“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

அர்கா மீடியா ஒர்க்ஸ் ( Arka Media Works), ஷோயிங் பிசினஸ் ( Showing Business) ஆகிய நிறுவனங்கள் சார்பில் ஷோபு யெர்லகடா, எஸ். எஸ். கார்த்திகேயா ஆகியோரின் தயாரிப்பில் ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி வழங்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ திரைப்படம்  அக்டோபர் 2 ஆம் தேதி  திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் சக்தி பிலிம் பேக்டரி (sakthi film factory) நிறுவனம் சார்பில் விநியோகஸ்தர் சக்திவேலன் வெளியிடுகிறார்.

இப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் வெளியீட்டிற்கு முன்னரான பிரத்யேக நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எஸ்.எஸ். ராஜமௌலி, எஸ்.எஸ். கார்த்திகேயா, ஃபஹத் பாசில், சாரா சச்தேவ், பிரவீண் ஆண்டனி, விநியோகஸ்தர் சக்திவேலன் ஆகிய படக்குழுவினருடன் நடிகர் சூர்யா மற்றும் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் விநியோகஸ்தர் சக்திவேலன் பேசுகையில், ஹாலிவுட்டில் பிரம்மாண்டத்தைக் காண்பிக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு பெரிய பெரிய டைனோசர்கள் தேவைப்பட்டது. ஆனால் எங்கள் ஊரில் இருந்து ‘ஈ’யை வைத்து உலகம் முழுவதும் பிரம்மாண்டத்தை காண்பித்தவர் எங்கள் இயக்குநர் எஸ்.எஸ். ராஜமௌலி. எங்களுக்கெல்லாம் பிரம்மாண்டம் என்றால் ஹாலிவுட் தான் என்றிருக்கும் போது.. அது இல்லை என்று எங்களை நம்ப வைத்த இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலியின் முத்திரையில் வெளியாகும் ஒரு திரைப்படம் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’. இதைக் கடந்து இந்தப் படத்தைப் பற்றி நாங்கள் எல்லாம் என்ன சொல்லி விடப் போகிறோம் ?.

இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் விநியோகிக்கும் பொறுப்பை எங்கள் நிறுவனத்திற்கு அளித்ததை பெருமையாகக் கருதுகிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் எஸ். எஸ். கார்த்திகேயாவிற்கு நன்றி.
இப்படத்தின் டீசர் வெளியாகும் போது எஸ்.எஸ். ராஜமௌலி வழங்கும் படத்தில் ஃபஹத் பாசில் நடித்திருக்கிறார் என்பது தெரிய வந்தது. அதன் பிறகு இப்படத்தின் ட்ரெய்லர் வெளியான பிறகு அனைத்து பக்கங்களிலிருந்தும்… என்னுடைய நண்பர்கள் அனைவரும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்க வேண்டிய படம் என்ற ஒரு பேச்சு எழுந்தது. இது எங்களுக்கு சந்தோஷத்தை அளித்திருக்கிறது.

தயாரிப்பாளர் கார்த்திகேயாவிடம் இந்த திரைப்படம் 3 D தொழில்நுட்பத்தில் வந்திருக்க வேண்டிய திரைப்படம், 2 D தொழில்நுட்பத்தில் வெளியிட்டிருக்கிறீர்கள். இப்படத்தை ரீ ரிலீஸ் செய்யும்போது 3 D தொழில்நுட்பத்தில் வெளியிட்டால், கூடுதலான வரவேற்பு கிடைக்கும் என்றேன். இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி அடுத்த ஜெனரேஷனுக்கான இன்ஸ்பிரேஷனாகத் திகழ்கிறார். இங்கு  ஃபஹத் பாசில்கென மிகப் பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. இந்தப் படத்தை பார்ப்பதற்கு குடும்ப ரசிகர்களும் இணைவார்கள் என்பதால் படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை அளித்திருக்கிறது என்றார்.

தயாரிப்பாளர் எஸ்.எஸ். கார்த்திகேயா பேசுகையில், இது எங்களுடைய நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான முதல் திரைப்படம். இந்தப் படம் நேர்மையான, இனிமையான, திரைப்படம். எஸ். எஸ். ராஜமவுலி வழங்கும் என்றால், இந்தப் படத்தின் பட்ஜெட்டை விட, அவருடைய படங்களில் உள்ளதைப் போன்ற எமோஷனை சொல்லும் படம் என்று குறிப்பிடலாம். இப்படத்தின் இரண்டாம் பாதியில் இடம் பிடித்திருக்கும் எமோஷனல் உங்கள் அனைவரையும் கவரும்.
நான்  ஃபஹத் பாசில் மிகப்பெரிய ரசிகன். பேபி சாரா இப்படத்தில் மிகப்பெரிய மேஜிக்கை நிகழ்த்தி இருக்கிறார். அக்டோபர் 2ம் தேதி ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அனைவரும் குடும்பத்தினருடன் வருகை தந்து படத்தை பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி பேசுகையில், இந்த படத்தின் முன்னோட்டத்திற்கு பின்னணி குரல் கொடுத்த ‘உலக நாயகன்’ கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய நன்றி. ‘கருப்பு’, ‘விஸ்வநாத் ‌& சன்ஸ்’ என டபுள் டமாக்கா வெற்றியை வழங்கிய சூர்யாவிற்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி. ‘சிங்கம்’ படத்தின் மூலம் மாஸான போலீஸ் அதிகாரியை காட்சி படுத்திய உங்களிடமிருந்து, ‘சீன்’ படத்தில் மீண்டும் ஒரு வித்தியாசமான போலீஸ் அதிகாரியை காட்சிப்படுத்தி இருப்பீர்கள் என நம்புகிறோம். நவம்பரில் அந்தப் படத்திற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம். அந்த திரைப்படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.‌

ஒரு முறை என்னிடம் மிகப் பெரிய கட்டிடக் கலை நிபுணர் சொன்னார், ‘நம்முடைய நகத்தின் மேல் ஒரு கட்டிடத்தின் அவுட்லைனை வரைய முடிந்தால் அதுதான் மிகச் சிறந்த கட்டிடம்’ என்றார். இது என்னை பொறுத்தவரை திரைப்படத்திற்கும் பொருந்தும். இரண்டரை மணி நேர திரைப்படத்தை இரண்டு அல்லது மூன்று வரிகள் கொண்ட கதையாக சொல்லப்பட வேண்டும். அதுதான் சிறந்த படம். இதைத்தான் இந்தப் படத்தின் இயக்குநர் ஷஷாங்கிடம் சொன்னேன்.

இயக்குநர் கதை சொல்வதற்காக என்னை சந்தித்தார். அப்போது அவர் எனக்கு மூன்று மணி நேரத்தைத் தாருங்கள். இப்படத்தின் கதையை சொல்கிறேன் என்றார். அவரிடம் நிச்சயமாக மூன்று மணி நேரத்தை ஒதுக்க முடியாது. உங்களால் ஐந்து நிமிடத்தில் இப்படத்தின் கதையை சொல்ல முடியுமா ? என கேட்டேன். அது எப்படி சாத்தியம் ? எனக் கேட்டார். ஐந்து நிமிடத்தில் இப்படத்தின் கதையை நீங்கள் சொன்னால், அது எனக்குப் பிடித்திருந்தால், நான் இரண்டரை மணி நேர கதையைக் கேட்கிறேன் என்றேன்.‌ அப்போது அவர் யோசித்து எனக்கு ஐந்து நிமிடம் வேண்டாம். ஒரே ஒரு வாக்கியத்திற்குள் இந்தக் கதையை சொல்கிறேன் என்றார். ஒரு பேயை கடத்திய மனிதனின் கதை என்று சொன்னவுடன் எனக்கு மிகவும் பிடித்து விட்டது. இந்த ஒற்றை வாக்கியத்தில், இதில் இருக்கும் எல்லா விசயங்களும் என் மனதில் ஓடியது. அதனால் இந்தக் கதை மிகவும் அருமையாக இருந்தது. அதன் பிறகு இந்த படத்தின் பணிகள் தொடங்கியது.

ஃபஹத் பாசில் ஒரு சிறந்த நடிகர் என்று அனைவருக்கும் தெரியும். அவர் ‘கும்பளாங்கி நைட்ஸ்’, ‘ஜோஷி’, ‘ட்ரான்ஸ்’, என ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். அவர் எப்படி, இப்படிப்பட்ட கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறார் என்பது இன்றுவரை எனக்கு ஆச்சரியமாகவே இருக்கிறது. அவர் தொடர்ந்து டார்க் ஷேடுள்ள கேரக்டர்களில் நடிக்கிறார் என வியப்பாகவே இருக்கும். இந்த படத்திலும் அவர் நடித்திருப்பது சிறப்பு.

மீண்டும் சொல்ல வேண்டும் என்றால் இந்தப் படத்தின் ராஸ்கல் அவர்தான். சூரி கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். இந்தப் படத்தின் முதல் பிரதியை டப்பிங் இல்லாமல், இசை இல்லாமல், பார்க்கும் போது நான் அழுதேன். சிரித்தேன். அந்த அளவிற்கு என்னை இந்தப் படம் கவர்ந்தது. அந்த அளவிற்கு அந்த சூரி கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து நடித்திருக்கிறார். இதற்காக அவருக்கு நன்றி.

படத்தில் சூரி கதாபாத்திரத்தை ஓட ஓட விரட்டுவது திவ்யா. அந்த கதாபாத்திரத்தில் சாரா நடித்திருக்கிறார். மிக அற்புதமாக நடித்திருக்கிறார். திரையில் சூரி என் பெஸ்ட் பிரண்ட் என்று சொன்னாலும்.. படப்பிடிப்பு தளங்களில் இருவரும் நடிக்கும்போது எதிரிகளாகவே இருந்திருப்பார்கள். ஒருவரை ஒருவர் மிஞ்சி சிறப்பாக நடிக்க வேண்டும் என்று போட்டி இருந்திருக்கும். இந்தத் திரைப்படத்தில் ஒவ்வொரு காட்சிக்கும், ஒவ்வொரு உரையாடலுக்கும், ஒவ்வொரு சிறு சிறு நடிப்பிற்கும், சூரிக்கு, திவ்யா சரியான போட்டியாளராக இருப்பார். இந்த போட்டி ரசிகர்களுக்கு நிச்சயமாக பிடிக்கும்.

இந்தப் படத்தின் தெலுங்கு முன்னோட்டத்திற்கு பின்னணி குரல் கொடுத்த நடிகர் பாலகிருஷ்ணாவிற்கும், தமிழில் பின்னணி குரல் கொடுத்த ‘உலகநாயகன்’ கமல்ஹாசனுக்கும், மலையாள மொழியில் பின்னணி குரல் கொடுத்த நடிகர் மோகன்லாலுக்கும் நன்றி என்றார்.

தயாரிப்பாளர் ஐசரி கே கணேஷ் பேசுகையில், இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வேண்டும் என பகத் பாஸில் இரண்டு நாள் முன்னதாக அழைப்பு விடுத்தார். அவர் நடிக்கும் திரைப்படத்தை நிறைவு செய்து இருக்கிறேன். இயக்குநர் ராஜமவுலி சொன்னதை போல் நான் அந்தப் படத்தை பற்றி பேசினால் அதுதான் செய்தியாகும். அதனால் அதைப் பற்றி தற்போது பேச மாட்டேன்.‌ இந்த படத்தின் டிரைலரை ஃபஹத் பாசில் எனக்கு காண்பித்தார். பார்த்துவிட்டு மிகச் சிறப்பாக இருக்கிறது என்று பாராட்டினேன். இந்தத் திரைப்படம் அக்டோபர் 2ம் தேதி வெளியாகிறது. அனைவரும் ஆதரவு தர வேண்டும். இந்தப் படம் நிச்சயமாக பாக்ஸ் ஆபிஸில் வெற்றி பெறும் என்றார்.

நடிகர்  ஃபஹத் பாசில் பேசுகையில், இந்தக் கதையை கேட்ட தருணத்திலிருந்து எனக்குள் இரண்டு விசயங்கள் மட்டும் தான் எப்போதும் நினைவில் இருக்கிறது. அதை மட்டும் பகிர்ந்து கொள்கிறேன்.

தயாரிப்பாளர் கார்த்திகேயா எனக்கு குறுஞ்செய்தி அனுப்பி இருந்தார். அதில் ‘இரண்டு கதைகளை மட்டும் அனுப்பி இருக்கிறேன்.‌ இந்த இரண்டில் எந்தக் கதையை நீங்கள் தேர்வு செய்தாலும் எங்களுக்கு ஓகே’ என குறிப்பிட்டிருந்தார். அதன் பிறகு அவரை சந்தித்தேன். இரண்டு கதைகளையும் கேட்டேன். இரண்டு கதைகளும் பிடித்திருந்தது. இரண்டு கதைகளிலும் நடிக்கிறேன் என்றேன். அப்போதுதான் அவர், ‘நான் தான் தயாரிக்கிறேன்’ என்றார். அது எனக்கு சந்தோஷமாக இருந்தது. அதன் பிறகு ஒரு விசயம் சொன்னார். ‘இந்த படத்தை ராஜமௌலி தான் வழங்குகிறார்’ என்றார். அப்படி சொன்னவுடன் என்னை விட வேறு சிறந்த நடிகர்களை வைத்து தயாரிக்கலாமே..! என சொன்னேன். இதுவரை எனக்கு தெலுங்கில் நல்லதொரு ஓபனிங் இருந்ததில்லை என நினைக்கிறேன். இந்தப் படம் அதனை மாற்றும் என்று நம்புகிறேன். இதற்காக தயாரிப்பாளருக்கும் ராஜமௌலிக்கும் நன்றி.

தயாரிப்பாளர் கார்த்திகேயா இப்படத்தின் நிகழ்விற்கு சூர்யா வருகை தருகிறார் என்று சொன்னார். அதைக் கேட்டவுடன் எனக்கு இன்னும் மகிழ்ச்சி அதிகமாகியது. ஏனென்றால் அவர் எனக்கு சகோதரர். அவர் இன்று இங்கு வருகை தந்ததற்கும், வாழ்த்துவதற்கும் நன்றி. நான் இதுவரை இப்படி ஒரு கதையை கேட்டதும் இல்லை, இப்படி ஒரு படத்தை பார்த்ததும் இல்லை. இப்படி ஒரு கதாபாத்திரத்திலும் நான் நடித்ததில்லை. இது மிகவும் புதிது. அதனால் தான் இதில் நடிப்பதற்கு உடனே சம்மதம் தெரிவித்தேன். நாங்கள் இந்தப் படத்திற்காக 100, 120 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். இப்படத்தினை அண்மையில் பார்த்தபோது வியந்தேன். படத்தில் பணியாற்றிய இயக்குநர் ஷஷாங்க் யெலெட்டி, ஒளிப்பதிவாளர் பிராட் பிரான்சிஸ், தயாரிப்பு வடிவமைப்பாளர் சந்தீப், மோகன், இசையமைப்பாளர் காலா பைரவா, படத்தொகுப்பாளர் பிரவீண் ஆண்டனி ஆகிய அனைவருக்கும் நன்றி.

தயாரிப்பாளர் எஸ் எஸ் கார்த்திகேயாவிற்கு நன்றி. ஹைதராபாத்தில் ஒரு அரங்கத்தில் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ படத்தின் படப்பிடிப்பு நடைபெறும். அடுத்த அரங்கத்தில் ‘வாரணாசி’ படத்தின் படப்பிடிப்பு நடைபெறும். இரண்டிற்கும் அவர்தான் தயாரிப்பாளர். ஆனால் அவர் எப்போதும் எங்கள் படக் குழுவுடன் தான் இருப்பார். அதற்காக அவருக்கு நன்றி.

என்னை எப்போதும் ஆச்சரியப்படுத்திய குழந்தை என்றால் அது சாரா தான். படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் போது ஒரு காட்சியில் என்னிடம் இப்படி பேசலாமே..! என என்னுடைய வசனத்தையும் அவள் சொல்லிக் காட்டுவாள். என்னுடன் இவ்வளவு அர்ப்பணிப்புடன் இணைந்து பணியாற்றிய சக நடிகர்கள் யாருமில்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு அற்புதமான சக நடிகை தான் சாரா. நாங்கள் இருவரும் இணைந்து இந்த படத்தில் அற்புதமான மேஜிக்கை நிகழ்த்தி இருக்கிறோம். நாங்கள் இருவரும் இணைந்த இந்த படத்தை அனைவரும் அக்டோபர் 2ம் தேதி திரையரங்கில் காண வேண்டும் என அழைப்பு விடுக்கிறோம். மிகவும் சிறப்பான படம்.‌ இந்தப் படத்தை நீங்கள் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும், விருப்பத்திற்குரியவர்களுடனும்,பார்க்கலாம். இந்தப் படம் உங்களை சிரிக்க வைக்கும், அழ வைக்கும், அந்த அளவிற்கு அழகான அற்புதமான படம் என்றார்.

நடிகர் சூர்யா பேசுகையில், இந்த மாலைப்பொழுதில் ‘டோன்ட் டிரபுள் தி டிரபுள்’ படக் குழுவினருடன் இருப்பது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.
விருந்தோம்பல் என்றொரு வார்த்தை இருக்கிறது. விருந்தோம்பலை இங்கு நாம் தான் சிறப்பாக போற்றுகிறோம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஆந்திராவிலும், தெலுங்கானாவிலும் நம்மை விட மிக சிறப்பாக விருந்தோம்பலை மேற்கொள்கிறார்கள். அவர்களைப் போல் நம்மால் விருந்தோம்பலை கடைபிடிக்க முடியாது. அந்த அளவிற்கு நம் மீது அவர்கள் நிபந்தனையற்ற அன்பை செலுத்துவார்கள்.

சினிமா என்பது என்னைப் பொறுத்தவரை நம்மை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கும். நாம் பிறந்ததிலிருந்து சினிமாவை பார்த்துக் கொண்டே இருக்கிறோம். எனக்கு தற்போது ஐம்பது வயதாகி விட்டது. ஒவ்வொரு சினிமாவும் புதுப்புது படங்கள், புதுப்புது முயற்சிகள் என நம்மை ஆச்சரியப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அதைப்போலத்தான், நான் இந்தத் திரைப்படத்தையும் பார்க்கிறேன். யாரும் எதிர்பார்க்காத ஒரு காம்பினேஷன். ஃபஹத் பாசில், ராஜமௌலி, கார்த்திகேயா கூட்டணியில் இப்படி ஒரு திரைப்படம் உருவாகும் என நாம் யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டோம். இப்படி ஒரு ட்ரெய்லர். அதில் இப்படி ஒரு கதை. ஒருவர் ஒரு பேயை கடத்தி விட முடியுமா ?, என கற்பனை செய்ய முடியாத ஒரு விசயம் தான் கதை. கடத்திவிட்டால் என்ன ஆகும் ?, என்பதை யாராலும் எதிர்பார்க்க முடியாது. அதனால்தான், நான் இந்தப் படத்தை மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

பகத் என்னை அண்ணன் என்று அழைத்து விட்டார். சந்தோஷம். நாங்கள் இருவரும் நிறைய பேசியிருக்கிறோம். காலை, மாலை, மதியம், இரவு, நடு இரவு என பல தருணங்களில் பேசியிருக்கிறோம். எங்கள் இருவருக்கும் இடையே ஏராளமான பசுமையான நினைவுகள் இருக்கிறது. எங்கள் இருவருக்கும் இடையே தொடக்கக் காலத்தில் நடைபெற்ற சம்பவங்களை பற்றி பேசி இருக்கிறோம். எங்கள் வாழ்க்கையில் இருக்கும் ஒற்றுமைகளைப் பற்றி பேசியிருக்கிறோம். தற்போது உள்ள நிலைக்காக நாங்கள் எளிதாக வந்துவிடவில்லை. முட்டி உடைந்து, கால் உடைந்து, எழுந்து நின்று, அதன் பிறகு இந்த நிலைக்கு வந்திருக்கிறோம். அதைப்பற்றி நாங்கள் இருவரும் மனதார விவாதித்து இருக்கிறோம். அதற்காக அவருக்கு நன்றி.

நாம் அனைவரும் ஒரு கணக்கு போடுவோம். இந்த மாதிரி படம் எடுத்தால், இவர்களுக்குப் பிடிக்கும், ஆனால் இவர்களுக்குப் பிடிக்காது. இந்த மாதிரி படம் எடுத்தால், மற்றவர்களுக்கு எல்லாம் பிடிக்கும். ஆனால் குறிப்பிட்டவர்களுக்கு பிடிக்காதே..! என ஒரு கணக்கு வாத்தியார் போல் நிறைய கணக்குகளை போடுவோம். நடிகர்கள் எல்லாரும் ஒரு இமேஜுக்குள் சிக்கிக் கொண்டிருப்போம். ஆனால் அப்படியெல்லாம் ஃபஹத் பாசிலிடம் இல்லை. நான் இன்னும் இந்த கணக்குகளை தப்பு தப்பாகத்தான் போட்டுக் கொண்டிருக்கிறேன். இவரைப் போல் என்னால் இருக்க முடியவில்லை. அவர் தன்னுடைய கதாபாத்திரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறார். கதை நன்றாக இருக்கிறதா..? அதில் தன்னுடைய கதாபாத்திரம் நன்றாக இருக்கிறதா..? என்பதை மட்டுமே பார்க்கிறார். இந்த ‘கன்டன்ட்’டை ரசிகர்களுக்கு நம்மால் கரெக்டாக கொடுத்து விட முடியுமா..? என்று சிந்திக்கும் நபர்தான் பகத் பாசில். அதனால் தான் அவரால் இதுபோன்று கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க முடிகிறது. இதற்காக அவருக்கு மீண்டும் ஒருமுறை நன்றி.

அவருடைய கதாபாத்திரத்திற்கு அனைத்து மொழிகளிலும் அவரே பின்னணியும் பேசி இருக்கிறார். நாமெல்லாம் ஒரு கேரக்டராக இருக்க வேண்டும் என நினைப்போம். ஆனால் பகத் அந்த கேரக்டராகவே இருப்பார். எந்த ஒரு படத்திலும் ஒரு குழந்தை இருந்தால்.. அவர்கள் அந்த உலகத்தை உண்மையானதாக மாற்றி விடுவார்கள். அந்த வகையில் குழந்தை நட்சத்திரம் சாரா இந்த படத்தில் நன்றாக நடித்திருக்கிறார். அவருடைய நடிப்பை அனைவரும் ரசிக்கிறார்கள்.

எங்களைப் போன்று இந்த வசனத்தை இப்படி உச்சரிக்கலாமா…! அப்படி உச்சரிக்கலாமா..! என குழப்பிக் கொள்ள வேண்டாம். இந்தப் படத்தில் உன்னுடைய வசனம் அழகாக இயல்பாக இருக்கிறது. ஒரு இயக்குநருக்கு இது போன்றதொரு கதையை உருவாக்க வேண்டும் என்ற கற்பனை இருக்கலாம். அதில் ஒரு குழந்தை நட்சத்திரம் நடிக்கிறார் என்றால்… அவர்களை கையாளுவதற்கு இயக்குநருக்கு ஒரு குழந்தைக்கான மனம் வேண்டும்.

நான் என்னுடைய சின்ன வயதில் பார்த்த படங்கள் எல்லாம் இன்றும் பசுமையாக மனதில் இருக்கிறது. இப்போது நாம் ஆறு வயதிற்கு மேற்பட்ட… எட்டு வயதிற்கு மேற்பட்ட… குழந்தைகளுக்கான படங்களை வழங்குவதில்லை. இதற்கெல்லாம் தற்போது நெட்பிளிக்ஸ், அமேசான், வால்ட் டிஸ்னி ஆகியோர் உருவாக்கும் குழந்தைகளுக்கான படங்களை காண்பிக்கிறோம். நாம் அனைவரும் ஒன்றிணைந்து குழந்தைகளும் பார்க்கக்கூடிய படங்களை உருவாக்க வேண்டும். அந்த வகையில் இந்தப் படம் பெரியவர்களுக்கான குழந்தைகள் படம்.‌ இதில் எல்லா வகையான எமோஷன்களும் இருக்கிறது.

திரைப்பட இயக்குநராக அறிமுகமாகி 25வது ஆண்டை நிறைவு செய்திருக்கும் ராஜமௌலிக்கு நன்றி.‌ நான் திரைத்துறையில் அறிமுகமாகி 28, 29 ஆண்டுகள் இருக்கும் என்று நினைக்கிறேன். எனக்கு உங்கள் படத்தில் ஒரு நாள்.. ஒரு நிமிடம்.. வருவதைப் போன்ற ஒரு சிறப்பு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு வழங்கினால் நன்றி.
ஆனால் நீங்கள் எப்போதும் புது திறமைசாலிகளுக்கும், புதிய கண்டெண்டுகளுக்கும், ஆதரவு அளிப்பதற்காக நன்றி. அதில் உங்களுடைய முத்திரையை இடம்பெறச் செய்ததற்கும் நன்றி. இந்தப் படத்தின் கதை புதிதாக இருக்கிறது என்று நீங்கள் சொன்ன ஒரு வார்த்தை ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் மிகப்பெரிய நம்பிக்கையை வழங்கியுள்ளது.

இந்தியன் சினிமாவை உங்களுடைய பெயர் மூலம் உலகத்திற்கு வழங்கியதற்கு நன்றி. இதனால் இங்குள்ள அனைவருக்கும் அடையாளம் கிடைத்திருக்கிறது. உங்களுடைய படங்களை இந்திய படங்கள் என்று பார்க்க வைப்பதற்காக நன்றி. நான் ஒரு கதை சொல்கிறேன். உங்களை அமர்ந்து படம் பார்க்க வைப்பேன். உங்களுடைய நேரத்தை வீணடிக்க மாட்டேன் என ஒவ்வொரு ரசிகர்களையும் திரைப்படத்தை பார்க்க வைக்கின்ற உங்களுடைய திறமைக்கும், நம்பிக்கைக்கும் நன்றி. அதனை இந்த திரைப்படத்திலும் ரசிகர்களால் பார்க்க முடியும் என்று நம்புகிறேன்.‌ இதன் காரணத்தினாலே இந்த படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆவல் எழுகிறது

வழக்கமான படங்கள் வெளியாகும் தருணத்தில் ஒரு வித்தியாசமான கன்டென்ட் ஜெயிக்கும் என்று நீங்கள் நினைத்திருக்கிறீர்கள். அதனால் இதிலும் திரை துறையில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறீர்கள் அதேபோல் ஒரு தயாரிப்பாளர்களாக இந்த திரைப்படத்தை இவ்வளவுதான் விற்பனை செய்ய முடியும் என்ற அளவுகோல் உண்டு. அதனால் அதிலும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். அதேபோல் நடிகர்களுக்கும் இந்த வட்டத்திற்குள் தான் நடிக்க முடியும் என்ற ஒரு எல்லை உண்டு. அந்த வசதியான ஒரு வட்டத்தை உடைத்திருக்கிறீர்கள். அந்த வகையிலும் நீங்கள் நடிகர்களிடத்தில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறீர்கள்.‌
எனவே எல்லா வயதினரும் குடும்பத்தினருடன் அக்டோபர் 2ம் தேதி ‘டோன்ட் டிரபுள் தி டிரபுள்’ படத்தை பார்க்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

dhamaraimurasu

dhamaraimurasu

dhamaraimurasu admin

Related Posts

கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் “ஊர் கூடும் இரவு” ஆவணப்படம் !

சென்னையைச் சேர்ந்த ரம்யா ஸ்ரீராம் புகைப்படக் கலைஞராகவும், பலகலைகள் பற்றிய தேடுதல் மனம் கொண்ட பயணியாகவும் இருக்கிறார்.மக்களிடையே பின்பற்றப்படும் சடங்கு வடிவங்களையும்,  விழாக்களையும் தனது கேமராவிற்குள் சிறைப் பிடிப்பது அவருக்கு விருப்பமான ஒன்று. அந்த வகையில்நமது பாரம்பரியம், கலாச்சாரம் போன்றவற்றை ஆவணப்படுத்துவதில்…

Read more

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

விஷன் சினிமா ஹவுஸ் சார்பில் டாக்டர் டி. அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து ஆகியோர் தயாரிப்பில், யுவராஜ் சின்னசாமி இயக்கத்தில் நடிகர்கள் ஏகன், ஸ்ரீதேவி மற்றும் ஃபெமினா ஜார்ஜ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் ‘ஹைக்கூ’. வரும் அக்டோபர் 23…

Read more

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

பார்க்கத்தவறிய செய்திகள்

“E 1” படத்தின் விமர்சனம்

“E 1” படத்தின் விமர்சனம்

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழாவில் 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழாவில் 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழா ! ஓவியர் ஜீவானந்தனுக்கு 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு 13.78 லட்சம் நிதியுதவி !

ஶ்ரீ சிவக்குமார் கல்வி அறக்கட்டளையின் 47 வது ஆண்டு விழா ! ஓவியர் ஜீவானந்தனுக்கு 1 லட்சம் விருது, மாணவர்கள் மற்றும் கல்வி அமைப்புகளுக்கு 13.78 லட்சம் நிதியுதவி !

கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் “ஊர் கூடும் இரவு” ஆவணப்படம் !

கூத்துக் கலைஞர்களின் வாழ்வைப் பேசும் “ஊர் கூடும் இரவு” ஆவணப்படம் !

“ஆல்பாஸ்” விமர்சனம்

“ஆல்பாஸ்” விமர்சனம்

“தாய்நிலம்” விமர்சனம்

“தாய்நிலம்” விமர்சனம்

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“ஹைக்கூ” படத்தின் இசை வெளியீட்டு விழா !

அதிமுகவின் பலவீனமா ? த.வெ.க வினரின் மோசடியா ?

அதிமுகவின் பலவீனமா ? த.வெ.க வினரின் மோசடியா ?

“அமெரிக்க ஆவி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“அமெரிக்க ஆவி” படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

அட்லான்டா இந்தியத் திரைப்பட விழாவில் “என்ன விலை” படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது !

அட்லான்டா இந்தியத் திரைப்பட விழாவில் “என்ன விலை” படத்திற்கு சிறந்த ஒளிப்பதிவுக்கான விருது !

நலிவுற்ற திருநங்கைகளுங்கு நிதியுதவி வழங்கிய “டோரதி” படக்குழு !

நலிவுற்ற திருநங்கைகளுங்கு நிதியுதவி வழங்கிய “டோரதி” படக்குழு !

“அன்பில் அவன் படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“அன்பில் அவன் படத்தின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“பத்தா” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“பத்தா” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

நாள்தோறும் நற்பணி ! ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன்

நாள்தோறும் நற்பணி ! ரசிகர்கள் சந்திப்பில் நடிகர் சிவகார்த்திகேயன்

“ஒட்டாரம்” திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு !

“ஒட்டாரம்” திரைப்படம் விரைவில் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு !

“சிக்மா” படத்தில் அறிமுகமானது எனக்கு பெருமை ! நடிகை ஃபரியா அப்துல்லா

“சிக்மா” படத்தில் அறிமுகமானது எனக்கு பெருமை ! நடிகை ஃபரியா அப்துல்லா

“அன்பில் அவன்” படத்தின் விமர்சனம்

“அன்பில் அவன்” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் விமர்சனம்

“சிக்மா” படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த நடிகர் !

“சிக்மா” படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்த நடிகர் !

“பத்தா” படத்தின் விமர்சனம்

“பத்தா” படத்தின் விமர்சனம்

இயக்கமா ? நடிப்பா ? “சிக்மா” இயக்குநர் பேட்டி !

இயக்கமா ? நடிப்பா ? “சிக்மா” இயக்குநர் பேட்டி !

கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான் “சிக்மா” – இயக்குநர் சஞ்சய்

கடின உழைப்பும், விடாமுயற்சியும் தான் “சிக்மா” – இயக்குநர் சஞ்சய்

“தி டார்க் ஹெவன் படத்தின் வெற்றிக்கு, சொந்த ஊரில் விழா எடுத்த இயக்குநர் !

“தி டார்க் ஹெவன் படத்தின் வெற்றிக்கு, சொந்த ஊரில் விழா எடுத்த இயக்குநர் !

தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய பிரபல நடிகரின் மனைவி !

தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கிய பிரபல நடிகரின் மனைவி !

“கோல்டன் பாக்கியம்” டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு !

“கோல்டன் பாக்கியம்” டைட்டில் கிளிம்ப்ஸ் வெளியீடு !

“கிட்டி” படத்தின் விமர்சனம்

“கிட்டி” படத்தின் விமர்சனம்

“த்ரிஷ்யம்_3” படத்தின் இந்தி பதிப்பை வெளியிட தடை கோரி வழக்கு !

“த்ரிஷ்யம்_3” படத்தின் இந்தி பதிப்பை வெளியிட தடை கோரி வழக்கு !

நான்கு மாநில டிஜிட்டல் & தொலைக்காட்சி துறைகளை ஒருங்கிணைக்கும் முயற்சி !

நான்கு மாநில டிஜிட்டல் & தொலைக்காட்சி துறைகளை ஒருங்கிணைக்கும் முயற்சி !

“துரோகம் பழகு படத்தின் டீசர் வெளியீட்டு விழா !

“துரோகம் பழகு படத்தின் டீசர் வெளியீட்டு விழா !

25 மாவட்டங்கள், 2 ஆயிரம் ரசிகர்கள் ! நடிகர் சூர்யா தலைமையில் பிரமாண்டமான விழா !

25 மாவட்டங்கள், 2 ஆயிரம் ரசிகர்கள் ! நடிகர் சூர்யா தலைமையில் பிரமாண்டமான விழா !

மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள “மக்கள் காவலன்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

மணிகண்டன் நடிப்பில் உருவாகியுள்ள “மக்கள் காவலன்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“பூஜா மேரி ஜான்” திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ஜீ_5 ஹிந்தியில் வெளியாகிறது

“பூஜா மேரி ஜான்” திரைப்படம் அக்டோபர் 2 ஆம் தேதி ஜீ_5 ஹிந்தியில் வெளியாகிறது

சாதிய வன்மத்தை விதைக்கும் “தி கிராண்ட் மாஸ்டர்” ! படத்தின் விமர்சனம்

சாதிய வன்மத்தை விதைக்கும் “தி கிராண்ட் மாஸ்டர்” ! படத்தின் விமர்சனம்

“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“#LOVE” வெப் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“#LOVE” வெப் தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“தாய்நிலம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

“தாய்நிலம்” படத்தின் டிரெய்லர் வெளியீடு

தனுஷின் ( D_56 ) புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

தனுஷின் ( D_56 ) புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

“ஏழு கடல் ஏழு மலை” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“ஏழு கடல் ஏழு மலை” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“டோரதி” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“டோரதி” படத்தின் ஃப்ரீ ரிலீஸ் நிகழ்வு !

“தி டார்க் ஹெவன்” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“தி டார்க் ஹெவன்” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

மர்மம், ரகசியங்கள் நிறைந்த “ஆக்டோபஸ்” தொடர் ஜீ_5 தமிழில் வெளியாகிறது

மர்மம், ரகசியங்கள் நிறைந்த “ஆக்டோபஸ்” தொடர் ஜீ_5 தமிழில் வெளியாகிறது

ரசிகர்களின் அமோக வரவேற்பில் “என்ன விலை” திரைப்படம் !

ரசிகர்களின் அமோக வரவேற்பில் “என்ன விலை” திரைப்படம் !

“நல்ல படம்” திரைப்படத்தின் விமர்சனம்

“நல்ல படம்” திரைப்படத்தின் விமர்சனம்

“துரோகம் பழகு” படக்குழுவினரை  பாராட்டிய முதலமைச்சர் !

“துரோகம் பழகு” படக்குழுவினரை  பாராட்டிய முதலமைச்சர் !

பா. ரஞ்சித்தின் “வேட்டுவம்” படத்தின் அறிமுக வீடியோ வெளியீடு !

பா. ரஞ்சித்தின் “வேட்டுவம்” படத்தின் அறிமுக வீடியோ வெளியீடு !

விஜய் சேதுபதியின் “பத்தா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

விஜய் சேதுபதியின் “பத்தா” படத்தின் இசை வெளியீட்டு விழா !

பறிபோன மானத்திற்கு “என்ன விலை” என்ன விலை படத்தின் விமர்சனம்

பறிபோன மானத்திற்கு “என்ன விலை” என்ன விலை படத்தின் விமர்சனம்

“மண்டாடி” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“மண்டாடி” படக்குழுவினரின் வெற்றிக் கொண்டாட்டம் !

“கஸ்தூரி வீடு” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

“கஸ்தூரி வீடு” படத்தின் இசை & டிரெய்லர் வெளியீட்டு விழா !

பாவனா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் “பிக்னிக்” படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு !

பாவனா ஸ்டூடியோஸ் தயாரிப்பில் உருவாகும் “பிக்னிக்” படத்திற்கு அதிகரிக்கும் எதிர்பார்ப்பு !

துல்கர் சல்மானின் “ஆகாசம்லோ ஓக தாரா” (AOT) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

துல்கர் சல்மானின் “ஆகாசம்லோ ஓக தாரா” (AOT) படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

எம்.எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி “எம்.எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்” படத்தின் துவக்க விழா !

எம்.எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி “எம்.எஸ் : எ லெகஸி ஆன் ஸ்கிரீன்” படத்தின் துவக்க விழா !

அர்ஜூன் தாஸ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

அர்ஜூன் தாஸ் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம் !

“அன்பில் அவன்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“அன்பில் அவன்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

நானி நடிப்பில் உருவாகியுள்ள “தி பாரடைஸ்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

நானி நடிப்பில் உருவாகியுள்ள “தி பாரடைஸ்” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“என்ன விலை” படம் மறக்க முடியாத அனுபவம் ! நிமிஷா சஜயன்

“என்ன விலை” படம் மறக்க முடியாத அனுபவம் ! நிமிஷா சஜயன்

தி டார்க் ஹெவன் படத்தின் முன் வெளியீட்டு விழா !

தி டார்க் ஹெவன் படத்தின் முன் வெளியீட்டு விழா !

“பனங்காட்டான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“பனங்காட்டான்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

அரசியலும் சமூக அக்கறையும் சேர்ந்து உருவான படம் தான் “ஆகாயம்” ! தினந்தோறும் நாகராஜ்

அரசியலும் சமூக அக்கறையும் சேர்ந்து உருவான படம் தான் “ஆகாயம்” ! தினந்தோறும் நாகராஜ்

“என்ன விலை” படத்தில் நான் நடித்த கதாப்பாத்திரம் மிகவும் சவாலானது ! கருணாஸ்

“என்ன விலை” படத்தில் நான் நடித்த கதாப்பாத்திரம் மிகவும் சவாலானது ! கருணாஸ்

“என்ன விலை” படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியது எனக்கு கிடைத்த வரம் !

“என்ன விலை” படத்தில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தியது எனக்கு கிடைத்த வரம் !

“மண்டாடி” மூலம் மாஸ் ஹீரோவான சூரி ! மண்டாடி விமர்சனம்

“மண்டாடி” மூலம் மாஸ் ஹீரோவான சூரி ! மண்டாடி விமர்சனம்

வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகியுள்ள “நல்லபடம்” செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியீடு !

வித்தியாசமான கதைகளத்துடன் உருவாகியுள்ள “நல்லபடம்” செப்டம்பர் 18 ஆம் தேதி வெளியீடு !

சூர்யா நடித்துள்ள “சீன்” ( SCENE ) படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு !

சூர்யா நடித்துள்ள “சீன்” ( SCENE ) படத்தின் டைட்டில் டீசர் வெளியீடு !

“என்ன விலை” படத்தில் நடித்தது மிகவும் சவாலாக இருந்தது ! நடிகை ஷாஷா சிவக்குமார்

“என்ன விலை” படத்தில் நடித்தது மிகவும் சவாலாக இருந்தது ! நடிகை ஷாஷா சிவக்குமார்

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

“பத்தா” படத்தின் முதல் சிங்கிள் வெளியீடு !

அசோக் செல்வன் நடித்துள்ள “அன்பில் அவன்” வெளியீட்டு தேதி அறிவிப்பு !

அசோக் செல்வன் நடித்துள்ள “அன்பில் அவன்” வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“வதந்தி சீசன்_2” பற்றி மெய்சிலிர்க்கும் நடிகர் !

“வதந்தி சீசன்_2” பற்றி மெய்சிலிர்க்கும் நடிகர் !

“என்ன விலை” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“என்ன விலை” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

திரைப்பிரபலங்களுக்கு புதிய தீர்ப்பை பெற்றுத்தந்துள்ள நடிகை !

திரைப்பிரபலங்களுக்கு புதிய தீர்ப்பை பெற்றுத்தந்துள்ள நடிகை !

“வைல்ட் தமிழ்நாடு” இன்று முதல் பிவிஆர் திரையரங்குகளில் வெளியீடு !

“வைல்ட் தமிழ்நாடு” இன்று முதல் பிவிஆர் திரையரங்குகளில் வெளியீடு !

“மொத ராத்திரி” படக்குழுவினரின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

“மொத ராத்திரி” படக்குழுவினரின் வெற்றிவிழா கொண்டாட்டம் !

கமல்ஹாசனின் புதிய படத்தின் “புகைப்படம்” சமூக வலைதளங்களில் வைரல் !

கமல்ஹாசனின் புதிய படத்தின் “புகைப்படம்” சமூக வலைதளங்களில் வைரல் !

நயன்தாராவின் “ஹாய்” படத்தின் விமர்சனம் !

நயன்தாராவின் “ஹாய்” படத்தின் விமர்சனம் !

மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க அலட்சியப்படுத்தும் அரசு அதிகாரிகள் ! நரிக்குறவர் இன மக்களின் போராட்டத்திற்கு தீர்வு எப்போது ?.!

மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க அலட்சியப்படுத்தும் அரசு அதிகாரிகள் ! நரிக்குறவர் இன மக்களின் போராட்டத்திற்கு தீர்வு எப்போது ?.!

“ஒன்ஸ்மோர்” படத்தின் திரைவிமர்சனம்

“ஒன்ஸ்மோர்” படத்தின் திரைவிமர்சனம்

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் மரணம் ! சோகத்தில் கிராம மக்கள் !

சாலை விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் மரணம் ! சோகத்தில் கிராம மக்கள் !

தந்தை கொலை, பழிவாங்க துடிக்கும் மகள் ! “அமரம்” படத்தின் விமர்சனம்

தந்தை கொலை, பழிவாங்க துடிக்கும் மகள் ! “அமரம்” படத்தின் விமர்சனம்

திருப்பூரில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி தெருநாய்கள் கொடூர கொலை !

திருப்பூரில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றி தெருநாய்கள் கொடூர கொலை !

தந்தை, மகன் உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் “ஃபாதர்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

தந்தை, மகன் உறவை உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தும் “ஃபாதர்” படத்தின் டீசருக்கு அமோக வரவேற்பு !

“டாக்ஸிக்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

“டாக்ஸிக்” படத்தின் முன் வெளியீட்டு விழா !

200 கோடி வசூல் சாதனை படைத்த “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம்

200 கோடி வசூல் சாதனை படைத்த “விஸ்வநாத் & சன்ஸ்” திரைப்படம்

“ஒன்ஸ்மோர்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

“ஒன்ஸ்மோர்” படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா !

கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம் ! தெளிவில்லாத முதல்வரின் அறிவிப்பு !

கைவிடப்பட்ட பரந்தூர் விமான நிலையம் ! தெளிவில்லாத முதல்வரின் அறிவிப்பு !

“Yourbackers play” உலகின் லாப நோக்கமற்ற OTT தளம் அறிமுகம் !

“Yourbackers play” உலகின் லாப நோக்கமற்ற OTT தளம் அறிமுகம் !

“இருமுடி கட்டு” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“இருமுடி கட்டு” படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குரு சங்கருக்கு கொலை மிரட்டல் !

மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை தலைவர் குரு சங்கருக்கு கொலை மிரட்டல் !

“ஹலோ மிஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“ஹலோ மிஸ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

பழனி அருகே “தார் & டீசல்” திருட்டு ! புகார்தாரரை மிரட்டும் காவல் ஆய்வாளர் !.?

பழனி அருகே “தார் & டீசல்” திருட்டு ! புகார்தாரரை மிரட்டும் காவல் ஆய்வாளர் !.?

“அன்பில் அவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு !

“அன்பில் அவன்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியீடு !

“ஐ ம் கேம்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“ஐ ம் கேம்” படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

“பியார் பிரேமா கல்யாணம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“பியார் பிரேமா கல்யாணம்” படத்தின் முன்னோட்டம் வெளியீட்டு விழா !

“பத்தா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

“பத்தா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு !

டாக்ஸிக் படத்தின் டிரெய்லருக்கு அமோக வரவேற்பு !

டாக்ஸிக் படத்தின் டிரெய்லருக்கு அமோக வரவேற்பு !

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு !

விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியீடு !

“வதந்தி சீசன் 2” குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“வதந்தி சீசன் 2” குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு !

“விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

“விஸ்வநாத் & சன்ஸ்” படத்தின் இசை வெளியீட்டு விழா !

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட “பியார் பிரேமா கல்யாணம்” தொடரின் முன்னோட்டம் !

நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்ட “பியார் பிரேமா கல்யாணம்” தொடரின் முன்னோட்டம் !