“மௌன மொழிகள்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

ஸ்ரீவாரி என்டர்டெயின்மென்ட் (Sri Vaari Entertainment) நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ்.பி. பாலச்சந்திரன் மற்றும் பி. ஸ்ரீமன் தயாரிப்பில், இயக்குநர் ஏ.சி. சௌந்தர் இயக்கத்தில், பிரபல பின்னணிப் பாடகர் மனோவின் மகன் ஷாகிர் மனோ கதாநாயகனாகவும், அர்ச்சனா கதாநாயகியாகவும் நடித்துள்ள திரைப்படம் ‘மௌன மொழிகள்’ (Mouna Mozhigal). ஸ்ரீமன், திவ்யா, தலைவாசல் விஜய், மீரா கிருஷ்ணன், அர்ஜுன், இளவரசு, அஞ்சலிதேவி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

காதல் மற்றும் நகைச்சுவையை மையமாகக் கொண்டு, இன்றைய இளைஞர்களைக் கவரும் வகையில் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசித்து மகிழும் ஒரு கலகலப்பான கமர்ஷியல் பொழுதுபோக்குத் திரைப்படமாக ‘மௌன மொழிகள்’ உருவாகியுள்ளது.

வரும் நவம்பர் 27 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா திரையுலக நட்சத்திரங்கள், சமூக ஆளுமைகள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ளப் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன், பிரபல பின்னணிப் பாடகர் மனோ, சிறு படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ஆர்.கே. அன்புசெல்வன், இசையமைப்பாளர் சிற்பி, லியாகத் அலிகான், பாடகர் கானா பாலா, நடிகர் விஸ்வநாத் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வினில்… பாடகர் கானா பாலா பேசியதாவது, ‘மௌன மொழிகள்’ திரைப்படத்தில் ஷாகிர் மனோ மிகவும் சிறப்பாக நடித்திருக்கிறார். மனோ ஒரு சிறந்த பாடகர் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அவரது மகன் ஷாகிர் மனோ நடிப்பிலும் தனது திறமையைச் சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். இந்தப் படத்திற்காக நான் இரண்டு பாடல்கள் பாடியிருக்கிறேன். குறிப்பாக, இளைஞர்களைக் கவரும் வகையில் பாடல்களும் இசையும் சிறப்பாக அமைந்திருக்கின்றன.

சினிமாவில் குடும்பப் பின்னணி வாய்ப்புகளைப் பெற்றுத் தரலாம். ஆனால், திறமைதான் ஒருவரை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் ஷாகிர் மனோவிடம் நல்ல திறமை இருக்கிறது. அவர் தொடர்ந்து நல்ல படங்களில் நடித்து வளர வேண்டும். இந்தத் திரைப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது. தயாரிப்பாளர், இயக்குநர் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் கடினமாக உழைத்திருக்கிறார்கள். ஷாகிர் மனோவுக்கும், ‘மௌன மொழிகள்’ படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள். இந்தத் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என்றார்.

இசையமைப்பாளர் சிற்பி பேசியதாவது, ‘மௌன மொழிகள்’ என்ற தலைப்பே மிகவும் அழகாக இருக்கிறது. பொதுவாக மௌனம் என்பது மிகப்பெரிய ஆயுதம். எந்தப் பிரச்சினை வந்தாலும் உடனடியாகப் பதிலளிக்காமல் அமைதியாக இருந்தால் பல பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். அதேபோல் பல வெற்றிகளையும் பெற முடியும். அந்த வகையில் இந்தப் படத்தின் தலைப்பும், படத்தின் உள்ளடக்கமும் நிச்சயம் ரசிகர்களைக் கவரும் என்று நம்புகிறேன்.

மனோவின் மகன் ஷாகிர் மனோ ஏற்கெனவே ‘பட்டாக்கத்தி’ படத்தில் சிறப்பாக நடித்திருந்தார். இந்தப் படத்திலும் பாடல்களுக்கு ஏற்ப நடனம் ஆடியிருப்பதுடன், உணர்வுகள் மற்றும் ஆக்ஷன் எனப் பல்வேறு பரிமாணங்களில் தனது திறமையை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் ஒரு சிறந்த கதாநாயகனாக வளர வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

ஒரு திரைப்படத்தின் கதை மற்றும் உள்ளடக்கம் நன்றாக இருந்தால்தான் ரசிகர்கள் திரையரங்கிற்கு வருவார்கள். அந்த வகையில் ‘மௌன மொழிகள்’ திரைப்படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இருக்கிறது என்றார்.

பிரபல பின்னணிப் பாடகர் மனோ பேசியதாவது, படக்குழுவினர் எவ்வளவோ ஆசைகளுடனும் கனவுகளுடனும் பல மாதங்கள் கஷ்டப்பட்டு இந்தப் படத்தை உருவாக்கியிருப்பார்கள். ஒரு திரைப்படத்தின் பின்னால் எவ்வளவு உழைப்பு இருக்கிறது என்பது எனக்குத் தெரியும். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியடைய வேண்டும் என்று மனதார விரும்புகிறேன். அனைவருக்கும் எனது வாழ்த்துகள் என்றார்.

தயாரிப்பாளர் சங்க நிர்வாகி ஆர்.கே. அன்புசெல்வன் பேசியதாவது, இயக்குநர் ஏ.சி. சௌந்தர் இந்த நிகழ்ச்சியை ஒரு குடும்ப விழாவைப் போல அனைவரையும் அழைத்து நடத்திருப்பது பாராட்டுக்குரியது. அவருடைய இந்த அணுகுமுறைதான் ஒரு நல்ல இயக்குநருக்கான அடையாளம்.

தமிழகத்தில் சிறிய திரைப்படங்களுக்கான அரசு மானியத் திட்டத்தை 1989-ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி தொடங்கினார். தற்போது ஆண்டுக்கு 28 திரைப்படங்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படுகிறது. இன்றைய சூழலில் ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான சிறிய திரைப்படங்கள் தயாராகின்றன. எனவே, ஆண்டுக்கு குறைந்தது 100 திரைப்படங்களுக்காவது அரசு மானியம் வழங்க வேண்டும்.

திருமாவளவன் மூலம் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன். ஒரு திரைப்படம் திரையரங்குகளில் ஓடுகிறதா இல்லையா என்பதைத் தாண்டி, அரசிடமிருந்து கிடைக்கும் அந்த ஏழு லட்ச ரூபாய் மானியம் ஒரு சிறிய தயாரிப்பாளரின் குடும்பத்திற்குப் பெரிய ஆதரவாக இருக்கும். சிறிய தயாரிப்பாளர்களையும் அவர்களுடைய குடும்பங்களையும் காப்பாற்ற அரசு தொடர்ந்து உதவ வேண்டும்.

இயக்குநர் ஏ.சி. சௌந்தர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் படத்தை உருவாக்கி வைத்திருக்கிறார். தயாரிப்பாளர்களும் பல்வேறு சிரமங்களைக் கடந்து படத்தை வெளியிட முயற்சி செய்து வருகிறார்கள். படத்தின் பாடல்களையும் பார்த்தேன். நன்றாக வந்திருக்கின்றன. ஒரு திரைப்படத்தை உருவாக்குவது மட்டுமல்ல, அதை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கும் ஆதரவு தேவை. தயாரிப்பாளர்கள் யாரையும் ஏமாற்றாமல் நேர்மையாக படங்களை எடுக்க வேண்டும். சினிமாவில் யாருடைய முயற்சியையும் யாராலும் தடுக்க முடியாது. அதேபோல், ஏமாற்றி யாரும் நிரந்தரமாக வெற்றி பெற முடியாது. சிறிய படங்களுக்கும் ஆதரவு அளித்து, ஒவ்வொரு தயாரிப்பாளர் குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டும் என்றார்.

இசையமைப்பாளர் நள இளந்திரையன் பேசியதாவது, இயக்குனர் சௌந்தரராஜன் பல்வேறு பணிகளும் சிரமங்களும் இருந்தாலும் தினமும் காலையில் எங்கள் வீட்டிற்கு வந்து இசையமைப்புப் பணிகளில் ஈடுபடுவார். எங்கள் வீட்டிலேயே பாடல்களுக்கான கம்போஸிங் பணிகள் நடைபெற்றன. தொடர்ந்து பத்து நாட்களுக்கும் மேலாகப் பாடல்களுக்காக உழைத்திருக்கிறோம். அந்த உழைப்புக்கும் அர்ப்பணிப்புக்கும் அவருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இயக்குநர் ஏ.சி. சௌந்தர் பேசியதாவது, இந்த மேடையில் நான் நிற்பதற்கு முக்கியக் காரணம் என்னுடைய தயாரிப்பாளர்தான். அவர் என்மீது நம்பிக்கை வைத்து இந்தப் படத்தை உருவாக்க வாய்ப்பளித்தார். ஒரு மீடியம் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் பெரிய அளவில் பேசப்பட வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம்.
எங்களுக்காக எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் விளம்பரப் பணிகளில் உதவிய கானா பாலா, இசையமைப்பாளர் சிற்பி, எங்களைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தும் ஆர்.கே. அன்புசெல்வன் ஆகியோருக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தயாரிப்பாளரும் அவரது மகன் ஸ்ரீமனும் இந்தப் படத்திற்காக மிகுந்த ஆதரவும் ஊக்கமும் அளித்தனர். நடிகர் அர்ஜுன் உள்ளிட்ட அனைத்து நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நன்றி என்றார்.

தொல். திருமாவளவன் பேசியதாவது, ‘மௌன மொழிகள்’ என்ற அழகான தமிழ்த் தலைப்பைத் தேர்வு செய்த இயக்குநர் ஏ.சி. சௌந்தர் அவர்களை முதலில் பாராட்டுகிறேன். தமிழில் திரைப்படங்களுக்குப் பெயர் சூட்ட வேண்டும் என்று தமிழ் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் நாங்கள் வலியுறுத்திப் போராடியிருக்கிறோம். அந்த வகையில் ‘மௌன மொழிகள்’ என்பது கவித்துவமான தலைப்பு. பிரபல பாடகர் மனோவின் மகன் ஷாகிர் மனோ, சிறு முதலீட்டில் உருவாகும் ஒரு திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பெரிய முதலீடுகளைக் கொண்ட திரைப்படங்களுடன் போட்டியிடுவது கடினமான சூழலில், பாலச்சந்திரன், ஸ்ரீமன், வேலுமணி போன்றவர்கள் இணைந்து இந்தப் படத்தை உருவாக்கியிருப்பது பாராட்டுக்குரியது.

இன்றைய திரைப்பட உலகம் வெறும் பொழுதுபோக்குத் துறையாக மட்டும் இல்லை. சமூக மாற்றத்திலும், அரசியல் களத்திலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வலிமை கொண்டது. குறிப்பாக, தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்கும் அரசியலுக்கும் நீண்டகாலத் தொடர்பு இருந்து வருகிறது. ‘ரத்தக்கண்ணீர்’, ‘தண்ணீர் தண்ணீர்’ போன்ற திரைப்படங்கள் வணிகத்தைத் தாண்டி சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவை. இன்றைய இளம் இயக்குநர்கள் முற்போக்குச் சிந்தனையுடன் திரைப்படங்களை உருவாக்கி வருவது மகிழ்ச்சியளிக்கிறது. சாதிப் பெருமிதம், பெண்ணடிமைத்தனம், மூடநம்பிக்கைகள் போன்றவற்றுக்கு இடமளிக்காமல், சமூக சமத்துவம், பெண்களின் ஆளுமை, ஜனநாயகச் சிந்தனை ஆகியவற்றை முன்னிறுத்தும் படைப்புகள் அதிகரிக்க வேண்டும்.

திரைப்படத்திற்கும் அரசியலுக்கும் தமிழ்நாட்டில் நீண்டகாலத் தொடர்பு இருந்து வருகிறது. திரைத்துறையின் தாக்கம் அரசியல் களத்திலும் பிரதிபலிக்கிறது. அதன் தொடர்ச்சியாகத்தான் நடிகர் விஜய் இன்று தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கிறார். இதனை விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டு, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத ஒரு நிகழ்வாகப் பார்க்க வேண்டும்.

காதல் என்பது மனித வாழ்வியலோடு இயல்பாக இணைந்திருக்கும் ஓர் உணர்வு. அதை நல்ல காதல், தவறான காதல் என்று வரையறுக்க முடியாது. சங்க இலக்கியங்கள் தொடங்கி இன்றைய திரைப்படங்கள் வரை காதல் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. இன்னும் ஆயிரக்கணக்கான திரைப்படங்களில் காதல் வெவ்வேறு கோணங்களில் பேசப்படும். அதேபோல், திரைப்படங்கள் வெறும் லாபத்தைக் கணக்கிடும் வணிகமாக இல்லாமல், சமூக முன்னேற்றத்திற்கும் மாற்றத்திற்கும் பங்களிக்கும் களமாக இருக்க வேண்டும். இளம் இயக்குநர்கள் இந்தப் புரிதலுடனும், உறுதிப்பாட்டுடனும் தங்களது படைப்புகளை உருவாக்க வேண்டும். அந்த வகையில் ‘மௌன மொழிகள்’ திரைப்படம் தமிழ் மக்களின் பேராதரவைப் பெற்று வெற்றியடைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன் என்றார்.

dhamaraimurasu

dhamaraimurasu

dhamaraimurasu admin

Related Posts

கோவா சர்வதேச திரைப்பட விழா ! சிறப்பு விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட “SCROLL” திரைப்படம் !

K16 ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘Scroll’ திரைப்படம், கோவாவில் நடைபெறவுள்ள 57-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் (57th International Film Festival of India – IFFI 2026), ‘Indian Panaroma’ பிரிவில் திரையிடத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அத்தோடு   ICFT-UNESCO…

Read more

“சத்தியவான் சாவித்திரி” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

Drumsticks Productions மற்றும் Zee Studios நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘சத்தியவான் சாவித்திரி’. வெடிக்காரன்பட்டி S. சக்திவேல் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S. விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் முதன்மைப் பாத்திரத்திலும், மிஷ்கின் முக்கியக் கதாபாத்திரத்திலும்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்கத்தவறிய செய்திகள்

கோவா சர்வதேச திரைப்பட விழா ! சிறப்பு விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட “SCROLL” திரைப்படம் !

கோவா சர்வதேச திரைப்பட விழா ! சிறப்பு விருதிற்கு பரிந்துரைக்கப்பட்ட “SCROLL” திரைப்படம் !

அதிகரிக்கும் போதைப்பொருள் நடமாட்டம் ! 700 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் ! 

அதிகரிக்கும் போதைப்பொருள் நடமாட்டம் ! 700 கோடி மதிப்பிலான ஹெராயின் பறிமுதல் ! 

“சத்தியவான் சாவித்திரி” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“சத்தியவான் சாவித்திரி” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“சிட்டுக்குறிஞ்சி” படத்தின் இசை வெளியீட்டு விழா

“சிட்டுக்குறிஞ்சி” படத்தின் இசை வெளியீட்டு விழா

குற்றச் செயல்களில் ஈடுபடும் தவெக நிர்வாகிகளை கைது செய்யாதது ஏன் ?.!

குற்றச் செயல்களில் ஈடுபடும் தவெக நிர்வாகிகளை கைது செய்யாதது ஏன் ?.!

“பிளாக் கோல்டு” விமர்சனம்

“பிளாக் கோல்டு” விமர்சனம்

சர்வதேச விழாக்களில் 7 விருதுகள் வென்ற “வன மடி” திரைப்படம் !

சர்வதேச விழாக்களில் 7 விருதுகள் வென்ற “வன மடி” திரைப்படம் !

“அப்பா குட்டி” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“அப்பா குட்டி” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

பெற்றோர்களே உஷார் ! கராத்தே சங்கங்களுக்கு தடை ! இந்திய ஒலிம்பிக் சங்கம் நடவடிக்கை

பெற்றோர்களே உஷார் ! கராத்தே சங்கங்களுக்கு தடை ! இந்திய ஒலிம்பிக் சங்கம் நடவடிக்கை

கடந்த ஆட்சியைவிட குறைந்த விலைக்கு சைக்கிள் டெண்டர் !

கடந்த ஆட்சியைவிட குறைந்த விலைக்கு சைக்கிள் டெண்டர் !

எம்எல்ஏக்கள் மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன் ? – திமுக

எம்எல்ஏக்கள் மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன் ? – திமுக

அஜய் கார்த்தி, தீபா பாலு நடிக்கும் “ஸ்டேஷன்” திரைப்படம்

அஜய் கார்த்தி, தீபா பாலு நடிக்கும் “ஸ்டேஷன்” திரைப்படம்

“மௌன மொழிகள்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“மௌன மொழிகள்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“மூக்குத்தி அம்மன்_2” விமர்சனம்

“மூக்குத்தி அம்மன்_2” விமர்சனம்

சூர்யாவின் “சீன்” படத்தின் விமர்சனம்

சூர்யாவின் “சீன்” படத்தின் விமர்சனம்

“பௌமா” மற்றும் “டூக்ஸ்” படங்களை ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் தென்னிந்தியாவில் வெளியிடுகிறது

“பௌமா” மற்றும் “டூக்ஸ்” படங்களை ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் தென்னிந்தியாவில் வெளியிடுகிறது

ஆதரவற்றோருடன் தீபாவளி கொண்டாடிய காவல்துறையினர் !

ஆதரவற்றோருடன் தீபாவளி கொண்டாடிய காவல்துறையினர் !

பிறந்தநாளில் “சண்டியர்” படப்பிடிப்பை தொடங்கிய கமல்ஹாசன்

பிறந்தநாளில் “சண்டியர்” படப்பிடிப்பை தொடங்கிய கமல்ஹாசன்

மாநில உரிமையை பாதுகாக்கத் தவறிய அரசு ! – எஸ்டிபிஐ கண்டனம்

மாநில உரிமையை பாதுகாக்கத் தவறிய அரசு ! – எஸ்டிபிஐ கண்டனம்

பெரியார் அறிவுலக புத்தக முறைகேடு புகார் ! நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல் !

பெரியார் அறிவுலக புத்தக முறைகேடு புகார் ! நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல் !

அதிமுக பிரமுகர் மன்னன் காலையில் கைது ! மாலையில் விடுவிப்பு !

அதிமுக பிரமுகர் மன்னன் காலையில் கைது ! மாலையில் விடுவிப்பு !

சூப்பர் ஸ்டார் நடிக்கும் “தர்மன்” திரைப்படத்தில் இணைந்த நடிகை ஶ்ரீ லீலா

சூப்பர் ஸ்டார் நடிக்கும் “தர்மன்” திரைப்படத்தில் இணைந்த நடிகை ஶ்ரீ லீலா

உ.வே.சா நூலகத்தில் ஆய்வு செய்த நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் !

உ.வே.சா நூலகத்தில் ஆய்வு செய்த நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற நிர்வாகிகள் !

பல்லடத்தில் விதிமீறி கட்டப்படும் பிரபல நகைக்கடை கட்டிடம் ! கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம் !

பல்லடத்தில் விதிமீறி கட்டப்படும் பிரபல நகைக்கடை கட்டிடம் ! கண்டுகொள்ளாத நகராட்சி நிர்வாகம் !

சோதனைகளை கடந்து.. விடாமுயற்சியால் நாட்டிற்காக இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற சிம்ரன் !

சோதனைகளை கடந்து.. விடாமுயற்சியால் நாட்டிற்காக இரண்டு தங்கப் பதக்கங்களை வென்ற சிம்ரன் !

35 நாட்களுக்கு முன் காணாமல் போன பெண் குழந்தையை மீட்ட போலீசார் !

35 நாட்களுக்கு முன் காணாமல் போன பெண் குழந்தையை மீட்ட போலீசார் !

அகவிலைப்படி உயர்வால், உற்சாகத்தில் மத்திய அரசு ஊழியர்கள் !

அகவிலைப்படி உயர்வால், உற்சாகத்தில் மத்திய அரசு ஊழியர்கள் !

“லவ் 3 ஓ” படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு !

“லவ் 3 ஓ” படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு !

யோகி பாபுவின் “அர்ஜூனன் பேர் பத்து” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

யோகி பாபுவின் “அர்ஜூனன் பேர் பத்து” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு

“ஹைக்கூ” படத்தின் விமர்சனம்

“ஹைக்கூ” படத்தின் விமர்சனம்

கௌதம்மேனனின் 25 ஆண்டுகள் திரையுலக பயணம் ! கோலாலம்பூரில் இசைக் கொண்டாட்டம்

கௌதம்மேனனின் 25 ஆண்டுகள் திரையுலக பயணம் ! கோலாலம்பூரில் இசைக் கொண்டாட்டம்

யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள “சிங்காரம்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

யோகி பாபு நடிப்பில் உருவாகியுள்ள “சிங்காரம்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

பெண்களின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் “ஹைக்கூ” திரைப்படம் ! – நடிகை ஃபெமினா ஜார்ஜ்

பெண்களின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் “ஹைக்கூ” திரைப்படம் ! – நடிகை ஃபெமினா ஜார்ஜ்

“ஹைக்கூ” ஒரு ஃபீல் குட் எண்டர்டெயின்மெண்ட் திரைப்படம் !

“ஹைக்கூ” ஒரு ஃபீல் குட் எண்டர்டெயின்மெண்ட் திரைப்படம் !

திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ! “ஹைக்கூ” பட தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி !

திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ! “ஹைக்கூ” பட தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி !

“ஹைக்கூ” படத்தில் மௌனமாக ஒரு கதாப்பாத்திரமாகவே பயணிக்கும் இசை !

“ஹைக்கூ” படத்தில் மௌனமாக ஒரு கதாப்பாத்திரமாகவே பயணிக்கும் இசை !

ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் “ஹைக்கூ”. – நடிகர் ஏகன்

ஒரு மனிதனின் வாழ்க்கையில் இருவேறு காலக்கட்டங்களை பேசும் திரைப்படம் “ஹைக்கூ”. – நடிகர் ஏகன்

அமைச்சர் பதவிக்காக அடிப்படை கொள்கையிலிருந்து விலகி நிற்கும் விசிக ! – பனையூர் பாபு

அமைச்சர் பதவிக்காக அடிப்படை கொள்கையிலிருந்து விலகி நிற்கும் விசிக ! – பனையூர் பாபு

குற்றச்சாட்டு எழுந்ததால் பணியிடை மாற்றம் ! உடனடியாக பதவி உயர்வு கொடுத்ததன் பின்னனி என்ன ?.!

குற்றச்சாட்டு எழுந்ததால் பணியிடை மாற்றம் ! உடனடியாக பதவி உயர்வு கொடுத்ததன் பின்னனி என்ன ?.!

நகைச்சுவை கலந்த வித்தியாசமான காதல் கதை !

நகைச்சுவை கலந்த வித்தியாசமான காதல் கதை !

“மெர்சல்” படத்தின் பணப்பரிவர்த்தனை விவகாரம் ! நடிகை ஶ்ரீ பிரியா நிறுவனத்திற்கு வெற்றி !

“மெர்சல்” படத்தின் பணப்பரிவர்த்தனை விவகாரம் ! நடிகை ஶ்ரீ பிரியா நிறுவனத்திற்கு வெற்றி !

கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளில் “அக்கா” தொடரின் டீசர் வெளியானது !

கீர்த்தி சுரேஷின் பிறந்தநாளில் “அக்கா” தொடரின் டீசர் வெளியானது !

“சட்டமும் நீதியும் 2” தொடரின் டிரெய்லரை வெளியிடப்பட்டது தமிழ் ZEE 5 !

“சட்டமும் நீதியும் 2” தொடரின் டிரெய்லரை வெளியிடப்பட்டது தமிழ் ZEE 5 !

சந்தீப் கிஷன் நடிக்கும் “கரிகாலா” திரைப்படம் பூஜையுடன் ஆரம்பம் !

சந்தீப் கிஷன் நடிக்கும் “கரிகாலா” திரைப்படம் பூஜையுடன் ஆரம்பம் !

துல்கர் சல்மானின் “ஏ ஓ டி” ( AOT ) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

துல்கர் சல்மானின் “ஏ ஓ டி” ( AOT ) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“ஸ்லம் டாக்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு, வெளியீட்டு தேதி விரைவில்..

“ஸ்லம் டாக்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு, வெளியீட்டு தேதி விரைவில்..

தேவா மண்ணை விட்டு மறைந்தாலும், அவரது தேனிசை தென்றல் காற்று வீசுவது நிற்காது ! – முக ஸ்டாலின்

தேவா மண்ணை விட்டு மறைந்தாலும், அவரது தேனிசை தென்றல் காற்று வீசுவது நிற்காது ! – முக ஸ்டாலின்

“ராமாயணா” படத்தின் புதிய சர்வதேச டிரெய்லர் வெளியானது !

“ராமாயணா” படத்தின் புதிய சர்வதேச டிரெய்லர் வெளியானது !

“சிக்னல் அட் 11.30” படத்தின் “ஜோ ஜோ மாமா” பாடல் வெளியீடு !

“சிக்னல் அட் 11.30” படத்தின் “ஜோ ஜோ மாமா” பாடல் வெளியீடு !

“இது நம்ம குடும்பம்” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“இது நம்ம குடும்பம்” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“ஹபீபி” படக்குழுவினருக்கு பாராட்டுவிழா !

“ஹபீபி” படக்குழுவினருக்கு பாராட்டுவிழா !

ஊர்வசி நடிப்பில் உருவாகியுள்ள “ஆஷா” திரைப்படம் அக்டோபர் 16 முதல் மலையாளம் ஜீ_5 ல் வெளியாகிறது

ஊர்வசி நடிப்பில் உருவாகியுள்ள “ஆஷா” திரைப்படம் அக்டோபர் 16 முதல் மலையாளம் ஜீ_5 ல் வெளியாகிறது

சூரியின் புதிய திரைப்படத்த கிளாப் அடித்து துவக்கி வைத்த சிவகார்த்திகேயன் !

சூரியின் புதிய திரைப்படத்த கிளாப் அடித்து துவக்கி வைத்த சிவகார்த்திகேயன் !

“டோரதி” திரைப்படம் நான் எதிர்பார்த்த அங்கீகாரம் பெற்றுத் தந்துள்ளது. ஜீவா சுப்பிரமணியம் !

“டோரதி” திரைப்படம் நான் எதிர்பார்த்த அங்கீகாரம் பெற்றுத் தந்துள்ளது. ஜீவா சுப்பிரமணியம் !

டுபாக்கூர் முதலமைச்சரும், கூடுதல் விலைக்கு மின்சார கொள்முதலும் ! – உதயநிதி விமர்சனம்

டுபாக்கூர் முதலமைச்சரும், கூடுதல் விலைக்கு மின்சார கொள்முதலும் ! – உதயநிதி விமர்சனம்

அ,தி,மு,கவை த,வெ,க வின் சார்பு இயக்கமாக மாற்ற நினைக்கும் வேலுமணி ! கட்சியை காப்பாற்ற கூட்டுத் தலைமை அவசியம் !

அ,தி,மு,கவை த,வெ,க வின் சார்பு இயக்கமாக மாற்ற நினைக்கும் வேலுமணி ! கட்சியை காப்பாற்ற கூட்டுத் தலைமை அவசியம் !

“ஜெய்” நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் !

“ஜெய்” நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் !

“E 1” படத்தின் விமர்சனம்

“E 1” படத்தின் விமர்சனம்

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழாவில் 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழாவில் 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழா ! ஓவியர் ஜீவானந்தனுக்கு 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழா ! ஓவியர் ஜீவானந்தனுக்கு 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு 13.78 லட்சம் நிதியுதவி !

கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் “ஊர் கூடும் இரவு” ஆவணப்படம் !

கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் “ஊர் கூடும் இரவு” ஆவணப்படம் !

“ஆல்பாஸ்” விமர்சனம்

“ஆல்பாஸ்” விமர்சனம்

“தாய்நிலம்” விமர்சனம்

“தாய்நிலம்” விமர்சனம்

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

அதிமுகவின் பலவீனமா ? த.வெ.க வினரின் மோசடியா ?

அதிமுகவின் பலவீனமா ? த.வெ.க வினரின் மோசடியா ?

“அமெரிக்க ஆவி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“அமெரிக்க ஆவி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

அட்லான்டா இந்தியத் திரைப்பட விழாவில் “என்ன விலை” படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது !

அட்லான்டா இந்தியத் திரைப்பட விழாவில் “என்ன விலை” படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது !

நலிவுற்ற திருநங்கைகளுங்கு நிதியுதவி வழங்கிய “டோரதி” படக்குழு !

நலிவுற்ற திருநங்கைகளுங்கு நிதியுதவி வழங்கிய “டோரதி” படக்குழு !

“அன்பில் அவன் படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“அன்பில் அவன் படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“பத்தா” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“பத்தா” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

நாள்தோறும் நற்பணி ! ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன்

நாள்தோறும் நற்பணி ! ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன்

“ஒட்டாரம்” திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு !

“ஒட்டாரம்” திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு !

“சிக்மா” படத்தில் அறிமுகமானது எனக்கு பெருமை ! நடிகை ஃபரியா அப்துல்லா

“சிக்மா” படத்தில் அறிமுகமானது எனக்கு பெருமை ! நடிகை ஃபரியா அப்துல்லா

“அன்பில் அவன்” படத்தின் விமர்சனம்

“அன்பில் அவன்” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த நடிகர் !

“சிக்மா” படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த நடிகர் !

“பத்தா” படத்தின் விமர்சனம்

“பத்தா” படத்தின் விமர்சனம்

இயக்கமா ? நடிப்பா ? “சிக்மா” இயக்குநர் பேட்டி !

இயக்கமா ? நடிப்பா ? “சிக்மா” இயக்குநர் பேட்டி !

கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான் “சிக்மா” – இயக்குநர் சஞ்சய்

கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான் “சிக்மா” – இயக்குநர் சஞ்சய்

“தி டார்க் ஹெவன் படத்தின் வெற்றிக்கு, சொந்த ஊரில் விழா எடுத்த இயக்குநர் !

“தி டார்க் ஹெவன் படத்தின் வெற்றிக்கு, சொந்த ஊரில் விழா எடுத்த இயக்குநர் !

தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய பிரபல நடிகரின் மனைவி !

தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய பிரபல நடிகரின் மனைவி !

“கோல்டன் பாக்கியம்” டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு !

“கோல்டன் பாக்கியம்” டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு !

“கிட்டி” படத்தின் விமர்சனம்

“கிட்டி” படத்தின் விமர்சனம்

“த்ரிஷ்யம்_3” படத்தின் இந்தி பதிப்பை வெளியிட தடை கோரி வழக்கு !

“த்ரிஷ்யம்_3” படத்தின் இந்தி பதிப்பை வெளியிட தடை கோரி வழக்கு !

நான்கு மாநில டிஜிட்டல் & தொலைக்காட்சி துறைகளை ஒருங்கிணைக்கும் முயற்சி !

நான்கு மாநில டிஜிட்டல் & தொலைக்காட்சி துறைகளை ஒருங்கிணைக்கும் முயற்சி !

“துரோகம் பழகு படத்தின் டீசர் வெளியீட்டு விழா !

“துரோகம் பழகு படத்தின் டீசர் வெளியீட்டு விழா !

25 மாவட்டங்கள், 2 ஆயிரம் ரசிகர்கள் ! நடிகர் சூர்யா தலைமையில் பிரமாண்டமான விழா !

25 மாவட்டங்கள், 2 ஆயிரம் ரசிகர்கள் ! நடிகர் சூர்யா தலைமையில் பிரமாண்டமான விழா !

மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள “மக்கள் காவலன்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள “மக்கள் காவலன்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“பூஜா மேரி ஜான்” திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ஜீ_5 ஹிந்தியில் வெளியாகிறது

“பூஜா மேரி ஜான்” திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ஜீ_5 ஹிந்தியில் வெளியாகிறது

சாதிய வன்மத்தை விதைக்கும் “தி கிராண்ட் மாஸ்டர்” ! படத்தின் விமர்சனம்

சாதிய வன்மத்தை விதைக்கும் “தி கிராண்ட் மாஸ்டர்” ! படத்தின் விமர்சனம்

“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“#LOVE” வெப் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“#LOVE” வெப் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“தாய்நிலம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

“தாய்நிலம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

தனுஷின் ( D_56 ) புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

தனுஷின் ( D_56 ) புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

“ஏழு கடல் ஏழு மலை” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“ஏழு கடல் ஏழு மலை” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“டோரதி” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“டோரதி” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“தி டார்க் ஹெவன்” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“தி டார்க் ஹெவன்” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

மர்மம், ரகசியங்கள் நிறைந்த “ஆக்டோபஸ்” தொடர் ஜீ_5 தமிழில் வெளியாகிறது

மர்மம், ரகசியங்கள் நிறைந்த “ஆக்டோபஸ்” தொடர் ஜீ_5 தமிழில் வெளியாகிறது

ரசிகர்களின் அமோக வரவேற்பில் “என்ன விலை” திரைப்படம் !

ரசிகர்களின் அமோக வரவேற்பில் “என்ன விலை” திரைப்படம் !