திண்டுக்கல் மாவட்டம் பழனி தாலுகாவில் உள்ள நெய்க்காரப்பட்டி பேரூராட்சியில் அமைந்துள்ள சுயம்பு ஶ்ரீ மண்டு காளியம்மன் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த சுயம்பு ஶ்ரீ மண்டு காளியம்மன் கோயில் அப்பகுதியில் பிரசித்தி பெற்ற தெய்வம் என்பதால் வருடந்தோறும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து செல்வது வழக்கம்.

இந்தாண்டு இருநூறுக்கும் மேற்பட்டோர் அழகு குத்தியும், நூற்றுக்கும் மேற்பட்டோர் கத்தி குத்தியும், இருநூறுக்கும் மேற்பட்டோர் தீர்த்தக் குடங்கள் என ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு பக்தியுடன் நேர்த்தியுடன் செலுத்தி வருகின்றனர். பக்தர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் திருவிழாவில் கலந்து கொண்டதால் கூட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் போராடி வருகின்றனர்.



































































































