“அந்தரன்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !

ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் மு. கி. சாம்பசிவம் தயாரிப்பில், சந்தோஷ் ராவணன் இயக்கத்தில், நடிகர் பிரஜின் கதையின் நாயகனாக நடிக்கும் ‘அந்தரன்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

‘அந்தரன்’ திரைப்படத்தில் பிரஜின், இவானா வருண், அனுபமா குமார், ஆதிரன் பத்மன், ‘அருவி’ பாலா, மு.கி. சாம்பசிவம், ரமேஷ் பாபு, அர்ஜுன் தேவ், பிரியங்கா செல்வி, ஐஸ்வர்யா கண்ணன், வி ஜே ராஜூ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கிஷோர் ராமச்சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹரி எஸ் ஆர் இசையமைத்திருக்கிறார்.
பரபரப்பான கிரைம் திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மு.கி. சாம்பசிவம் தயாரிக்க சந்தோஷ் ராவணன் இயக்கியிருக்கிறார்.

வரும் 25ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில் படக் குழுவினருடன் தயாரிப்பாளர் சி. வி. குமார், நடிகை சாண்ட்ரா, பிக் பாஸ் சபரி, ‘விக்கல்ஸ்’ விக்ரம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் நடிகர் ‘விக்கல்ஸ்’ விக்ரம் பேசுகையில், பிக் பாஸ் மூலமாகத்தான் இப்படத்தின் நாயகன் பிரஜின் நண்பரானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு அதற்கு முன்-பின் என ஒரு புதிய வரலாறு உருவாகும். அதேபோல் நண்பர் பிரஜின் நடித்திருக்கும் ‘அந்தரன்’ படத்தின் மூலம் அந்தரனுக்கு முன், அந்தரனுக்கு பின் என பிரஜினின் முன்னேற்றம் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். இருக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

நடிகை இவானா வருண் பேசுகையில், இது என்னுடைய முதல் திரைப்படம். அதனாலயே இந்தப் படம் எனக்கு மிகவும் ஸ்பெஷல். படப்பிடிப்பு தளத்தில் குழுவாக இணைந்து அனைவரும் வழங்கிய ஆதரவிற்கும், அன்பிற்கும் நன்றி. படப்பிடிப்பு அனுபவங்கள் மறக்க முடியாதது. நாங்கள் கலைஞர்கள். உணர்வுகளை கதாபாத்திரங்களின் வழியாக வெளிப்படுத்துகிறோம். அதன் மூலமாக நாங்கள் அனைவரும் ரசிகர்களுடன் தொடர்பு கொள்கிறோம். இந்த படம் ரசிகர்கள் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன் என்றார்.

இயக்குநர் சந்தோஷ் ராவணன் பேசுகையில், இந்த திரைப்படத்தின் கதையை தயாரிப்பாளர் சாம்பசிவத்திற்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பினேன். அதனை படித்து இரண்டு நாட்களில் ‘கதை நன்றாக இருக்கிறது. ஆனால் இப்போது என்னால் தயாரிக்க இயலாது’ என்றார். அதன் பிறகு ஆறு மாதம் கழித்து மீண்டும் என்னை அழைத்து, ‘என்னுடைய நண்பர் ராஜேந்திர பிரசாத் வருகை தந்துள்ளார். அவருக்கு கதையை சொல்ல முடியுமா?’ எனக் கேட்டார். கதையை சொன்னேன் அவருக்கும் பிடித்திருந்தது. அவர் கொடுத்த பேராதரவின் காரணமாகத்தான் தயாரிப்பாளர் சாம்பசிவம் இப்படத்தின் பணிகளைத் தொடங்கினார். அதன் பிறகு நெருக்கடியான சூழல் ஏற்பட்டபோதும் எனக்கு கொடுத்த வாக்குறுதியின் காரணமாக படத்தின் பணிகளை நிறைவு செய்து, தற்போது வெளியிடுகிறார். இதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன் இந்தப் படத்தில் அவர் சங்கர் எனும் கதாபாத்திரத்தில் நாயகியின் தந்தையாக நடித்திருக்கிறார். அவர்தான் கதாநாயகனாகவும், வில்லனாகவும் இருப்பார். அதற்கும் நன்றி.

நான் படப்பிடிப்பு தளத்தில் நாயகி உடன் பேசியதே இல்லை. ஏனெனில் அவர் பேசும் இந்தி எனக்கு தெரியாது. நான் பேசும் ஆங்கிலம் அவருக்கு புரியாது. இதனால் இந்தியும் ஆங்கிலமும் தெரிந்த ஒரு உதவியாளரை வைத்துக் கொண்டுதான் அவருடன் பணியாற்றினேன். ஆனால் திரையில் அவருடைய நடிப்பு ரசிக்கும் வகையில் இருக்கும்.

‘அந்தரன்’ என்றால் ஒரு ஹண்டர். ஹண்டர் என்றால் மறைந்திருந்து தாக்குபவன் என பொருள். நம்முடைய தினசரி வாழ்வில் பல விஷயங்களை கடந்து செல்கிறோம். ஆனால் அதன் மூலமாக ஏதேனும் மோசமான விளைவுகள் ஏற்பட்ட பிறகுதான் அதன் சீரியஸ்னஸை பார்க்கிறோம். அப்படிப்பட்ட ஒரு விஷயத்தை மையமாகக் கொண்டதுதான் ‘அந்தரன்’. அதைப் பற்றி இப்போது விரிவாக சொல்ல இயலாது. படம் பார்க்கும்போது ரசிகர்கள் அனைவரும் உணர்வார்கள்.

இந்த திரைப்படம் நீதிமன்றத்தில் தற்போது நடைபெற்று வரும் ஒரு வழக்கினை தழுவியது. இந்த வழக்கு தொடர்பான எந்த விவரங்களையும் நான் இதுவரை தயாரிப்பாளரிடம் கூட பகிர்ந்து கொண்டதில்லை. படம் வெற்றி பெற்ற பிறகு இதைப்பற்றி சொல்கிறேன். ஆனால் நிச்சயமாக இந்த ‘அந்தரன்’ வழக்கமான படமாக இருக்காது என்பதை மட்டும் நான் உறுதியாக சொல்ல முடியும்.

‘போர் தொழில்’, ‘ராட்சசன்’, ‘தெகிடி’ ஆகிய திரைப்படங்களில் இருந்தது போன்ற ஒரு தனித்துவமான விஷயம் இந்தப் படத்தின் கிளைமாக்ஸில் இருக்கிறது. இது நிச்சயம் ரசிகர்களுக்கு பிடிக்கும். இந்தப் படத்தின் கதை திரில்லர் தான். ஆனால் அதனை ரொமான்டிக்காக சொல்லி இருக்கிறோம். ரொமான்டிக்கான சீன்கள் நிறைய இருக்கிறது. இது ஏன் என்பதற்கான காரணம் உச்சகட்ட காட்சியில் சொல்லியிருக்கிறோம்.

இந்தக் கதையை தயாரிப்பாளர் சி. வி. குமாரிடம் சொன்னேன். அவர்தான் இந்தக் கதையில் பல விஷயங்களை சேர்க்கலாம் என ஆலோசனை சொன்னதுடன் மட்டும் நிற்காமல் நிறைய நடிகர், நடிகைகளையும், தொழில்நுட்ப கலைஞர்களையும் பயன்படுத்திக் கொள் என பரிந்துரையும் செய்தார். அவருக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் தங்களுடைய முழுமையான பங்களிப்பை அர்ப்பணிப்புடன் வழங்கினர் என்றார்.

தயாரிப்பாளர் சி வி குமார் பேசுகையில், இப்படத்தின் தயாரிப்பாளர் சாம்பசிவம் என்னுடைய நெருங்கிய நண்பர். 2019ம் ஆண்டில் ‘அடவி’ என்றொரு திரைப்படத்தை தயாரித்தார். அந்தப் படத்தின் வெளியீட்டிற்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார். அன்று முதல் இன்று வரை நல்லதொரு நட்பு நீடிக்கிறது. அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் ‘மனிதர்கள்’ என்றொரு படத்தை தயாரித்தார். அந்த திரைப்படத்தை வணிக ரீதியில் வெளியிடுவதற்காக பார்வையிட சொன்னார். அந்தப் படத்தை பார்த்தேன். ஆனால் அது ஆர்ட் ஃபிலிம். இந்த திரைப்படத்தை சர்வதேச திரைப்பட விழாவிற்கு அனுப்பலாம். திரையரங்குகளில் வெளியிட வேண்டாம் என ஆலோசனை சொன்னேன். ஆனால் அவர் அந்தத் திரைப்படத்தையும் துணிச்சலுடன் திரையரங்குகளில் வெளியிட்டார்.

இயக்குநர் சந்தோஷ் இராவணன் எனக்கு மிகவும் தெரிந்தவர். கொரோனா காலகட்டத்திற்கு முன் என்னுடைய அலுவலகத்தில் பணியாற்றியவர். அதன் பிறகு தொடர்பில் இல்லை. பிறகு ஒருநாள் சாம்பசிவம் என்னை போனில் தொடர்பு கொண்டு, ‘உங்கள் அலுவலகத்தில் பணியாற்றிய சந்தோஷ் சொன்ன கதை நன்றாக இருக்கிறது’ என என்னிடம் சொன்னார். சந்தோஷ் திறமையானவர் தான், படத்தை தயாரிக்கலாம் என நம்பிக்கை கொடுத்தேன். அதன் பிறகு படத்தில் நடிக்கும் நடிகர்கள் தொடர்பான பரிந்துரையை கேட்டார்கள். நானும் வழங்கினேன்.

படத்தின் அனைத்து பணிகளும் நிறைவடைந்து ஃபர்ஸ்ட் லுக் வெளியிடும் முன் இயக்குநர் சந்தோஷ் என்னை சந்தித்து அதனை காண்பித்தார். அப்போது டைட்டில் ‘அந்தரன்’ என்று இருந்தது. அவரிடம் நீ வேறு ஒரு டைட்டில் தானே வைத்திருந்தாய். ஏன் மாற்றினாய் என்று கேட்டபோது, தயாரிப்பாளரின் தேர்வு என்று விளக்கம் அளித்தார். உடனே தயாரிப்பாளரிடம் ஏன் இந்தப் படத்திற்கு அந்தரன் என பெயர் வைத்திருக்கிறீர்கள் என கேட்டேன். பொதுவாக ஒரு திரைப்படத்திற்கு டைட்டில் வைத்தால் அது அனைவருக்கும் புரிய வேண்டும். ஒவ்வொருவருக்கும் டைட்டிலுக்காக விளக்கம் கொடுத்து கொண்டு இருக்க வேண்டாம் என்று சொன்னேன்.

அதற்கு அவர் குடும்பத்துடன் ஆலயத்திற்கு சென்று விருப்ப சீட்டை போட்டு தேர்ந்தெடுக்கும் போது அதில் ‘அந்தரன்’ என்று தான் வந்தது. இதனை என் மனைவி தான் தேர்வு செய்தார்கள். அதனால் அந்த டைட்டிலை மாற்ற இயலாது என்று அன்பாக சொன்னார். நான் உடனே சிரித்துக்கொண்டே சரி என்று சொல்லிவிட்டேன். இந்த திரைப்படத்தை நான் பார்த்து விட்டேன். நல்ல படம், கதையின் போக்கை யாராலும் இறுதிவரை கணிக்க இயலாத அளவிற்கு சுவராசியமாக இயக்குநர் படத்தை உருவாக்கியிருக்கிறார். வெற்றி பெற வாழ்த்துகிறேன் என்றார்.

தயாரிப்பாளர் மு கி சாம்பசிவம் பேசுகையில், அடவி, மனிதர்கள் ஆகிய இரண்டு படங்களை தொடர்ந்து அந்தரன் என்னுடைய மூன்றாவது திரைப்படம். படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி.‌ தமிழ் சினிமாவின் யுனிவர்சிட்டி என போற்றப்படும் நண்பரும், தயாரிப்பாளருமான சி வி குமார் மற்றும் விக்ரம், சபரி, சாண்ட்ரா ஆகிய சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றி.

தயாரிப்பாளர் சி வி குமார் ‘சூது கவ்வும்’ படத்தினை தயாரித்துக் கொண்டிருந்தபோது என்னை சந்தித்து நல்லதொரு கதை இருக்கிறது தயாரிக்கிறீர்களா என கேட்டார். என்னிடம் பணம் இல்லை என்று சொன்னேன். பணத்தை யார் கேட்டார்கள், படத்தை தயாரிக்கிறாயா எனக் கேட்டார். சி வி குமாருக்கு நல்ல கதை கிடைத்தால் போதும். அதை படமாக உருவாக்குவார். அந்த அளவிற்கு அவர் திறமையானவர். தமிழ் திரையுலகில் ஏராளமான புதுமுகங்களை அவர் அறிமுகப்படுத்தி இருக்கிறார். ஒரு திரைப்படத்திற்கான கன்டென்ட் மற்றும் சரியான விஷயம் கிடைத்துவிட்டால் அவர் தயாரிப்பார். இந்தப் படம் உருவானதற்கும் அவர்தான் காரணம். அதனால் அவருக்கு சிறப்பு நன்றி.

இயக்குநர் கதையை சொன்னார், அது எனக்கு பிடித்திருந்தது. அப்போது என்னிடம் பணம் இல்லை என்று சொன்னேன். அதன் பிறகு எனக்கு ஒரு குழு அமைந்தது. நான் தயாரித்த இரண்டு திரைப்படங்களிலும் நல்லதொரு கன்டென்ட் இருந்தது. அதேபோல் இந்த திரைப்படத்திலும் சமூகத்துக்கு தேவையான ஒரு விஷயத்தை சொல்லி இருக்கிறோம். அதனை ஒரு க்ரைம் திரில்லராக வழங்கியுள்ளோம்.

புதியவர்கள் ஒன்றிணைந்து ஒரு நல்லதொரு திரைப்படத்தை உருவாக்கினால் அதற்கு விநியோகஸ்தர்களும், ஓடிடி உள்ளிட்ட வர்த்தகம் தொடர்பானவர்களும் ஆதரவை வழங்க வேண்டும் என இந்த தருணத்தில் ஒரு வேண்டுகோளாக முன்வைக்கிறேன். புதியவர்களின் திரைப்படத்தை ‘நட்சத்திரங்கள் இல்லாத திரைப்படம்’ என புறக்கணிக்க வேண்டாம். ஏனெனில் இன்றைய முன்னணி நட்சத்திரங்கள் அனைவரும் கடந்த காலத்தில் புது முகங்கள் தான் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன், என்றார்.

நடிகர் பிரஜின் பேசுகையில், இருபது ஆண்டு காலமாக ஏதேனும் ஒரு வெள்ளிக்கிழமை என் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி விடாதா என்ற எதிர்பார்ப்புடன் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த திரைப்படம் நிச்சயமாக வெற்றி பெறும். ஏனெனில் தமிழ் ரசிகர்கள் நல்ல திரைப்படத்தை கொண்டாடுவார்கள். தயாரிப்பாளர் சாம்பசிவம் அவர்களின் மூன்றாவது திரைப்படம் இது. நல்ல கதை. நல்லதொரு கருத்தை தேர்வு செய்திருக்கிறார். இந்தப் படம் உங்களுக்கு வணிக ரீதியான வெற்றியை தர வேண்டும். தரும்.

நிறைய போராட்டங்களுக்கு இடையே நல்லதொரு படைப்பை மனதிற்கு நிறைவாக உருவாக்கியிருக்கிறோம். படத்தில் நடித்திருக்கும் ஒவ்வொரு நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும் இயக்குநர் முக்கியத்துவம் கொடுத்து திரைக்கதை அமைத்திருக்கிறார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் பலர் சென்றுள்ளனர். பலரிடம் பழகி இருக்கிறேன். அதில் விக்ரம் மற்றும் சபரி ஆகியோர் என்னுடைய நெருங்கிய நண்பர்கள். நான் பிக் பாஸ் வீட்டில் விக்ரமுடன் தான் அதிகமாக சண்டை போட்டிருக்கிறேன். யாருடன் நீங்கள் அதிகமாக நெருங்குகிறீர்களோ, அவர்களுடன் தான் உங்களுக்கு சண்டை வரும். அந்த சண்டை மூலமாக வரும் நட்புதான், பிக் பாஸ் வீட்டிற்கு வெளியேயும் நீடிக்கும். இந்த திரைப்படம் ரசிகர்கள் கொடுக்கும் காசிற்கு தரமான படைப்பாக இருக்கும். அவர்கள் செலவிடும் விலை மதிக்க முடியாத நேரத்திற்கு மதிப்பளிக்கும் வகையிலும் இந்த படம் இருக்கும் என்றார்.

dhamaraimurasu

dhamaraimurasu

dhamaraimurasu admin

Related Posts

விஜய் சேதுபதியின் “பத்தா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. படக்குழுவினர், திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் கலந்துகொண்டனர். ஸ்டார் ஸ்டுடியோ 18  (Star Studio18) மற்றும் இயக்குநர்…

Read more

“மண்டாடி” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

அண்மையில் வெளியாகி விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் வெற்றி பெற்றுள்ள படம் ‘மண்டாடி’. இப்படத்தில் சூரி, சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால சரவணன், மிதுன் மற்றும் ஸ்டன் சிவா உள்ளிட்ட பலர்  நடித்திருந்தனர். இயக்குநர் மதிமாறன் புகழேந்தி…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்கத்தவறிய செய்திகள்

விஜய் சேதுபதியின் “பத்தா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

விஜய் சேதுபதியின் “பத்தா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

பறிபோன மானத்திற்கு “என்ன விலை” என்ன விலை படத்தின் விமர்சனம்

பறிபோன மானத்திற்கு “என்ன விலை” என்ன விலை படத்தின் விமர்சனம்

“மண்டாடி” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“மண்டாடி” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“கஸ்தூரி வீடு” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“கஸ்தூரி வீடு” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

பாவனா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் “பிக்னிக்” படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு !

பாவனா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் “பிக்னிக்” படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு !

துல்கர் சல்மானின் “ஆகாசம்லோ ஓக தாரா” (AOT) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

துல்கர் சல்மானின் “ஆகாசம்லோ ஓக தாரா” (AOT) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

எம்.எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி “எம்.எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்” படத்தின் துவக்க விழா !

எம்.எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி “எம்.எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்” படத்தின் துவக்க விழா !

அர்ஜூன் தாஸ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

அர்ஜூன் தாஸ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

“அன்பில் அவன்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

நானி நடிப்பில் உருவாகியுள்ள “தி பாரடைஸ்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

நானி நடிப்பில் உருவாகியுள்ள “தி பாரடைஸ்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“என்ன விலை” படம் மறக்க முடியாத அனுபவம் ! நிமிஷா சஜயன்

“என்ன விலை” படம் மறக்க முடியாத அனுபவம் ! நிமிஷா சஜயன்

தி டார்க் ஹெவன் படத்தின் முன் வெளியீட்டு விழா !

தி டார்க் ஹெவன் படத்தின் முன் வெளியீட்டு விழா !

“பனங்காட்டான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“பனங்காட்டான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

அரசியலும் சமூக அக்கறையும் சேர்ந்து உருவான படம் தான் “ஆகாயம்” ! தினந்தோறும் நாகராஜ்

அரசியலும் சமூக அக்கறையும் சேர்ந்து உருவான படம் தான் “ஆகாயம்” ! தினந்தோறும் நாகராஜ்

“என்ன விலை” படத்தில் நான் நடித்த கதாப்பாத்திரம் மிகவும் சவாலானது ! கருணாஸ்

“என்ன விலை” படத்தில் நான் நடித்த கதாப்பாத்திரம் மிகவும் சவாலானது ! கருணாஸ்

“என்ன விலை” படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியது எனக்கு கிடைத்த வரம் !

“என்ன விலை” படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியது எனக்கு கிடைத்த வரம் !

“மண்டாடி” மூலம் மாஸ் ஹீரோவான சூரி ! மண்டாடி விமர்சனம்

“மண்டாடி” மூலம் மாஸ் ஹீரோவான சூரி ! மண்டாடி விமர்சனம்

வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகியுள்ள “நல்லபடம்” செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியீடு !

வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகியுள்ள “நல்லபடம்” செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியீடு !

சூர்யா நடித்துள்ள “சீன்” ( SCENE ) படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு !

சூர்யா நடித்துள்ள “சீன்” ( SCENE ) படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு !

“என்ன விலை” படத்தில் நடித்தது மிகவும் சவாலாக இருந்தது ! நடிகை ஷாஷா சிவக்குமார்

“என்ன விலை” படத்தில் நடித்தது மிகவும் சவாலாக இருந்தது ! நடிகை ஷாஷா சிவக்குமார்

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

அசோக் செல்வன் நடித்துள்ள “அன்பில் அவன்” வெளியீட்டு தேதி அறிவிப்பு !

அசோக் செல்வன் நடித்துள்ள “அன்பில் அவன்” வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“வதந்தி சீசன்_2” பற்றி மெய்சிலிர்க்கும் நடிகர் !

“வதந்தி சீசன்_2” பற்றி மெய்சிலிர்க்கும் நடிகர் !

“என்ன விலை” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“என்ன விலை” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

திரைப்பிரபலங்களுக்கு புதிய தீர்ப்பை பெற்றுத்தந்துள்ள நடிகை !

திரைப்பிரபலங்களுக்கு புதிய தீர்ப்பை பெற்றுத்தந்துள்ள நடிகை !

“வைல்ட் தமிழ்நாடு” இன்று முதல் பிவிஆர் திரையரங்குகளில் வெளியீடு !

“வைல்ட் தமிழ்நாடு” இன்று முதல் பிவிஆர் திரையரங்குகளில் வெளியீடு !

“மொத ராத்திரி” படக்குழுவினரின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“மொத ராத்திரி” படக்குழுவினரின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

கமல்ஹாசனின் புதிய படத்தின் “புகைப்படம்” சமூக வலைதளங்களில் வைரல் !

கமல்ஹாசனின் புதிய படத்தின் “புகைப்படம்” சமூக வலைதளங்களில் வைரல் !

நயன்தாராவின் “ஹாய்” படத்தின் விமர்சனம் !

நயன்தாராவின் “ஹாய்” படத்தின் விமர்சனம் !

மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க அலட்சியப்படுத்தும் அரசு அதிகாரிகள் ! நரிக்குறவர் இன மக்களின் போராட்டத்திற்கு தீர்வு எப்போது ?.!

மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க அலட்சியப்படுத்தும் அரசு அதிகாரிகள் ! நரிக்குறவர் இன மக்களின் போராட்டத்திற்கு தீர்வு எப்போது ?.!

“ஒன்ஸ்மோர்” படத்தின் திரைவிமர்சனம்

“ஒன்ஸ்மோர்” படத்தின் திரைவிமர்சனம்

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் மரணம் ! சோகத்தில் கிராம மக்கள் !

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் மரணம் ! சோகத்தில் கிராம மக்கள் !

தந்தை கொலை, பழிவாங்க துடிக்கும் மகள் ! “அமரம்” படத்தின் விமர்சனம்

தந்தை கொலை, பழிவாங்க துடிக்கும் மகள் ! “அமரம்” படத்தின் விமர்சனம்

திருப்பூரில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி தெருநாய்கள் கொடூர கொலை !

திருப்பூரில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி தெருநாய்கள் கொடூர கொலை !

தந்தை, மகன் உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் “ஃபாதர்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

தந்தை, மகன் உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் “ஃபாதர்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

“டாக்ஸிக்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“டாக்ஸிக்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

200 கோடி வசூல் சாதனை படைத்த “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம்

200 கோடி வசூல் சாதனை படைத்த “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம்

“ஒன்ஸ்மோர்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“ஒன்ஸ்மோர்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம் ! தெளிவில்லாத முதல்வரின் அறிவிப்பு !

கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம் ! தெளிவில்லாத முதல்வரின் அறிவிப்பு !

“Yourbackers play” உலகின் லாப நோக்கமற்ற OTT தளம் அறிமுகம் !

“Yourbackers play” உலகின் லாப நோக்கமற்ற OTT தளம் அறிமுகம் !

“இருமுடி கட்டு” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“இருமுடி கட்டு” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குரு சங்கருக்கு கொலை மிரட்டல் !

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குரு சங்கருக்கு கொலை மிரட்டல் !

“ஹலோ மிஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“ஹலோ மிஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

பழனி அருகே “தார் & டீசல்” திருட்டு ! புகார்தாரரை மிரட்டும் காவல் ஆய்வாளர் !.?

பழனி அருகே “தார் & டீசல்” திருட்டு ! புகார்தாரரை மிரட்டும் காவல் ஆய்வாளர் !.?

“அன்பில் அவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு !

“அன்பில் அவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு !

“ஐ ம் கேம்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“ஐ ம் கேம்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“பியார் பிரேமா கல்யாணம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“பியார் பிரேமா கல்யாணம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“பத்தா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“பத்தா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் டிரெய்லருக்கு அமோக வரவேற்பு !

டாக்ஸிக் படத்தின் டிரெய்லருக்கு அமோக வரவேற்பு !

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு !

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“வதந்தி சீசன் 2” குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“வதந்தி சீசன் 2” குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட “பியார் பிரேமா கல்யாணம்” தொடரின் முன்னோட்டம் !

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட “பியார் பிரேமா கல்யாணம்” தொடரின் முன்னோட்டம் !

துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ஆம் கேம்” ( I am Game ) படத்தின் டிரெய்லர் வெளியீடு !

துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ஆம் கேம்” ( I am Game ) படத்தின் டிரெய்லர் வெளியீடு !

வதந்தி சீசன் 2 “தி மிஸ்டரி ஆஃப் மணி” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

வதந்தி சீசன் 2 “தி மிஸ்டரி ஆஃப் மணி” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

“நடு நாடு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“நடு நாடு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“பிரஜாபதி” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“பிரஜாபதி” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

நயன்தாரா, கவின் நடித்துள்ள “ஹாய்” படத்தின் ரசகுல்லா பாடல் வெளியீடு !

நயன்தாரா, கவின் நடித்துள்ள “ஹாய்” படத்தின் ரசகுல்லா பாடல் வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் இரண்டாவது பாடல் “தடுமாறுதே” வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் இரண்டாவது பாடல் “தடுமாறுதே” வெளியீடு !

“அருள்வான்” படத்தின் திரைவிமர்சனம்

“அருள்வான்” படத்தின் திரைவிமர்சனம்

“அன்பே டயானா” திரைப்படத்தின் விமர்சனம்

“அன்பே டயானா” திரைப்படத்தின் விமர்சனம்

கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான “அமரன்” படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் !

கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான “அமரன்” படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் !

“தார்” டீசல் திருட்டை மாவட்டந்தோறும் விரிவுபடுத்தும் பலே கில்லாடி !

“தார்” டீசல் திருட்டை மாவட்டந்தோறும் விரிவுபடுத்தும் பலே கில்லாடி !

பழனி அருகே டீசல், தார் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

பழனி அருகே டீசல், தார் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

“வாழ்க்கையே போராட்டம்” படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் !

“வாழ்க்கையே போராட்டம்” படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் !

“லெட்சுமி காந்தன் கொலை வழக்கு” படத்தின் திரைவிமர்சனம்

“லெட்சுமி காந்தன் கொலை வழக்கு” படத்தின் திரைவிமர்சனம்

ஐ, நோபடி ( I, Nobody ) திரைப்படத்தின் விமர்சனம்

ஐ, நோபடி ( I, Nobody ) திரைப்படத்தின் விமர்சனம்

“ராவ் பகதூர்” ( தெலுங்கு ) திரைப்படத்தின் விமர்சனம்

“ராவ் பகதூர்” ( தெலுங்கு ) திரைப்படத்தின் விமர்சனம்

திண்டுக்கல்லில் பெருகிவரும் கள்ளத் துப்பாக்கி கலாசாரம் ! திணறும் வனத்துறை, கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

திண்டுக்கல்லில் பெருகிவரும் கள்ளத் துப்பாக்கி கலாசாரம் ! திணறும் வனத்துறை, கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

யோகி பாபு நடித்துள்ள “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

யோகி பாபு நடித்துள்ள “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“முதற்கனல்” படத்தின் திரைவிமர்சனம்

“முதற்கனல்” படத்தின் திரைவிமர்சனம்

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

“தாதா தி சவுரவ் கங்குலி ஸ்டோரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“தாதா தி சவுரவ் கங்குலி ஸ்டோரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“வஞ்சி” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“வஞ்சி” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“கட்டா குஸ்தி_2” திரைப்படத்தின் விமர்சனம்

“கட்டா குஸ்தி_2” திரைப்படத்தின் விமர்சனம்

அருள்வான் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

அருள்வான் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“டார்க்” படத்தின் திரைவிமர்சனம்

“டார்க்” படத்தின் திரைவிமர்சனம்

அமெரிக்க தமிழ்ச்சங்க விழாவில் கவனம் ஈர்த்த “திருக்குறள்_2” திரைப்படம் !

அமெரிக்க தமிழ்ச்சங்க விழாவில் கவனம் ஈர்த்த “திருக்குறள்_2” திரைப்படம் !

பிரமாண்டமாக தயாராகும் “திருக்குறள்_2” திரைப்படம் !

பிரமாண்டமாக தயாராகும் “திருக்குறள்_2” திரைப்படம் !

“மனு” திரைப்படத்தின் விமர்சனம்

“மனு” திரைப்படத்தின் விமர்சனம்

“நாகபந்தம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“நாகபந்தம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“லவ் ஓ லவ்” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“லவ் ஓ லவ்” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

பூஜையிடன் படப்பிடிப்பை தொடங்கிய “லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி” படக்குழுவினர் !

பூஜையிடன் படப்பிடிப்பை தொடங்கிய “லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி” படக்குழுவினர் !

பூஜையிடன் துவங்கிய “குட் நியூஸ்” படத்தின் படப்பிடிப்பு !

பூஜையிடன் துவங்கிய “குட் நியூஸ்” படத்தின் படப்பிடிப்பு !

“லவ் ஓ லவ்” படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரித்த டீசர் !

“லவ் ஓ லவ்” படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரித்த டீசர் !

குறும்பட போட்டியில் திறமைசாலிகளை வாழ்த்திய பிரபலங்கள் !

குறும்பட போட்டியில் திறமைசாலிகளை வாழ்த்திய பிரபலங்கள் !

“ஹபீபி” படக்குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா !

“ஹபீபி” படக்குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா !

நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் “சூப்பர் சுப்பு” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் “சூப்பர் சுப்பு” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

திருமுட்டம் அருகே.. தொடரும் மணல் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

திருமுட்டம் அருகே.. தொடரும் மணல் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

“எங்கள் தங்கம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“எங்கள் தங்கம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

வடசென்னையில் தினந்தோறும் 1000 கிலோ ரேசன் அரிசியை கடத்தும் அரசு ஊழியர் சடகோபால் !

வடசென்னையில் தினந்தோறும் 1000 கிலோ ரேசன் அரிசியை கடத்தும் அரசு ஊழியர் சடகோபால் !

திருப்பூரில் மாணவிகளுக்கு ஆபாச கராத்தே பயிற்சி ! கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் கண்டனம்

திருப்பூரில் மாணவிகளுக்கு ஆபாச கராத்தே பயிற்சி ! கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் கண்டனம்

கராத்தே பயிற்சி என ஆபாச வீடியோ வெளியீடு ! வலுக்கும் கண்டனங்கள், கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

கராத்தே பயிற்சி என ஆபாச வீடியோ வெளியீடு ! வலுக்கும் கண்டனங்கள், கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

“மக்கள் தலைவா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“மக்கள் தலைவா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“ஆட்டி” திரைப்படத்தின் விமர்சனம்

“ஆட்டி” திரைப்படத்தின் விமர்சனம்

“நிழல்” திரைப்படத்தின் விமர்சனம்

“நிழல்” திரைப்படத்தின் விமர்சனம்

இஸ்லாமிய குடும்பத்தின் வாழ்வியல் ” ஹபீபி” ! விமர்சனம்

இஸ்லாமிய குடும்பத்தின் வாழ்வியல் ” ஹபீபி” ! விமர்சனம்

ஸ்லம் டாக் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு

ஸ்லம் டாக் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு