“தி டார்க் ஹெவன்” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

அண்மையில் வெளியான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. இப்படத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா, ரித்விகா ஆகியோருடன் பிரதீப், வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால், ஆர்த்தி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தை பாலாஜி இயக்கியிருந்தார். இவர் ஏற்கெனவே ‘D3’ என்ற படத்தை இயக்கியவர். ஒளிப்பதிவு, மணிகண்டன் பிகே, படத்தொகுப்பு, ராஜா ஆறுமுகம், இசை, சக்தி பாலாஜி என்ற தொழில்நுட்பக் கூட்டணியுடன் இந்தப் படத்தை கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்திருந்தன.

சமீபத்தில் வெளிவந்த  படங்களில் வித்தியாசமான க்ரைம் த்ரில்லர் என்று பெயர் பெற்று ஊடகங்களால் பெரிதும் பாராட்டப்பட்ட இந்த ‘தி டார்க் ஹெவன்’ ரசிகர்களின் வரவேற்பையும் பெற்று பெரிய வெற்றி பெற்றுள்ளது. இது சிறு முதலீட்டுப் படத் தயாரிப்பாளர்கள் மத்தியில் பெரிய நம்பிக்கை வெளிச்சத்தைக் கொடுத்திருக்கிறது. படத்துக்குக் கிடைத்திருக்கும் வரவேற்பினைத் தொடர்ந்து திரையரங்குகளின் எண்ணிக்கை அதிகமாக்கப்பட்டு வெற்றிப்பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இந்த வெற்றி மகிழ்ச்சியை முன்னிட்டு படக்குழுவினர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், தங்கள் மகிழ்ச்சியையும் நன்றியையும் பகிர்ந்து கொண்டார்கள்.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் ஜி. தனஞ்ஜெயன் கலந்து கொண்டு பேசும்போது, முதலில் இந்தப் படத்தின் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்தப் படம் வெளியாவதற்கு ஆறு மாதத்திற்கு முன்பு நான் பார்த்தேன். பார்த்தவுடன் இயக்குநர் பாலாஜியிடம் படம் நல்ல த்ரில்லராக வந்து இருக்கிறது. சரியான தேதியில் வெளியிட்டால் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று கூறினேன். இந்தக் தேதியைக் குறிபிட்டபோது நான் பாலாஜியிடம் கேட்டேன். இந்தத் தேதி சரியானதுதானா ?அன்றைக்கு ஒன்பது படங்கள் வருகின்றன. ஏற்கெனவே ‘மண்டாடி’ நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது என்றேன். அப்போது அவர் இல்லை சார் இந்தத் தேதியை முடிவு செய்துவிட்டோம் அதற்குக் கொண்டு வருகிறோம் என்றார். ஒன்பது படங்களுக்கு மத்தியில் இந்தப் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்கு ஊடகங்கள் கொடுத்த ஆதரவும் பார்வையாளர்கள் கொடுத்த ஆதரவும் தான் காரணம். எனது வாழ்த்துக்கள். இதை ஒரு மிகப்பெரிய வெற்றியாக நான் பார்க்கிறேன். இத்தனை படங்கள் நடுவில் மக்கள் பெரிய படங்களை தான் பார்ப்போம், பெரிய நட்சத்திர நடிகர் நடித்த படங்களைத்தான் பார்ப்போம் என்றிருக்கிற சூழலில் இந்தப் படத்திற்குக் கிடைத்திருக்கும் வெற்றி என்பது  கொண்டாடப்பட வேண்டிய வெற்றிதான்.
ஒரு திரைப்படம் எடுக்கும்போது ஒரு நடிகர் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால் எவ்வளவு பிரச்சினைகளை அந்தப் படம் சந்திக்குமோ அத்தனையையும் இந்தப் படம் சந்தித்திருக்கிறது. அதுவும் அறுபது, எழுபது சதவீதம் படப்பிடிப்பு முடிந்த பிறகு அந்த நடிகருடன் தொடர்ந்து போக முடியவில்லை என்று  தயாரிப்பாளரும் இயக்குநரும் முடிவு செய்து நிறுத்தி விடுவோம் என்று முடிவு எடுப்பது யாரும் சுலபமாக எடுக்க முடியாது. சில வருடங்களுக்கு முன்பு எனக்கும் அப்படித்தான் நடந்தது. ஒரு பெரிய நடிகருடன் பிரச்சினைகளால் அந்தப் படத்தை முடிக்க முடியாமல் திணறினேன். படங்கள் வளர்ந்த பிறகு, செலவு செய்த பிறகு எங்களால் அப்படி ஒரு முடிவு ஒன்று எடுக்க முடியவில்லை. படத்துக்காக நீண்ட தூரம் வந்து விட்டோம், நிறைய செலவாகிவிட்டது என்று தயங்கினோம். அப்படிப்பட்ட நிலையில் படத்தை நிறுத்திவிட்டு வேறு படம் எடுப்பது சாதாரண விஷயம் அல்ல. அது தெரிந்து சித்து ஈடுபாட்டுடன் நடிக்க வந்தது பாராட்டுக்குரியது. அவரது நடிப்பு பிரமிப்பாக இருக்கிறது. இன்று திரையரங்குகளில் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறது. நடிகர்கள் நடிக்க ஒப்புக்கொள்ளும் போது எல்லாவற்றையும் சரியாகப் பேசிக் கொண்டு ஒப்பந்தம் செய்ய வேண்டும். பிறகு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.  இல்லாவிட்டால் வாய்ப்பு இல்லாமல் இருக்க வேண்டியதுதான். எல்லாவற்றையும் மீறி இந்தப் படம் வரவேற்பு பெற்றுள்ளது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தப் படத்திற்கு பிவிஆர் சினிமா கொடுத்த ஆதரவு பெரிய விஷயம். அவர்கள் சிறு முதலீட்டுப் படங்களுக்கும் வாராவாரம் திரையரங்குகள் தர வேண்டும். படக் குழுவினருக்கு வாழ்த்துக்கள் என்றார்.

இயக்குநர் பாலாஜி பேசும்போது,
இது உண்மையிலேயே ஒரு உணர்ச்சிகரமான தருணம். இப்போதும் அந்த அறுபது, எழுபது சதவீத படத்தை எடுத்து விட்டுத் தூக்கிப் போட்டது என் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது. இந்தப் படம் வருவதற்கு இந்தத் தயாரிப்பாளர்கள் இருவர் முக்கியமானவர்கள். சகோதரர் ஷரண், கோபால் சார் இவர்கள் முக்கியமானவர்கள். அதையும் தாண்டி என் மனைவி, என் சகோதரர்,குடும்பத்தினர், நண்பர்கள், என் குழுவினர்   உட்பட பலரும் பெரிய பக்க பலமாக இருந்தார்கள். அதையும் தாண்டி பலரும் எனக்கு  உதவியாக இருந்திருக்கிறார்கள். மீண்டும் ஒரு படத்தைத் தொடங்குவதற்கு எனது குழுவினர் எனக்குப் பெரிய பலமாக இருந்தார்கள். வேல ராமமூர்த்தி சார், ஜெயக்குமார் சார் எனக்குத் துணையாக இருந்திருக்கிறார்கள். சிந்து, ரித்விகா மேம், தர்ஷிகா மேம் நீண்ட நாட்கள் என்னுடன் படப்பிடிப்பில் இருந்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் 18 மணி நேரம் கூட வேலை செய்திருக்கிறார்கள். சித்து என்னுடனே மினி டூர் போல வந்து கொண்டே இருந்தார். என்னுடைய ஒளிப்பதிவாளர் மணிகண்டன், அவருக்கு பெரிய நன்றி. என் முதல் படத்திற்கும் எனது அடுத்த படத்திற்கும் அவர்தான் ஒளிப்பதிவாளர். எங்களுக்குள் கருத்து வேறுபாடு  வரும், ஆனால் எதையும் வெளிப்படையாகப் பேசிக் கொள்ளலாம். சண்டை போட்டாலும் உடனே மறந்துவிட்டு டீ சாப்பிடக் கூப்பிட்டால் வருவார். அப்படிப்பட்டவர்தான் எடிட்டர் ராஜா ஆறுமுகமும். ஒரு படம் எடுத்து முடிக்கப்பட்டதை ஏற்கெனவே ஒரு நடிகரை வைத்து எடுத்த படத்தில் தேவையற்றதைத் தூக்கி விட்டுத் தேவையானதை எடுத்து மீண்டும் எடுக்கப்பட்டதோடு சேர்த்துக் கொண்டு வருவது என்பது சாதாரண விஷயம் அல்ல. அது சுலபமானது கிடையாது. அவர் செய்தார். மூன்றாவது நபராக வந்து எனது குடும்பத்தில் ஒருவராக மாறி இருக்கிறார் இசையமைப்பாளர் சக்தி பாலாஜி. இந்தப் படம் வந்தால் மூன்று பேருக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று நான் அப்போதே சொன்னேன். ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், எடிட்டர் அதற்குப் பிறகுதான் இயக்குநர் யார் என்று கேட்பார்கள் என்று சொன்னேன். அதுதான் இன்று நடந்திருக்கிறது. சக்தி பாலாஜியின் இசையைப் பற்றிப் பலரும் பேசும்போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாக இருக்கிறது. என் இதயத்திலிருந்து சொல்கிறேன் அவர் பெரிய ஆளாக வருவார். சகோதரர் ஷரண், கோபால் சார் இல்லாமல் இந்தப் படம் இல்லை. இந்த மேடையும் இல்லை. சிலருக்கு இந்தப் படம் வருமா வராதா என்ற சந்தேகம்  இருந்தாலும் பலரும் நம்பிக்கையோடு உழைத்தார்கள். எல்லாருமே வெற்றிக்காகப் பாடுபட்டார்கள். படம் வெற்றிகரமாக போய்க்கொண்டிருக்கும் போது பழைய சர்ச்சைகளுக்குள் எல்லாம் நான் போக விரும்பவில்லை இப்போதைய சந்திப்பு வழக்கமான சக்சஸ் மீட் போல் நடைபெறுவதாக யாரும் சொல்லக்கூடாது என்று நினைத்தேன். தயாரிப்பாளர் கோபால் சார் தான் வைக்க வேண்டும் என்றார். இதை ஏற்பாடு செய்தோம் என்றார்.

நடிகை தர்ஷிகா பேசும் போது,
வேர்ட் ஆப் மௌத் என்பதை நான் நம்புகிறேன்.சொல் என்பது மிக முக்கியமானது. அதற்கு நிறைய சக்தி இருக்கிறது. நேர்நிலையாக ஒரு விஷயத்தைச் சொல்லும் போது அது நாலைந்து பேருக்கு நேர்நிலையாகச் செல்லும். எதிர்மறையாக ஒரு விஷயத்தைச் சொல்லும் போது அது பத்துப்பதினைந்து பேருக்கு எதிர்மறையாகச் செல்லும்.
பொதுவாக முதல்படம் செய்யும்போது எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு கேட்டாலும் அது எனது முதல் படம் என்று பெருமையாகச் சொல்ல வேண்டும். அப்படி சொல்லும்படியாக இந்த  ’தி டார்க் ஹெவன்’ படம் அமைந்திருக்கிறது.என் முதல் படம் என்பதை பெருமையாகக்  கூறுவேன் என்றார்.

நடிகை ரித்விகா பேசும்போது,
பிரதான ஊடகங்கள் தவிர்த்து சமூக ஊடகங்களிலும் இதை நிறைய பேர் ரீல்ஸ் போட்டு விளம்பரம் செய்து வருகிறார்கள். இந்தப் படத்தை மேலும் கொண்டு சேர்க்க வேண்டும். எல்லா திரையரங்குகளுக்கும் கூட்டம் வர வேண்டும். மக்கள் அனைத்துப் படங்களையும் திரையரங்கில் வந்து பார்க்க வேண்டும். அப்போது தான் அந்தத் திரையரங்க அனுபவம் கிடைக்கும். நான் முன்பே சொன்னேன் இந்தப் படம் ஒரு திரையரங்கு அனுபவத்திற்கான படம் என்று .ஓ டி டி வரும் வரை காத்திருக்க வேண்டாம் .எந்தப் படமாக இருந்தாலும் திரையரங்கிற்கு வந்து பாருங்கள்.அப்போதுதான் சினிமா வளர்ச்சி பெறும் என்றார்.

படத்தின் நாயகன் சித்து பேசும்போது, இந்தத் தருணத்திற்காக நான் பதினான்கு ஆண்டுகள் காத்திருந்தேன். சாலிக்கிராமம் தசரதபுரத்தில் எட்டாவது தெருவில் ஒரு சிறிய அறையில் இருந்து கொண்டு தான் சினிமா வாய்ப்பு தேடினேன். எல்லா கம்பெனிகளுக்கும் நிறைய போட்டோ எடுத்துக் கொண்டு சென்று அலைந்திருக்கிறேன். அது ஒரு பெரிய தேடல். அப்போது இதில் நிறைய பசி, அவமானம் போன்றவற்றைச் சந்தித்து இருக்கிறேன். நிறைய இடத்தில் போட்டோக்களைக் கொடுத்துவிட்டு உதவி இயக்குநரிடம் இருந்து நாளைக்கு ஓர் அழைப்பு வராதா என்று ஏக்கத்துடன் காத்திருந்த நாட்கள் உண்டு. திரையரங்கு சென்று படம் பார்க்கும்போது நம்முடன் வாய்ப்பு கேட்டவர்கள் எல்லாம் நடித்துப் பெரிய ஆளாகி ஹவுஸ் ஃபுல்லாக படங்கள் ஓடியதையும் பார்த்திருக்கிறேன். அப்போது மகிழ்ச்சியாக இருக்கும். பொறாமை இருக்காது. ஆனால் மனதில் ஒரு பக்கம் சிறு வருத்தமும் ஏக்கமும் இருக்கும். நமக்கான நாள் என்று வரும்? நமக்கான வாய்ப்பு என்று வரும்? என்று ஒரு ஏக்கம் இருக்கும் .அப்படித் தூக்கமில்லாத நாட்கள் எல்லாம் இருந்திருக்கின்றன. நான் ஆசைப்பட்டது போல பல ஊர்களுக்கு திரையரங்குகளில் சென்று பார்க்கும் போது ஹவுஸ்புல் காட்சிகளைப் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தக் காட்சியைப் பார்ப்பதற்கு எத்தனை நாட்கள் ஆசைப்பட்டு இருக்கிறோம்.அது இப்போது நடக்கிறது என்கிறபோது அவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது. ’ஜிகர்தண்டா’ படத்தில் ஒரு வசனம் வரும், சினிமா ஒரு தேவதை மாதிரி அதை மதித்தால் அது திரும்பத் திரும்பத் தேடிக் கொண்டு வரும் என்று. சினிமாவை  எந்த அளவுக்கு நாம் விரும்புகிறோமோ அது நம்மைக் கைவிடாது என்பதை நான் கண்கூடாகப் பார்த்திருக்கிறேன். இது எனக்கு ஒரு ஆரம்பம் தான். ஒரு நல்லதொரு அறிமுகமாக இருந்திருக்கிறது. இந்த கொண்டாட்டத்திற்குக் காரணமாகப் பலர் இருக்கிறார்கள். ஒரே ஒருவரைச் சொல்ல வேண்டுமென்றால் இயக்குநர் பாலாஜி சகோதரரைச் சொல்வேன் என்றார்.

இந்தச் சந்திப்பில் படத்தின் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பிகே, தயாரிப்பாளர்கள் ஷரண், கோபால், இசையமைப்பாளர் சக்தி பாலாஜி, நடிப்புக் கலைஞர்கள் வேல ராமமூர்த்தி, ஜெயக்குமார்,ஆர்த்தி, சுமித்ரா, பிரதீப்,விவேக், செல்வா, மனோஜ், அலெக்ஸ், டேனி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

dhamaraimurasu

dhamaraimurasu

dhamaraimurasu admin

Related Posts

“டோரதி” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ்…

Read more

ரசிகர்களின் அமோக வரவேற்பில் “என்ன விலை” திரைப்படம் !

சமீபத்தில் வெளியான ‘என்ன விலை’ திரைப்படம், அதன்  விறுப்பான கதைக்களம், நடிகர்களின் சிறப்பான நடிப்பு ஆகியவற்றிற்காக ரசிகர்களிடமிருந்து அமோக வரவேற்பு பெற்று வருகிறது. திரையரங்குகளில் ரசிகர்கள் கொடுத்து வரும் இந்த வரவேற்பு படக்குழுவினரையும் உற்சாகப்படுத்தியுள்ளது. ஊடகங்கள் மத்தியிலும் இப்படத்திற்கு பாராட்டுகள் குவிந்து…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்கத்தவறிய செய்திகள்

“டோரதி” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“டோரதி” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“தி டார்க் ஹெவன்” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“தி டார்க் ஹெவன்” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

மர்மம், ரகசியங்கள் நிறைந்த “ஆக்டோபஸ்” தொடர் ஜீ_5 தமிழில் வெளியாகிறது

மர்மம், ரகசியங்கள் நிறைந்த “ஆக்டோபஸ்” தொடர் ஜீ_5 தமிழில் வெளியாகிறது

ரசிகர்களின் அமோக வரவேற்பில் “என்ன விலை” திரைப்படம் !

ரசிகர்களின் அமோக வரவேற்பில் “என்ன விலை” திரைப்படம் !

“நல்ல படம்” திரைப்படத்தின் விமர்சனம்

“நல்ல படம்” திரைப்படத்தின் விமர்சனம்

“துரோகம் பழகு” படக்குழுவினரை  பாராட்டிய முதலமைச்சர் !

“துரோகம் பழகு” படக்குழுவினரை  பாராட்டிய முதலமைச்சர் !

பா. ரஞ்சித்தின் “வேட்டுவம்” படத்தின் அறிமுக வீடியோ வெளியீடு !

பா. ரஞ்சித்தின் “வேட்டுவம்” படத்தின் அறிமுக வீடியோ வெளியீடு !

விஜய் சேதுபதியின் “பத்தா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

விஜய் சேதுபதியின் “பத்தா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

பறிபோன மானத்திற்கு “என்ன விலை” என்ன விலை படத்தின் விமர்சனம்

பறிபோன மானத்திற்கு “என்ன விலை” என்ன விலை படத்தின் விமர்சனம்

“மண்டாடி” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“மண்டாடி” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“கஸ்தூரி வீடு” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“கஸ்தூரி வீடு” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

பாவனா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் “பிக்னிக்” படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு !

பாவனா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் “பிக்னிக்” படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு !

துல்கர் சல்மானின் “ஆகாசம்லோ ஓக தாரா” (AOT) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

துல்கர் சல்மானின் “ஆகாசம்லோ ஓக தாரா” (AOT) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

எம்.எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி “எம்.எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்” படத்தின் துவக்க விழா !

எம்.எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி “எம்.எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்” படத்தின் துவக்க விழா !

அர்ஜூன் தாஸ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

அர்ஜூன் தாஸ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

“அன்பில் அவன்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

நானி நடிப்பில் உருவாகியுள்ள “தி பாரடைஸ்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

நானி நடிப்பில் உருவாகியுள்ள “தி பாரடைஸ்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“என்ன விலை” படம் மறக்க முடியாத அனுபவம் ! நிமிஷா சஜயன்

“என்ன விலை” படம் மறக்க முடியாத அனுபவம் ! நிமிஷா சஜயன்

தி டார்க் ஹெவன் படத்தின் முன் வெளியீட்டு விழா !

தி டார்க் ஹெவன் படத்தின் முன் வெளியீட்டு விழா !

“பனங்காட்டான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“பனங்காட்டான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

அரசியலும் சமூக அக்கறையும் சேர்ந்து உருவான படம் தான் “ஆகாயம்” ! தினந்தோறும் நாகராஜ்

அரசியலும் சமூக அக்கறையும் சேர்ந்து உருவான படம் தான் “ஆகாயம்” ! தினந்தோறும் நாகராஜ்

“என்ன விலை” படத்தில் நான் நடித்த கதாப்பாத்திரம் மிகவும் சவாலானது ! கருணாஸ்

“என்ன விலை” படத்தில் நான் நடித்த கதாப்பாத்திரம் மிகவும் சவாலானது ! கருணாஸ்

“என்ன விலை” படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியது எனக்கு கிடைத்த வரம் !

“என்ன விலை” படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியது எனக்கு கிடைத்த வரம் !

“மண்டாடி” மூலம் மாஸ் ஹீரோவான சூரி ! மண்டாடி விமர்சனம்

“மண்டாடி” மூலம் மாஸ் ஹீரோவான சூரி ! மண்டாடி விமர்சனம்

வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகியுள்ள “நல்லபடம்” செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியீடு !

வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகியுள்ள “நல்லபடம்” செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியீடு !

சூர்யா நடித்துள்ள “சீன்” ( SCENE ) படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு !

சூர்யா நடித்துள்ள “சீன்” ( SCENE ) படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு !

“என்ன விலை” படத்தில் நடித்தது மிகவும் சவாலாக இருந்தது ! நடிகை ஷாஷா சிவக்குமார்

“என்ன விலை” படத்தில் நடித்தது மிகவும் சவாலாக இருந்தது ! நடிகை ஷாஷா சிவக்குமார்

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

அசோக் செல்வன் நடித்துள்ள “அன்பில் அவன்” வெளியீட்டு தேதி அறிவிப்பு !

அசோக் செல்வன் நடித்துள்ள “அன்பில் அவன்” வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“வதந்தி சீசன்_2” பற்றி மெய்சிலிர்க்கும் நடிகர் !

“வதந்தி சீசன்_2” பற்றி மெய்சிலிர்க்கும் நடிகர் !

“என்ன விலை” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“என்ன விலை” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

திரைப்பிரபலங்களுக்கு புதிய தீர்ப்பை பெற்றுத்தந்துள்ள நடிகை !

திரைப்பிரபலங்களுக்கு புதிய தீர்ப்பை பெற்றுத்தந்துள்ள நடிகை !

“வைல்ட் தமிழ்நாடு” இன்று முதல் பிவிஆர் திரையரங்குகளில் வெளியீடு !

“வைல்ட் தமிழ்நாடு” இன்று முதல் பிவிஆர் திரையரங்குகளில் வெளியீடு !

“மொத ராத்திரி” படக்குழுவினரின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“மொத ராத்திரி” படக்குழுவினரின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

கமல்ஹாசனின் புதிய படத்தின் “புகைப்படம்” சமூக வலைதளங்களில் வைரல் !

கமல்ஹாசனின் புதிய படத்தின் “புகைப்படம்” சமூக வலைதளங்களில் வைரல் !

நயன்தாராவின் “ஹாய்” படத்தின் விமர்சனம் !

நயன்தாராவின் “ஹாய்” படத்தின் விமர்சனம் !

மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க அலட்சியப்படுத்தும் அரசு அதிகாரிகள் ! நரிக்குறவர் இன மக்களின் போராட்டத்திற்கு தீர்வு எப்போது ?.!

மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க அலட்சியப்படுத்தும் அரசு அதிகாரிகள் ! நரிக்குறவர் இன மக்களின் போராட்டத்திற்கு தீர்வு எப்போது ?.!

“ஒன்ஸ்மோர்” படத்தின் திரைவிமர்சனம்

“ஒன்ஸ்மோர்” படத்தின் திரைவிமர்சனம்

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் மரணம் ! சோகத்தில் கிராம மக்கள் !

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் மரணம் ! சோகத்தில் கிராம மக்கள் !

தந்தை கொலை, பழிவாங்க துடிக்கும் மகள் ! “அமரம்” படத்தின் விமர்சனம்

தந்தை கொலை, பழிவாங்க துடிக்கும் மகள் ! “அமரம்” படத்தின் விமர்சனம்

திருப்பூரில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி தெருநாய்கள் கொடூர கொலை !

திருப்பூரில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி தெருநாய்கள் கொடூர கொலை !

தந்தை, மகன் உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் “ஃபாதர்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

தந்தை, மகன் உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் “ஃபாதர்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

“டாக்ஸிக்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“டாக்ஸிக்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

200 கோடி வசூல் சாதனை படைத்த “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம்

200 கோடி வசூல் சாதனை படைத்த “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம்

“ஒன்ஸ்மோர்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“ஒன்ஸ்மோர்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம் ! தெளிவில்லாத முதல்வரின் அறிவிப்பு !

கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம் ! தெளிவில்லாத முதல்வரின் அறிவிப்பு !

“Yourbackers play” உலகின் லாப நோக்கமற்ற OTT தளம் அறிமுகம் !

“Yourbackers play” உலகின் லாப நோக்கமற்ற OTT தளம் அறிமுகம் !

“இருமுடி கட்டு” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“இருமுடி கட்டு” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குரு சங்கருக்கு கொலை மிரட்டல் !

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குரு சங்கருக்கு கொலை மிரட்டல் !

“ஹலோ மிஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“ஹலோ மிஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

பழனி அருகே “தார் & டீசல்” திருட்டு ! புகார்தாரரை மிரட்டும் காவல் ஆய்வாளர் !.?

பழனி அருகே “தார் & டீசல்” திருட்டு ! புகார்தாரரை மிரட்டும் காவல் ஆய்வாளர் !.?

“அன்பில் அவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு !

“அன்பில் அவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு !

“ஐ ம் கேம்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“ஐ ம் கேம்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“பியார் பிரேமா கல்யாணம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“பியார் பிரேமா கல்யாணம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“பத்தா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“பத்தா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் டிரெய்லருக்கு அமோக வரவேற்பு !

டாக்ஸிக் படத்தின் டிரெய்லருக்கு அமோக வரவேற்பு !

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு !

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“வதந்தி சீசன் 2” குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“வதந்தி சீசன் 2” குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட “பியார் பிரேமா கல்யாணம்” தொடரின் முன்னோட்டம் !

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட “பியார் பிரேமா கல்யாணம்” தொடரின் முன்னோட்டம் !

துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ஆம் கேம்” ( I am Game ) படத்தின் டிரெய்லர் வெளியீடு !

துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ஆம் கேம்” ( I am Game ) படத்தின் டிரெய்லர் வெளியீடு !

வதந்தி சீசன் 2 “தி மிஸ்டரி ஆஃப் மணி” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

வதந்தி சீசன் 2 “தி மிஸ்டரி ஆஃப் மணி” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

“நடு நாடு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“நடு நாடு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“பிரஜாபதி” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“பிரஜாபதி” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

நயன்தாரா, கவின் நடித்துள்ள “ஹாய்” படத்தின் ரசகுல்லா பாடல் வெளியீடு !

நயன்தாரா, கவின் நடித்துள்ள “ஹாய்” படத்தின் ரசகுல்லா பாடல் வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் இரண்டாவது பாடல் “தடுமாறுதே” வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் இரண்டாவது பாடல் “தடுமாறுதே” வெளியீடு !

“அருள்வான்” படத்தின் திரைவிமர்சனம்

“அருள்வான்” படத்தின் திரைவிமர்சனம்

“அன்பே டயானா” திரைப்படத்தின் விமர்சனம்

“அன்பே டயானா” திரைப்படத்தின் விமர்சனம்

கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான “அமரன்” படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் !

கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான “அமரன்” படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் !

“தார்” டீசல் திருட்டை மாவட்டந்தோறும் விரிவுபடுத்தும் பலே கில்லாடி !

“தார்” டீசல் திருட்டை மாவட்டந்தோறும் விரிவுபடுத்தும் பலே கில்லாடி !

பழனி அருகே டீசல், தார் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

பழனி அருகே டீசல், தார் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

“வாழ்க்கையே போராட்டம்” படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் !

“வாழ்க்கையே போராட்டம்” படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் !

“லெட்சுமி காந்தன் கொலை வழக்கு” படத்தின் திரைவிமர்சனம்

“லெட்சுமி காந்தன் கொலை வழக்கு” படத்தின் திரைவிமர்சனம்

ஐ, நோபடி ( I, Nobody ) திரைப்படத்தின் விமர்சனம்

ஐ, நோபடி ( I, Nobody ) திரைப்படத்தின் விமர்சனம்

“ராவ் பகதூர்” ( தெலுங்கு ) திரைப்படத்தின் விமர்சனம்

“ராவ் பகதூர்” ( தெலுங்கு ) திரைப்படத்தின் விமர்சனம்

திண்டுக்கல்லில் பெருகிவரும் கள்ளத் துப்பாக்கி கலாசாரம் ! திணறும் வனத்துறை, கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

திண்டுக்கல்லில் பெருகிவரும் கள்ளத் துப்பாக்கி கலாசாரம் ! திணறும் வனத்துறை, கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

யோகி பாபு நடித்துள்ள “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

யோகி பாபு நடித்துள்ள “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“முதற்கனல்” படத்தின் திரைவிமர்சனம்

“முதற்கனல்” படத்தின் திரைவிமர்சனம்

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

“தாதா தி சவுரவ் கங்குலி ஸ்டோரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“தாதா தி சவுரவ் கங்குலி ஸ்டோரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“வஞ்சி” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“வஞ்சி” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“கட்டா குஸ்தி_2” திரைப்படத்தின் விமர்சனம்

“கட்டா குஸ்தி_2” திரைப்படத்தின் விமர்சனம்

அருள்வான் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

அருள்வான் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“டார்க்” படத்தின் திரைவிமர்சனம்

“டார்க்” படத்தின் திரைவிமர்சனம்

அமெரிக்க தமிழ்ச்சங்க விழாவில் கவனம் ஈர்த்த “திருக்குறள்_2” திரைப்படம் !

அமெரிக்க தமிழ்ச்சங்க விழாவில் கவனம் ஈர்த்த “திருக்குறள்_2” திரைப்படம் !

பிரமாண்டமாக தயாராகும் “திருக்குறள்_2” திரைப்படம் !

பிரமாண்டமாக தயாராகும் “திருக்குறள்_2” திரைப்படம் !

“மனு” திரைப்படத்தின் விமர்சனம்

“மனு” திரைப்படத்தின் விமர்சனம்

“நாகபந்தம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“நாகபந்தம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“லவ் ஓ லவ்” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“லவ் ஓ லவ்” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

பூஜையிடன் படப்பிடிப்பை தொடங்கிய “லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி” படக்குழுவினர் !

பூஜையிடன் படப்பிடிப்பை தொடங்கிய “லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி” படக்குழுவினர் !

பூஜையிடன் துவங்கிய “குட் நியூஸ்” படத்தின் படப்பிடிப்பு !

பூஜையிடன் துவங்கிய “குட் நியூஸ்” படத்தின் படப்பிடிப்பு !

“லவ் ஓ லவ்” படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரித்த டீசர் !

“லவ் ஓ லவ்” படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரித்த டீசர் !

குறும்பட போட்டியில் திறமைசாலிகளை வாழ்த்திய பிரபலங்கள் !

குறும்பட போட்டியில் திறமைசாலிகளை வாழ்த்திய பிரபலங்கள் !

“ஹபீபி” படக்குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா !

“ஹபீபி” படக்குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா !

நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் “சூப்பர் சுப்பு” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் “சூப்பர் சுப்பு” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

திருமுட்டம் அருகே.. தொடரும் மணல் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

திருமுட்டம் அருகே.. தொடரும் மணல் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

“எங்கள் தங்கம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“எங்கள் தங்கம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

வடசென்னையில் தினந்தோறும் 1000 கிலோ ரேசன் அரிசியை கடத்தும் அரசு ஊழியர் சடகோபால் !

வடசென்னையில் தினந்தோறும் 1000 கிலோ ரேசன் அரிசியை கடத்தும் அரசு ஊழியர் சடகோபால் !