“லைட் வெயிட் பேபி” படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் !

ஸ்டாண்ட் அப் காமெடியன், பிக் பாஸ் பிரபலம், டிஜிட்டல் திரை நட்சத்திரம் என இளம் தலைமுறை ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் ‘லைட் வெயிட் பேபி’ படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தின் டைட்டில் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. 

கே சி குரு இயக்கத்தில் உருவாகும் ‘லைட் வெயிட் பேபி’  திரைப்படத்தில் விக்கல்ஸ் விக்ரம் மற்றும் ஃபிட்னஸ் மாடலிங் மங்கை ஆர்த்தி கிருஷ்ணா ஆகியோர் முதன்மையான வேடங்களில் நடிக்கிறார்கள். பிரமோத் கோடியன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு சரவணன் சுப்பிரமணியம் இசையமைக்கிறார். ரொமான்டிக் காமெடி ஜானரில் தயாராகும் இந்த திரைப்படத்தை ஹிதா ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு சாகர் சந்தேஷ் ஜி. திம்மா ரெட்டி ஆகியோர் இணை தயாரிப்பாளர்களாக பொறுப்பேற்று இருக்கிறார்கள். இப்படத்தின் டைட்டில் வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படத்தின் நாயகன் விக்கல்ஸ் விக்ரம், நாயகி ஆர்த்தி கிருஷ்ணா, இயக்குநர் கே சி குரு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் பேசுகையில், இந்த நிகழ்ச்சியை ஸ்டாண்ட் அப் காமெடி ஷோவை போல் தொடங்குகிறேன். இடையில் எங்காவது காமெடி வந்தால் சிரிக்க மறந்துவிடாதீர்கள். நான் முதன் முதலாக இந்த மேடையில் சற்று பதட்டத்துடன் இருக்கிறேன். மேலும் இந்த ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ, ஒரு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியாகவும் இருக்கும்.

2016 ஆம் ஆண்டில் நான் தியேட்டர் ஆர்டிஸ்ட் ஆக இருந்தேன். அதன் பிறகு சோசியல் மீடியாவில் சில கன்டென்டுகள் மூலம் ரசிகர்களிடத்தில் பிரபலமானேன்.  நான் ஒரு அமைதியான கலைஞன்.  என்னை போல என் ரசிகர்களும் அமைதியாக இருந்து ஆதரவு அளித்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் இறுதிவரை என்னை அழைத்து வந்தார்கள். அதற்கு இந்த தருணத்தில் நான் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

பிக் பாஸ் என்னை எப்படி மாற்றி இருக்கிறது என்றால்.. முன்பெல்லாம் என்னை ஒரு கன்டென்ட் ஆக தான் பார்த்தார்கள். அந்தத் தருணத்தில் என்னை சந்திக்கும் ரசிகர்களுக்கு என் பெயர் தெரியாது. ஆனால் என் மீது அன்பு காட்டுவார்கள். ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு, என்னை அவர்களுடைய வீட்டில் ஒரு பிள்ளையாக மாற்றி இருக்கிறது. அத்தகைய ஒரு சக்தி பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.

நான் பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஒவ்வொரு நாளும் என்னை பின் தொடர்ந்தார்கள். அவர்கள் என் மீது அன்பு செலுத்த தொடங்கினார்கள். நான் ஒவ்வொரு குடும்பத்திற்கும் செல்ல பிள்ளையாக மாறிவிட்டேன். செல்ஃபி எடுத்துக் கொண்டார்கள். அது எனக்கும் மகிழ்ச்சியாக இருந்தது. என்னை நேரில் சந்திக்கும்போது உரிமையுடன் விசாரிக்கவும் செய்தார்கள். அது எனக்கு உண்மையில் சந்தோஷமாகவும் இருந்தது. அதிர்ச்சியாகவும் இருந்தது. 

இப்போது ரசிகர்கள் விக்கல்ஸ் என்ற என்னுடைய சமூக வலைதள பக்கத்தை பார்க்கிறார்கள். பின் தொடர்கிறார்கள். என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்..? என அக்கறையுடனும், உரிமையுடனும் கேட்கிறார்கள். எனக்கு ரசிகர்களின் தொந்தரவு பிடிக்கும். இது அல்பத்தனமானது என்றாலும்.. என்னை யாராவது டிஸ்டர்ப் செய்தால் எனக்கு பிடிக்கும். அப்பாவிற்கு இன்டர்நெட் பற்றி எதுவும் தெரியாது. தொடக்கத்தில் நான் என்னுடைய நண்பர்களுடன் படுக்கை அறையில் இருந்து தான் ரீல்ஸ்களை எடுத்து பதிவேற்றுவோம்.

ஒவ்வொரு நாளும் என்னுடைய தந்தையார் நானும் என் நண்பர்களும் காலையிலிருந்து இரவு வரை பெட்ரூமில் இருப்பதையும்… அதன் பிறகு என்னுடைய நண்பர்கள் வீட்டிலிருந்து வெளியே செல்வதையும்.. அதன் பிறகு நான் சோர்வாக இருப்பதையும் மட்டும்தான் என் தந்தை பார்ப்பார்.‌

‘நிலவை கொண்டு வா’ என்ற பாடலை நாங்கள் ரீல்ஸாக எடுத்து பதிவேற்றினோம். அது வைரலானது. அந்த ரீல்சை போஸ்ட் செய்த சில நிமிடங்களில் பத்தாயிரம் பேர் பார்த்திருந்தனர். கொஞ்ச நேரம் கழித்து பார்த்தால் ஒரு லட்சத்தை எட்டி இருந்தது.‌ அதன் பிறகு அது ஒரு மில்லியனை கடந்து எங்கோ சென்று கொண்டிருந்தது. அந்த தருணத்தில் நடிகர் எஸ் ஜே சூர்யா, சிம்ரன் ஆகியோர் இது தொடர்பாக தங்களது கருத்துக்களை போஸ்ட் செய்தார்கள். திடீரென்று தேவா அவர்கள் என்னை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு நன்றி தெரிவித்தார். நீண்ட நாள்களுக்குப்பிறகு அந்தப் பாடலை பிரபலப்படுத்தியதற்கு நன்றி என்றார். அதைக் கேட்டதும் என் கண்களில் கண்ணீர் வந்தது. அவரிடம் அப்படியெல்லாம் சொல்லாதீர்கள் நீங்கள் மிகப்பெரிய லெஜன்ட். நிலவை கொண்டு வா பாடல் யாருடைய வாழ்க்கையை மாற்றியதோ… தெரியாது ஆனால் எங்களுடைய வாழ்க்கையை மாற்றியது. நிறைய சேனல்களுக்கு இன்டர்வியூ கொடுத்தோம் எங்களை பற்றி நாங்களே பேசினோம். இதை என் அப்பா ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

ஆனால் அவருக்கு நான் ஒரு நல்ல நடிகர் என்பது தெரியாது. நன்றாக சிந்திப்பவன் என்றும் தெரியாது. அவரை பொறுத்தவரை நான் கல்லூரி வகுப்புகளை ‘பங்க்’ செய்தவன்.. போன்ற விசயங்கள் தான் நினைவில் இருக்கும்.

பிக் பாஸ் வீட்டில் இருந்த போது தான் நான் நன்றாக நடிப்பேன் என்பதை என் தந்தை பார்த்து தெரிந்து கொண்டார்.‌ இன்று ஒரு படத்தில் நடிக்கிறேன்.‌ பத்து வருடத்திற்கு பிறகு நான் ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கிறேன். அந்த படத்தின் பெயரை தான் நாங்கள் இப்போது ரீல்ஸ் செய்யப் போகிறோம்.

நானும் சினிமாவில் ஆடியோ லாஞ்ச் உள்ளிட்ட சில விழாக்களுக்கு சென்று இருக்கிறேன். அந்த விழாவில் ஹீரோ டைரக்டரை புகழ்வார். டைரக்டர் ஹீரோவை புகழ்வார். எனக்கு இயக்குநரை சமீபத்தில் தான் தெரியும். அவர் ஒரு கதையை சொன்னார். அது எனக்கு பிடித்துப் போனது. அப்போது அவரிடம் நாம் ஒரு விழா வைத்தால் என்ன பேசலாம் என கேட்டபோது பேசுவதற்கு ஒன்றும் இல்லை என்றார்.
அதனால் ஒரு ஸ்டாண்ட் அப் காமெடி ஷோ போல் நடத்தி படத்தின் டைட்டிலை ரிவீல் செய்துவிடலாம் என திட்டமிட்டோம்.

இதற்கு முன் திரைப்படங்களில் எனக்கு கேரக்டர்களில் நடிப்பதற்கு தான் வாய்ப்பு வழங்குவார்கள். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இன்ஸ்டாகிராமில்  நீங்கள் என் படத்தில் ஹீரோவாக நடிக்க வேண்டும் என்று ஒரு மெஸேஜ் வந்தது , நான் கூட அப்போது ஏதேனும் ஷார்ட் பிலிம் – பைலட் பிலிம் ஆகத்தான் இருக்கும் என்று நினைத்தேன். அதன் பிறகு தான் ஃபீச்சர் ஃபிலிம் என்று சொன்னார்கள், திகைத்து போனேன், அந்த வாய்ப்பை அளித்த இயக்குநர் கே சி குருவுக்கு நன்றி.

2016 ஆம் ஆண்டில் ஹீரோவாக வேண்டும் என்ற ஆசை இருந்தது. அதுவும் பின் மண்டையில் ஓரமாக இருந்தது. அதனை வெளியில் சொன்னாலும் வெட்கக்கேடு. வெளியில் சொல்வதற்கு வெட்க பட்ட ஒரு கனவை இன்று நிஜமாக நடந்து கொண்டிருக்கும் போது மகிழ்ச்சியாக இருக்கிறது.

எங்கள் படத்திற்கான டைட்டில் ‘லைட் வெயிட் பேபி. லைட் வெயிட் பேபி படத்தின்  போஸ்டரில் ஒரு மைக் இருக்கிறது, ஒரு ஸ்டாண்ட் இருக்கிறது, அப்புறம் அதில் வெயிட் இருக்கிறது. இது ஒரு லவ் ஸ்டோரி. ஒரு ஸ்டாண்ட் அப் காமெடியன் மற்றும்  ஃபீமேல் பாடி பில்டர் ஆகிய இருவருக்கும் இடையேயான கதை. அதனால் தான் நான் இந்த படத்தில் ஹீரோவாகி இருக்கிறேன். இந்த படத்தின் டைட்டிலை விட மிகவும் சுவாரசியமான விசயம் என்னவென்றால் இப்படத்தின் ஹீரோயின் தான். அவர்கள் பெயர் ஆர்த்தி கிருஷ்ணா. இதற்கு மேல் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. படத்தை உருவாக்கி விட்டு உங்களிடம் வருகிறோம் என்றார்.

இயக்குநர் கே சி குரு பேசுகையில், நான் பெங்களூரூவிலிருந்து வருகை தந்திருக்கிறேன். எனக்கு தமிழ் மொழி பேசினால் புரியும். ஆனால் பேச வராது. அதனால் நான் ஆங்கிலத்திலேயே பேசி விடுகிறேன். லைட் வெயிட் பேபி என்பது இம்பேலன்ஸிங் லைஃப். இந்த போஸ்டரில் ஒரு பக்கம் எடை குறைவாகவும்… மறுபக்கம் எடை அதிகமாகவும்…. இருக்கும் இது ஏன் என்பதுதான் இப்படத்தின் பின்னணி என்றார்.

நடிகை ஆர்த்தி கிருஷ்ணா பேசுகையில், இந்த வாய்ப்பை வழங்கியதற்காக இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் நன்றி. இது என் முதல் திரைப்படம். இந்த திரைப்படம் எப்படி உருவாகும் என்பது தெரியாது. அதை தெரிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறேன். நன்றாக வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது. என்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்குவேன் என்றார்.

dhamaraimurasu

dhamaraimurasu

dhamaraimurasu admin

Related Posts

வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகியுள்ள “நல்லபடம்” செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியீடு !

தமிழ் சினிமா, சமூக அக்கறை கொண்ட பிரச்சினைகளை நகைச்சுவை மற்றும் வணிகரீதியான பொழுதுபோக்கு அம்சங்களுடன் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் முக்கியப் பங்காற்றி வருகிறது. அந்த வகையில், நகைச்சுவை, காதல், சென்டிமென்ட் மற்றும் வலுவான சமூகக் கருத்தை வித்தியாசமான கதைக்களத்துடன் ‘நல்லபடம்’ திரைப்படம்…

Read more

சூர்யா நடித்துள்ள “சீன்” ( SCENE ) படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு !

ழகரம் ஸ்டுடியோஸ், 2 டி என்டர்டெய்ன்மென்ட் ஆகிய நிறுவனங்களின் தயாரிப்பில் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யாவின் நடிப்பில் தயாராகி வரும் சூர்யா 47 படத்திற்கு ‘சீன் – SCENE ‘ என பெயரிடப்பட்டு, டைட்டிலுக்கான டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. அத்துடன் இந்த…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்கத்தவறிய செய்திகள்

வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகியுள்ள “நல்லபடம்” செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியீடு !

வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகியுள்ள “நல்லபடம்” செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியீடு !

சூர்யா நடித்துள்ள “சீன்” ( SCENE ) படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு !

சூர்யா நடித்துள்ள “சீன்” ( SCENE ) படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு !

“என்ன விலை” படத்தில் நடித்தது மிகவும் சவாலாக இருந்தது ! நடிகை ஷாஷா சிவக்குமார்

“என்ன விலை” படத்தில் நடித்தது மிகவும் சவாலாக இருந்தது ! நடிகை ஷாஷா சிவக்குமார்

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

அசோக் செல்வன் நடித்துள்ள “அன்பில் அவன்” வெளியீட்டு தேதி அறிவிப்பு !

அசோக் செல்வன் நடித்துள்ள “அன்பில் அவன்” வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“வதந்தி சீசன்_2” பற்றி மெய்சிலிர்க்கும் நடிகர் !

“வதந்தி சீசன்_2” பற்றி மெய்சிலிர்க்கும் நடிகர் !

“என்ன விலை” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“என்ன விலை” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

திரைப்பிரபலங்களுக்கு புதிய தீர்ப்பை பெற்றுத்தந்துள்ள நடிகை !

திரைப்பிரபலங்களுக்கு புதிய தீர்ப்பை பெற்றுத்தந்துள்ள நடிகை !

“வைல்ட் தமிழ்நாடு” இன்று முதல் பிவிஆர் திரையரங்குகளில் வெளியீடு !

“வைல்ட் தமிழ்நாடு” இன்று முதல் பிவிஆர் திரையரங்குகளில் வெளியீடு !

“மொத ராத்திரி” படக்குழுவினரின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“மொத ராத்திரி” படக்குழுவினரின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

கமல்ஹாசனின் புதிய படத்தின் “புகைப்படம்” சமூக வலைதளங்களில் வைரல் !

கமல்ஹாசனின் புதிய படத்தின் “புகைப்படம்” சமூக வலைதளங்களில் வைரல் !

நயன்தாராவின் “ஹாய்” படத்தின் விமர்சனம் !

நயன்தாராவின் “ஹாய்” படத்தின் விமர்சனம் !

மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க அலட்சியப்படுத்தும் அரசு அதிகாரிகள் ! நரிக்குறவர் இன மக்களின் போராட்டத்திற்கு தீர்வு எப்போது ?.!

மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க அலட்சியப்படுத்தும் அரசு அதிகாரிகள் ! நரிக்குறவர் இன மக்களின் போராட்டத்திற்கு தீர்வு எப்போது ?.!

“ஒன்ஸ்மோர்” படத்தின் திரைவிமர்சனம்

“ஒன்ஸ்மோர்” படத்தின் திரைவிமர்சனம்

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் மரணம் ! சோகத்தில் கிராம மக்கள் !

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் மரணம் ! சோகத்தில் கிராம மக்கள் !

தந்தை கொலை, பழிவாங்க துடிக்கும் மகள் ! “அமரம்” படத்தின் விமர்சனம்

தந்தை கொலை, பழிவாங்க துடிக்கும் மகள் ! “அமரம்” படத்தின் விமர்சனம்

திருப்பூரில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி தெருநாய்கள் கொடூர கொலை !

திருப்பூரில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி தெருநாய்கள் கொடூர கொலை !

தந்தை, மகன் உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் “ஃபாதர்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

தந்தை, மகன் உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் “ஃபாதர்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

“டாக்ஸிக்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“டாக்ஸிக்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

200 கோடி வசூல் சாதனை படைத்த “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம்

200 கோடி வசூல் சாதனை படைத்த “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம்

“ஒன்ஸ்மோர்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“ஒன்ஸ்மோர்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம் ! தெளிவில்லாத முதல்வரின் அறிவிப்பு !

கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம் ! தெளிவில்லாத முதல்வரின் அறிவிப்பு !

“Yourbackers play” உலகின் லாப நோக்கமற்ற OTT தளம் அறிமுகம் !

“Yourbackers play” உலகின் லாப நோக்கமற்ற OTT தளம் அறிமுகம் !

“இருமுடி கட்டு” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“இருமுடி கட்டு” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குரு சங்கருக்கு கொலை மிரட்டல் !

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குரு சங்கருக்கு கொலை மிரட்டல் !

“ஹலோ மிஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“ஹலோ மிஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

பழனி அருகே “தார் & டீசல்” திருட்டு ! புகார்தாரரை மிரட்டும் காவல் ஆய்வாளர் !.?

பழனி அருகே “தார் & டீசல்” திருட்டு ! புகார்தாரரை மிரட்டும் காவல் ஆய்வாளர் !.?

“அன்பில் அவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு !

“அன்பில் அவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு !

“ஐ ம் கேம்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“ஐ ம் கேம்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“பியார் பிரேமா கல்யாணம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“பியார் பிரேமா கல்யாணம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“பத்தா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“பத்தா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் டிரெய்லருக்கு அமோக வரவேற்பு !

டாக்ஸிக் படத்தின் டிரெய்லருக்கு அமோக வரவேற்பு !

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு !

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“வதந்தி சீசன் 2” குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“வதந்தி சீசன் 2” குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட “பியார் பிரேமா கல்யாணம்” தொடரின் முன்னோட்டம் !

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட “பியார் பிரேமா கல்யாணம்” தொடரின் முன்னோட்டம் !

துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ஆம் கேம்” ( I am Game ) படத்தின் டிரெய்லர் வெளியீடு !

துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ஆம் கேம்” ( I am Game ) படத்தின் டிரெய்லர் வெளியீடு !

வதந்தி சீசன் 2 “தி மிஸ்டரி ஆஃப் மணி” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

வதந்தி சீசன் 2 “தி மிஸ்டரி ஆஃப் மணி” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

“நடு நாடு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“நடு நாடு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“பிரஜாபதி” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“பிரஜாபதி” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

நயன்தாரா, கவின் நடித்துள்ள “ஹாய்” படத்தின் ரசகுல்லா பாடல் வெளியீடு !

நயன்தாரா, கவின் நடித்துள்ள “ஹாய்” படத்தின் ரசகுல்லா பாடல் வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் இரண்டாவது பாடல் “தடுமாறுதே” வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் இரண்டாவது பாடல் “தடுமாறுதே” வெளியீடு !

“அருள்வான்” படத்தின் திரைவிமர்சனம்

“அருள்வான்” படத்தின் திரைவிமர்சனம்

“அன்பே டயானா” திரைப்படத்தின் விமர்சனம்

“அன்பே டயானா” திரைப்படத்தின் விமர்சனம்

கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான “அமரன்” படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் !

கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான “அமரன்” படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் !

“தார்” டீசல் திருட்டை மாவட்டந்தோறும் விரிவுபடுத்தும் பலே கில்லாடி !

“தார்” டீசல் திருட்டை மாவட்டந்தோறும் விரிவுபடுத்தும் பலே கில்லாடி !

பழனி அருகே டீசல், தார் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

பழனி அருகே டீசல், தார் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

“வாழ்க்கையே போராட்டம்” படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் !

“வாழ்க்கையே போராட்டம்” படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் !

“லெட்சுமி காந்தன் கொலை வழக்கு” படத்தின் திரைவிமர்சனம்

“லெட்சுமி காந்தன் கொலை வழக்கு” படத்தின் திரைவிமர்சனம்

ஐ, நோபடி ( I, Nobody ) திரைப்படத்தின் விமர்சனம்

ஐ, நோபடி ( I, Nobody ) திரைப்படத்தின் விமர்சனம்

“ராவ் பகதூர்” ( தெலுங்கு ) திரைப்படத்தின் விமர்சனம்

“ராவ் பகதூர்” ( தெலுங்கு ) திரைப்படத்தின் விமர்சனம்

திண்டுக்கல்லில் பெருகிவரும் கள்ளத் துப்பாக்கி கலாசாரம் ! திணறும் வனத்துறை, கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

திண்டுக்கல்லில் பெருகிவரும் கள்ளத் துப்பாக்கி கலாசாரம் ! திணறும் வனத்துறை, கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

யோகி பாபு நடித்துள்ள “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

யோகி பாபு நடித்துள்ள “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“முதற்கனல்” படத்தின் திரைவிமர்சனம்

“முதற்கனல்” படத்தின் திரைவிமர்சனம்

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

“தாதா தி சவுரவ் கங்குலி ஸ்டோரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“தாதா தி சவுரவ் கங்குலி ஸ்டோரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“வஞ்சி” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“வஞ்சி” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“கட்டா குஸ்தி_2” திரைப்படத்தின் விமர்சனம்

“கட்டா குஸ்தி_2” திரைப்படத்தின் விமர்சனம்

அருள்வான் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

அருள்வான் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“டார்க்” படத்தின் திரைவிமர்சனம்

“டார்க்” படத்தின் திரைவிமர்சனம்

அமெரிக்க தமிழ்ச்சங்க விழாவில் கவனம் ஈர்த்த “திருக்குறள்_2” திரைப்படம் !

அமெரிக்க தமிழ்ச்சங்க விழாவில் கவனம் ஈர்த்த “திருக்குறள்_2” திரைப்படம் !

பிரமாண்டமாக தயாராகும் “திருக்குறள்_2” திரைப்படம் !

பிரமாண்டமாக தயாராகும் “திருக்குறள்_2” திரைப்படம் !

“மனு” திரைப்படத்தின் விமர்சனம்

“மனு” திரைப்படத்தின் விமர்சனம்

“நாகபந்தம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“நாகபந்தம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“லவ் ஓ லவ்” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“லவ் ஓ லவ்” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

பூஜையிடன் படப்பிடிப்பை தொடங்கிய “லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி” படக்குழுவினர் !

பூஜையிடன் படப்பிடிப்பை தொடங்கிய “லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி” படக்குழுவினர் !

பூஜையிடன் துவங்கிய “குட் நியூஸ்” படத்தின் படப்பிடிப்பு !

பூஜையிடன் துவங்கிய “குட் நியூஸ்” படத்தின் படப்பிடிப்பு !

“லவ் ஓ லவ்” படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரித்த டீசர் !

“லவ் ஓ லவ்” படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரித்த டீசர் !

குறும்பட போட்டியில் திறமைசாலிகளை வாழ்த்திய பிரபலங்கள் !

குறும்பட போட்டியில் திறமைசாலிகளை வாழ்த்திய பிரபலங்கள் !

“ஹபீபி” படக்குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா !

“ஹபீபி” படக்குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா !

நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் “சூப்பர் சுப்பு” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் “சூப்பர் சுப்பு” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

திருமுட்டம் அருகே.. தொடரும் மணல் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

திருமுட்டம் அருகே.. தொடரும் மணல் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

“எங்கள் தங்கம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“எங்கள் தங்கம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

வடசென்னையில் தினந்தோறும் 1000 கிலோ ரேசன் அரிசியை கடத்தும் அரசு ஊழியர் சடகோபால் !

வடசென்னையில் தினந்தோறும் 1000 கிலோ ரேசன் அரிசியை கடத்தும் அரசு ஊழியர் சடகோபால் !

திருப்பூரில் மாணவிகளுக்கு ஆபாச கராத்தே பயிற்சி ! கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் கண்டனம்

திருப்பூரில் மாணவிகளுக்கு ஆபாச கராத்தே பயிற்சி ! கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் கண்டனம்

கராத்தே பயிற்சி என ஆபாச வீடியோ வெளியீடு ! வலுக்கும் கண்டனங்கள், கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

கராத்தே பயிற்சி என ஆபாச வீடியோ வெளியீடு ! வலுக்கும் கண்டனங்கள், கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

“மக்கள் தலைவா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“மக்கள் தலைவா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“ஆட்டி” திரைப்படத்தின் விமர்சனம்

“ஆட்டி” திரைப்படத்தின் விமர்சனம்

“நிழல்” திரைப்படத்தின் விமர்சனம்

“நிழல்” திரைப்படத்தின் விமர்சனம்

இஸ்லாமிய குடும்பத்தின் வாழ்வியல் ” ஹபீபி” ! விமர்சனம்

இஸ்லாமிய குடும்பத்தின் வாழ்வியல் ” ஹபீபி” ! விமர்சனம்

ஸ்லம் டாக் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு

ஸ்லம் டாக் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு

நெய்க்காரப்பட்டி கோவில் திருவிழாவில், கூட்ட நெரிசலில் சிக்கி 20_க்கும் மேற்பட்டோர் காயம் !

நெய்க்காரப்பட்டி கோவில் திருவிழாவில், கூட்ட நெரிசலில் சிக்கி 20_க்கும் மேற்பட்டோர் காயம் !

18 ஆம் நூற்றாண்டின் “வாள்” பழனி அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு !

18 ஆம் நூற்றாண்டின் “வாள்” பழனி அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு !

போதைப்பொருள் நடமாட்டத்தை வனத்துறையினருடன் இணைந்து கண்காணித்த காவல்துறையினர் !

போதைப்பொருள் நடமாட்டத்தை வனத்துறையினருடன் இணைந்து கண்காணித்த காவல்துறையினர் !

பழனி அருகே.. நெய்க்காரப்பட்டி கோவில் திருவிழா ! கூட்டத்தை கட்டுப்படுத்த திணறும் காவல்துறையினர் !

பழனி அருகே.. நெய்க்காரப்பட்டி கோவில் திருவிழா ! கூட்டத்தை கட்டுப்படுத்த திணறும் காவல்துறையினர் !

“லைட் வெயிட் பேபி” விறுவிறுப்பான படப்பிடிப்பில் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் !

“லைட் வெயிட் பேபி” விறுவிறுப்பான படப்பிடிப்பில் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் !

மடத்துக்குளம் அருகே.. கார் மோதி 2 வயது குழந்தை பலி ! பெற்றோர் படுகாயம் ! 

மடத்துக்குளம் அருகே.. கார் மோதி 2 வயது குழந்தை பலி ! பெற்றோர் படுகாயம் ! 

“சம்ஹாரம்” திரைப்படத்தின் விமர்சனம்

“சம்ஹாரம்” திரைப்படத்தின் விமர்சனம்

“மூன்றாம் கண்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“மூன்றாம் கண்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

கேன்ஸ் திரைப்பட விழாவில் “பாலன் தி பாய்” திரைப்படத்திற்கு வரவேற்பு !

கேன்ஸ் திரைப்பட விழாவில் “பாலன் தி பாய்” திரைப்படத்திற்கு வரவேற்பு !

“அந்தரன்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !

“அந்தரன்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !

“ஸ்லம் டாக்” படத்தின் டீசர் ஜூன் 8 ஆம் தேதி வெளியாகிறது !

“ஸ்லம் டாக்” படத்தின் டீசர் ஜூன் 8 ஆம் தேதி வெளியாகிறது !

தி இந்தியா ஸ்டோரி திரைப்படம் ஜூலை 24 ஆம் தேதி வெளியாகிறது !

தி இந்தியா ஸ்டோரி திரைப்படம் ஜூலை 24 ஆம் தேதி வெளியாகிறது !

அங்கீகாரம் படத்திற்கு “U” சான்றிதழ் வழங்கிய தணிக்கை வாரியம் !

அங்கீகாரம் படத்திற்கு “U” சான்றிதழ் வழங்கிய தணிக்கை வாரியம் !

ஒப்பந்ததாரரிடம் 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது ! பல்லடம் அருகே பரபரப்பு !

ஒப்பந்ததாரரிடம் 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது ! பல்லடம் அருகே பரபரப்பு !

“கலர்ஸ்” நிறுவனத்தை திறந்து வைத்த நடிகை பிரியா பவானி சங்கர் !

“கலர்ஸ்” நிறுவனத்தை திறந்து வைத்த நடிகை பிரியா பவானி சங்கர் !

“ஈகோ ராமன்” படத்தின் விமர்சனம்

“ஈகோ ராமன்” படத்தின் விமர்சனம்

பெத்தி படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !

பெத்தி படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !