லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியான நிலையில் படக்குழு பத்திரிகையாளர்களை சந்தித்தது.
இந்நிகழ்வில் நடிகை மகாலக்ஷ்மி, கலை இயக்குநர் பெஞ்சமின், நடிகர்கள் அன்புதாசன், ஷிவ் பண்டிட், நடிகை ஃபரியா அப்துல்லா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

லைகா புரொடக்சன்ஸ், தமிழ்குமரன் பேசுகையில், மிகவும் கஷ்டப்பட்டு சஞ்சய் இந்தப் படம் எடுத்துருக்கிறார். இனி, இது உங்களுடைய படம். குடும்பமாக இணைந்து நல்ல படம் கொடுத்திருக்கிறோம் என்ற மனநிறைவு இருக்கிறது. லைகா நிறுவனம் மூலம் சஞ்சயை அறிமுகம் செய்வதில் நாங்கள் பெருமை கொள்கிறோம் என்றார்.
இயக்குநர் சஞ்சய் பேசுகையில், கடந்த மூன்று வருடங்களாக என்னுடன் பயணம் செய்த லைகா நிறுவனத்திற்கும் படக்குழுவினருக்கும் நன்றி. படம் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறேன். சிக்மா படத்தின் ரிலீஸுக்கு பிறகுதான் நடிப்பா இயக்கமா என்பதை முடிவு செய்வேன். படம் பார்த்த அம்மா, தங்கை மற்றும் குடும்பத்தினர் அனைவரும் வாழ்த்தினர் என்றார்.


































































































