திருப்பூரில் தெரு நாய்கள் மனிதாபிமானமின்றி அந்நியன் பட பாணியில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொடூரமாக கொலை செய்யப்படுவதாக பகீர் புகார் எழுந்துள்ளது. திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் வசித்து வருபவர் சரிதா (43). பிராணிகள் வதை தடுப்பு சங்கத்தின் உறுப்பினரான சரிதா திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.

அந்த புகார் மனுவில், திருப்பூர் எம்.எஸ். நகர், சத்தியா காலனியில் ஒரு நாய் ஒன்று இறந்து கிடப்பதாகவும், கொடூரமாக கொதிக்க வைத்த எண்ணெயை உடல் மீது ஊற்றி கொலை செய்யப்பட்டிருப்பதாகவும், இது போன்று மனிதாபிமானமற்ற முறையில் நாய் மீது கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கொலை செய்த பாபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார்.

திருப்பூரில் மனிதாபிமானமற்ற முறையில் நாய்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

































































































