநங்கைகளுங்கு நிதியுதவி வழங்கிய “டோரதி” படக்குழு !

“அன்பில் அவன் படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“அன்பில் அவன் படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“பத்தா” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“பத்தா” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

நாள்தோறும் நற்பணி ! ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன்

நாள்தோறும் நற்பணி ! ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன்

“ஒட்டாரம்” திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு !

“ஒட்டாரம்” திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு !

“சிக்மா” படத்தில் அறிமுகமானது எனக்கு பெருமை ! நடிகை ஃபரியா அப்துல்லா

“சிக்மா” படத்தில் அறிமுகமானது எனக்கு பெருமை ! நடிகை ஃபரியா அப்துல்லா

“அன்பில் அவன்” படத்தின் விமர்சனம்

“அன்பில் அவன்” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த நடிகர் !

“சிக்மா” படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த நடிகர் !

“பத்தா” படத்தின் விமர்சனம்

“பத்தா” படத்தின் விமர்சனம்

இயக்கமா ? நடிப்பா ? “சிக்மா” இயக்குநர் பேட்டி !

இயக்கமா ? நடிப்பா ? “சிக்மா” இயக்குநர் பேட்டி !

கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான் “சிக்மா” – இயக்குநர் சஞ்சய்

கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான் “சிக்மா” – இயக்குநர் சஞ்சய்

“தி டார்க் ஹெவன் படத்தின் வெற்றிக்கு, சொந்த ஊரில் விழா எடுத்த இயக்குநர் !

“தி டார்க் ஹெவன் படத்தின் வெற்றிக்கு, சொந்த ஊரில் விழா எடுத்த இயக்குநர் !

தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய பிரபல நடிகரின் மனைவி !

தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய பிரபல நடிகரின் மனைவி !

“கோல்டன் பாக்கியம்” டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு !

“கோல்டன் பாக்கியம்” டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு !

“கிட்டி” படத்தின் விமர்சனம்

“கிட்டி” படத்தின் விமர்சனம்

“த்ரிஷ்யம்_3” படத்தின் இந்தி பதிப்பை வெளியிட தடை கோரி வழக்கு !

“த்ரிஷ்யம்_3” படத்தின் இந்தி பதிப்பை வெளியிட தடை கோரி வழக்கு !

நான்கு மாநில டிஜிட்டல் & தொலைக்காட்சி துறைகளை ஒருங்கிணைக்கும் முயற்சி !

நான்கு மாநில டிஜிட்டல் & தொலைக்காட்சி துறைகளை ஒருங்கிணைக்கும் முயற்சி !

“துரோகம் பழகு படத்தின் டீசர் வெளியீட்டு விழா !

“துரோகம் பழகு படத்தின் டீசர் வெளியீட்டு விழா !

25 மாவட்டங்கள், 2 ஆயிரம் ரசிகர்கள் ! நடிகர் சூர்யா தலைமையில் பிரமாண்டமான விழா !

25 மாவட்டங்கள், 2 ஆயிரம் ரசிகர்கள் ! நடிகர் சூர்யா தலைமையில் பிரமாண்டமான விழா !

மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள “மக்கள் காவலன்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள “மக்கள் காவலன்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“பூஜா மேரி ஜான்” திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ஜீ_5 ஹிந்தியில் வெளியாகிறது

“பூஜா மேரி ஜான்” திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ஜீ_5 ஹிந்தியில் வெளியாகிறது

சாதிய வன்மத்தை விதைக்கும் “தி கிராண்ட் மாஸ்டர்” ! படத்தின் விமர்சனம்

சாதிய வன்மத்தை விதைக்கும் “தி கிராண்ட் மாஸ்டர்” ! படத்தின் விமர்சனம்

“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“#LOVE” வெப் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“#LOVE” வெப் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“தாய்நிலம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

“தாய்நிலம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

தனுஷின் ( D_56 ) புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

தனுஷின் ( D_56 ) புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

“ஏழு கடல் ஏழு மலை” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“ஏழு கடல் ஏழு மலை” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“டோரதி” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“டோரதி” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“தி டார்க் ஹெவன்” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“தி டார்க் ஹெவன்” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

மர்மம், ரகசியங்கள் நிறைந்த “ஆக்டோபஸ்” தொடர் ஜீ_5 தமிழில் வெளியாகிறது

மர்மம், ரகசியங்கள் நிறைந்த “ஆக்டோபஸ்” தொடர் ஜீ_5 தமிழில் வெளியாகிறது

ரசிகர்களின் அமோக வரவேற்பில் “என்ன விலை” திரைப்படம் !

ரசிகர்களின் அமோக வரவேற்பில் “என்ன விலை” திரைப்படம் !

“நல்ல படம்” திரைப்படத்தின் விமர்சனம்

“நல்ல படம்” திரைப்படத்தின் விமர்சனம்

“துரோகம் பழகு” படக்குழுவினரை  பாராட்டிய முதலமைச்சர் !

“துரோகம் பழகு” படக்குழுவினரை  பாராட்டிய முதலமைச்சர் !

பா. ரஞ்சித்தின் “வேட்டுவம்” படத்தின் அறிமுக வீடியோ வெளியீடு !

பா. ரஞ்சித்தின் “வேட்டுவம்” படத்தின் அறிமுக வீடியோ வெளியீடு !

விஜய் சேதுபதியின் “பத்தா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

விஜய் சேதுபதியின் “பத்தா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

பறிபோன மானத்திற்கு “என்ன விலை” என்ன விலை படத்தின் விமர்சனம்

பறிபோன மானத்திற்கு “என்ன விலை” என்ன விலை படத்தின் விமர்சனம்

“மண்டாடி” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“மண்டாடி” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“கஸ்தூரி வீடு” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“கஸ்தூரி வீடு” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

பாவனா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் “பிக்னிக்” படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு !

பாவனா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் “பிக்னிக்” படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு !

துல்கர் சல்மானின் “ஆகாசம்லோ ஓக தாரா” (AOT) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

துல்கர் சல்மானின் “ஆகாசம்லோ ஓக தாரா” (AOT) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

எம்.எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி “எம்.எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்” படத்தின் துவக்க விழா !

எம்.எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி “எம்.எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்” படத்தின் துவக்க விழா !

அர்ஜூன் தாஸ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

அர்ஜூன் தாஸ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

“அன்பில் அவன்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

நானி நடிப்பில் உருவாகியுள்ள “தி பாரடைஸ்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

நானி நடிப்பில் உருவாகியுள்ள “தி பாரடைஸ்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“என்ன விலை” படம் மறக்க முடியாத அனுபவம் ! நிமிஷா சஜயன்

“என்ன விலை” படம் மறக்க முடியாத அனுபவம் ! நிமிஷா சஜயன்

தி டார்க் ஹெவன் படத்தின் முன் வெளியீட்டு விழா !

தி டார்க் ஹெவன் படத்தின் முன் வெளியீட்டு விழா !

“பனங்காட்டான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“பனங்காட்டான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

அரசியலும் சமூக அக்கறையும் சேர்ந்து உருவான படம் தான் “ஆகாயம்” ! தினந்தோறும் நாகராஜ்

அரசியலும் சமூக அக்கறையும் சேர்ந்து உருவான படம் தான் “ஆகாயம்” ! தினந்தோறும் நாகராஜ்

“என்ன விலை” படத்தில் நான் நடித்த கதாப்பாத்திரம் மிகவும் சவாலானது ! கருணாஸ்

“என்ன விலை” படத்தில் நான் நடித்த கதாப்பாத்திரம் மிகவும் சவாலானது ! கருணாஸ்

“என்ன விலை” படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியது எனக்கு கிடைத்த வரம் !

“என்ன விலை” படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியது எனக்கு கிடைத்த வரம் !

“மண்டாடி” மூலம் மாஸ் ஹீரோவான சூரி ! மண்டாடி விமர்சனம்

“மண்டாடி” மூலம் மாஸ் ஹீரோவான சூரி ! மண்டாடி விமர்சனம்

வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகியுள்ள “நல்லபடம்” செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியீடு !

வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகியுள்ள “நல்லபடம்” செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியீடு !

சூர்யா நடித்துள்ள “சீன்” ( SCENE ) படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு !

சூர்யா நடித்துள்ள “சீன்” ( SCENE ) படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு !

“என்ன விலை” படத்தில் நடித்தது மிகவும் சவாலாக இருந்தது ! நடிகை ஷாஷா சிவக்குமார்

“என்ன விலை” படத்தில் நடித்தது மிகவும் சவாலாக இருந்தது ! நடிகை ஷாஷா சிவக்குமார்

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

அசோக் செல்வன் நடித்துள்ள “அன்பில் அவன்” வெளியீட்டு தேதி அறிவிப்பு !

அசோக் செல்வன் நடித்துள்ள “அன்பில் அவன்” வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“வதந்தி சீசன்_2” பற்றி மெய்சிலிர்க்கும் நடிகர் !

“வதந்தி சீசன்_2” பற்றி மெய்சிலிர்க்கும் நடிகர் !

“என்ன விலை” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“என்ன விலை” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

திரைப்பிரபலங்களுக்கு புதிய தீர்ப்பை பெற்றுத்தந்துள்ள நடிகை !

திரைப்பிரபலங்களுக்கு புதிய தீர்ப்பை பெற்றுத்தந்துள்ள நடிகை !

“வைல்ட் தமிழ்நாடு” இன்று முதல் பிவிஆர் திரையரங்குகளில் வெளியீடு !

“வைல்ட் தமிழ்நாடு” இன்று முதல் பிவிஆர் திரையரங்குகளில் வெளியீடு !

“மொத ராத்திரி” படக்குழுவினரின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“மொத ராத்திரி” படக்குழுவினரின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

கமல்ஹாசனின் புதிய படத்தின் “புகைப்படம்” சமூக வலைதளங்களில் வைரல் !

கமல்ஹாசனின் புதிய படத்தின் “புகைப்படம்” சமூக வலைதளங்களில் வைரல் !

நயன்தாராவின் “ஹாய்” படத்தின் விமர்சனம் !

நயன்தாராவின் “ஹாய்” படத்தின் விமர்சனம் !

மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க அலட்சியப்படுத்தும் அரசு அதிகாரிகள் ! நரிக்குறவர் இன மக்களின் போராட்டத்திற்கு தீர்வு எப்போது ?.!

மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க அலட்சியப்படுத்தும் அரசு அதிகாரிகள் ! நரிக்குறவர் இன மக்களின் போராட்டத்திற்கு தீர்வு எப்போது ?.!

“ஒன்ஸ்மோர்” படத்தின் திரைவிமர்சனம்

“ஒன்ஸ்மோர்” படத்தின் திரைவிமர்சனம்

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் மரணம் ! சோகத்தில் கிராம மக்கள் !

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் மரணம் ! சோகத்தில் கிராம மக்கள் !

தந்தை கொலை, பழிவாங்க துடிக்கும் மகள் ! “அமரம்” படத்தின் விமர்சனம்

தந்தை கொலை, பழிவாங்க துடிக்கும் மகள் ! “அமரம்” படத்தின் விமர்சனம்

திருப்பூரில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி தெருநாய்கள் கொடூர கொலை !

திருப்பூரில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி தெருநாய்கள் கொடூர கொலை !

தந்தை, மகன் உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் “ஃபாதர்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

தந்தை, மகன் உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் “ஃபாதர்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

“டாக்ஸிக்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“டாக்ஸிக்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

200 கோடி வசூல் சாதனை படைத்த “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம்

200 கோடி வசூல் சாதனை படைத்த “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம்

“ஒன்ஸ்மோர்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“ஒன்ஸ்மோர்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம் ! தெளிவில்லாத முதல்வரின் அறிவிப்பு !

கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம் ! தெளிவில்லாத முதல்வரின் அறிவிப்பு !

“Yourbackers play” உலகின் லாப நோக்கமற்ற OTT தளம் அறிமுகம் !

“Yourbackers play” உலகின் லாப நோக்கமற்ற OTT தளம் அறிமுகம் !

“இருமுடி கட்டு” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“இருமுடி கட்டு” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குரு சங்கருக்கு கொலை மிரட்டல் !

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குரு சங்கருக்கு கொலை மிரட்டல் !

“ஹலோ மிஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“ஹலோ மிஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

பழனி அருகே “தார் & டீசல்” திருட்டு ! புகார்தாரரை மிரட்டும் காவல் ஆய்வாளர் !.?

பழனி அருகே “தார் & டீசல்” திருட்டு ! புகார்தாரரை மிரட்டும் காவல் ஆய்வாளர் !.?

“அன்பில் அவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு !

“அன்பில் அவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு !

“ஐ ம் கேம்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“ஐ ம் கேம்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“பியார் பிரேமா கல்யாணம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“பியார் பிரேமா கல்யாணம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“பத்தா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“பத்தா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் டிரெய்லருக்கு அமோக வரவேற்பு !

டாக்ஸிக் படத்தின் டிரெய்லருக்கு அமோக வரவேற்பு !

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு !

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“வதந்தி சீசன் 2” குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“வதந்தி சீசன் 2” குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட “பியார் பிரேமா கல்யாணம்” தொடரின் முன்னோட்டம் !

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட “பியார் பிரேமா கல்யாணம்” தொடரின் முன்னோட்டம் !