திண்டுக்கல்லில் பெருகிவரும் கள்ளத் துப்பாக்கி கலாசாரம் ! திணறும் வனத்துறை, கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

திண்டுக்கல் மாவட்டத்தின் வனவிலங்குகளின் புகலிடமாக இருந்த அடர்ந்த வனப்பகுதிகள், இப்போது கள்ளத் துப்பாக்கிகளின் வேட்டைக்காடாக மாறி வருகின்றன. குறிப்பாக, ஒட்டன்சத்திரம் மற்றும் சிறுமலை வனப்பகுதிகளில் கள்ளத் துப்பாக்கிகளின் நடமாட்டம் முன்னெப்போதையும் விட எக்கச்சக்கமாக அதிகரித்திருக்கிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை என வனத்துறையினர் கைகளைக் பிசைந்து கொண்டு திணறி வரும் அவலநிலை தான் அரங்கேறி வருகிறது. வனத்துறையின் இந்த ‘இயலாமை’ ஒருபுறமிருக்க, கள்ளத் துப்பாக்கிகளின் உற்பத்திக் கூடாரமாகத் திகழும் திண்டுக்கல் மாவட்டத்தில், காவல்துறை எவ்வித விழிப்புணர்வும் இன்றி  தூக்கத்தில் ஆழ்ந்திருப்பதுதான் வேதனையின் உச்சம் !

திண்டுக்கல் மாவட்டம், இயற்கை சூழல் நிறைந்த மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் முக்கிய வனப்பரப்பைக் கொண்டது. கீழ்மலை, மேல்மலை, தாண்டிக்குடி, கன்னிவாடி, ஆடலூர், பன்றிமலை மற்றும் ஒட்டன்சத்திரம் ஆகிய பகுதிகளை மட்டுமே கணக்கிட்டால், சுமார் 1,200 க்கும் அதிகமான சதுர கிலோ மீட்டர் வனப்பரப்பு பரந்து விரிந்து கிடக்கிறது.
இங்கு யானை, காட்டெருமை, சிறுத்தை, கரடி, மிளா, மான் எனப் பல உயிர்கள் வாழ்ந்து வருகின்றன. ஆனால், இந்த வனவிலங்குகளுக்கு இப்போது மனிதர்களின் வேட்டை வெறிதான் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.

இது சம்பந்தமாக வன ஆர்வலர்கள் கூறும்போது.. காட்டுப்பன்றி, மான் போன்ற விலங்குகளை வேட்டையாட சட்டவிரோத கும்பல் ஒன்று அசுர வேகத்தில் செயல்பட்டு வருகிறது. உணவுப் பொருட்களில் நாட்டு வெடிகளை கலந்து வைத்து விலங்குகளைக் கொடூரமாகக் கொல்கிறார்கள். மான் வேட்டைக்கு என பிரத்யேகமாக கள்ளத் துப்பாக்கிகள் மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆறு மாதங்களில் மட்டும் வனத்துறையினர் நடத்திய சோதனையில், ஒட்டன்சத்திரம் உடைப்பட்டி வனப்பகுதியில் முயல் வேட்டையாடிய மணிகண்டன், சோலை ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தவசிமடையில் கேளையாடு (மான் வகை) வேட்டையாடிய பெருமாள், ஆண்டிச்சாமி, கார்த்தி ஆகிய மூவர் சிக்கினர். செந்துறையில் கள்ளத் துப்பாக்கியுடன் சுற்றித்திரிந்த ஆண்டிச்சாமி என்பவர் கைது செய்யப்பட்டார்.

இப்படி ஆங்காங்கே சில கைது நடவடிக்கைகள் நடந்தாலும், அடிமட்டக் கூலிகள் மட்டுமே சிக்குகிறார்களே தவிர, இதன் பின்னணியில் இருக்கும் பெரும் புள்ளிகளையோ, துப்பாக்கி நெட்வொர்க்கையோ வனத்துறையினரால் நெருங்கக்கூட முடியவில்லை. நாங்கள் பிடித்துக் கொண்டேதான் இருக்கிறோம், ஆனால் துப்பாக்கி கலாச்சாரம் குறைந்தபாடில்லை என்று வனத்துறை அதிகாரிகள் புலம்புவது, அவர்களின் நிர்வாகத் தோல்வியையே காட்டுகிறது.

இந்த நாட்டுத் துப்பாக்கிகளின் உற்பத்திப் புள்ளி குறித்து ரகசிய விசாரணையில் இறங்கியபோது அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்தன. திண்டுக்கல் அருகே உள்ள வெள்ளோடு பகுதிதான் இந்த கள்ளத் துப்பாக்கிகளின் பிரதான உற்பத்தி கேந்திரமாகச் செயல்பட்டு வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் துப்பாக்கிகளைப் பெரிய விவசாயிகளும், வசதி படைத்த வேட்டைப் பிரியர்களுமே அதிகம் வாங்குகின்றனர்.

தோட்டா பயன்படுத்தும் வகை ரூபாய் 20,000 முதல் 50,000 வரை நவீனத் தோட்டாக்களைப் பயன்படுத்தி துல்லியமாகச் சுடக்கூடியது.
பால்ரஸ் குண்டு வகை ரூபாய் 10,000 ஆயிரத்திற்கே கிடைக்கிறது. இந்தத் துப்பாக்கிகளை குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்துவதில்லை, வேட்டைக்கு மட்டும்தான் பயன்படுத்துகிறார்கள் என்று அதிகாரிகள் தரப்பிலேயே ஒரு மெத்தனப் போக்கு நிலவுகிறது.

நாட்டுத் துப்பாக்கி தயாரிப்பதில் வெள்ளோடு பகுதியில் இரண்டு பேர்தான் ‘கிங்மேக்கர்கள்’. அவர்கள் மீது ஏற்கனவே தலா 5 க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. ஜாமீனில் வெளியே வருவதும், மீண்டும் துப்பாக்கி தயாரிப்பதுமாகவே அவர்களின் ‘தொழில்’ தடையின்றி நடக்கிறது. இவர்களைக் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்காமல் காவல்துறை வேடிக்கை பார்ப்பது ஏன் ? கடந்த சில வருடங்களுக்கு முன்பு, துப்பாக்கிகளை ஒப்படைத்தால் வழக்கு கிடையாது என வனத்துறையும் காவல்துறையும் இணைந்து ஓர் அறிவிப்பை வெளியிட்டன. பயந்துபோன வேட்டைக்காரர்கள், ஒரே நாளில் சிறுமலை, தவசி, உடைப்பட்டி பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட துப்பாக்கிகளைப் புதர்களில் வீசிவிட்டுச் சென்றனர். ஆனால், அதன் பிறகு எந்தவொரு தொடர் நடவடிக்கையும் இல்லை. தூங்குவது காவல்துறையா ? வனத்துறையா ?

தோட்டப் பகுதிகள் மற்றும் விளைநிலக் காவல்காரர்கள் என்ற போர்வையில், கள்ளத் துப்பாக்கிகளைத் தாராளமாகப் பதுக்கி வைத்துள்ளனர். விவசாய நிலங்களில் பதுக்கி வைப்பதால் எங்களால் கண்டுபிடிக்க முடிவதில்லை என்கின்றனர் வன அதிகாரிகள். காடுகளைக் காக்க வேண்டிய வனத்துறை, போதிய ரோந்துப் பணிகளை மேற்கொள்ளாமல் ஏசி அறைகளில் முடங்கிக் கிடக்கிறது. அதைவிடக் கொடுமை, தங்கள் எல்லைக்குள் கள்ளத் துப்பாக்கித் தொழிற்சாலையே இயங்கி வந்தாலும், அதைத் தடுத்து நிறுத்த வேண்டிய காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்ப்பதுதான்.

மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டிய காவல்துறை, தன் உளவுத்துறைப் பிரிவை முடுக்கிவிட்டு, வெள்ளோடு கள்ளத் துப்பாக்கி நெட்வொர்க்கை மொத்தமாக வேரறுத்தாலே ஒழிய, சிறுமலையின் வனவிலங்குகளைக் காப்பாற்ற முடியாது என்கின்றனர்.

dhamaraimurasu

dhamaraimurasu

dhamaraimurasu admin

Related Posts

திருப்பூரில் மாணவிகளுக்கு ஆபாச கராத்தே பயிற்சி ! கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் கண்டனம்

திருப்பூரில் கராத்தே பயிற்சி அளிக்கும் போது மாணவிகளை ஆபாசமாக தொட்டு பயிற்சி அளிக்கும் வீடியோவை சம்பந்தப்பட்ட பயிற்சியாளர் தனது சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்திருப்பது பல்வேறு தரப்பினரிடம் இருந்து கண்டனம் எழுந்துள்ளது. இதனிடையே நாற்காலி செய்தி இணையதளத்தில் ஆபாசமாக தொட்டு பயிற்சி…

Read more

கராத்தே பயிற்சி என ஆபாச வீடியோ வெளியீடு ! வலுக்கும் கண்டனங்கள், கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

தமிழகத்தில் சமீப காலமாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள் தொடர்வது பொதுக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்காக சிங்கப்பெண் அதிரடி படையை தமிழக அரசு உருவாக்கியுள்ளது. மேலும் பெண்கள் தங்களை தற்காத்துக்கொள்ள கராத்தே போன்ற தற்காப்பு…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்கத்தவறிய செய்திகள்

“லெட்சுமி காந்தன் கொலை வழக்கு” படத்தின் திரைவிமர்சனம்

ஐ, நோபடி ( I, Nobody ) திரைப்படத்தின் விமர்சனம்

“ராவ் பகதூர்” ( தெலுங்கு ) திரைப்படத்தின் விமர்சனம்

“ராவ் பகதூர்” ( தெலுங்கு ) திரைப்படத்தின் விமர்சனம்

திண்டுக்கல்லில் பெருகிவரும் கள்ளத் துப்பாக்கி கலாசாரம் ! திணறும் வனத்துறை, கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

திண்டுக்கல்லில் பெருகிவரும் கள்ளத் துப்பாக்கி கலாசாரம் ! திணறும் வனத்துறை, கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

யோகி பாபு நடித்துள்ள “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“முதற்கனல்” படத்தின் திரைவிமர்சனம்

“முதற்கனல்” படத்தின் திரைவிமர்சனம்

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

“தாதா தி சவுரவ் கங்குலி ஸ்டோரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“வஞ்சி” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“கட்டா குஸ்தி_2” திரைப்படத்தின் விமர்சனம்

அருள்வான் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“டார்க்” படத்தின் திரைவிமர்சனம்

“டார்க்” படத்தின் திரைவிமர்சனம்

அமெரிக்க தமிழ்ச்சங்க விழாவில் கவனம் ஈர்த்த “திருக்குறள்_2” திரைப்படம் !

பிரமாண்டமாக தயாராகும் “திருக்குறள்_2” திரைப்படம் !

“மனு” திரைப்படத்தின் விமர்சனம்

“மனு” திரைப்படத்தின் விமர்சனம்

“நாகபந்தம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“லவ் ஓ லவ்” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

பூஜையிடன் படப்பிடிப்பை தொடங்கிய “லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி” படக்குழுவினர் !

பூஜையிடன் துவங்கிய “குட் நியூஸ்” படத்தின் படப்பிடிப்பு !

“லவ் ஓ லவ்” படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரித்த டீசர் !

குறும்பட போட்டியில் திறமைசாலிகளை வாழ்த்திய பிரபலங்கள் !

“ஹபீபி” படக்குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா !

நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் “சூப்பர் சுப்பு” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

திருமுட்டம் அருகே.. தொடரும் மணல் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

“எங்கள் தங்கம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

வடசென்னையில் தினந்தோறும் 1000 கிலோ ரேசன் அரிசியை கடத்தும் அரசு ஊழியர் சடகோபால் !

வடசென்னையில் தினந்தோறும் 1000 கிலோ ரேசன் அரிசியை கடத்தும் அரசு ஊழியர் சடகோபால் !

திருப்பூரில் மாணவிகளுக்கு ஆபாச கராத்தே பயிற்சி ! கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் கண்டனம்

திருப்பூரில் மாணவிகளுக்கு ஆபாச கராத்தே பயிற்சி ! கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் கண்டனம்

கராத்தே பயிற்சி என ஆபாச வீடியோ வெளியீடு ! வலுக்கும் கண்டனங்கள், கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

கராத்தே பயிற்சி என ஆபாச வீடியோ வெளியீடு ! வலுக்கும் கண்டனங்கள், கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

“மக்கள் தலைவா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“ஆட்டி” திரைப்படத்தின் விமர்சனம்

“ஆட்டி” திரைப்படத்தின் விமர்சனம்

“நிழல்” திரைப்படத்தின் விமர்சனம்

“நிழல்” திரைப்படத்தின் விமர்சனம்

இஸ்லாமிய குடும்பத்தின் வாழ்வியல் ” ஹபீபி” ! விமர்சனம்

ஸ்லம் டாக் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு

நெய்க்காரப்பட்டி கோவில் திருவிழாவில், கூட்ட நெரிசலில் சிக்கி 20_க்கும் மேற்பட்டோர் காயம் !

18 ஆம் நூற்றாண்டின் “வாள்” பழனி அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு !

போதைப்பொருள் நடமாட்டத்தை வனத்துறையினருடன் இணைந்து கண்காணித்த காவல்துறையினர் !

பழனி அருகே.. நெய்க்காரப்பட்டி கோவில் திருவிழா ! கூட்டத்தை கட்டுப்படுத்த திணறும் காவல்துறையினர் !

“லைட் வெயிட் பேபி” விறுவிறுப்பான படப்பிடிப்பில் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் !

மடத்துக்குளம் அருகே.. கார் மோதி 2 வயது குழந்தை பலி ! பெற்றோர் படுகாயம் ! 

“சம்ஹாரம்” திரைப்படத்தின் விமர்சனம்

“சம்ஹாரம்” திரைப்படத்தின் விமர்சனம்

“மூன்றாம் கண்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

கேன்ஸ் திரைப்பட விழாவில் “பாலன் தி பாய்” திரைப்படத்திற்கு வரவேற்பு !

“அந்தரன்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !

“ஸ்லம் டாக்” படத்தின் டீசர் ஜூன் 8 ஆம் தேதி வெளியாகிறது !

தி இந்தியா ஸ்டோரி திரைப்படம் ஜூலை 24 ஆம் தேதி வெளியாகிறது !

அங்கீகாரம் படத்திற்கு “U” சான்றிதழ் வழங்கிய தணிக்கை வாரியம் !

ஒப்பந்ததாரரிடம் 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது ! பல்லடம் அருகே பரபரப்பு !

“கலர்ஸ்” நிறுவனத்தை திறந்து வைத்த நடிகை பிரியா பவானி சங்கர் !

“ஈகோ ராமன்” படத்தின் விமர்சனம்

“ஈகோ ராமன்” படத்தின் விமர்சனம்

பெத்தி படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !

பழனி அருகே அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் காவலப்பட்டி கிராமத்தினர் !

நடன இயக்குனர் “ஷெரீப்_250” கொண்டாட்டம் !

தனித்துவமான வேடத்தில் சசிகுமார் நடித்துள்ள புதிய படத்தின் அப்டேட்ஸ் !

“உயிரிணையே” இசை ஆல்பம் வெளியீட்டு விழா !

“பெத்தி” திரைப்படம் ராம் சரணுக்கு தேசிய விருதை பெற்றுத்தரும் ! – சிவராஜ்குமார்

சிம்பு நடிக்கும் “அரசன்” படத்தின் புதிய தகவல்கள் !

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தால், கொள்ளை லாபம் பார்க்கும் FL-2 பார் உரிமையாளர்கள் !

பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே ? அதிகரிக்கும் பாலியல் சீண்டல்கள் !

“பாதாம்கீர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியீடு !

பரபரப்பான ஆக்ஷ்ன் த்ரில்லர் கதைகளத்தில் உருவாகும் “சமவர்த்தி” !

“நாக பந்தம் திரைப்படம் ஜூலை 3 ஆம் தேதி வெளியீடு !

“தி இந்தியா ஸ்டோரி” படத்தின் டீசர் விரைவில் வெளியீடு !

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “கான் சிட்டி” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்ட ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் !

ஆக்ஷ்ன், த்ரில்லர் கதையில் உருவாகிவரும் “கொம்பா” திரைப்படம் !

“கங்கணம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“அதிரடி” படவிழாவில் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் !

வரவேற்பை குவிக்கும் “தாழ் திறவா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் !

“விசாரணை கைதி” படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“பிளாஸ்ட்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“பெத்தி” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“பெத்தி” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“ஹபீபி” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“ஹபீபி” படத்தின் இசை வெளியீட்டு விழா !

கருப்பசாமியாக களமிறங்கி அநீதியை அழிக்கும் சூர்யா ! “கருப்பு” படத்தின் விமர்சனம்

சிவகார்த்திகேயன் நடிக்கும் “சேயோன்” படத்தின் படப்பிடிப்பை துவக்கி வைத்த கமல்ஹாசன்

“சட்டென்று மாறுது வானிலை” படத்தின் விமர்சனம்

“சிலம்பம்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

நலத்திட்ட உதவிகள் வழங்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த் !

மாமியாரை தாக்கிய மருமகன் கொலை ! பல்லடம் அருகே பரபரப்பு !

இயக்குனராக அவதாரம் எடுத்த நடிகர் ராம் போதினேனி !

பிரபுதேவா, வடிவேலு நடித்துள்ள “பேங் பேங்” படத்தின் படப்பிடிப்பு நிறைவு !

மர்மம், கொலை, கிராமத்து ரகசியங்கள் நிறைந்த “கொலை சேவல்” திரைப்படம் ஜீ_5 தளத்தில் ஒளிபரப்பு !

கலை துறையினருக்கு, கலை ஞானியின் கோரிக்கை !

நிலக்கோட்டை அருகே கத்தியுடன் சுற்றித்திரிந்த 2 வாலிபர்கள் கைது !

திண்டுக்கல்லில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இளம்பெண் பலி !

மீரா கதிரவன் இயக்கத்தில் உருவாகியுள்ள “ஹபீபி” படத்திற்கு யூ சான்றிதழ் !

“உத்சவ் 2026” விழாவில் “தேவி ரத்னா” விருதால் கௌரவிக்கப்பட்ட நடிகர் ரவி மோகன் !

பழமையான கதையின் பதிவாக உருவாகும் நாட்டார் மர்மகதை !

“பெத்தி” படம் மூலம் சர்வதேச விநியோகத்தில் களமிறங்கும் ஹொம்பாலே ஃபிலிம்ஸ்

சிவகார்த்திகேயனின் “வேலும் மயிலும்” ஆன்மீக இசைப் பாடல் வெளியீடு !

“சைலண்ட் இன்ஃபுளூயன்சர்” இசை ஆல்பம் வெளியீடு !

“எக்ஸாம்” இணைய தொடரில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள துரை சுதாகர் !

பாராட்டுக்களை குவிக்கும் “அங்கீகாரம்” படத்தின் டிரெய்லர் !

வடசென்னை_2 படத்தின் புதிய அப்டேட் அறிவித்த ஐஸ்வர்யா ராஜேஷ் !

“சட்டென்று மாறுது வானிலை” படத்தின் முன் வெளியீட்டு விழா !

நகைச்சுவை, த்ரில்லர் கதையில் சந்தானம் நடிப்பில் உருவாகும் “லவ் பைட்” !

ப்ரைம் வீடியோ தயாரிப்பில் உருவாகியுள்ள “சிஸ்டம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

மாணவர்களின் எதிர்காலம் ஒளிர, கபிலன் வைரமுத்து வாழ்த்து !

“29” படத்தின் விமர்சனம்

“29” படத்தின் விமர்சனம்

சென்னைஸ் அமிர்தாவின் விளம்பர தூதர் ஶ்ரீ லீலா மாணவர்களுடன் கலந்துரையாடல் !