“பிளாஸ்ட்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், ‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோரின் நடிப்பில், அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கத்தில் உருவாகி, வரும் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.

‘பிளாஸ்ட்’ படத்தில் ஜான் கொக்கன், அர்ஜுன் சிதம்பரம், பவன், பாலா ஹாசன், வினோத் சாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார். கலை இயக்கத்தை வீரமணி கணேசன் கவனித்திருக்கிறார். ஃபேமிலி ஆக்ஷன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஏ ஜி எஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம்,  கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு அர்ச்சனா கல்பாத்தி கிரியேட்டிவ் புரொடியூசராகவும், ஐஸ்வர்யா கல்பாத்தி அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசராகவும் பங்காற்றியுள்ளனர்.

இப்படத்தின் டீசர், டிரைலர் ஆகியவை வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தை மேலும் விளம்பரப்படுத்தும் வகையில் சென்னையில் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இயக்குநர் சுபாஷ் கே ராஜ் பேசுகையில், இது என்னுடைய முதல் மேடை. என் மீது நம்பிக்கை வைத்து திரையுலகில் பணியாற்ற அனுமதித்த பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் நன்றி. இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு என்னுடைய சிறப்பு நன்றி. அவர்தான் என்னுடைய திரையுலக குரு. அவருடைய ‘லவ் டுடே’ படத்தில் பணியாற்றினேன். அதன் பிறகு.. கதை எழுதி அவரிடம் சொன்ன போது, அவர்தான் ஏஜிஎஸ் நிறுவனத்தில் கதை சொல்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தார். ஐஸ்வர்யா கல்பாத்தி- அர்ச்சனா கல்பாத்தி- அதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் அகோரம் சாரிடம் கதையை சொன்னேன். கதையை சொல்லி முடித்ததும், இந்த படத்தை நிச்சயமாக தயாரிக்கிறோம் என்றார். அந்தத் தருணம் என்னால் மறக்க முடியாது. இதற்காக ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி.

இந்தப் படத்தை எந்த இடத்திலும் சமரசம் எல்லாம் முழு சுதந்திரத்துடன் உருவாக்கியிருக்கிறேன். இதற்காக மீண்டும் ஒருமுறை ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். என்னுடைய முதல் படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இதற்காகவே நான் பெருமிதம் அடைகிறேன். அவருக்கு நன்றி. அபிராமி- ப்ரீத்தி முகுந்தன் உள்ளிட்ட ஒவ்வொரு நட்சத்திரங்களும் இந்த படத்தில் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர். ஒளிப்பதிவாளர் – இசையமைப்பாளர்- பட தொகுப்பாளர் -சண்டை பயிற்சி இயக்குநர் – என ஒவ்வொருவரும் தங்களுடைய அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பை புதுமுக இயக்குநரான எனக்கு வழங்கியதற்கு நன்றி.

‘பிளாஸ்ட்’ ஆக்ஷன் படம் தான். ஆனால் குடும்பத்துடன் அனைவரும் பார்த்து மகிழும் வகையில் இருக்கும். படத்தை பார்க்கும் போது எல்லா அப்பாக்களும் படத்துடன் தங்களை தொடர்பு படுத்திக் கொள்வார்கள். படத்தை பார்க்கும் ஒவ்வொருவரும் தங்களுடன் படத்தை தொடர்பு படுத்திக் கொள்வார்கள். நம் குடும்பம் என்பதை உணர்வீர்கள். சமூகத்திற்கு தேவையான பல விஷயங்களை சொல்லி இருக்கிறோம். ஆனால் அதனை பிரச்சாரமாக சொல்லாமல் கதையுடன் சுவாரசியமாக சொல்லி இருக்கிறோம் என்றார்.

இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் பேசுகையில், தமிழ் படங்களில் பணியாற்றுவதற்காக நிறைய கதைகளை கேட்டிருக்கிறேன். ஏதாவது சுவாரசியமான விசயங்கள் இருந்தால்.. அதில் தான் பணியாற்ற வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். தமிழ் திரை உலகிற்கு வரும் போது முன் தயாரிப்புடன் தான் வருகை தர வேண்டும். ஏனென்றால் தமிழ் சினிமா என்பது கடல் போன்றது. இயக்குநர் சுபாஷ் கதை சொன்னார். அந்த கதையைக் கேட்ட போது இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. கதையை மிகவும் விரிவாகவும் டீடெய்லாகவும் அதிலும் ஆக்ஷன் காட்சிகள் இப்படித்தான் வரும் என்ற விளக்கத்துடனும் சுபாஷ் கதையை சொன்னார். அதை கேட்டதும் உற்சாகமாகி, இப்படத்தில் பணியாற்ற வேண்டும் என தீர்மானித்தேன்.

புதுமுக இயக்குநர் என்பதால் நானும் ஏதாவது புதிதாக செய்ய வேண்டும் என்பதால் இதற்கு முன் நான் செய்த பணிகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, புதிதாக இதில் பல விஷயங்களை முயற்சி செய்து இருக்கிறேன். படமாக்கப்பட்ட காட்சிகளை எனக்கு இயக்குநர் அனுப்பினார். அதை பார்த்தவுடன் இவர் புது முகமாக இருந்தாலும் வேலை வாங்குவதில் தேர்ச்சி பெற்றவர் என்பதை தெரிந்து கொண்டேன். முழு படத்தையும் பார்த்த பிறகு எனக்கு நம்பிக்கை ஏற்பட்டது. அவர் கதையை விட்டு எங்கும் செல்லாமல் அந்தக் கதையை நேர்த்தியாக உருவாக்கியிருக்கிறார். ஒவ்வொரு கலைஞரிடமிருந்து தனக்கு தேவையானதை வாங்கி அற்புதமாக படத்தை உருவாக்கியிருக்கிறார். முதல் படத்திலேயே சுபாஷ் இப்படி கடுமையாக உழைத்து இருப்பதை பார்த்து வியந்தேன். அவர் மீது நம்பிக்கை வைத்து ஒத்துழைப்பை வழங்கிய அனைவருக்கும் நன்றி.

ஒவ்வொருவரிடத்திலும் தனித்திறமை இருக்கும். ஒரு எறும்பிடம் கூட திறமை இருக்கும். அதை நேஷனல் ஜியோகிராபிக் சேனலின் ஒளிப்பதிவாளர் ‘ஜூம்’ செய்து மக்களுக்கு காண்பித்தால்தான் அதன் திறமை மக்களுக்கு தெரிய வரும். அந்த வகையில் சுபாஷின் திறமையை ‘ஜூம்’ செய்து பார்த்து வாய்ப்பளித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இது என்னுடைய திரை இசைப் பயணத்தில் சிறந்த படம் என்று சொல்வேன்,” என்றார்.

நடிகை பிரீத்தி முகுந்தன் பேசுகையில், என்னுடைய திரையுலக பயணத்தில் இந்தப் படம் சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது. இது போன்றதொரு கதையை தேர்வு செய்து அதற்கு என்னைப் போன்ற வளரும் கலைஞர்களுக்கு வாய்ப்பை வழங்கி படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி.

நிலா கதாபாத்திரத்திற்கு இவர் பொருத்தமாக இருப்பார் என்று என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குநர் சுபாஷிற்கு நன்றி. பொதுவாக பெண்களுக்கு இதுபோன்ற பவர்ஃபுல்லான ஆக்ஷன் கேரக்டர்கள் எழுதப்படுவதில்லை. அதனால் தான் கதையை சொல்லும் போதே இதில் நடிக்க விரும்பினேன். அதிலும் இது போன்ற கதாபாத்திரங்கள் அரிதாகவே என்னை போன்ற வளரும் கலைஞர்களுக்கு கிடைக்கும். இது போன்றதொரு கதாபாத்திரத்தை எழுதி அதனை காட்சிப்படுத்தி கூடுதல் முக்கியத்துவம் வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அர்ஜுன், அபிராமி ஆகியோருடன் திரையை பகிர்ந்து கொண்ட அனுபவம் மறக்க முடியாதது. இவர்களிடமிருந்து படப்பிடிப்பு தளத்தில் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். ஆக்ஷன் காட்சிகளில் நடிக்கும் போது பொறுமையாக விளக்கமளித்து என்னிடம் இருந்து ஆக்ஷன் கலந்த நடிப்பை வரவழைத்ததற்காக சண்டை பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபுவுக்கு இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

நடிகை அபிராமி பேசுகையில், இந்த மேடையில் நிற்பதற்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்த ஆண்டில் என்னுடைய நடிப்பில் வெளியாகும் முதல் படம் இது. ஆக்ஷன் கிங் அர்ஜுனுடன் 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்திருக்கிறேன். இதுவும் மறக்க முடியாத தருணம். அதனால் அவருக்கு என் நன்றி. எங்கள் இருவரையும் மீண்டும் இணைந்து நடிக்க வைப்பதற்கு ஏன் 25 ஆண்டுகள் ஆனது என்று தெரியவில்லை. ப்ரீத்தியுடன் இணைந்து பணியாற்றும்போது மகிழ்ச்சியாக இருந்தது. எங்கள் இருவருக்கும் ஒரே வகையான வேவ் லென்த் இருந்தது. அதனால் படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் இருவரும் உற்சாகமாக இருந்தோம். பொதுவாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து கதாபாத்திரங்களும், கதையும் எழுதுவது குறைவு. இந்த படத்தில் எங்கள் இருவருக்கும் கூடுதலாக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதற்காக படக்குழுவினருக்கு நன்றி.

பெண்கள் தலைமை ஏற்று நடத்தும் எந்த நிறுவனமும், நிர்வாகமும் நன்றாக இருக்கும் என்பதற்கு ஏஜிஎஸ் நிறுவனம் சிறந்த சான்று. அர்ச்சனா கல்பாத்தியும், ஐஸ்வர்யா கல்பாத்தியும் ஒவ்வொரு விஷயத்தையும் நேர்த்தியாக கையாள்கிறார்கள். அவர்களுக்கு என் நன்றி.

நான் வாழ்க்கையில் ஒருவரையும் கை நீட்டி அடித்ததில்லை. எனக்கும் வன்முறைக்கும் சம்பந்தமே இல்லை. ஆனால் இந்தப் படத்தில் என்னை வயலன்ட்டாகவும், டெரராகவும் காட்சிப்படுத்தியதற்காக சண்டை பயிற்சி இயக்குநர் பீனிக்ஸ் பிரபுவிற்கு நன்றி. அவருக்கு மட்டுமல்ல அவருடைய குழுவில் பணியாற்றிய அனைத்து சண்டைக் கலைஞர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.

நான் சினிமாவில் காமெடி, ஹாரர், ரொமாண்டிக் என பல ஜானரில் நடித்திருக்கிறேன். ஆனால் முதன் முறையாக ஆக்ஷனில் நடித்திருக்கிறேன். இப்படியும் என்னால் நடிக்க முடியும் என்று என் மீது எனக்கே நம்பிக்கையை வரவழைத்த சண்டை பயிற்சி இயக்குநருக்கும், அவருடைய குழுவினருக்கும் நன்றி.‌ இந்தப் படத்தில் இசை மிக முக்கிய பங்கு வகிக்கிறது இதற்காக இசையமைப்பாளர் ரவி பஸ்ரூருக்கும் நன்றி.

இயக்குநர் சுபாஷ் எனக்கு தம்பி மாதிரி. இந்தப் படம் வெற்றி பெறும் என்று எனக்குத் தெரியும். அதனால் அவருடைய வெற்றியில் நானும் சிறிய பங்காக இருந்ததற்காக மகிழ்ச்சியடைகிறேன். அவருடைய எழுத்து அழுத்தமாகவும், நேர்த்தியாகவும் இருந்தது. இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரத்திற்கு அவருடைய அம்மா தான் இன்ஸ்பிரேஷன். அவருடைய அம்மாவும் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியவர். அதனால் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பது எனக்கு தான் பெருமை. அதை வழங்கியதற்காக இயக்குநருக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தப் படம் தியேட்டரிக்கல் எக்ஸ்பீரியன்ஸ்க்கான எல்லா எலிமெண்ட்ஸும் கொண்ட படம். சின்ன திரைகளில் பார்த்தால் இதன் முழுமையான அனுபவம் உங்களுக்கு கிடைக்காது. மியூசிக், ஆக்ஷன், கேமரா என எல்லா விஷயங்களையும் பெரிய திரையில் பார்த்து அனுபவியுங்கள். எல்லோருக்கும் பிடித்த படமாக இது இருக்கும் என்றார்.

கிரியேட்டிவ் புரொடியுசர் அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் 20வது ஆண்டு இது. நீங்கள் அளித்து வரும் தொடர் ஆதரவின் காரணமாக நாங்கள் ஏராளமான திறமைமிக்க புது முகங்களை அறிமுகப்படுத்துகிறோம். எங்களுக்கு இத்தகைய தைரியத்தை வழங்கியதற்காக உங்கள் அனைவருக்கும் எங்களுடைய நன்றி. எல்லோரும் அடுத்த தலைமுறை எப்படி இருக்கும் என்று யோசித்துக் கொண்டிருப்போம். இது ஜென் ஸீ யின் படம். இது பெண்களை உலக அளவில் பெருமை படுத்துகிற படைப்பு. இப்படி ஒரு படைப்பை தயாரித்ததற்காக நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இதை போல் பெண்களை திரையில் காட்சிப்படுத்துவதை வரவேற்கிறேன். இத்தகைய பெண் கதாபாத்திரங்களை எழுதியதற்காக இயக்குநர் சுபாஷுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அவர் தொடர்ந்து பெண் கதாபாத்திரங்களை இதே போன்று வடிவமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.‌

இந்தப் படம் ஒரு பெண் குழந்தையை எப்படி வளர்க்க வேண்டும் என்பதை பற்றி பேசுகிறது. தற்போது இந்த சமூகத்தில் பெண்களுக்கு போதிய பாதுகாப்பு இல்லை என்ற எண்ணம் தான் அதிகம் இருக்கிறது. ஆனால் இந்த சமூகத்தில் உள்ள ஒரு பெண் தற்காப்பு கலையை கற்றுக் கொண்டால் அவள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும் என்பதையும் இந்தப் படம் சொல்கிறது. அதுதான் இந்த ‘பிளாஸ்ட்’ திரைப்படம். இந்த கருத்திற்காகவே இந்த படத்தை நாங்கள் தயாரிக்க வேண்டும் என தீர்மானித்தோம்

இதை உருவாக்க வேண்டும் என்றால் அப்பா கதாபாத்திரத்தில் எங்களுக்கு நடிகர் அர்ஜுனை தவிர வேறு யாரும் சிந்தனைக்கு வரவில்லை. ஏனெனில் அவருக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த விஷயத்தை  அவர் சொன்னால் ரசிகர்களுக்கு பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தோம். எங்களது விருப்பத்தை ஏற்றுக் கொண்டு இப்படத்தில் நடித்த ஆக்ஷன் கிங் அர்ஜுனுக்கு நன்றி.

இந்தக் கதையில் எல்லோருக்கும் முக்கியத்துவம் உண்டு. அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் ஆகியோருக்கும் நன்றி. அவர்கள் இந்த படத்திற்காக அதிலும் குறிப்பாக சண்டைக் காட்சிகளில் நடிப்பதற்காக தங்களுடைய முழுமையான அர்ப்பணிப்பை வழங்கினர். இப்படத்தில் நடித்த அனைத்து நடிகர்களுக்கும் நடிகைகளுக்கும் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் இத்தருணத்தில் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

இசையமைப்பாளர் ரவி பஸ்ரூரை தமிழில் அறிமுகப்படுத்துவதை ஏஜிஎஸ் நிறுவனம் பெருமிதம் கொள்கிறது. அவருடைய ரசிகர்கள் நாங்கள். இந்த படத்திற்கு மிகப்பெரும் பங்களிப்பை அவர் வழங்கி இருக்கிறார். இந்தப் படத்திற்கு அவர் ஒரு ஜீவன். இந்த படத்திற்காக அவரின் இசைக் கோர்வை நிச்சயம் பேசப்படும்.

இந்த திரைப்படம் ஒரு கூட்டு முயற்சி. தமிழ் சினிமாவிற்கு புது முகங்களுடன் ஒரு புதிய முயற்சியையும் முன்னெடுத்து இருக்கிறோம். இதற்கு நீங்கள் அனைவரும் ஆதரவு வழங்குவீர்கள் என்று நம்புகிறேன் என்றார்.

நடிகர் அர்ஜுன் பேசுகையில்,
‘பிளாஸ்ட்’ திரைப்படம் ரியலி ஒரு பிளாஸ்ட் தான். நான் எத்தனையோ திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கராத்தே மாஸ்டர் கதாபாத்திரத்தை நான் இப்போதுதான் முதன்முறையாக ஏற்று நடித்திருக்கிறேன். இதற்காக இயக்குநர் சுபாஷிற்கு முதல் நன்றி. படப்பிடிப்பு தளத்தில் இயக்குநரின் தன்னம்பிக்கையை நான் பார்த்தேன். ஒவ்வொரு இயக்குநருக்கும் நம்பிக்கை மிக முக்கியம். நான் ஏராளமான புது முக இயக்குநர்களுடன் பணியாற்றி இருக்கிறேன். அதில் இயக்குநர் சுபாஷ் கே ராஜ் சாதுரியமானவர். தனக்கு தேவையானதை நேர்த்தியாக கலைஞர்களிடமிருந்து வாங்கி விடுகிறார். இந்தப் படத்தில் பணியாற்றிய இளம் திறமைசாலிகளிடமிருந்து நான் நிறைய புது விஷயங்களை கற்றுக் கொண்டேன்.

இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் குறிப்பிட்டது போல் ஏஜிஎஸ் நிறுவனம் ஒவ்வொரு திறமைசாலிகளையும் ஜும் செய்து பார்த்து தேர்வு செய்கிறார்கள். ஆனால் என் மீது அவர்கள் இதுவரை ஜும் செய்யவில்லை. இப்போதுதான் இந்த நிறுவனத்துடன் நான் முதன் முதலாக இணைந்து பணியாற்றுகிறேன். அவர்களுடைய தொழில் நேர்த்தி, அணுகுமுறை, எல்லாம் சிறப்பான அர்ப்பணிப்புடன் இருக்கிறது. ஐஸ்வர்யா கல்பாத்தி இரவு இரண்டு மணி அளவில் படப்பிடிப்பு தளத்திற்கு வருகை தந்தார். அதை பார்த்ததும் எனக்கு வியப்பாகவும், இருந்தது மகிழ்ச்சியாகவும் இருந்தது.

நடிகை அபிராமி உடன் நான் முதன் முதலாக நடிக்கும் போது அவர் மலையாளத்தை மட்டும்தான் பேசுவார். உடைந்த தமிழில் தான் அப்போது பேசுவார். ஆனால் இப்போது தமிழில் பேசி அசத்துகிறார். அதே சமயத்தில் நடிகையாக பல சாதனைகளை படைத்திருக்கிறார். அவர் நடிகை மட்டுமல்ல பாடகியும் கூட. இந்தப் படத்தில் அவர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார். கடினமாக உழைத்து அர்ப்பணிப்புடன் இந்த படத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். அதை நீங்கள் படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

அதே போல் நடிகை ப்ரீத்தி முகுந்தனை பார்த்து வியக்கிறேன். படப்பிடிப்பு தளத்தில் எப்போது பார்த்தாலும் பயிற்சி செய்து கொண்டிருப்பார். அவர் அடிப்படையில் நல்லதொரு நடன கலைஞர். ஆக்ஷன் காட்சிகளில் அவருடைய கால் அனாசயமான உயரத்திற்கு சென்றதை பார்த்தேன், வியந்தேன். தொடர்ந்து அவர் இது போன்ற ஆக்ஷன் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர், ஒளிப்பதிவாளர் அருண், சண்டை பயிற்சி இயக்குநர் பிரபு, கலை இயக்குநர் வீரமணி என ஒவ்வொரு கலைஞர்களும் டீம் ஒர்க் ஆக பணியாற்றினர் என்றார்.

dhamaraimurasu

dhamaraimurasu

dhamaraimurasu admin

Related Posts

தந்தை, மகன் உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் “ஃபாதர்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

இயக்குநர் R. சந்துரு தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஃபாதர்’. இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. தந்தை, மகன் இடையேயான ஆழமானதும், பல நேரங்களில் வார்த்தைகளால் வெளிப்படுத்தப்படாததுமான உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டீசர்,…

Read more

“டாக்ஸிக்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

KVN Productions மற்றும் Monster Mind Creations நிறுவனங்கள் தயாரிப்பில், ராக்கிங் ஸ்டார்’ யாஷ் நடிப்பில், தேசிய விருது பெற்ற இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் ‘டாக்ஸிக்: A Fairy Tale for Grown-Ups’. ஆக்‌ஷன்,…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்கத்தவறிய செய்திகள்

திருப்பூரில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி தெருநாய்கள் கொடூர கொலை !

திருப்பூரில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி தெருநாய்கள் கொடூர கொலை !

தந்தை, மகன் உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் “ஃபாதர்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

தந்தை, மகன் உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் “ஃபாதர்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

“டாக்ஸிக்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“டாக்ஸிக்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

200 கோடி வசூல் சாதனை படைத்த “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம்

200 கோடி வசூல் சாதனை படைத்த “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம்

“ஒன்ஸ்மோர்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“ஒன்ஸ்மோர்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம் ! தெளிவில்லாத முதல்வரின் அறிவிப்பு !

கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம் ! தெளிவில்லாத முதல்வரின் அறிவிப்பு !

“Yourbackers play” உலகின் லாப நோக்கமற்ற OTT தளம் அறிமுகம் !

“Yourbackers play” உலகின் லாப நோக்கமற்ற OTT தளம் அறிமுகம் !

“இருமுடி கட்டு” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“இருமுடி கட்டு” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குரு சங்கருக்கு கொலை மிரட்டல் !

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குரு சங்கருக்கு கொலை மிரட்டல் !

“ஹலோ மிஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“ஹலோ மிஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

பழனி அருகே “தார் & டீசல்” திருட்டு ! புகார்தாரரை மிரட்டும் காவல் ஆய்வாளர் !.?

பழனி அருகே “தார் & டீசல்” திருட்டு ! புகார்தாரரை மிரட்டும் காவல் ஆய்வாளர் !.?

“அன்பில் அவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு !

“அன்பில் அவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு !

“ஐ ம் கேம்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“ஐ ம் கேம்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“பியார் பிரேமா கல்யாணம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“பியார் பிரேமா கல்யாணம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“பத்தா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“பத்தா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் டிரெய்லருக்கு அமோக வரவேற்பு !

டாக்ஸிக் படத்தின் டிரெய்லருக்கு அமோக வரவேற்பு !

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு !

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“வதந்தி சீசன் 2” குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“வதந்தி சீசன் 2” குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட “பியார் பிரேமா கல்யாணம்” தொடரின் முன்னோட்டம் !

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட “பியார் பிரேமா கல்யாணம்” தொடரின் முன்னோட்டம் !

துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ஆம் கேம்” ( I am Game ) படத்தின் டிரெய்லர் வெளியீடு !

துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ ஆம் கேம்” ( I am Game ) படத்தின் டிரெய்லர் வெளியீடு !

வதந்தி சீசன் 2 “தி மிஸ்டரி ஆஃப் மணி” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

வதந்தி சீசன் 2 “தி மிஸ்டரி ஆஃப் மணி” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

“நடு நாடு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“நடு நாடு” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா !

“பிரஜாபதி” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“பிரஜாபதி” படத்தின் டிரெய்லர் வெளியீடு !

நயன்தாரா, கவின் நடித்துள்ள “ஹாய்” படத்தின் ரசகுல்லா பாடல் வெளியீடு !

நயன்தாரா, கவின் நடித்துள்ள “ஹாய்” படத்தின் ரசகுல்லா பாடல் வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் இரண்டாவது பாடல் “தடுமாறுதே” வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் இரண்டாவது பாடல் “தடுமாறுதே” வெளியீடு !

“அருள்வான்” படத்தின் திரைவிமர்சனம்

“அருள்வான்” படத்தின் திரைவிமர்சனம்

“அன்பே டயானா” திரைப்படத்தின் விமர்சனம்

“அன்பே டயானா” திரைப்படத்தின் விமர்சனம்

கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான “அமரன்” படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் !

கமல்ஹாசன் தயாரிப்பில் வெளியான “அமரன்” படத்திற்கு மூன்று தேசிய விருதுகள் !

“தார்” டீசல் திருட்டை மாவட்டந்தோறும் விரிவுபடுத்தும் பலே கில்லாடி !

“தார்” டீசல் திருட்டை மாவட்டந்தோறும் விரிவுபடுத்தும் பலே கில்லாடி !

பழனி அருகே டீசல், தார் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

பழனி அருகே டீசல், தார் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

“வாழ்க்கையே போராட்டம்” படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் !

“வாழ்க்கையே போராட்டம்” படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் !

“லெட்சுமி காந்தன் கொலை வழக்கு” படத்தின் திரைவிமர்சனம்

“லெட்சுமி காந்தன் கொலை வழக்கு” படத்தின் திரைவிமர்சனம்

ஐ, நோபடி ( I, Nobody ) திரைப்படத்தின் விமர்சனம்

ஐ, நோபடி ( I, Nobody ) திரைப்படத்தின் விமர்சனம்

“ராவ் பகதூர்” ( தெலுங்கு ) திரைப்படத்தின் விமர்சனம்

“ராவ் பகதூர்” ( தெலுங்கு ) திரைப்படத்தின் விமர்சனம்

திண்டுக்கல்லில் பெருகிவரும் கள்ளத் துப்பாக்கி கலாசாரம் ! திணறும் வனத்துறை, கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

திண்டுக்கல்லில் பெருகிவரும் கள்ளத் துப்பாக்கி கலாசாரம் ! திணறும் வனத்துறை, கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

யோகி பாபு நடித்துள்ள “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

யோகி பாபு நடித்துள்ள “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“முதற்கனல்” படத்தின் திரைவிமர்சனம்

“முதற்கனல்” படத்தின் திரைவிமர்சனம்

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் “தபாஹி” மியூசிக் வீடியோ வெளியீடு !

“தாதா தி சவுரவ் கங்குலி ஸ்டோரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“தாதா தி சவுரவ் கங்குலி ஸ்டோரி” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“வஞ்சி” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“வஞ்சி” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“கட்டா குஸ்தி_2” திரைப்படத்தின் விமர்சனம்

“கட்டா குஸ்தி_2” திரைப்படத்தின் விமர்சனம்

அருள்வான் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

அருள்வான் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“டார்க்” படத்தின் திரைவிமர்சனம்

“டார்க்” படத்தின் திரைவிமர்சனம்

அமெரிக்க தமிழ்ச்சங்க விழாவில் கவனம் ஈர்த்த “திருக்குறள்_2” திரைப்படம் !

அமெரிக்க தமிழ்ச்சங்க விழாவில் கவனம் ஈர்த்த “திருக்குறள்_2” திரைப்படம் !

பிரமாண்டமாக தயாராகும் “திருக்குறள்_2” திரைப்படம் !

பிரமாண்டமாக தயாராகும் “திருக்குறள்_2” திரைப்படம் !

“மனு” திரைப்படத்தின் விமர்சனம்

“மனு” திரைப்படத்தின் விமர்சனம்

“நாகபந்தம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“நாகபந்தம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“லவ் ஓ லவ்” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“லவ் ஓ லவ்” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

பூஜையிடன் படப்பிடிப்பை தொடங்கிய “லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி” படக்குழுவினர் !

பூஜையிடன் படப்பிடிப்பை தொடங்கிய “லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி” படக்குழுவினர் !

பூஜையிடன் துவங்கிய “குட் நியூஸ்” படத்தின் படப்பிடிப்பு !

பூஜையிடன் துவங்கிய “குட் நியூஸ்” படத்தின் படப்பிடிப்பு !

“லவ் ஓ லவ்” படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரித்த டீசர் !

“லவ் ஓ லவ்” படத்திற்கு எதிர்பார்ப்பை அதிகரித்த டீசர் !

குறும்பட போட்டியில் திறமைசாலிகளை வாழ்த்திய பிரபலங்கள் !

குறும்பட போட்டியில் திறமைசாலிகளை வாழ்த்திய பிரபலங்கள் !

“ஹபீபி” படக்குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா !

“ஹபீபி” படக்குழுவினரின் நன்றி தெரிவிக்கும் விழா !

நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் “சூப்பர் சுப்பு” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

நெட்ஃப்ளிக்ஸின் முதல் தெலுங்கு ஒரிஜினல் “சூப்பர் சுப்பு” தொடரின் டிரெய்லர் வெளியீடு !

திருமுட்டம் அருகே.. தொடரும் மணல் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

திருமுட்டம் அருகே.. தொடரும் மணல் திருட்டு ! கண்டுகொள்ளாத அதிகாரிகள் !

“எங்கள் தங்கம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“எங்கள் தங்கம்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

வடசென்னையில் தினந்தோறும் 1000 கிலோ ரேசன் அரிசியை கடத்தும் அரசு ஊழியர் சடகோபால் !

வடசென்னையில் தினந்தோறும் 1000 கிலோ ரேசன் அரிசியை கடத்தும் அரசு ஊழியர் சடகோபால் !

திருப்பூரில் மாணவிகளுக்கு ஆபாச கராத்தே பயிற்சி ! கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் கண்டனம்

திருப்பூரில் மாணவிகளுக்கு ஆபாச கராத்தே பயிற்சி ! கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட பல்வேறு சமூக அமைப்புகள் கண்டனம்

கராத்தே பயிற்சி என ஆபாச வீடியோ வெளியீடு ! வலுக்கும் கண்டனங்கள், கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

கராத்தே பயிற்சி என ஆபாச வீடியோ வெளியீடு ! வலுக்கும் கண்டனங்கள், கண்டுகொள்ளாத காவல்துறையினர் !

“மக்கள் தலைவா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“மக்கள் தலைவா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“ஆட்டி” திரைப்படத்தின் விமர்சனம்

“ஆட்டி” திரைப்படத்தின் விமர்சனம்

“நிழல்” திரைப்படத்தின் விமர்சனம்

“நிழல்” திரைப்படத்தின் விமர்சனம்

இஸ்லாமிய குடும்பத்தின் வாழ்வியல் ” ஹபீபி” ! விமர்சனம்

இஸ்லாமிய குடும்பத்தின் வாழ்வியல் ” ஹபீபி” ! விமர்சனம்

ஸ்லம் டாக் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு

ஸ்லம் டாக் படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு

நெய்க்காரப்பட்டி கோவில் திருவிழாவில், கூட்ட நெரிசலில் சிக்கி 20_க்கும் மேற்பட்டோர் காயம் !

நெய்க்காரப்பட்டி கோவில் திருவிழாவில், கூட்ட நெரிசலில் சிக்கி 20_க்கும் மேற்பட்டோர் காயம் !

18 ஆம் நூற்றாண்டின் “வாள்” பழனி அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு !

18 ஆம் நூற்றாண்டின் “வாள்” பழனி அருங்காட்சியகத்தில் ஒப்படைப்பு !

போதைப்பொருள் நடமாட்டத்தை வனத்துறையினருடன் இணைந்து கண்காணித்த காவல்துறையினர் !

போதைப்பொருள் நடமாட்டத்தை வனத்துறையினருடன் இணைந்து கண்காணித்த காவல்துறையினர் !

பழனி அருகே.. நெய்க்காரப்பட்டி கோவில் திருவிழா ! கூட்டத்தை கட்டுப்படுத்த திணறும் காவல்துறையினர் !

பழனி அருகே.. நெய்க்காரப்பட்டி கோவில் திருவிழா ! கூட்டத்தை கட்டுப்படுத்த திணறும் காவல்துறையினர் !

“லைட் வெயிட் பேபி” விறுவிறுப்பான படப்பிடிப்பில் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் !

“லைட் வெயிட் பேபி” விறுவிறுப்பான படப்பிடிப்பில் நடிகர் விக்கல்ஸ் விக்ரம் !

மடத்துக்குளம் அருகே.. கார் மோதி 2 வயது குழந்தை பலி ! பெற்றோர் படுகாயம் ! 

மடத்துக்குளம் அருகே.. கார் மோதி 2 வயது குழந்தை பலி ! பெற்றோர் படுகாயம் ! 

“சம்ஹாரம்” திரைப்படத்தின் விமர்சனம்

“சம்ஹாரம்” திரைப்படத்தின் விமர்சனம்

“மூன்றாம் கண்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“மூன்றாம் கண்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

கேன்ஸ் திரைப்பட விழாவில் “பாலன் தி பாய்” திரைப்படத்திற்கு வரவேற்பு !

கேன்ஸ் திரைப்பட விழாவில் “பாலன் தி பாய்” திரைப்படத்திற்கு வரவேற்பு !

“அந்தரன்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !

“அந்தரன்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !

“ஸ்லம் டாக்” படத்தின் டீசர் ஜூன் 8 ஆம் தேதி வெளியாகிறது !

“ஸ்லம் டாக்” படத்தின் டீசர் ஜூன் 8 ஆம் தேதி வெளியாகிறது !

தி இந்தியா ஸ்டோரி திரைப்படம் ஜூலை 24 ஆம் தேதி வெளியாகிறது !

தி இந்தியா ஸ்டோரி திரைப்படம் ஜூலை 24 ஆம் தேதி வெளியாகிறது !

அங்கீகாரம் படத்திற்கு “U” சான்றிதழ் வழங்கிய தணிக்கை வாரியம் !

அங்கீகாரம் படத்திற்கு “U” சான்றிதழ் வழங்கிய தணிக்கை வாரியம் !

ஒப்பந்ததாரரிடம் 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது ! பல்லடம் அருகே பரபரப்பு !

ஒப்பந்ததாரரிடம் 30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் கைது ! பல்லடம் அருகே பரபரப்பு !

“கலர்ஸ்” நிறுவனத்தை திறந்து வைத்த நடிகை பிரியா பவானி சங்கர் !

“கலர்ஸ்” நிறுவனத்தை திறந்து வைத்த நடிகை பிரியா பவானி சங்கர் !

“ஈகோ ராமன்” படத்தின் விமர்சனம்

“ஈகோ ராமன்” படத்தின் விமர்சனம்

பெத்தி படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !

பெத்தி படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்வு !

பழனி அருகே அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் காவலப்பட்டி கிராமத்தினர் !

பழனி அருகே அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் காவலப்பட்டி கிராமத்தினர் !

நடன இயக்குனர் “ஷெரீப்_250” கொண்டாட்டம் !

நடன இயக்குனர் “ஷெரீப்_250” கொண்டாட்டம் !

தனித்துவமான வேடத்தில் சசிகுமார் நடித்துள்ள புதிய படத்தின் அப்டேட்ஸ் !

தனித்துவமான வேடத்தில் சசிகுமார் நடித்துள்ள புதிய படத்தின் அப்டேட்ஸ் !

“உயிரிணையே” இசை ஆல்பம் வெளியீட்டு விழா !

“உயிரிணையே” இசை ஆல்பம் வெளியீட்டு விழா !

“பெத்தி” திரைப்படம் ராம் சரணுக்கு தேசிய விருதை பெற்றுத்தரும் ! – சிவராஜ்குமார்

“பெத்தி” திரைப்படம் ராம் சரணுக்கு தேசிய விருதை பெற்றுத்தரும் ! – சிவராஜ்குமார்

சிம்பு நடிக்கும் “அரசன்” படத்தின் புதிய தகவல்கள் !

சிம்பு நடிக்கும் “அரசன்” படத்தின் புதிய தகவல்கள் !

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தால், கொள்ளை லாபம் பார்க்கும் FL-2 பார் உரிமையாளர்கள் !

டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்தால், கொள்ளை லாபம் பார்க்கும் FL-2 பார் உரிமையாளர்கள் !

பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே ? அதிகரிக்கும் பாலியல் சீண்டல்கள் !

பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே ? அதிகரிக்கும் பாலியல் சீண்டல்கள் !

“பாதாம்கீர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியீடு !

“பாதாம்கீர்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியீடு !

பரபரப்பான ஆக்ஷ்ன் த்ரில்லர் கதைகளத்தில் உருவாகும் “சமவர்த்தி” !

பரபரப்பான ஆக்ஷ்ன் த்ரில்லர் கதைகளத்தில் உருவாகும் “சமவர்த்தி” !

“நாக பந்தம் திரைப்படம் ஜூலை 3 ஆம் தேதி வெளியீடு !

“நாக பந்தம் திரைப்படம் ஜூலை 3 ஆம் தேதி வெளியீடு !

“தி இந்தியா ஸ்டோரி” படத்தின் டீசர் விரைவில் வெளியீடு !

“தி இந்தியா ஸ்டோரி” படத்தின் டீசர் விரைவில் வெளியீடு !

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “கான் சிட்டி” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

எதிர்பார்ப்பை ஏற்படுத்திய “கான் சிட்டி” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்ட ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் !

சோனி மியூசிக் நிறுவனம் வெளியிட்ட ராப்பர் கிட் சாந்தேவின் “நா வேற லெவல்” பாடல் !

ஆக்ஷ்ன், த்ரில்லர் கதையில் உருவாகிவரும் “கொம்பா” திரைப்படம் !

ஆக்ஷ்ன், த்ரில்லர் கதையில் உருவாகிவரும் “கொம்பா” திரைப்படம் !

“கங்கணம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“கங்கணம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“அதிரடி” படவிழாவில் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் !

“அதிரடி” படவிழாவில் கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சன் !