தமிழக வெற்றிக் கழகத்தின் மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினரிடம், அதிமுக பிரமுகர் மன்னன், ஆட்சியை கவிழ்க்க குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகக் கூறி, இன்று காலையில் மன்னை கைது செய்தனர். பின்னர் விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க காவல்துறையினர் தீவிரம் காட்டினர்.

ஆனால் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகக் கூறி, தவெக ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்ததாக காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்த ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு, கைதுசெய்யப்பட்ட அதிமுக பிரமுகர் மன்னனை சிறையில் அடைக்க முகாந்திரம் இல்லை. காவல்துறையினர் உடனடியாக விடுவிக்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.




































































































