“மக்கள் தலைவா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

கவிதாலயா சரவணன் கிரியேசன்ஸ் தயாரிப்பில், இயக்குநர் ராம் தேவ் இயக்கத்தில் இயக்குநரும், நடிகருமான ரவி மரியா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘மக்கள் தலைவா ‘ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.

இப்படத்தில் ரவி மரியா, அக்சரா விஜய், ராதா ரவி, பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு, கவிதாலயா சரவணன், அக்னி S வருண் மற்றும் பலர் நடித்துள்ளனர். கார்த்திக் எஸ். நாயர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு துளசி ராமன் இசையமைத்திருக்கிறார்.

இவ்விழாவில் தயாரிப்பாளர் கவிதாலயா சரவணன் பேசுகையில், இந்தப் படத்தின் மூலம் முதன்முதலாக திரையுலகில் அடியெடுத்து வைத்திருக்கிறேன். இப்படத்தில் நடித்திருக்கும் நட்சத்திரங்கள் அனைவரும் என்னுடைய இல்லத்திற்கு வருகை தந்தனர். இதனையே நான் பெரிய வெற்றியாக கருதுகிறேன். இந்த மேடைக்கு சிறப்பு விருந்தினர்களாக வருகை தந்திருக்கும் பலரையும் திரையில்தான் நான் பார்த்திருக்கிறேன். அவர்களுடன் இணைந்து ஒன்றாக இந்த மேடையில் இருப்பது பெருமிதமாக இருக்கிறது. திரையுலகத்தை சார்ந்த ஒருவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்றிருக்கிறார். இதன் மூலம் சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறேன். இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் கடுமையாக உழைத்து தங்களுடைய ஒத்துழைப்பை அளித்துள்ளனர். இந்தப் படம் அரசியல் சார்ந்த காமெடி படம். இந்த படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இயக்குநர் ராம் தேவ் பேசுகையில், ‘மக்கள் தலைவா’ என்ற இந்தப் படத்தின் கதையை முதன்முதலாக இயக்குநர் சி ரங்கநாதன் மூலமாக இயக்குநர் எஸ். ஏ. சந்திரசேகரிடம் சொன்னேன். இந்தப் படத்தின் கதை, பாட்டிலுக்கு பத்து ரூபா வாங்குவது பற்றியது. அவருடன் நீண்ட நேரம் கதையைப் பற்றி விவாதித்தேன். அதில் ஒரு கட்டத்தில் ஹீரோவிற்கு எதிராக அரசியலில் இரு துருவங்கள் ஒன்றிணைவது போன்று வரும். அப்போது இது எப்படி லாஜிக் படி சரியா வரும் ? எனக் கேட்டேன்.  அரசியலில் அதெல்லாம் வரும் என்றார். அதனைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கு ‘மக்கள் தலைவா’ என்ற டைட்டிலையும் அவர்தான் தேர்வு செய்தார். அவருக்கு இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் பகிர்ந்து கொள்ள முடியாத சில காரணங்களால் அவரால் நடிக்க முடியவில்லை.

அதன் பிறகு இந்த கதையில் யாரை நடிக்க வைக்கலாம் என்று பட்டியலிட்டபோது ராதாரவி இடம் பெற்றார். கதையைக் கேட்ட அவர் எனக்கு அரசியல் நன்றாகத் தெரியும் ஆனால் எனக்குத் தெரியாத பல விசயங்களை நீ தெரிந்து வைத்திருக்கிறாய். அதை எப்படி நீ யோசித்தாய்..! என கேட்டுவிட்டு, நடிக்க சம்மதம் தெரிவித்தார். படப்பிடிப்பு தளத்தில் அவர் எதிர்பார்த்ததை விட சிறப்பாக நடித்தார்.‌

அதன் பிறகு இயக்குநர் சி ரங்கநாதன் இந்த கதைக்கு பொருத்தமான ஹீரோ ரவி மரியா தான் என்றார். அவர் அரசியல் மேடையில் பேசிய பேச்சுக்களை இணையத்தில் பார்வையிட்டேன். அப்போதே இந்த கதைக்கு நாயகன் இவர்தான் என தீர்மானித்து விட்டேன். அவரையும் சந்தித்தேன். முதலில் கதாநாயகனாக நடிக்க தயக்கம் காட்டினார். அதன் பிறகு முழு கதையையும் கேட்டுவிட்டு கதையின் நாயகனாக நடிக்க ஒப்புக்கொண்டார். அவருக்கும் நன்றி. அதன் பிறகு பழ. கருப்பையா, நாஞ்சில் சம்பத், இயக்குநர் பேரரசு, கஞ்சா கருப்பு, என ஒவ்வொருவராக இணைந்தனர். அனைவருக்கும் நன்றி என்றார் .

இயக்குநர் ஆர். கே. செல்வமணி பேசுகையில், 1986 ஆம் ஆண்டில் மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான ‘தீர்த்தக் கரையினிலே’ என்ற படத்திற்கு தயாரிப்பாளர் பழ. கருப்பையா. அந்தப் படத்தில் நான் உதவி இயக்குநர். நாற்பது ஆண்டுகளுக்குப் பிறகு அவரை இந்த மேடையில் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தில் ரவி மரியா கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். இங்கு திரையிடப்பட்ட இரண்டு பாடல்களும் சிறப்பாக இருந்தது. இசையமைப்பாளர் துளசிராமனுக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது. அவரையும் வாழ்த்துகிறேன்.

இந்தப் படத்தின் டிரைலர் திரையிடப்படவில்லை. ஏனென்று கேட்டபோது.. சென்சார் பிரச்சனை என்றார்கள். பொதுவாக இது போன்ற பிரிவியூ தியேட்டர்களில் ட்ரெய்லரை திரையிடும்போது யாரும் சென்சார் சர்டிபிகேட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. ஆனால் அதே தருணத்தில் படம் சற்று வில்லங்கமாக இருந்தால் பிரிவ்யூ தியேட்டரில் திரையிடுவதற்கு தயக்கம் தெரிவிப்பார்கள். அப்படி என்றால்… இந்தப் படத்தில் ஏதோ வில்லங்கம் இருக்கிறது என்று தெரிகிறது.‌

பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘தலைவா’ படத்திற்கும் சென்சார் பிரச்சனை இருந்தது. தற்போது தயாராகி இருக்கும் ‘மக்கள் தலைவா’ படத்திற்கும் சென்சார் பிரச்சனை இருக்கிறது.

ஆனால் நாங்கள் படத்தை இயக்கிய போது எங்களுக்கு அத்தகைய நெருக்கடி இருந்ததில்லை. ‘மக்களாட்சி’ என்ற அரசியல் படத்தை இயக்கிய போது எனக்கு எந்தவித சிக்கலும் ஏற்பட்டதில்லை. அப்போது படைப்பாளிகளுக்கு சிறிதளவு சுதந்திரம் இருந்தது என நினைக்கிறேன். ஆனால் தற்போது உள்ள படைப்பாளிகளுக்கு கண்ணுக்குத் தெரியாத ஒரு பயம் சூழ்ந்திருக்கிறது.‌

இந்தப் படத்தை செய்யலாமா…? படத்தை இயக்கினால் தணிக்கை செய்வார்களா? தணிக்கை செய்த பின்பு திரையரங்குகளில் வெளியிடுவார்களா? மத்திய அரசு இந்த படத்திற்கு சென்சார் செய்யுமா? அதையும் கடந்து வந்தால் மாநில அரசாங்கம் இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட அனுமதிக்குமா.. ?அதையும் கடந்து படம் திரையரங்குகளில் வெளியானால் இங்குள்ள ஜாதி, மத அமைப்புகள் ஏதேனும் பிரச்சனைகளை ஏற்படுத்தி படத்தை நிறுத்தி விடுவார்களா? என பல விசயங்கள் இருக்கிறது.

ஒரு படைப்பாளி ஒரு உண்மையை சொல்வதற்கு ஏராளமானவர்களுக்கு பயப்பட வேண்டிய சூழல்  இன்று இருக்கிறது. உண்மையை தவிர வேறு எதை வேண்டுமானாலும் திரைப்படங்களில் பேசலாம். உண்மையைப் பேசினால் மட்டும்தான் அந்தத் திரைப்படம் வெளியில் வருவதற்கு கஷ்டம். பொய்யை பேசலாம், கற்பனையைப் பேசலாம், ஆபாசத்தை பேசலாம், அருவெறுப்பை பேசலாம், வன்முறையை பேசலாம், கலாச்சார சீரழிவை பற்றி பேசலாம், ஆனால் உண்மையை மட்டும் பேசக்கூடாது. மீறி பேசினால் அந்தப் படம் இந்தியாவில் வெளியாவது கஷ்டம். இதனை நான் உணர்ந்து தான் சொல்கிறேன். இதற்கு மிகப்பெரிய உதாரணம் எனது இயக்கத்தில் உருவான ‘குற்ற பத்திரிகை’. இந்தப் படம் என் வாழ்க்கையே திசை மாற்றிய படம்.

இன்றுள்ள படைப்பாளிகள் எப்படி இந்த விசயத்தை சொல்வது என்பதை தெரிந்து கொண்டிருக்கிறார்கள். அதனை கொஞ்சம் காமெடியாக சொல்லத் தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் ‘மக்கள் தலைவா’ படம் உருவாகி இருக்கிறது. அதிலும் நாஞ்சில் சம்பத், பழ கருப்பையா, ராதாரவி என அரசியல்வாதிகள் நடித்திருக்கிறார்கள். அதனால் இந்த படத்தில் ஏதோ ஒரு விசயம் இருக்கிறது என்பது மட்டும் தெரிகிறது.

நட்பிற்கு இலக்கணமாக திகழும் ராதாரவி. இந்தப் படத்தைப் பற்றியும், இதில் பணியாற்றிய கேமராமேனை பற்றியும் பாராட்டி பேசினார். சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு அவர் ஒரு சூப்பர் ஸ்டாரான கேமரா மேன் என குறிப்பிட்டார். எனக்கு கேமரா மேன் கார்த்திக் பற்றி எதுவும் தெரியாது. ஆனால் அவருடைய வேலையைப் பற்றி ராதாரவி சொன்ன பிறகுதான் அவருடைய திறமையை நான் தெரிந்து கொண்டேன். இந்தப் படத்துக்குப் பிறகு அவருக்கும் பெரிய எதிர்காலம் உள்ளது.

இந்த படத்தின் டைட்டில் ‘மக்கள் தலைவா’ மட்டுமல்ல, அதன் கீழ் ‘ஃபார் சேல்’ என இடம் பிடித்திருக்கிறது. இதைப் பற்றி புரிந்தவர்களுக்கு நன்கு தெரியும். இப்படி யோசிப்பதற்கு ஒரு துணிச்சல் வேண்டும். அதனை டைட்டிலில் டேக் லைனாக இடம்பெறச் செய்வதற்கும் ஒரு தைரியம் வேண்டும். நாம் அரசியலில் யாரையும் குறை சொல்லப் போவதில்லை. ஆனால் ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் என்பதை பலர் சொல்லிக் கொண்டிருந்தனர். இந்த படம் பெரிய வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன் என்றார்.

இசையமைப்பாளர், பாடலாசிரியர் துளசி ராமன் பேசுகையில், இது என்னுடைய முதல் மேடை. மூன்று திரைப்படங்களுக்கு இசை அமைத்திருக்கிறேன். ஜாதி, மதம், மொழி, இனம், இவைகளை விட பவர்ஃபுல் சினிமா. இன்னும் நிறைய முதல்வர்களை கொடுக்க இருக்கும் சினிமா. சினிமா சாதாரணமான கலையல்ல. மனிதர்களின் கனவுகளை தாங்கும் வொண்டர்ஃபுல் வொண்டர் வேர்ல்ட். இதில் இன்று ‘மக்கள் தலைவா’ என்ற புதிய லைட் உருவாகி இருக்கிறது. இந்த லைட்டை கொடுத்த தயாரிப்பாளர் கவிதாலயா சரவணனுக்கு நன்றி. இதற்கு கரண்ட் கொடுத்த இயக்குநர் ராம்தேவுக்கு நன்றி. இசை இல்லா உலகம் இல்லை. இசைக்கு இசையாதவர் எவருமில்லை. ஆகவே இசை தான் வாழ்க்கை. இதுதான் கொள்கை. அளித்தேன் உழைப்பை. அடைந்தேன் சிறப்பை. வென்றேன் மக்களின் அன்பை என்றார்.

பழ. கருப்பையா பேசுகையில், இயக்குநர் ராம்தேவ் நகைச்சுவையான படத்தை உருவாக்கி இருக்கிறார். படப்பிடிப்பு தளத்தில் ஐந்து நாள் பணியை மூன்று நாளிலேயே விரைவாக நிறைவு செய்யக்கூடிய ஆற்றல் படைத்தவர். இவருக்கு ஒளிப்பதிவாளரும் இணையாக பணியாற்றினார். இயக்குநர் தான் இப்படத்தின் முதல் தயாரிப்பாளர். தொடங்கிய பிறகு இடையில் நின்று விட்டது. தயாரிப்பாளர் தேவைப்பட்டார் அப்போது அவருடைய சொந்த ஊரில் உள்ள தொழிலதிபர் கவிதாலயா சரவணனை பார்த்து பேசி, மயக்கி, அவருக்கு ஒரு கதாபாத்திரத்தை வழங்கி படத்தின் பணிகளை தொடங்கினார். அவருடைய வீட்டிலேயே படப்பிடிப்பு நடைபெற்றது. முழு படமும் அவருடைய வீட்டில் தயாரானது தான். இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளர் கவிதாலயா சரவணனின் அறிமுகமும் நட்பும் கிடைத்தது. அவர் பெரிய செல்வந்தர். எங்களிடம் பேசும் போது நான் இரண்டு முறை அமெரிக்காவிற்கு சென்று திரும்பும் செலவுதான் பரவாயில்லை. நான் தயாரிக்கிறேன் என்றார். அதன் பிறகு தற்போது இந்த படம் வெளியாகும் வகையில் அவர் தன்னுடைய கவனத்தை செலுத்தி வருகிறார்.

இயக்குநர் ராம் தேவிற்கு நன்றாக நகைச்சுவையாக கதையை சொல்லக்கூடிய ஆற்றல் உண்டு.  நான் இந்தப் படத்தில் கெடுமதியாளனாக அதாவது வில்லனாக நடித்திருக்கிறேன். பிற வேடங்களில் நடித்திருக்கிறேன். ஆனால் நகைச்சுவையாக இந்த படத்தில் தான் நடித்திருக்கிறேன். இதை மிகவும் ரசித்தேன்.

நம் காலத்தில் காலத்தின் சரிவை, அரசியலின் இழிவை, வெளிப்படுத்துகின்ற படமாக இந்த படம் அமைந்திருக்கிறது.
சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு புடம் போட்ட தலைவர்கள் நாடாளும் தன்மை வேறு. அவர்கள் அரசியல் என்பது அதிகாரம் என்று கருதியவர்கள் இல்லை. அரசியல் என்பது தொண்டு. அரசியல் என்பது தியாகம். அரசியல் என்பது நேர்மை என்று ஒரு 30 ஆண்டு காலம் சிறைகளில் கழித்து, வாழ்ந்து நெறிப்படுத்தப்பட்டு பிறகு ஆட்சித் தலைவனாக  வருகிறவர்கள்.

அதற்குப் பிறகு கூட இந்த மண்ணில் கொள்கை சார்ந்த இயக்கங்கள் வளர்ந்தன. அந்த கொள்கையோடு ஊறி திளைத்து தலைவர்களாக மேன்மை அடைகிறார்கள். ஆனால் ஒன்றும் இல்லாமல் அதிகாரத்திற்காக, அதிகாரத்தை சுவைப்பதற்காக, பெருமைக்காக என்ற நிலை வந்து விட்ட பிறகு, அரசியலில் வீழ்ச்சி ஏற்பட்டே தீரும். அந்த வீழ்ச்சி ஏற்பட்டது. ஆனால் தமிழ் சமுதாயம் முதிர்ச்சி அடைந்த சமுதாயம். ஆகவே இதிலிருந்து மீட்பதற்காகத்தான் ராம்தேவ் போன்றவர்கள் கதை எழுதுகிறார்கள். இது இன்றைய அரசியல் மோசமாக இருக்கிறது என்று சொல்லவில்லை. மோசமாக இருக்கிறது. இதிலிருந்து தமிழ் சமூகம் மீள வேண்டும் என்பதற்காகத்தான் இந்த கதையை எழுதி இருக்கிறார்கள். இந்த படமும் அப்படித்தான் அமைந்திருக்கிறது.

‘மக்கள் தலைவா ஃபார் சேல்’ என்பது மக்களுக்கு தலைவனாக இருக்கின்றவன் மக்களை வழிநடத்துகின்றவனாக இருக்க வேண்டும். விற்பனைக்கு உரியவனாக இருக்கக் கூடாது என்ற செய்தியை மிகச் சிறப்பாக இயக்குநர் ராம்தேவ் சொல்லி இருக்கிறார். ஆகவே அவரை நான் பாராட்டுகிறேன். எனவே கதையின் நாயகன் என்று சொல்வதற்கு ரவி மரியா வெட்கப்பட வேண்டிய தேவையில்லை. இந்த படம் வெற்றி பெற்று விட்டால், நீங்கள் மிகப்பெரிய கதை தலைவராகி விடுவீர்கள். வெற்றி சார்ந்தது தான் நம்முடைய வாழ்க்கை  என்றார்.

நடிகை அப்சரா விஜய் பேசுகையில், இந்தப் படத்தில் வாய்ப்பு அளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. படப்பிடிப்பு தளத்தில் ரவி மரியா நடிப்பு , நடனம் என பல விசயங்களில் பயனுள்ள குறிப்புகளை வழங்கினார். இந்தப் படத்தை அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ஆதரவு தர வேண்டும் என்றார்.

நடிகர் ரவி மரியா பேசுகையில்,
வழக்கமாக நான் அனைத்து  படங்களிலும் வில்லனாக நடித்தாலும் காமெடியாக நடித்தாலும் கேரக்டரில் நடித்தாலும் நிறைய பேசுவேன். ஆனால் இந்த படத்தில் கதாநாயகன் என்பதால்.. நிறைய பேசவில்லை. இருந்தாலும் இந்தப் படத்தை அனைவரும் திரையரங்குகளில் பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

நடிகர் கஞ்சா கருப்பு பேசுகையில், தயாரிப்பாளர் கவிதாலயா சரவணன் தேனியின் மன்னன், சினிமாக்காரர்களின் அண்ணன், அவருடைய வீட்டிற்கு விருந்தினர்களாக செல்பவர்களுக்கு உணவு உபசரிப்பதுடன் பெரிய அளவிலான திருப்பதி வெங்கடாஜலபதி புகைப்படத்தையும் பரிசாகத் தருவார்.

இயக்குநர் ராம்தேவுக்கு தேவை என்றால் அதிகாலை மூன்று மணிக்கு போன் செய்து பேசுவார். ஒருமுறை அதிகாலை 4 மணிக்கு படப்பிடிப்பு. முதல் காட்சி உங்களது தான். வந்து விடுங்கள் என்றார். நானும் நான்கு மணிக்கு அவர் சொன்ன ஒயின்ஷாப்பிற்கு சென்றேன். கதவு மூடி இருந்தது. யாரும் அங்கு இல்லை. அன்று ஒயின்ஷாப் விடுமுறை. கதவை தட்டியதும் உள்ளே இருந்து ஒருவர் எட்டிப் பார்த்தார். அவர் இன்று பிளாக்கில் சரக்கு கிடைக்காது என்றார். அவரிடம் நான் சரக்கு வாங்க வரவில்லை. நடிக்க வந்திருக்கிறேன். இயக்குநர் இங்கு தான் வர சொன்னார் என்றேன். அதன் பிறகு தயாரிப்பு நிர்வாகி போன் செய்து வந்துவிடுகிறேன் என்றார்.

அப்போது அவரிடம் பேரரசு நடிக்கும் போது கடையை திறந்தீர்கள்… நான் நடிக்கும் போது ஏன் கடையை மூடி வைத்திருக்கிறீர்கள்? என கேட்டபோது.. அவர் வந்த போது ஒரு பாட்டிலுக்கு பத்து ரூபாய் இருந்தது. இன்னைக்கு ஒரு பாட்டிலுக்கு இருபது ரூபாய் எக்ஸ்ட்ராவாக ஏறி இருக்கிறது. இந்த நியாயத்தை நான் யாரிடம் போய் சொல்வது ? என கேட்டார்.

இந்தப் படம் வெளியான பிறகு மது பிரியர்கள் அனைவரும் பேரரசு வீட்டிற்கு செல்வார்கள். அங்கு ஒரு கொள்கை ஏற்படும். அதன் பிறகு பாட்டில் விலை குறைக்கப்படும். தற்போது 9: 45 கெல்லாம் கடையை மூடி விடுகிறார்கள். நான் இந்த ஆட்சியில் டாஸ்மாக் இரவு 12 மணி வரை திறந்திருக்க வேண்டும். அதேபோல் காலையில் 7:00 மணி அளவில் கடையை திறந்து விட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அங்கங்கே ஒயின் ஷாப் குறைவாக இருக்கிறது. கடைகளை அதிகமாக திறக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், எந்த பூவின் வாசமும் காற்று எந்த திசையில் வீசுகிறதோ, அந்த திசையில் தான் பயணிக்கும். ஆனால் ஒரு பூவின் வாசம் மட்டும் காற்றுக்கு எதிர் திசையில் கூட வாசம் வீசும். அது என்னவென்றால் ஒரு மனிதரின் நற்பண்பு. இது ரவி மரியாவிற்கு பொருந்தும்.

நான் அவருடன் அதிகமாக உரையாடியதில்லை. அவர் பார்ப்பதற்கு கரடு முரடானவர் போல் இருந்தாலும், அவருடைய பேச்சு முரணாக இருந்தாலும், அவருடைய கேரக்டர் இவ்வளவு சிறப்பாக இருக்கிறதைப் பார்க்கும் போது எனக்கு உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்தில் அவர் முதன்முதலாக கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். அதனால் இந்த நிகழ்ச்சியை அவரே முன்நின்று ஒருங்கிணைத்து வருகிறார்.‌

நான் இங்கு வந்த பிறகு தான் இந்தப் படத்தில் நாஞ்சில் சம்பத், பழ கருப்பையா போன்றவர்கள் நடித்திருக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டேன். இவர்களுடைய தமிழை கேட்க மிகவும் விரும்புவேன். எல்லோராலும் இலக்கண சுத்தமாக தமிழில் பேச முடியாது. அதில் அவர்கள் சிறப்பாக பேசக்கூடியவர்கள். இந்தப் படத்தில் பணியாற்றிய ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், நடிகர்கள், நடிகைகள் என அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். சில காட்சிகள் இயல்பாக இருந்தால் அதனை போராடி இடம்பெறச் செய்யலாம். இந்த படத்தில் இயக்குநர் ராம்தேவ் அரசியலை சொல்லி இருக்கிறார். என்னுடைய அரசியல் எல்லாம் குடும்பங்களில் தான் இருக்கும். அதற்காக நான் என்னுடைய படங்களை இயக்கும்போது சென்சார் பற்றி கவலைப்பட்டதில்லை.

இந்த படத்தின் பணிகள் நிறுத்தப்பட்ட போது இதனை தொடர்ந்து தயாரிக்க வேண்டும் என்று நினைத்து உதவிய தயாரிப்பாளர் கவிதாலயா சரவணனை பாராட்டுகிறேன்.
இந்த படம் இந்த நேரத்தில் அரசியல் நையாண்டியுடன் வந்தால் எதிர்பார்ப்பு கூடுதலாக தான் இருக்கும். சிரித்துக் கொண்டே காமெடியாக சொல்லும்போது ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்றார்.

dhamaraimurasu

dhamaraimurasu

dhamaraimurasu admin

Related Posts

கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் “ஊர் கூடும் இரவு” ஆவணப்படம் !

சென்னையைச் சேர்ந்த ரம்யா ஸ்ரீராம் புகைப்படக் கலைஞராகவும், பலகலைகள் பற்றிய தேடுதல் மனம் கொண்ட பயணியாகவும் இருக்கிறார்.மக்களிடையே பின்பற்றப்படும் சடங்கு வடிவங்களையும்,  விழாக்களையும் தனது கேமராவிற்குள் சிறைப் பிடிப்பது அவருக்கு விருப்பமான ஒன்று. அந்த வகையில்நமது பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவற்றை ஆவணப்படுத்துவதில்…

Read more

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரிப்பில், யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் நடிகர்கள் ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ‘ஹைக்கூ’. வரும் அக்டோபர் 23…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்கத்தவறிய செய்திகள்

“E 1” படத்தின் விமர்சனம்

“E 1” படத்தின் விமர்சனம்

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழாவில் 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழாவில் 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழா ! ஓவியர் ஜீவானந்தனுக்கு 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழா ! ஓவியர் ஜீவானந்தனுக்கு 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு 13.78 லட்சம் நிதியுதவி !

கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் “ஊர் கூடும் இரவு” ஆவணப்படம் !

கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் “ஊர் கூடும் இரவு” ஆவணப்படம் !

“ஆல்பாஸ்” விமர்சனம்

“ஆல்பாஸ்” விமர்சனம்

“தாய்நிலம்” விமர்சனம்

“தாய்நிலம்” விமர்சனம்

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

அதிமுகவின் பலவீனமா ? த.வெ.க வினரின் மோசடியா ?

அதிமுகவின் பலவீனமா ? த.வெ.க வினரின் மோசடியா ?

“அமெரிக்க ஆவி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“அமெரிக்க ஆவி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

அட்லான்டா இந்தியத் திரைப்பட விழாவில் “என்ன விலை” படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது !

அட்லான்டா இந்தியத் திரைப்பட விழாவில் “என்ன விலை” படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது !

நலிவுற்ற திருநங்கைகளுங்கு நிதியுதவி வழங்கிய “டோரதி” படக்குழு !

நலிவுற்ற திருநங்கைகளுங்கு நிதியுதவி வழங்கிய “டோரதி” படக்குழு !

“அன்பில் அவன் படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“அன்பில் அவன் படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“பத்தா” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“பத்தா” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

நாள்தோறும் நற்பணி ! ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன்

நாள்தோறும் நற்பணி ! ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன்

“ஒட்டாரம்” திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு !

“ஒட்டாரம்” திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு !

“சிக்மா” படத்தில் அறிமுகமானது எனக்கு பெருமை ! நடிகை ஃபரியா அப்துல்லா

“சிக்மா” படத்தில் அறிமுகமானது எனக்கு பெருமை ! நடிகை ஃபரியா அப்துல்லா

“அன்பில் அவன்” படத்தின் விமர்சனம்

“அன்பில் அவன்” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த நடிகர் !

“சிக்மா” படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த நடிகர் !

“பத்தா” படத்தின் விமர்சனம்

“பத்தா” படத்தின் விமர்சனம்

இயக்கமா ? நடிப்பா ? “சிக்மா” இயக்குநர் பேட்டி !

இயக்கமா ? நடிப்பா ? “சிக்மா” இயக்குநர் பேட்டி !

கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான் “சிக்மா” – இயக்குநர் சஞ்சய்

கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான் “சிக்மா” – இயக்குநர் சஞ்சய்

“தி டார்க் ஹெவன் படத்தின் வெற்றிக்கு, சொந்த ஊரில் விழா எடுத்த இயக்குநர் !

“தி டார்க் ஹெவன் படத்தின் வெற்றிக்கு, சொந்த ஊரில் விழா எடுத்த இயக்குநர் !

தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய பிரபல நடிகரின் மனைவி !

தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய பிரபல நடிகரின் மனைவி !

“கோல்டன் பாக்கியம்” டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு !

“கோல்டன் பாக்கியம்” டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு !

“கிட்டி” படத்தின் விமர்சனம்

“கிட்டி” படத்தின் விமர்சனம்

“த்ரிஷ்யம்_3” படத்தின் இந்தி பதிப்பை வெளியிட தடை கோரி வழக்கு !

“த்ரிஷ்யம்_3” படத்தின் இந்தி பதிப்பை வெளியிட தடை கோரி வழக்கு !

நான்கு மாநில டிஜிட்டல் & தொலைக்காட்சி துறைகளை ஒருங்கிணைக்கும் முயற்சி !

நான்கு மாநில டிஜிட்டல் & தொலைக்காட்சி துறைகளை ஒருங்கிணைக்கும் முயற்சி !

“துரோகம் பழகு படத்தின் டீசர் வெளியீட்டு விழா !

“துரோகம் பழகு படத்தின் டீசர் வெளியீட்டு விழா !

25 மாவட்டங்கள், 2 ஆயிரம் ரசிகர்கள் ! நடிகர் சூர்யா தலைமையில் பிரமாண்டமான விழா !

25 மாவட்டங்கள், 2 ஆயிரம் ரசிகர்கள் ! நடிகர் சூர்யா தலைமையில் பிரமாண்டமான விழா !

மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள “மக்கள் காவலன்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள “மக்கள் காவலன்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“பூஜா மேரி ஜான்” திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ஜீ_5 ஹிந்தியில் வெளியாகிறது

“பூஜா மேரி ஜான்” திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ஜீ_5 ஹிந்தியில் வெளியாகிறது

சாதிய வன்மத்தை விதைக்கும் “தி கிராண்ட் மாஸ்டர்” ! படத்தின் விமர்சனம்

சாதிய வன்மத்தை விதைக்கும் “தி கிராண்ட் மாஸ்டர்” ! படத்தின் விமர்சனம்

“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“#LOVE” வெப் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“#LOVE” வெப் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“தாய்நிலம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

“தாய்நிலம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

தனுஷின் ( D_56 ) புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

தனுஷின் ( D_56 ) புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

“ஏழு கடல் ஏழு மலை” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“ஏழு கடல் ஏழு மலை” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“டோரதி” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“டோரதி” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“தி டார்க் ஹெவன்” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“தி டார்க் ஹெவன்” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

மர்மம், ரகசியங்கள் நிறைந்த “ஆக்டோபஸ்” தொடர் ஜீ_5 தமிழில் வெளியாகிறது

மர்மம், ரகசியங்கள் நிறைந்த “ஆக்டோபஸ்” தொடர் ஜீ_5 தமிழில் வெளியாகிறது

ரசிகர்களின் அமோக வரவேற்பில் “என்ன விலை” திரைப்படம் !

ரசிகர்களின் அமோக வரவேற்பில் “என்ன விலை” திரைப்படம் !

“நல்ல படம்” திரைப்படத்தின் விமர்சனம்

“நல்ல படம்” திரைப்படத்தின் விமர்சனம்

“துரோகம் பழகு” படக்குழுவினரை  பாராட்டிய முதலமைச்சர் !

“துரோகம் பழகு” படக்குழுவினரை  பாராட்டிய முதலமைச்சர் !

பா. ரஞ்சித்தின் “வேட்டுவம்” படத்தின் அறிமுக வீடியோ வெளியீடு !

பா. ரஞ்சித்தின் “வேட்டுவம்” படத்தின் அறிமுக வீடியோ வெளியீடு !

விஜய் சேதுபதியின் “பத்தா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

விஜய் சேதுபதியின் “பத்தா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

பறிபோன மானத்திற்கு “என்ன விலை” என்ன விலை படத்தின் விமர்சனம்

பறிபோன மானத்திற்கு “என்ன விலை” என்ன விலை படத்தின் விமர்சனம்

“மண்டாடி” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“மண்டாடி” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“கஸ்தூரி வீடு” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“கஸ்தூரி வீடு” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

பாவனா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் “பிக்னிக்” படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு !

பாவனா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் “பிக்னிக்” படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு !

துல்கர் சல்மானின் “ஆகாசம்லோ ஓக தாரா” (AOT) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

துல்கர் சல்மானின் “ஆகாசம்லோ ஓக தாரா” (AOT) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

எம்.எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி “எம்.எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்” படத்தின் துவக்க விழா !

எம்.எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி “எம்.எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்” படத்தின் துவக்க விழா !

அர்ஜூன் தாஸ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

அர்ஜூன் தாஸ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

“அன்பில் அவன்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

நானி நடிப்பில் உருவாகியுள்ள “தி பாரடைஸ்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

நானி நடிப்பில் உருவாகியுள்ள “தி பாரடைஸ்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“என்ன விலை” படம் மறக்க முடியாத அனுபவம் ! நிமிஷா சஜயன்

“என்ன விலை” படம் மறக்க முடியாத அனுபவம் ! நிமிஷா சஜயன்

தி டார்க் ஹெவன் படத்தின் முன் வெளியீட்டு விழா !

தி டார்க் ஹெவன் படத்தின் முன் வெளியீட்டு விழா !

“பனங்காட்டான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“பனங்காட்டான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

அரசியலும் சமூக அக்கறையும் சேர்ந்து உருவான படம் தான் “ஆகாயம்” ! தினந்தோறும் நாகராஜ்

அரசியலும் சமூக அக்கறையும் சேர்ந்து உருவான படம் தான் “ஆகாயம்” ! தினந்தோறும் நாகராஜ்

“என்ன விலை” படத்தில் நான் நடித்த கதாப்பாத்திரம் மிகவும் சவாலானது ! கருணாஸ்

“என்ன விலை” படத்தில் நான் நடித்த கதாப்பாத்திரம் மிகவும் சவாலானது ! கருணாஸ்

“என்ன விலை” படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியது எனக்கு கிடைத்த வரம் !

“என்ன விலை” படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியது எனக்கு கிடைத்த வரம் !

“மண்டாடி” மூலம் மாஸ் ஹீரோவான சூரி ! மண்டாடி விமர்சனம்

“மண்டாடி” மூலம் மாஸ் ஹீரோவான சூரி ! மண்டாடி விமர்சனம்

வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகியுள்ள “நல்லபடம்” செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியீடு !

வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகியுள்ள “நல்லபடம்” செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியீடு !

சூர்யா நடித்துள்ள “சீன்” ( SCENE ) படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு !

சூர்யா நடித்துள்ள “சீன்” ( SCENE ) படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு !

“என்ன விலை” படத்தில் நடித்தது மிகவும் சவாலாக இருந்தது ! நடிகை ஷாஷா சிவக்குமார்

“என்ன விலை” படத்தில் நடித்தது மிகவும் சவாலாக இருந்தது ! நடிகை ஷாஷா சிவக்குமார்

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

அசோக் செல்வன் நடித்துள்ள “அன்பில் அவன்” வெளியீட்டு தேதி அறிவிப்பு !

அசோக் செல்வன் நடித்துள்ள “அன்பில் அவன்” வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“வதந்தி சீசன்_2” பற்றி மெய்சிலிர்க்கும் நடிகர் !

“வதந்தி சீசன்_2” பற்றி மெய்சிலிர்க்கும் நடிகர் !

“என்ன விலை” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“என்ன விலை” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

திரைப்பிரபலங்களுக்கு புதிய தீர்ப்பை பெற்றுத்தந்துள்ள நடிகை !

திரைப்பிரபலங்களுக்கு புதிய தீர்ப்பை பெற்றுத்தந்துள்ள நடிகை !

“வைல்ட் தமிழ்நாடு” இன்று முதல் பிவிஆர் திரையரங்குகளில் வெளியீடு !

“வைல்ட் தமிழ்நாடு” இன்று முதல் பிவிஆர் திரையரங்குகளில் வெளியீடு !

“மொத ராத்திரி” படக்குழுவினரின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“மொத ராத்திரி” படக்குழுவினரின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

கமல்ஹாசனின் புதிய படத்தின் “புகைப்படம்” சமூக வலைதளங்களில் வைரல் !

கமல்ஹாசனின் புதிய படத்தின் “புகைப்படம்” சமூக வலைதளங்களில் வைரல் !

நயன்தாராவின் “ஹாய்” படத்தின் விமர்சனம் !

நயன்தாராவின் “ஹாய்” படத்தின் விமர்சனம் !

மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க அலட்சியப்படுத்தும் அரசு அதிகாரிகள் ! நரிக்குறவர் இன மக்களின் போராட்டத்திற்கு தீர்வு எப்போது ?.!

மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க அலட்சியப்படுத்தும் அரசு அதிகாரிகள் ! நரிக்குறவர் இன மக்களின் போராட்டத்திற்கு தீர்வு எப்போது ?.!

“ஒன்ஸ்மோர்” படத்தின் திரைவிமர்சனம்

“ஒன்ஸ்மோர்” படத்தின் திரைவிமர்சனம்

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் மரணம் ! சோகத்தில் கிராம மக்கள் !

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் மரணம் ! சோகத்தில் கிராம மக்கள் !

தந்தை கொலை, பழிவாங்க துடிக்கும் மகள் ! “அமரம்” படத்தின் விமர்சனம்

தந்தை கொலை, பழிவாங்க துடிக்கும் மகள் ! “அமரம்” படத்தின் விமர்சனம்

திருப்பூரில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி தெருநாய்கள் கொடூர கொலை !

திருப்பூரில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி தெருநாய்கள் கொடூர கொலை !

தந்தை, மகன் உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் “ஃபாதர்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

தந்தை, மகன் உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் “ஃபாதர்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

“டாக்ஸிக்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“டாக்ஸிக்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

200 கோடி வசூல் சாதனை படைத்த “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம்

200 கோடி வசூல் சாதனை படைத்த “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம்

“ஒன்ஸ்மோர்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“ஒன்ஸ்மோர்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம் ! தெளிவில்லாத முதல்வரின் அறிவிப்பு !

கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம் ! தெளிவில்லாத முதல்வரின் அறிவிப்பு !

“Yourbackers play” உலகின் லாப நோக்கமற்ற OTT தளம் அறிமுகம் !

“Yourbackers play” உலகின் லாப நோக்கமற்ற OTT தளம் அறிமுகம் !

“இருமுடி கட்டு” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“இருமுடி கட்டு” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குரு சங்கருக்கு கொலை மிரட்டல் !

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குரு சங்கருக்கு கொலை மிரட்டல் !

“ஹலோ மிஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“ஹலோ மிஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

பழனி அருகே “தார் & டீசல்” திருட்டு ! புகார்தாரரை மிரட்டும் காவல் ஆய்வாளர் !.?

பழனி அருகே “தார் & டீசல்” திருட்டு ! புகார்தாரரை மிரட்டும் காவல் ஆய்வாளர் !.?

“அன்பில் அவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு !

“அன்பில் அவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு !

“ஐ ம் கேம்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“ஐ ம் கேம்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“பியார் பிரேமா கல்யாணம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“பியார் பிரேமா கல்யாணம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“பத்தா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“பத்தா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் டிரெய்லருக்கு அமோக வரவேற்பு !

டாக்ஸிக் படத்தின் டிரெய்லருக்கு அமோக வரவேற்பு !

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு !

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“வதந்தி சீசன் 2” குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“வதந்தி சீசன் 2” குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட “பியார் பிரேமா கல்யாணம்” தொடரின் முன்னோட்டம் !

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட “பியார் பிரேமா கல்யாணம்” தொடரின் முன்னோட்டம் !