ஜீ_5 தமிழில் ஒளிபரப்பாக உள்ள “வாரண்ட்” தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

ZEE5 வழங்கும் புதிய தமிழ் கிரைம் த்ரில்லர் வெப் தொடரான “வாரண்ட்” தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சீரிஸை Sivan Pictures, S Studios சார்பில், பிரசாந்த் பாண்டியராஜ், P விஷால், P M ஆதீஸ்வர் இணைந்து தயாரித்துள்ளனர்.
விலங்கு சீரிஸ் மற்றும் மாமன் படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் முதன்மைப் பாத்திரத்தில் நடித்துள்ள இந்த சீரிஸின் திரைக்கதையை பிரசாந்த் பாண்டியராஜ், விக்னேஷ் நடராஜன் உடன் இணைந்து எழுதியுள்ளார். இந்த சீரிஸை விக்னேஷ் நடராஜன் இயக்கியுள்ளார். வரும் 22 ஆம் தேதி முதல் ZEE5 தளத்தில் வெளியாகவுள்ள நிலையில், இந்த சீரிஸின் டிரெய்லர் அறிமுக விழா, படக்குழுவினருடன், திரையுலக பிரபலங்கள் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிகழ்வினில், கதையின் நாயகனாக அறிமுகமாகும் இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் பேசியதாவது,
புரூஸ்லிக்குப் பிறகு எதுவும் இல்லாத நேரத்தில் விலங்கு செய்தோம். இதில் நடிகராக மாறியுள்ளேன். என் குடும்பத்திற்கு, எனது குழுவிற்கு, என் நண்பர்களுக்கு நன்றி என்றார்.

இயக்குநர் விக்னேஷ் நடராஜன் பேசியதாவது, நான் படம் செய்வேன் என நம்பியது என் பெற்றோரும், பிரசாந்தும் தான். நானும் அவரும் சேர்ந்து எழுதியதுதான் இந்த சீரிஸ். நான் கட்டாயப்படுத்தித்தான் பிரசாந்தை நடிக்க வைத்தேன். ஒரு கோ-டைரக்டர் போல என்னுடன் இருந்து உழைத்து தந்தார். அதற்கு நன்றி. என் குரு பாண்டிராஜ் சாருக்கு நன்றி. இந்த சீரிஸ் அனைவருக்கும் பிடிக்கும் என நம்புகிறேன். இது என் முதல் படைப்பு. அனைவரும் ஆதரவு தாருங்கள் என்றார்.

ZEE5 சீரிஸ் ஹெட் ஷாம் பேசியதாவது, ஒவ்வொரு மாதமும் ஒரு தரமான சீரிஸை வெளியிட வேண்டும் என்ற நோக்கத்தோடு நாங்கள் செயல்பட்டு வருகிறோம். சமீப காலங்களில் ரசிகர்கள் கொடுத்த ஆதரவுக்கு நன்றி. அந்த வரிசையில் ‘வாரண்ட்’ மிக முக்கியமான சீரிஸாக அமைந்துள்ளது. ‘விலங்கு’ ஒரு சிறிய சீரிஸாகத் தொடங்கியது. ஆனால் அதன் உள்ளே பல கதைகளும், பல்வேறு கேரக்டர்களும் இருப்பதை உணர்ந்தோம். அது தனி உலகமாக மாறியது. 2023 லேயே இந்தக் கதையை உருவாக்க நினைத்தோம். தொடர்ந்து பல விவாதங்கள் நடந்தன. ‘விலங்கு’ ஒரு கதையுடன் முடிவதில்லை. அதன் தொடர்ச்சிகள் தொடர்ந்து வரும். ‘விலங்கு 2’ வில் இடம்பெற இருக்கும் ஒரு முக்கியமான போலீஸ் கேரக்டரின் பின்னணிக் கதையே ‘வாரண்ட்’. ஒரு சாதாரண மனிதர் எவ்வாறு வலுவான போலீஸ் அதிகாரியாக மாறுகிறார் என்பதைக் காட்டும் கதையாக இது உருவாகியுள்ளது. “பிரசாந்தை முதல் முறையாக ஹீரோவாக அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி. ‘விலங்கு’ உலகத்தோடு இது தொடர்புடையதாயினும், இது தனித்துவமான பயணமாக இருக்கும். அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

இயக்குநர் பாண்டிராஜ் பேசியதாவது, பிரசாந்த்தை எவ்வளவு கலாய்த்தாலும், கிண்டல் செய்தாலும் ரசிப்பான். அவனை நான் திட்டினால் அவனுக்கு ரொம்ப பிடிக்கும். எதிலுமே மிகவும் ஆர்வமாக உழைப்பான். மாமன் படத்திற்கு பிறகு வெப் சீரிஸ் செய்வதாகவும், நடிப்பதாகவும் சொன்னான். மகிழ்ச்சி என வாழ்த்தினேன். நான் ஒரு ஆக்சன் கதை வைத்திருந்தேன், அந்தக் கதையை நான் நடிக்கிறேன் என்றான். அவனிடம் தன்னம்பிக்கை அதிகம். இன்னும் ஐந்து வருடத்தில் எம்.எல்.ஏ.க்கு நிற்பான். அந்தளவு தன்னம்பிக்கை உள்ளவன். விக்னேஷ் என்னிடம் கதகளி படத்தில் வேலை பார்த்தவன், நல்ல திறமைசாலி. இந்த டிரெய்லர் பார்த்தேன், அத்தனை அழகாக இருந்தது. விலங்கு எப்படி வெற்றி பெற்றதோ அதே போல இந்த சீரிஸ் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.

நடிகர் கவின் பேசியதாவது,
பிரசாந்த் என்னிடம் டிரெய்லர் காட்டினார். அட்டகாசமாக இருந்தது. படம் என்று நினைத்துவிட்டேன். கண்டிப்பாக படம் செய்து நடியுங்கள் என்றேன். என் அஸிஸ்டெண்ட்கள் வளர வேண்டும், அவர்களுக்காக இதை செய்கிறேன் என்றார். மகிழ்ச்சி. தமிழில் முக்கியமான வெப் சீரிஸ்களில் ஒன்று விலங்கு. அதே போல மிகச்சிறந்த சீரிஸாக வாரண்ட் வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.

இயக்குநர் சுசீந்திரன் பேசியதாவது, பாண்டிராஜும் நானும் நல்ல நண்பர்கள். அப்போதிருந்தே பிரசாந்தை தெரியும். நல்ல உழைப்பாளி. விலங்கு மிகச்சிறப்பான சீரிஸ். மாமன் மிக அட்டகாசமான படம். பிரசாந்தை நடிகராக பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. இந்தக் குழுவில் பணியாற்றியுள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள். இயக்குநர் விக்னேஷுக்கும் என் வாழ்த்துக்கள் என்றார்.

தயாரிப்பாளர் மதன் பேசியதாவது, விலங்கு, கேம், அடுத்து சோனிக்கு ஒன்று செய்துள்ளோம். இப்போது இது நான்காவது வெப் சீரிஸ். சீரிஸ் எடுப்பது எளிதான வேலையல்ல, சினிமாவை விட இது கடினமானது. படைப்பின் மீதான காதலில் மட்டுமே இதை செய்து வருகிறேன். நல்ல சீரிஸ் வர பட்ஜெட்டுதான் முக்கிய காரணம். ஓடிடி தளங்கள், தயாரிப்பாளர்கள் நல்ல கதைகளுக்கு தர வேண்டும். பிரசாந்த் இதில் நடிப்பார் என நினைக்கவில்லை, ஆனால் நன்றாக நடித்துள்ளார். இதில் உழைத்த அனைவருக்கும் என் நன்றிகள். இயக்குநர் விக்னேஷுக்கு என் நன்றிகள். விலங்கு சீரிஸிற்கு தந்த ஆதரவை இந்த சீரிஸிற்கும் தாருங்கள் என்றார்.

தயாரிப்பாளர் சினீஷ் பேசியதாவது, தமிழில் இருக்கும் அனைத்து தயாரிப்பாளர்களிடமும் அட்வான்ஸ் வாங்கி இருக்கிறார் பிரசாந்த். அவன் என் நண்பன். இந்த சீரிஸ் மிகச்சிறப்பான வெற்றி பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.

நடிகை கௌசல்யா பேசியதாவது,
இந்த வெப் சீரிஸில் எந்த அழுத்தமும் இல்லாமல் வேலை செய்ய முடிந்தது. எல்லோரும் ஒரே குடும்பம் போல பழகினார்கள். படப்பிடிப்பு தளத்தில் மிகவும் பாசிட்டிவான சூழல் இருந்தது. நான் நடித்திருந்தாலும் இன்னும் முழு கதையும் எனக்கு தெரியாது. அந்த சஸ்பென்ஸ்தான் என்னை இன்னும் அதிகமாக எதிர்பார்க்க வைக்கிறது என்றார்.

நடிகை மீனா பேசியதாவது,
“ZEE5 உடன் இது என்னுடைய மூன்றாவது ப்ராஜெக்ட். இந்த வாய்ப்புக்கு முழு குழுவிற்கும் நன்றி. பிரசாந்த் ஹீரோவாக அறிமுகமாகும் இந்த சீரிஸில் அவருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி. படப்பிடிப்பு அனுபவம் மிகவும் இனிமையானது. நான் இதில் ‘ஷர்மி’ என்ற நர்ஸ் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இந்தக் கதையும், அதன் காட்சிப்படுத்தலும் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என்றார்.

நடிகை சாயாதேவி பேசியதாவது,
முதலில் இந்த சீரிஸில் நடிக்க மறுத்தேன். ஆனால் ‘நான் ஹீரோவாக நடிக்கிறேன், நீங்க சப்போர்ட் பண்ண மாட்டீங்களா ? என்று பிரசாந்த் கேட்டபோது உடனே ஒப்புக்கொண்டேன். இப்போது உண்மையிலேயே அவர் இந்த சீரிஸின் ஹீரோவாக மிளிர்கிறார் வாழ்த்துக்கள். ‘விலங்கு’ மற்றும் ‘மாமன்’ எப்படி கொண்டாடப்பட்டதோ, அதேபோல ‘வாரண்ட்’ கண்டிப்பாக ரசிகர்களை ஈர்க்கும் என்றார்.

நடிகர் வையாபுரி பேசியதாவது,
“இது என்னுடைய முதல் வெப் சீரிஸ். இந்த யூனிட்டில் எனக்கு மிகவும் பிடித்த விஷயம், எல்லோரும் நண்பர்களாக வேலை செய்ததுதான். எந்த ஈகோவும் இல்லாமல் மிக ஜாலியாக வேலை பார்த்தார்கள். “ZEE5-ல் தொடர்ந்து இதுபோன்ற நல்ல சீரிஸ்களில் வேலை செய்ய ஆசை என்றார்.

நடிகர் அருள்தாஸ் பேசியதாவது,
‘விலங்கு’ பிரசாந்துக்கு மிகப்பெரிய பெயரை பெற்றுத்தந்தது. அதன் தொடர்ச்சியாக ‘வாரண்ட்’ உருவாகியுள்ளது. இது ஒரு போலீஸ் கதை என்றாலும், சினிமாவில் வழக்கமாக பார்க்காத போலீஸ் வாழ்க்கையை மிகவும் நெருக்கமாக காட்டுகிறது. பிரசாந்த் ஒரு சாதாரண போலீஸ் கான்ஸ்டபிளாக இயல்பாக நடித்திருக்கிறார். அதனால் ரசிகர்கள் அவரோடு எளிதில் கனெக்ட் ஆக முடியும். நடிகராக மட்டுமல்ல, இயக்குநராகவும் அவர் தொடர்ந்து வெற்றி பெற வேண்டும். இந்தக் குழுவிடம் போலீஸ் சம்பந்தப்பட்ட ஏராளமான கதைகள் உள்ளன. அதனால் ‘வாரண்ட்’ அடுத்தடுத்த பாகங்களாகவும் வர வாய்ப்பு இருக்கிறது என்றார்.

நடிகை பூர்ணிமா ரவி பேசியதாவது. ஹீரோ மெட்டீரியல் என்று எதுவும் கிடையாது. ஒரு கதையை யார் முன்னின்று கொண்டு செல்கிறார்களோ அவர்கள்தான் ஹீரோ. அந்த திறமை பிரசாந்த்துக்கு இருக்கிறது, ஆஃப் ஸ்கிரீனிலேயே பெண்களுக்கு மிகவும் பிடித்தவர் பிரசாந்த். இந்த சீரிஸ் வெளியான பிறகு ஆன் ஸ்கிரீனிலும் அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகும்.எதிர்பார்ப்பை உயர்த்திய “வாரண்ட்” முழு விழாவும் படக்குழுவினரின் நட்பு, ஒன்றுபட்ட உழைப்பு மற்றும் பிரசாந்த் மீதான நம்பிக்கையை வெளிப்படுத்தியது. ‘விலங்கு’ உலகத்தின் விரிவாக்கமாக உருவாகும் இந்த “வாரண்ட்” வெப் சீரிஸ், ரியலிஸ்டிக் போலீஸ் கதையுடன் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெறும் என்ற நம்பிக்கையை படக்குழு வெளிப்படுத்தியது என்றார்.

தயாரிப்பாளர் குமார் பேசியதாவது, நான் இந்தக் கதையை முழுதாக படித்து விட்டேன். விக்னேஷ் இயக்குநராக சிறக்க வாழ்த்துக்கள். பிரசாந்தை மாமன் படத்திலிருந்து பார்த்து வருகிறேன். இந்தக் கதையை படிக்க சொல்லி மிகவும் வற்புறுத்தினார். இவர்தான் நடிக்கப் போகிறார் என்பது அப்போது தெரியாது. மிகச்சிறந்த கதை. அடுத்தடுத்து நான்கு படங்கள் கமிட்டாகியுள்ளார். எனக்கும் படம் தர கேட்டுக்கொள்கிறேன். அவர் பெரிய அளவில் சாதிக்க வாழ்த்துக்கள் என்றார்.

நடிகர் போஸ் வெங்கட் பேசியதாவது, ஹீரோவுக்கு தனி உருவம், வடிவம் எல்லாம் கிடையாது. கதைதான் ஹீரோ. அதை சரியாக செய்யும் திறமை பிரசாந்திடம் இருக்கிறது. அவருக்கு என் வாழ்த்துக்கள். இயக்குநர் விக்னேஷுக்கு என் வாழ்த்துக்கள் என்றார்.

இயக்குநர் ராம்குமார் பேசியதாவது, பிரசாந்த் எனக்கு நல்ல நண்பர், நல்ல இயக்குநர், இப்போது நடிகராக மாறியிருக்கிறார். அவரிடம் எப்போதும் தனித்துவம் இருக்கும். அவரை என் பார்க்கிங் படத்தில் நடிக்க வைக்கும் எண்ணம் இருந்தது. இயக்குநராக ஜெயித்தது போல நடிகராகவும் ஜெயிப்பார். விலங்கு சீரிஸை ரசிக்காதவர் யாரும் இருக்க மாட்டார்கள். அதே போல வாரண்ட் எல்லோரையும் கவரும். அதைப் பார்க்க ஆவலாக உள்ளேன். இதில் பணிபுரிந்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.

இயக்குநர் தமிழரசன் பச்சைமுத்து பேசியதாவது, பிரசாந்த் என் நண்பர், என் படத்திலும் அவர் நடிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால் ஹீரோவாக நடிக்கும் எண்ணத்தில் அவர் நடிக்கவில்லை என நினைக்கிறேன். விலங்கு தமிழில் அனைவரையும் கவர்ந்த சீரிஸ். ஒரு படம் எவ்வளவு டீடெய்லிங் எப்படி பண்ண வேண்டும் என்பதை விலங்கு கற்றுத்தந்தது. வாரண்ட் அதே போல மிகச்சிறந்த சீரிஸாக இருக்கும் என நம்புகிறேன் என்றார்.

கிராமப்புற பின்னணியில் உருவாகியுள்ள இந்த தொடர், காவல் துறையின் மறுபக்கத்தையும், அதிகாரத்தின் இருண்ட முகத்தையும் மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. உண்மை சம்பவங்களின் தாக்கத்துடன், மன அழுத்தம், அதிகார துஷ்பிரயோகம், மனித மன மாற்றங்கள் ஆகியவற்றை தீவிரமாக பதிவு செய்யும் வகையில் இந்த தொடர் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த தொடரின் மையக் கதாபாத்திரமாக “கோட்டை கருப்பசாமி” என்ற காவலர் வருகிறார். சாதாரண காவலராக தனது வாழ்க்கையை தொடங்கும் அவர், சமூக அவமானங்கள், அதிகார அழுத்தங்கள் மற்றும் பல்வேறு குற்றவியல் சூழ்நிலைகளில் சிக்கிக் கொள்கிறார். பழைய வாரண்ட் வழக்குகளை விசாரிக்கும் போது, மெதுவாக அவரது மனநிலையும் செயல்பாடுகளும் மாறத் தொடங்குகின்றன. சட்டத்தை காப்பாற்ற வேண்டிய ஒருவன், சட்டத்திற்கே அச்சுறுத்தலாக மாறும் தருணங்களே இந்த தொடரின் முக்கிய அம்சமாக அமைந்துள்ளது.

ஒரு லாக்கப் டெத் சம்பவம் கதையை முற்றிலும் திருப்பி விடுகிறது. அதன் பின்னர் உண்மை, பொய், அதிகாரம் மற்றும் நீதி ஆகியவற்றுக்கிடையில் நடக்கும் மோதலே கதையின் மையமாக நகர்கிறது. ஒரு காவலரின் உளவியல் மாற்றத்தை மிகவும் ரியலிஸ்டிக்காக பதிவு செய்யும் முயற்சியாக “வாரண்ட்” பார்க்கப்படுகிறது.

கிராமத்து காவல் நிலையங்கள், உள்ளூர் அரசியல், அதிகார மிரட்டல்கள் மற்றும் மனித மனத்தின் இருண்ட பக்கங்களை மிக நெருக்கமாக காட்டும் இந்த தொடர், “விலங்கு” போன்ற ரியலிஸ்டிக் கிரைம் டிராமாக்களை விரும்பும் ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“வாரண்ட்” வெப் சீரிஸ் மே 22 ஆம் தேதி முதல் ZEE5 தளத்தில் வெளியாகிறது.

dhamaraimurasu

dhamaraimurasu

dhamaraimurasu admin

Related Posts

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட “பியார் பிரேமா கல்யாணம்” தொடரின் முன்னோட்டம் !

ஓடிப் போய் கல்யாணம் பண்ணுறது? இல்ல கல்யாணம் பண்ணிட்டு ஓடிப் போறது ?”சந்தோஷமான திருமண வாழ்க்கைக்கான விதிகளை தலைகீழாக மாற்றும் இந்த ஜோடியை சந்திக்க தயாராகுங்கள் ! காதல், திருமணம், அதற்குப் பிறகான வாழ்க்கை என அனைத்தையும் புதுக்கோணத்தில் சொல்ல வரும்…

Read more

வதந்தி சீசன் 2 “தி மிஸ்டரி ஆஃப் மணி” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

இந்தியாவின் முன்னணி பொழுதுபோக்கு தளமான பிரைம் வீடியோ, விமர்சகர்களாலும் ரசிகர்களாலும் பாராட்டப்பட்ட தனது தமிழ் ஒரிஜினல் சீரிஸான ‘வதந்தி’யின் அடுத்த அத்தியாயமான ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ யின் விறுவிறுப்பான டிரெய்லரை வெளியிட்டது. ஆண்ட்ரூ லூயிஸ்…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்கத்தவறிய செய்திகள்

தந்தை, மகன் உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் “ஃபாதர்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

தந்தை, மகன் உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் “ஃபாதர்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

“டாக்ஸிக்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“டாக்ஸிக்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

200 கோடி வசூல் சாதனை படைத்த “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம்

200 கோடி வசூல் சாதனை படைத்த “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம்

“ஒன்ஸ்மோர்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“ஒன்ஸ்மோர்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம் ! தெளிவில்லாத முதல்வரின் அறிவிப்பு !

கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம் ! தெளிவில்லாத முதல்வரின் அறிவிப்பு !

“Yourbackers play” உலகின் லாப நோக்கமற்ற OTT தளம் அறிமுகம் !

“Yourbackers play” உலகின் லாப நோக்கமற்ற OTT தளம் அறிமுகம் !

“இருமுடி கட்டு” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“இருமுடி கட்டு” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குரு சங்கருக்கு கொலை மிரட்டல் !

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குரு சங்கருக்கு கொலை மிரட்டல் !

“ஹலோ மிஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“ஹலோ மிஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

பழனி அருகே “தார் & டீசல்” திருட்டு ! புகார்தாரரை மிரட்டும் காவல் ஆய்வாளர் !.?

பழனி அருகே “தார் & டீசல்” திருட்டு ! புகார்தாரரை மிரட்டும் காவல் ஆய்வாளர் !.?

“அன்பில் அவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு !

“அன்பில் அவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு !

“ஐ ம் கேம்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“ஐ ம் கேம்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“பியார் பிரேமா கல்யாணம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“பியார் பிரேமா கல்யாணம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“பத்தா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“பத்தா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் டிரெய்லருக்கு அமோக வரவேற்பு !

டாக்ஸிக் படத்தின் டிரெய்லருக்கு அமோக வரவேற்பு !

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு !

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“வதந்தி சீசன் 2” குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“வதந்தி சீசன் 2” குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட “பியார் பிரேமா கல்யாணம்” தொடரின் முன்னோட்டம் !

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட “பியார் பிரேமா கல்யாணம்” தொடரின் முன்னோட்டம் !

துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ஆம் கேம்” ( I am Game ) படத்தின் டிரெய்லர் வெளியீடு !

துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ஆம் கேம்” ( I am Game ) படத்தின் டிரெய்லர் வெளியீடு !

வதந்தி சீசன் 2 “தி மிஸ்டரி ஆஃப் மணி” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

வதந்தி சீசன் 2 “தி மிஸ்டரி ஆஃப் மணி” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

“நடு நாடு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“நடு நாடு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“பிரஜாபதி” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“பிரஜாபதி” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

நயன்தாரா, கவின் நடித்துள்ள “ஹாய்” படத்தின் ரசகுல்லா பாடல் வெளியீடு !

நயன்தாரா, கவின் நடித்துள்ள “ஹாய்” படத்தின் ரசகுல்லா பாடல் வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் இரண்டாவது பாடல் “தடுமாறுதே” வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் இரண்டாவது பாடல் “தடுமாறுதே” வெளியீடு !

“அருள்வான்” படத்தின் திரைவிமர்சனம்

“அருள்வான்” படத்தின் திரைவிமர்சனம்

“அன்பே டயானா” திரைப்படத்தின் விமர்சனம்

“அன்பே டயானா” திரைப்படத்தின் விமர்சனம்

கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான “அமரன்” படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் !

கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான “அமரன்” படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் !

“தார்” டீசல் திருட்டை மாவட்டந்தோறும் விரிவுபடுத்தும் பலே கில்லாடி !

“தார்” டீசல் திருட்டை மாவட்டந்தோறும் விரிவுபடுத்தும் பலே கில்லாடி !

பழனி அருகே டீசல், தார் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

பழனி அருகே டீசல், தார் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

“வாழ்க்கையே போராட்டம்” படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் !

“வாழ்க்கையே போராட்டம்” படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் !

“லெட்சுமி காந்தன் கொலை வழக்கு” படத்தின் திரைவிமர்சனம்

“லெட்சுமி காந்தன் கொலை வழக்கு” படத்தின் திரைவிமர்சனம்

ஐ, நோபடி ( I, Nobody ) திரைப்படத்தின் விமர்சனம்

ஐ, நோபடி ( I, Nobody ) திரைப்படத்தின் விமர்சனம்

“ராவ் பகதூர்” ( தெலுங்கு ) திரைப்படத்தின் விமர்சனம்

“ராவ் பகதூர்” ( தெலுங்கு ) திரைப்படத்தின் விமர்சனம்

திண்டுக்கல்லில் பெருகிவரும் கள்ளத் துப்பாக்கி கலாசாரம் ! திணறும் வனத்துறை, கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

திண்டுக்கல்லில் பெருகிவரும் கள்ளத் துப்பாக்கி கலாசாரம் ! திணறும் வனத்துறை, கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

யோகி பாபு நடித்துள்ள “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

யோகி பாபு நடித்துள்ள “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“முதற்கனல்” படத்தின் திரைவிமர்சனம்

“முதற்கனல்” படத்தின் திரைவிமர்சனம்

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

“தாதா தி சவுரவ் கங்குலி ஸ்டோரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“தாதா தி சவுரவ் கங்குலி ஸ்டோரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“வஞ்சி” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“வஞ்சி” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“கட்டா குஸ்தி_2” திரைப்படத்தின் விமர்சனம்

“கட்டா குஸ்தி_2” திரைப்படத்தின் விமர்சனம்

அருள்வான் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

அருள்வான் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“டார்க்” படத்தின் திரைவிமர்சனம்

“டார்க்” படத்தின் திரைவிமர்சனம்

அமெரிக்க தமிழ்ச்சங்க விழாவில் கவனம் ஈர்த்த “திருக்குறள்_2” திரைப்படம் !

அமெரிக்க தமிழ்ச்சங்க விழாவில் கவனம் ஈர்த்த “திருக்குறள்_2” திரைப்படம் !

பிரமாண்டமாக தயாராகும் “திருக்குறள்_2” திரைப்படம் !

பிரமாண்டமாக தயாராகும் “திருக்குறள்_2” திரைப்படம் !

“மனு” திரைப்படத்தின் விமர்சனம்

“மனு” திரைப்படத்தின் விமர்சனம்

“நாகபந்தம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“நாகபந்தம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“லவ் ஓ லவ்” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“லவ் ஓ லவ்” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

பூஜையிடன் படப்பிடிப்பை தொடங்கிய “லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி” படக்குழுவினர் !

பூஜையிடன் படப்பிடிப்பை தொடங்கிய “லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி” படக்குழுவினர் !

பூஜையிடன் துவங்கிய “குட் நியூஸ்” படத்தின் படப்பிடிப்பு !

பூஜையிடன் துவங்கிய “குட் நியூஸ்” படத்தின் படப்பிடிப்பு !

“லவ் ஓ லவ்” படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரித்த டீசர் !

“லவ் ஓ லவ்” படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரித்த டீசர் !

குறும்பட போட்டியில் திறமைசாலிகளை வாழ்த்திய பிரபலங்கள் !

குறும்பட போட்டியில் திறமைசாலிகளை வாழ்த்திய பிரபலங்கள் !

“ஹபீபி” படக்குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா !

“ஹபீபி” படக்குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா !

நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் “சூப்பர் சுப்பு” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் “சூப்பர் சுப்பு” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

திருமுட்டம் அருகே.. தொடரும் மணல் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

திருமுட்டம் அருகே.. தொடரும் மணல் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

“எங்கள் தங்கம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“எங்கள் தங்கம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

வடசென்னையில் தினந்தோறும் 1000 கிலோ ரேசன் அரிசியை கடத்தும் அரசு ஊழியர் சடகோபால் !

வடசென்னையில் தினந்தோறும் 1000 கிலோ ரேசன் அரிசியை கடத்தும் அரசு ஊழியர் சடகோபால் !

திருப்பூரில் மாணவிகளுக்கு ஆபாச கராத்தே பயிற்சி ! கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் கண்டனம்

திருப்பூரில் மாணவிகளுக்கு ஆபாச கராத்தே பயிற்சி ! கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் கண்டனம்

கராத்தே பயிற்சி என ஆபாச வீடியோ வெளியீடு ! வலுக்கும் கண்டனங்கள், கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

கராத்தே பயிற்சி என ஆபாச வீடியோ வெளியீடு ! வலுக்கும் கண்டனங்கள், கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

“மக்கள் தலைவா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“மக்கள் தலைவா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“ஆட்டி” திரைப்படத்தின் விமர்சனம்

“ஆட்டி” திரைப்படத்தின் விமர்சனம்

“நிழல்” திரைப்படத்தின் விமர்சனம்

“நிழல்” திரைப்படத்தின் விமர்சனம்

இஸ்லாமிய குடும்பத்தின் வாழ்வியல் ” ஹபீபி” ! விமர்சனம்

இஸ்லாமிய குடும்பத்தின் வாழ்வியல் ” ஹபீபி” ! விமர்சனம்

ஸ்லம் டாக் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு

ஸ்லம் டாக் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு

நெய்க்காரப்பட்டி கோவில் திருவிழாவில், கூட்ட நெரிசலில் சிக்கி 20_க்கும் மேற்பட்டோர் காயம் !

நெய்க்காரப்பட்டி கோவில் திருவிழாவில், கூட்ட நெரிசலில் சிக்கி 20_க்கும் மேற்பட்டோர் காயம் !

18 ஆம் நூற்றாண்டின் “வாள்” பழனி அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு !

18 ஆம் நூற்றாண்டின் “வாள்” பழனி அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு !

போதைப்பொருள் நடமாட்டத்தை வனத்துறையினருடன் இணைந்து கண்காணித்த காவல்துறையினர் !

போதைப்பொருள் நடமாட்டத்தை வனத்துறையினருடன் இணைந்து கண்காணித்த காவல்துறையினர் !

பழனி அருகே.. நெய்க்காரப்பட்டி கோவில் திருவிழா ! கூட்டத்தை கட்டுப்படுத்த திணறும் காவல்துறையினர் !

பழனி அருகே.. நெய்க்காரப்பட்டி கோவில் திருவிழா ! கூட்டத்தை கட்டுப்படுத்த திணறும் காவல்துறையினர் !

“லைட் வெயிட் பேபி” விறுவிறுப்பான படப்பிடிப்பில் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் !

“லைட் வெயிட் பேபி” விறுவிறுப்பான படப்பிடிப்பில் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் !

மடத்துக்குளம் அருகே.. கார் மோதி 2 வயது குழந்தை பலி ! பெற்றோர் படுகாயம் ! 

மடத்துக்குளம் அருகே.. கார் மோதி 2 வயது குழந்தை பலி ! பெற்றோர் படுகாயம் ! 

“சம்ஹாரம்” திரைப்படத்தின் விமர்சனம்

“சம்ஹாரம்” திரைப்படத்தின் விமர்சனம்

“மூன்றாம் கண்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“மூன்றாம் கண்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

கேன்ஸ் திரைப்பட விழாவில் “பாலன் தி பாய்” திரைப்படத்திற்கு வரவேற்பு !

கேன்ஸ் திரைப்பட விழாவில் “பாலன் தி பாய்” திரைப்படத்திற்கு வரவேற்பு !

“அந்தரன்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !

“அந்தரன்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !

“ஸ்லம் டாக்” படத்தின் டீசர் ஜூன் 8 ஆம் தேதி வெளியாகிறது !

“ஸ்லம் டாக்” படத்தின் டீசர் ஜூன் 8 ஆம் தேதி வெளியாகிறது !

தி இந்தியா ஸ்டோரி திரைப்படம் ஜூலை 24 ஆம் தேதி வெளியாகிறது !

தி இந்தியா ஸ்டோரி திரைப்படம் ஜூலை 24 ஆம் தேதி வெளியாகிறது !

அங்கீகாரம் படத்திற்கு “U” சான்றிதழ் வழங்கிய தணிக்கை வாரியம் !

அங்கீகாரம் படத்திற்கு “U” சான்றிதழ் வழங்கிய தணிக்கை வாரியம் !

ஒப்பந்ததாரரிடம் 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது ! பல்லடம் அருகே பரபரப்பு !

ஒப்பந்ததாரரிடம் 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது ! பல்லடம் அருகே பரபரப்பு !

“கலர்ஸ்” நிறுவனத்தை திறந்து வைத்த நடிகை பிரியா பவானி சங்கர் !

“கலர்ஸ்” நிறுவனத்தை திறந்து வைத்த நடிகை பிரியா பவானி சங்கர் !

“ஈகோ ராமன்” படத்தின் விமர்சனம்

“ஈகோ ராமன்” படத்தின் விமர்சனம்

பெத்தி படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !

பெத்தி படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !

பழனி அருகே அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் காவலப்பட்டி கிராமத்தினர் !

பழனி அருகே அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் காவலப்பட்டி கிராமத்தினர் !

நடன இயக்குனர் “ஷெரீப்_250” கொண்டாட்டம் !

நடன இயக்குனர் “ஷெரீப்_250” கொண்டாட்டம் !

தனித்துவமான வேடத்தில் சசிகுமார் நடித்துள்ள புதிய படத்தின் அப்டேட்ஸ் !

தனித்துவமான வேடத்தில் சசிகுமார் நடித்துள்ள புதிய படத்தின் அப்டேட்ஸ் !

“உயிரிணையே” இசை ஆல்பம் வெளியீட்டு விழா !

“உயிரிணையே” இசை ஆல்பம் வெளியீட்டு விழா !

“பெத்தி” திரைப்படம் ராம் சரணுக்கு தேசிய விருதை பெற்றுத்தரும் ! – சிவராஜ்குமார்

“பெத்தி” திரைப்படம் ராம் சரணுக்கு தேசிய விருதை பெற்றுத்தரும் ! – சிவராஜ்குமார்

சிம்பு நடிக்கும் “அரசன்” படத்தின் புதிய தகவல்கள் !

சிம்பு நடிக்கும் “அரசன்” படத்தின் புதிய தகவல்கள் !

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தால், கொள்ளை லாபம் பார்க்கும் FL-2 பார் உரிமையாளர்கள் !

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தால், கொள்ளை லாபம் பார்க்கும் FL-2 பார் உரிமையாளர்கள் !

பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே ? அதிகரிக்கும் பாலியல் சீண்டல்கள் !

பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே ? அதிகரிக்கும் பாலியல் சீண்டல்கள் !

“பாதாம்கீர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியீடு !

“பாதாம்கீர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியீடு !

பரபரப்பான ஆக்ஷ்ன் த்ரில்லர் கதைகளத்தில் உருவாகும் “சமவர்த்தி” !

பரபரப்பான ஆக்ஷ்ன் த்ரில்லர் கதைகளத்தில் உருவாகும் “சமவர்த்தி” !

“நாக பந்தம் திரைப்படம் ஜூலை 3 ஆம் தேதி வெளியீடு !

“நாக பந்தம் திரைப்படம் ஜூலை 3 ஆம் தேதி வெளியீடு !

“தி இந்தியா ஸ்டோரி” படத்தின் டீசர் விரைவில் வெளியீடு !

“தி இந்தியா ஸ்டோரி” படத்தின் டீசர் விரைவில் வெளியீடு !

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “கான் சிட்டி” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “கான் சிட்டி” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்ட ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் !

சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்ட ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் !

ஆக்ஷ்ன், த்ரில்லர் கதையில் உருவாகிவரும் “கொம்பா” திரைப்படம் !

ஆக்ஷ்ன், த்ரில்லர் கதையில் உருவாகிவரும் “கொம்பா” திரைப்படம் !

“கங்கணம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“கங்கணம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“அதிரடி” படவிழாவில் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் !

“அதிரடி” படவிழாவில் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் !

வரவேற்பை குவிக்கும் “தாழ் திறவா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் !

வரவேற்பை குவிக்கும் “தாழ் திறவா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் !