“29” படத்தின் முன் வெளியீட்டு விழா !

ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ, ஜீ ஸ்குவாட் தயாரிப்பில், ரத்னகுமார் இயக்கத்தில் நடிகர் விது நடிக்கும் ’29’ திரைப்படத்தை அறிமுகப்படுத்தும் வகையில் ‘Welcome To The World of 29’ என்ற பிரத்யேக நிகழ்வு சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

‘மேயாதமான்’, ‘ஆடை’, ‘குலுகுலு’ படங்களுக்குப் பிறகு ரத்னகுமார் இயக்கும் இந்த படத்தில் விது, ப்ரீத்தி அஸ்ராணி, மகேந்திரன், அவினாஷ், ஷெகனாஸ் ஃபாத்திமா, பிரேம் குமார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். கார்த்திகேயன் சந்தானம், கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. படம் மே 8ஆம் தேதி வெளியாகிறது.

இந்த நிகழ்வில் இயக்குநர்கள் பி.எஸ். வினோத் ராஜ், கார்த்திக் யோகி, பிராங்க்ளின் ஜோசப், அருண் மாதேஸ்வரன், தயாரிப்பாளர்கள் அருண் விஷ்வா, சினிஷ், ராஜசேகர் பாண்டியன், மகேஷ் ராஜ் பஸ்லியான், நடிகர் ரியோ ராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் நடிகர் மகேந்திரன் பேசுகையில், 29 வயதில் தான் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மூலம் ‘மாஸ்டர்’ பட வாய்ப்பு கிடைத்தது என்றும், அது தனது வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்தது. அதனைத்தொடர்ந்து  ரத்னகுமார் மீண்டும் வாய்ப்பு வழங்கியதற்கு நன்றி தெரிவித்தார். விதுவின் நடிப்பு, அர்ப்பணிப்பு, கதாபாத்திரத்திற்காக உழைக்கும் மனப்பாங்கு பாராட்டுக்குரியது. அவர், மிகவும் பிடித்த சக நடிகர் என்றார்.

நடிகை ப்ரீத்தி அஸ்ராணி பேசுகையில், சத்யா, விஜி என்ற இரு கதாபாத்திரங்களை மையமாக கொண்ட காதல் கதை இது, 29 வயது இளைஞன் மற்றும் 21 வயது பெண்ணின் வாழ்க்கை பார்வை வித்தியாசங்களை படம் பேசும். ரசிகர்கள் தங்களை எளிதில் தொடர்புபடுத்திக் கொள்ளக்கூடிய உணர்வுப்பூர்வமான காதல் பயணம். இயல்பான, அடுத்த வீட்டு பெண் போன்ற கதாபாத்திரத்தில் நடித்தது மகிழ்ச்சி அளித்தது என்றார்.

நடிகர் விது பேசுகையில், இந்த மேடை தனது வாழ்க்கையில் மிகவும் சிறப்பானது, பல ஆண்டுகளுக்கு முன் கனவாக பேசிய விஷயங்கள் இன்று நனவாகியிருப்பது மகிழ்ச்சி. படக்குழுவினர் அனைவரும் குடும்பமாக இணைந்து பணியாற்றியதால், படப்பிடிப்பு முடிவில் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டோம். ரத்னகுமார் மீதுள்ள அன்பையும் நம்பிக்கையையும், ஷான் ரோல்டனின் இசையும் படத்திற்கு ஜீவனாக அமைந்துள்ளது என்றார்.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் பேசுகையில், இந்த படத்தின் கதை காதலை புதிய கோணத்தில் சிந்திக்க வைத்தது. நீண்ட காலமாக காதல் படங்களில் பணியாற்றியிருந்தாலும், இந்த கதை தன்னுள் மறைந்திருந்த காதல் உணர்வை மீட்டது. இன்றைய வேகமான வாழ்க்கையில் நேர்மையான காதலை பேசும் படைப்பாக ’29’ இருக்கும், தமிழ் காதல் படங்களின் தனித்துவமான வரிசையில் இப்படம் இடம் பெறும் என்றார்.

தயாரிப்பாளர் கார்த்திகேயன் சந்தானம் பேசுகையில், இந்த திரைப்படம் ஒருவரது சுய அடையாளத்தை பற்றி பேசுகிறது. அதற்கு பொருத்தமான ஆள் என்னைத் தவிர இந்த சூழலில் வேறு யாரும் இருக்க முடியாது. என்னை இப்போது மற்றவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்றால்… லோகேஷ் கனகராஜ் அவருடைய நண்பர் ரத்ன குமாருக்காக இப்படத்தை தயாரிக்கிறார் என்றனர். கார்த்திக் சுப்புராஜ் நடிகர் விதுவிற்காக இப்படத்தை தயாரிக்கிறார் என்றனர். அப்படி என்றால் நான் என்ன செய்கிறேன் ? என்று யோசித்தால். இதற்கு கார்த்திக் சுப்புராஜூம், லோகேஷ் கனகராஜும் தான் பதில் சொல்ல முடியும். அப்போதுதான் நான் யார் ? என்பதை இந்த உலகத்திற்கு சொல்ல முடியும்.

இந்தப் படத்திற்கு நான் தான் தயாரிப்பாளர் என்று வடிவேலு ஒரு படத்தில் சொல்வதைப் போல் சொல்ல வேண்டும் போலிருக்கிறது. இதனால் இது ஒருவரது சுய அடையாளத்தை பற்றிய விசயங்களுக்குள் எளிதாக சென்று விடுகிறது. இதனை நான் சந்தோஷமாகத்தான் சொல்கிறேனே தவிர வருத்தப்பட்டு சொல்லவில்லை.

நான் கார்த்திக் சுப்புராஜ், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் 2014 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து இணைந்து பயணித்துக் கொண்டிருக்கிறோம். மூன்று கோடி ரூபாய் பட்ஜெட்டில் இருந்து. 154 கோடி ரூபாய் பட்ஜெட் வரை பல படங்களில் பணியாற்றிருக்கிறேன். ஆனால் இங்குள்ளவர்கள் என்னை தயாரிப்பாளராக பார்த்ததே இல்லை. பார்க்கப் போவதுமில்லை. இந்த நிலையில் நான் இருக்கும்போது. இயக்குநர் ரத்னகுமார் சுய அடையாளத்தை பற்றி கேள்வியை எழுப்பி, ஒரு படத்தை எங்களிடம் சமர்ப்பிக்கிறார்.‌ இந்த கதையை கேட்ட பிறகு இதைவிட அழகாக சுய அடையாளத்தை பற்றியும் காதலைப் பற்றியும் யாராலும் சொல்லிவிட முடியாது. அதனால் இந்தப் படத்த்துடன் நான் உணர்வுபூர்வமாக தொடர்பு கொண்டேன்.

சமீபத்தில் மதன் கௌரி உடனான ஒரு சந்திப்பின்போது கிரிக்கெட் வீரர் டோனிக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை பகிர்ந்து கொண்டார். அதை கேட்ட பிறகு டோனிக்கே அந்த நிலைமை என்றால், நாம் எல்லாம் யார் ? என நினைத்துக் கொண்டேன். நாங்கள் இதுவரை 18 படங்களை தயாரித்திருக்கிறோம். இதில் எங்களுடைய பார்ட்னர்களுடன் இணைந்து என்ன மாதிரியான சினிமாவை தயாரிக்க வேண்டும் என்பது குறித்து விவாதிக்கிறோம். ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தில் இருந்து எந்த மாதிரியான படங்கள் வெளியாகும் என்ற கேள்வி எழும்போது.. ஒரு பக்கம் கமர்சியலும் இருக்கும். மறுபக்கம் சொல்ல வேண்டிய கதைகளும் இருக்கும். நாங்கள் மற்றவர்கள் எளிதில் யூகிக்காத வகையிலான படங்களை தயாரிக்கிறோம். அத்துடன் புதுப்புது இளம் திறமைசாலிகளை கண்டறிந்து வாய்ப்புகளும் வழங்குகிறோம். அத்துடன் எங்களுடைய ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ என்ற பிராண்டு தான் முக்கியம் என்பதையும் உணர்ந்து இருக்கிறோம்.

லோகேஷ் கனகராஜுக்கு சத்தியமாக இதுவரை இப்படத்தின் கதை தெரியாது. அவர் இதுவரை நம்பிக்கையின் பேரில் மட்டுமே தொடர்ந்து முதலீடு செய்து வந்திருக்கிறார். எங்கள் மீது அத்தகைய நம்பிக்கையை வைத்ததற்காக லோகேஷ் கனகராஜிற்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்புராஜ் ஆகிய இரண்டு இயக்குநர்கள் இணைகிறார்கள் என்றால், அந்தப் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு நிச்சயமாக இருக்கும். அதற்கு சரியான பதிலை அளிப்பது போல் இந்த 29 படம் இருக்கும். இந்தப் படத்தை இயக்கிய ரத்ன குமாருக்கு நன்றி.‌

விது என்னுடைய தம்பி. இந்த தம்பிக்காக அண்ணன் இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இதுதான் உண்மை. இதை நான் பெருமிதமாக சொல்கிறேன். திறமை இருந்தால் நாங்கள் நிச்சயம் வாய்ப்பை வழங்குவோம். விதுவிற்கு திறமை இருக்கிறது. ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தை இயக்கும் போது அந்தப் படத்தின் முக்கிய கேரக்டரான ஷட்டாணி கேரக்டருக்கு விது தான் பொருத்தமாக இருப்பார் என்று கார்த்திக் சுப்புராஜ் தீர்மானித்தார். அந்த வாய்ப்பை ஏற்று விது தன் திறமையை வெளிப்படுத்தினார். அதன் பிறகு ரெட்ரோ படத்தில் சூர்யாவுக்கு வில்லனாக மைக்கேல் கேரக்டரில் தோன்றி தன் திறமையை மீண்டும் நிரூபித்தார் விது. இந்தப் படத்தில் சத்யாவாக அவர் நடித்திருக்கிறார் தொடர்ந்து எங்கள் நிறுவனம் தயாரிக்கும் மூன்று படங்களில் அவர் நடிக்க உள்ளார். இந்த வருடம் முடிவதற்குள் அவர் கைவசம் மூன்று படங்கள் இருக்கும். அவை எல்லாம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும் என நான் நம்புகிறேன்.

இந்தப் படத்திற்குப் பிறகு நடிகை ப்ரீத்தி அஸ்ராணியை தமிழக மக்கள் அனைவரும் தங்களுடைய விஜியாக பார்ப்பார்கள். இந்தப் படத்தில் சத்யாவுக்கும் விஜிக்கும் இடையேயான லவ் ஸோல்ஃபுல்லாக இருக்கும்.

செவன் ஜி ரெயின்போ காலனி, விண்ணைத்தாண்டி வருவாயா, அலைப்பாயுதே போன்ற படங்களை ரசித்த ரசிகன் நான். என்னை போல் பல ரசிகர்கள் இருக்கிறார்கள். அந்த வரிசையில் 29 நிச்சயமாக இடம் பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு நிச்சயமாக இருக்கிறது.
இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டனின் ஸோல் ஃபுல் மியூசிக் ரொம்ப பிளஸ். இந்த படத்திற்காக பணியாற்றிய நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

சோனி மியூசிக் நிறுவனத்திற்கும் வெளிநாட்டு உரிமையை பெற்ற ஏ பி இன்டர்நேஷனல் நிறுவனத்திற்கும் தமிழக முழுவதும் வெளியிடும் ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் நிறுவனத்திற்கும் நன்றி. மேலும் நடிகர் ரியோ ராஜுடன் விரைவில் ஒரு படத்தில் இணைகிறோம். அது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றார்.

தயாரிப்பாளர், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில்,  ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தை தொடங்கும் போது குறும்படங்களை எல்லாம் ஒன்றிணைத்து ஆந்தாலஜி பாணியில் ஒரு படத்தை உருவாக்கினோம்.‌ ரத்னகுமார் இயக்கிய ‘மது’ எனும் குறும்படமும் இடம் பிடித்தது. அந்த குறும்படத்தை பார்க்கும் போதே ரத்னகுமாரின் எழுத்தும் இயக்கமும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்போதே அவரிடம் ஏதாவது திரைப்படத்திற்கான கதை இருக்கிறதா ? என்று கேட்டோம். அப்போதுதான் நாங்கள் ஒரு திரைப்படத்தை தயாரிக்கலாம் என்று தீர்மானித்திருந்தோம். அப்போது ரத்னாவிடம் கதையை கேட்போம் என்று சொன்னேன். அவரும் இரண்டு, மூன்று ஐடியாக்களை சொன்னார். ஆனால் நான் தான் ‘மது’ எனும் குறும் படத்தையே முழு நீள காதல் திரைப்படமாக மாற்றித் தர முடியுமா ? என்று கேட்டேன். அதுதான் மேயாதமான். அதுதான் எங்களது முதல் திரைப்படம். மேயாத மான் எங்களது முதல் படம் என்பதில் எங்களுக்கு பெருமை.

என்னைப் பொறுத்தவரை ரத்னகுமார் நல்ல எழுத்தாளர். அவருக்குள் பயங்கரமான ஹியூமர் இருக்கிறது. அவரிடம் சாதாரணமாக பேசினாலே சிரித்துக் கொண்டே இருப்போம். ஜாலியாக இருக்கும். ஒரு விசயத்தை அவர் பார்க்கும் விதமே வேறு வகையாக இருக்கும். அதை அவர் சொல்லும் போது காமெடியாக இருக்கும். மேயாத மான் படத்தில் காமெடி இருந்தாலும் அதற்குள் ஒரு அழுத்தமான லவ்வும் இருக்கும். அந்த படத்தின் பணிகள் முடிந்ததும் இப்படத்தின் கதையைப் பற்றி விவாதிக்க தொடங்கினோம்.‌ அதன் பிறகு அவர் இது வேண்டாம் என்று வேறொரு கதையை எழுதத் தொடங்கினார்.

என்னை பொறுத்தவரை ஒரு லவ் ஸ்டோரி என்றால் அதில் யார் ஃபெர்பார்ம் செய்கிறார்கள் என்பதைதான் நான் பார்ப்பேன். ஏனெனில் ஸ்ட்ராங்கான ரைட்டிங் இருக்கும்போது.. ஆர்டிஸ்ட் நன்றாக இருந்தால் அது வெற்றி பெறும். இந்தப் படத்திற்கு முதலில் நட்சத்திர நடிகர்களை வைத்து தயாரிக்கலாம் என்று திட்டமிட்ட போது.. ரத்னகுமார் தான் புது முகம்தான் பொருத்தமாக இருக்கும் என்றார். அதன் பிறகு என்னுடைய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ரெட்ரோ ஆகிய படங்களில் நடித்த விதுவை அவர் ஆடிசன் செய்துதான் வாய்ப்பளித்தார்.

நாம் நிறைய காதல் படங்களை பார்க்கிறோம் ஆனால் ஒரு சில படங்கள் தான் எவர்கிரீனாக நினைவில் நிற்கும். எனக்கு செல்வராகவன் சாரின் படங்கள் மிகவும் பிடிக்கும். அதிலும் 7 ஜி ரெயின்போ காலனி என்னுடைய ஆல் டைம் ஃபேவரைட் ஆன படம். அந்த லவ் எத்தனை வருஷம் ஆனாலும் நம்மால் மறக்க முடியாது. அதேபோல் கௌதம் மேனன் காதல் கதைகளை அவருடைய ஸ்டைலிஷ் ஆன மேக்கிங்கில் சொல்வார். அதே போன்று வித்தியாசமான தனித்துவமான காதல் கதை தான் ரத்ன குமாரின் 29. லோகேஷ் கனகராஜை போல் ரத்ன குமாரும் லவ்விற்காக ஒரு யுனிவர்ஸை உருவாக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

இப்படத்திற்காக லேட்டஸ்டாக வெளியான ‘பொல்லாத ஆசைகள்..’ என்ற பாடலை ஷான் ரோல்டன் பாடியிருக்கிறார். அவரது குரல் நன்றாக இருக்கும். அந்த பாடலை படத்தின் இறுதியிலாவது வைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்த படத்திற்கு என்னமாதிரியான ட்ரெய்லரை வெளியிடலாம் என விவாதித்துக் கொண்டிருந்தபோது.. எங்களுக்கு பெரிய குழப்பம் இருந்தது ரசிகர்களை திரையரங்கத்திற்கு வர வைக்கும் வகையில் ட்ரெய்லர் இருக்க வேண்டுமா ? படம் எதைப் பற்றி பேசுகிறது என்பதை சொல்லும் வகையில் ட்ரெய்லர் இருக்க வேண்டுமா? என்ற வகையில் எங்களுடைய விவாதம் சென்று கொண்டிருந்தது.‌
அப்போது இயக்குநர் ரத்னகுமார் இந்த 29 எனும் படம் சத்யா எனும் இளைஞனின் 29 வயது வாழ்க்கையில் நடைபெற்ற பத்து அத்தியாயங்கள் தான் கதை என்பதால், அதிலிருந்து ஒரு அத்தியாயத்தை நாம் வெளியிடலாமா..! என கேட்டார். அவருடைய இந்த ஐடியா எனக்கு மிகவும் பிடித்திருந்தது.‌

இந்தப் படம் என்ன மாதிரியான படம், இந்த படத்தின் கதாபாத்திரங்கள் யார் ? படம் எதைப் பற்றி பேசுகிறது, காதல் என்றால் என்ன ? ஆகிய எல்லாவற்றையும் இணைத்து சொல்வது போல் இந்த காட்சி இருந்தது. இந்த காட்சியில் ரத்னகுமாரின் ரைட்டிங்கும் ஃபிலிம் மேக்கிங்கும் நன்றாக இருந்தது. அதுவும் ஒரு சிங்கிள் ஷாட்டில் இருந்தது.‌ எங்களுடைய ஆந்தாலஜி படத்தில் எப்படி ரத்ன குமாரின் மது குறும்படம் இருந்ததோ, அதேபோல் லோகேஷ் கனகராஜ் களம் எனும் குறும்படமும் இருந்தது. ரத்னகுமாரும் லோகேஷ் கனகராஜும் நண்பர்கள். லோகேசும் நானும் இணைந்து ஒரு படம் தயாரிப்பது மகிழ்ச்சி தான்.

நான் தயாரிப்பில் கிரியேட்டிவ் பகுதியைத் தான் கவனிக்கிறேன். மற்ற அனைத்து விசயங்களையும் கார்த்திகேயன் சந்தானம் தான் கவனித்துக் கொள்கிறார். எங்கள் நிறுவனத்தின் எல்லா படத்தையும் சாத்தியமாக்கியது கார்த்திகேயன் சந்தானம் தான். இந்த 29 திரைப்படத்தையும் பொறுப்பேற்றுக்கொண்டு நிறைவேற்றி காட்டியது கார்த்திகேயன் சந்தானம் தான். அவர்தான் லோகேஷ் கனகராஜை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.‌ இப்போது ஒரு திரைப்படத்தின் ரிலீஸ் என்பதும் மிகவும் கஷ்டமாக இருக்கிறது. இரண்டு பெரிய திரைப்படங்களுக்கு நடுவில் நாங்கள் வெளியிடுகிறோம். இந்த 29 திரைப்படத்தை அனைவரும் பார்த்து ரசித்து கொண்டாடும் வகையில் தான் உருவாக்கி இருக்கிறோம் என்றார்.

இயக்குநர் ரத்னகுமார் பேசுகையில், மேயாத மான் படத்தினை முடித்த பிறகு ஒரு நாள் வீட்டில் இருந்த போது, இரவு நேரத்தில் மழை பெய்து கொண்டிருந்தது. பேஸ்புக்கில் ‘வாட்ஸ் இன் மைண்ட்’ என்றுதான் ஒரு விசயத்தை போஸ்ட் செய்தேன். என் ரூமில் மழையின் சத்தம் மட்டும்தான் கேட்டுக் கொண்டிருந்தது. ஒரு குடையில் ஒரு பையனும் பெண்ணும் நின்று கொண்டிருக்கிறார்கள். மழை பெய்து கொண்டிருக்கிறது. அவர்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்ற ரீதியில் ஒரு உரையாடலை எழுதி, போஸ்ட் செய்தேன். மறுநாள் அதற்கு ஏகப்பட்ட லைக்ஸ், கமெண்ட்ஸ் வந்திருந்தது. அதில் ‘அந்த இரண்டு கேரக்டர் அதற்குப் பிறகு என்ன செய்தார்கள். என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறோம்’ என்று சிலர் பதிவிட்டனர். அப்போது அந்த கேரக்டருக்கு நான் பெயர் கூட வைக்கவில்லை. ஏனென்றால் அதை வாசிக்கும் ஒவ்வொருவரும் தங்களை நினைத்து கொள்வார்கள் என்று விட்டுவிட்டேன். சரி என்று மற்றொரு நாள் அவர்கள் அடுத்ததாக எங்கே சந்தித்து இருப்பார்கள் ? என்று ஒரு இடத்தை தேர்வு செய்தேன். அதுதான் இப்போது நீங்கள் இங்கு பார்த்த கிளிம்ப்ஸ்.
இதைத்தான் நான் இரண்டாவது முறையாக எழுதி பேஸ்புக்கில் போஸ்ட் செய்தேன். எனக்குள் தோன்றியதை பேஸ்புக்கில் போஸ்ட் செய்தேன்.

அப்போது ஒரு நண்பர் எனக்கு போன் செய்து எதுக்கு இப்போது நீ ஃபேஸ்புக்கில் இப்படி போஸ்ட் போடுகிறாய் ? இதற்குள் ஒரு நல்ல கதை இருக்கிறது. இரண்டு கேரக்டர்ஸ் ஒரு சிறிய குட்டி ஸ்பேஸ்க்குள் கனெக்ட் பண்ண முடிகிறது. இதனை ஒரு படமாக உருவாக்கலாம். நீ உருவாக்கவில்லை என்றால், வேறு யாரேனும் இதனை படமாக உருவாக்கி விடுவார்கள். தயவு செய்து அதனை டெலீட் செய்து விடு என்றார். இதேதான் நான் என்னுடைய மது குறும்படத்தை யூடிபில் போஸ்ட் செய்த போதும் நடந்தது. அந்த மது மேயாத மான் படமாக ஆனதை போல்.. பேஸ்புக்கில் போஸ்ட் போட்ட விசயங்கள் தற்போது 29 எனும் படமாக உங்களிடம் வந்திருக்கிறது. நான் கதை எழுத உட்கார்ந்தபோது என் மனதிற்குள் தோன்றிய இரண்டு கற்பனை கதாபாத்திரங்களின் பயணம் தான் இந்த படம்.

கார்த்திகேயன் சந்தானம் இல்லாமல் இந்த படம் இல்லை.‌ அவர்தான் இந்தக் கதையை ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்தில் தான் நீ உருவாக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். லோகேஷ் எனக்கு வேறு ஒரு வாய்ப்பை அமைத்துக் கொடுத்தார். அவரே ஒரு கதையை கொடுத்து அதை படமாக உருவாக்கு என்றார்.‌ கார்த்திக் சுப்புராஜ் நான் ஒரு ஆக்சன் ஓரியண்டட் கதையை கொடுக்கிறேன் அதை நீ டைரக்ட் செய் என்றார். ஆனால் இவர்களுக்கு மத்தியில் கார்த்திக் சந்தானம் தான் நீ 29 படத்தை இயக்கு. இதுதான் நீ என்று எனக்கு சுட்டிக்காட்டினார்.

அடையாளத்தை நாம் வாங்க முடியாது அதுவாக அமைவது தான். நான் யார் ? என்ற கேள்வி எனக்குள் வரும்போது தான் நான் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பேஸ்புக்கில் போட்ட போஸ்ட் தான் ஒரு கதையாக உருவாகி நான் யாரு என்று கேட்டால் தெரியவில்லை என்று சொல்லும் அளவிற்கு நோக்கமே இல்லாத ஒரு 29 வயது பையன். அவருடைய வாழ்க்கையில் 20 களில் இருக்கும் ஒரு பெண் வருகிறாள். அந்தப் பெண்ணும் அவனும் இணைந்து பயணிக்கும் போது தான் யார் ? என்பதை உணர்ந்து கொள்கிறார்கள். இது ஒரு படமாக தயாரானது. எனக்கு 29 வயதில் தான் நிறைய விசயங்கள் நடந்ததால் .. இப்படத்தின் டைட்டில் 29 என்பதாக இருக்க வேண்டும் என தீர்மானித்தேன்.

29 எனும் டைட்டிலை புரிய வைப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது. இது டோர் நம்பரா, பஸ் நம்பரா, ஏதேனும் ஒரு நாளா, அதெல்லாம் இல்லை. இது வயது என குறிப்பிடுவதற்கு ஒரு போராட்டமே நடந்தது.‌ நீங்கள் பார்த்த கிளிம்ப்ஸ், சத்யாவின் வாழ்க்கையில் உள்ள பத்து அத்தியாயங்களில் இரண்டாவது அத்தியாயம். இது உங்களுக்குப் பிடித்திருக்கிறது. உங்களை உங்களுடன் எளிதில் தொடர்பு கொள்கிறது என்றால் தாராளமாக மீதி இருக்கும் அத்தியாயங்களும் உங்களுக்கு பிடிக்கும். நீங்கள் இந்தப் படத்தை ரசித்து பார்ப்பீர்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது. இந்த படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பேசுகையில், 29 எனும் இந்த படம் ஜீ ஸ்குவாட் நிறுவனமும், ஸ்டோன் பெஞ்ச் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் திரைப்படம். என்னுடைய தயாரிப்பில் இது முதல் படம். இதற்கு முன் ‘ஃபைட் கிளப்’ எனும் ஒரு படமும், ‘மைக்கேல்’ எனும் ஒரு படத்தையும் வழங்கி இருக்கிறேன் அதுவும் நண்பர்களுக்காகத் தான் வழங்கினேன். இந்தப் படத்தை தயாரிப்பதற்கு முழு முதல் காரணம் என் நண்பர் ரத்னகுமார் தான். ரத்னகுமார் ஒரு எழுத்தாளரை கடந்து ஒரு நண்பரை கடந்து நீண்ட நாட்களாகவே சக போட்டியாளராக இருந்திருக்கிறார்.‌

2013 ஆம் ஆண்டில் முதல் படத்தை இயக்குவதற்காக அலைந்து கொண்டிருந்த போது, இங்கு இப்போது இருக்கும் எல்லா இயக்குநர்களும் ஒன்றாக தான் சுற்றி கொண்டிருந்தோம். அப்போது நானும், ரத்ன குமாரும் குறும்படத்தை இயக்கி விட்டு தெருத்தெருவாக சுற்றிக் கொண்டிருந்தோம். 2012 ஆம் ஆண்டில் பீட்சா படம் வெளியானது. அந்தப் படம் எங்களுடைய கனவுகளுக்கெல்லாம் மிகப்பெரிய கதவை திறந்து வைத்தது. எனக்கு மட்டுமல்ல இன்றைக்கு இருக்கும் மிகப்பெரிய இயக்குநர்களுக்கு எல்லாம் அது மிகப் பெரிய கதவை திறந்து வைத்தது.

அதன் பிறகு கார்த்திக் சுப்புராஜ் பெஞ்ச் டாக்கீஸ் எனும் ஒரு தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார். அப்போது குறும்படங்களை எல்லாம் ஒன்றிணைத்து ஒரு ஆந்தாலஜி படத்தை உருவாக்கினார். அந்த அவியல் எனும் ஆந்தாலாஜி படத்தில் என்னுடைய களம் எனும் குறும்படமும் இருந்தது. கார்த்திக் சுப்புராஜ், ரத்ன குமாரை மட்டும் அறிமுகப்படுத்தவில்லை. என்னையும் தொழில்நுட்ப ரீதியாக அவியல் படத்தின் மூலம் அறிமுகப்படுத்தினார்.
அப்போதிலிருந்து தற்போது வரை அனைவரும் நண்பர்களாகத் தான் இருக்கிறோம். ஆனால் தற்போது ரத்னா இயக்க ஸ்டோன் பெஞ்ச் நிறுவனத்துடன் இணைந்து நானும் ஒரு தயாரிப்பாளராக பொறுப்பேற்று இருக்கிறேன். இந்த ஒரு இடத்தை வழங்கியதற்காக மக்களுக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியதற்கு காரணமே இதுதான். நாம் வளரும்போது நம்முடன் இருந்தவர்களையும் வளர்த்து விட வேண்டும் என்ற நோக்கத்திற்காகத் தான் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினேன். இதற்கும் இன்ஸ்பிரேஷன் கமல் சார் தான். சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் தான் முதலீடு செய்ய வேண்டும் என்பதை அவர்தான் எங்களுக்கு சொல்லிக் கொடுத்தார். அவரிடமிருந்து தான் இந்தப் பாடத்தை நாங்களும் கற்றுக் கொண்டோம். இந்தப் படம் மட்டுமல்ல எங்களுடைய தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து அடுத்தடுத்து உருவாகும் படங்களும் படங்கள் அனைத்தும் புது புது இளம் திறமைசாலிகளை அறிமுகப்படுத்துவதற்காகத்தான். இதற்கு 29 திரைப்படம் சிறந்த தொடக்கமாக இருக்கும் என்று நம்புகிறேன். என்னுடைய படங்களுக்கு கொடுத்த ஆதரவை போல் என்னுடைய தயாரிப்பில் உருவாகும் படங்களுக்கும் வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

நான் இதுவரை இந்த படத்தை பார்க்கவும் இல்லை. கதையை கேட்கவும் இல்லை. எல்லாம் ரத்னகுமார் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான். அவர் மீது வைத்திருக்கும் குருட்டு நம்பிக்கையால் அவர் பொறுப்புணர்வுடன் படத்தை இயக்கியிருப்பார். இந்தப் படத்தை மே எட்டாம் தேதி ரசிகர்களுடன் திரையரங்கில் பார்ப்பதற்கு ஆவலாக இருக்கிறேன். படத்தின் தயாரிப்பாளர்கள், நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என்றார்.

dhamaraimurasu

dhamaraimurasu

dhamaraimurasu admin

Related Posts

விஜய் சேதுபதியின் “பத்தா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா, சத்யபாமா பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. படக்குழுவினர், திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் கலந்துகொண்டனர். ஸ்டார் ஸ்டுடியோ 18  (Star Studio18) மற்றும் இயக்குநர்…

Read more

“மண்டாடி” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

அண்மையில் வெளியாகி விமர்சன ரீதியிலும் வசூல் ரீதியிலும் வெற்றி பெற்றுள்ள படம் ‘மண்டாடி’. இப்படத்தில் சூரி, சுஹாஸ், மஹிமா நம்பியார், சத்யராஜ், ரவீந்திர விஜய், பால சரவணன், மிதுன் மற்றும் ஸ்டன் சிவா உள்ளிட்ட பலர்  நடித்திருந்தனர். இயக்குநர் மதிமாறன் புகழேந்தி…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்கத்தவறிய செய்திகள்

விஜய் சேதுபதியின் “பத்தா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

விஜய் சேதுபதியின் “பத்தா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

பறிபோன மானத்திற்கு “என்ன விலை” என்ன விலை படத்தின் விமர்சனம்

பறிபோன மானத்திற்கு “என்ன விலை” என்ன விலை படத்தின் விமர்சனம்

“மண்டாடி” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“மண்டாடி” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“கஸ்தூரி வீடு” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“கஸ்தூரி வீடு” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

பாவனா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் “பிக்னிக்” படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு !

பாவனா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் “பிக்னிக்” படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு !

துல்கர் சல்மானின் “ஆகாசம்லோ ஓக தாரா” (AOT) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

துல்கர் சல்மானின் “ஆகாசம்லோ ஓக தாரா” (AOT) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

எம்.எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி “எம்.எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்” படத்தின் துவக்க விழா !

எம்.எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி “எம்.எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்” படத்தின் துவக்க விழா !

அர்ஜூன் தாஸ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

அர்ஜூன் தாஸ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

“அன்பில் அவன்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

நானி நடிப்பில் உருவாகியுள்ள “தி பாரடைஸ்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

நானி நடிப்பில் உருவாகியுள்ள “தி பாரடைஸ்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“என்ன விலை” படம் மறக்க முடியாத அனுபவம் ! நிமிஷா சஜயன்

“என்ன விலை” படம் மறக்க முடியாத அனுபவம் ! நிமிஷா சஜயன்

தி டார்க் ஹெவன் படத்தின் முன் வெளியீட்டு விழா !

தி டார்க் ஹெவன் படத்தின் முன் வெளியீட்டு விழா !

“பனங்காட்டான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“பனங்காட்டான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

அரசியலும் சமூக அக்கறையும் சேர்ந்து உருவான படம் தான் “ஆகாயம்” ! தினந்தோறும் நாகராஜ்

அரசியலும் சமூக அக்கறையும் சேர்ந்து உருவான படம் தான் “ஆகாயம்” ! தினந்தோறும் நாகராஜ்

“என்ன விலை” படத்தில் நான் நடித்த கதாப்பாத்திரம் மிகவும் சவாலானது ! கருணாஸ்

“என்ன விலை” படத்தில் நான் நடித்த கதாப்பாத்திரம் மிகவும் சவாலானது ! கருணாஸ்

“என்ன விலை” படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியது எனக்கு கிடைத்த வரம் !

“என்ன விலை” படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியது எனக்கு கிடைத்த வரம் !

“மண்டாடி” மூலம் மாஸ் ஹீரோவான சூரி ! மண்டாடி விமர்சனம்

“மண்டாடி” மூலம் மாஸ் ஹீரோவான சூரி ! மண்டாடி விமர்சனம்

வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகியுள்ள “நல்லபடம்” செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியீடு !

வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகியுள்ள “நல்லபடம்” செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியீடு !

சூர்யா நடித்துள்ள “சீன்” ( SCENE ) படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு !

சூர்யா நடித்துள்ள “சீன்” ( SCENE ) படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு !

“என்ன விலை” படத்தில் நடித்தது மிகவும் சவாலாக இருந்தது ! நடிகை ஷாஷா சிவக்குமார்

“என்ன விலை” படத்தில் நடித்தது மிகவும் சவாலாக இருந்தது ! நடிகை ஷாஷா சிவக்குமார்

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

அசோக் செல்வன் நடித்துள்ள “அன்பில் அவன்” வெளியீட்டு தேதி அறிவிப்பு !

அசோக் செல்வன் நடித்துள்ள “அன்பில் அவன்” வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“வதந்தி சீசன்_2” பற்றி மெய்சிலிர்க்கும் நடிகர் !

“வதந்தி சீசன்_2” பற்றி மெய்சிலிர்க்கும் நடிகர் !

“என்ன விலை” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“என்ன விலை” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

திரைப்பிரபலங்களுக்கு புதிய தீர்ப்பை பெற்றுத்தந்துள்ள நடிகை !

திரைப்பிரபலங்களுக்கு புதிய தீர்ப்பை பெற்றுத்தந்துள்ள நடிகை !

“வைல்ட் தமிழ்நாடு” இன்று முதல் பிவிஆர் திரையரங்குகளில் வெளியீடு !

“வைல்ட் தமிழ்நாடு” இன்று முதல் பிவிஆர் திரையரங்குகளில் வெளியீடு !

“மொத ராத்திரி” படக்குழுவினரின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“மொத ராத்திரி” படக்குழுவினரின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

கமல்ஹாசனின் புதிய படத்தின் “புகைப்படம்” சமூக வலைதளங்களில் வைரல் !

கமல்ஹாசனின் புதிய படத்தின் “புகைப்படம்” சமூக வலைதளங்களில் வைரல் !

நயன்தாராவின் “ஹாய்” படத்தின் விமர்சனம் !

நயன்தாராவின் “ஹாய்” படத்தின் விமர்சனம் !

மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க அலட்சியப்படுத்தும் அரசு அதிகாரிகள் ! நரிக்குறவர் இன மக்களின் போராட்டத்திற்கு தீர்வு எப்போது ?.!

மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க அலட்சியப்படுத்தும் அரசு அதிகாரிகள் ! நரிக்குறவர் இன மக்களின் போராட்டத்திற்கு தீர்வு எப்போது ?.!

“ஒன்ஸ்மோர்” படத்தின் திரைவிமர்சனம்

“ஒன்ஸ்மோர்” படத்தின் திரைவிமர்சனம்

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் மரணம் ! சோகத்தில் கிராம மக்கள் !

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் மரணம் ! சோகத்தில் கிராம மக்கள் !

தந்தை கொலை, பழிவாங்க துடிக்கும் மகள் ! “அமரம்” படத்தின் விமர்சனம்

தந்தை கொலை, பழிவாங்க துடிக்கும் மகள் ! “அமரம்” படத்தின் விமர்சனம்

திருப்பூரில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி தெருநாய்கள் கொடூர கொலை !

திருப்பூரில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி தெருநாய்கள் கொடூர கொலை !

தந்தை, மகன் உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் “ஃபாதர்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

தந்தை, மகன் உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் “ஃபாதர்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

“டாக்ஸிக்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“டாக்ஸிக்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

200 கோடி வசூல் சாதனை படைத்த “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம்

200 கோடி வசூல் சாதனை படைத்த “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம்

“ஒன்ஸ்மோர்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“ஒன்ஸ்மோர்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம் ! தெளிவில்லாத முதல்வரின் அறிவிப்பு !

கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம் ! தெளிவில்லாத முதல்வரின் அறிவிப்பு !

“Yourbackers play” உலகின் லாப நோக்கமற்ற OTT தளம் அறிமுகம் !

“Yourbackers play” உலகின் லாப நோக்கமற்ற OTT தளம் அறிமுகம் !

“இருமுடி கட்டு” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“இருமுடி கட்டு” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குரு சங்கருக்கு கொலை மிரட்டல் !

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குரு சங்கருக்கு கொலை மிரட்டல் !

“ஹலோ மிஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“ஹலோ மிஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

பழனி அருகே “தார் & டீசல்” திருட்டு ! புகார்தாரரை மிரட்டும் காவல் ஆய்வாளர் !.?

பழனி அருகே “தார் & டீசல்” திருட்டு ! புகார்தாரரை மிரட்டும் காவல் ஆய்வாளர் !.?

“அன்பில் அவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு !

“அன்பில் அவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு !

“ஐ ம் கேம்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“ஐ ம் கேம்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“பியார் பிரேமா கல்யாணம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“பியார் பிரேமா கல்யாணம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“பத்தா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“பத்தா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் டிரெய்லருக்கு அமோக வரவேற்பு !

டாக்ஸிக் படத்தின் டிரெய்லருக்கு அமோக வரவேற்பு !

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு !

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“வதந்தி சீசன் 2” குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“வதந்தி சீசன் 2” குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட “பியார் பிரேமா கல்யாணம்” தொடரின் முன்னோட்டம் !

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட “பியார் பிரேமா கல்யாணம்” தொடரின் முன்னோட்டம் !

துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ஆம் கேம்” ( I am Game ) படத்தின் டிரெய்லர் வெளியீடு !

துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ஆம் கேம்” ( I am Game ) படத்தின் டிரெய்லர் வெளியீடு !

வதந்தி சீசன் 2 “தி மிஸ்டரி ஆஃப் மணி” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

வதந்தி சீசன் 2 “தி மிஸ்டரி ஆஃப் மணி” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

“நடு நாடு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“நடு நாடு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“பிரஜாபதி” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“பிரஜாபதி” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

நயன்தாரா, கவின் நடித்துள்ள “ஹாய்” படத்தின் ரசகுல்லா பாடல் வெளியீடு !

நயன்தாரா, கவின் நடித்துள்ள “ஹாய்” படத்தின் ரசகுல்லா பாடல் வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் இரண்டாவது பாடல் “தடுமாறுதே” வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் இரண்டாவது பாடல் “தடுமாறுதே” வெளியீடு !

“அருள்வான்” படத்தின் திரைவிமர்சனம்

“அருள்வான்” படத்தின் திரைவிமர்சனம்

“அன்பே டயானா” திரைப்படத்தின் விமர்சனம்

“அன்பே டயானா” திரைப்படத்தின் விமர்சனம்

கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான “அமரன்” படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் !

கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான “அமரன்” படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் !

“தார்” டீசல் திருட்டை மாவட்டந்தோறும் விரிவுபடுத்தும் பலே கில்லாடி !

“தார்” டீசல் திருட்டை மாவட்டந்தோறும் விரிவுபடுத்தும் பலே கில்லாடி !

பழனி அருகே டீசல், தார் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

பழனி அருகே டீசல், தார் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

“வாழ்க்கையே போராட்டம்” படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் !

“வாழ்க்கையே போராட்டம்” படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் !

“லெட்சுமி காந்தன் கொலை வழக்கு” படத்தின் திரைவிமர்சனம்

“லெட்சுமி காந்தன் கொலை வழக்கு” படத்தின் திரைவிமர்சனம்

ஐ, நோபடி ( I, Nobody ) திரைப்படத்தின் விமர்சனம்

ஐ, நோபடி ( I, Nobody ) திரைப்படத்தின் விமர்சனம்

“ராவ் பகதூர்” ( தெலுங்கு ) திரைப்படத்தின் விமர்சனம்

“ராவ் பகதூர்” ( தெலுங்கு ) திரைப்படத்தின் விமர்சனம்

திண்டுக்கல்லில் பெருகிவரும் கள்ளத் துப்பாக்கி கலாசாரம் ! திணறும் வனத்துறை, கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

திண்டுக்கல்லில் பெருகிவரும் கள்ளத் துப்பாக்கி கலாசாரம் ! திணறும் வனத்துறை, கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

யோகி பாபு நடித்துள்ள “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

யோகி பாபு நடித்துள்ள “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“முதற்கனல்” படத்தின் திரைவிமர்சனம்

“முதற்கனல்” படத்தின் திரைவிமர்சனம்

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

“தாதா தி சவுரவ் கங்குலி ஸ்டோரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“தாதா தி சவுரவ் கங்குலி ஸ்டோரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“வஞ்சி” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“வஞ்சி” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“கட்டா குஸ்தி_2” திரைப்படத்தின் விமர்சனம்

“கட்டா குஸ்தி_2” திரைப்படத்தின் விமர்சனம்

அருள்வான் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

அருள்வான் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“டார்க்” படத்தின் திரைவிமர்சனம்

“டார்க்” படத்தின் திரைவிமர்சனம்

அமெரிக்க தமிழ்ச்சங்க விழாவில் கவனம் ஈர்த்த “திருக்குறள்_2” திரைப்படம் !

அமெரிக்க தமிழ்ச்சங்க விழாவில் கவனம் ஈர்த்த “திருக்குறள்_2” திரைப்படம் !

பிரமாண்டமாக தயாராகும் “திருக்குறள்_2” திரைப்படம் !

பிரமாண்டமாக தயாராகும் “திருக்குறள்_2” திரைப்படம் !

“மனு” திரைப்படத்தின் விமர்சனம்

“மனு” திரைப்படத்தின் விமர்சனம்

“நாகபந்தம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“நாகபந்தம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“லவ் ஓ லவ்” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“லவ் ஓ லவ்” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

பூஜையிடன் படப்பிடிப்பை தொடங்கிய “லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி” படக்குழுவினர் !

பூஜையிடன் படப்பிடிப்பை தொடங்கிய “லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி” படக்குழுவினர் !

பூஜையிடன் துவங்கிய “குட் நியூஸ்” படத்தின் படப்பிடிப்பு !

பூஜையிடன் துவங்கிய “குட் நியூஸ்” படத்தின் படப்பிடிப்பு !

“லவ் ஓ லவ்” படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரித்த டீசர் !

“லவ் ஓ லவ்” படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரித்த டீசர் !

குறும்பட போட்டியில் திறமைசாலிகளை வாழ்த்திய பிரபலங்கள் !

குறும்பட போட்டியில் திறமைசாலிகளை வாழ்த்திய பிரபலங்கள் !

“ஹபீபி” படக்குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா !

“ஹபீபி” படக்குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா !

நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் “சூப்பர் சுப்பு” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் “சூப்பர் சுப்பு” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

திருமுட்டம் அருகே.. தொடரும் மணல் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

திருமுட்டம் அருகே.. தொடரும் மணல் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

“எங்கள் தங்கம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“எங்கள் தங்கம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

வடசென்னையில் தினந்தோறும் 1000 கிலோ ரேசன் அரிசியை கடத்தும் அரசு ஊழியர் சடகோபால் !

வடசென்னையில் தினந்தோறும் 1000 கிலோ ரேசன் அரிசியை கடத்தும் அரசு ஊழியர் சடகோபால் !

திருப்பூரில் மாணவிகளுக்கு ஆபாச கராத்தே பயிற்சி ! கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் கண்டனம்

திருப்பூரில் மாணவிகளுக்கு ஆபாச கராத்தே பயிற்சி ! கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் கண்டனம்

கராத்தே பயிற்சி என ஆபாச வீடியோ வெளியீடு ! வலுக்கும் கண்டனங்கள், கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

கராத்தே பயிற்சி என ஆபாச வீடியோ வெளியீடு ! வலுக்கும் கண்டனங்கள், கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

“மக்கள் தலைவா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“மக்கள் தலைவா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“ஆட்டி” திரைப்படத்தின் விமர்சனம்

“ஆட்டி” திரைப்படத்தின் விமர்சனம்

“நிழல்” திரைப்படத்தின் விமர்சனம்

“நிழல்” திரைப்படத்தின் விமர்சனம்

இஸ்லாமிய குடும்பத்தின் வாழ்வியல் ” ஹபீபி” ! விமர்சனம்

இஸ்லாமிய குடும்பத்தின் வாழ்வியல் ” ஹபீபி” ! விமர்சனம்

ஸ்லம் டாக் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு

ஸ்லம் டாக் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு